30.12.12

  ஐராவதம் பக்கங்கள்

 

ஆகஸ்ட் 15 - நாவல் - குமரி எஸ் நீலகண்டன் - 502 பக்கங்கள் - ரூ.450 - சாய் சூரியா வெளியீடு - டி டி கே சாலை - ஆழ்வார்பேட்டை - சென்னை
 
 ஆகஸ்ட்15 புதினமா இல்லையா? மிகுந்த சர்ச்சைக்குரிய கேள்வி இது.  கல்யாணம் என்ற நபரின் தனிப்பட்ட வாழ்க்கையை விவிரிக்கிறது.  அவர் காந்தியின்தனிப்பட்ட காரியதரசியாக இருந்தவர்.  இந்தப் புதினத்தில் காந்தி, நேரு, ராஜாஜி வல்லபாய் பட்டேல், ராஜேந்திர பிரசாத் எல்லோரும் வருகிறார்கள்.  அமெரிக்க நாவலாசிரியர் John Dos Passon
இதே ரீதியில் சில நாவல்களை எழுதியுள்ளார்.  டாகுமெண்டிரி பாணியில் தனிப்பட்ட அமெரிக்கர்களின் வாழ்க்கை முறையை வர்ணித்திருக்கிறார்.  இந்த நாவலின் ஆசிரியரோ கல்யாணம் என்பவரின் வாழ்க்கையை நாட் குறிப்பு என்ற விதத்தில் பதிவு செய்துள்ளார்.

காந்தியின் மூத்த மகன் ஹரிலால் மதுவை விரும்புகிறார்.  கேளிக்கை வாழ்க்கை வாழ்ந்தார். இஸ்லாமியராக மதம் மாறி தன் பெயரை அப்துல்லா என்று மாற்றிக்கொண்டு காந்திக்கு எதிராகப் பிரசாரம் செய்தார்.  காந்தி சுடப்பட்டு இறந்தபோது, குஜராத்தில் இருந்த ஹரிலால் துக்க செய்தி என்று தந்தி அனுப்பினார்.  இரண்டாவது மகன் மனிலால் காந்தி தென்னாப்பரிகாவில் இருந்தார்.  மூன்றாவது மகனான ராம் தாஸ் காந்தியின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்தார்.  காந்திகூட நேருவை பிரதமராக்க விரும்பவில்லை (பக்கம் 328)

 காந்தியைப் பொறுத்தவரை வன்முறையின் பொருளானது அதிநுட்பமானது.  கோபத்துடன் முறைத்துப் பார்ப்பதே வன்முறை.  பல்லைக் கடிப்பதும், மனதிற்குள் ஒருவரை பழிவாங்க வேண்டுமென்று நினைத்துக் கொள்வதும் வன்முறை.  அவருக்கு தீங்கு நிகழ வேண்டுமென எண்ணுவதும் வன்முறை என்பதே காந்தியின் சித்தாந்தமாக இருந்தது. (பக்கம் 83)
 காந்தி இரண்டு கைகளாலும் நன்றாக எழுதும் பழக்கம் கொண்டவர்.  வலது கையில் நிறைய எழுதி கை களைப்படைகிறபோது இடது கையால் எழுத ஆரம்பித்து விடுவார்.  (பக்கம் 67).

 அவர் கிழங்குவகைகளைச் சாப்பிடமாட்டார்.  வேக வைத்த காய் கறிகளையே சாப்பிடுவார்.  நீர் சத்து நிறைந்த காய்கறிகளான வெள்ளரி பூசணி பரங்கிக்காய் போன்றவற்றையே சாப்பிட்டார்.  அவற்றில் உப்பில்லாமலயே சாப்பிட்டார் (பக்கம் 67).

 காந்தியிடம் நான் அனைத்து மதங்களையும் ரசிக்கக் கற்றுக்கொண்டேன்.  இரண்டாவதாக சேவாகிராமில் தங்கி இருந்த அந்த குறுகிய நாட்களில் பொருளாதாரம், நேரம் தங்கி இருந்த அந்தக் குறுகிய நாட்களில் பொருளாதாரம், நேரம் தவறாமை, ஒழுங்குமுறை, சுத்தம், சுகாதாரம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அறிந்து அவற்றைக் குறித்து முறையாக கற்றுக்கொண்டேன்.  மூன்றாவதாக சுய உதவி குறித்தும், யாரையும் சாராத தன்னிறைவில் முக்கியத்துவத்தைக் குறித்தும் புரிந்து கொண்டேன்.  நர்காவதாக உடல் ரீதியாக உழைப்பின் தேவையையும் தனது பணிகளை தானே செய்வதன் முக்கியத்துவத்தையும் அறிந்து அதை நான் செயல் படுத்துகிறேன் என்றார் கல்யாணம்.  (பக்கம் 68-69)

 சாகித்திய அகாடமி இந்தப் புதினத்திற்கு ஆண்டு பரிசு அளித்து தன் பாவங்களை  கழுவிக்கொள்ள வேண்டும். 
 

26.12.12

கூழாங்கற்கள்

மணல் வீட்டைக் கட்டி
மாளிகை எனக் கொண்டாடுகிறது குழந்தை.
ஆர்ப்பரித்துத் தோழர்கள் அளித்த
கூழாங்கற்களால்
அகழியை அலங்கரித்து
அழகு பார்க்கிறது.

பிரபஞ்சத்துக்கு அப்பாலும்
வர்த்தகப் பரிமாற்றம்..
அன்றாடம் நாம் அனுப்பும்
புண்ணிய பாவங்களின் வடிவில்.

செல்வக் குவியலென நினைத்துச்
சேகரிப்பவற்றில்
செய்த நல்லன மட்டும்
கணக்கில் வருகின்றன.

பக்தியும் பவ்யமும்
மயங்க வைத்தக் கைத்தட்டல்களும்
வைர வைடூரியங்களானாலும்,
இருட்டத் தொடங்கியதும்
ஆட்டம் முடிந்ததென
ஆற்றங்கரையோடு குழந்தைகள்
விட்டு வந்து விடும்
கூழாங்கற்களாகிப் போகின்றன.
***

-ராமலக்ஷ்மி

21.12.12


ஐராவதம் பக்கங்கள்

ஆட்கொல்லி - நாவல் - ஆசிரியர்
க.நா.சுப்ரமண்யம் - வெளியீடு : அமுத நிலையம் பிரைவேட் லிமிடெட், முதல் பதிப்பு: July 1957 - விலை ரூ.1.65 - பக்கம் 119


முன்னுரையில் க.நா.சு தன் இலக்கியக் கொள்கையை வெளிப்படுத்துகிறார்.  தொடர்கதை படிக்கும் ரஸிகர்கள் பெருகப் பெருக நாவல் கலை தேய்ந்து கொண்டுதான் வரும்.  அது தவிர்க்க முடியாத இலக்கியவிதி. தொடர்கதையும் நாவல்தானே என்று கேட்பது இலக்கியத்தின் அடிப்படைகளை அறியாததால் எழுகிற கேள்வி.  தொடர்கதை என்பது இலக்கியத்தில் ஒரு தனி ரகம்.  நாவல் என்பது தனி ரகம்..

தொடர்கதை படிக்க சுலபமானது.  சம்பவங்கள் நிறைந்தது.  சுலபமாக வாரா வாரம் பின்பற்றக்கூடிய சுவாரசியமான அம்சங்கள் நிரம்பியது என்று சொல்லும் ஆசிரியர், ஆட்கொல்லி என்ற நாவலை தத்துவச் செறிவுள்ளதாக, இலக்கிய நயம் நிரம்பியதாக எழுதியுள்ளார்.  இது வானொலியில் வாராவாரம் வாசிக்கப்பட்ட ஒரு நாவல் என்னும்போது, ஆசிரியரின் கலை நுட்பம் ரேடியோவில் இடம் பெற முடிந்துள்ளது என்பது நமக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது.

வாழ்க்கையில் தோல்வியுற்றவனான கதைசொல்லி அவனுடைய மாமா வேங்கடாசலம் பற்றி பேசுகிறார்.  மாமா 25 வருஷங்களுக்கு அதிகமாக மாசம் நூறு ரூபாய்க்குள் சம்பளம் வாங்கி, எப்படியோ இரண்டு இரண்டரை லட்ச ரூபாய் பணம் சேர்த்தவர்.  இன்றைய பண வீக்க யுகத்தில் இந்தத் தொகை அல்பமானதாக நமக்குப் படலாம்.  ஆனால் 1950, 1960களில் இது பெரிய தொகைதான்.

'தவறு செய்பவர்கள் போல் நியாயமும் தத்துவமும் பேசுவதில் தீவிரமுள்ளவன் வேறு யாரையும் காண முடியாது.  கடவுளும் சாதிக்காத காரியங்களைச் செய்பவன், கடவுளைக் கூப்பிடுகிற அளவு சாதாரண வாழ்வு வாழும் எவனும் கூப்பிடுவதில்லை.  தர்மம், நியாயம் என்பவற்றின் பெயரால் உலகில் நடக்கிற அதர்மங்களும் அநியாயங்களும் கணக்கு வழக்கில் அகப்படா (பக்கம் 26)'

'பணம் சேர்ப்பதில் ஈடுபாடுள்ள எல்லோருக்குமே தெய்வப் பக்தியும் அதிகமாக இருப்பதற்குக் காரணம் ஏதாவதிருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. பணம் சேர்ப்பது என்பது என்னவோ எப்படிப் பார்த்தாலும் பாவச் செயல்தான்.  பணம் சேர்ப்பது என்பது என்னவோ எப்படிப் பார்த்தாலும் பாவச் செயல்தான்.  பாவங்கள் செய்துதான் பணம் சேர்க்க வேண்டும்.  பண மூட்டையுடன் பாவ மூட்டையும் பெரிது ஆகாதிருப்பதற்காக பணக்காரர்களாக விரும்புகிறவர்கள் கடவுள் பக்தியையும் உடன் கைக் கொள்ளுகிறார்களோ என்று எனக்குத் தோன்றுகிறது (பக்கம் 48/49).'

பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் இது இப்படித்தான் என்கிற ஒதுங்கி நிற்க முயலும் ஒரு சிருஷ்டித் தத்துவத்தை கடைபிடிப்பதுதான் நான் இந்த நாவல் எழுதினேன் என்கிறார் ஆசிரியர் முன்னுரையில்.  கடவுள் போல் மறைந்து சிருஷ்டிக்குப் பின் ஒதுங்கி நின்று நகத்தைக் கிள்ளுவதில் ஈடுபட்டிருப்பவன்தான் கலைஞன் என்பது முப்பது வருடங்களுக்கு முன் ஜேம்ஸ் ஜாய்ஸ் எழுதிய வாக்கியத்தை மேற்கொள் காட்டியிருக்கிறார்.

U¦dùLô¥ GÝjRô[oLs Be¡X IúWôl©V GÝjRô[oLû[l ©uTt± AYoLs Y¯«úXúV ReLs TûPl×Lû[ EÚYôd¡]ôoLs Gu\ Ït\fNôhÓ EiÓ. L.Sô.Ñ JÚ U¦dùLô¥ GÝjRô[o GuTÕ NofûNdϬV ®`Vm. B]ôÛm AYo Rªr UWûT - Ck§V UWûT - ©uTt± TQm JÚ BhùLôs° Gu¡\ £kRôkRjûR ¨ûX ¨ßjR CkR SôY­p ØVu±Úd¡\ôo Gu\ YûL«p CûR Rªr CXd¡Vj§tÏ ×§V RPm AûUdÏm ØVt£ Guß HtßdùLôsY§p Sôm GkR ®RUô] IVlTôÓm ùLôs[j úRûY«pûX.
ஆசிரியர் அவருடைய 45வது வயதில் எழுதப்பட்ட இந்த நாவலை அவரது நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் 2012லும் படிக்க முடிவது நமது பாக்கியம்.

 

பந்தநல்லூரில் கிடைத்த பதவி உயர்வு

அழகியசிங்கர்


12

பந்தநல்லூர் எனக்குப் பிடிக்கவில்லை.  கொத்தமங்கலம் சுப்பு ஒரு நாவல் எழுதியிருந்தார்.  பந்தநல்லூரில் பாமா என்று.  அந்தத் தலைப்பே சரியாக வரவில்லை என்று தோன்றியது.  அப்படி வார்த்தைகளை இணைப்பது ஏதோ பகடி பண்ணுவதுபோல் தோன்றியது.  

மயிலாடுதுறை நல்ல ஊர்.  எனக்கு அதுமாதிரியான ஊரில் உள்ள வங்கிக் கிளையில் பதவி உயர்வு கொடுத்திருந்தால், மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.  ஆனால் அப்படியெல்லாம் கொடுக்க மாட்டார்கள்.  எல்லாவற்றிலும் ஒரு போட்டி இருக்கும்.  போட்டியில் நான் தோல்வியை தழுவிவிட்டேன்.  

ஒவ்வொருநாளும் மயிலாடுதுறையிலிருந்து குற்றாலம் போய், அங்கிருந்து பந்தநல்லூர் செல்லும் சாலை வழியாகச் செல்வேன்.  மயிலாடுதுறையிலிருந்து போகும் வழியில் முதன் முதலாக தமிழில் நாவல் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் எழுதிய வேதநாயகம் பிள்ளையின் சமாதி தென்படும். அவருக்கு ஒரு சிலையும் வைத்திருக்கிறார்கள்.  அழகியசிங்கரிடம் இதைக் குறிப்பிட்டு, 'நீங்கள் ஏன் நாவல் எழுதக்கூடாது?' என்று கேட்டேன்.  

''அதுதான் ஏன் எழுத முடியவில்லை என்பது தெரியவில்லை?''

''முயற்சி செய்தி பாருங்களேன்..''

''முதலில் நாவல் என்பது வேறுவிதமாய்ப் போய்விட்டது.  நாவலின் களம் என்ன?  ஒரு நாவல் எதைக் குறித்து செயல்படுகிறது?  நாவல் படிப்பவர்கள் யார்?''

''இதையெல்லாம் யோசித்தால் நாவலே எழுத முடியாது..''

''நானும் நாவல் எழுத வேண்டுமென்றுதான் யோசனை செய்கிறேன்.  ஏதோ கவிதை எழுத வருகிறது.  சிறுகதைகள், ஏன் கட்டுரைகள் கூட எழுதுகிறேன்.  ஆனால் நாவல் எழுதத் துணிவதில்லை..''

''இன்றைய இலக்கிய உலகில் நாவல் எழுதாவிட்டால், உங்களை இலக்கிய உலகிலேயே சேர்க்கமாட்டார்கள்.''

''ஆமாம்.  ஒப்புக்கொள்கிறேன்..''

''நீங்கள் நான் பதவி உயர்வு பெற்று வந்த என் முட்டாள்தனத்தைக் கூட நாவலாக புனையலாம்..''

''முட்டாள்தனமா?''

''ஆமாம்.  50வது வயதில் பதவி உயர்வு என்ற ஆபத்தை சம்பாதித்துக் கொண்டது என் முட்டாள்தனம் இல்லாமல் என்ன்?''

''நானும் ஒப்புக்கொள்கிறேன்.  நீங்கள் செய்தது முட்டாள்தனம்தான்..ஆனால் அதேசமயத்தில் வாழ்க்கையில் கஷ்டப்படுபவர்கள் இருக்கிறார்கள்.  ஒன்றுமே இல்லாதவர்கள் அதிகம் பேர்கள் இருக்கிறார்கள்.  அவர்களை எல்லாம் பார்க்கும்போது, வங்கியில் நல்ல வேலையில் இருக்கிறீர்கள்.  அதை நினைத்துப் பார்த்தீர்களா?''

அதை ஒப்புக்கொள்கிறேன்.  ஆனால் நானே தேடிக்கொண்ட முட்டாள்தனம்தான் இந்தப் பதவி உயர்வு.''

''உண்மையில் நீங்கள் துணிச்சல்காரர்.  உங்கள் துணிச்சல் எனக்கு வராது.  

''இங்கு வந்தபிறகு, ஏன்டா இதுமாதிரி தப்பை செய்து விட்டோம் என்று தோன்றுகிறது..''

''ஆனால் தனிமையில் இருக்கப் பழகிக் கொண்டு விட்டீர்களே?''

''தனிமை சிலசமயம் பயத்தையும், சில சமயம் அழுகையும் ஏற்படுத்துகிறது.''

''அதைத்தான் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்..''

(இன்னும் வரும்)

5.12.12


 

எதையாவது சொல்லட்டுமா....79


அழகியசிங்கர்
 

 
என் இலக்கிய நண்பர் ஒருவருக்கு நான் போன் செய்தேன்.  அவர் வருத்தத்துடன் ஒரு தகவலைக் குறிப்பிட்டார. அவர் வைத்திருந்த எல்லாப் புத்தகங்களையும் கடையில் கொண்டுபோய் போட்டுவிட்டாராம். எனக்கும் கேட்க வருத்தமாக இருந்தது.  =வேற வழியில்லையா? + என்று கேட்டேன்.  =வழியில்லை.  அவர்களுடன் இருக்க வேண்டுமென்றால், புத்தகம் இருக்கக்கூடாது..+

இத்தனைக்கும் நண்பர் ஏற்கனவே இருந்த இடத்தைவிட இன்னும் அதிகம் இடம் உள்ள இடத்திற்கு மாற உள்ளார்.  ஆனால் அவருடைய மனைவியும், புதல்வனும் கட்டாயம் புத்தகத்திற்கு இடம் கிடையாது என்று கூறிவிட்டார்கள்.

 ==என்ன சார், புத்தகம் வைத்துக் கொள்ளக் கூடாதென்று சொல்லிவிட்டார்கள்..இதிலிருந்து ஒன்று தெரிகிறது..வீட்டைத் தவிர தனியாய் ஒரு ஆபீஸ் வைத்துக்கொள்ள வேண்டும்.++

 வீடைத் தவிர தனியாய் புத்தகம் வைத்துக்கொள்ள ஒரு இடமா? முடியுமா?  சாதாரணமானவர்கள் எங்கே போவார்கள். 

 என்னுடைய இன்னொரு இலக்கிய நண்பர் இருக்கிறார்.  இவர் பழுத்த இலக்கியவாதி.  உலக இலக்கியம்  முழுவதும் அவருக்கு அத்துப்படி.  ஆனால் அவர் சேகரித்து வைத்திருந்த மிக முக்கியமான புத்தகங்கள் எல்லாம் பரண்மீது தூங்கிக் கொண்டிருக்கின்றன.  என்ன நிலையில் உள்ளது என்பதே தெரியவில்லை.  அங்கிருந்து எடுக்க வழியே இல்லை.  அதை எடுத்தால் அவருக்கும் அவர் மனைவிக்கும் விவாகரத்து நடந்துவிடும் போல் தோன்றுகிறது.  மேலும் நண்பர் வீட்டிற்குப் போய் புத்தகம் பற்றி பேசவே பயம்.  பெரிய கலவரமே நடந்துவிடும்.

 அவரால் இப்போது ஒரு இடத்திற்குப்போய் புத்தகம் கூட வாங்க முடியாது.  அந்த அளவிற்கு வயதின் முதிர்ச்சி.

அதனால் அவரை யாராவது பார்க்க வந்தார்களென்றால் அவரே அவர் கையில் படும் புத்தகங்களை எடுத்துக்கொடுத்து விடுவார்.  அல்லது அவருடைய நண்பர்கள் உரிமையுடன் அவர் அலமாரியிலிருந்து புத்தகங்களை எடுத்துக்கொண்டு போய்விடுவார்கள்.  எடுத்துக்கொண்டு செல்பவர்கள் புத்தகங்களைத் திரும்பவே தரமாட்டார்கள்.  அவருடைய அபூர்வமான புத்தகங்கள் எல்லாம் ஒரு காலத்தில் அவர் பிளாட்பாரத்தில் புத்தக வியாபாரியிடம் பேரம் பேசி சேர்த்தப் புத்தகங்கள்.

 நான் அந்த நண்பரைப் பார்க்கச் சென்றால் அவர் அலமாரியிலிருந்து எந்தப் புத்தகத்தையும் எடுத்துப் பார்க்கக் கூட மாட்டேன்.  டேபிளில் மீது புத்தகம் இருந்தாலும் எடுக்க மாட்டேன்.  ஏன்என்றால் எனக்கு அது தேவையும் இல்லை.

அதனால் என்னைப் பார்க்கும்போது அவருக்கு என் மீது நம்பிக்கை வரும்.
 நானும் அவரைப்போல் புத்தகம் சேகரிப்பவன்.  புத்தகம் சேகரிப்பவன் என்பது வேறு, புத்தகம் படிப்பவன் என்பது வேறு.  எங்குப் பார்த்தாலும் புத்தகம் வாங்கி வைத்துக்கொள்ளும் நான் புத்தகத்தை எடுத்து எளிதில் படித்துவிட மாட்டேன்.  பிறகு படிக்கலாம்.  நம்மிடம்தானே அந்தப் புத்தகம் இருக்கிறது என்ற நினைப்பில் இருப்பவன். சிலசமயம் நான் வாங்கிய புத்தகத்தையே திரும்பவும் வாங்கி  விடுவேன் ஞாபகமறதியில். என் வீட்டிலுள்ளவர்கள் நான் எதாவது புத்தகம் வாங்கிக்கொண்டு வருவதைப் பார்த்தால் போதும்.  பார்க்கிறவர்களுக்கு ரத்தக்கொதிப்பு நோய் வந்துவிடும்.  வீட்டில் பெரிய ரகளையே நடக்கும். 

 கணையாழி ஸ்தாபகர் கஸ்தூரி ரங்கன் அவர்கள் அலுவலகத்தையும் வீட்டையும் தனியாகப் பிரித்து வைத்துவிடுவார். 

 மேலை நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு நூல்நிலையம் உண்டு.  வீட்டு உபயோகத்திற்கு பாத்திரங்கள் வைத்திருப்பதுபோல் நபுத்தகங்களை வைத்திருப்பார்கள். 

 குடும்பத்தலைவர் ஒரு நூல் நிலையம் வைத்திருப்பார். குடும்பத் தலைவி ஒரு நூல் நிலையம் வைத்திருப்பார்.  புதல்வன் வைத்திருப்பான். புதல்வி வைத்திருப்பாள். ஆனால் இங்கோ புத்தகம் வாங்கிக்கொண்டு வருவதே ஒரு பெரிய தப்பான காரியம் செய்வதுபோல்.  தமிழ்நாட்டில் ரொம்ப மோசம்.  எழுத்தாளர்களுக்கு எந்த மதிப்பும் இல்லை.

 புத்தகங்கள் வாங்கிப் படிக்கும் நண்பர் ஒருவர், பத்தாண்டுகளுக்கு முன்பே எல்லாப் புத்தகங்களையும் நூல்நிலையத்திற்கு தானே செலவு செய்து கொடுத்துவிட்டார்.

அவர் முடிவு ஆச்சரியத்தைத் தந்தது.  அவர் புத்தகங்களைப் பாதுகாக்க குடும்ப வாரிசு தயாராக இல்லை 

 நான் முன்பு இருந்த வீட்டில் ஒரு அறை முழுவதும் புத்தகங்கள் வைத்திருப்பேன்.  அதை சரியாகக் கூட வைத்திருக்க மாட்டேன.  ஒவ்வொரு தருணத்திலும் நான் புத்தகம் வாங்கி சேகரித்தப் புத்தகங்கள்.  பல புத்தகங்களை படிக்க வேண்டும் படிக்க வேண்டும் என்று வைத்திருக்கும் புத்தகங்கள். 

 நான் புத்தகம் இப்படி வாங்கிக் குவிப்பதைப் பார்த்து என் அப்பாவிற்கு என் மீது கடும் கோபம் வரும்.  ஒருமுறை அப்பா கேட்டார் : ==எத்தனை ஜன்மங்கள் ஆகும்டா நீ இத்தனைப் புத்தகங்களைப் படிக்க..?++ அப்பா இப்படிக் கேட்டுவிட்டாரே என்று அப்பா மீது எனக்கு கோபம் கோபமாக வரும்.  அவருக்கு 90வயது.  எனக்கு 60வயது.  அவர் என்னைப் பார்த்து ஒரு எல்.கே.ஜி படிக்கும் மாணவனைப் பார்த்துக் கேட்பதுபோல் கேட்பார்.  என் விதியை நொந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.  மேலும் இன்னொன்றும் சொல்வார்.  நான் புத்தகம் வாங்கி என் சேமிப்பையெல்லாம் அழித்துவிட்டதாக.  புத்தகம் வாங்குவதால் யாராவது சேமிப்பை அழிக்க முடியுமா? 

 நான் புத்தகம் வைத்துக்கொள்ளும் அறைக்கு அவரும் என் மனைவியும் வந்தால்போதும், தலையில் அடித்துக்கொள்ளாத குறைதான். 

 என் மனைவிக்கு ஹிஸ்டிரீயா நோய் வந்துவிடும்.  அன்று முழுவதும் மனைவியின் வசவுகளிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது.  பொதுவாக புத்தகங்கள் மட்டுமல்ல எதையும் வாங்கி சேகரிக்கும் பழக்கம் எனக்கு உண்டு.  புத்தகம் பார்த்தால் புத்தகம், சீடி பார்த்தால் சீடி என்று பலவற்றை சேகரிக்கும் பழக்கம் உண்டு. அதேபோல் ஆடியோ காசெட்டுகளை அடுக்கடுக்காக வைத்திருப்பேன். வெறுமனே சேகரிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட வேண்டுமென்ற எண்ணம் எனக்கு எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். இது ஒரு வியாதி.  சேகரித்து வைத்துக்கொள்ளும் வியாதி.

 என்னைப்போல் புத்தகம் சேகரிக்கும் எண்ணம் என் பல நண்பர்களிடம் உண்டு.  யாரிடமாவது எதாவது புத்தகம் இருந்தால் வாங்கிக்கொண்டு போய்விடுவார்கள்.  பின் அதைத் திருப்பித் தரும் எண்ணம் இல்லாமல் இருப்பார்கள்.

அப்படித்தான் ஒரு நண்பர் என்னைப் பார்க்க வீட்டிற்கு வருகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.  நான் அலுவலகம் சென்று விடுவதால் ஞாயிற்றுக்கிழமை வருவதாகக் குறிப்பிட்டார்.  அவர் வந்தால் கட்டாயம் புத்தகம்தென்பட்டால் எடுத்துக்கொண்டு போய்விடுவார் என்ற பயத்தில் புத்தகம் வைத்திருந்த அறையைப் பூட்டி வைத்துவிட்டேன்.
 வந்த நண்பர், =என்ன புத்தகம் வைத்திருக்கிறீர்கள்?++ என்று கேட்டபடி வந்தார். 

 ==புத்தகம் வைத்திருக்கும் அறை சாவி எங்கயோ வைத்துவிட்டேன்,++என்று கூறியபடி இன்னொரு அறையில் அவரை உட்கார்த்திவைத்து பேசிக்கொண்டிருந்தேன்.   அந்த அறையில் ஜே கிருஷ்ணமூர்த்தி ஆடியோ காசெட்டுகளை வைத்திருந்தேன்.  போகும்போது அதிலிருந்து சில காசெட்டுகளை எடுத்துக்கொண்டு போய்விட்டார்.

 காலம் மாறிவிட்டது.இப்போதெல்லாம் புத்தகம் வாங்கிக்கொள்ளகூட யாரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வது கிடையாது.

                              (டிசம்பர் 2012 அம்ருதா இதழில பிரசுரமானது)


3.12.12


இரண்டு கவிதைகள்

அழகியசிங்கர்


1)

நான் சொல்வேன்
வாய்த் திறந்து
ஜெம்பு என்று
அவர் ஏன் என்று
கேட்க மாட்டார்

இன்னொரு முறை
கூப்பிடுவேன்
ஜெம்பு ஜெம்பு என்று
அவர் உம் என்று சொல்லமாட்டார்

எனக்குத் தெரிந்தது
அவருக்குப் பிடிக்கவில்லை

பின் நான்
நகர்ந்து அவரிடம் போய்
பிடபூள்யு என்பேன்

பின்
இருவரும் கிளம்புவோம்
சலிப்புடன்........

2.

ஒருவர் ரிட்டையர்டு
ஆகிறாரென்றால்
என்ன நினைக்க முடியும்?
அவர் இனிமேல்
வரப் போவதில்லை

காலையில் சீக்கிரமாய்
வந்திருந்து
அலுவலகக் கதவைத் திறக்கப் போவதில்லை

அவர் பார்த்த அலுவலக இருக்கையில்
கொஞ்ச நாட்களுக்குத்
தெரியும் அவர் கையெழுத்து

மற்றவர்களெல்லாரும்
வழக்கம்போல் வந்து கொண்டிருப்பார்கள்

நான் பிப்பரவரி 2014ல்
வரும் என் ரிட்டையர்மெண்டை
நினைத்து
காலத்தைத் தள்ளுவேன்


நதியும் நானும்

பார்வையின் எல்லைக்குள் எங்கும் மழையேயில்லை
எரியும் மனதை ஆன்மீகத்தால் குளிர்விக்க
ப்ரிய நேசத்தால் நிறைந்த இன்னுமொரு மழை
அவசியமெனக் கருதுகிறேன் நான்

சற்று நீண்டது பகல் இன்னும்
மேற்கு வாயிலால் உள்ளே எட்டிப் பார்க்கும் பாவங்களை
அதற்கேற்ப கரைத்து அனுப்பிவிடத் தோன்றுகிறது

வாழ்நாள் முழுவதற்குமாக சுமந்து வந்த அழுக்குகள் அநேகம்
வந்த தூரமும் அதிகம்
எல்லையற்றது மிதந்து அசையும் திசை
இன்னும் நிச்சலனத்திலிருக்கிறது நதி

எனினும்
கணத்துக்குக் கணம் மாறியபடியும்
ஆழத்தில் அதிர்ந்தபடியும் கிடக்கிறோம்
நதியும் நானும்

- ரொஷான் தேல பண்டார
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்

உள் நோயாளி

நான் எப்போதும்
உள் நோயாளி தான்
என் காதலை உன்னிடம்
சொல்ல நினைத்ததிலிருந்து.

கிடைத்தது

பல சமயங்களில்
கிடைத்தது என்பதை விட
ஏற்றுக்கொண்டேன்
என்பதே சரியாயிருக்கிறது

பலாச்சுளை

சிறு ஊடலுக்குப்பின்
அளவுக்கதிகமாக
அன்பைத்தெரிந்தே
பொழிவது போல
இந்தப் பலாச்சுளை
ஏகத்திற்கு இன்று தித்திக்கிறது.

எல்லோரும் 

கொண்டாடப்படும் இடத்தில்
குழந்தையும் தெய்வமும் மட்டுமல்ல
எல்லோரும் தான்.

பெயர்

நான் வைத்த பெயர்
என் மகளுக்கு
பிடித்திருக்கிறதாம்
நீ வைத்த பெயர்
உன் மகனுக்குப்
பிடித்திருக்கிறதா ?

முதல் பாடல்

காலையில் கேட்ட
முதல் பாடல் போல்
நாள் முழுதும் சுழலும்
உன் ஞாபகங்கள் என்னுள்.


ஒரு பக்கக் காதல்

கடலை மடித்துக்கொடுத்த
காகிதத்தில் இருந்த
பாதிக்கவிதை போலிருக்கிறது
என் காதல்.

- சின்னப்பயல் 

1.12.12

இரு சீன வைத்தியக் கதைகள்
அசோகமித்திரன்
சீனாவின் பாரம்பரிய வைத்தியம் உலகப் புகழ் பெற்றது. நான் ஒரு முறை வைத்தியம் செய்து கொண்டேன். என் வரையில் அவ்வளவு வெற்றிகரமாக முடியவில்லை.
கதைகளில் முதல் கதை நான் பள்ளிச் சிறுவனாக இருந்தபோது சாரணர் ‘காம்ப் ஃபையரில் நிழல் நாடகமாக நட்த்தப்பட்டது. அது இரண்டாம் உலக யுத்த காலம். நாங்கள் நேரடியாக யுத்த களத்துக்கு போவதாகக் கற்பனை செய்து கொள்ளுவோம். எங்கள் ‘காம்ப்இரண்டு அல்லது மூன்று தினங்கள் நடக்கும். வெட்ட வெளியில் கூடாரங்கள் போட்டு, நாளெல்லாம் ஓய்ச்சல் ஒழிவில்லாமல் உழைப்போம். பொழுது சாய்ந்ததும் ‘காம்ப் ஃபையர்நடக்கும். ஆசிரியர்கள் உரை ஒரு மணி நேரம் இருக்கும். அதன் பிறகு சாரணர்கள் கலை நிகழ்ச்சி. ஒரு பாட்டு, ஒரு சிறு நாடகம் என மாறி மாறி ஒரு மணி நேரம் நடக்கும். அதன் பிறகு இரவு உணவு.
எங்கள் நிகழ்ச்சியில் மூன்று நடிகர்கள். சீன டாக்டர், சீன நர்ஸ், சீன நோயாளி. ஒருவன் ஒரு எலியை விழுங்கிவிடுகிறான். டாக்டர் முதலில் அவன் மண்டையில் ஒரு போடு போட்டு மயங்க வைக்கிறார். டாக்டருக்கும் நர்ஸுக்கும் சண்டை. நர்ஸ் முதலில் ஒரு ரம்பத்தை டாக்டரைப் பார்த்து எறிவாள்.டாக்டர் அதை வைத்து நோயாளியின் வயிறை அறுத்து அதைத் திரும்ப நர்ஸிடம் எறிவார்.அவள் ஒரு டவலை அவரிடம் எறிவாள். அவர் வெட்டின இடத்திலிருந்து ஓர் உளி, மண்வெட்டி,கடப்பாரை எனப் பல இரும்புப் பொருள்கள் எடுத்த பிறகு ஒரு எலியையும் எடுப்பார்.நர்ஸ் கைதட்டிப் பாராட்டுவாள்.அதன் பிறகு எடுத்த பொருள்களை நோயாளி வயிற்றில் திணிப்பார். நர்ஸ் ஒரு கோணி ஊசி எடுத்துத் தருவாள். படுத்துக் கிடக்கும் நோயாளி தலையில் மீண்டும் ஒரு போடு. அவன் விழித்து எழுந்து டாக்டருக்குப் பணம் கொடுத்து வெளியேறுவான். அன்று சீனா பிரிட்டிஷ் தரப்பு. இந்த நாடகத்தைப் பார்த்தால் ஜப்பான் பக்கம் போய் விடக்கூடும். நல்ல வேளை, எங்கள் பள்ளியில் சீன மாணவன் யாரும் கிடையாது.
நிழல் நாடகத்தில் முக பாவத்துக்கு இடம் கிடையாது. ஆனால் நிழல் நாடக வடிவத்தில் அற்புதம் செய்து பார்த்திருக்கிறேன். நடனக் கலைஞர் உதயசங்கர் புத்தர் பற்றி ஒரு முழு நீள நாடகம் சென்னையில் நட்த்தினார்.நிழல் நாடகத்துக்கு இவ்வளவு சாத்தியங்கள் உண்டா என்று ஆச்சரியமாக இருந்தது.
அடுத்த முறை இரண்டாம் கதை..

23.11.12

தோற்பாவைக்கூத்து

சின்னப்பயல்


 
புதிதாக வெள்ளையடித்த சுவரில்

நகத்தை
வைத்துக்கீறும்போது ஏற்படும்

மனக்குறுகுறுப்பை
உள்ளூர ரசிப்பது,

மண்ணெண்ணெய்
பாட்டிலைத் திறந்து

அதன்
மணத்தை தான் மட்டும் நுகர்வது,

ஆகக்கூடுதல்
சிரமத்திற்குப்பின்னர்

கைவிரல்களால்
பிடித்த வண்ணத்துப்பூச்சியின்

நிறத்தை
உற்றுநோக்குவது,

இப்போது
அடிக்கப்போகும் பெரிய அலை

கண்டிப்பாகத் தன் காலை நனைத்தே தீரும்

என நினைக்கையில்

அது
அருகில் கூட வராமல் போவதை ரசிப்பது,

தரைமட்டமான
கட்டிட இடுபாடுகளிலிருந்து

சிறு சிராய்ப்பு கூட இல்லாமல் மீண்டுவருவது,

சிறு
கண்ணாடிக்குடுவையின்

உள்ளுக்குள்
நீந்தும் மீனை வெளியிலிருந்து

ஏதும் செய்ய இயலாது பார்க்கும்

பூனை
மனத்துடன் சில சமயங்களில் இருப்பது,

எனக்கென்னவோ

இவையெல்லாவற்றிற்கும்


காதலுக்கும்
தொடர்பிருக்கிறது

என்பது போலத்தான் தோணுகிறது.

-

 
எப்போதும் உனக்குத் தேவை அமைதியான மனம்
                       
                                                                                                            - நிஸர்கதத்தா மஹாராஜ்

                                                                                                               தமிழில் : அழகியசிங்கர்)
 
 
 

கேள்விகேட்பவர் : நான் நன்றாக இல்லை.  ரொம்பவும் பலவீனமாகத் தெரிகிறேன்.  நான் என்ன செய்வது? 

 நிஸர்கதத்தா மஹாராஜ் : யார் நன்றாக இல்லை. நீயா அல்லது உன் உடலா?

 கே.கே : என் உடலாகத்தான் இருக்கும்.

 நிஸர் : நீ உன் உடல் நன்றாக இருக்கும்போது மகிழ்ச்சி அடைகிறாய்.  உன் உடல் நன்றாக இல்லாதபோது வருத்தப்படுகிறாய்.  ஒருநாள் வருத்தமாகவும், ஒருநாள் மகிழச்சியாய் யார் இருக்கிறார்கள்.

 கே.கே : மனம்தான்

 நிஸர் :  யாருக்குத் தெரியும்?  மனதின் மாற்ற நிலை.

 கே.கே : மனதிற்கு.

 நிஸர் :  மனம்தான் தெரிந்தவர்.  ஆனால் யாருக்குத் தெரியும் தெரிந்தவரை.
 கே.கே : தெரிந்தவருக்கு அவரைப் பற்றியே தெரியுமா?

 நிஸர் : மனம் தொடர்பு அறுந்து போய்விடுகிறது.  திரும்ப திரும்ப அது ஒன்றும் தெரியாமல் போய் விடுகிறது. தூக்கத்திலிருப்பது போல், மயக்கத்தில் இருப்பதுபோல், அல்லது விலகிப் போய்விடுவதுபோல்.  தொடர்பறுந்ததை தொடர்ந்து பதிவு செய்கிறது. 

 கே.கே : மனம் ஞாபகப்படுத்துவதால்தான் தொடர்ந்து செயல்பட காரணமாகிறது.

 நிஸர் : ஞாபகம் எப்போதும் அரைகுறையானது.  நம்ப முடியாதது.  ஞாபகம் எப்போதும் மன ஆழத்தை விவரிக்காது.  üநான்தான்ý என்பதை அறியாதது.  மனதின் அடிதளத்தில் என்ன இருக்கிறது என்பதை கண்டுபிடி.

 கே.கே : என்னதான் ஆழமாகப் பார்த்தாலும், நான் மனதைதான் அறிய முடிகிறது.  உங்களுடைய வார்த்தையான üமனதிற்கு அப்பால்ý என்பதை அறிய முடியவில்லை.

 நிஸர் : மனதுடன் பார்த்துக்கொண்டிருந்தால், அதைத் தாண்டி போக முடியாது.  மனதிற்கு அப்பால் போகவேண்டுமென்றால், மனதிலிருந்தும் அதன் பிணைப்புகளிலிருந்தும் விலகிப் பார்க்க வேண்டும்.

 கே.கே : எந்த வழியில் நான் பார்க்க வேண்டும்?

 நிஸர் : எல்லா வழிகளும் மனதிற்குள்தான்.  நான் உங்களை எதாவது ஒரு நிச்சயமான வழியில் பார்க்கச் சொல்லவில்லை.  உங்கள் மனதில் நடப்பவை எல்லாவற்றையும் சாதாரணமாகப் பாருங்கள்.  பின் அதன் மூலம் üநான் தான்ý என்பதை உணர முயலுங்கள்.  'நான் தான்' என்பது வழி அல்ல.  அது எல்லா வழிகளையும் நிராகரிப்பது.  இறுதியாக 'நான்தான்' என்பதும் போகக் கூடியது.   üநான் தான்ý என்ற உணர்வு நிலைக்கு மனதைக் கொண்டு செல்லும்போது, எல்லாவற்றிலிருந்தும் மாறுவதற்குப் போதுமானதாக இருக்கிறது.

 கே.கே : இவை எல்லாம் எங்கே என்னை அழைத்துச் செல்லப் போகிறது?

 நிஸர் : எப்போது மனம் தன்னுடைய தளைகளிலிருந்து விடுபடுகிறதோ அப்போது அமைதியாகிறது.  அந்த அமைதியை  தொந்தரவு செய்யாமல், அதைத் தக்க வைத்திருந்தால், இதுவரை அறியாத வெளிச்சத்தையும், அன்பையும் கண்டுணரலாம்.  கூடவே இயல்பான சுபாவத்தையும் உணர்வாய்.  ஒருமுறை நீ இந்த அனுபவத்தைக் கடந்து விட்டால்,  எப்போதும் உள்ள மனிதனாக இருக்க மாட்டாய்.  கட்டுக்கடங்காத மனம் அமைதியை சீர்குலைக்க முயலும்.  பார்வையை மாற்றும்.  உன் முயற்சி தொடர்ந்து இருந்தால், அது பழைய நிலைக்குத் திரும்ப வழி இல்லை.  எந்த ஒரு நாளில், எல்லாத் தளைகளும் விலகி, பிரமைகளும், பிணைப்புகளும் விலகுகிறதோ அப்போது வாழ்க்கை  தற்சமயத்தில் நிலைத்திருக்கும். 

 கே.கே :  இது என்ன வித்தியாசத்தை ஏற்படுத்தும்?
 
 நிஸர் : மனம் என்பது இருக்காது.  நம் செயல்பாட்டில் அன்புதான் இருக்கும்.

 கே.கே. : அந்த நிலையை அடைந்துவிட்டேன் என்பதை எப்படி உணர முடியும்? ஆபத்துகளும் புதிர்தன்மை நிறைந்த உலகம் நம்மைச்சுற்றி இருக்க நான் எப்படி பயமில்லாமல் இருக்க முடியும்?

 நிஸர் : உன்னுடைய சின்ன உடம்புக்குள்கூட புதிர்தன்மையும் ஆபத்துகளும் நிறைந்திருக்கின்றன.  இருந்தாலும் நீ பயப்படுவதில்லை.  என்ன உனக்குத் தெரியாது என்றால் இந்தப் பிரபஞ்சம் கூட உன் உடம்புதான்.  அதற்காக நீ பயப்படத் தேவை இல்லை.  நீ சொல்லலாம் உன்னிடம் கூட இரண்டு உடல்கள் உண்டு.  ஒன்று உன்னுடையது இன்னொன்று பிரபஞ்சத்துடையது என்று. உன்னுடையது வரும் போகும். ஆனால் பிரபஞ்ச உடல் எப்போதும் உன்னுடன் இருக்கும்.  உன்னுடைய முழு ஆக்கமும் பிரபஞ்ச உடல்தான்.  நீ உன்னுடைய உடலுடன் கட்டுப்பட்டிருக்கிறாய்.  நீ பிரபஞ்சத்தை உணர்வதில்லை.
 

கட்டுப்பட்டிருப்பதை அப்படியே விட்டுவிடக் கூடாது.  இதை கெட்டிக்காரத்தனமாகவும், முயற்சியாலும் விடுவிக்க வேண்டும்.  எல்லாவித மாயைகளையும் புரிந்துகொண்டு விட்டுவிட்டால், நீ குற்றமில்லாத புனிதமான நிலையை அடைவாய்.  அப்படி அடையும் தறுவாயில் உனக்கும் பிரபஞ்சத்திற்கும் உள்ள வித்தியாசம் இருக்காது. 

 கே.கே : நான் சாதாரண மனிதன். காலத்தையும் இடத்தையும் மிகக் குறைவாகவே எடுத்துக்கொண்டிருக்கிறேன்.  மிகச் சில தருணங்களைத் தவிர எல்லாம்  என்னை விட்டுப் போய்விடுங்கின்றன.  எனக்குள்ளே இந்தப் பிரபஞ்சத்தை உணரவே முடியாது.

 நிஸர் : நிச்சயமாகக் கிடையாது.  நீ உனக்குள் உன்னுடைய உண்மையான சொரூபத்தை புரிந்துகொண்டால், நீ அதை உணர்வாய்.  உன்னுடைய உடல் சிறியது அதேபோல் உன்னுடைய ஞாபகமும் குறைவானது.  ஆனால் அளவிடமுடியாத இந்தப் பிரபஞ்ச வாழ்க்கை உன்னுடையது.
 கே.கே : üநான்ý, üபிரபஞ்சம்ý ஒன்றுக்கொன்று முரணானது. ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபட்டது.

 நிஸர் : அவை அப்படியில்லை.  பிரபஞ்சத்துடன் கூடிய உணர்தலைத் தேடு.  அப்போதுதான் நீயும் பிரபஞ்ச மனிதனை கண்டுபிடிக்கலாம்.  அவன் உன்னிடமே முழுவதுமாய் நிரம்பி இருக்கிறான்.
 எப்படியோ உலகமானது உன்னிடத்தில் உள்ளது என்பதை உணர்ந்துகொள்.  அதாவது நீதான் உலகத்தில் உள்ளாய் என்றல்ல.  
 
கே.கே : எப்படி இருக்க முடியும்.  பிரபஞ்சத்தின் ஒரு பகுதிதான் நான்.  இதில் எப்படி உலகம் முழுவதும் இருக்க முடியும்.கண்ணாடியில் பார்ப்பதுபோல் ஒரு கீற்றுபோல் இருக்கலாம்.

 நிஸர் : நீ சொல்வது உண்மைதான்.  உன்னுடைய உடல்
ஒரு பகுதிதான். அதில் பிரபஞ்சம் முழுமையும் எதிரொலிக்கிறது.  ஆனால் நீ ஒரு பிரபஞ்ச உடலாக உள்ளாய்.  நீ சொல்லமுடியாது எனக்குத் தெரியாதென்று.  ஏன்என்றால் நீ எப்போதும் இதைப் பார்த்துக்கொண்டும், உணர்ந்துகொண்டும் இருக்கலாம்.  என்னவென்றால் அதை நீ பிரபஞ்சம் என்று கூறுவாய்.  அது குறித்து பயந்துகொண்டும் இருப்பாய்.

 கே.கே : என்னுடைய சிறிய உடலைப் பற்றி அறிவேன்.  மற்றபடி அறிவியல்முறைப்படி மற்றவர்களைப் பற்றியும் அறிவேன்.

 நிசர் : உன்னுடைய சிறிய உடலும் அற்புதகங்களும், புதிர்தன்மைகளும் நிரம்பியது.  அதற்கும் உன் அறிவியல்தான் புரியவைக்க இருக்கிறது.  உடலைப் பற்றிய சாஸ்திரமும், வானியல் சாஸ்திரமும் உன்னைப் பற்றி விவரிக்கிறது.

 கே.கே : நீங்கள் சொல்கிற பிரபஞ்ச உடலைப் பற்றி ஏற்றுக்கொண்டாலும், எந்த வழியில் நான் அறிவது?  அதனால் என்ன பயன் எனக்கு?

 நிசர் : உனக்குள் இதை உணர்ந்தால், நீ விடுவதற்கு ஒன்றுமிருக்காது.  பிரபஞ்சம் முழுவதும் உன் அக்கறையாக மாறிவிடும்.  ஒவ்வொரு உயிரினத்தையும் நீ விரும்புவாய் ரொம்ப நேசத்துடனும், கெட்டிக்காரத்தனத்துடனும்.  உனக்கும் மற்றவர்களுக்கும் எந்தப் பூசலும் இருக்காது.  எல்லாவித எதிர்பார்ப்புகளும் முழுவதும் இல்லாமல் போய்விடும்.  உன்னுடைய எந்தவொரு முயற்சியும்  பயன் உள்ளதாகவும், மற்றவர்களுக்கு அருள் அளிப்பதாகவும் மாறிவிடும்.

 கே.கே  : நீங்கள் சொல்வது என்னைத் தூண்டுவதுபோல் உள்ளது.  ஆனால் எப்படி என்னுடைய பிரபஞ்ச உணர்வை அறிந்து கொள்வது.

 நிசர் : இரு  வழிகள் உள்ளன.  நீ உன்னுடைய இதயத்தையும், மனதையும் முழுவதும் ஒப்படைத்து விடு.  அல்லது நீ, நான் சொல்வதை முழுவதுமாக நம்பி அதன்படி நடந்துகொள்.  வேறு வகையில் சொல்ல வேண்டுமென்றால், நீ முழுமையாக உன்னைப் பற்றி நினைத்துக்கொள். அல்லது முழுமையாக உன்னைப் பற்றிய நினைவில்லாமல் இரு.  இதில் முழுமையாக இருப்பதுதான் முக்கியம். உயர்வை அடைய நீ தீவிர எல்லையை அடைய வேண்டும்.

 கே.கே. : நான் மிகவும் சாதாரணமானவன்.  அந்த உயரத்தை நான் எப்படி அடைய முடியும்?

 நிசர் : எல்லாமும் கடலைப்போன்ற பிரஞ்ஞையில் நடந்து கொண்டிருக்கிறது என்பதை நீ புரிந்துகொள்ள வேண்டும்.  இது ஒன்றும் கடினமானதல்ல.  முழுமையாக தன்னைத் தானே புரிந்துகொள்ளும்  ஒரு சிறிய முயற்சிதான் இது.  நீ பார்க்கலாம் எந்த நிகழ்ச்சியும் உன்னுடைய பிரக்ஞையை மீறிப் போவதில்லை.

 கே.கே : உலகம் முழுவதும் பல சம்பவங்கள்.  இவை யாவும் என் பிரக்ஞையில் நிகழ்வதில்லை.

 நிசர் : ஏன் உன்னிடம்கூட பல சம்பவங்கள்.  யாவும் உன் பிரக்ஞையில் தெரிவதில்லை.  இதனால் இது என் உடல் இல்லை என்று தடுக்க முடியாது.  உனக்குத் தெரியும் பிரபஞ்சத்தைக் கூட எப்படி உன் உடலை உணர்வுகளின் மூலம் அறிகிறாயோ அப்படித்தான்.  உன் மனம்தான் எல்லாவற்றையும் பிரிக்கிறது.  வெளி உலகம் உள் உலகம் என்று. ஒன்றுக்கொன்று முரண்பட வைக்கிறது.  இதுதான் பயத்தையும், வெறுப்பையும் இன்னும் பல துயரங்களையும் நம் வாழ்க்கையில் உருவாக்குகிறது. 

 கே.கே : பிரஞ்ஞையைத் தாண்டி போகச் சொல்வதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.  நான் வார்த்தைகளைப் புரிந்துகொள்கிறேன்.  ஆனால் அந்த அனுபவத்தை உணரவில்லை.  நீங்களே சொல்லியிருக்கிறீர்கள்.  எல்லா அனுபவங்களும் பிரஞ்ஞையில் இருப்பதாக.

 நிசர் : நீ சொல்வது சரிதான்.  எல்லா அனுபவங்களும் பிரஞ்ஞையைத் தாண்டி இல்லை.  ஆனாலும் இருத்தலே ஒரு அனுபவம்தான்.  பிரஞ்ஞையைத் தாண்டி ஒரு நிலை உண்டு.  அது அ-பிரஞ்ஞை கிடையாது.  அதேபோல் உன்னதமான பிரஞ்ஞை நிலையும் கிடையாது.  தன்னிலை புறநிலை என்ற குழப்பத்திலிருந்து விலகி முழுவதுமாக உணர்வது.

 கே.கே :  தியோசபி படித்திருக்கிறேன்.  நீங்கள் சொல்வதில் எதுவும் புதுசாகத் தெரியவில்லை.  தியோசபி உருவாக்கத்தைப் பற்றிதான் சொல்கிறது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அது பிரபஞ்சத்தையும், பிரபஞ்சத்திலுள்ளவர்களைப் பற்றியும் விரிவாகச் சொல்கிறது.  அது பலதரப்பட்ட நிலைகளையும், அனுபவங்களையும் ஒப்புக்கொள்கிறது.  ஆனால் அது அதைத் தாண்டிப் போகவில்லை.  நீங்கள் சொல்வது அனுபவத்தைத் தாண்டிப் போகச் சொல்கிறீர்கள்.  அப்படி போவதென்றால் அது அனுபவமே இல்லை.  அதைப் பற்றி பேசி என்ன பயன்?

 நிசர் : பிரஞ்ஞை என்பது முழுமையானதல்ல.  பல இடைவெளிகள் இருக்கும்.  ஆனால் நம்மைப் பற்றிய தொடர்ச்சி அதற்குண்டு.  பிரஞ்ஞையைத் தாண்டிப் போகவில்லை என்றால் இந்த அடையாளத்தால் என்ன பயன்?

 கே.கே : மனதைத் தாண்டுவதாக இருந்தால், எனக்குள் எப்படி மாற்றத்தைக் கொண்டு வர முடியும்?

 நிசர் : எதையும் மாற்றுவதற்கு என்ன அவசியம்?  எப்போதும்
மனம் தானாகவே மாறிக்கொண்டிருக்கிறது. உன் மனதை எந்தவித முன்னேற்பாடுமில்லாமல் பார்.  அதை அமைதிப் படுத்த அதுவே போதும்.  அது அமைதி அடைந்தால் தானகவே அதைத் தாண்டிப் போவாய்.  எப்போதும் அதைப் பரபரப்பாக்காதே.  அதை நிறுத்து. பின் அப்படியே இரு.  அதற்கு ஓய்வு கொடுத்தால் அது தானகவே சரியாகிவிடும்.  அதனுடைய புனிதத் தன்மையையும் வலிமையையும் தானகவே நிகழும்.  தொடர்ந்து சிந்தித்துக்கொண்டிருந்தால் அது சிதைவு அடையத் தொடங்கும்.

 கே.கே : என்னுடைய உண்மையான சொரூபம் என்னுடன் இருக்கும்போது, எப்படி நான் அதைப் பற்றி தெரியாமலிருக்கிறேன்.

 நிசர் : ஏனென்றால் அது நுணுக்கமானது.  ஆனால் உன்னுடைய மனம் அடர்த்தியானது.  அமைதியாக உன் மனதை ஆக்கு.  அப்போது தான் உனக்குப் புரியும் நீ எப்படி இருக்கிறாய் என்று.

 கே.கே : என்னைப் புரிந்துகொள்ள மனம் தேவையா?

 நிசர் : நீ மனதைத் தாண்டிப் பயணிப்பவன்.  ஆனால் உனக்கு எல்லாவற்றையும் அறிய மனம்தான் முக்கியம். உன்னுடைய ஆழத்தை, உன்னை அறிய மனம்தான் ஒரு கருவியாகப் பயன்படும்.  நீ எது மாதிரியான கருவியைப் பயன்படுத்துகிறாய் என்பது முக்கியம்.  நீ உன் கருவியை  மேன்மைப் படுத்தினால், உன் அறிவு தானாகவே அதிகரிக்கும்.

 கே.கே : சரியாக அறியவேண்டுமென்றால் நான் சரியான மனம் வைத்திருக்க வேண்டும்.

 நிசர் : அமைதியான மனம் எப்போதும் தேவை.    உன் மனம் அமைதி அடைந்தால், எல்லாம் தானாகவே நிகழும். சூரியன் உதிக்கும்போது இந்த உலகம் உயிர்ப்பிக்கிறது.  அதேபோல் தன்னைப் பற்றிய கவனம் மனதை மாற்ற வல்லது.  அமைதியான முறையில் தன்னைப் பற்றிய கவனம், உன்னுடைய உதவியிலலாமல் பல அற்புதங்களை நிகழ்த்த வல்லது.

 கே.கே : நீங்கள் சொல்வது என்னவென்றால் பெரிய காரியங்களெல்லாம் அவ்வாறு செய்யாமல் நிகழ்கிறது. 

 நிசர் : நிச்சயமாக.  தயவுசெய்து புரிந்துகொள். பூரண ஞானத்தைப் பெற விதிக்கப்பட்டிருக்கிறாய் என்பதை. அதற்கு எதிராகப் போகாதே. அதைத் தவிரக்க முயற்சி செய்யாதே.  அது தானாகவே நிரம்பவிட்டுவிடு.  நீ என்ன செய்ய வேண்டுமென்றால் முட்டாள் மனம் ஏற்படுத்தும் தடைகளுக்கு கவனம் செலுத்த வேண்டும்.   ****
அசோகமித்திரன்
 
 
ஒவ்வொரு முறையும் எழுத உட்கார்ந்தவுடன் என்ன ezஎழுதுவது என்று என்னையே கேட்டுக்கொள்வேன். குழப்பமாகத்தான் இருக்கும். பல முறை முழுத்தாள்கள் எழுதி எழுதியதை ஒதுக்கி வைத்திருக்கிறேன்.
 
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நான் அடிக்கடி சந்திக்க நேர்ந்த ஒரு சாமியாருக்குப் புனைகதை மீது மிகுந்த ஆர்வம். நான் படிக்கவேண்டும் என்று அவரே நூலகங்களுக்குச் சென்று ஸ்டீஃபன் ஸ்வெய்க், காஃப்கா ஆகியோருடைய நூல்களை வாங்கி வந்து என்னைப் படிக்க வைத்தார். எழுத யோசனை ஏதாவது தோன்றியவுடனே அதைக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பார். காலம் காலமாக எழுத்தாளர்கள் பல உத்திகள் கையாண்டிருக்கிறார்கள். அதில் குறிப்புகள் எழுதி வைப்பதும் ஒன்று.நான் அன்றிலிருந்து கையில் கிடைத்த தாள்களிலெல்லாம் குறிப்புகள் எழுதி வைக்கத் தொடங்கினேன். ஆயிரம் குறிப்புகளுக்கு மேல் இருக்கும். எவ்வள்வு பேருந்துச் சீட்டுகள் பின்னால் எழுதியிருப்பேன்! பல குறிப்புகளும் தாள்களும் மக்கிக்கூடப் போய்விட்டன.இதில் யதார்த்தம் என்னவெனில் ஒன்றிரு முறைதான் குறிப்புகள் பயன்பட்டிருக்கின்றன.ஆனால் நான் குறிப்புகள் எழுதுவதை விடவில்லை.
 
குறிப்புகள் கட்டை நான் எங்கெல்லாமோ தூக்கிச் சென்றிருக்கிறேன். சொந்த ஊரில் முடியாவிட்டால் வேறித்தில் பயன்படுமோ என்ற எண்ணத்தில்தான். பயனில்லை. ஸாமர்சட் மாம் இரு முறை அவர் எழுதப் போவதை நிறுத்துவதாக அறிவித்திருந்தார். அவருடைய ‘ரைட்டர்ஸ் ஹாண்ட்புக்அப்படித்தான் உருவாகியிருக்கக்கூடும்.
 
தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பவனுக்கு இதெல்லாம் பெரிய விஷயங்கள். பெரிய பிரச்சினைகள். ஏன் குறிப்புகளை மீண்டும் படிக்கத் தோன்றுவதில்லை? பழைய காகிதங்கள் மூச்சுத் திணற வைக்கின்றன் என்பதாலோ?. ஆனால் பழைய புத்தகங்கள், பத்திரிகை இதழ்களைப் படிக்காமல் இருக்க முடியவில்லையே.ஆதலால் மூச்சுத் திணறல் முழுக் காரணமில்லை.
 
ஜூலை மாதப் பிறப்பு என்னைப் படபடக்க வைக்கும். எனக்கு மிகவும் ஆப்தமானவர்கள் தீபாவளி மலர்களுக்குக் கதை எழுதித் தரச் சொல்வார்கள். முதலில் முடியாது என்று சொல்லி விடுவேன். ஆனால் அவர்கள்ள் இரண்டாம் முறை, மூன்றாம் முறை கேட்கும்போது முயற்சி செய்கிறேன் என்று சொல்வேன். குறித்த தேதிக்கு ஒரு நாள் முன்னதாகவே கொடுத்துவிடுவேன். என்னைச் சில பத்திரிகைகள் பயன்படுத்திக்கொள்வதையும் அறிவேன். காரணம், அவர்கள் எழுதும் பத்தி காட்டிக் கொடுத்து விடும். அவர்கள் போற்றும் நபர்கள் பட்டியலில் நான் இருக்க மாட்டேன்!நா.பார்த்தசாரதியிடமிருந்து இரு விஷயங்கள் கற்றுக் கொண்டேன். அச்சுக்குக் கொடுக்கும் கையெழுத்துப் பிரதி தெளிவாக எழுதப்பட்டிருக்க வேண்டும். யாரவது படைப்பு வேண்டும் என்று கேட்டால் பத்து வரிகளாவது எழுதித் தந்து விட வேண்டும்.
 
உரைநடை வரி வரியாக எழுத வேண்டும்.நாளெல்லாம் எழுதினாலும் இரு பக்கங்கள் தேறாது. இதை ஒருமுறை சொன்னதற்கு ஒருவர் பொது மேடையில் கோபித்துக் கொண்டார். அன்று அவர் கவிதைகள் எழுதி வந்தார். இப்போது அப்படிச் செய்யமாட்டார். அவருடைய கதைகள், நாவல்கள்தான் அவருக்குப் பேரும் புகழும் கொண்டு வந்திருக்கின்றன.
 
முன்பொரு முறை ‘நான் எப்படி எழுதினேன்என்பது போன்றொரு தலப்பில் வரிசையாகக் கட்டுரைகள் வந்தன. எனக்குத் தெரிந்து ‘தீபம்பத்திரிகையும் நானும் என் எழுத்தும்என்ற தலைப்பில் கட்டுரைகள் கேட்டு வாங்கி வெளியிட்டது.எனக்கு ஒன்று தெளிவாகியது. ஒவ்வொரு எழுத்தாளனும் அவனாகவே ஒரு பாதை வகுத்துக் கொள்ள வேண்டும். ஒருவருக்குப் பயன்பட்ட வழி அல்லது முறை இன்னொருவனுக்குப் பயன்படும் என்று உறுதி கூற முடியாது.
 
Oஒரளவு எழுதப்பழகியவர்களுக்கு அவர்கள் எழுத வேண்டியதைக் கடைசி நேரம் வரை ஒத்திப்போடுவதுthaanதான் வழக்கம். ஆரம்ப எழுத்தாளர்கள் ஊருக்கு முன் அவர்கள் எழுதியதைக் கொடுத்து விடுவார்கள். மாதப்பத்திரிகைகளில் கூடத் தொடர் கதை எழுதுபவர்கள் கடைசி நிமிடம் வரை கையெழுத்துப் பிரதியைத் தர மாட்டார்கள்.அந்த அத்தியாயத்துக்காக நான்கு பக்கங்கள் ஒதுக்கி வைத்திருந்தால் அத்தியாயம் மூன்று பக்கங்களில் அடங்கிவிடும். அல்லது அரைப் பக்கம் அதிகமாக இருக்கும்.எனக்குத் தெரிந்து ஓர் எழுத்தாளர் ஒவ்வொரு தாளாக எழுதித்தருவார். எழுதியதை இன்னொரு முறை படித்துத் திருத்த மாட்டார். எனக்கு மிகவும் கவலையாக இருக்கும். ஆனால் அவருடைய தொடர்கதைகளில் பொருள் முரண்பாடு இருக்காது. ஆனால் படைப்பின் வடிவம் முதல்தரம் என்று கூறமுடியாது.
 
எழுதுவதை அவசரம் அவசரமாகச் செய்யக்கூடாது என்றுதான் அடிக்கடி நினைத்துக்கொள்வது. ஆனால் அதுவும் பிரசவ வைராக்யம், மயான வைராக்கியம் போல அடுத்த முறை வரும்போது காணாமல் போய்விடும்.
                 

21.11.12

காஞ்சனா
 
புதுமைப்பித்தன்

இரண்டொரு வருஷயங்களுக்கு முன் அயல் நாட்டு இலக்கியாசிரியர் ஒருவர் இந்தியாவுக்கு வந்திருந்தார்.   இந்திய பாஷை இலக்கியங்களைப்பற்றி அறிந்துகொண்டு போக அவருக்கு ஆசை.    இப்படி இங்கு வந்து சேருகிற மற்றவர்களைப் போல இல்லாமல் அவர், அவசரப்படாமல். நிதானமாக, நின்று, ஆர்வத்துடன், பல விஷயங்களை விசாரித்து அறிந்து கொள்ள முயன்றார்.  வசதியும், தகுதியுமுள்ளவராக இருந்தார் அவர்.   பல பேச்சுக்கிடையில் அவர் என்னை ஒரு கேள்வி கேட்டார்.   üüபொதுவாக இந்தியா பூராவிலுமே, சிறப்பாகத் தமிழில், பழமை என்று ஒன்று தப்ப முடியாத ஆட்சி செலுத்துகிறது என்பது தெளிவவாகத் தெரிகிறது.  எங்கள் இலக்கியங்களில் எங்கள் அனுபவம் என்னவென்றால்,  பழமையின் பிடி மென்னியைப் பிடிப்பதாகவும் இருக்கக் கூடாது ; நழுவிவிடக்கூடியதாகவும் இருக்கக் கூடாது ; இன்றைய இலக்கியத்தில்  பழமையின் சாயை இருக்கத்தான் வேண்டும்.  ஆனால், அதுவே புதுமைக்கு  அனுசரணையாகவும் இருக்க வேண்டும்.  பழமையே புரட்சிகரமானதாக இருக்கலாம். அந்தமாதிரி எழுத்து ஏதாவது உங்களிடையே உண்டா?"
 

  "உண்டு" என்று சொல்லிவிட்டுச் சிறிது தயங்கினேன் நான்.  பிறகு சொன்னேன் ; "ராமாயணக் கதை உங்களுக்குக் கூட ஓரளவு தெரிந்திருக்கும்.  விசுவாமித்திரருடன் அயோத்தியை விட்டுக் கிளம்பிய ராமன், மிதிலை போகும் வழியிலே  ஒரு கல்லை மிதிக்கிறான்.  அக்கல், கௌதமனின் சாபம் பெற்ற அகல்யை.  ராமன் பாத தூளியினால் அகல்யை சாப விமோசனம் அடைகிறாள்.  ராமனுக்குக் கல்யாணமாகிறது.    அயோத்தியில் பட்டாபிஷேக ஏற்பாடுகளுக்கு மத்தியிலே,  ராமனும் சீதையும், லக்ஷ்மணனும் காட்டுக்குப் போகிறார்கள்.  ராவணன் சீதையைத் தூக்கிக் கொண்டு போனான்.  போர் புரிந்து ராவணனைக் கொன்று சீதையை மீட்ட ராமன், உலக அபவாதத்துக்குப் பயந்து, சீதையை அக்கினிப் பிரவேசம் செய்யச் சொல்கிறான்.   பிறகு அயோத்தி திரும்பி முடி சூட்டிக்கொண்டான்.  ஒருநாள் ராமனும், சீதையும் கௌதமரின் ஆசிரமத்துக்குக் கிளம்பினார்கள்.  அங்கே கல்லாயிருந்து பெண்ணான அகல்யை, சீதையின் வாயைக் கிண்டுகிறாள்.  வனவாச அனுபவம், லங்கா வாசம் முதலியன பற்றிக் கேட்டறிந்து கொள்கிறாள் அகல்யை.  கடைசியாகத் தன்னை ராமன்  அக்கினிப் பரிûக்ஷ செய்ததையும் சொன்னாள் சீதை, "உன்னையா?" " ராமனா?" என்று கேட்ட அகல்யை மீண்டும்  கல்லானாள் என்று எங்களுடைய இன்றைய கதாசிரியர்களில் ஒருவர் கதை எழுதியிருக்கிறார்.    நீங்கள் கேட்ட கேள்விக்குப் பதில் இதில் இருக்கிறது." என்றேன்.

  கதையை மனசில் வாங்கித் தெரிந்து கொள்ள அந்நிய நாட்டு இலக்கியாசிரியருக்குச் சிறிது நேரம் பிடித்தது.  பிறகு அவர் சொன்னார் ; "இந்தப் பிரச்சினையை மஹா கவி வால்மீகியே நியாயப்படித் தீர்த்துவைத்திருக்க வேண்டும்.    தன்மனைவிக்கு ஒரு நீதி, பிறன் பெண்டுக்கு ஒரு நீதி என்று லக்ஷிய புருஷனாகிய ராமனே நினைத்ததாக முடிவு ஏற்படும்படி அவர் விட்டது தவறுதான்." பிறகு கேட்டார் ; "அந்தக் கதையின் ஆசிரியர் பெயர் என்ன?" என்று.

 "புதுமைப்பித்தன் என்று புனைப்பெயர் வைத்துக் கொண்ட ஒருவர்.  அவர் இயற்பெயர் விருத்தாச்சலம்," என்றேன் நான்.   தொடர்ந்து சொன்னேன் ; "இவ்வளவு தெளிவாக உங்களுக்குத் தெரிந்துவிட்ட விஷயம் எங்கள் பெரியவர்களுக்கு அவ்வளவு சுலபத்தில் விளங்கி விடுவதில்லை.  ஆதி கவி அப்படி எழுதவில்லை ;  இந்த புதுமைப்பித்தன் யார் சுண்டைக்காய் என்று சண்டைக்கே வந்து விடுவார்கள்.   ஆனால், அது என்னவானாலும் இன்றுள்ள சிருஷ்டிகர்த்தாக்கள் பழமைபற்றிக் கொண்டுள்ள நோக்கம் உங்களுக்கு விளங்கியிருக்கும் என்றே எண்ணுகிறேன்."

 புதுமைப்பித்தனின் கதைத் தொகுதிகளில் ஒன்றான காஞ்சனை என்கிற தொகுதியில் உள்ள கதைகளில் ஒன்று மேலே கூறிய "சாப விமோசனம்", அற்புதமான கதை ; அற்புதமான உருவத்தில் விழுந்திருக்கிறது.  இந்தத் தலைமுறையின் சிறந்த சிறு கதைகளில் அது ஒன்று என்பது என் அபிப்பிராயம்.  அது வெளிவந்ததிலிருந்து இன்று வரை அந்தக் கதையை மட்டும் நான் இருபது தடவையாவது படித்திருப்பேன்.  படிக்குந்தோறும் படிக்குந்தோறும் புதிது புதிதாக இன்பம் தரும் கதை அது.   இப்படித் திரும்பத் திரும்பப் படிக்கக்கூடிய கதைகளும் நூல்களுமே நல்ல கதைகளும் நூல்களுமாகும் என்று சொல்வதில் தவறு என்ன?

  புதுமைப்பித்தன் தமிழில் இருநூறுக்கும் அதிகமாகவே கதைகள் எழுதியிருக்கிறார்.  எல்லாக் கதைகளுமே ஒரே தரத்தவை என்று சொல்லமுடியாது எனினும் ஒரு முப்பதுக்குமேல் நல்ல கதைகள் எழுதியிருக்கிறார்.  அவற்றில் ஒரு பத்தாவது காலத்தால் சாகாது என்று நிச்சயமாகச் சொல்லலாம்.

 காஞ்சனை என்கிற இந்தத் தொகுதியிலேயே இன்னொரு கதையைப் பார்க்கலாம்.  இது வேறு ஒரு தினுசான கதை.

"வீரபாண்டியன் பட்டணத்துச் சுப்பையா பிள்ளை, ஜீவனோபாயத்துக்காகச் சென்னையை முற்றுகையிட்ட போது சென்னைக்கு மின்சார ரயிலோ, அல்லது மீனம்பாக்கம் விமான நிலையமோ ஏற்படவில்லை.  மாம்பலம் என்ற செமண்டு கட்டிட நாகரிகம் அந்தக் காலத்திலெல்லாம் சதுப்பு நிலமான ஏரியாக இருந்தது.   தாம்பரம் ஒரு தூரப் பிரதேசம்" என்று தொடங்குகிறது கதை.  "பவள்க்காரத் தெருவில், திருநெல்வேலிவாசிகளின் சுயஜாதி அபிமானத்தைக் கொண்டு வளர்ந்த தனலட்சுமி புரோவிஷன் ஸ்டோர்ஸ், பிற்காலத்தில் தனலட்சுமி ஸ்டோர்ஸ் ஜவுளிக் கடையாக மாறியது.  தேசவிழிப்பின் முதல் அலையான ஒத்துழையாமை  இயக்கமும், பின்னர் அதன் பேரலையான உப்பு சத்தியாக்கிரஹமும், சுப்பையாப் பிள்ளையின் வாழ்க்கையிலோ மனப் போக்கிலோ மாறுதல் எதுவும் ஏற்படுத்தவில்லை.  வீரபாண்டியன் பட்டணத்தின் ஒரு சிறு பகுதியாகவே அவர் சென்னையில் நடமாடினார்.  ஜீவனோபாயம், பிறகு சௌகரியப்பட்டால் பிறருக்கு உதவி, சமூகத் தொடர்புகளுக்குப் பயந்து பணிதல் எல்லாம் சேர்ந்த உருவம் சுப்பையா பிள்ளை.  மின்சார ரயில் அவர்  வாழ்வில் ஒரு மாறுதலை ஏற்படுத்தியது.  அவர் தாம்பரத்தில் குடியேறினார்.  தினம் மின்சார ரயில் பயணம் அவசியமாயிற்று.....விடியற்காலம் கிணற்றுத் தண்ணீர் ஸ்நானம், பழையது, கையில் பழையது மூட்டை, பாஸ் வெள்ளி விபூதிச் சம்புடத்தில் உள்ள இரண்டனாச் சில்லரைýý  இவற்றுடன் பவளக்காரத் தெருவுக்குக் கிளம்புவார்.  "இரவு கடைசி வண்டியில் காலித்தூக்டகுச் சட்டி, பாஸ், வெள்ளி விபூதிச் சம்புடத்தில் உள்ள இரண்டனாச் சில்லரை, பசி, கவலை-இவற்றுடன் தாம்பரத்துக்குத் திரும்புவார்."

சுப்பையா பிள்ளையின் நிறைந்த இந்த வாழ்வில் இன்னொரு நிறைவு அனுபவமும் புகக் காத்திருந்தது.  மாம்பலம் கூட்டத்தில் நெருக்கியடித்துக்கொண்டு மின்சார ரயிலில் ஏறினாள் ஒரு பெண்மணி.  சுப்பையா பிள்ளை உட்கார்ந்திருந்த ஆஸனத்துக்கு எதிர் ஆஸனத்தில் உட்கார்ந்து கொண்டாள்.  மாணவி  வைத்தியத்துக்குப் படிப்பவள்.  கழுத்தில் லாங் செயினுடன் ஒரு ஸ்டெதாஸ்கோப்பும் அலங்காரத்துக்காகத் தொங்கிற்று.   இன்ன வர்ணம் என்று நிச்சயமாகக் கூறமுடியாத பகல் வேஷ வர்ணங்களுடன்  கூடிய ஒரு புடைவை.  அதற்கு அமைவான ஜாக்கெட்.  செயற்கைச் சுருளுடன் கூடிய தலைமயிரைக் காதை மறைத்துக் கொண்டையிட்டிருந்தாள்.  நெற்றி உச்சியை உள்ளங்கையால் தேய்த்துக் தினவு தீர்த்துக்கொண்டார் சுப்பையா பிள்ளை.  கண்களைக் கசக்கிக் கொண்டு, ஒரு வாரமாகக் கத்தி படாத முகவாய்க் கட்டையைத் தடவிக் கொடுத்துக் கொண்டு, ஜன்னல் வழியாக எதிர்ப்பக்கத்தில் தெரியும் வீடுகளைப் பார்த்தார்.   பார்வை மறுபடியும் அந்தப் பெஞ்சுக்குத் திரும்பியது....'பெத்துப் போட்டால் போதுமா?' என்று தன் பெண்ணைப்பற்றி நினைத்தார்....ஷாக் அடித்தது போலப் பிள்ளையவர்கள் காலைப் பின்னுக்கு இழுத்தார்.  அவளது செருப்புக்காலின் நுனி அவரது பெருவிரல் நுனியைத் தொட்டது.   பிள்ளையவர்கள் கால், உடல், சகலத்தையும் உள்ளுக்கிழுத்துக் கொண்டார்....அவர் மனம் எப்பவோ நடந்த கல்யாண விஷயத்தில் இறங்கியது.  வீர பாண்டியன் பட்டணத்துக்கருக்கு மாப்பிள்ளை-மேளதாளக் குரவைகளுடன் வீட்டில் குடி புகுந்த ஸ்ரீமதி பிள்ளையின் மஞ்சள் அப்பி சுத்துருவில் மருக்கொழுந்துடன் கூடிய நாணிக்கோணிய உருவம்.  பிறகு தேக உபாதையையும் குடும்பச் சுமையும் தூக்கிச் சென்ற நாள் சங்கிலிகள்.  குத்துவிளக்கை அவித்துவைத்த குருட்டுக் காமம்..." எதிரில் இருந்த பெண் பார்க்கில் இறங்கிவிட்டாள்.  அதை அவர் கவனிக்கவேயில்லை.

  இது üசுப்பையா பிள்ளையின் காதல்கள் என்னும் கதை.

 கட்டு எதற்கும் அடங்காத கதாசிரியர் புதுமைப்பித்தன்.  இதுதான் முடியும், இது முடியாது என்பதில்லை அவருக்கு,  எதையும் முயற்சி செய்து லாவகமாக உருவாக்கி விடுவதில் சமர்த்தர்.  சித்த வைத்திய தீபிகையின்  ஆசிரியரான கந்தசாமிப் பிள்ளையைத் தேடிக்கொண்டு கடவுளே வந்துவிட்டார்.  அவர் கதைகளில் ஒன்று;  பிராட்வே முனையில் ஹோட்டல் சுகாதாரம் பேசிக் கொண்டே காபி சாப்பிட்டுவிட்டு, நர வாகனத்தில் (ரிக்ஷாவில்தான்)  வீடு போய்ச் சேருகிறார்கள் கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்.   கடவுளிடமே தன் பத்திரிகைக்கு ஜீவிய சந்தா வசூல் செய்துவிடப் பார்க்கிறார்  கந்தசாமிப்பிள்ளை.  "யார் ஜீவியம் ..." என்று கேட்கிறார் கடவுள். வீட்டிலே கந்தசாமிப் பிள்ளையின் பெண்குழந்தை அவர்களை வரவேற்கிறது.    "எனக்கு என்னகொண்டாந்தே?" என்று கேட்டாள் குழந்தை. "என்னைக் கொண்டாந்தன்" என்றார் பிள்ளை.  "என்னப்பா தினந்தினம் உன்னியேத்தானே கொண்டாரே; பொரி கடலையாவது கொண்டாரப் படாது" என்று சிணுங்கியது குழந்தை.  "பொரி கடலை உம்புக்காகாது. இதோபார் உனக்கு ஒரு தாத்தாவைக் கொண்டுவந்திருக்கிறேன்" என்று தன் பெண்ணுக்குக் கடவுளை அறிமுகப்படுத்திவைத்தார்.  குழந்தையின்பேரில் வைத்த கண்களை மாத்த கடவுளால் முடியவில்லை.  கந்தசாமிப் பிள்ளைக்குச் சிறுதொண்டர் கதை ஞாபகம் வந்துவிட்டது.  "சற்றுத் தயங்கினார் ; 'இப்பவெல்லாம் நான் சுத்த சைவன். மண்பானைச் சமையல் தான் பிடிக்கும். பால் தயிர்கூடச் சேர்த்துக் கொள்வதில்லை' என்று சிரித்தார் கடவுள்.  ஆசைக்கு என்று காலந் தப்பிப் பிறந்த கருவேப்பிலைக் கொழுந்து என்றார் கந்தசாமிப் பிள்ளை....'வாடியம்மா கருவேப்பிலைக் கொளுந்தே...' என்று கைகளை நீட்டினார் கடவுள்.  ஒரே குதியில் அவர் மடியில் ஏறிக்கொண்டது குழந்தை.   'எம்பேரு கருகப்பிலைக் கொழுந்தில்லை ; வள்ளி.  அம்மா மாத்திரம் என்னைக் கறுப்பி, கறுப்பின்னு கூப்பிடுதா....நான் என்ன அப்படியா?' என்று கேட்டது.  அது பதிலை எதிர் பார்க்கவில்லை" புதுமைப்பித்தனின் கதைகளில் வருகிற குழந்தைகள் அற்புதமான சிருஷ்டிகள்.  இன்றைய தமிழ் எழுத்திலே அந்தக் குழந்தைகளைப் போன்ற பூரணமான பாத்திரங்கள் வேறு இல்லை என்பது என் அபிப்பிராயம். அவை மறக்க முடியாத சிருஷ்டிகள்.
 
கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் என்கிற கதை பூராவையுமே சொல்லிவிட வேண்டும் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.  அவ்வளவு நல்ல இடங்கள் பல இருக்கின்றன அதில்.  'கடவுளிடமும் ஜீவிய சந்தா வாங்கிக்கொண்டு தான் அவரை விட்டார்  கந்தசாமிப் பிள்ளை.....' என்று சொல்லி ஒருவாறாக முடித்துவிடுகிறேன்.
 
காஞ்சனைத் தொகுதியிலே முதல் கதையான காஞ்சனையே வெகு நுட்பமான ஒரு விஷயத்தை அழகிய உருவத்தில் சொல்கிறது, பழைய பெரிய எழுத்து விக்கிரமாதித்தின் கதைப் பாணியில் செல்லுகிற ஒரு மூட்டைப் பூச்சி கதை இருக்கிறது இத்தொகுதியில் - கட்டிலைவிட்டிறங்காக் கதை என்று பெயர் அதற்கு.   'மசாமசானம்' என்று ஒரு கதை.  அதில் தெரு ஒரத்திலே பிச்சைக்காரன் செத்துக்கொண்டு கிடக்கிறான்.  ஒரு குழந்தை மாம்பழத்தை மூக்கில் வைத்துத் தேய்த்துக் கொள்கிறது.   'செல்லம்மாள்' என்ற கதையில் செல்லம்மாள் இருபது பக்கங்களிலும் செத்துக் கிடக்கிறாள்-அவள் புருஷன் கடைசிக் கிரியைகளைச் செய்யத் தன்னைத் தயார் செய்து கொள்கிறான்.
 
இந்தத் தொகுதியில் இல்லாத வேறு பல கதைகளையும் பற்றிக் இங்கு சொல்லவேண்டும் போல இருக்கிறது எனக்கு.  சிற்பியின் நரகம், மனக்குகை ஓவியங்கள், ஞானக்குகை, கபாடபுரம்....இன்னும் பல ;  விதவிதமான கதைகளை விதவிதமான உத்திகளைக் கையாண்டு எழுதியிருக்கிறார் புதுமைப்பித்தன்.    அவர் கதைகளிலே இரண்டு விசேஷ அம்சங்கள் சொல்லலாம்.  (ஒன்று) அவர் அவசியம்  என்று தேர்ந்தெடுத்துச் சொல்லும் விஷயங்கள்; அவர் கையாண்ட விஷயங்கள் எல்லாமே புரட்சிகரமானவை என்று பொதுவாகச் சொல்லலாம்.  (இரண்டு) அதைச் சொல்ல அவர் கையாண்ட நடை.  சிலசமயம் அவர் நடை தடுமாறி விஷயத்தை எட்டாது போனதும் உண்டு.   ஆனால் அவருடைய சிறந்த கதைகளில், சொல்லும் சிந்தனையும் சேர்ந்து அமைந்தன.  திருநெல்வேலி பேச்சுத் தமிழை அவர் பல இடங்களில் கவிதையாகவே கையாண்டிருக்கிறார். 

 வருகிற நூற்றாண்டில் தமிழ்ச் சிறு கதைச் செல்வத்துக்கு நமக்குப் பலமான அஸ்திவாரம் போட்டுத் தந்து விட்டவர் புதுமைப்பித்தன் என்று சொல்ல வேண்டும்.

(Written by KA NA SUBRAMANIAm)
எனது குடும்பம்விடிகாலையிலெழுந்து வேலைக்குப் போகும் அப்பா

இருள் சூழ்ந்த பிறகு வீட்டுக்கு வருவார்

விடிகாலையிலெழுந்து வேலைக்குப் போகும் அம்மா

இருள் சூழ்ந்த பிறகு வீட்டுக்கு வருவார்

விடிகாலையிலெழுந்து பள்ளிக்கூடம் செல்லும் நான்

பள்ளிக்கூடம் விட்டு வகுப்புக்கள் முடிந்து

இருள் சூழ்ந்த பிறகு வீட்டுக்கு வருவேன்எமக்கென இருக்கிறது

நவீன வசதிகளுடனான அழகிய வீடொன்று- தக்ஷிலா ஸ்வர்ணமாலி

தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,

இலங்கை
பந்தநல்லூரில் கிடைத்த பதவி உயர்வு
 
 
அழகியசிங்கர்

 
11.
 
நான் பந்தநல்லூருக்கு வந்த புதியதில் கிராமம் என்றால் நடுங்கிக் கொண்டிருந்தேன்.  நான் சென்னை போன்ற இடத்தில் இருந்து பழகியவன்.  கிராமம் என்றால் மனிதர்களே இருக்க மாட்டார்கள்.  சாப்பிட நல்ல ஓட்டல் கிடைக்காது.  நல்ல மருத்துவமனை இருக்காது என்றெல்லலாம் பல குறைபாடுகள் கிராமத்தில் உண்டு.  என் நண்பர் ராஜேந்திரன் ஏன் பந்தநல்லூரிலேயே தங்கலாமே என்ற அறிவுரையை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.  கிராமாத்தைச் சுற்றி அருகாமையில் இருக்கிற ஒரு நகரத்தைத்தான் நான் பெரிதும் நம்பினேன்.  முதலில் சாப்பாடு.  இது பெரிய பிரச்சினை.  என் வீட்டில் நான் வெந்நீர் கூட சுடவைத்துப் பழகாதவன். 
 
ஆனால் பந்தநல்லூர் என்ற ஊர் கும்பகோணத்திற்கும், மயிலாடுதுறைக்கும் நடுவில் உள்ளது.  மயிலாடுதுறை 28 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது.  கும்பகோணம் 30 கிலோமீட்டர் மேல் இருந்தது.  நான் கும்பகோணத்தில் இருப்பதைவிட மயிலாடுதுறையில் இருப்பதையே பெரிதும் விரும்பினேன்.  காரணம் என் உறவினர்கள் அங்கு இருக்கிறார்கள்.  எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டால் அவர்கள் உதவி செய்வார்கள் என்று நம்பினேன்.
 
தினமும் மயிலாடுதுறையிலிருந்து பந்தநல்லூருக்கு வருவதற்கு தமிழ் பஸ் என்ற ஒன்றைப் பிடித்துக்கொண்டு வரவேண்டும்.  அதைத் தவறவிட்டால் பின்னால் வரும் பஸ்ஸைப் பிடித்தால் அலுவலகம் வர தாமதமாகும்.  சிடுமூஞ்சி மேலாளரைப் பார்க்க வேண்டும்.  ஏதோ உலகத்தில் நான்தான் பெரிய குற்றம் செய்துவிட்டதுபோல் பார்த்துத் தொலைப்பார்.  ஆனால் உண்மையில் வேற யாரையும் அவரால் குறை சொல்ல முடியாது.  ஒரே பெண் கிளார்க்கிடம் வழிவார்.
 
அவர் வாழ்க்கையில் பெரிய சோகம் நடந்துவிட்டது.  ஆனால் அது மாதிரியான சோகம் நிகழ்ந்துவிட்டதற்கான அறிகுறியே அவர் முகத்தில் தெரியாது.  அவர் மனைவி அவருடன் ஸ்கூட்டரில் பயணிக்கும்போது ஒரு விபத்தில் இறந்துவிட்டாள். இது அவருடைய இடமான கோயம்புத்தூரில் நடந்தது. 

அவர் அந்தச் சம்பவத்தைச் சொல்லும்போதுகூட உணர்ச்சியே இல்லாமல் சொல்வார்.  கேட்கும் நாம்தான் வருத்தப்பட வேண்டும். 
 
பஸ்ஸில் வருவது சரிபடாது என்று எண்ணி ஊரிலிருந்து டூ வீலரை எடுத்துக்கொண்டு வர ஏற்பாடு செய்தேன்.

                                                                                                                         (இன்னும் வரும்)
 

14.11.12

பந்தநல்லூரில் கிடைத்த பதவி உயர்வு
 
 
அழகியசிங்கர்

10.
 
 
நான் இங்கு வந்தபிறகு அழகியசிங்கர் என்னைப் பற்றி சில கவிதைகள் எழுதினார்.  ஒரு கவிதை பந்தநல்லூரில் கிடைத்த பதவி உயர்வு என்ற கவிதை.  அந்தக் கவிதை எழுதும்போது நான் என் பெண்ணிற்குத் திருமணம் ஏற்பாடு செய்திருந்தேன்.  அந்தத் தருணத்தில் நான் சென்னையில் இல்லாமல், மயிலாடுதுறையில் அல்லல்பட்டுக் கொண்டிருந்தேன்.  என் பெண் அப்போது சொன்ன ஒரு விஷயம் எனக்கு உறுத்தலாக இருந்தது. 

''ஏன்ப்பா..என் கல்யாணம் நடக்கும்போதுதான் நீ அங்கே போகவேண்டுமா?''  சொல்லும்போது அவள் குரலில் வருத்தம்.

உண்மையில் பெண்ணின் திருமணம்போது நான் சென்னையில் இருந்தால் பலவிதங்களில் நான் பயன்படுவேன்.  திருமணம் என்கிற பதைப்பு ஒருவரை ஒருவர் பார்க்கும்போது குறையும் வாய்ப்பு அதிகம்.

என் விதி அந்தச் சமயத்தில் நான் அங்கில்லை.  பின் திருமணத்திற்கு லீவு.  அது கொடுப்பார்களா என்ற அச்சம் என்னிடம் இருந்துகொண்டே இருந்தது. 
எனக்கு ஒரு மாதமாக லீவு வேண்டியிருக்கும்.  அதற்கான முனைப்பை செய்து கொண்டிருந்தேன்.

அழகியசிங்கர் என்னைக் கிண்டல் செய்ததுபடி, லீவு கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன்.  ஏன்எனில் மானேஜருக்கும், எனக்கும் ஒருவித ஒழுங்கு உறவு ஏற்படவில்லை.  தவிரவும் நான் என்ன தவறு செய்வேன் என்பதைப் பார்த்துக்கொண்டிருப்பதுபோல் எனக்குப் பட்டது.

பஸ்ஸைப் பிடித்து மயிலாடுதுறையிலிருந்து நான் பந்தநல்லூருக்கு உடனடியாக வர முடியாது. ஒரு ஐந்து நிமிடம் பத்து நிமிடம் தாமதமாக வரும்படியாக நேரிடும்.  நான் உள்ளே நுழையும்போது, வட்டார அலுவலகத்திலிருந்து போன் வந்துள்ளதாக போனை என்னிடம் கொடுப்பார் மானேஜர்.  மானேஜரே அதைச் செய்திருப்பதாகத்தான் எனக்குத் தோன்றும்.  ''ஏன் லேட்?'' என்று அவர்கள் கேட்பார்கள்.  ''வேற வழியில்லை.. பஸ்ஸைப்பிடித்து வரும்போது இப்படி ஆகிவிடுகிறது.''

''நீங்க சீக்கிரம் வரணும்..''

''ஏன் இங்க வந்து மாட்டிக்கொண்டேன் என்பது தெரியவில்லை.  வேலையை விட்டுப் போய்விடலாமாவென்று யோசிக்கிறேன்..''என்று எரிச்சலுடன் பதில் சொல்வேன்.

இதைத்தான் மானேஜர் எதிர்பார்த்துக்கொண்டிருப்பார்.  மாட்டிவிட்டு வேடிக்கைப் பார்க்கும் குணம் அவருக்கு. 
                                                                                                                          (இன்னும் வரும்)

5.11.12

காக்கைச் சிறகினிலே (சிறுகதை)


                                                        
 
 
 
 
 
செல்வராஜ் ஜெகதீசன் 


 
 
தற்குள் அப்படியொன்று இருக்குமென்று சத்தியமாக நான் எதிர்பார்க்கவே இல்லை.அதன் விளைவாக நடந்த அத்தனை நிகழ்வுகளையும் நினைவுக்கு கொண்டு வந்து போட்டது,மைக்கேல் சாரை, அவரின் மனைவியோடு எதிர்கொள்ள நேர்ந்த இந்த மாலைப் பொழுது.தம்பதி சமேதராய் எதிரில் கடந்து போனவருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை.அருகில் போய் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கலாம்.ஒரு பதினைந்து வருடத்திற்கு முன், தன் வீடே பழியாய்க் கிடந்தவனை,இப்போது அவருக்கு நினைவில் இருக்குமா?
 
ப்போது நான் ஏழாவது படித்துக் கொண்டிருந்தேன்.மைக்கேல் சார் எங்கள் பள்ளிக்கு வந்திருந்த புது ஹெட் மாஸ்டர்.சொந்த ஊர்காஞ்சிபுரம்பக்கம் ஒரு கிராமம். வேலையில் சேர்ந்த புதிதில் சென்னைக்கு ினமும் பஸ்சில் வந்து போய்க் கொண்டிருந்தார். தில்லு முல்லுபடத்தில் வரும் ரஜினிக்குமீசை வைத்த மாதிரி இருப்பார்.எப்போதும் வெள்ளை பாண்ட் வெள்ளை முழுக்கை சட்டையுடன் பளபளக்கும் பெல்ட் ஒன்று அணிந்துதான் அவரை பெரும்பாலும் காண முடியும். விரைப்பான முகம். கண்கள் மட்டும் எப்போதும் சிரித்துக் கொண்டிருக்கும்.அந்த சிரிப்புதானா நடந்த அத்தனைக்கும் காரணமென்று எனக்கு சொல்லத் தெரியவில்லை.
 
தினமும் வந்து போவது முடியாமல்,வீடொன்று வாடகைக்கு எடுத்து தங்க அவர் தேர்ந்தெடுத்தது, எங்களுக்கு அடுத்த வீட்டை. எப்படி அவர் வீட்டோடு ஒன்றிப் போனேன் என்பது இப்போது சரியாய் நினைவில் இல்லை.மைக்கேல் சார் வீட்டில் தான் எந்நேரமும் இருப்பேன்.ஸ்கூல் முடிந்து வீட்டுக்கு வந்து பையை போட்டுவிட்டு சார் வீட்டுக்கு போவேன். திரும்பி வர ராத்திரி எட்டு மணிக்கு மேல் ஆகும்.
 
ங்கள் பள்ளி எட்டாவது வரை மட்டுமே இருந்த ஒரு நடுநிலைப் பள்ளி.மைக்கேல் சார் ஏழாவதுக்கும் எட்டாவதுக்கும் வரலாறு பாடம் மட்டும் எடுப்பார்.அவர் பாடம் சொல்லித் தருவது அத்தனை சுவாரசியமாக இருக்கும்.படித்து முடித்தபின், அவரை போல் ஆக வேண்டுமென்று,நான் உட்பட,நிறைய பேர் ஆசைப்பட்ட அளவிற்கு. மைக்கேல் சார் கையால் திருக்குறள் புத்தகமொன்று நான் பரிசாய் (பேச்சுப்போட்டி முதல் பரிசு) பெறும் புகைப்படம் ஒன்று இப்போதும் என் வசம் வைத்திருக்கிறேன்.இப்போதென்றால் இந்த இருபத்தாறு வயதில்.
 
அதை விட மைக்கேல் சார் உபயத்தில் ரேடியோ ஸ்டேஷன் போய் வந்த கதை தான் ரொம்ப தமாசான விஷயம். இப்போ நினைத்தால் தமாசாக தோன்றும் விஷயம், அப்போதைக்கு அதிகம் சோகப்படுத்திய ஒன்று.
 
நீங்கள் ரேடியோவில் ஞாயிற்றுக்கிழமை மதிய நேரத்தில் ஒளிபரப்பாகும்சிறுவர் சோலைநிகழ்ச்சியைக் கேட்டதுண்டா?அதில் நாமும் ஒருநாள் பேசுவோமென்று நினைத்ததுண்டா?
அன்றுவரை, அதாவது மைக்கேல் சார் எங்கள் பள்ளிக்கு வரும் வரை, வெளியே ஏதாவது சுற்றுலாகூட்டிப் போவதென்றால், பெரும்பாலும் மகாபலிபுரம்,வண்டலூர் ஜூ அல்லது முதலைப் பண்ணை இப்படித்தான் இருக்கும்.
 
ஒருநாள் சுகுணா டீச்சர் வந்து, "ரேடியோ நாடகத்துல நடிக்க யாருக்கெல்லாம் இண்டரஸ்ட் இருக்கோ, கை தூக்குங்க" என்றார். ஒன்றும் புரியாமல் நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்து விழிக்க ஆரம்பித்தோம். பின் அவரே ஞாயிற்றுக்கிழமை தோறும் வெளிவரும் சிறுவர் சோலை நிகழ்ச்சி பற்றி சொன்னார். நன்றாக படிப்பவன் என்ற வகையில் என் பெயர் டீச்சராலேயே சேர்க்கப்பட்டது. அதற்கு இரண்டொரு நாள் கழித்து நாடகத்திற்கான ஒத்திகை ஆரம்பிக்கப்பட்டது. சுகுணா டீச்சரும் டிராயிங் மாஸ்டர் முருகேசன் சாரும் எப்படி எல்லாம் பேச வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க,திருப்பித் திருப்பி அந்த வசனங்களை நாங்கள் சொல்லிப் பார்ப்போம். அவ்வப்போது மைக்கேல் சார் அங்கு வந்து பார்வையிடுவார். அவர் ஏற்பாட்டில்தான் அந்த ரேடியோ நிகழ்ச்சி ஏற்பாடாகி இருந்தது. 
 
இரண்டு வார ஒத்திகைக்குப் பிறகு,ரிகர்சலுக்காக ரேடியோ ஸ்டேஷன் போவோம் என்று சொல்லியிருந்தார் சுகுணா டீச்சர். ஒரு சனிக்கிழமை அன்று நாங்கள் எட்டு பேரும்,சுகுணா டீச்சர் மற்றும் முருகேசன் சார் சகிதம் கிளம்பி பஸ் ஸ்டாண்ட் வந்து சேர்ந்தோம். எங்களுக்கு முன்னதாகவே மைக்கேல் சார் அங்கு நின்று கொண்டிருந்தார். பின் எல்லோரும் பல்லவன் பஸ் பிடித்து,தங்கசாலை பஸ் நிறுத்தத்தில் வந்து இறங்கினோம். அங்கிருந்து இன்னொரு பஸ் பிடித்து ரேடியோ ஸ்டேஷன் போக வேண்டுமென்று சுகுணா டீச்சர் சொல்லிக்கொண்டிருந்தார்.
 
அப்போது,அதுவரை அமைதியாக வந்து கொண்டிருந்த நான், "உவ்வே" என்ற சத்தத்துடன் வாந்தி எடுக்க ஆரம்பித்தேன். அதுவரைக்கும் அவ்வளவு தூரம் நான் பஸ்ஸில் பயணம் செய்ததில்லை.முருகேசன் சார் ஓடிப் போய் அருகிலிருந்து ஒரு லெமன் ஜூஸ் வாங்கி வந்தார். அதைக் குடித்த பிறகு சற்று தெம்பாக இருந்தது. பின் இன்னொரு பஸ்ஸில் ஏறி ரேடியோ ஸ்டேஷன் போய் சேர்ந்தோம்.
 
வானொலி அண்ணாவை நேரில் சந்தித்தோம். அங்கு வருவதற்கு முந்தைய ஞாயிறுகளில் ஒளிபரப்பான சிறுவர் சோலை நிகழ்ச்சிகளில் கேட்ட வானொலி அண்ணாவின் குரலை வைத்து நான் கற்பனை பண்ணி வைத்திருந்த முகத்திற்கும் நேரில் கண்ட வானொலி அண்ணாவின் முகத்திற்கும் நிறைய வித்யாசங்கள் இருந்தன.
 
இரண்டு மணி நேர ரிகர்சலுக்குப் பிறகு, திரும்பவும் இரண்டு பஸ் பயணம். என்ன ஆயிற்றோ தெரியவில்லை. இரண்டு பஸ்சிலும் உவ்வே உவ்வே என்று கக்கி வைத்ததன் விளைவாக, வேறொருவன் எனக்குப் திலாக போய் ரெகார்டிங் முடித்து வந்தான். ரேடியோவில் குரல் கேட்கும் பாக்கியத்தை அடியேன் இழந்தேன்.
 
இப்போதும் எனக்கு சரியாக ஞாபகம் இருக்கிறது. (எல்லாம் அந்த ரேடியோ நாடக அனுபவத்தால்). அன்று ஞாயிற்றுக் கிழமை. நான் மைக்கேல் சார் வீட்டில் ரேடியோவில் எங்கள் பள்ளி மாணவர்கள் பங்கு ெற்ற சிறுவர் சோலை நிகழ்ச்சி கேட்டு முடித்த நேரம்தான்,சீனு,அவன் அக்கா கொடுக்கச் சொன்னதாக, ஒரு புத்தகத்தைக்கொடுத்து விட்டுப் போனான்.சீனு எங்கள் பள்ளியில் தான் நான்காம் வகுப்பு படிக்கிறான்.முழுப் பெயர் சீனிவாசன்.அவன் அக்கா மாலா எட்டாவது படித்துக் கொண்டிருந்தாள். மாலாவைப் பற்றி சொல்வதென்றால், தக்காளி,மாலா மாதிரி சிவப்பாய் இருக்கும். (நன்றி சுப்ரமண்ய ராஜூ ).
 
புத்தகத்தைக் கொடுத்து விட்டு,ஒரே ஓட்டமாக ஓடிப்போனான் சீனு. நான் புத்தகத்தை உள் அறையில் இருந்த மைக்கேல் சாரிடம் கொண்டு போனேன்.
 
"சார்,சீனுவோட அக்கா இந்த புக்கை கொடுத்தனுப்பி இருக்காங்க"
 
சாருக்கு ஒரே ஆச்சர்யம்.
 
"யார்ரா அது சீனுவோட அக்கா?"
 
"மாலா சார். எட்டாவது பி செக்சன்"
 
நான் எதுவும் புக் கேட்கலையே. சரி அப்படி வை. நாளைக்கு என்னன்னு கேட்போம்"
சரி சாரென்று அப்படியே அந்த புத்தகத்தை வைத்து விட்டுப் போயிருக்கலாம். அங்கு தான் என் ஆர்வக் கிறுக்கு வேலை செய்ய ஆரம்பித்தது.
 
அப்போதெல்லாம் எனக்கு ஒரு விஷேசமான பழக்கம் உண்டு. அட்டை போடப்பட்டிருக்கும் புத்தகங்களின், மேல் அட்டையைப் பிரித்து, உள்ளே பார்ப்பது. சீனு கொடுத்துவிட்டுப் போன புத்தகத்தின் உள் அட்டையை பார்ப்பதற்காக, தினத்தந்தி பேப்பரால் போடப்பட்டிருந்த அட்டையை பிரித்தேன். உள்ளிருந்து கோடு போட்ட பரீட்சை தாள் போல ஒன்று கீழே விழுந்தது.எடுத்துப் பிரித்து பார்த்தேன். 
 
இரண்டு பக்கமும் ஏதும் எழுதாத ெறும் தாள். ஆனால் பேப்பர் சற்று கனமாக இருந்தது. இரண்டு பக்கமும் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்ததில் ஒன்றைக் கண்டுபிடித்தேன்.இரண்டு தாள்கள் ஒன்றாக ஒட்டப்பட்டிருந்தன. கொஞ்ச நேரத்திற்கு முன்புதான் ஒட்டப்பட்ட ஈரம் இன்னும் இருந்தது.
 
மேலே சற்று உயர்த்தி வெளிச்சத்தில் பார்த்தபோது,உள்ளே எழுதப்பட்டிருந்த எழுத்துகள் தெரிந்தன. நகங்களைக் கொண்டு மிக மெதுவாக இரண்டு தாள்களையும் பிரித்தேன். பிரிக்கப்பட்ட தாள்களின் இரண்டுபக்கங்களிலும் உள் பகுதியில் ஏராளமான வரிகள் நுணுக்கி நுணுக்கி எழுதப்பட்டிருந்தன.
 
"என் ப்ரியமானவருக்கு,
 
இந்தக் கடிதம் உங்களுக்கு ஆச்சரியம் தரலாம். ஒரு சில சினிமாக்களில் வருவது போல் ஒரு மாணவி ஆசிரியருக்கு எழுதும் காதல் மடல்...''
 
காதல் என்ற வார்த்தை எல்லாம் அந்த வயதில் எனக்கு எந்த அளவிற்கு புரிந்தது என்று இப்போது சொல்லத் தெரியவில்லை. பேப்பர்களை எடுத்துக் கொண்டு,உள் அறைக்கு ஓடினேன்.
 
"சார்,சீனு குடுத்துட்டுப் போன புஸ்தகத்தோட அட்டையில இந்த பேப்பர் இருந்துச்சு சார்என்று பேப்பர்களை நீட்டினேன். எப்படிக் கண்டுபிடித்தேன் என்பதையெல்லாம் சொன்னேன்.
 
தாள்களைக் கையில் வாங்கியவர்,அடுத்த அரைமணி நேரத்திற்கு அதை மறுபடி மறுபடி படித்துக் கொண்டிருந்தார்.
o
மைக்கேல் சார் அவராகப் போய் மாலாவின் சித்தப்பா ஒருவருடன் பேசியதும்,அடுத்த சில நாட்களில் மாலா எங்கள் பள்ளியில் இருந்து வேறொரு ள்ளிக்கு மாற்றப்பட்டாள்.
அங்கிருந்தும் இன்லேன்ட் லெட்டரில் கடிதங்கள் வந்தது.பின்பு எங்கள் ஊரை விட்டே வேறெங்கோ கொண்டு செல்லப்பட, கொஞ்ச நாட்களில் மாலா எங்கிருக்கிறாள் என்றே யாருக்கும் தெரியாமல் போனது. அந்த இடத்தையும் கண்டுபிடித்து மைக்கேல் சார் மாலாவுடன் பேசி உறுதியளித்துவிட்டு வந்தார். ("பதினெட்டு வரை பொறு,
 
ப்ருதிவிராஜ் மாதிரி கொத்திக் ொண்டு போய் மணந்து கொள்கிறேன்").பின் வந்த நாட்களில் நடந்தவைகள், எனக்கும் தெரிய வாய்ப்பில்லாமல் போனது.
 
நானும் ஒன்பதாவது படிக்க வேறொரு பள்ளிக்குப் போனதில், மைக்கேல் சார் தொடர்பு முற்றிலும் விடுபட்டுப் போனது.
 
பதினைந்து வருடத்திற்குப் பின், இன்று கண்ட, மைக்கேல் சாரின் னைவியிடம் மாலாவின் ஜாடை சிறிதும் இல்லாவிட்டாலும், நிறம் ஏறக்குறைய அதே தக்காளி சிவப்பில் இருந்தது.