Skip to main content

Posts

Showing posts from October, 2020

23வது நிகழ்வாக (30.10.2020) விருட்சம் கவிதை வாசிப்புக் கூட்டம்

அழகியசிங்கர் 1. தேவேந்திர பூபதி 2. ஷாஅ 3. கண்டராதித்தன் 4 . வத்சலா 5. பானுமதி ஆகியோர் சிறப்பாக கவிதைகள் வாசித்தார்கள்.

கவிதை ஒரு நிலைக்கண்ணாடி

அழகியசிங்கர் கவிஞர் தேவேந்திர பூபதி 'கவிதை ஒரு நிலைக் கண்ணாடி' என்ற தலைப்பில் உரையாடிய ஒளிப்பதிவை இங்கு பகிர்கிறேன்.
  23வது நிகழ்வாக விருட்சம் கவிதை வாசிப்புக் கூட்டம் அழகியசிங்கர் " வணக்கம்.  நாளை நடைபெற இருக்கும்  சூம்   மூலமாகக்  கவிதை வாசிக்கும் கூட்டத்தில்  கீழ்க்காணும்   கவிஞர்கள்  கலந்துகொள்ள இசைந்துள்ளார்கள். அவர்கள் பெயர்கள் வருமாறு:  1.  தேவேந்திர  பூபதி  2.  ஷாஅ  3. கண்டராதித்தன்  4 .  வத்சலா    5. பானுமதி  வழக்கம்போல் கவிதை வாசிப்பவர்கள்  சிலவற்றைத்  தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன். ஆத்திகம், நாத்திகம் கவிதைகள், அரசியல்வாதிகளைப் போற்றியும் தூற்றியும் கவிதைகள், ஆபாசமாக எழுதப்படும் கவிதைகள், கொரானோ தொற்றைக் குறித்து கவிதைகள். நாளை (30.10.2020)  மாலை 6.30க்கு கவிதை வாசிப்புக் கூட்டம் கவிஞர்  தேவேந்திர  பூபதி   ' கவிதையெனும் நிலைக்கண்ணாடி '  என்ற தலைப்பில்  உரை நிகழ்த்துகிறார்.   கவிதைகளை ரசித்துக் கேட்க உங்களை அன்புடன் அழைக்கிறேன்.  Topic: 23வது நிகழ்வாக விருட்சம் கவிதை வாசிப்புக் கூட்டம் Time: Oct 30, 2020 06:30 PM India Join Zoom Meeting https://us02web.zoom.us/j/ 86752404512?pwd= aUxqV0VBU0s3aS9KNkRjMXlQbzhqdz 09 Meeting ID: 867 5240 4512 Passco

இந்திரா பார்த்தசாரதியின் சூசைம்மாவும் அத்வைதமும்

  அழகியசிங்கர் இந்திரா பார்த்தசாரதியின் இந்தக் கதையைப் படித்துவிட்டு விழுந்து விழுந்து சிரித்தேன். கதையின் எள்ளல் சுவை சிரிப்பை வரவழைத்தது. இந்திரா பாரத்தசாரதயின் சிறுகதைகள் தொகுதி 1 என்ற புத்தகத்திலிருந்து இக் கதையைப் படித்தேன். கிழக்கு பதிப்பகம் முதல் பதிப்பாக 2010ல் வெளியிட்டிருந்தது. இப்போது இந்தப் புத்தகம் விற்பனைக்கு இருக்குமா என்று தெரியாது. இத் தொகுப்பில் ஒரு பெரிய குறையைக் கண்டு பிடித்தேன். 'சூசைம்மாவும் அத்வைதமும்' என்ற சிறுகதை எப்போது எழுதப் பட்டது என்ற குறிப்பு இல்லை. அல்லது பத்திரிகையில் பிரசுரம் செய்திருந்தால் எந்தப் பத்திரிகையில் வந்திருக்கிறது என்பதும் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரையில் இது பெரிய குறையாக எனக்குத் தோன்றுகிறது. சரி, இனிமேல் கதைக்குப் போகலாம். இக் கதையில் தலைப்பிலேயே இந்திரா பார்த்தசாரதியின் நையாண்டித்தனம் ஆரம்பித்து விட்டது. இக் கதை ஒரு விதத்தில் இன்றைய நிலையை வெளிப்படுத்துகிறது. சூசையம்மா நர்ஸ் சூபரின்டெண்டன்ட ஆக அந்த மருத்துவமனையில் பணி புரிகிறாள். கிறித்துவ மதத்தைச் சார்ந்தவள். அவளுக்கும் அத்வைதிற்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்ல

நவீன விருட்சத்தில் பிரசுரமான மொழிபெயர்ப்பு கவிதைகள்

  அழகியசிங்கர்   ஜ்யோத்ஸனாமிலன்  கவிதைகள் 1) மழைக்குப் பின் ..  இந்த கணம்தான்  உருவானதுபோல் எல்லாம்  நான்  பார்க்கப்  பார்க்க  முளைத்தன மரங்கள்  படர்ந்து சென்றது வானம்  எதிலும், எங்கும்  காற்றில் பழுத்தன பறவைகள்  மனிதர்களும்  இப்போது தான் தோன்றியது போல்  எங்கெல்லாமோ ...  எப்படியெல்லாமோ   மண்ணில்தான் எத்தனை இதமும் பதமும்  விதைத்துவிடு   மனதில் தோன்றியதை  ஆகாயத்தைக் கூட  சிருஷ்டித்துக் கொள்  விரும்பியவற்றை  மரம், பறவை, வீடு  ஏன் மனிதனையும் கூடத்தான் ஹிந்தி மூலம் : ஜ்யோத்ஸ்னாமிலன் தமிழில் : திலீப்குமார் (நவீன விருட்சம் இதழ் :7 ஜனவரி - மார்ச்சு 1990)

ஜெயகாந்தன் நண்பரை இழந்து விட்டோம்.

அழகியசிங்கர் சில தினங்களாக உடல் நலம்  சரியில்லாமலிருந்த  ஜெயகாந்தன் நண்பரான கே எஸ் என்று அழைக்கப்படுகிற  டாக்டர்  கே.எஸ் சுப்பிரமணியன்  நேற்று இரவு மாரடைப்பால் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  அவருக்கு வயது 83.  தமிழிலிருந்து  ஆங்கிலத்திற்கு ஜெயகாந்தனை அறியச் செய்தவர்.  பல கவிதை நூல்களை ஆங்கிலத்திற்கு அறிமுகப் படுத்திய பெருமை அவருக்குண்டு. சமீபத்தில் பலருடைய  கவிதைகளைக்  கொரானா குறித்து எழுதப்பட்டதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ' லாக்டௌன்   லரிக்ஸ்'  என்ற பெயரில் வெளியிட்டுள்ளார்.   அவருடைய மரணம் இயற்கையானது.   கொரானாவால்  இறக்கவில்லை.   அன்னாரது  ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். இன்று காலை 11.30 மணிக்கு  பெஸன்ட்  நகர் மின் தகன மேடையில்  இறுதிச்  சடங்கு நடக்க உள்ளது. 

சூமில் நடந்த விருட்சம் கவிதை வாசிப்பு கூட்டம்

 அழகியசிங்கர் 22வது  சூமில்  நடந்த விருட்சம் கவிதை வாசிக்கும் கூட்டத்தில் 32 பேர்கள் கலந்து கொண்டார்கள்.  உற்சாகத்துடன் பெரும்பாலோர் கவிதை வாசித்தார்கள். இவை எப்படிப்பட்ட கவிதைகள், இவற்றின் தரம் எப்படி உள்ளது என்ற ஆராய்ச்சியெல்லாம் செய்யக் கூடாது.  வேறு வேறு விதமாய் ஒவ்வொருவரும் கவிதை வாசிக்கிறார்கள்.   அவற்றைக்  கேட்போம் .  ரசிப்போம்.

23.10.2020 அன்று ஆத்மாநாம் கவிதைகள் குறித்து

அழகியசிங்கர் முனைவர் கல்யாணராமன் நிகழ்த்திய உரையின் ஒளிப்பதிவை இங்கு தருகிறேன். ஆவேசமான உரை. அவர் பேச்சின் போது இன்னும் சில கவிஞர்களைக் குறித்து அவர் கூறிய கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. உரையை முழுவதும் கேட்டு ரசியுங்கள்

துளிகள் 151 - விருட்சம சூம் கவிதை வாசிக்கும் கூட்டத்தில் வாசித்த கவிதை

அழகியசிங்கர் நேற்று நடந்த சூம் கூட்டத்தில் நானும் ஒரு கவிதை வாசித்தேன். உண்மையில் வாசிக்க நினைத்தது சீப்பு என்ற கவிதையை. ஆனால் வேறு இருவர் தலையைப் பற்றி கவிதைகள் வாசித்ததால் அழகி என்ற கவிதையை வாசித்தேன். என் தொகுப்பில் இது 152வது கவிதை. 2003ஆம் ஆண்டில் இக் கவிதையை எழுதினேன். 'அழகியசிங்கர கவிதைகள்' என்ற தொகுப்பில் நான் 1975முதல் 2018ஆம் ஆண்டு வரை தொகுத்து கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ளேன். முகநூல் நண்பர்களுக்கு இந்தக் கவிதையை வாசிக்க அளிக்கிறேன். 152. அழகி அடுக்குமாடி கட்டிடத்திலிருந்து வெளியில் வந்த அழகி அவள் ஒயிலாய் படி இறங்க எதிர் அடுக்குமாடி இளைஞன் அவளையே பார்த்து வாய்பிளந்தான் அழகி அவனைப் பார்த்து கையசைத்தாள் திகைத்த இளைஞன் உற்சாகத்துடன் காற்றில் ஈந்தான் முத்தங்களை அழகி நாணுவதுபோல் தலைகுனிந்து சிரித்தபடி சென்றாள் ஒவ்வொரு நாளும் இளைஞன் காத்திருக்க அழகியோ காணவில்லை இலைகளை உதிர்த்தவண்ணம் மரமொன்று எள்ளி நகையாடியது