அழகியசிங்கர்
இரண்டு நாட்கள் புத்தகக் காட்சி ஆரம்பித்து. அவசரம் அவசரமாக அட்டைப் பெட்டிகளில் எல்லாவற்றையும் தள்ளி கொண்டு போய் வைத்துவிட்டோம். 403 என்றதால் உள்ளே போய் வைப்பதற்குச் சற்று சிரமம். ஒரு கனத்தப் பையைக் கூடத் தூக்க முடியாத உடல் வலிமை உடையவன் நான்.
புத்தகக் காட்சியை நினைத்துப் பார்க்கும்போது ஒரு கதை எழுதலாமென்று தோன்றுகிறது. திமிங்கிலமும் மீனும் என்ற கதை. ஏகப்பட்ட புத்தகக் கடைகள். ஏகப்பட்ட திமிங்கிலங்கள். மீன்களும் உள்ளன. விருட்சம் ஒரு மீன். திமிங்கிலங்களுக்கு இடையே ஒரு சின்ன மீன். திமிங்கிலத்திடம் மாட்டிக்கொள்ளாமல் தப்பித்துக்கொண்டு வரும் மீன்.
க.நா.சு நூற்றாண்டின் போது (ஞானக்கூத்தன்தான் எனக்கு ஞாபக மூட்டினார்) நான் க.நா.சு கவிதைகளை ஒரு சின்ன புத்தகமாகப் போட்டு எல்லோருக்கும் இலவசமாகக் கொடுத்தேன். அதிலிருந்து க.நா.சு புத்தகங்கள் ஒவ்வொன்றாய் கொண்டு வர வேண்டுமென்று நினைத்தேன். அவதூதர், ஆட்கொல்லி என்ற இரண்டு புத்தகங்களை மட்டும் கொண்டு வர முடிந்தது.
இந்த முறை நண்பர் கிருபாகரன் மூலம் 'க.நா.சு படைப்புகள்' என்ற பெயரில் நான்கு க.நா.சு புத்தகங்களைக் கொண்டு வந்துள்ளேன். இதேபோல் இன்னும் பல புத்தங்களைக் கொண்டு வர உள்ளேன். எல்லாம் விலை குறைவாக வைத்துள்ளேன்.
நேற்று வாழ்ந்தவர் கெட்டால், பெரிய மனிதன் என்ற இரு நாவல்களைக் கொண் நான்காவது தொகுப்பொன்றை கொண்டு வந்துள்ளேன். இந்தப் புத்தகங்களைக் கொண்டு வர உதவிய கிருபாகரனுக்கு நன்றி உரித்தாகும்.
Comments