Skip to main content

Posts

Showing posts from August, 2019

தயவுசெய்து புத்தகத்தை மட்டும் இரவல் கேட்காதீர்கள்....

அழகியசிங்கர் நான் ஒரு புத்தக விரும்பி.  எங்குப் பார்த்தாலும் புத்தகம் வாங்கி விடுவேன்.  பெரும்பாலும் பிளாட்பாரத்தில் கிடைக்கும் புத்தகங்களை வாங்கிக் குவித்துவிடுவேன்.  அதே சமயத்தில் பதிப்பகத்திற்கும் சென்று புது புத்தகங்களை வாங்குவேன். இப்படி நான் புத்தகங்களை வாங்கி சேர்ப்பதில்தான் எனக்கு ஆபத்தாக இருக்கிறது.  சிலர் என்னிடம் புத்தகம் கேட்டு தொந்தரவு செய்கிறார்கள்.  எனக்குப் பெரிய மனது கிடையாது.  அவர்களுக்குப் புத்தகங்களைக் கொடுத்துவிட்டு சும்மா இருக்க.  நான் எத்தனையோ சிரமப்பட்டு புத்தகங்களைச் சேகரித்துக் கொண்டிருக்கிறேன்.  திருவல்லிக்கேணி பிளாட்பாரத்திலிருந்து அசோக் நகர் பேப்பர் கடை வரைக்கும். பங்களூர் சென்றால் ப்ளாசம்ஸ் போய்ப் புத்தகங்கள் வாங்கி வருகிறேன்.  என் மனைவி என்னுடன் வரும்போது புத்தகம் எதுவும் வாங்கக் கூடாது என்று கட்டளை இடுவாள்.  புத்தகக் காட்சி வந்தால் இன்னும் குதூகலமாகி விடுவேன்.  தேடித்தேடிப் போய் புத்தகங்கள் வாங்குவேன். நான் புத்தகமும் அச்சிடுகிறேன்.  என் புத்தகங்களையும் விற்கிறேன்.  நான் விற்பதை விட வாங்கி சேகரிக்கும் புத்தகங்கள் அதிகம். நான் பு

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 121

அழகியசிங்கர்   மாலை - காலியிடம் அபி உண்மை தன் பழைய இடத்துக்குத் திரும்பி வந்து விட்டது எப்போதும் காலியாயிருக்கும் இடம் அது இல்லாத இடம் எது என்பது பெரியோர் வாதம். வாதம் தெரியாமல் எவர் பேச்சையும் கவனிக்காமல் இதையே கவனித்திருக்க நேர்கிறது, திரும்புவதை, திரும்புவதை மட்டும். புழுதிப் படலத்தோடு மிதந்துபோகும் இடைச்சிறுவர்கள் பசியின் பார்வையில் எரியும் விறகு கடைசி மஞ்சள் கிரணத்தின் தயங்கிய மூச்சு --எதுவாயினும் என்மீது பட்டவுடன் விலகிப் போகின்றன, கவனம் கவராமல். இடம் இல்லாதிருந்ததில் இடம் பரவிக்கொண்டது, காலியிடம் வாசலில் தொடங்கி வானம் அடங்கி தான் இன்றி இருண்டு கிடக்கும் மனசின் வெளிவரை எங்கும் காலியிடம் காலியிடம் நன்றி : அபி கவிதைகள் - கலைஞன் பதிப்பகம், 19 கண்ணதாசன் சாலை. தி நகர், சென்னை 17 - பக்கங்கள் : 242 - விலை : ரூ.100 - இரண்டாம் பதிப்பு : 2009

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 120

அழகியசிங்கர்   எல்லா சுவர்களும் ஆர் புருஷோத்தமன் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுங்கள் குழந்தைகளுக்கு வண்ணம் வழியும் பட்டாம் பூச்சிகளையும் பறந்து திரியும் தும்பிகளையும் பிய்த்து மகிழட்டும் குச்சு மிட்டாயோ குடை ராட்டினமோ உங்கள் சில்லரைகளை அள்ளிக் கொடுங்கள் மணியலிக்கும் யானையின் பின்னே சாலையின் இறுதிவரைக்கும் சென்று மீளட்டும். சந்தோஷம் பூத்திடும் தளிர் முகங்களில் படரவேண்டாம் ஒருபோதும் சோகம். களங்கமற்ற குழந்தைகள் விழிகளில் மறைந்து கிடக்கிறது சொர்க்கம். மரணத்தின் இறுதிவிநாடிகளில் தரிசியுங்கள் குழந்தைகளை வெளிச்சத்தின் வாசல்திறந்திருக்கும் உங்களுக்காக, மெல்லிய முத்தங்களில் இடிந்து வீழ்கின்றன அத்தனைச் சுவர்களும் நன்றி : மரங்களுக்காகவும் சில வீடுகள் - ஆர் புருஷோத்தமன் - பக்கங்கள் : 80 - விலை : ரூ.25 - பதிப்பித்த ஆண்டு : 2002 - வெளியீடு : விடியல் வெளியீடு, 8 கைலாசபுரம் முதல் தெரு, மேற்குத் தாம்பரம், சென்னை 600 045

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் - 9

அழகியசிங்கர் 1. எது சிறந்த கேள்வி சிறந்த பதில் நீங்கள் கேட்பது சிறந்த கேள்வி. நான் சொல்வது சிறந்த பதில் 2. தமிழில் இப்போது படிப்பவர்கள் குறைந்துகொண்டு போகிறார்களா? உண்மைதான்.  ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்ற மூன்று பிரிவினரில் பெண்கள்தான் படிக்கிறார்கள்.  3. நீங்கள் பணத்தை ஏமாந்து விட்டீர்களே? கிடைத்ததா? கிடைக்கவில்லை.  முன்பே எதிர்பார்த்ததுதான்.  போலீஸ் கமிஷனரிடம் போய் புகார் கொடுத்தேன்.  ஒரு மாதம் ஓடிவிட்டது. போலீசிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை.  போன் செய்தாலும் எடுப்பதில்லை.  இதை எதிர்பார்த்ததுதான்.  போலீசு முயற்சி செய்தால் எந்தக் கணக்கிற்குப் போனதோ அதைக் கண்டுபிடிக்கலாம்.  தினமும் பலர் ஏமாந்து போகிறார்கள். 4. சமீபத்தில் ஏற்பட்ட மரணங்களைப் பற்றி மரணம் தினம் தினம் யாருக்காவது நடந்து கொண்டுதான் இருக்கிறது.  ஆனால் சமீபத்தில் நடந்த இரண்டு மரணங்கள் மட்டும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை.  ஒரு மரணம் ஒரு விபத்து.  விருட்சம் லைப்பரரி அடுக்கத்தில் பக்கத்தில் குடியிருந்தவர்.  எழுபது வயதிற்கு மேல் இருக்கும். யாருக்கும் உதவி செய்ய வேண்டுமென்று நினைத்துக்கொண

நவீன விருட்சம் 110வது இதழ் வந்து விட்டது...

அழகியசிங்கர் எல்லோரும் ஆவலாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிற நவீன விருட்சம் 110வது இதழ் வந்தே விட்டது!   109வது இதழ் முழுவதும் தீர்ந்து விட்டதால் இந்த இதழ் பிரதி எண்ணிக்கையைக் கொஞ்சம் கூட்டிவிட்டேன்.  (எத்தனைப் பிரதிகள் அச்சடித்தேன் என்பதை மட்டும் கேட்காதீர்கள்).  எனக்குள் ஒரு விசித்திரமான உணர்வு உண்டாகிறது.  இதழை ஆரம்பிக்கும்போது அது முடியவே முடியாது என்பதுபோல் தோன்றுகிறது.  முடித்தபிறகு இதை எளிதாக முடித்துவிடலாம் போலிருக்கிறது என்றும் படுகிறது. அதேபோல் எல்லாரிடமும் கொண்டு சேர்ப்பதுதான் பெரிய கவலையை உண்டாக்கக் கூடியது.  பலரையும் சந்தா அனுப்பும்படி கேட்டுக் கடிதம் எழுதியிருந்தேன்.  உற்சாகமான வரவேற்பு . என்னால் நம்ப முடியவில்லை.  பலர் சந்தாத் தொகையை விட பல மடங்கு அதிகமாக அனுப்பியிருந்தார்கள்.   34 வயதில் இந்தப் பத்திரிகையை ஆரம்பித்தேன்.  இப்போது வயது 65 ஆகிவிட்டது.  ஆனால் உற்சாகம் மட்டும் குறையவே இல்லை. சி சு செல்லப்பா கொண்டு வந்த எழுத்து 120 இதழ்களுக்கு மேல் போகவில்லை என்று நினைக்கிறேன்.  நான் அந்த எண்ணிக்கையைத் தாண்டி விட வேண்டுமென்று நினைக்கிறேன்.   இன்னும்

நவீன தமிழ் விமர்சன இயக்கங்களும் கருத்தியல் போக்குகளும் (1950-2000) - பிரவீன் பஃறுளி ஒளிப்பதிவு 3

நவீன தமிழ் விமர்சன இயக்கங்களும் கருத்தியல் போக்குகளும் (1950-2000) - பிரவீன் பஃறுளி ஒளிப்பதிவு 3 அழகியசிங்கர் விருட்சம் இலக்கியச் சந்திப்பின் 49வது கூட்டம் பிரவீன் பஃறுளி  தலைமையில் 17.08.2019 சனிக்கிழமையன்று நடைபெற்றது.  ஒன்றரை மணிநேரம் அவர் பேச்சு நீடித்தது.  நவீன தமிழ் விமர்சன இயக்கங்களும் கருத்தியல் போக்குகளும் (1950-2000) என்ற தலைப்பின் கீழ் அவர் பேசினார். கொஞ்சங்கூட விடுபடல் இல்லாமல் எல்லாவற்றையும் பேசினார்.  அவர் பேச்சை மூன்று ஒளிப்பதிவுகளில் இங்கு அளித்துள்ளேன்.

விருட்சம் இலக்கியச் சந்திப்பு - 49

        தலைப்பு  :   நவீன தமிழ் விமர்சன இயக்கங்களும் கருத்தியல் போக்குகளும் (1950-2000) சிறப்புரை :   பிரவீண் பஃறுளி, உதவிப் பேராசிரியர், குருநானக் கல்லூரி இடம் :      ஸ்ரீராம் குரூப் அலுவலகம்     மூகாம்பிகை வளாகம்     சி பி ராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே     ஆறாவது தளம்      மயிலாப்பூர்     சென்னை 600 004 தேதி 17.08.2019  (சனிக்கிழமை) நேரம் மாலை 6.00 மணிக்கு பேசுவோர் குறிப்பு  : (புறநடை, இடைவெளி ஆகிய சிற்றிதழ்களில் ஆசிரியர்)  கல்குதிரை, மணல்வீடு, புது எழுத்து  உள்ளிட்ட சிற்றிதழ்களில் கட்டுரைகள் வந்துள்ளன.  போர்ஹே கவிதைகள் சிலவற்றை மொழி பெயர்த்துள்ளார். அன்புடன் அழகியசிங்கர் 9444113205

சில கேள்விகள் சில பதில்கள் - தேவிபாரதி 1, 2...

அழகியசிங்கர் தொடர்ந்து 4 படைப்பாளிகளைப்  பேட்டி எடுத்தேன்.  ஈரோடில்.  நாலாவதாக நான் சந்தித்த எழுத்தாளர் தேவிபாரதி.  அவர் பேசியதைக் கேட்கும்போது உண்மையிலேயே மெய் மறந்து கேட்டோம்.  பேட்டி முடியும் தறுவாயில் காமெரா பேட்டரி முடிந்து விட்டது.  

சில கேள்விகள் சில பதில்கள் - ஷாஅ

அழகியசிங்கர் இதுவரை பத்து கேள்வி பத்து பதில்கள் என்ற பெயரில் 23 படைப்பாளிகளைப் பேட்டி எடுத்துள்ளேன். சமீபத்தில் மணல் வீடு விருதுக்காக ஈரோடு சென்றபோது இன்னும் சில படைப்பாளிகளைப் பார்க்க நேர்ந்தது. அவர்களையும் பேட்டி எடுத்தேன். மூன்றாவதாக ஷாஅ அவர்களைப் பேட்டி எடுத்தேன். என் நெடுநாளைய நண்பர் இவர். தான் உண்டு கவிதை உண்டு என்று இருப்பவர். இவர் இயல்புபடி ரொம்ப வருடங்கள் கவிதைகளைப் புத்தகமாகக் கொண்டு வரவேண்டுமென்று எண்ணம் இல்லாமல் இருந்தவர். இயற்பெயர் அப்துல் அஜிம். சேலத்தில் வசிக்கிறார்

சில கேள்விகள் சில பதில்கள் - அழகிய பெரியவன்

அழகியசிங்கர் இதுவரை பத்து கேள்வி பத்து பதில்கள் என்ற பெயரில் 21 படைப்பாளிகளைப் பேட்டி எடுத்துள்ளேன்.  சமீபத்தில் மணல் வீடு விருதுக்காக ஈரோடு சென்றபோது இன்னும் சில படைப்பாளிகளைப் பார்க்க நேர்ந்தது.  அவர்களையும் பேட்டி எடுத்தேன். இதை பத்து கேள்விகள் பத்து பதில்கள் என்பதற்குப் பதில் சில கேள்விகள் சில பதில்கள் என்று மாற்றலாம் என்று நினைக்கிறேன். இரண்டாவதாக நான் எடுத்தப் பேட்டி அழகிய பெரியவனுடையது.

சில கேள்விகள் சில பதில்கள் - நா விசுவநாதன்

அழகியசிங்கர் இதுவரை பத்து கேள்வி பத்து பதில்கள் என்ற பெயரில் 21 படைப்பாளிகளைப் பேட்டி எடுத்துள்ளேன்.  சமீபத்தில் மணல் வீடு விருதுக்காக ஈரோடு சென்றபோது இன்னும் சில படைப்பாளிகளைப் பார்க்க நேர்ந்தது.  அவர்களையும் பேட்டி எடுத்தேன். இதை பத்து கேள்விகள் பத்து பதில்கள் என்பதற்குப் பதில் சில கேள்விகள் சில பதில்கள் என்று மாற்றலாம் என்று நினைக்கிறேன். முதலில் நா விசுவநாதன் பேட்டி தருகிறார்.

ஆகஸ்ட் 8ஆம் தேதியை மறக்க முடியாது..

அழகியசிங்கர் பொதுவாக ஆகஸ்ட் 8 ஆம் தேதியை என்னால் மறக்க முடியாது.  இன்று அவர் உயிரோடு இருந்தால் 79 வயதாயிருக்கும்.  அவர் பெயர் ராம் மோகன் என்கிற ஸ்டெல்லா புரூஸ்.   என் நண்பர் ஆத்மாநாம் என்கிற கட்டுரையில் ஸ்டெல்லா புரூஸ் இப்படி எழுதியிருக்கிறார். üதற்கொலை, வன்முறை, விபத்து போன்றவற்றால் மரணத்திற்குள்ளாகிற ஆன்மா சில கொடிய தளங்களில் அல்லல்பட்டு அலைந்தாக நேரிடும்.ý என்று எழுதிய ஸ்டெல்லா புரூஸ÷ம் தற்கொலை செய்துகொண்டு விட்டார்.  இந்த வேடிக்கை ஏன் நடந்தது? இம்மாதிரியான ஒரு துயரமான சம்பவம் நடப்பதை முன்கூட்டியே அறிந்தாலும் யாரும் தடுக்க முடியாது.  ஸ்டெல்லா புரூஸ் விஷயத்தில் அப்படித்தான் நடந்தது.   மனைவியை இழந்த துக்கத்தை அவரால் தாங்கத்தான் முடியவில்லை.  ஆனால் என்ன சோகம் என்றால் கூட அவருக்கு யாருமில்லை.  அவருக்கு ஆறுதல் சொல்ல.  அவர் எல்லா உறவுகளையும் துண்டித்துவிட்டு வந்ததால் இந்தத் துயரத்தைச் சந்திக்கும்படி ஏற்பட்டது.   ஸ்டெல்லா புரூஸ் எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டவர்.  மிகச் சிறிய இடம், கொஞ்சம் பணம், படிக்கப் புத்தகங்கள், இசை.  இது போதும். ஆடம்பரமான வாழ்க்கை கிடையா

மணல் வீடு வழங்கிய பரிசு..

அழகியசிங்கர் நேற்று சென்னை வந்து சேர்ந்தபோது இரவு மணி 11 ஆகி விட்டது. எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் மணல்வீடு அமைப்பினர் சிறப்பாகக் கூட்டத்தை நடத்தி முடித்தனர்.  நவீன விருட்சம் என்ற சிற்றேடு 31 ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது.  இது ஒரு காலாண்டு இதழ்.  இதுவரை 109 இதழ்கள் வந்துள்ளது.  இப்போது வரப்போகிற இதழ் 110வது இதழ்.  நவீன விருட்சம் என்ற இதழிற்குத்தான் இந்த ஆண்டு மணல் வீடு அஃக் பரந்தாமன் நினைவுப் பரிசு வழங்கி கௌரவம் செய்துள்ளது.  ஒவ்வொரு ஆண்டும் மணல் வீடு ஒரு சிற்றேட்டின் பங்களிப்பைக் கௌரவம் செய்கிறது.  இந்த ஆண்டு விருட்சத்திற்குக் கௌரவம் அளித்துள்ளது. நானும் மனைவியும் 2ஆம் தேதியே ஈரோடு சென்றடைந் தோம்.  40 ஆண்டுகளுக்கு முன்னால் ஈரோடு அருகில் உள்ள பவானி ஊரில் அரசாங்க உத்தியோகத்தில் 4 மாதங்கள் பணிபுரிந்த அனுபவம். ஊழலின் கேந்திரம் அந்த அரசாங்க உத்தியோகம்.  எப்போது மாற்றல் கிடைத்து சென்னைக்கு வரமுடியும் என்று ஏங்கிக் கொண்டிருந்தேன்.  அப்பாவிற்கு வாரத்திற்கு ஒருமுறை புலம்பல் கடிதம் எழுதுவேன்.  அப்போது தினமும் பவானி அம்மன் கோயிலுக்குச் செல்வேன்.  மூன்று ஆறுகள் (காவேரி,

துளி - 62 - அட்டைப்பெட்டிகள் ஆயிரம் கதைகள் சொல்லும்

அழகியசிங்கர்  போன மாதம் விருட்சம் 110வது இதழ் கொண்டு வந்துவிடலாமென்று நினைத்தேன்.  பின் அவசரப்பட வேண்டாம் என்று தோன்றியது.  சந்தாதாரர்களுக்கு கடிதம் தயார் பண்ணி அனுப்பி உள்ளேன்.  பலர் சந்தாவைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். வேண்டுகோள் விடுத்திருக்கிறேன்.  109வது இதழ் விருட்சம் ஒருபிரதிதான் உள்ளது.  ஆச்சரியம்.  மிகக் குறைவாக பிரதிகள் அச்சடித்ததால் இந்த நிலை.  இதற்கு முன்னால் எண்ணிக்கையில் அதிகமான பிரதிகள் அச்சடித்து விடுவேன்.  அவை என்னைவிட்டு அகலாமல் இருக்கும். எப்போதும் பேப்பர் கடைகளில் அவற்றைப் போட மாட்டேன்.  அட்டைப் பெட்டியில் கட்டி கட்டி வைத்துவிடுவேன்.  அட்டைப் பெட்டியில் ஒரு மாஜிக் இருக்கிறது.  அட்டைப் பெட்டியைத் திறந்து விருட்சம் இதழைப் பிரித்தால் போதும் ஒவ்வொரு இதழும் ஒவ்வொரு கதை சொல்லும். சி சு செல்லப்பாவின் புதல்வரை சந்தித்தபோது, எழுத்து இதழ் பிரதிகள் கிடைக்குமா என்று கேட்டேன்.  üநானும் அப்பாவும் ரேர்ந்து எல்லாவற்றையும் பேப்பர் கடையில் போட்டுவிட்டோம்,ý என்றார்.  அன்றிலிருந்து ஒவ்வொரு பேப்பர் கடையாக ஏறி இறங்குகிறேன்.  எழுத்து பிரதி  கண்ணில் தட்டுப்படுகிறதா  என்று

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 119

அழகியசிங்கர்   காந்தி ஆசிர்வசிக்காத குழந்தைகள் சபரிநாதன்  அட்டனக்கால் போட்டபடி இது என் தாத்தா சொல்லியது: எனையள்ளி எடுத்துக்கொண்டு ஓடினார் என் தாத்தா ரயிலடியில் இன்னும் அதிர்ந்துகொண்டிருந்தது தண்டவாளம் ரயிலோ காந்தியை ரொம்ப தூரம் கட்த்திப் போய்விட்டது என் தாத்தாவோ ஒரு சர்பத் குடித்துவிட்டு வந்து கொத்தத்தொடங்கினார் மீதி அம்மிக்கல்லை. அவர் மட்டும் கொஞ்சம் விரசாய் ஓடியிருந்தால் அவர் மட்டும் கொஞ்சம் தாமசித்திருந்தால்.. இப்படித்தான் எல்லோருமாய் சேர்ந்து நாட்டை குட்டிச்சுவராக்கிவிட்டார்கள். நன்றி : வால் - சபரிநாதன்  - மணல்வீடு, ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல். மேட்டூர் வட்டம், சேலம் மாவட்டம் - தொலைபேசி : 0989460571 பக்கங்கள் : 168  - விலை : ரூ.150