Skip to main content

Posts

Showing posts from February, 2017

மறக்க முடியாத சுஜாதா

மறக்க முடியாத சுஜாதா அழகியசிங்கர்                                                                                                             நேற்றுதான் சுஜாதாவின் மறைந்த நாள் என்பது தெரியாமல் போய்விட்டது.  இன்றுதான் என்று தவறாக நினைத்துவிட்டேன்.  சுஜாதா மாதிரி ஒரு எழுத்தாளர் இனி தமிழில் பிறப்பதற்கு வாய்ப்பே இல்லை. தமிழுக்கு அவர் எழுத்து புதிது.  ஆனால் பலர் இதை மறுப்பார்கள். இன்று எல்லோரும் படிக்கக் கூடிய நடையை தடங்கல் இல்லாமல் அளித்தவர். சமீபத்தில் லைப்ரரி போய் அவருடைய தூண்டில் கதைகள் என்ற புத்தகத்தை எடுத்து வந்தேன்.  படிக்க படிக்க விட முடியவில்லை. அப்படியொரு எழுத்து.  சி சு செல்ப்பாவின் எழுத்து காலத்தில்தான் வணிகப் பத்திரிகை எழுத்து சிறுபத்திரிகை எழுத்து என்று பெரிய பள்ளம் விழுந்து விட்டது. ஆனால் இப்போது அதுமாதிரியான பள்ளம் இல்லை.  பெரிய பத்திரிகைகளை தன் வழிக்குக் கொண்டு வந்த பெருமை சுஜாதாவிற்கு உண்டு.  அவர் எவ்வளவு வேகமாகப் படிக்கிறாரோ அதே வேகத்தில் எழுதக் கூடியவர்.  அறிவியல் புனை கதைகளை தமிழுக்கு முயற்சி செய்த பெருமை அவருக்கு உண்டு.  அறிவியல் கட்டுரைக

மனதுக்குப் பிடித்த கவிதைகள் 53

அழகியசிங்கர்    பார்க்கும் புத்தர் பேயோன் நேற்று புத்தர் வீட்டிற்கு வந்திருந்தார் தள்ளுவண்டிக் கடையில் வாங்கியவர் பீங்கானில் செய்த முனிபுங்கவர் தாடி வைத்தால் திருவள்ளூவர் போட்டிசெல்லி முகபாவி சுருட்டைமுடிக் காந்தார உருவி தொங்கட்டானை இழந்த காது மூக்கென்னவோ கிழக்காசியம் நகைச்சுவைத் துணுக்கொன்று சொல்லி முடித்த புன்னகை மனக்கண்ணில் எதையோ பார்க்க விரும்பி மூடிய கண்கள் கண் திறந்தால் தெரிந்துவிடுமோ என்று மூடிய கண்கள் எனக்கு புத்தரைப் பிடிக்கும் பார்த்தால் அமைதி தருகிறார் என்றெண்ணவைக்கும் ஆளுமை கிளர்ந்தெழும் அன்போடு கண்வாங்காமல் பார்க்கிறேன் அவரை பிறவியிலேயே மூடிய கண்களால் அவரும் என்னைப் பார்க்கிறார் ஆனால் பீங்கானுக்குள்ளிருந்தல்ல எங்குமில்லா ஓர் இடத்திலிருந்து அவர் பார்ப்பது எனக்குத் தெரியும் நான் பார்ப்பது அவருக்குத் தெரியாது. நன்றி : வாழ்வின் இயக்கத்தில் மனிதனின் தனிமை - பேயோன் - கவிதைகள் - பக்கங்கள் : 243 - விலை : 200 - வெளியீடு : சஹானா,  26/1 சிபிடபூள்யூடி குவார்ட்டர்ஸ், பெசண்ட் நகர், சென்னை 90

மொழி பெயர்ப்பாளருக்குக் கிடைத்த விளக்கு விருது

அழகியசிங்கர்                                                                                                                    இந்த முறை விளக்குப் பரிசு மொழிபெயர்ப்பாளர் கல்யாணராமன் அவர்களுக்குக் கிடைத்துள்ளது.  இது ஒரு மொழிபெயர்ப்பாளருக்குக் கிடைத்த கௌரவம். தமிழில் மொழிபெயர்ப்பாளர்களின் பங்கு முக்கியமானதாக கருதுகிறேன்.  பல அரிய படைப்புகள் மொழிபெயர்ப்பாளர்கள் மூலம்தான் நமக்குக் கிடைத்துள்ளன.  அதேபோல் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும், மற்ற மொழிகளுக்கும் செல்லாமல் இல்லை. ஆனால் மிகக் குறைவான படைப்புகளே அவ்வாறு மற்ற மொழிகளுக்குச் சென்றுள்ளன.  ஒரு மொழி பெயர்ப்பாளரின் விருப்பத்திற்குத்தான் ஒரு படைப்பு தேர்ந்தெடுக்கப்படுகிறது.  அந்த மொழிபெயர்ப்பாளர் விரும்பவில்லை என்றால் மொழிபெயர்ப்பு நிகழ வாய்ப்பு இல்லை.   ஒரு திறமையான மொழிபெயர்ப்பாளரை எல்லோரும் விரும்புவார்கள்.  கல்யாணராமன் அப்படிப்பட்ட ஒருவர்.   எனக்குத் தெரிந்து கே எஸ் சுப்பிரமணியன் என்ற மொழிபெயர்ப்பாளர் உள்ளார்.  இவர் ஜெயகாந்தன் நாவல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.  ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் பல படைப்புகளைக

நீங்களும் படிக்கலாம்..28

முதியோர் இல்லத்தை விட்டு பறந்த பறவைகள் அழகியசிங்கர் லட்சியப் பறவைகள் என்றபெயரில் உஷாதீபன் ஒரு நாவல் எழுதியிருக்கிறார்.  இது எத்தனைப் பேருக்குத் தெரியும்.  உண்மையில் பல புத்தகங்கள் பலருக்குத் தெரிவதில்லை.  இந்தப் புத்தகத்தை உஷாதீபன் படிப்பதற்கு எனக்கு அளித்தபோது உடனடியாகப் படிக்க நினைத்தேன். நினைத்தேன் என்பதே படிக்க முடியாமல் போகும் தடைக்கல்லாக நினைதக்கிறேன்.  இதோ இப்போது படித்து முடித்துவிட்டேன்.   ஒரு நாவலில் கதைக்களத்தை எப்படி உருவாக்குகிறார் என்பதை முதலில் கவனிக்கத் தோன்றியது.   முதியோர் இல்லத்திலிருந்து துவங்கும் இந்த நாவல் அதைப் பின்னணியாகக் கொண்டு கதையைப் பிணைத்துக்கொண்டு போகும் என்று நினைத்தேன்.  ஆனால் வேறு பாதையில் இந்த நாவல் பயணிக்கத் தொடங்கியதை அறிந்தேன்.  முதியோர் இல்லத்தைத் திறன்பட நடத்தி வரும் தேவகி, ஒரு நல்ல தரமான படத்தை எடுத்துவிட வேண்டும் என்று துடிப்பாக செயல்படும் பிரபு.  அலுவலக வாழ்க்கையில் நேர்மையாக பணிபுரிய நினைக்கிற பாலன். இவர்களைப் பின்னிப் பிணைந்த இந்த நாவல், முக்கியமாகக் கொண்டு செல்ல வேண்டிய முதியோரின் அவதி என்ற காட்சி பின்புலத்தை வெட்டி விட்டத

ஒரு பயணம்

அழகியசிங்கர் திங்கட் கிழமை (20.02.2017) காலையில் நானும் மனைவியும் மயிலாடுதுறை சென்றோம்.  காலையில் திருச்சி எக்ஸ்பிரஸில்..ஒரு புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு முடித்தேன். மதியம் இரண்டு மணிக்கு இறங்கியவுடன் மயிலாடுதுறை பஸ் ஸ்டான்ட் போக டாக்ஸிகாரர் 100 ரூபாய்க் கேட்டார்.  நாங்கள் பஸ்ஸில் பத்து ரூபாய்க்குச் சென்றோம்.  பஸ் ஸ்டான்டிலிருந்து மயூர விலாஸ் என்ற ஓட்டலுக்குச்  சென்று ரொம்ப லைட்டாக ஒரு சாப்பாடு சாப்பிட்டோம். சுவையாக இருந்தாலும் காரம் தாங்க முடியவில்லை.  தர்மபுரம் தெருவில் உள்ள வீட்டிற்கு வந்தவுடன், அப்பாடா என்று இருந்தது.  மயிலாடுதுறை இடம் பயங்கரமான அமைதியாக இருக்கும்போல் இருந்தது.  இந்த அமைதியை உணரத்தான் முடியும்.  விவரிக்க முடியாது. எதிரில் இருந்த நண்பர் குடும்பம் எங்களுக்கு எல்லாவித உதவிகளையும் செய்தது. இந்தக் காலத்தில் இப்படிப்பட்ட மனிதர்களா என்ற ஆச்சரியம் வந்து போனது. அடுத்தநாளிலிருந்து நண்பரின் டூ வீலர் கிடைத்தது.  அந்த டூ வீலர் எப்படி என்று விவரிக்கப் போவதில்லை. ரொம்ப உபயோகமாக இருந்தது.  ஆட்டோவில் உட்கார்ந்த கொஞ்ச தூர இடத்திற்குப் போனால் கூட கொள்ளை அடி
19.02.2017 ஒரு துக்க செய்தி அழகியசிங்கர் ஞானக்கூத்தன் இறந்து ஒரு வருடம் கூட முடியவில்லை.  இன்று ஒரு செய்தி.   அவருடைய மனைவி காலை இறந்து விட்டதாக..ஞாகூ இறந்த சமயத்தில் துக்கத்துடன் அவர்  மனைவி இருந்த தோற்றத்தை நான் இன்னும் மறக்கவில்லை.  சில மாதங்களாய் படுத்தப்படுக்கையாக நோய்வாய்ப்பட்டு இருந்த அவர் இறந்து விட்டார்.   அவர் புதல்வர் வீட்டிற்குப் போய்ப் பார்த்தேன்.  தூங்குவதுபோல் படுத்து இருந்தார்.  அவரை இழந்து நிற்கும் அவருடைய குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 52

அழகியசிங்கர்    தவளைக் கவிதை பிரமிள் தனக்குப் புத்தி நூறு என்றது மீன் பிடித்துக் கோர்த்தேன் ஈர்க்கில் தனக்குப் புத்தி ஆயிரம் என்றது ஆமை மல்லாத்தி ஏற்றினேன் கல்லை. üஎனக்குப் புத்தி ஒன்றேý என்றது தவளை எட்டிப் பிடித்தேன் பிடிக்குத் தப்பித் தத்தித் தப்பிப் போகுது தவளைக் கவிதை - üüநூறு புத்தரே! கோர்த்தரே! ஆயிரம் புத்தரே! மல்லாத்தரே! கல்லேத்தரே! ஒரு புத்தரே! தத்தரே! பித்தரே! நன்றி : பிரமிள் கவிதைகள் - தொகுப்பு கால சுப்ரமணியம் - லயம் வெளியீடு, பெரியூர், சத்தியமங்கலம் 698 402 - 328 பக்கங்கள் - விலை : ரூ.130 - வெளியான ஆண்டு : அக்டோபர் 1998 

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடி பதில்

அழகியசிங்கர் 1. யார் வருவார்கள் ஆட்சி அமைக்க? தெரியாது 2. அரசியல் கட்டுரைகள் நீங்கள் எழுதுவதாக இருந்தால்.. சமஸ் அவர்களுக்குப் போட்டியாக எழுத விரும்பவில்லை. 3. ஊழல் இல்லாத அரசியல்வாதிகளைப் பார்க்க முடியுமா? பார்க்க முடியாது.  ஆனால் யாருக்கும் தெரியாமல் எப்படி ஊழல் செய்வது என்பதை ஒரு சில அரசியல்வாதிகள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அது ஒரு கலை. 4. எந்த எழுத்தாளரை நீங்கள் போற்றுகிறீர்கள்? அசோகமித்திரனை.  சமீபத்தில் அவருடைய பேட்டி விகடன் தடத்தில் வந்துள்ளது.  நான் பத்திரப்படுத்தி எப்போதும் படிக்க விரும்புகிறேன். 5. எந்த எழுத்தாளரின் வேகம் உங்களை ஆச்சரியப்படுத்துகிறது? எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், சாருநிவேதிதா.. 6. எந்தப் புத்தகம் இப்போது படிக்கிறீர்கள்? சர்க்கரை நோயுடன் வாழ்வது எப்படி? என்ற புத்தகத்தைப் படிக்கிறேன். நேஷனல் புக் டிரஸ்ட் கொண்டு வந்த புத்தகம். 7. சமீபத்தில் உங்களுக்கு ஏற்பட்டுள்ள பயம் எது? அப்பா படுத்திருந்த அறை.  அங்கு போகவே என்னால் முடியவில்லை. தனியாக இரவு நேரத்தில் இருக்கும்போது எல்லா இடங்களிலும் விளக்குகளைப் போட்டுவிட்டுத்தான் தூங்குகிறேன். 8. உ

நீங்களும் படிக்கலாம்...27

நீங்களும் படிக்கலாம்... 27 நிறைவு செய்ய முடியாத கற்பனை அழகிய்சிங்கர் ரொம்பநாள் கழித்து லாசராவின் புத்தகம் ஒன்றை எடுத்துப் படித்துள்ளேன். நான் முன்பு அவர் எழுத்தைப் பற்றி மற்றவர்கள் சிலாகித்துக் கூறியதைக் கேட்டிருக்கிறேன்.  நானும் அவருடைய கட்டுரைகள் சிலவற்றைப் படித்திருக்கிறேன்.  அவருடைய சிறுகதைகளோ நாவல்களோ அவ்வளவாய்ப் படித்ததில்லை.  அதற்குக் காரணம் அலட்சியம் என்பதல்ல.  இன்னும் கேட்டால் அவருடைய புத்தகங்கள் என் அலமாரியில் இருந்தாலும், எடுத்துப் படிப்பதற்கான சந்தர்ப்பத்தை நான் உருவாக்கிக் கொள்ள வில்லை என்றுதான் தோன்றுகிறது. அபிதா என்ற இந்த நாவல் 1970ல் வாசகர் வட்டம் மூலம் வெளிவந்தது.  இந்த நாவலை லாசரா மூன்று பெண்களை மையமாக வைத்து எழுதி உள்ளார்.  சாவித்திரி, சகுந்தலா, அபிதா என்ற மூன்று பெண்கள்தான் அவர்கள்.  இந்த நாவலை லாசரா கொண்டுபோகிற விதம் அபாரம்.  எல்லா இடங்களிலும் வார்த்தை ஜாலம். வார்த்தை ஜாலம் இல்லாவிட்டால் இந்த நாவலே எழுத முடியாதுபோல் தோன்றுகிறது.  நாவல் எழுதிக்கொண்டு வருபவர் திடீர் திடீரென்று கவிதை வரிகள் எழுதி விடுகிறார்.  ஆனால் ஒரு நேர்பேச்சில் ல

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 51

அழகியசிங்கர்   சாலைக் குயில்            நோயல் ஜோசப் இருதயராஜ்  ஒரு பஸ்ஸிலிருந்து குதித்து மறு பஸ்ஸ÷க்கு ஓடிக் கொண்டிருந்தேன். ஒரே இரைச்சல்; சைலன்சர் கழட்டிய மோட்டார் சைக்கிள். ஏர் ஹார்ன்கள், போலீஸ் பொறுக்கி விசில்கள், ஹோட்டல் ரேடியோ, கேசட் லைப்ரரி ஸ்டீரியோக்கள், கைதட்டல் அழைப்புகள், சினிமா அரசியல் சேம விசாரங்கள் திடீரென ஓர் ஸ்வபரம்; குக்கூ குக்கூ சாலை ஆலக்கிளை ஒளிவில் அமர்ந்த கடவுள் குரல். ஞானம் விளித்தது சந்தியில் நானே செவியுற்றேன், கால் மனம் அற்றேன் உள்மன முடுக்குகளில், ஞாபகத்தின் ஒருவழிகளில் வெறிகள், நிராசைகள் நெரிந்து மோதி நின்றன ஒரு நொடிக்குள் அந்த ஈரசைச் சந்த எதிரொலி எங்கெங்கும். மறு நொடி சந்தடி நன்றி : மறுமொழி - கவிதைகள் - நோயல் ஜோசப் இருதயராஜ் -  முதல் பதிப்பு : ஜøலை 1997 - பக்கங்கள் : 80 - விலை : 30  - வெளியீடு : ரூபி பெலிசியா வெளியீடு, 63/64 மூன்றாம் குறுக்குத் தெரு, சுந்தர் நகர், மீட்டர் பாக்டரி ரோடு, திருச்சிராப்பள்ளி - 620 021  

தவிர்க்க வேண்டியவை

தவிர்க்க வேண்டியவை  அழகியசிங்கர் சிலசமயம் நம்மை அறியாமல் சில காகிதங்கள் கிடைக்கும். அந்தக் காகிதங்களில் எதாவது அச்சடித்திருக்கம்.  அது நமக்கு உபயோகமாக இருக்கும். அப்படி ஒரு அச்சடித்தக் காகிதம் கிடைத்தது.  சரவணா காபி அச்சடித்த 2016 காலண்டரின் பின் பக்கம் உள்ள வாசகம்தான் அது.   சில தவறான செயல்கள், தவிர்க்க வேண்டியவை என்று எழுதியிருந்தது. அதைப் படித்தவுடன் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  இது எல்லோரும் தெரிந்துகொண்டால் நல்லது என்று நினைத்தேன்.  இதோ உங்களுக்கும் படிக்க அளிக்கிறேன்.  இதில் காணப்பட்ட வாசகங்களைக் குறித்து நீங்கள் கூற விரும்புவது என்ன என்பதையும் அறிய ஆவலாக இருக்கிறேன். 1. இரவில் துணி துவைக்கக் கூடாது 2. இரவில் குப்பை வெளியில் கொட்டக்கூடாது 3. இரவில் மரத்தின் கீழ் தூங்கக்கூடாது 4. விரதம் இருக்கும் தினத்தில் அடிக்கடி நீர் அருந்தக்கூடாது.  பகலில் தூங்கக் கூடாது.  வெற்றிலை பாக்குப் போடக் கூடாது.  உணவில் கத்திரிக்காய் சேர்க்கக் கூடாது. 5. முகத்தை இடது கையால் தொடக்கூடாது 6. ஓரடி நடவேன், ஈரடி கடவேன்,    இருந்தும் உண்ணேன். படுத்து உறங்கேன்

நீங்களும் படிக்கலாம்... 26

கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு நாவல் எழுதுவது எளிதானதா? அழகியசிங்கர்  இப்போதெல்லாம் நான் புத்தகம் படிக்க ஆரம்பித்தால் ஒரு புத்தகத்தின் கால் பகுதியைப் படித்தவுடன், அப் புத்தகத்தைத் தொடர்ந்து படிக்க எனக்கு எண்ணம் தோன்றாது.  மேலும் அப் புத்தகம் என் அருகில் இல்லாமல் எங்காவது போய்விடும்.  எந்தவித நிர்ப்பந்தமும் இல்லாததால் புத்தகம் மறந்து போய்விடும்.  இன்னும் சில புத்தகங்களை அரைப் பகுதியாவது படித்திருப்பேன்.  அதுவும் முழுவதும் முடிப்பதற்குள் என்னை விட்டு எங்காவது போய்விடும்.  இதையும் மீறி வேறு சில புத்தகங்களை நான் முக்கால்வாசிப் படித்து நிறுத்தியிருப்பேன்.  முழுதாக ஒரு புத்தகத்தைப் படிப்பது என்பது என்னால் இயலாத காரியமாகவே இருக்கும்.   ஆனால் ஒரு கூட்டத்தில் பேசுவதாக இருந்தால் அல்லது ஒரு கட்டுரைத் தயாரித்து எழுத வேண்டுமென்றால் ஒரு புத்தகத்தை முழுவதுமாக நான் படித்துவிடுவேன்.  2015ஆம் ஆண்டு நான் இப்படித்தான் ஒரு இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களைப் படித்து அது குறித்து எழுத வேண்டுமென்ற முனைப்பில் இருந்து செயல்பட்டேன்.  எம் ஜி சுரேஷ் அவர்களின் தந்திர வாக்கியம் என்ற நாவல

மனதுக்குப் பிடித்த கவிதைகள் 50

அழகியசிங்கர் ஞாயிறு  ஷாஅ இன்று ஞாயிறு இல்லை ஆமாம் விடுமுறை இல்லை இது ஒரு கிழமை எதுவாக இருந்தால் என்ன அற்வுதங்கள் இடம் பெயரும் ஓர் கணம் ஒரு தாவல் ஒரு மீளல் ஒரு சஞ்சாரம் ஒரு ஓட்டம் ஒரு சொல் மொழி ஒரு வரி ஒரு அசைவு ஒரு மிடறு ஒரு கவளம் ஒரு நுகர்வு ஒரு வீச்சு ஒரு சரிவு ஒரு விலகல் ஒரு நடை ஒரு சிமிட்டல் ஒரு ஸ்பரிசம் ஒரு அயர்ச்சி ஒரு ஆசுவாசம் ஒரு ஒப்பனை ஒரு வீழ்ச்சி ஒரு புகல் ஒரு துயில் ஒரு ம் நன்றி : கண் புகா வெளி - கவிதைகள் - ஷாஅ - பக்கங்கள் : 96 - முதல் பதிப்பு : டிசம்பர் 2014 - வெளியீடு : காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், 669 கே பி சாலை, நாகர்கோவில் 629 001