அழகியசிங்கர்
நவீன விருட்சம் இதழ் வந்தவுடன் அதை எப்படி தீர்த்துக் கட்டுவது என்று உடனே பரபரப்பாக செயல்பட்டேன். முதலில் நான் நடை பயிற்சி செய்யும் இடத்திற்கு சில இதழ் பிரதிகளை எடுத்துக் கொண்டு போனேன். அங்கு எனக்கு அறிமுகமானவர்களைப் பார்த்து ஒவ்வொன்றாய் கொடுத்தேன். அதில் ஒருவர் சீனாவிலிருந்து பொருள்களை வாங்கி விற்பவர். நவீன விருட்சத்தை நீட்டியவுடன்,
"சார்...எனக்கு வேண்டாம்...நான் தமிழ் பத்திரிகை புத்தகம் படிப்பதில்லை," என்றார்.
எனக்கு அதிர்ச்சி. முதன் முதலாக ஒருவரிடம் கொடுக்கச் சென்றபோது, அவர் இப்படி சொலகிறாரே என்று தோன்றியது. நான் கேட்டேன்.
"தமிழ்ல பேப்பர் புத்தகம் படிப்பதில்லையா?".
"இப்போ இல்லை...முன்பு படித்ததுதான், எனக்கு நேரமில்லை,"
"என்ன நேரம்...நீங்க மனசு வைச்சா நேரம் இருக்கும் சார்," என்றேன்.
"என்னால முடியாது, சார்."என்றார்.
"இதன் விலை ரூ 15 அதற்கா யோஜனை செய்யிறீங்க...அதைத் தர வேண்டாம்...ஆனா பத்திரிகை வாங்கிப் படிங்க...எனக்கு அது முக்கியம்.."
"இல்ல சார்...அதுக்காக இல்லை..என் கவனமெல்லாம் பிஸினஸில் இருக்கு...படிக்கவ…