Skip to main content

Posts

Showing posts from June, 2023
 வேண்டாம்../அழகியசிங்கர் "இவள்தான் உன் அம்மா"  என்று புகைப்படத்தைக் காட்டி பையனிடம் அறிமுகப் படுத்தினான் பத்மநாபன். பையன் மகேஷ் "அம்மாவா!" என்று ஆச்சரியப்பட்டான்.  அவன் அப்பாவின் நிழலிலேயே இதுவரை வாழ்ந்து வருகிறான். அவனுக்கு அப்பாவைத் தவிர பாட்டியைத் தெரியும்.  ஒருமுறைகூட பாட்டி அம்மாவைப் பற்றி பேசியதில்லை. "அம்மா இப்ப எங்கேப்பா?" என்று மகேஷ் கேட்டான். "அவள் நம்மை விட்டுப் போயிட்டாள்" என்றான் பத்மநாபன். மகேஷிற்கு ஒன்றும் புரியவில்லை. "செத்துப் போயிட்டாளா.." "இல்லை. என்னைப் பிடிக்கலைன்னு போயிட்டா"  இதையெல்லாம் இதுவரை பையனிடம் சொல்லாமல் மறைத்து வைத்திருந்தான்.  என்னமோ இன்று மனைவியின் புகைப் படத்தைப் பார்த்தவுடன் சொல்ல தோன்றிவிட்டது. "அம்மா இப்ப எங்கே?" "இதே சென்னையிலே இன்னொரு மூலையிலே இருக்கா.." "அப்பா உன்னைப் பிடிக்கலைன்னு அம்மா போயிட்டாளா?"  "ஆமாம்" என்றான் பத்மநாபன் சோகமாக. அதைக் கேட்க மகேஷிற்கு வருத்தமாக இருந்தது. "நீ இவ்வளவு நல்ல அப்பாவாக இருக்கும்போது அம்மா உன்னை ஏன் விட்டுட்டுப

வல்லிக்கண்ணன் திரும்பவும் வந்து விட்டார்.

 20.06.2023 (செவ்வாய்) அழகியசிங்கர் 1.12.1992 அன்று என் பிறந்தநாள்.  முப்பது ஆண்டுகளுக்கு முன்னால்வல்லிக்கண்ணனை அவர் வீட்டில் சந்தித்ததைப் பற்றிக் கூற விரும்புகிறேன். 1.12.1992 அன்று வல்லிக்கண்ணனை அவர் வீட்டில் சந்திந்தேன்.  சந்தித்த நோக்கம்.  அவரைப் பேசக் கூப்பிடலாமென்றுதான்  . நான் அப் போது விருட்சம் இலக்கியச் சந்திப்பு கூட்டம் மாதம் ஒருமுறை நடத்திக் கொண்டிருந்தேன். கூட்டம் நடத்தும் செலவு எப்போதும் ரூ.100 தான்.   அதுமாதிரியான கூட்டத்தை இப்போது நினைத்தால் என்னால் நடத்த முடியாது. எப்படி ரூ.100 செலவு என்று சொல்கிறேன்.  கூட்டம் நடத்தும் இடத்திற்கு வாடகை ரூ.50.  எல்லோருக்கும் கூட்டம் பற்றித் தெரிவிக்க நான்  தபால் கார்டுகள் வாங்குவேன்.  100 கார்டுகள் விலை ரூ.25. கூட்டத்திற்கு வருகை புரிபவருக்குக் காப்பி அல்லது டீ செலவு ரூ.25. பேச வருபவருக்கு நான் எதுவும் கொடுப்பதில்லை.  என்னிடம் எதுவும் கேட்க மாட்டார்கள். பல எழுத்தாளர்கள் கலந்துகொண்டு பேசி இருக்கிறார்கள்.  வல்லிக்கண்ணனை அவர் படித்த தமிழ் நாவல்களைப் பற்றிப் பேச அழைத்தேன். அவரைச் சந்தித்த அன்று என் பிறந்தநாள்.  அவரிடம் தெரிவித்தேன்.   சாகித்

விருட்சம் அன்புடன் அழைத்த நிகழ்ச்சி - 16.06.2023. / அழகியசிங்கர்

   16.06.2023  -  இன்று  -  வெள்ளிக்கிழமை  மாலை 6.30 மணிக்கு விருட்சம் நடத்தும் கதைகளைக்  கொண்டாடும் நிகழ்ச்சி சூம் மூலம். சிறப்பாக நடந்து முடிந்தது.  நிகழ்ச்சி எண் - 57 இரண்டு கதைஞர்களின் கதைகளை எடுத்துப் பேசினார்கள். 1. சுப்ரஜா கதைகள் பேசுபவர்கள் : பிரசன்னா - தடக்..தடக்.. பேராசிரியர் ராமச்சந்திரன்  - விரல்கள் இந்திரன் நீலன் சுரேஷ்  - காற்றில் ஒரு வண்ணத்துப் பூச்சி  2. ஆ.மாதவன் கதைகள் பேசுபவர்கள் : SRC  - தாசில்தார் மரணம் H N ஹரிஹரன் - மலையாளத்து மழை மீனாட்சி சுந்தரமூர்த்தி - இலக்கியம் பேசி நிகழ்வு :         விருட்சம் .. கதைஞர்களைக் கொண்டாடும் நிகழ்ச்சி     அன்புடன் அழைக்கிறேன் அழகியசிங்கர் 9444113205

கவிதை வாfசிக்கலாம் வாங்க.. 6 /அழகியசிங்கர்

(09.06.2023) மாலை 6.30 மணிக்கு  நாம் சூமில் கூடி கவிதை வாசித்தோம்.இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம்.இனிமேல் நமது குழுவின் தலைப்பு  'கவிதை வாசிக்கலாம் வாங்க.'  இது ஆறாவது கூட்டம்.எதுமாதிரியான கவிதையும் வாசிக்கலாம். ஒன்றுக்கும் மேலான கவிதையும் எழுதி வாசிக்கலாம். கவிதை ஒவ்வொன்றும் 10 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்தக் கூட்டத்தின் காணொளியைக் கண்டு களியுங்கள். அன்புடன் அழைக்கிறேன். அழகியசிங்கர் 9444113205 Please visit  : daily.navinavirutcham.in

விருட்சம் அன்புடன் அழைக்கும் கதைஞர்கள் நிகழ்ச்சி 02.06.2023 /அழகியசிங்கர்

  அன்று சிறப்பாக நடைபெற்றது. கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.  விருட்சம் நடத்திய கதைகளைக்  கொண்டாடும் நிகழ்ச்சியைக் காணொளி மூலம் கண்டு களியுங்கள். நிகழ்ச்சி எண் - 56 இரண்டு கதைஞர்களின் கதைகளை எடுத்துப் பேசுகிறார்கள். 1. காந்தலக்ஷ்மி  சந்திரமௌலி கதைகள் பி.ஆர்.கிரிஜா - சலுகை இராய செல்லப்பா - அவர் ரொம்ப நல்லவர் ரேவதி பாலு - சந்நியாசம் 2. பால சாண்டில்யன் கதைகள் டாக்டர் ஜெ.பாஸ்கரன் - என் பெயர் கமலா ஆர்.கே - அழகு தேவதைகள் மஞ்சு முருகவேல் - வாடாமல்லி சரஸ்வதி நிகழ்வு :          விருட்சம் .. கதைஞர்களைக் கொண்டாடும் நிகழ்ச்சி அன்புடன்  அழகியசிங்கர் 9444113205