Skip to main content

Posts

Showing posts from April, 2015

விருட்சம் இலக்கியச் சந்திப்பின் பதினோராவது கூட்டம்

அழகியசிங்கர் ஆச்சரியமாக இருக்கிறது.  11 கூட்டங்கள் நடந்து முடிந்து விட்டதை எண்ணி.  முதலில் நானும் ஆடிட்டர் கோவிந்தராஜன் அவர்களும் சேர்ந்து நடத்தும் கூட்டம், சில கூட்டங்களில் நின்று விடுமென்று நினைத்தேன். ஆனால் கூட்டம் தொடர்ந்து நடத்துவதென்பது சாத்தியமாக எனக்குத் தோன்றவில்லை.  ஒவ்வொரு கூட்டம் முடிவிலும் ஒவ்வொன்றை சரி செய்ய வேண்டுமென்று நான் நினைப்பேன்.  ஸ்ரீ அசோகமித்திரனை வைத்து முதல் கூட்டம் ஆரம்பித்தபோது, மைக் முதலில் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டுமென்று நினைத்தோம்.  உடனே வாங்கினோம்.  இப்போது மைக் மூலமாகத்தான் கூட்டத்தைத் தொடர்ந்து நடத்துகிறோம். கூட்டத்திற்கு எத்தனைப் பேர்கள் வருகிறார்கள் என்பதைப் பற்றி நாங்கள் கவலைப்பட வில்லை.  எனக்கும் ஆடிட்டருக்கும் இதில் தெளிவான பார்வை உண்டு.  ஆனால் ஒவ்வொரு மாதமும் கூட்டத்திற்காக செலவழிக்கும் நேரத்தை உபயோகமாகக் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் எனக்கு உண்டு.  அதனால் கூட்டத்தில் பேசுவதை பதிவு செய்ய வாய்ஸ் ரெக்கார்டரை நான் பயன் படுத்துவது வழுக்கம்.  சோனியின் இந்த வாய்ஸ் ரெக்கார்டர் மூலம் பல கூட்டங்களைத் துல்லியமாக பதிவு செய்

மகளிர் மட்டும் !

SMALL STORY  ஜெ.பாஸ்கரன் ‘சே, என்ன டிராஃபிக்; மூணு கிலோமீட்டர் ஊர்ந்து வரதுக்கு மூணு மணி நேரம்’ சலித்துக் கொண்டே வந்தமர்ந்தாள் சுலோசனா – மேல்நாட்டு பெர்ஃப்யூம் அவளைச் சுற்றி மூன்றடிக்கு விரவியிருந்தது ! அன்று அவள் பள்ளித் தோழி காஞ்சனாவின் மகளுக்குத் திருமணம். இது போன்ற குடும்ப நிகழ்ச்சிகளில் பள்ளித் தோழிகள் சந்தித்துப் பழங்கதைகளையும் புதுச் சுவையோடு பகிர்ந்து கொள்வது அவர்களது பழக்கம் ! காஞ்சனாவின் கணவர் பெரிய தொழிலதிபர் – டெல்லியில் சென்ட்ரல் மினிஸ்டர் வரைக்கும் நல்ல செல்வாக்கு. அவர்களது ஒரே பெண் அனன்யாவுக்கு, ஊரையே கூட்டித் திருமணம். மண்டபம் நிரம்பி வழிந்தது. எங்கு பார்த்தாலும் பட்டுப் புடவை சர சரக்க, பெரிய்ய ஜன்னலில் இரண்டு நூல் கட்டின முதுகு தெரிய, வைரம் பள பளக்க,நுனி நாக்கு வார்த்தையும், பளிச்சென்ற பற்கள் உதட்டுச் சாயத்தில் படாத சிரிப்புமாய் மண்டபமே களை கட்டியிருந்தது ! ‘ காஞ்சனாவுக்குப் பெரிய மனசுடீ – பொண்ணுக்கு  நூறு பவுன் நகையும், பதினைந்து கிலோ வெள்ளியும்னு பிரமாதமா கல்யாணம் பண்றா ‘என்றாள் சுலோசனா. ‘ ஆமாமாம், பட்சண சீரெல்லாம் கூட நூற்றி ஒண்ணு,

தப்பித்தால் போதுமென..

. ஷைலஜா கிருஷ்ணராஜபுரம் நெருங்க நெருங்க எனக்கு வயிற்றில் புளியைக்கரைக்க ஆரம்பித்தது.   சின்ன  உதறலுடன் டாய்லெட் பக்கம் நழுவினேன். ரயில் அந்த ஸ்டெஷனை விட்டுப்புறப்படுகிறவரை டாய்லட் கண்ணாடியில் வழுக்கைத் தலையை விரல்களால் வாரிக்கொண்டு, பல் வரிசைஅயை அழகு பார்த்துக்கொண்டு , அழகு காட்டிக்கோண்டு இருந்தேன்.   ‘அம்மாடா தப்பினோம்’ என்று வெளியே வந்தால்....     “ஹலோ ஸார்!” ரதனசாமி நிற்கிறார்!   அசடு வழிகிறது எனக்கு.   யாரிடமிருந்து தப்பவேண்டும் என்று நினைத்தேனோ அவரிடமே மாட்டிக்கொண்டுவிட்டேன்.   “ஸார்! வண்டி இன்னிக்கு மூணு நிமிஷம் லேட். நல்ல காலம் முப்பது நிமிஷம் லேட்டாக்காமல் விட்டானே! அதுகூடப்பெரிதில்லை வண்டி தண்டவாளத்துமேல போகிற வரை புண்ணியம். அதெல்லாம் லால்பகதூரோட போச்சு. என்னைக்கேட்டால் இந்த ரயில்வே போர்டு, ரயில்வே மந்திரி எல்லாமே.....”   ரத்னசாமி ஆரம்பித்துவிட்டார். இனிமேல் சிடி ஸ்டேஷன் போகிறவரைக்கும் மனுஷர் நிறுத்தமாட்டார். பேச்சு பேச்சு வாய் ஓயாமல் பேச்சு.   “கையில என்ன ஹிண்டுவா?”’   “ஆமா  படிங்கோ” என் பேப்பரை நீட்டினேன். ஆளைவிட்டால்  போதும

எனக்குத் தெரிந்த ஜெயகாந்தன்........

அழகியசிங்கர்  இன்றைய செய்தித்தாளில் (09.04.2015) பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் தனது 80வது வயதில் மரணமடைந்ததை வெளியிட்டிருந்தார்கள்.   கடந்த சில ஆண்டுகளாகவே ஜெயகாந்தன் உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்.  பல தமிழ் எழுத்தாளர்களுக்கு அவர் முன் மாதிரியாகச் செயல்பட்டவர்.  தமிழ் எழுத்தாளர்கள் பலரும் வேஷ்டிக் கட்டிக்கொண்டுதான் ஆனந்தவிகடன் பத்திரிகை அலுவலகத்திற்குப் படை எடுப்பார்களாம்.  அப்போது பேன்ட் ஷர்ட் போட்டுக்கொண்டு மிடுக்காக வருபவர் ஜெயகாந்தன் என்று கூற  கேள்விப்பட்டிருக்கிறேன்.   1970 ஆண்டு வாக்கில் கிருத்துவக் கல்லூரியில்  நான் படித்தக் காலத்தில் ஒருமுறை பேச ஜெயகாந்தான் வந்திருந்தார்.  அன்று மாணவர்களைப் பார்த்து கோபமாக கூட்டத்தில் பேசினார்.  மாணவர்களும் அவரை எதிர்த்துப் பேசினார்கள்.  சமாதானம் செய்யவே முடியாது போலிருந்தது.  ரொம்பவும் துணிச்சல்காரர்.  அந்தச் சமயத்தில் அவர் பேச்சு எனக்குப் பிடித்திருந்தது.  ஒருமுறை பரங்கிமலையில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் அவர் பேச வந்திருந்தார்.  அவர் பேசுவதைக் கேட்க நானும் சென்றிருந்தேன்.       அன்று அவர் வைத்திருந்த

கசடதபற பிப்ரவரி 1971 - 5வது இதழ்

சி சத்திய மூர்த்தி நான் எடுத்த நாள் தொட்டு எத்தனையோ ஆண்டாக இந்த உடற்பாரம் இறக்காது தூக்கிவரும் நான் ஓர் üவெயிற் லிப்ரிங் சாம்பியன்ý விடலைகள் பாலகுமாரன் துள்ளித் துவண்டு தென்றல் கடக்க விஸில் அடித்தன மூங்கில் மரங்கள்

விருட்சம் இலக்கியச் சந்திப்பின் பத்தாவது கூட்டம்

அழகியசிங்கர் விருட்சம் இலக்கியச் சந்திப்பு பத்தாவது கூட்டம் சிறப்பாக 28ஆம் தேதிந நடந்தது.  கூட்டத்தின் சிறப்புப் பேச்சாளர் ரவி ஷங்கர். முதலில் இக் கூட்டம் எல்லோரும் பேசுகிற உரையாடலாகத் தொடர்ந்தது.  இனிமேல் கூட்டம் நடத்த இதுதான் உகந்த வழி என்று தோன்றுகிறது.  அதாவது பேசுகிறவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் எந்தவித இடைவெளியும் கிடையாது.  எல்லோரும் ஒரு தளத்தில் அமர்ந்து கொண்டு பேச வேண்டும். கூட்டத்தில் ஒருவரை முக்கியமானவராகத் தேர்ந்தெடுக்கப் படவேண்டும். ரவி ஷங்கரை மூத்த எழுத்தாளர் அசோகமித்திரன் அறிமுகம் செய்து வைத்தார்.  பிரக்ஞை முதல் இதழ் அக்டோபர் மாதம் 1974 ஆம் ஆண்டு வெளிவந்தது.   கசடதபற என்ற பத்திரிகை ஆரம்பித்த நா கிருஷ்ணமூர்த்திக்கும்ட, பிரக்ஞை ரவி ஷங்கருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.  இருவரும் அவர்கள் கொண்டு வந்த பத்திரிகையின் ஒரு பிரதியைக் கூட வைத்திருக்கவில்லை.  இது ஒரு சோகம்.   மாம்பலம் சாரதா ஸ்டோரில் (அப்பளம், வடாம் விற்கிற கடையில்) நான் பிரக்ஞையின் கடைசி இதழை வாங்கியதாக ஞாபகம். 1975ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன்.  அப்போது அந்த இதழ் எனக்குப் புரியவில்லை.  ஆனால

புத்தக விமர்சனம் 3

அழகியசிங்கர் 1999 ஆம் ஆண்டு மே மாதம் ஆனந்தவிகடன் பிரசுரம், üஉச்சி முதல் உள்ளங்கால் வரைý என்ற புத்தகத்தை முதன் முறையாகக் கொண்டு வந்தது.  அப் புத்தகத்தில் பல அரிய தகவல்களை பல மருத்துவர்கள் கேள்வி பதில் விதமாக வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்கள்.  எளிய முறையில் மருத்துவத்தைப் பற்றி அறிந்து கொள்கிற அற்புதமான புத்தகம் அது.  ஆனந்தவிகடன்தான் இது மாதிரியான மருத்துவப் புத்தகங்களை பிரபலமாக்கியது என்று தோன்றுகிறது.  அதன் பின் இதைப்போல் மருத்துவப் புத்தகங்களை பல மருத்துவர்கள் எழுதிக் குவித்துள்ளார்கள்.  அப் புத்தகங்களைப் பார்க்கும்போது, ஆனந்தவிகடன் மாதிரி முயற்சியா என்பது ரியவில்லை. இப்போதெல்லாம் மருத்துவத்திற்கான தனி இதழ்களே வர ஆரம்பித்துவிட்டன.  அதை மட்டும் வாசிக்கும் வாசகர்களும் நம்மிடையே அதிகரித்துள்ளார்கள்.   மருத்துவத்திற்கென்று புத்தகங்கள், பத்திரிகைகள் வருவதுபோல் இசைக்கென்று, விளையாட்டிற்கென்று பல புத்தகங்கள் வரத் தொடங்கி விட்டன.  இந்த வரிசையில் டாக்டர் ஜெ பாஸ்கரனின் மூன்று புத்தகங்களைக் காண நேர்ந்தது.  அவருடைய மூன்றாவது புத்தகம்தான் 'தலைவலி'. 

ஆகாயம் தாண்டி வா..

 வித்யாசாகர் ஆ டிவா ஓடிவா ஆகாயம் தாண்டி வா அழகுமயிலப் போல நீயும் தோகை விரித் தாடிவா, கிழங்கு வத்தல் தின்னலாம் கண்ணாமூச்சி ஆடலாம் குனிந்து நிமிர்ந்து குதிக்கலாம் குச்சி தள்ளி ஓடலாம்! ஆடிவா ஓடிவா ஆகாயம் தாண்டி வா நாலுபாய்ச்சல் குதிரைப்போல துள்ளித் துள்ளி ஓடி வா, நொண்டி காலு ஆடலாம் நிலாமேல ஏறலாம் மூச்சடக்கி ஓடலாம் முழுக்கடலைத் தாண்டலாம்! ஆடிவா ஓடிவா ஆகாயம் தாண்டி வா ஆண்டக் கதையைப் பாடி வா பழையவீர(ம்) ஊட்ட வா,