Skip to main content

Posts

Showing posts from January, 2019

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 102

அழகியசிங்கர்   நீல. பத்மநாபன்  துளஸி புதுவீடு கட்டி மனைவி மக்களுடன் குடிவந்து சில நாட்களில் முற்றத்து சிமெண்ட் தரையில் பூ ஜாடியொன்று வாங்கி வந்து உன்னை நட்டு நீர் வார்த்து ஆசையுடன் வளர்த்தத் துவங்கினாள் வீட்டுக்காரி. பெரிய ஈடுபாடில்லாதிருந்தும் கொண்டவள் ஆசைக்கு குறுக்கே நிற்கவில்லை... காலைக் குளியலின் புத்துணர்ச்சியில் பக்திப்பரவசத்துடன் முற்றத்தில் வந்து நீயிருக்கும் ஜாடியிலும் உன் இலைகளிலும் குங்கும பொட்டிட்டு இறை துதிகள் ஜபித்தவாறு கண்மூடி நின்று உன்னையும் எதிர் திசையிலிருந்து உன் மீது இளம் கதிர்களை வாரி இறைக்கும் பால சூரியனையும் நமஸ்கரிக்கும் பொழுதுகள்... விசேஷ தினங்களில் ஊதுவத்திப்புகையாலும் கற்பூர ஆரவத்தியாலும் சேவை... இப்போ சில நாட்களாக மேல் சன் ஷேடில் குடியேறிய புறாக்களின் கும்மாளம் கும்பிட்டு நிற்பவள் மீது அடிக்கடி நிகழ்ந்த எச்சாபிஷேகத்தில் வெகுண்டு கிழக்கில் உதிக்கும் சூரியன் மீதா தலைக்கு மேலே தருணம் பார்த்து நிற்கும் புறாக்களின் மீதா கவனம் செலுத்துவது என தத்தளிக்கும் மனதில் உன்னை பிரதிஷ்டிக்கும் அப்பியாசம் தெரியாது உனை சேவிப்பதலிருந்த

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் ...37

அழகியசிங்கர்   இந்த ஆண்டு புத்தகக் காட்சியில் வாங்கிக் குவித்தப் புத்தகங்கள் போன ஆண்டை விட அதிகம் என்றுதான் தோன்றுகிறது.  எத்தனைப் புத்தகங்கள் என்று எண்ணவில்லை.  ஒவ்வொரு நாளும் எண்ணிப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக்கொள்வேன்.  நினைப்பதோடு சரி.  எண்ணியதில்லை. இந்த முறை தேசாந்திரி பதிப்பகத்திலிருந்து எஸ் ராமகிருஷ்ணனின் ஐந்து புத்தகங்கள் வாங்கினேன்.  1. சிவப்பு மச்சம் 2. பெயரற்ற நட்சத்திரங்கள் 3. கதைகள் சொல்லும் பாதை 4. ரயில் நிலையங்களின் தோழமை 5. பறந்து திரியும் ஆடு. பறந்து திரியும் ஆடு என்ற தலைப்பில் சிறார்களுக்கு ஒரு நாவல் எழுதி உள்ளார்.  உள்ளே ஓவியங்களுடன் சிறப்பாக எழுதப் பட்டிருக்கும் நூலாக எனக்குத் தோன்றுகிறது.  இந்தப் புத்தகத்தை எடுத்தால் படிக்காமல் இருக்க முடியாது.  மேலும் இது சிறார்களுக்கு மட்டுமல்ல, பெரியவர்களும் வாசிக்க வேண்டிய புத்தகமாக நான் கருதுகிறேன். சிறார்களுக்கு ஒரு புத்தகம் எழுதுவது அவ்வளவு சுலபமாக இருக்குமா என்பது தெரியவில்லை.  ரொம்ப ரொம்ப புரியும்படி கதைகள் எழுத வேண்டும். பள்ளிக்கூடம் படித்தக் காலத்தில் நான் ரசித்தப் புத்தகம். தென்

துளி : 26 - அஜித்தின் விசுவாசம்

அழகியசிங்கர் ரஜினியின் பேட்டையைப் பார்த்தபிறகு, அஜித்தின்     விசுவாசம் படத்தையும் பார்க்க வேண்டுமென்று நினைத்தோம்.  என் வீட்டிலிருந்து பக்கத்திலிருந்தது உதயம் தியேட்டர் காம்பளெக்ஸ்.  6 மணிக்குக் கிளம்பிப் போனோம்.  பேட்டைக்கும் விசுவாசத்திற்குத்தான் கூட்டம்.  இன்னும் இரண்டு படங்களுக்குக் கூட்டம் வரவில்லை.  ஒரு படம் பிரபுதேவா நடித்த சார்லி சாப்பிளின் 2.  இன்னொரு படம் டப்பிங் படம்.  இந்த இரண்டு படங்களுக்கும் யாரும் பார்க்க வரவல்லை என்பதால் படக் காட்சி ரத்து.   டூ வீலரை ஸ்டாண்டில் வைக்கும்போது, üஎன்னப்பா இப்படி காலி அடிக்குது,ý என்று வினவினேன்.  அவன் சொன்னான் : ýýஞாயிற்றுக்கிழமை வரை கூட்டம் சார், 20 நாள் ஓடி விட்டது,ýý என்றான்.  படம் பார்த்து திரும்பி வரும்போது இன்னும் காலியாக இருந்தது தியேட்டர்.

துளி : 25 - கோமலின் தண்ணீர் தண்ணீர.....

அழகியசிங்கர் நேற்று ஆர் ஆர்  சபாவில் மாலை 7 மணி அளவில் கோமலின்  தண்ணீர், தண்ணீர் நாடகத்தை மனைவியுடன் பார்த்தேன்.   அழுத்தமான கருத்துக்கள் நிறைந்த நாடகம்.  முதலில் இதில் நடித்தவர்கள் மனம் ஒன்றிச் சிறப்பாக நடித்தார்கள்.  தாரணி கோமல் இயக்கத்தில் இந்த நாடகம் தயாரித்துள்ளார்கள். ஏற்கனவே புகழ்பெற்ற நாடகம்.  சினிமாப்படமாகக் கூட வந்துள்ளது. திரும்பவும் இந்த நாடகத்தைப் பார்ப்பதற்கு அரங்கம் முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்தது.  கொஞ்சம் அதிகப்படியான வசனங்கள் இந்த நாடகத்தில் இருப்பதாக தோன்றியது.  நம் வாழ்க்கையில் எல்லாவற்றையும் கத்தி சொன்னால்தான் நமக்குப் புரியும்போல் தோன்றுகிறது.  இது ஒரு கிராமத்தில் மக்கள் அவதிப்படும் பகுதியை மட்டும் காட்சிப் படுத்தப்படுகிறது.   ஏன் அங்குத் தண்ணீர் கொண்டு வர முடியவில்லை என்ற இன்னொரு பகுதியையும் காட்டினால் இந்த நாடகத்தின் இன்னொரு தன்மை வெளிப்படும்.   அரசாகத்தையும் அதிகாரிகளையும் வில்லனாகக் காட்டுவதை ஓரளவுதான் ஏற்றுக்கொள்ள முடியும். கோமலின் 'பறந்து போன பக்கங்கள்' புத்தகம் விற்பனைக்கு ஆர் ஆர் சபா வாசலில் வைக்கப்பட்டிருந்தது.  அந்தப

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 101

அழகியசிங்கர்   101)  பசுவும் கன்றும் கவிமணி சி தேசிக விநாயகம் பிள்ளை தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு - அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக் குட்டி அம்மா என்குது வெள்ளைப் பசு -உடன் அண்டையினல் ஓடுது கன்றுக் குட்டி நாவால் நக்குது வெள்ளைப் பசு - பாலை நன்றாய்க் குடிக்குது கன்றுக் குட்டி முத்தம் கொடுக்குது வெள்ளைப் பசு - மடி முட்டிக் குடிக்குது கன்றுக் குட்டி நன்றி : மலரும் மாலையும் - கவிமணி சி தேசிக விநாயகம் பிள்ளை - பூம்புகார் பதிப்பகம், 127 பிரகாசம் சாலை, சென்னை 600 108 - தொலை பேசி : 044-25267543 - பக்கம் : 286- விலை : 120

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் ...36

அழகியசிங்கர்  புத்தகக் காட்சியில் நான் இருந்த பகுதியிலேயே எதிர் வெளியீடும் இருந்தது.  எதிர் வெளியீடு கொண்டு வரப் போகும் ஒரு புத்தகத்தைப் பற்றி அறிவிப்பு முன்னதாகவே வந்திருந்தது.   அந்தப் புத்தகத்தின் பெயர் கசார்களின் அகராதி. மிலோராத் பாவிச் எழுதிய புத்தகம்.  ஆண் பிரதி, பெண் பிரதி என்று இரண்டு பாகங்கள் கொண்ட புத்தகம்.   இந்தப் புத்தகம் வந்துவிட்டதா வந்துவிட்டதா என்று பலமுறை போய் கேட்பேன்.   எதிர் வெளியீட்டில் பெரும்பாலான புத்தகங்கள் மொழிபெயர்ப்புப் புத்தகங்கள்.  பார்க்கும்போது ஆச்சரியமாக இருந்தது.  இன்னும் சில புத்தகங்களை வாங்கலாம் என்று நினைத்தாலும் மொழிபெயர்ப்பாளரின் பெயரைப் பார்த்து வாங்க வேண்டாமென்று தோன்றியது. மொழி பெயர்ப்பைப் பொறுத்தவரை க நா சு கொள்கையை நான் முழுவதும் விரும்புகிறேன்.  க நா சு ஒரு புத்தகத்தை மொழி பெயர்க்கும் முன் ஒரு முறை படிப்பார் பின் அப்படியே மொழி பெயர்த்து விடுவார்.  மொழிபெயர்க்கப்படும் புத்தகத்தின் ஆன்மாவைக் கொண்டு வருவதுதான் அவருடைய நோக்கமாக இருக்கும், கசார்களின் அகராதி என்ற இரு பகுதிகள் கொண்ட புத்தகத்தை மொழி பெயர்த்தவர் ஸ்ரீதர் ரங்கராஜ்

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் ...35

அழகியசிங்கர்  நான் வாங்கிக்கொண்டு வந்த புத்தகங்களை ஒரு மர ஷெல்பில் அடுக்கி வைத்துவிட்டேன்.  அது போதவில்லை.  இன்னும் சில புத்தகங்களையும் அடுக்கி வைக்கவேண்டும்.  புத்தகங்களை முறைத்துப் பார்த்தேன்.  பதிலுக்குப் புத்தகங்கள் என்னை முறைந்தன. யோசித்துப் பார்த்தேன்.  ஏன் இவ்வளவு புத்தகங்கள் வாங்கினோம் என்று.  இது ஒரு விதத்தில் சரி, ஆனால் இன்னொரு விதத்தில் சரி இல்லை என்று தோன்றியது. காலச்சுவடு பதிப்பகம் கொண்டு வந்த ஞானக்கூத்தன் கவிதைகள் என்ற புத்தகத்தை வாங்கினேன்.  போன ஆண்டு புத்தகக் காட்சியின் போது கல்யாண்ஜியின் முழுத் தொகுதி வாங்கினேன்.   அதே போல் உயிர்மை பதிப்பகம் வெளியிட்ட தேவதச்சனின் ஒரு மர்ம நபர், வைதீஸ்வரின் மனக்குருவி, பிரமிள் கவிதைகள், சுகந்தி சுப்ரமணியனின் படைப்புகள் என்று முழுத் தொகுதிகளாக சேகரித்து வைத்துள்ளேன்.  படிக்கும்போது கவிதைகள் அலாதியாகத் தென்படுகின்றன.  அதனால்தான் 300 கவிதைகள் கொண்ட என் கவிதைகளையும் அழகியசிங்கர் கவிதைகள்  என்ற பெயரில் புத்தகமாகக் கொண்டு வந்து விட்டேன். நிம்மதி. ஞானக்கூத்தன் கவிதைகள் தொகுப்பில், கவிதை எழுத என்ற பெயரில் ஒரு கவிதை எ

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் ...34

அழகியசிங்கர்  ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் காட்சியின் போது ராமகிருஷ்ணனைச் சந்திக்காமல் இருக்க மாட்டேன்.  உண்மையில் அங்குதான் அவரைச் சந்திக்கும் வழக்கம் உள்ளவன்.   அப்படிச் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் என்னன்ன புத்தகங்கள் வாங்கலாம் என்று சொல்லிக்கொண்டிருப்பார். ஒருமுறை பெரிய விக்கிரமாதித்தியன் கதையை வாங்கும்படி சொன்னார்.  இன்னொரு முறை பம்மல் சம்பந்த முதலியாரின் படைப்புகளின் முழு செட்டு கிடைக்கிறது வாங்குங்கள் என்றார்.  இப்படி எத்தனையோ புத்தகங்களை வாங்கும்படி கூறிக்கொண்டிருப்பார்.   எனக்குத் தெரிந்து வேறு சில எழுத்தாளர்கள் என்ன புத்தகங்கள் படிக்கிறார்கள் என்பதை வெளிப்படையாகச் சொல்ல மாட்டார்கள். அமெரிக்கன் லைப்ரரிக்கு பிரமிளுடன் போகும்போது அவர் என்னன்ன புத்தகங்கள் படிக்க வேண்டுமென்று எடுத்துக்கொடுப்பார்.  ஒரு முறை ஒரு புத்தகத்தை எடுத்து, 'இது நம்ம ஊர் ஜெயகாந்தன் மாதிரி எழுதுவார்.  படிக்க வேண்டாம்,' என்று சொன்னது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. இன்னொரு இலக்கிய நண்பர், 'எம் வி வெங்கட்ராமின்  காதுகள் என்ற நாவலையும், கோபிகிருஷ்ணனின் உள்ளேயிருந்து ஒரு குரல்

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் ...33

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் ...33 அழகியசிங்கர்  இன்னும் புத்தகக் காட்சி முடிந்துவிட வில்லை.  புத்தகக் காட்சி 4ஆம் தேதியிலிருந்து ஆரம்பித்து 20ஆம் தேதி முடிந்து விட்டது.  ஆனால் நான் இன்னும் முடிக்கவில்லை.  புத்தகக் காட்சி ஆரம்பிக்கும்போது இரும்பு அலமாரிகளில் உள்ள எல்லாப் புத்தகங்களையும் சாக்கில் கட்டி வைத்து விடுவேன்.  பின் இரும்பு அலமாரிகளை புத்தகக் காட்சி எடுத்துக்கொண்டு போவது வழக்கம்.  புத்தகக் காட்சி முடிந்தவுடன் திரும்பவும் இரும்பு அலமாரிகளை எடுத்துக்கொண்டு வந்து விடுவேன். இரும்பு அலமாரியில் உள்ள ஒரு தட்டில் உள்ள புத்தகங்கள் ஒரு சாக்குப் பை நிரம்பும் அளவிற்கு இருக்கும்.  இது மாதிரி 30அல்லது 40 சாக்கு மூட்டைகளில் புத்தகங்களை வைத்திருப்பேன்.  ஒவ்வொரு தட்டிலும் புத்தகங்களை வைப்பது எனக்குப் பிடித்திருக்கிறது.  இரண்டு நாட்களாக இதுதான் என் வேலை.  ஒவ்வொரு இரும்பு அலமாரியையும் நகர்த்தி வைத்து புத்தகங்களை அடுக்குவது. கடந்த ஆண்டைப் போல் இந்த ஆண்டும் புத்தகங்கள் என்னைக் கைவிடவில்லை.   இந்தப் புத்தகக் காட்சியில் இரண்டு படைப்பாளிகள் என்னைக் கௌரவம் செய்தார்கள்.  

தாஜ் என்ற நண்பர்

அழகியசிங்கர் சீர்காழியிலிருந்து தாஜ் என்ற நண்பர் போன் செய்வார்.  கவிதைகளை அனுப்புவார்.  நவீன விருட்சம் பற்றி விஜாரிப்பார்.  அவருடைய கவிதைகளை நான் விருட்சத்தில் பிரசுரம் செய்திருக்கிறேன்.  பின்னால் அவர் வெளிநாட்டில் பணிபுரிய சென்றுவிட்டார். நான் சீர்காழியில் பணிபுரியச் சென்றபோது, என்னைப்பார்க்க அவர் அலுவலகத்திற்கு வந்திருக்கிறார்.  இரண்டு மூன்று முறைகள் அவரைச் சந்தித்திருக்கிறேன்.  ஒருமுறை சீனிவாசன் நடராஜனுடன் சந்தித்தேன்.  இன்னொரு முறை அபுதீன் என்ற எழுத்தாளரை அறிமுகப்படுத்தினார்.  தாஜ் மென்மையானவர்.  அவர் வீட்டிற்கும் சென்றிருக்கிறேன். அலுவலகத்தில் அதிக நேரம் செலவு செய்யும்படி இருந்ததால் தாஜ் உடன் இலக்கியக் கூட்டங்களை நடத்த முடியவில்லை. ஒரு முறை அவரைப் பார்த்துக் கேட்டேன் : "என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?" என்று. "ரியல் எஸ்டேட் பிஸினஸ் செய்து கொண்டிருக்கிறேன்," என்றார். எனக்கு சீர்காழியில் என்ன ரியல் எஸ்டேட் செய்ய முடியும் என்று தோன்றியது.  சும்மா இருக்கிறேன் என்று சொல்வதற்குப் பதில் அப்படி சொன்னாரோ என்று தோன்றியது. சமீபத்தில் என் வீட

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் ...32

அழகியசிங்கர்  நண்பர் அரவிந்த் சுவாமிநாதன் சென்ற நூற்றாண்டின் சிறுகதைகள் என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தைத்  தொகுத்திருந்தார். அப் புத்தகத்தைக் குறித்து புத்தகக் காட்சியில் அவர் பேசியதை ஒளிபரப்பு செய்கிறேன். இது குறித்து டாக்டர் பாஸ்கரனும் பேசியிருக்கிறார்.  

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் ...31

அழகியசிங்கர்   நேற்று புத்தகக் காட்சி முடிந்து வீட்டிற்குக் கிளம்பும்போது மணி 12 ஆகிவிட்டது.  பைக் வைத்திருந்த இடத்திற்குப் போகும் போது ஒரே இருட்டு.  நாய்கள் குலைத்துக் கொண்டிருந்தன.  நாயைக் கண்டால் எனக்குச் சற்று பயம்.  எங்கே கடித்து விடுமோ என்ற பயம்தான்.  அதனால் வண்டியை அப்படியே வைத்துவிட்டு ஆட்டோவில் போய்விடலாமென்று நினைத்தேன். ஆனால் சிலர் பின்னால் வண்டிகளை எடுக்க வந்து கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்து, 'நாய்,' என்றேன்.  'அதெல்லாம் ஒன்றும் பண்ணாது வாருங்கள்,'  என்றார்கள்.   'நான் வண்டியை எடுக்கும்வரை நீங்கள் இருக்கணும்,' என்றேன்.  அவர்கள் சரி என்றார்கள்.  இருட்டில் அவர்கள் முகங்கள் கூடத் தெரியவில்லை.  என் முகம் கூட அவர்களுக்குத் தெரிந்திருக்காது.  குரல்தான் எங்களை இணைத்தது. எனக்குத்தெரியும் புத்தகக் காட்சியின் கடைசி நாள் டென்ஷனாக இருக்கும்.  வீட்டிற்கு சீக்கிரம்போக முடியாது என்று.  கொஞ்சம் பணம், செக் புக் என்று எல்லாம் எடுத்துக்கொண்டு போனேன்.  என் ஜோல்னாப் பையை மாட்டிக்கொண்டே திரிந்தேன். பெண் வீட்டிலிருந்து வந்ததால் சாப்பிடத்

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் ...30

அழகியசிங்கர்  நண்பர் சத்யா ஜி பி நேற்று புத்தகக் காட்சியில் அசோகமித்திரனின் அந்தரங்கமானதொரு தொகுப்பைப் பற்றி பேசினார்.  அதை இங்கு ஒளி படுத்துகிறேன். 

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் ...28

அழகியசிங்கர்  பறந்து போன பக்கங்கள் என்ற தலைப்பில் கோமல் சுவாமிநாதன் அவர்கள் சுபமங்களாவில் தன் வாழ்க்கையில் நடந்த சுவையான நிகழ்ச்சிகளைத் தொகுத்துக் கட்டுரையாக எழுதினார்.  அது இப்போது புத்தகமாக வெளிவந்துள்ளது.  குவிகம் வெளியீடு.  விருட்சம் அரங்கில் இந்திரன் அவர்கள் கோமலைப் பற்றி பேசிய ஒளிப்பதிவை இங்கு வெளியிடுகிறேன்.
அழகியசிங்கர்  நண்பர் மந்திரமூர்த்தி அவர்கள் க.நா.சு வின் உலக இலக்கியம் என்ற புத்தகத்தைப் பற்றி நேற்று அறிமுகம் செய்தார்.  அதை வெளியிடுகிறேன்.

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் ...27

அழகியசிங்கர்  நாளையுடன் இந்தப் புத்தகக் காட்சி முடிவடைந்து விடுகிறது. ம்ம்....நான் வாங்கியப் புத்தகங்களைப் பற்றியும்.. நன்கொடையாகக் கிடைத்தப் புத்தகங்களைப் பற்றியும் இன்னும் சொல்ல ஆரம்பிக்கவில்லை. ம்ம்... உண்மையில் அரங்கில் விற்பதற்காக வைத்திருக்கும் புத்தகங்களின் சிலவற்றை நானே வாங்கி விடுகிறேன். ம்ம்.  பின் போய் பல இடங்களில் புத்தகங்களையும் வாங்கி வருகிறேன். ம்ம்.. அரங்கத்தில் விற்பதற்காக வாங்கிக்கொண்டு வந்த புத்தகங்களைப் பற்றி இன்றும் சொல்ல விரும்புகிறேன்.  நான் சுப்பிரமண்ய ராஜ÷  பற்றி விருட்சத்தில் தேவகோட்டை வா முர்த்தியின் கட்டுரையைப் பிரசுரம் செய்திருந்தேன்..அதனால் சில பிரதிகள் சுப்ரமண்ய ராஜ÷ கதைகள் விற்றன.   ம்ம்.. 'யாவரும் பப்ளிஷர்ஸ்' என்ற பதிப்பகம் பல இளம் படைப்பாளிகளின் படைப்புகளை வெளியிடுகின்றன.  அவர்கள் பதிப்பகத்திலிருந்து சில புத்தகங்களை விற்க வைத்திருக்கிறேன். ம்ம்.. மணல் பூத்த காடு என்ற நாவல் முஹம்மது யூசுஃப் என்பவரின் புத்தகம். 448 பக்கங்கள் கொண்ட புத்தகம் விலை ரூ.500. தூத்துக்குடியைச் சேர்ந்த முஹம்மது யூசுஃப் வளைகுடா நாடுகளில் 14 ஆண்டுகள்

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் ...26

அழகியசிங்கர்  வளவ துரையனின் கவிதைத் தொகுதியின் பெயர் üஅப்பாவின் நாற்காலி.ý   இந்தக் கவிதைத் தொகுதியைப் பற்றி ஆர் கே ராமனாதன் இன்று உரை நிகழ்த்தினார்.  அதை இங்கு ஒளி பரப்புகிறேன்.

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் ...26

அழகியசிங்கர்  நான் இங்குக் குறிப்பிடும் புத்தகங்கள் விரும்பிப் படிக்க வேண்டுமென்று நினைக்கிற புத்தகங்கள். அப் புத்தகங்களை இப்போது படிக்காவிட்டாலும் கூட அவற்றைக் குறித்து எதாவது சொல்ல இயலுமா என்று பார்க்க முயற்சிக்கிறேன். இப் புத்தகங்களெல்லாம் 403ஆம் அரங்கில் விற்பனைக்கு உள்ளது. பெரும்பாலும் இப் புத்தகங்களின் ஒரு பிரதியை வாங்கிவிடுவேன். ஏற்கனவே கோணல் பக்கங்கள் என்ற தலைப்பில் சாரு நிவேதிதாவின் இரண்டு பாகங்களை வாங்கி வைத்திருக்கிறேன். இது மூன்றாவது பாகம். கிழக்கு பதிப்பகத்திலிருந்து வந்திருக்கிறது. சாருநிவேதிதாவின் எழுத்துக்களில் ஒரு வெளிப்படைத் தன்மை என்னை பிரமிக்க வைக்கிறது. இந்தப் புத்தகத்தைப் படிப்பதற்கு முன் புத்தகத்தின் அட்டையில் உள்ள வாசகங்களை இங்கு அளிக்க விரும்புகிறேன். - நீங்கள் சினிமா நடிகனை - நடிகையைப் பிரபலம் என்றும் ஒரு எழுத்தாளனைச் சாமான்யன் என்றும் மதிப்பீடு செய்கிறீர்கள். - தமிழ்நாட்டுக்கு என்று ஒரு தனிச் சிறப்பு உள்ளது. அஃதாவது இங்கேதான் சிட்னி ஷெல்டன் மாதிரி எழுதுகிற ஒருவர் தன்னை இலக்கிய உலகம் இலக்கியவாதியாக அங்கீகரிக்கவில்லையே என்று அங்க

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் ...25

அழகியசிங்கர்  வெளி ரங்கராஜன் என் நீண்டகால நண்பர்.  பிரமிளின் கடைசித் தினங்களில் நானும் அவரும் ஒன்றாக இணைந்து அந்தச் சோகமான தருணத்தைக் கடந்து வந்தோம்.  இதோ வெளி ரங்கராஜன் இன்று பிரமிளும் விசிறி சாமியாரும் என்ற புத்தகத்தைப் பற்றி பேசியதை இங்கே ஒளி பரப்ப விரும்புகிறேன்.  ரங்கராஜன் பேசிக்கொண்டிருக்கும்போது புத்தகக் காட்சியில் வெளிப்பட்ட அறிவிப்பையும் நீங்கள் கேட்க வேண்டும். 

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் ...24

அழகியசிங்கர்  மரத்துக்கு முன்னால் நின்று இரண்டு உறுதி மொழிகளை எடுத்துக்கொண்டுதான் புத்தகக் கண்காட்சியை ஆரம்பித்தேன்.  மரம் முனக ஆரம்பித்தது இன்று.  என்ன என்று கேட்டேன்?  நீ மீறி விட்டாய் என்றது மரம். எனக்கு ஒன்றும் புரியவில்லை.  நான் ஜாக்கிரதையாக இருக்கிறேன்.  மீற வில்லை என்றேன். பொய் சொல்லாதே.  நீ மீறி விட்டாய்.  உன்னை அறியாமல் மீறி விட்டாய். நான் யோசித்தேன்.  மரம் சொல்வது உண்மை என்று எனக்குத் தோன்றியது. இரண்டு நாட்களுக்கு முன்னால் ஒரு நண்பர் போனில் கேட்டார், 'புத்தகக் காட்சி எப்படிப் போய்க்கொண்டிருக்கிறது,?' என்று. 'ஆமாம், போய்க்கொண்டிருக்கிறது.  என் முன்னால் பலர் முன்னாலும் பின்னாலும் போய்க்கொண்டுதான் இருக்கிறார்கள்.  என் ஸ்டாலுக்குத் தான் வரவில்லை,' என்றேன். அதைத்தான் மரம் ஞாபகப்படுத்தியது.  'சாரி,' என்றேன் மரத்திடம். நான் இன்று எடுத்துக்கொண்டு எழுத உள்ள புத்தகங்கள் மூன்று.  ஒன்று இரா முருகனின் 1975. இரண்டு வண்ணதாசனின் மதுரம். மூன்று சாரு நிவேதிதாவின் கோணல் பக்கங்கள் 3 வது தொகுதி. இப்போது நேரமில்லை.  குளித்துவிட்டு ஓட வேண்டும் புத்தக அர

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் ...23

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் ...23 அழகியசிங்கர் புத்தகக் காட்சியில் ஜான்சி அவர்கள் என்னுடைய நாவலான üஞாயிற்றுக்கிழமை தோறும் தோன்றும் மனிதன்,ý புத்தகம் பற்றி பேசி உள்ளார். 5 நிமிடங்கள்.  அதன் ஒளிப்பதிவு இங்கு. 

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் ...22

அழகியசிங்கர் நேற்று புத்தகக் காட்சியில் என் நண்பர் எஸ்.வி வேணுகோபாலன் அவர்களின் மனைவி ராஜேஸ்வரி அவர்கள் கௌரி கிருபானந்தன் தெலுங்கிலிருந்து மொழிப் பெயர்த்த தெலுங்குக் கதைகளின் இரண்டாவது பகுதியைப் பற்றி பேசுகிறார்.

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் ...21

அழகியசிங்கர் இந்த முறை புத்தகக் காட்சியில் ஸ்டால் 403ல் சுப்ரமண்ய ராஜ÷ கதைகள் என்ற முழுத் தொகுப்பு நன்றாக விற்றுக் கொண்டிருக்கிறது.  தேவகோட்டை வா மூர்த்தியின் முன்னுரை குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.  அவர் எழுதிய கட்டுரையை விருட்சத்தில் பிரசுரம் செய்திருந்தேன். வாசக சாலை என்ற அமைப்பும் பத்து பதினைந்து புத்தகங்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.  403ம் எண்ணில் உள்ள ஸ்டாலில் விற்பனைக்கு. 'பிரதியில் கிளைக்கும் பிம்பங்கள்' என்ற இலக்கியக் கோட்பாட்டுத் திறனாய்வுக் கட்டுரைகளை ஒருவர் அவசியம் வாசிக்க வேண்டும்.  ஜமாலன் எழுதி உள்ளார்.  காலக்குறி என்ற பதிப்பகம் சிறந்த முறையில் இந்தப் புத்தகத்தைக் கொண்டு வந்துள்ளார்கள். இலக்கியக் கோட்பாட்டு ரீதியாகச் சிந்தனை செய்து புத்தகங்கள்  வெளி வந்திருக்கின்றன.  இது மாதிரியான புத்தகங்களை ஒருவர் புரிந்துகொள்வதும் புரிந்துகொண்ட புத்தகங்களைப் பற்றி பேசவும் அலாதியான திறமை வேண்டி உள்ளது.   தமிழவன் இந்தப் புத்தகத்தைப் பற்றி 21ஆம் நூற்றாண்டின் புது இலக்கிய விமர்சனச் சிந்தனை மிகுந்த ஆரோக்கியத்துடன் தமிழ்ச்சூழல் ஒன்றில் மட்டும் உள்ளது என்க

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் ...20

அழகியசிங்கர் இன்றைய புத்தகக் காட்சியில் என் நண்பர் எஸ்.வி வேணுகோபாலன் கௌரி கிருபானந்தன் தெலுங்கிலிருந்து மொழிப் பெயர்த்த தெலுங்குக் கதைகளின் ஒன்றாவது பகுதியைப் பற்றி பேசுகிறார்.

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் ...19

அழகியசிங்கர் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.  ஒவ்வொரு பதிப்பாளரும் கொண்டுவரும் புத்தகங்களைப் பார்க்கும்போது.   இந்தப் புத்தகங்களை விற்கிறேனோ இல்லையோ நானே புத்தகங்களை வாங்கி விடுவேன் என்று தோன்றுகிறது.   முதலில் என் கடையில் என்னன்ன புத்தகங்களை விற்க முயற்சி செய்கிறேன் என்பதை ஓரளவாவது சொல்ல முடியுமா என்று பார்க்கிறேன்.  ஏனென்றால் புத்தகங்களைப் பற்றி சொல்லிவிட்டு உடனே நான் ஸ்டால் எண் 403க்கு ஓட வேண்டும்.  திரும்பவும் வீடு திரும்பும்போது அதிக நேரம் ஆகிவிடும்.  ஒருவிதத்தில் என் ஸ்டாலில் விற்க வைத்திருக்கிற புத்தகங்களை நானே வாங்கிக்கொள்ள வாய்ப்பு உள்ளது.  அதனால்தான் யாவரும் பதிப்பகம் புதிதாகக் கொண்டு வந்த புத்தகங்கள் எல்லாவற்றையும் வாங்கி வைத்திருக்கிறேன்.  ஒன்று விற்க முயற்சி செய்வேன்.  அல்லது நானே வாங்குவேன்.  இந்த முறை புத்தகக் காட்சியில் நான் வாங்கிச் சேமித்துக்கொண்டிருக்கும் புத்தகங்களைப் பற்றி பிறகு சொல்கிறேன்.  இப்போது பா ராகவனின் யதி என்ற பிரம்மாண்டமான நாவலைப் பற்றி எதாவது சொல்ல முடியுமா என்று பார்க்கிறேன். 926 பக்கங்கள் கொண்ட யதி என்ற நாவலை நினைத்துப் பார்த

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் ...18

அழகியசிங்கர் இந்தப் புத்தகச் சந்தையில் செம்மையாக மாட்டிக்கொண்டவர் வேணு வேட்டராயன் அவர்கள்.  அவர் அழகியசிங்கர் கவிதைகள் என்ற புத்தகத்தைக் குறித்தும், க நா சுவின் விமர்சனக் கலை என்ற புத்தகத்தைப் பற்றியும் பேசினார்.  இதோ அவருடைய ஒளிப்பதிவு, விடுமுறை தினமாக இருந்ததால் ஒரே சத்தம்.  அதனால் ஸ்டால் உள்ளேயே வேணு வேட்டராயணன் பேசியதைப் படம் பிடித்தேன். 

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் ...17

அழகியசிங்கர் ஒரு புத்தகக் காட்சியின் போதுதான் இதுமாதிரி செய்தேன். இரண்டு பக்கங்களிலும் கயிறுகளைத் தொங்கவிட்டு துணி காயப்போடுவதுபோல் சிறுபத்திரிகைகளைத் தொங்க விட்டேன்.   அப்போது என் கடையில் சிறுபத்திரிகைகளை அதிகமாக விற்பதற்குத் தருவார்கள்.  ஆனால் இப்போதோ சிறுபத்திரிகைகளே இல்லையோ என்று சொல்லும்படி இருக்கிறது. இந்த முறை என் ஸ்டாலில் விற்பதற்கு வந்த இரண்டு சிறுபத்திரிகைகளைப் பற்றி சிறிய குறிப்பாவது கொடுக்க முயற்சி செய்கிறேன்.   ஒரு புத்தகம் 'சிற்றேடு.'  இதன் ஆசிரியர் தமிழவன்.  ஜனவரி மார்ச்சு மாத இதழ் விற்பனைக்கு வந்துள்ளது.   இப் பத்திரிகையை சாதாரணமாகக் கையில் வைத்துக்கொண்டு படித்து விட முடியாது.  கொஞ்சம் முயற்சி செய்தால் முழுவதும் படிக்க முடியும்.  அப்படியே படித்தாலும் நாம் படித்ததில் என்ன புரிந்துகொண்டு விட முடியும் என்று தோன்றும். உதாரணமாக இதில் உள்ள கட்டுரைகளை வரிசைப்படுத்தி கூற விரும்புகிறேன். 1. தொல்காப்பிய இலக்கியக் கோட்பாடுகள் 2. காந்தியும், மார்க்ஸ÷ம், அயன்மையுறாத வாழ்வும், 3. நடுப்பத்திரிகை மனோபாவமும் சிறுபத்திரிகை மனோபாவமும் 4. ஒலித் தததுவம், ந

இன்றைய கூட்டம்

அழகியசிங்கர் அம்ஷன் குமாரின் 'ஆவணப்பட இயக்கம்' புத்தகம் குறித்து இன்று அஜயன் பாலா பேசியதை இங்கு ஒளிபரப்பு செய்கிறேன்.

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் ...16

அழகியசிங்கர் புத்தகக் காட்சியை இரண்டு விதமாகப் பயன்படுத்துகிறேன். விருட்சம் வெளியீடாக வந்துள்ள புத்தகங்களையும் விற்பனைக்காகக் கொடுத்துள்ள புத்தகங்களையும் விற்கிறேன்.  இது முதல் வகை.  இதில் வெற்றியோ தோல்வியோ நான் பொருட்படுத்தப் போவதில்லை. மரத்தின் முன் உறுதிமொழி எடுத்துள்ளதால் இது குறித்து எழுதப் போவதில்லை.  நான் புத்தகங்களை வாங்குகிறேன்.  இது இரண்டாவது வகை. இதனால் வீட்டில் எனக்கு வசவு கிடைக்கிறது.  படிக்க வேண்டும் என்கிற புத்தகங்களை வாங்குகிறேன்.  கிட்டத்தட்ட நான் வாங்கிக் குவிக்கும் புத்தகங்கள், விற்கும் புத்தகங்களை விட அதிகமாகப் போய்விடும்.  அதனால் இரண்டு விதங்களில் புத்தகக் காட்சி எனக்கு முக்கியமாகப் படுகிறது.  ஒன்று நான் விற்க முயற்சி செய்கிறேன்.  இரண்டு  வாங்கிச் சேகரிக்கிறேன். இப்போது என் கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் இன்னொரு எழுத்தாளர் புத்தகங்களைப் பற்றி குறிப்பிட விரும்புகிறேன்.  நேற்று அம்ஷன் குமார் புத்தகத்தைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன்.  இன்று விமலாதித்தன் மாமல்லன்.  அவருடைய மூன்று புத்தகங்களை விருட்சம் ஸ்டால் விற்கிறது.  1. விமலாதித்த