Skip to main content

Posts

Showing posts from September, 2022

தீபாவளி ---

அழகியசிங்கர்  அந்த வருடம் தீபாவளி போது ஒரே மழை வெள்ளம். தண்ணீர் வீட்டிற்குள் நுழைந்து எல்லாவற்றையும்  எடுத்துக்கொண்டு போயிற்று  பாத்திரங்கள் தெருவில் மிதக்கத் தொடங்கின ஓடிப்போய் எடுத்தோம். செத்துப்போன அம்மாவின் ஞாபகமாய் த்வசம்.  தீபாவளிக்கு அடுத்தநாள். வாத்தியார்கள் நனைந்தபடி வந்து சேர்ந்தார்கள் நாங்கள் ஈரமான வேஷ்டிகளைக் கட்டிக்கொண்டு த்வசம் செய்தோம். அம்மா புகைப்படத்தைப்  பார்த்தேன். புன்னகைத்தபடி இருந்தாள் என்றுமில்லாத அன்று அலாதியாய் தெரிந்தாள் மாடியில் பிண்டத்தை எடுத்துக்கொண்டு காக்கையைக் கூப்பிட்டோம்.. காக்காய் வரவில்லை ஆனால் மழை ரூபமாய் அம்மா வந்தாள் மறக்க முடியாத தீபாவளி 13.11.2020  (வெள்ளி)

போதுமோ?/

  க. நா. சு “அறம் வெல்லும் பாவம் தோற்கும் என்னும் ஈது இயம்ப வேண்டும் தகையதோ?” உலகத்துக் கவிகளெலாம் இயம்பி உழன்று அலுத்து அரற்றியதும் இது தானோ? அவரில் அறம் என்ன, பாவம் என்ன என்று அறுதியிட்டு முடித்துத் தந்தவரும் யார் சொல்? வார்த்தைக்கு வேகம் தந்து கவிசெய்த வல்லவரே வேகம் மட்டும் போதுமோ? போதுமோ? எழுத்து - ஏப்ரல் 1959

89வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்

அழகியசிங்கர் சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 89வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை - மாலை 6.30மணிக்கு 16.09.2022 அன்று சிறப்பாக நடைப்பெற்றது . எல்லோரும் கவிதைகள் வசித்தார்கள். பாரதிதாசன் கவிதைகள் குறித்து வளவ.துரையன் அவர்கள் பத்து நிமிடங்கள் உரை நிகழ்த்தினார் காணொளியைக் கண்டு ரசியுங்கள்.

விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி எண் - 40

 அழகியசிங்கர்  சனிக்கிழமை  (10.09.2022)  மாலை 6.30 மணிக்கு இரண்டு  எழுத்தாளர்களின் கதைகளை எடுத்து ஆறு இலக்கிய நண்பர்கள் உரை நிகழ்த்தினார்கள்.   அதன் காணொளியை கண்டு ரசிக்கவும்  1. எழுத்தாளர் க்ரியா எஸ்.ராமகிருஷ்ணன் 2. எழுத்தாளர் ப்ரியா கல்யாணராமன்

88வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்

  சூம்  மூலமாக விருட்சம் பெருமையுடன்   வழங்கும் 88வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி  சிறப்பாக நடந்து முடிந்தது. வெள்ளிக்கிழமை  -  மாலை 6.30மணிக்கு   02.09.2022 அன்று சிறப்பாக நடைப்  பெற்றது. ஒவ்வொருவரும் அவரவர் கவிதைகளை வசித்து, . கூடவே கண்ணதாசன் கவிதைகளையும் வாசித்தார்கள்.. கண்ணதாசன் கவிதைகள் குறித்து வ.வே.சு பேசினார். நிகழ்ச்சியின் காணொளியைப் பார்க்கவும்.