Skip to main content

Posts

Showing posts from January, 2017

ஒரே மேடையில் இரண்டு இலக்கியக் கூட்டங்கள்

அழகியசிங்கர் இந்த மாதம் நாலாவது சனிக்கிழமை இலக்கியச் சிந்தனை என்ற அமைப்பும், குவிகம் இலக்கிய வாசல் என்ற அமைப்பும் இரு இலக்கியக் கூட்டங்களை அம்புஜம்மாள் தெருவில் உள்ள ஸ்ரீனிவாச காந்தி நிலையத்தில் ஏற்பாடு செய்தன. இரண்டு அமைப்புகளும் சேர்ந்து கடந்த இரண்டு கூட்டங்கள் நடத்துகின்றன.  இலக்கியச் சிதனை கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தியிருக்கின்றன.  கடந்த சில ஆண்டுகளாக இலக்கியச் சிந்தனை மாதாந்திர கூட்டத்தை சரிவர செய்ய இயலவில்லை.  பொதுவாக இலக்கியச் சிந்தனைக் கூட்டங்களுக்கு யாரும் வருவதில்லை.  சிலசமயம் கூட்டத்தில் பேச வருபவரும் அதை ஏற்பாடு செய்தவர் மட்டும் இருப்பார்கள். அதனால் குவிகம் வாசக சாலை மூலம் ஏற்பாடு செய்வதால் இன்னும் சிலர் கூடுதலாக கூட்டத்திற்கு வரலாம். கிருபானந்தனும், சுந்தர்ராஜனும் முழு மூச்சாக இலக்கியக் கூட்டங்களை நடத்த வேண்டுமென்று தீவிரமாக இயங்குபவர்கள்.  இதுவரை வெற்றிகரமாக 20க்கும் மேற்பட்ட கூட்டங்களை நடத்தியவர்கள்.  அவர்கள் முயற்சியில் இலக்கியச் சிந்தனை அமைப்பும். குவிகமும் சேர்ந்து கூட்டங்களை நடத்தத் துவங்கி உள்ளன.  முதலில் அந்த முயற்சிக்கு என்

101வது இதழ் நவீன விருட்சம் பற்றி கொஞ்சம் சொல்லட்டுமா

அழகியசிங்கர் 101வது இதழ் நவீன விருட்சம் வந்துவிட்டது.  அதை ஒவ்வொரு இடமாய் கொண்டு போய் கொடுத்துக்கொண்டிருக்கிறேன்.  க்ரோம்பேட்டையில் காந்தி புத்தக ஸ்டால் என்கிற ரயில்வே பேப்பர் கடையில் கொடுத்திருக்கிறேன். ஸ்டேஷன் உள்ளே இந்தக் கடை இருக்கும்.  அதேபோல் டிஸ்கவரியில் கொடுத்திருக்கிறேன். இப்போதுதான் மெதுவாக ஒவ்வொருவருக்கும் அனுப்பிக் கொண்டிருக்கிறேன்.  புத்தகக் காட்சியின்போது சிலர் வாங்கிச் சென்றிருக்கலாம். விருட்சம் பத்திரிகை மூலம் என் நோக்கம் என்ன?  பத்திரிகையைப் புரட்டினால் ஒரு அரை மணி நேரம் அல்லது முக்கால் மணி நேரத்தில் பத்திரிகையைப் படித்துவிட வேண்டும்.  எளிதாக அப்படி படித்துவிடக் கூடிய பத்திரிகைதான் இது.  எதாவது ஒரு கதையையோ கவிதையையோ படிக்கும்போது ஒருவித ருசி வேண்டும்.  அதை சிலர் கிண்டல் செய்கிறார்கள்.  ஒரு பத்திரிகை என்றால் அதை உடனே படித்துவிட வேண்டும்.  எளிமையாக இருப்பதால் அது ஆழமாக இருப்பதில்லை என்ற அர்த்தம் இல்லை.  எளிமையும் ஆழமும் சேர்ந்தால் அது பெரிய பலம். நவீன விருட்சம் 101வது இதழில் நான் குறிப்பிட விரும்புவது நகுலனின் சிறுகதை.  அந்தக் கதையின் பெயர் ஒருநாள்.  இ

படித்தால் மட்டும் போதுமா

படித்தால் மட்டும் போதுமா அழகியசிங்கர்  நான் ஒரு புத்தகத்தை எடுத்துப் படித்துக்கொண்டிருந்தேன்.  அதில் ஒரு வரியைப் படிக்கும்போது, அந்த வரி என்னை திகைக்க வைத்தது. அந்த வரி இதுதான் : üபடித்துப் படித்துப் பைத்தியமானான் கோசிபட்டன்,ý இது ஒரு பழமொழி.   உண்மையில் படித்துக்கொண்டிருந்தால் பைத்தியமாகி விடுவார்களா?  எனக்குத் தெரிந்து எப்போதும் படித்துக்கொண்டிருக்கும் பலரை பார்த்திருக்கிறேன்.  சாப்பிடும்போது கூட எதாவது ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு படித்துக்கொண்டிருப்பார்கள்.  இன்னும் சிலர் பாத்ரூமில் படிப்ôர்கள்.  எனக்கு சாப்பிடும்போதும், பாத்ரூமிலும் இருக்கும்போதும் படிப்பதற்கு விருப்பம் இருக்காது.  படிக்கும் பழக்கம் நம் மனத்தையும், அறிவையும் ஆட்கொண்டு நம்மை அடிமைகளாக்கி விடலாமா?  இந்தக் கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  அதேபோல் சுலபமாக பொழுதைப் போக்க படிக்கும் பழக்கம் ஒரு சிறந்த வழி.  ஆனால் பெரும்பாலோர் படிக்காமலேயே பொழுதைக் கழிக்கிறார்கள்.  அவர்களை நாம் குறை சொல்ல முடியாது.  நேற்று பூங்காவில் நடைபயிற்சி செய்து கொண்டிருக்கும்போது, ஒருவரை விஜாரித்தேன்.  அவர் சில

நன்றாக மாட்டிக்கொண்டேன்

அழகியசிங்கர் உங்களுக்கெல்லாம் தெரியும்.  நான் மாம்பலத்தில் இருக்கிறேன் என்று. பின் நானோ ட்விஸ்ட் என்ற கார் வைத்திருக்கிறேன்.  அதை அறுபது வயதிற்குப் பிறகு ஓட்டக் கற்றுக்கொண்டுள்ளேன் என்பதும் தெரியும். ஆனால் அந்த வண்டியை எடுத்துக்கொண்டு அசோக்நகரில் உள்ள கார்ப்பரேஷன் ஸ்கூல் வரைச் சென்று ஒரு வாக் செய்துவிட்டு பின் வீட்டிற்கு ஓட்டிக்கொண்டு  வந்துவிடுவேன்.  ஆனால் சமீபத்தில் அதை பலநாட்களாய் பயன்படுத்தவில்லை.  அதை சர்வீஸ் கொடுக்க நினைத்தேன்.  நானே நானோவை ஓட்டிக்கொண்டு க்ரீம்ஸ் சாலையில் உள்ள டாவே ரீச் என்ற இடத்தில் கொடுக்க நினைத்தேன். நேற்றுதான் (23.01.2017) அதற்கான முயற்சியை மேற்கொண்டேன்.  காலையில் 10 மணி சுமாருக்குக் கிளம்பி அண்ணாசாலையை அடைந்தேன். வண்டிகள் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்ததைப் பார்த்தவுடன், எனக்கு திகைப்பு ஏற்பட ஆரம்பித்தது.  முக்கியமான காரணம் ஜெமினி அருகில் உள்ள மேம்பாலத்தில் வண்டியை எப்படி எடுத்துக்கொண்டு போகப் போகிறேன் என்ற பதைப்புதான் என்னிடம் இருந்தது.  சமதரையில் வண்டியை மெதுவாகக் கொண்டு செல்வதும் பின் நகர்த்துவதும் என்னால் முடிந்தது.

40வது புத்தகக் காட்சியும், ஜல்லிக்கட்டும்...

அழகியசிங்கர்                                                                                                                    ஒரு வழியாக 40வது சென்னைப் புத்தகக் காட்சி நிறைவு அடைந்து விட்டது.  ஆரம்பிக்கும்போது எதிர்பாராத அப்பாவின் மரணம் என்னை இதில் கலந்துகொள்ள முடியாமல் செய்து விட்டது.  கிருபானந்தன் என்ற நண்பர் மூலம் சிறப்பாகவே நடந்து முடிந்து விட்டது.  இன்னும் பல நண்பர்கள் உதவி செய்தார்கள். புத்தகக் காட்சி யில் கலந்துகொண்ட நண்பர்களுக்கு நான் மதிப்பெண்கள் வழங்குவது வழக்கம்.  அந்த வழியில் கீழ்க்கண்டவாறு மதிப்பெண்கள் வழங்குகிறேன் :  கிருபானந்தன்          101% பிரபு மயிலாடுதுறை 55% ஜீவா                  55% கல்லூரி நண்பர் சுரேஷ்                  90% சுந்தர்ராஜன்         60% வேம்பு                 15% பெருந்தேவி           2% அழகியசிங்கர்         10% பாயின்ட் ஆப் சேல்ஸ் மெஷின் ரொம்ப உபயோகமாக இருந்தது.  விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாகவும், சாதாரண நாட்களில் கூட்டம் குறைவாகவும் இருந்தது.  ஏர் இந்தியாவில் பணிபுரிந்து ஓய்வு

எப்போது புத்தகம் படிக்கப் போகிறீர்கள்....

அழகியசிங்கர் ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் காட்சியின்போது என் நண்பர்களைச் சந்திப்பது வழக்கம்.  அதன்பின் அடுத்த ஆண்டுதான் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டும்.  என் புத்தக ஸ்டாலுக்கு வரும் நண்பர்களைப் பார்த்துக் கேட்பேன் :  'எப்போது புத்தகம் படிக்கப் போகிறீர்கள்?' என்று. ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் காட்சியில் பலரும் புத்தகங்களை வாங்கிக்கொண்டு செல்கிறார்கள்.  சிலர் 10க்கும் மேற்பட்ட புத்தகங்களை வாங்கி சேகரித்துக் கொள்வார்கள்.  நானும் ஒரு பைத்தியம்.  ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் காட்சியின்போது புத்தகங்கள் வாங்காமல் இருக்க மாட்டேன்.  சரி ஒரு புத்தகத்தை உடனடியாக படித்து விட முடிகிறதா? நிச்சயமாக இல்லை.  புத்தகம் வாங்கும் பலரை நான் ஒரு கேள்வி கேட்பது உண்டு.  போன ஆண்டு நீங்கள் வாங்கிய புத்தகங்களைப் படித்து விட்டீர்களா? என்று.  யாரும் படித்து விட்டேன் என்று சொல்ல மாட்டார்கள்.  கொஞ்சம் படித்து விட்டேன்.  இன்னும் படிக்க வேண்டும் என்பார்கள்.  இன்னும் சிலரோ இனிமேல்தான் ஆரம்பிக்க வேண்டுமென்பார்கள்.  பெரும்பாலோர் நேரம் கிடைப்பதில்லை என்றுதான் சொல்வார்கள்.   பெரும்பாலோர் அ

நான் ஒரு ஆளை நியமதித்திருக்கிறேன்

அழகியசிங்கர்        விருட்சம் 100வது இதழ் 28 ஆண்டுகள் கழித்து வெளிவந்ததை அடுத்து 101வது இதழும் வந்து விட்டது.  ஆனால் எல்லாவற்றையும் பார்க்க வேண்டி உள்ளது.  இதுவரை யாரும் என் உதவிக்கு இல்லை. புத்தகம் தயாரிப்பதிலிருந்து எடுபிடி வேலை செய்வதுவரை நான் ஒருவனே. எனக்கு உதவி செய்ய சில நண்பர்கள் இப்போது கிடைத்துள்ளார்கள்.  ஆனால் அவர்களை எப்போதும் நம்புவது நியாயமாக எனக்குத் தோன்றவில்லை. அவர்களும் உதவிகள் செய்யத்தான் செய்கிறார்கள். ஒவ்வொரு பதிப்பக நிறுவனமும் பெரிய அலுவலகம் வைத்திருக்கிறார்கள்.  ஆட்கள் அதிகமாக வைத்திருக்கிறார்கள்.  டைப் அடிக்க ஒருவர் இருக்கிறார். பிழைத் திருத்தம் செய்ய ஒருவர் இருக்கிறார். விற்பனையைக் கவனிக்க ஒருவர் அமர்ந்திருக்கிறார்.  இன்னொருவர் புத்தகங்களை எடுத்துச் செல்வதற்கும், பார்சல் செய்வதற்கும் இருக்கிறார்கள். இதைத் தவிர கார் ஓட்ட காரும் டிரைவரும் இருக்கிறார்கள்.  ஆனால் எனக்கோ யாருமில்லை. விருட்சம் என்றால் நான் எந்த வீட்டில் இருக்கிறேனோ அதுதான் ஆபிஸ். அங்கு 24 மணி நேரமும் பணிபுரியும் ஒருவர் இருக்கிறார் என்றால் சாட்சாத் நானேதான்.  சரி புதிய புத்தகங்கள

மூன்று தொகுப்பு நூல்களும், முன்னூறு யோசனைகளும்

அழகியசிங்கர்  சில மாதங்களுக்கு முன்னால் நான் சி சு செல்லப்பாவின் புதல்வரைச் சந்தித்தேன். அவரிடம் எழுத்து பழைய இதழ்கள் கிடைக்குமா என்று கேட்டேன்.  அவர் இல்லை என்று சொன்னார்.  இன்னொரு தகவலும் சொன்னார்.  'நானும் அப்பாவும் சேர்ந்து அப்பவே எழுத்து பழைய இதழ்களை பேப்பர் கடையில் போட்டுவிட்டோம்,' என்றார். எனக்கு அதைக் கேட்கும்போது திகைப்பாக இருந்தது.  ஆனால் வேறு வழி இல்லை.  இப்போதும் எழுத்து பழைய இதழ்களை வாங்க பலர் இருப்பார்கள்.  ஆனால் அவர்கள் எங்கே இருக்கிறார்கள், எப்போது வந்து வாங்கப் போகிறார்கள் என்பது தெரியாது.  இதேபோல் விருட்சம் பழைய இதழ்கள் என்னிடமும் அதிகமாக உள்ளன.  புத்தகக் காட்சியில் விற்க முயலாம்.  ஆனால் இன்னும் எத்தனை ஆண்டுகள் இதெல்லாம் சாத்தியம் என்பது தெரியவில்லை.  நானும் எதாவது ஒரு பேப்பர் கடையைத் தேடிப் போக வேண்டிவரும்.  விருட்சம் இதழ்கள் மட்டுமல்லாமல் தெரியாமல் அதிகமாக அச்சடித்தப் புத்தகங்களுக்கும் எதாவது வழி செய்ய வேண்டும்.  சிறுபத்திரிகையெல்லாம் கொஞ்சமாகத்தான் அச்சடிக்கிறோம். கொஞ்சம் பேர்களுக்குத்தான் அனுப்புகிறோம்.  ஆனாலும் மீந்தி விடுகின்றன.

சில கவிதைகள் சில குறிப்புகள் 2

அழகியசிங்கர்  நவீன விருட்சம் ஆரம்பித்தபோது எல்லாம் நான்தான்.  பத்திரிகையைத் தயாரிப்பது.  தயாரித்தப் பத்திரிகையை தபாலில் போடுவது.  பின் நவீன விருட்சம் சார்பில் புத்தகங்களைத் தயாரிப்பது.  தயாரித்தப் புத்தகங்களை எல்லா இடங்களுக்கும் கொண்டு செல்வது.  ஒரு சாக்கு மூட்டையில் புத்தகங்களை சுமக்க முடியாமல் சுமந்து எடுத்துக் கொண்டு போவேன் புத்தகக் காட்சிக்கு.  திரும்பவும் விற்காத புத்தகங்களை சாக்கு மூட்டையில் எடுத்துக் கொண்டு வருவேன். பெயருக்குத்தான் அப்பா பெயரைப் பயன்படுத்தினேன் தவிர அவருக்கே நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பது தெரியாது.  முன்பெல்லாம் ஒரு புத்தகம் 400 பக்கங்கள் தாண்டிவிட்டால் பயந்து விடுவேன். அப்படி பக்கங்கள் தாண்ட அனுமதிக்க மாட்டேன்.  என்ன காரணம் என்றால், புத்தகத்தை எப்படிப் பாதுகாத்து வைப்பது எப்படி விற்பது என்ற பயமிதான். இப்போதெல்லாம் அலட்சியமாக பலர் ஆயிரக்கணக்கான பக்கங்களில் புத்தகங்கள் கொண்டு வருகிறார்கள்.விற்றும் விடுகிறார்கள்.  அழகியசிங்கர் கவிதைகள் என்ற என் கவிதைத் தொகுதியைக் கொண்டு வந்தேன்.  180 கவிதைகள் வரை அத் தொகுப்பு நூலில் வந்தது.

சில கவிதைகள் சில குறிப்புகள்

அழகியசிங்கர் புத்தகக் காட்சியில் 600வது விருட்சம் அரங்கில் சில கவிதைப் புத்தகங்களை விற்பனைக்கு வைத்திருக்கிறேன்.  அவற்றிலிருந்து சில கவிதைகளை இங்கு அளிக்க விரும்புகிறேன்.   1. பழனிவேள்ளின் கஞ்சா 11 மழை பெய்யட்டும் வெயில் கொளுத்தட்டும் காற்று வீசட்டும் குளிர் வாட்டட்டும் மனம் இருக்கிறது இலைபோலக் காய்ந்து ஆற்றுப்படத்தும் சக்தி இருக்கிறது பெருக்க எல்லாமே நம்வசம் (கஞ்சா - பழனிவேள் - ஆலன் பதிப்பகம், விலை ரூ.100) 2. பேயோனின் வாழ்வின் இயக்கத்தில் மனிதனின் தனிமை துயர் அழுகிறேன் அழுவதை உணர்கிறேன் உணர்வதைப் பார்க்கிறேன் பார்ப்பதை நினைக்கிறேன் நினைப்பதை உணர்கிறேன் உணர்வதைப் பார்க்கிறேன் பார்ப்பதை நினைக்கிறேன் அழுவதை மறக்கிறேன். (வாழ்வின் இயக்கத்தில் மனிதனின் தனிமை - பேயோன் - சஹானா வெளியீடு - விலை : ரூ200) 3. பெருந்தேவியின் வாயாடிக் கவிதைகள்  உடைமை என் லேப்டாப்பில் அமர்கிறது குட்டிப் பூச்சி ஒரு கீ-யின் பாதிகூட இல்லை எல் லிருந்து ஓ வுக்கு நடக்கிறதா தத்துகிறதா அதற்காவது தெரிய

வந்த சுவடே தெரியாமல் போய்விடுகின்ற புத்தகங்கள்

அழகியசிங்கர் நவீன விருட்சம் பத்திரிகை ஆரம்பிக்கும்போதே எனக்கு ஆயிரம் பிரதிகள் அச்சிடுவது என்பது நடுக்கமாக இருக்கும்.  ஆயிரம் சந்தாதார்கள் இல்லை. ஆயிரம் பேர்கள் படிப்பவர்களைக் கண்டுபிடிப்பது வெகு கஷ்டம்.   இத்தனைக்கும் விருட்சம் மிகக் குறைவான பக்கங்களைக் கொண்ட மிகக் குறைவான விலை கொண்ட பத்திரிகை.  ஒரு கதை ஒரு கவிதை ஒரு கட்டுரை இருக்கும்.  அவ்வளவுதான் பத்திரிகை முடிந்து விடும். அதேபோல் விருட்சம் வெளியீடாகப் புத்தகங்களைக் கொண்டு வந்தபோது, எனக்கு அது புது அனுபவம்.  நண்பர்கள் நன்கொடை அளிக்க முதலில் ஒரு கவிதைத் தொகுதியைத்தான் அடித்தேன்.  500 பிரதிகள்.  அந்தக் கவிதைகள் எல்லாம் பிரமாதமாக எழுதப்பட்ட கவிதைகள். இப்போதும் உலகத் தரமான கவிதைகள். அந்தக் கவிஞர் தன்னை எதிலும் முன்னிலைப் படுத்த விரும்பாதவர்.  புத்தக விலையும் மிகக் குறைவு. ஆனால் அதை எனக்கு விளம்பரப்படுத்தத் தெரியவில்லை.  என் கவி நண்பருக்கும் விளம்பரப்படுத்தத் தெரியவில்லை.  ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யவில்லை.  பத்திரிகைகளுக்கு அனுப்பியும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.   பல புத்தகப் பிரதிகளை நான் இலவசமாகத்தான் கொடுத்தேன

அப்பா இல்லாத புத்தகக் காட்சி

அழகியசிங்கர் சரியாக அப்பா 40வது புத்தகக் காட்சி ஆரம்பிக்கும் தருணத்தில் இறந்து விட்டார்.  எப்படியோ 2016ஆம் ஆண்டைத் தாண்டிவிட்டாரே என்று நான் ஆச்சரியப்பட்டேன்.  ஒரே ஒரு முறைதான் அப்பாவை புத்தகக் காட்சிக்கு அழைத்து வந்து என் ஸ்டாலில் அமர வைத்திருக்கிறேன். எப்படி அவரை அழைத்து வந்தேன் என்பது ஞாபகத்தில் இல்லை.    ஆனால் ஒவ்வொரு புத்தகக் காட்சியின்போது அப்பா அன்று எவ்வளவு விற்றது என்று கேட்டுக்கொள்வார்.  பின் நான் விற்றத் தொகையைச் சொன்னால் ஒரு நோட்டில் எழுதி வைத்துக்கொள்வார். பின் ஒவ்வொரு நாளும் கூட்டுத் தொகையைச் சொல்லிக்கொண்டு வருவார்.  நான் இரவு பத்து மணிக்கு வந்தபோதும் எழுதி வைத்துக்கொண்டு இதுவரை எவ்வளவு என்று சொல்வார்.  இந்தப் புத்தகக் காட்சியின்போதுதான் அவர் இல்லை.  அவர் புத்தகக் காட்சி பொங்கல் எல்லாம் முடிந்து போயிருக்கலாம்.  ஏன் அவசரம் என்று தெரியவில்லை?  சீக்கிரம் தன்னை அழைத்துக்கொண்டு போனால் தேவலை என்பதுபோல் அவர் நம்புகிற கடவுளை வேண்டிக்கொள்வார் அடிக்கடி. என் பேர்த்தியின் முதல் பிறந்தநாள் முடிவதுவரை இருந்து விட்டு ஆசிர்வாதம் செய்துவிட்டுத்தான் போயிருக்கிறார். ஒரு