Skip to main content

Posts

Showing posts from November, 2016

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 46

அழகியசிங்கர்  கிளிக்கதை

ப கல்பனாகிளிக்கதை கேட்டான் குழந்தை
சொன்னேன்

எங்கள் வீட்டில் முன்பொரு கிளி இருந்தது
தளிர் போல் மென்மையாய்ü

சிறகு விரித்தால்
பச்சை விசிறி போலிருக்கும்
சில நேரங்களில் பேசும்

வீடு திரும்பும்போது
தோள்களில் அமர்ந்து காதைக் கவ்வும்
தாத்தாவின் மடியிலமர்ந்து
செய்தித்தாள் ஓரத்தைக் கொத்திக் கிழிக்கும்

இடது ஆள்காட்டி விரலில் சுமந்து
வலக்கையில்
வாழைப்பழத்துடன் திரிவான் கடைக்குட்டி

எல்லோரையும் மகிழ்வித்தது
எல்லாம் கிடைத்தது அதற்கு

தங்களுடனேயே இருக்கட்டுமென்று
சிறகு கத்திரித்து
அழகு பார்ப்பர் மாதமொரு முறை

தத்தித் தத்திப் பறந்து
மரக்கிளையில் அமர்ந்த அன்று மட்டும்
அதிகமாய்க் கத்தரித்து ரசித்தனர்
தடுக்கித்தடுக்கி விழுவதை

"அச்சச்சோ....கடைசியில் என்னவாயிற்று?"
பதறினாள் குழந்தை

"எல்லாக் கிளிகளையும் போலவே
அதையும் ஒரு துரதிர்ஷ்ட நாளில்
பூனை பிடித்துக்கொண்டு போனது

பிறகென்ன நடந்ததென்று யாருக்கும் தெரியாது"நன்றி : பார்வையிலிருந்து சொல்லுக்கு - கவிதைகள் - ப கல்பனா - காலக்குறி பதிப்பகம், 18, 2வது தெரு, அழகிரிநகர், வடபழனி, சென்னை 600 026 - பக் : 80 - விலை : ரூ.25 - வெளி…

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 45

அழகியசிங்கர்  


உனக்காக என் அன்பே


ழாக் ப்ரெவெர்


தமிழில்: வெ ஸ்ரீராம்

பறவைகள் சந்தைக்குப் போனேன்
பறவைகள் வாங்கினேன்
உனக்காக
என் அன்பே

மலர்கள் சந்தைக்குப் போனேன்
மலர்கள் வாங்கினேன்
உனக்காக
என் அன்பே

இரும்புச் சாமான்கள் சந்தைக்குப் போனேன்
சங்கிலிகள் வாங்கினேன்
கனமான சங்கிலிகள்
உனக்காக
என் அன்பே

பிறகு அடிமைகள் சந்தைக்குப் போனேன்
உன்னைத் தேடினேன்
ஆனால் உன்னைக் காணவில்லை
என் அன்பே.

நன்றி : சொற்கள் - ழாக் ப்ரெவெர் - தமிழில் வெ ஸ்ரீராம் - வெளியீடு : க்ரியா - அலியான்ஸ் ஃபிரான்சேஸ், - முதல் பதிப்பு : 2000 - விற்பனைக்கு இந்தப் புத்தகம் இல்லை.


மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 44

அழகியசிங்கர்  


 மறு பரிசீலனை


தபசி
கொஞ்சமாகக் குடித்தால்
போதை ஏறமாட்டேன் என்கிறது.

அதிகமகாக் குடித்தால்
மறுநாள் காலை
தலையை வலிக்கிறது.

நண்பர்களோடு குடித்தால்
காசு செலவாகிறது

தனியாகக் குடித்தால்
பழக்கமாகிவிடும் என்கிறார்கள்

காதலிக்கத் தொடங்கும்போது..
கல்யாணம் கூடி வரும்போது..
பிறந்தநாள் இரவன்று..
டிரான்ஸ்ஃபர் ஆகும்போது...

எத்தனை வாய்ப்புகள்
குடிப்பதற்கு.

கள்ளும் சாராயமும்ü
செரிமானத்தைக் குறைக்குமாம்.

பீர் குடித்தால்
தொப்பை விழுமாம்.

ஜின்னுடன்
இளநீர் கலக்க வேண்டும்
என்கிறார்கள்

பிராந்தி, விஸ்கிக்கு
கோலா, பெப்ஸிக்குப் பதில்
தண்ணீர்தான் உசிதமாம்.

குடிக்கும்போது
நொறுக்குத் தீனி வேண்டாம்
என்கிறார்கள்
முறுக்கு, காராபூந்தி, பகோடா இத்யாதி..

வெங்காயம், தக்காளி, வெள்ளரிü
குடலுக்கு நல்லதாம்

எச்சரிக்கை உணர்வு
எல்லாவற்றிலும் அவசியம்தான்

எங்கு குடிக்க வேண்டும்
எப்படிக் குடிக்க வேண்டும்
யாருடன் குடிக்க வேண்டும்
என்றெல்லாம்
தீவிரமாக ஆராயும்
மனதிடம்
ஏன் குடிக்க வேண்டும்
என்று கேட்டால்
ஏதோ
மழுப்பலான விடை சொல்லித்
தப்பிக்கப் பார்க்கிறது


நன்றி : இன்னும் இந்த வாழ்வு - தபசி - கவிதைகள் - யாழ் வெளியீடு, திருக்கோவ…

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 43

அழகியசிங்கர்  


 தீர்வுசி மணி

என்ன செய்வ திந்தக் கையை
என்றேன்.  என்ன செய்வ தென்றால்
என்றான் சாமி.  கைக்கு வேலை
என்றி ருந்தால் பிரச்னை இல்லை.
மற்ற நேரம், நடக்கும் போதும்
நிற்கும் போதும் இந்தக் கைகள்
வெறுந்தோள் முனைத்தொங் கல்.தாங் காத
உறுத்தல் வடிவத் தொல்லை
என்றேன்.  கையைக் காலாக் கென்றான்


நன்றி : இதுவரை - சி. மணி - கவிதைகள் - வெளியீடு : க்ரியா -
முதல் பதிப்பு : அக்டோபர் 1996 - விலை : ரூ.100

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 42

அழகியசிங்கர்


 என்ன தவம் செய்தேன்!ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

கிண்ணங்கள், கரண்டிகள், தட்டுகள், எண்ணெய்புட்டிகள்....
இன்னும் பல துலக்கியவறே
அண்ணாந்தேன் தற்செயலாய்.
அற்புதத்திலும் அற்புதமாய்
ஊருக்கே ஒளியூட்டிக்கொண்டிருக்கும் நிலவு.
சின்னஞ்சிறு  செவ்வகத்திறப்புக்கு  வெளியேயிருந்து
என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தது!
எத்தனையோ காலமாய்
நான் ஏறெடுத்துப் பார்க்கவும் மறந்துபோயிருந்தது
புன்னகையில் கன்னங்குழிய
மின்னும் கண்களில் கனிந்துவழியும் அன்போடு
என்னையே பார்த்துக்கொண்டிருக்கும் இந்நேரம்
இன்னும் எத்தனையெத்தனை பேருக்குத்
தண்ணொளியால்
அருள்பாலித்துக்கொண்டிருக்கிறதோ....!
வெண்ணிலவே வெண்ணிலவே
உன் மௌனப் பண் கேட்டு என்னிரு விழிகளில்
தளும்பும் கண்ணீர்
சொல்லிடங்கா சுகம், சோகம் எல்லாவற்றிற்கும்.

நன்றி : இப்போது - கவிதைகள் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) - அனாமிகா ஆல்பாபெட்ஸ் - பக்கம் : 110 - விலை : ரூ.90 - வேறு விபரம் இல்லை.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 41

அழகியசிங்கர்  


 உனக்காக இவ்வுலகம்


மா தக்ஷிணாமூர்த்தி
பெண் வேண்டும்.
பெண்ணுக்குப் பண்ணிசைக்கப்
பொன் வேண்டும்.
பொன்னுக்கு மண் வேண்டும்.
மண்ணுக்கு விதை வேண்டும்.
விதை வளர நீர் வேண்டும்.
செழுமை மிக்க முலை வேண்டும்.
தேர் போன்ற அல்குல் வேண்டும்
தேரைச் செலுத்திடக் குதிரை வேண்டும்.
தேரில் புகுந்திட நான்முகன் வேண்டும்.
பாற்கடல் வேண்டும்.
தாமரை வேண்டும்.
சூர்ப்பணகை வேண்டும்.
மாற்றான் மனைவி வேண்டும்.
ஆற்றாத துயர்க்கடல் நீந்திப் பின்
மீளாத துயில் வேண்டும்.
பெண்ணே, எனக்காக நீ.
பின் உனக்காக இவ்வுலகம்.


நன்றி : திவ்யதர்சனம் - மா தக்ஷிணாமூர்த்தி - கவிதைகள் - விற்பனை : ஜெயகுமாரி ஸ்டோர்ஸ், கோர்ட் ரோடு, நாகர்கோவில் 629 001 - விலை : ரூ.7 - முதல் பதிப்பு : பிப்ரவரி 1976

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 40

அழகியசிங்கர் உறவு


பசப்பல் கே ராஜகோபால்நட்டநடுக் கனவினிலே
நான் விழித்து நோக்கினால்
தொட்டுவிட்ட கையெங்கோ,
தொடுவித்த உளமெங்கோ?
பட்டப் பகலென்றால்
பற்றிய கை விடுவேனோ?
முட்ட முழு மோனத்தில்
மூழ்காமல் நிற்பேனோ?
தொட்டெழுப்பித் துடிக்க விட்டுத்
தூரநின்று சிரித்திருந்தால்
தொடுவித்த உறவதுதான்
தொடராமற் போய்விடுமோ?
எத்தனை நாளானாலும்,
எத்துயரம் பட்டாலும்,
இப்படியே காத்திருப்பேன்
ஆற்றலென்று உனக்கிருந்தால்,
ஆலவிதை பழுக்காதோ?
பார்வையென்று உனக்கிருந்தால்
பழுத்த விதை தெரியாதோ?


நன்றி : பசப்பல் கவிதைகள் - கே ராஜகோபால் - எழுத்து பிரசுரம் - முதல் பதிப்பு : 1974 - பதிப்பாளர் : எழுத்து பிரசுரம், 19-எ பிள்ளையார் கோயில் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 5 - விலை : ரூ.3.50

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 39

அழகியசிங்கர்  


வாழ்த்துப்பா


ப்ரியம்
ஆடம்பரமில்லை. தோற்றத்தில் ஆணவமில்லை. உலகில்
சைக்கிளைப் போல் ஓர் எளிதான வாகனம் எதுவுமில்லை.
மிதித்தால் உடல் நலத்திற்கும் கேடில்லை.  விழுந்தால் பெரிய
விபத்தேற்படுவதில்லை.  சுகாதாரத்திற்கு தீங்கில்லை.
சுற்றுப்புறச் சுழலுக்கும் கேடில்லை.  சைக்கிள் பழகாதவர்
இன்று எவருமில்லை.  சைக்கிள்களால் புவிக்கு எந்நாளும்
தொந்தரவில்லை.  வீட்டின் குஞ்ஞுட்டிகள் மிதித்துப் பழகும்போது
பார்த்து இரசிக்காத கண்களும் கண்களில்லை.

நகரசாலைகளில் சைக்கிள் செல்ல தனிவழியுண்டு.  மேற்கில்
சிலவிடம் சைக்கிளைத் தவிர, மற்ற வாகனங்கள் செல்ல
தடையுண்டு.  சைக்கிள் ஒரு தத்துவமாம்.  பூக்கள்போல
அதுவும் ஒன்றாம்.  எளிமையான வாழ்விற்கு எடுத்துக்காட்டாம்.

சைக்கிள்களால் வாழ்பவர் புவியில் பலகோடி.  சைக்கிளைப்போல்
வாழ்பவர் புவியில் சில கோடி.

சைக்கிளை நீயும் வாழ்த்துப்பா


நன்றி : அலைகளின் மீதொரு நிழல் - கவிதைகள் - ப்ரியம் -எழில் வெளியீடு, 21 மாதவரம் நெடுஞ்சாலை வடக்கு, பெரம்பூர், 
சென்னை 11 - முதல் பதிப்பு : டிசம்பர் 2001 - விலை : ரூ.35இலக்கியக் கூட்டங்களை சீக்கிரமாக முடியுங்கள்

அழகியசிங்கர்பொதுவாக இலக்கியக் கூட்டங்கள் சீக்கிரமாக ஆரம்பிப்பதில்லை.  சரியாக மாலை  5 மணிக்கு ஆரம்பிப்பதாக சிற்பி அவர்கள் படைத்த கருணைக்கடல் இராமாநுசர் காவிய நூல் அறிமுக விழா  இருந்தது.  ஆனால்  மாலை  6 மணிக்குத்தான் ஆரம்பித்தது.  நல்லகாலம் நான் 6மணிக்குத்தான் சென்றேன்.  கொஞ்சம் தூங்கி விட்டேன்.

அங்கு பேசியவர்கள் எல்லோருக்கும் மரியாதை செலுத்தினார்கள்.  இதுவே அரைமணிநேரம் மேல் ஓடியிருக்கும்.  அதற்கு முன்னால் பேசுபவர்கள் பற்றிய அறிமுகமே 20 நிமிடங்களுக்கு மேல் போயிருக்கும். அப்புறம் ஒவ்வொருவராகப் பேச ஆரம்பித்தார்கள்.

முதலில் முனைவர் சிலம்பொலி செல்லப்பன் பேச ஆரம்பித்தார்.  கேட்டுக்கொண்டே இருக்கும்போது எப்போது பேச்சை நிறுத்துவார் என்று தோன்றியது. üமருத்துவர் சொல்லியிருக்கிறார்.  கூட்டத்தில் அதிக நேரம் பேசக்கூடாது,ý என்றே அரைமணி நேரம் மேல் பேசி விட்டார்.  அதேபோல் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்களும் அரைமணிநேரத்திற்கு மேல் எடுத்துக்கொண்டு விட்டார்.

அவர் பேசியவுடன் கூட்டத்திலிருந்து பலர் வெளிநடப்பு செய்து விட்டார்கள்.  மருத்துவர் சுதா சேஷய்யன் அவர்கள் பேச ஆரம்பித்தார்.  மணி 8.30 ஐத் தொட்டுவி…

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 38

அழகியசிங்கர்  


பொய்க்கடை


மாலதி

தெரிந்தவர் யாரும் சுற்றும் முற்றும் கண்ணில் படாத
சடக்கென்ற கணத்தில் நுழைந்தேன்.
பொய் விற்கும் கடைக்குள்.

நெடு நாளைய சேமிப்பு நிறைய கனவு
பொய்களின் அழகை வடிவை
பைக்குள் அமுக்கிவிட.

ஒவ்வொன்றாய் உபயோகித்து என்
உலகை அலங்கரிக்க
தேடினேன்.

இது வரியிட்ட பொய்
கட்டமிட்டது,
ஓரம் மட்டும் பொய்.
அரை வெளுப்பில் பொய்
பாதிப்பொய் அரைக்கால் பொய்

இது மதப்பொய், இது நம்பிக்கைப்பொய்
மதிமில்லாத மதர்ப்பின் பொய்
இருக்குமிடம் தெரியாத,
லேசாய் இது இலக்கியப் பொய்.

உண்மையிடத்துப் பொய். வாதத்துக்காய்
பொய்.  உயிர்காக்கும் நியாயத்துக்காய்
பொய்.  இப்படி நிறைய
முழுப் பொய் கிடைக்குமா? கேட்டேன்.
என்னை ஏற இறங்க பார்த்தார்
கடைக்காரர்.

கனப் பொய் முடக்கி வைத்திருக்கிறோம்
கனவான்களுக்காக.
பாதுகாக்க ஒன்றுமில்லாத
பைத்தியங்களுக்கு நாங்கள்
பொய் விற்பதில்லை என்றார்.
அப்போது தான் உணர்ந்தேன்
என் ஆடையின்மையை


நன்றி : மரமல்லிகைகள் - கவிதைகள் - மாலதி - வெளிவந்த ஆண்டு : 2003 - சாந்தினி பதிப்பகம், ஆர்என் 6 பட்டினப்பாக்கம் குடடியிருப்பு, சென்னை 600 028 - புத்தகத்தில் விலையே குறிப்பிடப்படவில்லை - தொலைபேசி : 044 24941…

மொட்டைக் கடிதாசும் பின் விளைவும்

அழகியசிங்கர்

நான் பந்தநல்லூர் தேசிய வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, என்னையும் சேர்த்து அஙகு பணிபுரிந்த நான்கு ஊழியர்களுக்கு மொட்டைக் கடிதாசு எழுதப்பட்டு வட்டார அலுவலகத்திற்கும், தலைமை அலுவலகத்திறகும் அனுப்பி இருந்தார்கள்.  மொட்டையின் விளைவு என்னைத் தூக்கி கள்ளிமேடு என்ற கிளைக்கு மாற்றினார்கள். அதேபோல் இன்னொரு அலுவலரை கள்ளிமேடு பக்கத்தில் உள்ள கிராமக் கிளைக்கு மாற்றினார்கள்.   உண்மையில்  குமாஸ்தாக்களை ஒன்றும் செயயவில்லை. ஏன்?
அந்தக் கிராமத்தில் உள்ளவர்கள் இதுமாதிரியான மொட்டைகடிதாசைத் தயாரித்திருக்க மாட்டார்கள்.  காரணம்.  அந்த மொட்டைக் கடிதம் டைப் அடித்திருநதது. இறுதியில் பந்தநல்லூர் வாசிகள் என்று கையெழுத்து எதுவும் போடாமல் அனுப்பியிருந்தார்கள்.  கிராமத்தில் யார் இதுமாதிரி  செய்வார்கள் என்று யோசிப்பேன். அலுவலகத்திலேயே பிடிக்காதவர்கள் செய்திருக்க  வேண்டுமென்று தோன்றியது.  கள்ளிமேட்டிற்குப் போகும்படி வற்புறுத்தினால் வேலையை விட வேண்டியதுதான் என்று நினைத்தேன்.  ஆனால் அதுமாதிரி ஒன்றும் ஆகவில்லை. என்னையும் இன்னொருவரையும் மிரட்டி ஆர்டரை ரத்து செய்தார்கள்.
அந்தத் தருணத்தில் நான் எழுதிய ஒரு …

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 37

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 37

அழகியசிங்கர்  

 மரிக்கும் உயிர்க்கும் ஓசைகள்

கோ ராஜாராம்
"ஹலோ"
வழக்கம் போல்
கையுயர்த்தி நானிரைந்தேன்
தூரத் தெரிந்த நண்பனிடம்.
அருகிருந்த ஃபாக்டரியின்
மெஷினிரைச்சல் ஓசைகளில்
என் ஓசை கரைந்தது.

என்
உயர்த்திய கைக்குப் பதில்
அவனசைக்கும் கையும்
வாயசைப்பும் தெரிகிறது.
வழக்கம் போல்.

மெஷின்களில் ஓசைகளில்,
பழக்கமில்லா உயிர்ப்பு.


நன்றி : அலுமினியப் பறவைகள் - கவிதைகள் - கோ ராஜாராம் - வெளியீடு : அன்னம் பிரைவேட் லிமிடெட், சிவகங்கை 623 560 - முதல் பதிப்பு : டிசம்பர் 1982 - விலை ரூ.4 - அட்டை : ஞான. இராசசேகரன்

சாருநிவேதிதாவின் இராச லீலா என்ற புத்தகம் பற்றி ...

அழகியசிங்கர்

நண்பர்களே 

வணக்கம்.  நீங்கள் இங்கே ஆவலுடன் கூடியிருப்பது இராச லீலா என்ற 614 பக்கங்கள் கொண்ட நாவலைப் பற்றி நான் என்ன சொல்லப் போகிறேன் என்று.  தமிழில் 3 எழுத்தாளர்களுக்கு அபிமானிகள் இருக்கிறார்கள்.  அவர்கள் எங்கு போய் பேசினாலும் அபிமானிகள் கூடி விடுவார்கள்.  உங்களுக்கும் இது தெரியும்.   3 எழுத்தாளர்களில் ஒருவர் சாருநிவேதிதா.  சாரு நிவேதிதாவிற்கு அபிமானிகள் அதிகம் உண்டு.  ஆனால் சாருநிவேதிதா விஷயத்தில் அபிமானிகளும் எதிர்ப்பவர்களும் உண்டு.  நான் வேண்டுமென்றே பெயர்களைக் குறிப்பிடாமல் இருக்கும் மற்ற இரண்டு எழுத்தாளர்களுக்கு அபிமானிகள் மட்டும்தான் உண்டு.  இந்த எதிர்ப்பாளர்கள் சாருநிவேதிதாவின் புத்தகத்தைப் படித்து அவரை கண்டபடி திட்டவும் திட்டுவார்கள்.  ஏன் சிலசமயம் வன்முறையில் இறங்கினாலும் இறங்குவார்கள்.  சாருநிவேதிதாவும் இதையெல்லாம் எதிர்பார்க்காமல் இருக்க மாட்டார்.  நான் இந்தப் புத்தகத்தைப் பாராட்டி சொன்னால், அபிமானிகள் என்னை வாழ்த்துவார்கள்.  ஆனால் அவருடைய எதிர்ப்பாளர்கள் அவரை எதிர்ப்பதுபோல் என்னையும் எதிர்ப்பார்கள் என்று நினைக்…

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 36

அழகியசிங்கர்  

வீடு      

இளம்பிறை


சன்னலுக்கு வெளியே                        
சாய்ந்திருப்பது யார்?
நள்ளிரவு விழிப்பில்
பயந்தபின்பு
நினைவிற்கு வரும்
மாடிப்படிகள்.

கைக்கெட்டா தூரத்தில்
பழுத்து உதிரும்
பப்பாளிப் பழங்களைப்
பார்த்து நின்றதில்
இன்றைக்கு.....

பொங்கி வழிந்துவிட்டது பால்!
"சன்னல் கம்பிகளில்
சிலந்தி வலையைக்கூட
தட்டிவிடாமல....
என்னதான் குடித்தனம்
நடத்துகிறாயோ.....?"
திட்டிப் போகிறாள் சுமதி.
சன்னலை
மெள்ள மூடி
திறந்து கொண்டிருப்பதையும்
காற்று,
பலமாக வீசும்போது
பதறிக்கொண்டிருப்பதையும் சொன்னால்
"பைத்தியம்" என்பாள்.

நன்றி : முதல் மனுசி - கவிதைகள் - இளம்பிறை - ஸ்நேகா - 348 டி டி கே சாலை, இராயப்பேட்டை, சென்னை 600 014 - விலை : 75

நேற்று கலந்துகொண்ட இரண்டு நிறைவான கூட்டங்கள்...

நேற்று கலந்துகொண்ட இரண்டு நிறைவான கூட்டங்கள்...

அழகியசிங்கர்பொதுவாக நான் இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொள்பவன்.   பேசுபவனாக இல்லாமல் பார்வையாளனாக இருப்பதைப் பெரிதும் விரும்புவேன்.  பார்வையாளனாக இருக்கும்போது கூட்டம் நடத்துபவர்களை நான் கவனித்துக்கொண்டிருப்பேன்.  ஒரு கூட்டம் எப்படியெல்லாம் நடக்கிறது என்பதையும், யார்யார் வருகிறார்கள் என்றெல்லாம் பார்ப்பேன்.   மனம் நிறைவு செய்வதுபோல் ஒரு கூட்டம் இருந்தால் அதைப் பற்றி எழுத முயற்சி  செய்வேன்.  அப்படி உடனே எழுதாவிட்டால் கூட்டம் என் நினைவை விட்டுப் போய்விடும்.  பொதுவாக நான் ஒரு காமெரா வைத்துக்கொண்டு அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளை புகைப்படம் எடுப்பேன்.  ஆனால் இன்று அதுமாதிரி எதுவும் செய்யவில்லை.  கூட்டத்தில் நடந்த நிகழ்ச்சிகளை ஆடியோவில் பதிவு செய்தேன்.
ஓய்புப்பெற்ற நீதியரசர் சந்துரு குடும்பத்தினர் ஏற்பாடு செய்த கே எஸ் சுப்பிரமணியன் அவர்களின் எண்பதாவது பிறந்த தின விழா நிகழ்ச்சிக்கு அழைப்பு வந்தது.  எனக்கு எப்போதும் கே எஸ் அவர்களைப் பார்க்கும்போது உற்சாகமான இளைஞர் ஒருவரைப் பார்ப்பதுபோல் உணர்வு ஏற்படும்.  இன்றும் அப்படிப்பட்ட உணர்வு ஏற்பட்டது.  பெர…

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 35

அழகியசிங்கர்  நீர் பருகும் மர நிழல்கள்

சத்யன்


டீயில் தோய்த்த ரொட்டித்துண்டுகள்
என் நாளேட்டில் புதிய பக்கத்தைத் துவக்கின.
இரவு மழையினால் இளம் குளிர்
கால்சராய் பையில் என்கைகள்
நேற்றைய உணவு நேரத்தை
தூக்கத்தில் மறக்கச் செய்து
ப்ளாஸ்டிக் போர்வைகளில்
முடங்கிக் கொண்டிருந்த குடிமக்கள், நகரை
லட்சியம் செய்யவில்லை.
காற்றில் மிதந்துவரும் ஸ÷ப்ரபாதம்
கொடிக்கம்பியில் வரிசைப் புறாக்கள்
வேலியில் படர்ந்திருந்த ஒற்றை ரோஜா
கிரிக்கெட் பயிலும் பெண்கள்
தேங்கி நிற்கும் குட்டையில்
சிறகு சிலிர்த்து குளிக்கும் குருவிகள்
இன்னும் எங்கள் உலகில்
செயற்கை படியவில்லை என்றன.
பருக்கைகளுக்குப் பாய்ந்துவரும் மீன்கள்போல்
நேற்றைய கனவின் சிதிலங்கள்
காப்பிக் கோப்பையில் கனவுமுகங்களைத் துழாவின.
பஸ்களின் ஹார்ன் ஒலியில்
பாஸ்பரûஸ கரைத்து ஆபீஸ் சேர்ந்தேன்.
திவசக் காக்கைகளுக்கு அன்னம் இட்டு
காத்திருக்கும் அந்தணனாய்
கடிதங்கûடிள எதிர்பார்ப்பது
பழக்கமாகிப்போனது.KAIPPRATHIYAL SILA THIUTHANGAL - COLLECTION OF POEMS - SATHYAN - PUBLISHED BY MEETCHI BOOKS - 61 N G G O COLONY, DHARMAPURI 636 705 - FIRST EDITION :  MAY 1986 - PRICE : 6

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 34

அழகியசிங்கர்


மோனாலீஸ


வத்ஸலாபாட்டியின் வைரமூக்குத்தி
அத்தையின் மஞ்சள்நிற புடவை
அப்பாவின் சட்டையிலிருந்து எட்டிப் பார்க்கும் பேனா
பச்சைநிற ஹெல்மெட்டுக்குள் தெரியும்
என் முகம்
கண்களால் நகைக்கும் தபால் மாமா
கீழ்வீட்டு க்ரோட்டன்ஸ் இலை
வாஷ்பேஸின் குழாயின் மேல்குமிழி

இவற்றுள் எதனைக் கண்டு
கனவில் இதழ் விரித்தாய்
என் பொடி மகளே?


நன்றி : சுயம் - வத்ஸலா - கவிதைகள் - பக்கங்கள் : 96 - வெளியீடு : ஸ்நேகா, 348 டி டி கே சாலை, இராயப்பேட்டை, சென்னை 600 014 - விலை : ரூ40 - முதல் பதிப்பு : 2000மாம்பலம் டாக் என்ற பத்திரிகை

அழகியசிங்கர்


ஒவ்வொரு சனிக்கிழமையும் போஸ்டல் காலனி வீட்டில் மாம்பலம் டாக், மாம்பலம் டைம்ஸ், தி நகர் டாக் இருக்கும்.  இரும்பு கேட் பின்னால் விழுந்து கிடக்கும்.  அலட்சியமாக உள்ளே கொண்டு போய் வைத்துவிடுவேன்.  இது மாதிரியான பத்திரிகைகள் அவசியம் தேவை.  இதில் உள்ள விளம்பரங்கள் அந்த ஏரியாவில் உள்ளவர்களுக்குப் பயன் உள்ளவை.  
வீடு வாடகைக்கு வேண்டுமா?  அல்லது விற்பனைக்கு வேண்டுமா?  எல்லாவற்றுக்கும் விளம்பரம்.  மின்சாரம் சம்பந்தமான பிரச்சினை, தண்ணீர் பிரச்சினை என்று எல்லாவற்றுக்கும் தீர்வு கிடைத்துவிடும்.  சமையல் செய்ய ஆட்களா?  நர்ஸ் வேண்டுமா? கரையானை அகற்ற வேண்டுமா? எல்லாப் பிரச்சினைக்கும் தீர்வு..
பின் சில தகவல்களும் இதன் மூலம் கிடைக்கும்.  அதாவது மாம்பலத்தில் எதாவது முக்கிய நிகழ்ச்சி நடந்தால் அதைப் பற்றி எழுதியிருப்பார்கள்.  விருட்சம் 100வது இதழ் விழா மாம்மலத்தில் உள்ள மகாதேவன் தெருவில் வீற்றிருக்கும் காமாட்சி மினி ஹாலில்தான் நடந்தது.  அது குறித்து மாம்பலம் டாக்கில் என் நண்பர் ஜி சீனிவாசன் அக்கறை எடுத்துக்கொண்டு எழுதி உள்ளார்.  
ஆனால் ஒரு வேடிக்கை என்னவென்றால் இந்த சனிக்கிழமை மட்டும் போஸ்டல் காலனி…
அம்ஷன்குமார் கூட்டமும் பத்மநாப ஐயரும்..

அழகியசிங்கர்
ஐந்தாம் தேதி அம்ஷன் குமார் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்தார் பத்மநாப ஐயருக்கு. அக் கூட்டத்திற்கு 80 பேர்கள் வந்திருந்தார்கள். சென்னையில் 80 பேர்கள் ஒரு இலக்கியக் கூட்டத்திற்கு வருகிறார்கள் என்றால் அது சிறப்பான கூட்டம். கூட்டம் நன்றாக ஆரம்பம் ஆனது. பன்னீர்செல்வம் பேசும்போதும், யாழ்பாணம் தெட்சணாமூர்த்தி குறித்து ஆவணப்படம் போதும், கூட்டம் அசையாமல் இருந்தது.
திடிரென்று ஒரு தொற்று நோய் பரவிவிட்டது. கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக கூட்டத்தை விட்டுப் போக ஆரம்பித்தார்கள்.
கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பலர் பத்மநாப ஐயருக்குத் தெரிந்தவர்கள். அவரை நேரில் பார்த்தவர்கள். அவருடன் பேசியிருப்பவர்கள். உண்மையில் அவர்கள் முன்வந்து பத்மநாப ஐயரைப் பற்றிப் பேச வந்திருக்க வேண்டும். அம்ஷன்குமாருக்கு உறுதுணையாய் இருந்து நடத்தியிருக்க வேண்டும்.
அம்ஷன்குமார் கூட்டம் ஆரம்பிக்கும்போதே, 'ஐயருக்குத் தெரிந்தவர்களும் அவரைப் பற்றி இக் கூட்டத்தில் பேச அழைக்கிறேன்' என்று தெரிவித்திருக்க வேண்டும். அப்படி தெரிவித்திருந்தால், கூட்டத்தில் இன்னும் பத்மந…

ஒரு இலக்கியக் கூட்டத்திற்கு அதிகம் பேர் கலந்துகொள்ள என்ன செய்ய வேண்டும்...

அழகியசிங்கர்பொதுவாக ஒரு இலக்கியக் கூட்டத்தில் கலந்துகொள்ள அதிகப் பேர்கள் வர மாட்டார்கள்.  அதுவும் சென்னையில் ஒரு கூட்டம் நடந்தால் நிச்சயம் கூட்டத்திற்கு அழைத்துக்கொண்டு வருவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடும்.  எந்த இடத்திலும் நெரிசல்.  போக்குவரத்தைத் தாண்டி வரவேண்டும்.  அதையும் மீறி வருபவர்களின் எண்ணிக்கை ஐம்பதைத் தாண்டுமென்றால் உங்கள் கூட்டம் வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும்.  ஆனால் பொதுவாக கோயம்புத்தூர் போன்ற இடத்தில் எளிதில் ஒரு இலக்கியக் கூட்டத்திற்கு 50 பேர்கள் கூடி விடுவார்கள் என்று என் நண்பர் ஒருவர் கூறுவார். அது உண்மையா என்பது தெரியாது.
ஆனால் சென்னையில் 50 பேர்களைக் கண்டுபிடிப்பது ரொம்ப சிரமம்.  அப்படியே 50 பேர்கள் வந்தால் அவர்கள் கூட்டம் முடியும்வரை தங்க வைப்பது இன்னும் சிரமம்.  நான் கிட்டத்தட்ட 200 கூட்டங்கள் நடத்தி அனுபவப்பட்டவன்.  இலக்கியக் கூட்டங்கள் நடத்துபவர்களுக்கு நான் சில அறிவுரைகளைக் குறிப்பிடலாமென்று நினைக்கிறேன்.
1. ஒரு கூட்டத்தை நடத்த உங்கள் இலக்கு 50 பேர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.  50 பேர்கள் வருவதற்கு நீங்கள் பேசுபவர்களை 45 பேர்களாகவும், பார்வையாளர்களை 5 பேர்…

சில துளிகள்.......4

சில துளிகள்.......4                                     

அழகியசிங்கர் - முந்தாநாள் காலை 3 மணி இருக்கும்.  ஒரே சத்தம்.  கீழே இரும்பு கேட்டை யாரோ வேகமாக டமால் டமால் என்று அடித்தார்கள்.  பின் ஓடற சத்தம்.  வீட்டிற்குள் நுழைந்து மாடிப்படிக்கட்டுகளில் தடதடவென்று ஓடி வந்தார்கள்.  எனக்கு திகைப்பு.  கதவைத் திறக்க பயம்.  பின் கொஞ்ச நேரம் கழித்துக் கதவைத் திறந்தேன்.  மேல் வீட்டிலிருந்த குடி இருப்பவரும் திறந்துகொண்டு நின்றிருந்தார்.  "என்ன?" என்று கேட்டேன்.  üüதிருடன் ஒருவன் நம்ம வீட்டு வழியா தப்பிச்சுட்டுப் போறான்.  அவனைப் பிடிக்க போலீஸ்காரர்கள்தான் இப்படி சத்தம் போட்டு ஓடி வந்தார்கள்,ýý என்றார். 
திருடனா?  நம்ம தெருவிலா?  எங்கள் தெருவில் நுழை வாயிலில் மாடுகள் சுதந்திரமாய் நின்று கொண்டிருக்கும்.  பின் சைக்கிள்கள், டூவிலர்கள் என்று நிரம்பி வழிந்திருக்கும்.  பின் தெரு முழுவதும் நிறையா பேர்கள் இருப்பார்கள்.  சென்னை ஜனத்தொகையில் பாதிபேர்கள் இங்கேதான் இருப்பார்கள் என்று சொல்லிவிடலாம்.  ஆனால் எப்படி திருடன் வர முடியும்?  அதுவும் துணிச்சலாக.  நேற்று காலையில் என் வீட்டிற்கு எதிரில் உள்ள இரண்டு…

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 33

அழகியசிங்கர்  


 உலகம்


ஷண்முக சுப்பையாஅணைக்க ஒரு
அன்பில்லா மனைவி.
வளர்க்க இரு
நோயுற்ற சேய்கள்.
வசிக்கச் சற்றும்
வசதியில்லா வீடு
உண்ண என்றும்
உருசியில்லா உணவு.
பிழைக்க ஒரு
பிடிப்பில்லாத் தொழில்.
எல்லாமாகியும்
ஏனோ உலகம்
கசக்கவில்லை.

நன்றி : எழுத்து பிரசுரம் - முதல் பதிப்பு : ஏப்ரல் 1975 - 19 - எ பிள்ளையார் கோயில் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 5 - விலை ரூ.3 - 62 பக்கங்கள்