Skip to main content

Posts

Showing posts from November, 2014

கசடதபற ஜனவரி 1971 - 4வது இதழ்

திட்டமற்ற.... எஸ். வைதீஸ்வரன் வானம் கட்டுப்பாடற்று, பெற்றுத் திரியவிட்ட மேகங்கள், பொல்லா வாண்டுகள். நினைத்த இடத்தில, கவலையற்று, நின்ற தலையில் பெய்து விட்டு, மூலைக்கொன்றாய் மறையுதுகள், வெள்ளை வால்கள்

கசடதபற ஜனவரி 1971 - 4வது இதழ்

மூன்று ஜப்பானியக் கவிதைகள் நடவு நடும் பெண்கள் பாடும் பாட்டுகளிலே மட்டும்தான் சேறு பட்டிருக்கவில்லை                            - கொனிஷ் ரெய்லான் முடியாது - மனித உள்ளத்தை யாரும் சரிவரப் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் நான் பிறந்த ஊரில் மலர்கள் முன் போலவே மலர்ந்து மணம் வீசுகின்றன.                           - ஸராயுகி யாரோ கிழவன்      - நான் அறியாத அந்நியன் - என்னைத் தடுக்கிறான் நான் கண்ணாடியில்        பார்த்துக் கொள்ளும்போது                           - ஹீடோமாரோ                             தமிழில் :  க.நா.சு

விருட்சம் இலக்கியச் சந்திப்பின் ஆறாவது கூட்டம்

                                                               அழகியசிங்கர்  25.10.2014 சனிக்கிழமை அன்று நடந்தது.   தமிழில் கவனிக்கப்பட வேண்டிய எழுத்தாளர் இரா முருகன் அவர்கள் தலைமையில் இக் கூட்டம் இனிதாக துவங்கியது.  கூட்டத்தின் முதல் நிகழ்ச்சியாக விருட்சம் ஒவ்வொரு மாதமும் தேர்ந்தெடுக்கும் சிறுகதையைப் பற்றிய பின்னணியுடன் ஆரம்பமானது.  உயிர்எழுத்து செப்டம்பர் மாதம் வெளிவந்த புதுச் சட்டை என்கிற ப முகமது ஜமிலுதீனின் கதையைத் தேர்ந்தெடுத்துள்ளோம்.  அதைப் பற்றிய குறிப்பை அடியேன் வாசித்தேன். பின், தேனுகா, ராஜம் கிருஷ்ணன் மறைவை ஒட்டி ஒரு நிமிடம்  மௌன அஞ்சலி நடத்தினோம்.  ஒரே மழை பயமாக இருந்ததால் கூட்டம் எங்கே நடக்காமல் போய்விடுமோ என்ற அசசம் எங்களை விட இரா முருகனுக்கு அதிகமாக இருந்தது.  நல்லகாலம்.  கூட்டம் இனிதே நடந்து முடிந்தது. இரா முருகனின் விஸ்வரூபம் என்ற மெகா நாவலை  தினமும் சில பக்கங்கள் என்று படித்துக் கொண்டு வருகிறேன்.  எப்போது முடிக்கப் போகிறேன் என்பதை அம்பலப் புழை ஸ்ரீகிருஷ்ணன்தான் அறிவார். எனக்கு இந்த இடத்தில் ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும்.  

இக் கவிதையை எறிகிறேன் ஆகாயத்தின் மீது

ஷஸிகா அமாலி முணசிங்க தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப் கன்னத்துக்கு நீயளித்த அறையின் வீச்சில் உடைந்து தெறித்தது மலையின் சிரசு இடையறாது குருதியோடும் சதுப்பு நிலமாய் இதயம் புதைந்தது குளிர்ந்த பள்ளத்தாக்கினிடையே அருளும் பாதுகாப்பும் தரும்படி நாம் உருவச் சிலைகளுக்கு மலர் வைக்கும்போதும் நேசித்த மலை பற்றியே முணுமுணுத்தோம் தென்னோலைக் கூரையினூடே தென்படும் வானத்தை நோக்கி வசந்தங்களைக் கேட்டபோதும் உழைத்துத் தேயும் கரங்களுக்குக் கிடைக்காது ஒருபோதும் எனவே இக் கவிதையை எறிகிறேன் ஆகாயத்தின் மீது உறங்குகிறேன் மண்ணின் கீழே வழமைபோலவே குறிப்பு - அண்மையில் இலங்கையிலுள்ள மலையகப் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவின் போது உயிரிழந்த மற்றும் அநாதரவான அனைத்து தமிழ் உள்ளங்களுக்காகவும் !

அதைப் பற்றிச் சொல்வதற்கில்லை

எம் . ரிஷான்   ஷெரீப் கழுத்து நீண்ட வாத்துக்கள் பற்றிய உன் கதையாடலில் சாவல் குருவிக்கு என்ன திரை அதுவும் இருந்துவிட்டுப் போகட்டும் அடித்த சாரலில் வண்ணத்துப் பூச்சியின் நிறம் மட்டும் கரைந்தே போயிற்று நல்லவேளை சருகுப் பூக்கள் அப்படியேதானே பிறகென்ன வற்றிய ஆழக் கடல்களின் நிலக் கரையில் துருப்பிடித்துப் பாதி மணலில் மூழ்குண்ட நங்கூரங்களின் கயிற்றோடு உப்புக் கரித்துத் தனித்திருக்கின்றன சிதிலப் படகுகள் அந்தி மாலையில் தூண்டிலிட்டமர்ந்து வெகுநேரம் காத்திருக்கும் சிறுவன் பாரம்பரிய விழுமியங்களைப் போர்த்தி உணவு தயாரிக்கும் இளம்பெண் நிலவொளியில் புயல் சரிக்க போராடி அலையும் பாய்மரக் கப்பல் அழிந்த மாளிகை அசையாப் பிரேதம் அது என் நிலம்தான் உன் மொழி வரையும் ஓவியங்களில் எல்லாமும் என்னவோர் அழகு உண்மைதான் மந்தையொன்றை அந்தியில் நெடுந் தொலைவுக்கு ஓட்டிச் செல்லும் இடையனொருவனை நான் கண்டிருக்கிறேன் நீ சொல்வதைப் போல காலத்தை மிதித்தபடிதான் அவன் நடந்துகொண்டிருந்தான் நெடிதுயர்ந்த மலைகள் உறைந்துபோன விலங்குகளைத்தான