29.12.14

கசடதபற ஜனவரி 1971 - 4வது இதழ்


காலத்துக்கு வணக்கம்


கி அ சச்சிதானந்தம்


மண்டபம் பாழாகி
தூண்கள் தலைமொட்டையாகி
பரதேசிகளுக்குப் புகலிடமாய்
பரிணமித்தது.

மழையாலும் காற்றாலும்
சிற்பங்கள் சிதையவில்லை
எப்போதோவரும்
ஆராய்ச்சியாளனுக்கு
பிழைப்புத் தர
நிலத்தினுள் மூழ்கிக் கொண்டிருக்கிறது.

நிழல்தரும் தூண் ஒன்று
அதன் இடையில்
ஆண்பெண் இருவர் புணரும்
உருவங்கள்.
சிற்பி
இலக்கியத்தின் இலட்சணங்களையும்
வாத்சாயனாவின் காமத்தையும்
இரண்டறக் கலந்திருக்கிறான்.

முலைகளில்
முதிர்ச்சி அடைய
இடப்பையன்கள்
கசங்கிய கறையும்
அல்குலில்
தாரைத் தடவிய
முக்கோடும்.

அன்றொருநாள்
அந்தத் தூணின் கீழ்
துணி நீங்கிய இருவர் புணர்ந்திருந்தனர்
திரும்பிப் பார்த்தேன்
தொழுநோய்ப் பிச்சைக்காரர்கள்

சிற்பம் உயிரானதைக் கண்டு
காலத்திற்கு வணக்கம் செலுத்தினேன்.

26.12.14

கே பாலசந்ததர் சில நினைவுகள்


அழகியசிங்கர்சமீபத்தில் கே பாலசந்தரின் மரணம் திரைப்பட உலகத்தை ஒரு கலகலப்பை ஏற்படுத்தி விட்டது.  நான் மதிப்புக் கொடுத்துப் பார்க்கும் டைரக்டரில் கே பாலசந்தர் ஒருவர்.  அவருடன் ஸ்ரீதரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.  கருப்பு வெள்ளைப் படங்களில் பல சாதனைகளை செய்து காட்டியவர் கே பாலசந்தர்.  அவருடைய முதல் படமான 'நீர்க்குமிழி' ரொம்ப அற்புதமான படம்.  அதில் நாகேஷ் நடிப்பு அபாரமாக இருக்கும்.  எந்த நடிகரையும் பாலசந்தர் அவருடைய படத்தில் நடிக்க வைத்துவிடுவார்.  

அபூர்வ ராகங்கள் என்ற படத்தில் பொருந்தாத உறவு முறைகளைக் கொண்டுவந்து கதையை சிக்கலாக்கி பின் சாத்தியமில்லை என்பதுபோல் கொண்டு போய்விடுவார்.  அவருடைய படங்களில் சில கதாபாத்திரங்கள் சில சமிஞ்ஞைகள் செய்வார்கள்.  படம் முழுவதும் அது மாதிரியான சமிஞ்ஞைகளைத் தொடர்ந்து செய்துகொண்டு போவார்கள்.  

என்னுடைய பால்ய காலத்தில் பாலசந்திரனின் எந்தப் படத்தையும் போய்ப் பார்த்துவிட்டு வந்துவிடுவேன்.  

பாலசந்திரன் இதுமாதிரி அதிகமாகப் படங்கள் எடுத்தாலும், அவருடைய மதிப்பு வேறு சில புதுமுக டைரக்டர்கள் வரவர குறைந்துகொண்டே போயிற்று.  ஒரு குறிப்பிட்ட காலம் வரை பாரதிராஜாவும், பாக்கியராஜ÷வும் எடுத்துக்கொண்டு விட்டார்கள்.  பாரதிராஜாவின் 16வது வயதினில் படம் வெளிவந்தபோது, சினிமா உலகம் வேறு பாதைக்குத் திரும்பத் தொடங்கி விட்டது.  பாரதிராஜாவின் புதுத்தன்மை பாலசந்திரன் படங்களை வேறு பாதைக்குத் திருப்பி விட்டன.

பாலசந்திரன் படங்களின் ஒரு குறை அவருடைய படங்களில் காணப்படும் நாடகத் தன்மையை அவரால் விலக்க முடியவில்லை.  அதேபோல் அவர் சில படங்களில் வெளிப்படுத்திய தைரியத் தன்மையை யாரும் அப்போது கையாளவில்லை.  உதாரணமாக அபூர்வ ராகங்கள் என்ற படத்தில் கமல்ஹாசன் தேவடியாப் பசங்களா என்று சேரை அடித்துவிட்டு குடித்து கும்மாளமிடும் கூட்டத்தைப் பார்த்து கூக்குரலிடுவார்.   அந்தச் சமயத்தில் இந்தப் படத்தைப் பார்க்கும்போது, என்ன இவ்வளவு தைரியத்துடன் இப்படி ஒரு படத்தில் ஒரு வசனத்தைப் புகுத்தி இப்படி ஒரு படத்தில் ஒரு வசனத்தைப் புகுத்தி இருக்கிறாரே என்றும் தோன்றியது.   
  
அதே சமயத்தில், 'அவள் அப்படித்தான்' படத்தில் சுஜாதா என்ற நடிகை ஒரு வசனம் பேசுவார்.  கர்வமாக இருக்கலாம், ஆனால் கர்ப்பமாக இருக்கக் கூடாது.  அந்த வசனம் அந்த இடத்தில் தேவையில்லாத வசனம்.  நானும் என் நண்பரும் அந்தப் படத்தில் அந்த வசனத்தைக் கேட்டுவிட்டு விழுந்து விழுந்து சிரித்திருக்கிறோம்.  பாலசந்திரனுக்கு என்ன ஆயிற்று?  என்று சொல்லிக் கொள்வோம்.

பாலசந்திரனின் நான் ரசித்த இன்னொரு படம் புன்னகை.   நான் அவனில்லை, சிந்து பைரவி, மன்மத லீலை, அரங்கேற்றம் போன்ற படங்களும் வித்தியாசமானவை.  தொடர்ந்து தமிழ் திரை உலகில் அதிக காலம் தாக்குப்பிடித்தவர் கே பாலசந்தர்தான். 

என்னதான் அவர் நம்மை விட்டு மறைந்தாலும், அவர் படங்கû நம்மால் மறக்க முடியாது.  

25.12.14

பிரேமிட்

கசடதபற ஜனவரி 1971  - 4வது இதழ்
தருமு அரூப் சிவராம்மண்புயல் தணிந்து விட்டது.
ஆனால் போர் தொடர்கிறது - இடம் பெயர்கிறது
சாந்தி வீரர்கள்கூட
ஆபீûஸ கலைத்து விட்டு
யுதத சந்நத்தர்களாகின்றனர்.
இப்படியே, பிரெமிடபடிகளில்
காலம் உயிர்களை உருளவிடுகிறது -
மலைச்சரிவில் உதிரி இலைகளைப் போல.
ஆனால் வீரனின் உயிரோ
கற்பாறைப் பாலைகளின் சிறுகற்கள் போல
கணம்தான் என்றாலும்,
ஏதோ ஒரு யோசனையில்
உச்சியை நோக்கி எழக்கூடும்
உடல் தான், பிரெமிட்டினுள்ளேயே பதுமையாய்க் கிடந்து
கடவுளரை எதிர்பார்க்கிறது

21.12.14

பகவான் மீது தேள்கள்

21.12.2014 - ஞாயிறு எழுதியது.


அழகியசிங்கர்கந்தாச்ரமத்தில் இருக்கும்போது ஒரு நாள், ரமண மகரிஷி மீது முன்பக்கம் ஒரு தேள் மேலே ஏறிக்கொண்டிருந்தது. அவருடைய பின்பக்கம் இன்னொரு தேள் கீழே இறங்கிக் கொண்டிருந்தது. அருகில் இருந்த வாசதேவ சாஸ்திரி என்ற அன்பர் பயந்துபோய் ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்தார். ஆனால் பகவான் ஒன்றுமே நடவாததுபோல் அமைதியாக உட்கார்ந்திருந்தார். அந்த இரண்டு தேள்களும் சுவற்றில் ஏறுவதுபோல் ஊர்ந்து சென்று அவரை விட்டு கீழே இறங்கிவிட்டது. அவைகள் சென்ற பிறகு பகவான் அவர்களிடம், üüதரையிலோ சுவற்றிலோ மரத்திலோ ஊர்ந்து போவதுபோல் அவை நம்மீதும் ஊர்ந்து செல்கின்றன. சுவற்றின் மீது, தரையின் மீது போகும்போது அவை கொட்டிக்கொண்டோ போகின்றது. நீங்கள் அதைக் கண்டு பயந்து ஏதாவது செய்வதினால்தான் பதிலுக்கு அவைகளும் பயந்து போய் ஏதாவது செய்கின்றன,ýý என்று விளக்கினார்.


இந்த விபரம் ரமணரின் சரிதமும் உபதேசமும் பாகம் 1ல் இருந்து கிடைத்தது. பொதுவாக தேள் கொட்டி விட்டது என்றுதான் பிறர் சொல்லி நாம் அறிவோம். ஒரு தேளை நாம் பார்த்தால் அதன் பக்கத்தில் நெருங்க மாட்டோம். அதைக் கவனியாமல் இருக்கும் பட்சத்தில் பெரும்பாலும் தேள்களும் நம்மைக் கொட்டாமல இருப்பதில்லை.


மகான் விஷயத்தில் இது வேறு மாதிரியாக இருக்கிறது. ஜே கிருஷ்ணமூர்த்தி விஷயத்திலும் இதேபோல் ஒரு சம்பவம் விவரிக்கப் படுகிறது. புலி, சிங்கம் மாதிரி ஒரு கொடிய விலங்கு வெறுமனே பார்த்துவிட்டுப் போய்விடுகிறது. 


கிருஷ்ணமூர்த்தி அதுமாதிரியான கொடிய விலங்கை வெறுமனே உற்றுப் பார்க்கிறார். அது ஒன்றும் செய்யாமல் போய்விடுகிறது. அதற்குக் காரணம் சிருஷ்ணமூர்த்தியிடம் பயம் இல்லை. பயத்தை வெளிப்படுத்தினால் அது நம்மை தாக்க வரும் என்கிறார் கிருஷ்ணமூர்த்தி

20.12.14

விருட்சம் தேர்ந்தெடுத்த மனதுக்குப் பிடித்த கதைகள்

 அழகியசிங்கர்


 
இந்த அக்டோபர் மாதத்தின் சிறுகதைகளைத் தேர்ந்தெடுப்பதற்கு ரொம்ப தாமதமாகி விட்டது.  அந்த மாதம் தீபாவளி மாதம்.  தீபாவளி வருவதால் பத்திரிகைகளில் ஏராளமான கதைகள்.  மேலும் தீபாவளி மலர்கள் வெளியிட்ட கதைகள் வேறு.

நான் தீபாவளி மலர்களில் வெளியிட்ட கதைகளைத் தேர்ந்தெடுக்கவில்லை.  பத்திரிகைகளில் வெளிவந்த கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்தேன்.  ஒவ்வொரு மாதமும் சிறுகதைகளைப் படிக்கும்போது உற்சாகம் அடைகிறேன்.  நல்ல தரமான கதைகளை சில பத்திரிகைகளில் தொடர்ந்து வாசிக்க முடிகிறது.

இப்படி வாசிக்கிற கதைகளில் பத்திரிகை கதைகளிலிருந்து இலக்கியத் தரமான கதைகளைப் பிரித்து எடுக்க வேண்டி உள்ளது.  சில பத்திரிகைகளில் இலக்கியக் கதைகளே வர வாய்ப்பு இல்லாமல் இருக்கிறது.  இதை நான் தவறாகக் கருதவில்லை.  அப்படிப்பட்ட கதைகளையும் வாசிகக வேண்டும்.  அப்படிப்பட்ட கதைகளிலும் சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்த வெகு ஜன வாசகர்கள் விரும்பிப் படிக்கும் கதைகள் என்று தனிப் புத்தகமாகக் கொண்டு வரலாம்.  

பொதுவாக கதைகள் என்ற அம்சம் குறைந்து போவதற்கு வெகுஜன இதழ்கள்தான் காரணம்.  சில பத்திரிகைகள் ஒரு பக்கத்திற்கு கதைகளை வெளியிடுகின்றன.  இதை அறவே நான் ஏற்றுக்கொள்ளவில்லை.  இது மாதிரி ஒரு பக்கக் கதைகளை நாம் வளரவிட்டால், கதைகள் என்றால் ஒரு பக்கத்துக்குமேல் படிக்க முடியாத நிலைக்கு நாம் தள்ள வேண்டி வரும்.

இந்த அக்டோபர் மாதம் பல அருமையான கதைகளை நான் படிக்க நேர்ந்தது.  நான் ஒரு கதையைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டுமென்று நினைத்தாலும், நான் ரசித்த பல கதைகளை  தேர்ந்தெடுக்க முடியாமல் போவதற்கு சற்று வருத்தம்தான் எனக்கு. 

பாவண்ணன் என்ற எழுத்தாளர் இரண்டு அருமையான கதைகளை எழுதி உள்ளார்.  15.10.2014 ஆனந்தவிகடன் இதழில் எழுதிய üஅப்பாவின் சைக்கிள்ý என்ற கதை, இன்னொரு கதை உயிர்மை அக்டோபர் இதழில் வெளிவந்த  üபள்ளிக்கூடம்ý என்ற கதை. இரண்டு கதைகளும் உருக்கமான கதைகள்.  சைக்கிளே ஓட்டத் தெரியாத முத்துசாமி.  அவனுடைய அப்பா அவனுக்கு சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுக்க முடியாமல் தோல்வி அடைகிறார்.  அவர் சைக்கிள் கற்றுத் தருகிறேன் என்று அவனை அடித்தது அவன் ஞாபகத்தில் எப்போதும் இருக்கிறது என்று தோன்றுகிறது.  அவன் அப்பா அவன் அம்மாவுடன் சண்டைப்போட்டு அடிக்கடி ஓடிப் போகிறார்.  ஒரு முறை திரும்பி வராமலே ஓடிப் போகிறார்.  அந்தக் குடும்பம் அவன் அப்பா இல்லாமலே முன்னேறுகிறது.  அவன் மேலே படிக்க சைக்கிளை விற்றுத்தான் பணம் ஏற்பாடு செய்கிறாள் அவள் அம்மா.

அவருடைய இரண்டாவது கதை பள்ளிக்கூடம்.  அக்டோபர் மாதம் உயிர்மையில் வெளிவந்த கதை.  இதுவும் உருக்கமான கதை.  எப்படி பள்ளிக்கூடம் ஒரு சின்ன ஊரைவிட்டு உருமாறிப் போய்விடுகிறது என்பதுதன் கதை.  ஆங்கிலக் கல்வி வந்தவுடன், தமிழில் பாடம் நடத்தியப் பள்ளிக்கூடங்கள் எல்லாம் மாறிப் போய்விடுகின்றன.  கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் படிக்க யாரும் தயாராய் இல்லை.  அதனால் வேறு பல விஷயங்கள் கிராமத்தில் வந்தாலும், பழைய பள்ளிக்கூடங்களை ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை.  பாவண்ணன் எழுதிய இரண்டு கதைகளும் சிறப்பாக எழுதப்பட்ட கதைகள்தான். 

அதே உயிர்மையில வெளிவந்த இமையம் எழுதிய பரிசு என்ற கதை.  ரொம்பவும் நீளமான கதை.  உருக்கமான கதை.  படிப்பவர்ளின் கண் கலங்க வைத்துவிடும்.   

தீராநதி அக்டோபர் மாத இதழில் அபிமானியின் சரண் என்கிற கதை.  பெருங்கொளத்தைச் சேர்ந்த சேது என்பவன் சரோஜா வீடு தேடி வந்திருந்தான்.  குடித்திருந்தான்.  அவனுக்குத் தேவை ஒரு நூறு ரூபாய்தான்.  சண்டியத்தனம் பண்ணி அலைபவன்.  சரோஜா தெருவில் உள்ளவர்களை மிரட்டி பணம் வாங்குவான்.  அவனுக்குக் கொடுக்க நூறு ரூபாய்க் கூட இல்லை என்று மறுத்துவிடுகிறாள் சரோஜா.  சாப்பிட சோறுதான் இருக்கிறது என்கிறாள்.  அதையாவது போடு என்று கேட்டு வாங்கிச் சாப்பிடுகிறான்.  ஜாதி வேறுபாடால் பச்சைத் தண்ணீக் கூட குடிக்காத சேது, வேற வழியில்லாமல் சரோஜா வீட்டில் சோறு சாப்பிடுகிறான்.  இக் கதையை நுணுக்கமாக எழுதி உள்ளார் அபிமானி.  

காக்கைச் சிறகினிலே என்ற அக்டோபர் இதழில் அபிமானியின் இன்னொரு கதை. üஉறவுý என்கிற கதை.  இந்தக் கதையும் ஏற்கனவே எழுதிய சரண் கதை மாதிரி உள்ளது.  ஜாதி பிரச்சினையைப் பிரதானப்படுத்தி இருகதைகளையும் எழுதி உள்ளார்.  

ஆனந்தவிகடன் 22.10.2014 இதழில் வெளிவந்த அகஸ்தியம் என்கிற வண்ணதாசன் கதை.  உறவு முறைகளைப் பற்றி தனுஷ்கோடி என்பவரைப் பற்றி சுற்றி சுற்றி வருகிறது கதை.  ரொம்பவும் நுணுக்கமாக எழுதப்பட்ட கதை.  அகஸ்தியர் அத்கையைப் பற்றி எழுதும்போது, ஏன் தனுஷ்கொடியுடன் அவளுடைய உறவு முறிந்து போயிற்று என்பதை வெளிப்படுத்தாமல் வெளிப்படுத்துகிற கதையாக இருககிறது.  

நான் மேலே குறிப்பிட்ட கதைகள் எல்லாம் எனக்குப் பிடித்த கதைகள்தான்.   ஒரு மாதத்தில் ஒரு கதையைத் தேர்ந்தெடுக்கும்போது, மற்ற கதைகளும் தேர்ந்தெடுக்கப்படும் கதைக்கு சளைத்தது இல்லை என்பதுபோல் தோன்றுகிறது.  

29.10.2014 ந்தேதியிட்ட ஆனந்தவிகடன் இதழில் வெளிவந்த பெருமாள் முருகனின் üஆசை முகம்ý என்ற கதையை அக்டோபர் மாதச் சிறந்த சிறுகதையாகத்தான தேர்ந்தெடுத்துள்ளேன்.  

சகிக்கமுடியாமல் நிஜமான வாழ்க்கை இருந்தாலும் மானசீகமான ஒரு வாழ்க்கையை ஒவ்வொருவரும் விரும்பியோ விரும்பாமலோ  ஏற்றுக்கொள்ள வேண்டி வரும்.  சரஸ்வதி தனக்குப் பிடித்த அரவிந்த சாமி என்ற நடிகருடன் இருப்பதுபோல் கற்பனை செய்கிறாள்.  மற்றவர்கள் கிண்டலுக்கு ஆளாகிறாள்.  அரவிந்தசாமியை நினைத்து திருமணம் செய்துகொள்ள மறுக்கிறாள்.  யாரையும் அவள் ஏற்றெடுத்துப் பார்ப்பதில்லை.  அவள் மனதில் அரவிந்தசாமி குறித்து உருவம் சிதையும்போது,  அவள் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பான நிலைக்கு மாறுகிறாள்.  

சிறப்பான சிறுகதையை எழுதிய பெருமாள் முருகனுக்கு வாழ்த்துகள்.  


15.12.14

நான் பார்த்த சினிமாப் படங்கள்

அழகியசிங்கர்


12ஆம் தேதி கணினி முன் அமர்ந்து நவீன விருட்சம் தயாரித்துக் கொண்டிருந்தேன்.  மதிய நேரம்.  அப்போது ஒரு போன் வந்தது.  போன் செய்தவர் பிரபு.  அவர் ரஜனிகாந்த் ரசிகர். 

 \\லிங்கா பார்க்க வர்றீங்களா?"
"இப்பவா?"
"இப்பத்தான்," என்றார்.  
"எத்தனை மணிக்கு வரணும்."
"ஒன்றரை மணிக்கு வந்திடுங்க."
நான் மடிப்பாக்கம் கிளம்பினேன்.  நானும் பிரபுவும் 2.15 க்குக் கிளம்பினோம்.  படம் 2.45க்கு. புழுதிவாக்கத்தில் உள்ள குமரன் தியேட்டர்.  அங்கு போனவுடன் தெரிந்தது.  படம் பார்க்க 4 மணிக்கு வரவேண்டுமென்று.  "வீட்டுக்குப் போய்விட்டு, அங்கே ஓய்வெடுத்துவிட்டுச் செல்லலாம்," என்று சொன்னேன்.

பிரபு வீட்டிற்குப் போய் சற்று ஓய்வெடுத்தோம்.  திரும்பவும் 4 மணி சுமாருக்கு தியேட்டருக்கு வந்தோம்.  ஒரே கூட்டம்.  முண்டி அடித்துக்கொண்டு போனோம்.  40 ஆண்டுகளுக்கு முன் ஒரு தீபாவளியின் போது, சிவாஜியின் இரு மலர்கள் என்ற படத்தை முதல் நாளே போய்ப் பார்த்தேன்.  அதன் பின் இப்போதுதான் தியேட்டரில் முதல் நாள் ஒரு படம் பார்க்க வந்திருக்கிறேன்.  அதுவும் ரஜனிகாந்தின் லிங்கா படத்தைப் பார்க்க.  

ரஜனி ரசிகரான பிரபு உற்சாகமாக இருந்தார்.  நான் சினிமாப் படங்களை தியேட்டரில் பார்ப்பது என்பது ரொம்ப அரிதான விஷயமாகப் போய்விட்டது.  பார்ப்பதே இல்லை.  ஆனாலும் நான் ரிட்டையர்ட் ஆகிவிட்டப்பின் தியேட்டர்களில் கொஞ்சம் கொஞ்சம் படங்கள் பார்க்க ஆரம்பித்தேன்.  ஒரு படத்தைப் பார்த்துவிட்டு அதைப் பற்றி எதாவது எழுத வேண்டுமென்ற எண்ணமும் எனக்கு எழுவதுண்டு.  ஆனால் நான் எழுதுவதற்குள் மற்றவர்கள் எழுதி முடித்துவிடுவார்கள்.  ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் படத்தைப் பற்றி சொல்வார்கள்.  "படம் நன்றாக இருக்கிறதா இல்லையா?" என்று யாராவது என்னைக் கேட்டால், நான் பதில் சொல்ல மாட்டேன்.  

பொதுவாக சினிமா என்பது பொழுதுபோக்கு விஷயமாகத்தான் நான் பார்ப்பேன்.  அதன் மூலம் நமக்குக் கிடைப்பது ஒன்றுமில்லை.  படம் பார்க்கிறோம்.  படம் நன்றாக இருக்கிறதா இல்லையா என்பதில்லை.  சில படம் பார்த்தப் பின்பும் நம் ஞாபகத்தில் இருந்துகொண்டிருக்கும்.  சில ஞாபகத்தை விட்டு ஓடிப் போயிருக்கும்.  சில படங்கள் பாடல்கள் மட்டும் நம் கவனத்தில் இருக்கும்.  ஒரு படத்தை இன்னொரு முறையும் பார்க்க விரும்பினால், அது படத்தின் வெற்றி. 
    
புழுதிவாக்கத்தில் உள்ள குமரன் தியேட்டர் உட்கார்ந்து படம் பார்க்க ஏற்ற இடமாக இருந்தது.  ரஜனிகாந்தின் ரசிகர்கள் புடைசூழ முதல்முறையாக நான் தியேட்டர் முழுவதும் உள்ள கூட்டத்தை அப்போதுதான் பார்த்தேன்.   சமீபத்தில் நான் படம் பார்க்கும்போது கூட்டமே இருக்காது.  இது எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.  படம் எடுக்க போட்ட பணம் தயாரிப்பாளர்களுக்கு, வினியோகஸ்தர்களுக்குக் கிடைத்திரக்குமா என்ற ஐயம் எனக்கு எப்போதும் ஏற்படும்.

40 ஆண்டுகளுக்கு முன் இப்படிப்பட்ட நிலை இல்லை.  அப்போது சிடி கலாச்சாரம் இல்லை.  இன்று ஒரு படம் 100 நாள் ஓடுவதில்லை.  ஒருசில நாட்களில் படம் எடுத்தவர்கள் தங்கள் மூலதனத்தை எடுத்துக்கொண்டு விடுகிறார்கள் என்றார்கள் எனக்குத் தெரிந்த நண்பர்கள்.  பல தியேட்டர்களில் படம் அதிக விலை டிக்கட் மூலம் பணத்தை எடுத்து விடுவதாக சொல்கிறார்கள். அதிலும் முக்கியமான நடிகர்கள் நடிக்கும் படத்திற்குத்தான் இந்த நிலை.  சாதாரண நடிகர்கள் அதுவும் புதுமுகங்கள் நடிக்கும் படத்திற்கு அப்படி இல்லை. 

மேலும் தமிழில் 300 க்கும் மேற்பட்ட படங்கள் தியேட்டர்கள் கிடைக்காமல் அவஸ்தைப் படுவதாக அறிந்தேன்.  சமீபத்தில் காவியத் தலைவன் என்ற படத்தைப் பற்றி பலர் நல்ல அபிப்பிராயம் சொன்னதால் அதைப் பார்க்க வேண்டுமென்று நினைப்பதற்குள் அந்தப் படம் எங்கள் வீட்டு பக்கத்தில் உள்ள உதயம் காம்ப்ளெக்ûஸ விட்டுப் போய்விட்டது.  வேறு தியேட்டர்களில் பகல் காட்சி மட்டும் காட்டிக் கொண்டிருந்தார்கள்.  இந்தத் தருணத்தில்தான் சூப்பர் ஸ்டார் ரஜனி காந்த் படத்தை முதல் ஷோ பார்க்க வந்தேன். 

சூப்பர் ஸ்டார் என்று டைட்டில் போட்டவுடன், எல்லோரும் ஏக காலத்தில் சத்தம் போடடார்கள்.  விஸில் சத்தம் காதைப் பிளந்தது.  பேப்பர் துண்டுகளை பூ மாதிரி தூக்கி விசிறி எறிந்தார்கள். நான் முன்புபோல் இருந்திருந்தால் இது மாதிரி நிகழ்ச்சிக்கெல்லாம் உணர்ச்சி வசப்பட்டிருப்பேன்.  ஆனால் இப்போது நான் வேடிக்கைப் பார்க்கும் மனோ நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தேன். 

லிங்கா படத்தில் ரஜனிகாந்தை இளமையாகக் காட்டியிருந்தார்கள்.  அந்தக் காலத்தில் எம்ஜிஆர் படத்தில் எம்ஜிஆரை இளமையாகக் காட்டுவார்கள்.  ஒரு காலத்தில் அவருடன் கதாநாயகியாக நடித்த சிலர் அவருக்கு அம்மாவாக நடித்திருப்பார்கள்.   எப்படி இந்தப் படத்தில் துள்ளும் இளமையுடன் ரஜனிகாந்த் காட்சி தருகிறார் என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  1975 வாக்கில் தாம்பரத்தில் உள்ள சேலையூரில் நடிகர் ரவிச்சந்திரன் லட்சுமி நடித்த ஒரு பாடல் காட்கியைப் படம் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.  ரவிச்சந்திரனால் முட்டிப் போட்டுக்கொண்டு பாடல் காட்சியில் பாட முடியவில்லை.  அவர் போட்டிருந்த பேன்ட் உள்ளே நிறைய துணிகளை விட்டுக்கொண்டு நடிப்பார்.  ஆனால் லட்சுமியோ துள்ளும் இளமையுடன் வேகமாக குதித்து நடனம் ஆடுவார்.  
ஆனால் சினிமா பார்க்கும் நமக்கு அதெல்லாம் தெரிவதில்லை.  இந்த வயதிலும் ரஜனிகாந்த் ஈடுகொடுத்துதான் நடித்திருக்கிறார்.  இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் குறுகிய காலத்தில் இப்படத்தை எடுத்திருக்கிறார்.  ஒரு பேட்டியில் இந்தப் படம் எடுப்பதற்காக ஒரு நாளைக்கு 20 மணிநேரம் உழைத்ததாக கூறி இருக்கிறார்.  

ரஜனிக்கென்று சில அம்சங்கள் உண்டு.  அது இப்படத்தில் தொலைந்து போகவில்லை.  தாத்தா ரஜினியாகவும், பேரன் ரஜினியாகவும் இரட்டை வேடத்தில் ரஜனிக்கு நல்ல தீனி கொடுத்திருக்கிறார்கள்.  அவர் எப்போதும் பேசும் பஞ்ச் வசனத்திற்குக் குறைவில்லை.  

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னி குயிக்கின் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட படம் இது.  தாத்தாவின் பெருமையைக் காப்பாற்ற பேரன் ரஜினி முன் நிற்கிறார்.
  
பொதுவாக ரஜினி படத்தைப் பார்க்கும் ரசிகர்கள் அதன் பொழுது போக்கு அம்சத்தைப் பார்த்து ரசிப்பார்கள்.  தாத்தா ரஜனி பெரிய ராஜாவாக இருந்து தன் சொத்துக்களை எல்லாம் ஒரு அணையைக் கட்ட இழப்பது, வெள்ளைக் காரர் ஒருவர் வில்லனாக மாறி அணையைக் கட்ட விடாமல் செய்வது போன்ற காட்சிகள் இயல்பானதுதான்.  சோலையூர் மக்களுக்காக தன் சொத்துக்கள் முழுவதையும் இழக்கிறார்.  வெள்ளைக்காரன் மிரட்டிய சவாலில் அவர் அந்தக் கிராமத்தை விட்டும் போய்விடுகிறார்.  இதையெல்லாம் எத்தனை முறை ரஜனி படங்களில் காட்டினாலும் யாருக்கும் அலுப்பதில்லை.  இந்தப் படத்திலும் அப்படிதான் நடக்கிறது.  சில்லறைத் திருட்டுக்கள்மூலம் அகப்படும் ரஜனி, அதிலிருந்து தப்பி சோலையூருக்குக் கடத்துகிறார் அனுஷ்கா.  அவர் டிவி ரிப்போர்ட்டராக வருகிறார்.  திருட்டுதனத்தில் ஈடுபடும்போது எடுக்கப்பட்டிருக்கும் காட்சிகள் ரசிக்கும்படியாக உள்ளது.

ரஜனி மாத்திரம் இல்லை.  பெரிய நடிகர்கள் விஜய், கமல்ஹாசன், அஜித், என்ற நட்சத்திர நடிகர்கள் நடிக்கும் படங்களையெல்லாம், பொழுது போக்கும் அம்சமாக நாம் பார்த்து பழகிக்கொள்ள வேண்டும்.  

லிங்கா என்கிற இந்தப் படம் நமக்கு பார்க்க அலுக்காது.  இதோ பிரபு அவர் குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு இரண்டாவது முறையாக லிங்காவைப் பார்க்கச் சென்றுவிட்டார்.
  
 

9.12.14

விருட்சம் இலக்கியச் சந்திப்பு - 8

9.12.2014                 விருட்சம் இலக்கியச் சந்திப்பு-8


 நடைபெறும் நாள்                   :      13.12.2014 (சனிக்கிழமை)

நேரம்                 :        மாலை 6 மணிக்கு
இடம்             :    ஸ்ரீ அலர்மேலுமங்கா கல்யாண மண்டபம்
                                           அகஸ்தியர் கோயில் பின்பக்கம்
                                           19 ராதாகிருஷ்ணன் சாலை,
                                          தி. நகர், சென்னை 600 017
   
பொருள்               :         நானும் கதைகளும்
                                      
 உரை நிகழ்த்துபவர்     :                 எழுத்தாளர்   சா கந்தசாமி

(தமிழில் குறிப்பிடப்பட வேண்டிய எழுத்தாளர்.  சாகித்திய அக்காதெமி விருது முதல் பல விருதுகளைப் பெற்றவர்.  நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என்று பல எழுதி உள்ளார்.  இன்னும் தொடர்ந்து உற்சாகமாக இயங்கிக் கொண்டிருப்பவர்.  அவருடைய சிறுகதைகளைப் பற்றியும், அவரை எழுதத் தூண்டிய அவர் ரசித்த கதைகளைப் பற்றியும், பேச உள்ளார்)

அனைவரும் வருக.
அன்புடன்அழகியசிங்கர் - ஆடிட்டர் கோவிந்தராஜன்

8.12.14

மழைக்காலம்.


ரவிஉதயன்தவறி விடுமென்று நம்பிக்கையில்
பயமின்றி
நடுங்கும் கைகளோடு
குறி பார்க்கும் கண்களின்
துப்பாக்கி முனையில் நிற்கிறேன்.
ஊசி மழைத் துளிகள் போல
என்னுள் நுழைகின்றன ரவைகள்.
விரிபடாத குடையை
விரிக்க முயலுகிறவனைப் போல
விலுக்கென்று அப்படியே
நிற்கிறேன்.
காதலாகி கசிகிறது
மழைத்துளிகளின்  ரத்தம்.7.12.14

ஞானக்கூத்தனும் விஷ்ணுபுரம் பரிசும்....

அழகியசிங்கர்

விஷ்ணுபுரம் விருது இந்த ஆண்டு ஞானக்கூத்தனுக்குக் கிடைத்துள்ளது.  முதலில் அவரை வாழ்த்துகிறேன்.  ஒரு விருது ஒருவருக்கு வழங்கினால், அதனுடைய எல்லாத் தகுதிகளும் அவருக்கு இருக்க வேண்டும்.  ஞானக்கூத்தனுக்கு அந்தத் தகுதி உண்டு.  கவிதை மட்டும் அவர் சிந்திப்பவர்.  விருட்சம் வெளியீடாக அவருடைய முழுத் தொகுப்பையும் நான் கொண்டு வந்துள்ளேன்.  ஞானக்கூத்தன் கவிதைகள் என்ற தொகுப்பு வெளிவரும்போது, ஞானக்கூத்தன் எழுதியும் பாதுகாக்காத கவிதைகள் பலவும் தீபம் பார்த்தசாரதியின் வீட்டிற்குச் சென்று (சிஐடி நகரில் உள்ள) பார்த்தசாரதியின் புதல்வரிடமிருந்து தீபம் இதழ்களைத் தேடி அதில் காணப்பட்ட ஞானக்கூத்தன் பல கவிதைகளை கையால் தாளில் எழுதி ஞானக்கூத்தன் கவிதைகள் தொகுதியில் சேர்த்தேன்.  அதன்பின் பென்சில் படங்கள் என்ற இன்னொரு தொகுதியை நானே கணினியில் அடித்துப் புத்தகமாகக் கொண்டு வந்துள்ளேன்.  மூன்றாவதாக நான் கொண்டு வந்த அவர் புத்தகம் கவிதைக்காக.  இது ஒரு கட்டுரைத் தொகுதி மொத்தம் 300 பிரதிகள்தான் அடித்து வைத்துள்ளேன்.  கவிதையைப் பற்றி அறிய வேண்டியவர்கள் இப் புத்தகத்தை வாங்கிப் படிக்க வேண்டும்.  படித்தால்தான் தெரியும் கவிதை என்றால் என்ன என்று.  இது ஒரு அருமையான கட்டுரைத் தொகுதி. 

எப்போதும் படிப்பதற்கு எளிமையாக இருக்கும் ஞானக்கூத்தன் கவிதைகள்.  பின் அவர் கவிதைகளில் காணப்படும் அங்கத உணர்வு.  அவர் எந்தக் கவிதை எழுதினாலும் அங்கத உணர்வுடன் கூடிய பார்வையைத்தான் கவிதை மூலம் வெளிப்படுத்துவார்.  இன்று நம் உலகத்தை அப்படிப் பார்ப்பது மிக சிறந்த விஷயமாகத் தோன்றுகிறது.கடைசியில் இந்த உலகத்தில் அடையப் போவது ஒன்றுமில்லை.   எழுதுபவர் பலருக்கு இது வருவதில்லை.  கவிதை மூலம் கஷ்டங்களைச் சொல்வது, கவலையைத் தெரிவிப்பது, பிரச்சாரம் செய்வது, அபத்தமாக கருத்தைத் தெரிவிப்பது என்று பல முயற்சிகள் கவிதைகள் மூலம் நடந்து கொண்டிருக்கிறது.  இதில் வித்தியாசமானவர் ஞானக்கூத்தன்.  அதனால்தான் பாரதிக்குப் பின் முக்கியமான கவிஞராக ஞானக்கூத்தன் தென்படுகிறார்.  கவிதையில் இந்தச் சாதனையை நிகழ்த்திய ஞானக்கூத்தன் போல், உரைநடையில் அசோகமித்திரன் அந்தச் சாதனையை நிகழ்த்தி உள்ளார்.  இவர்கள் இருவரையும் தமிழ் நல்லுலகம் மறக்கக் கூடாது.  நான் அந்தக் காலத்தில் மாம்பலம் ரயில்வே நிலையத்திலிருந்து பீச் ரயில்நிலையம் வரை செல்லும்போது, பொதுவாக கவிதைகளைப் படித்துக்கொண்டு போவேன்.  அப்படித்தான்ü என்ன மாதிரி உலகம்ý என்ற ஞானக்கூத்தன் கவிதையைப் படித்துக்கொண்டு போனேன். இதோ அந்தக் கவிதை:

என்னை நோக்கி ஒருவர் வந்தார்
எதையோ கேட்கப் போவதுபோல
கடையா? வீடா? கூடமா? கோயிலா?
என்ன கேட்கப் போகிறாரென்று
எண்ணிக் கொண்டு நான் நின்றிருக்கையில்
அனேகமாய் வாயைத் திறந்தவர் என்னிடம்
ஒன்றும் கேளாமல் சென்றார்
என்ன மாதிரி உலகம் பார் இது.


6.12.14

கசடதபற ஜனவரி 1971 - 4வது இதழ்
கொடும்பாவிப கங்கைகொண்டான்                         
காய்ந்த வைக்கோலால்
கட்டி வைத்துத்
துணி போர்த்தி
கரித்துண்டால்
அரக்கிப் பல்வரிசை
அரக்கன் கொடு மீசை
உடல் முழுதும்
கறுப்புத் தார் அங்கி
தாரை தப்பட்டை
தரங்கெட்ட ஒப்பாரி
செருப்புப் பூக்களால்
செய்த மலர்மாலைச்
செண்டாக்கி
எரியூட்ட
இழுத்து நடப்போரே-
எதற்குக் கொடும்பாவி?
எரிக்கின்ற உடலுக்கோ
இளகாத மனதுக்கோ?

2.12.14

நானும் பார்க்கிறேன் சினிமாக்களை......


அழகியசிங்கர்                                      
நான் பார்த்து ரசித்தப் படம் தி வே ஹோம் ( (THE WAY HOME).).
இந்தப் படத்தை டைரக்ட் செய்தது தென் கொரிய பெண்.  பெயர் லீ ஷியான் ஹியான்.   காது சரியாக கேட்காத வாய் பேச முடியாத 75 வயது  வயதானவளுக்கும், ஏழு வயதுப் பேரனான சாங்க்வுக்கும் ஏற்படும் சமர்தான் இந்தப் படம்.  சாங்க்வின் அம்மா, அவள்  அம்மாவிடம் தன் பையனை சிலகாலம் அவன் பள்ளி விடுமுறையில் விட்டுவிட்டு செல்கிறாள்.  ஒரு பொட்டல் கிராமம்.  அருமையான மலையைச் சுற்றி உள்ளது.  அதிக வசதி இல்லாத மிகக் குறுகலான வீடு.  சாங்க்விற்கு அங்கு தங்குவதற்கே பிடித்தம் இல்லை.  அம்மாவிடம் சண்டை போடுகிறான்.  அம்மா அவனை அடித்து தரதரவென்று அழைத்துப் போகிறாள்.  அந்தக் கிராமத்தில் அதிகமாக மனிதர்கள் இல்லை.  வேறு வழியில்லை சாங்க்வி பாட்டியைப் பார்த்தபடிதான் இருக்க வேண்டும்.

பாட்டி அவனிடம் அன்பை பொழிந்து கொண்டிருக்கிறாள்.  அவனோ அவளைப் பார்த்து அலட்சியப் படுத்துகிறான்.  பொழுது போக்கிற்காக அவன் எடுத்துக்கொண்டு வந்த வீடியோ கேமை விளையாடிக் கொண்டிருக்கிறான்.  வேறு வழியில்லை, பாட்டியுடன்தான் தங்க வேண்டும்.  பாட்டியை என்னதான் கிண்டல் செய்தாலும், பாட்டி அவனிடம் அன்பை காட்டிக்கொண்டிருக்கிறாள்.  போரடிக்கும்வரை வீடியோ கேமை விளையாடுகிறான்.  பேட்டிரி தீர்ந்து விடுகிறது.  வீடியோ கேம் இனிமேல் விளையாட முடியாது.  பேட்டிரி வாங்க பாட்டியிடம் பணம் கேட்கிறான்.  பாட்டிக்கு ஒன்றும் புரியவில்லை.  வீட்டில் பாட்டி எங்கே பணத்தை ஒளித்து வைத்திருக்கிறாள் என்று தேடுகிறான்.  அவனுக்குப் பணம் கிடைக்கவில்லை என்ற நிலையில் வீட்டில் உள்ளவற்றை எடுத்து தூக்கிப் போட்டு கலாட்டா செய்கிறான்.   பணம் கிடைக்காத கோபத்தில் பாட்டியைத் தள்ளிவிடுகிறான்.  கலர் பென்சிலால் சுவர் முழுவதும் பாட்டியைக் கேலி செய்து வரைகிறான்.  பாட்டியின் செருப்பை ஒளித்து வைத்து விடுகிறான்.  பாட்டி அந்தத் தள்ளாத வயதிலும், செருப்பில்லாமல் தண்ணீர் எடுத்து வருகிறாள்.   பாட்டிக்கோ பேரன் மீது கோபமே வருவதில்லை.  பெரும்பாலும் பேசா மடந்தையாக இருக்கிறாள். அவன் தேவைகளை மெதுவாகத்தான் புரிந்து கொள்கிறாள்.

பேட்டிரி வாங்குவதற்காக பாட்டியை விட்டுவிட்டு தனியாக நடந்து கடைக்கெல்லாம் செல்கிறான். விடியோ கேமிற்கான பேட்டரி எங்கும் கிடைக்கவில்லை.  வரும் வழியில் வீட்டிற்கு வரும் வழியைத் தவற விடுகிறான்.அழுதுகொண்டே வருகிறான்.  யாரோ வழிபோக்கர் அவனைப் பத்திரமாகக் கொண்டு வருகிறார். 

பல சம்பவங்களின் கட்டுக்கோப்புதான் இந்தப் படம்.  பாட்டி மீது கோபம் இருந்தாலும், பாட்டிக்கு ஊசியில் நூல் கோர்த்துக் கொடுக்கிறான்.  வேண்டா வெறுப்பாக..

கிராமத்தில் அவன் வயதுடைய ஒரு சிறுமியும், வயல் வேலை செய்யும் சியோல் என்னும் ஒரு பையனும் அவனுக்கு அறிமுகமாகிறார்கள்.  சிறுவர்களுக்குள்ளே நடக்கும் மனப் பேதத்தை அருமையாகக் காட்சிப் படுத்துகிறார் டைரக்டர்.  மாடு பின்னால் துரத்தி வருவதை ஒரு வேடிக்கையான நிகழ்ச்சியாக சாங்கவும், அவனது தோழியும் எதிர் கொள்கிறார்கள்.  சியோல் தூக்க முடியாத பாரத்தைத் தூக்கிக் கொண்டு வருகிறான்.  அவனைப் பார்த்த சாங்க்வின் பின்னால் மாடு துரத்துகிறது என்று பொய் சொலலி அவனை துரத்துகிறான்.  பயத்தில் அவன் ஓடும்போது அவன் கீழே விழுந்து அடிப்பட்டு விடுகிறது.  சாங்க்வை அடிக்க வருகிறான்.  சாங்கவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.  பாட்டி அவனிடம் செய்கையில் மார்பை சுற்றி கையால் ஆட்டுவாள்.  அதேபோல் செய்கிறான்.  சியோல் ஒன்றும் சொல்லாமல் போய் விடுகிறான்.  

தோட்டத்தில் விளையும் பூசனிகளை எடுத்துக்கொண்டு பக்கத்தில் உள்ள ஊருக்குச் சென்று சந்தையில் விற்கிறாள் பாட்டி .  அவளிடம் யாருமே வாங்க வருவதில்லை.  பாட்டி சத்தம் போட்டு  விற்கிறாரள்.  சாங்கவி பாட்டியையே பார்த்துக் கொண்டிருக்கிறான்.  பூசனியை விற்றப் பணத்தில் பாட்டி சாங்க்விக்கு கேட்பதெல்லாம் வாங்கிக் கொடுக்கிறாள்.  பாட்டி மீது காரணம் இல்லாத கோபமாக இருக்கும் சாங்க்வி பாட்டி மீது அன்பைப் பொழிய ஆரம்பிக்கிறான்.    

பாட்டி மீது கோபம் இருந்தாலும், பாட்டியை முதலில் தவிர்க்க முடியவில்லை.  உதாரணமாக பாட்டி ரொம்பவும் களைப்பாகி படுத்து விடுகிறாள்.  பாட்டிக்கு இறந்து விட்டாளோ என்று பயப்படுகிறான் சாங்க்வி.  பாட்டியின் முகத்தில் கை வைத்துப் பார்க்கிறான்.  பயத்தால்.  இன்னொரு இடத்தில் சந்தைக்குப் போய்விட்டு திரும்பி வரும்போது பாட்டி சாங்க்வியை அவனுடைய நண்பர்களுடன் பஸ்ஸில் அனுப்பி விடுகிறாள்.  பாட்டி ஏன் வரவில்லை என்பது சாங்க்விக்குப் புரியவில்லை.  வீட்டுக்கு வந்தவுடன், பாட்டியை எதிர்பார்த்த சாங்க்வி பஸ் வருமிடத்தில் நின்றுகொண்டு ஒவ்வொரு பஸ்ஸக பாட்டி வருகிறாளா என்று பார்த்துக் கொண்டிருக்கிறான்.  பாட்டி வரவில்லை என்றவுடன் அவனிடம் பதட்டம் கூடி விடுகிறது.  பாட்டி நடந்து வருவதைப் பார்த்து வருத்தப் படுகிறான்.  
பேரன் என்ன குறும்பு செய்தாலும், பாட்டி அவன் மீது அன்பை காட்டத் தவறுவதில்லை.  நேர் மாறாக தன் அம்மாவிடம் கிடைக்கும் தண்டனையும், பாட்டியிடம் காணும் அன்பும் அவனை மாற்றுகிறது.  பாட்டியை விட்டு, அந்தக் கிராமத்தை விட்டு பிரியும்போது அவன் மனம் பேதலிக்கிறது.  பாட்டிக்காக வருத்தப் படுகிறான்.  பாட்டியைப் பிரியப் போகிற சமயத்தில் பாட்டிக்காக இரண்டு அட்டையில் இரண்டு வாசகங்களை எழுதி பாட்டியிடம் கொடுக்க விரும்புகிறான் ஒரு அட்டையின் வாசகம்  I am sick.  இன்னொரு அட்டையின் வாசகம் : I miss you.  .  பாட்டியைப் பிரிந்து அவன் அம்மாவுடன் செல்லும்போது பாட்டி நினைவாகவே இருக்கிறான்.  பஸ்ஸிலிருந்து திடீரென்று இறங்கி வேகமாக பாட்டியிடம் ஓடிப்போய் அந்த இரண்டு அட்டைகளைக் கொடுக்கிறான்.பஸ்ஸிலிருந்து பாட்டி செல்வதையே பார்த்துக் கொண்டிருக்கிறான்.  பாட்டியும் வருத்தத்துடன் செல்கிறாள்.  பேரன் கொடுத்த அட்டைகளைத் திரும்பி திரும்பிப் பார்க்கிறாள்.

கொஞ்சங்கூட போரடிக்காமல் ரொம்பவும் பிரமாதமாக எடுக்கப்பட்ட படம் இது. இந்தப் படம் வெளிவந்து 12 ஆண்டுகள் ஓடிவிட்டன.  இன்னும்கூட இந்தப் படத்தைப் பார்த்து ரசிக்க முடியும்.  

26.11.14

கசடதபற ஜனவரி 1971 - 4வது இதழ்
திட்டமற்ற....


எஸ். வைதீஸ்வரன்வானம் கட்டுப்பாடற்று,
பெற்றுத் திரியவிட்ட
மேகங்கள்,
பொல்லா வாண்டுகள்.
நினைத்த இடத்தில, கவலையற்று,
நின்ற தலையில் பெய்து விட்டு,
மூலைக்கொன்றாய் மறையுதுகள்,
வெள்ளை வால்கள்

14.11.14

கசடதபற ஜனவரி 1971 - 4வது இதழ்மூன்று ஜப்பானியக் கவிதைகள்


நடவு நடும் பெண்கள்
பாடும் பாட்டுகளிலே மட்டும்தான்
சேறு பட்டிருக்கவில்லை

                           - கொனிஷ் ரெய்லான்

முடியாது -
மனித உள்ளத்தை
யாரும் சரிவரப்
புரிந்து கொள்ள முடியாது.
ஆனால்
நான் பிறந்த ஊரில்
மலர்கள்
முன் போலவே
மலர்ந்து
மணம் வீசுகின்றன.

                          - ஸராயுகி

யாரோ கிழவன்
     - நான் அறியாத அந்நியன் -
என்னைத் தடுக்கிறான்
நான் கண்ணாடியில்
       பார்த்துக் கொள்ளும்போது

                          - ஹீடோமாரோ


                            தமிழில் :  க.நா.சு

9.11.14

விருட்சம் இலக்கியச் சந்திப்பின் ஆறாவது கூட்டம்                                                              
அழகியசிங்கர்
 25.10.2014 சனிக்கிழமை அன்று நடந்தது.   தமிழில் கவனிக்கப்பட வேண்டிய எழுத்தாளர் இரா முருகன் அவர்கள் தலைமையில் இக் கூட்டம் இனிதாக துவங்கியது. 

கூட்டத்தின் முதல் நிகழ்ச்சியாக விருட்சம் ஒவ்வொரு மாதமும் தேர்ந்தெடுக்கும் சிறுகதையைப் பற்றிய பின்னணியுடன் ஆரம்பமானது. 
உயிர்எழுத்து செப்டம்பர் மாதம் வெளிவந்த புதுச் சட்டை என்கிற ப முகமது ஜமிலுதீனின் கதையைத் தேர்ந்தெடுத்துள்ளோம்.  அதைப் பற்றிய குறிப்பை அடியேன் வாசித்தேன்.

பின், தேனுகா, ராஜம் கிருஷ்ணன் மறைவை ஒட்டி ஒரு நிமிடம்  மௌன அஞ்சலி நடத்தினோம். 

ஒரே மழை பயமாக இருந்ததால் கூட்டம் எங்கே நடக்காமல் போய்விடுமோ என்ற அசசம் எங்களை விட இரா முருகனுக்கு அதிகமாக இருந்தது.  நல்லகாலம்.  கூட்டம் இனிதே நடந்து முடிந்தது.

இரா முருகனின் விஸ்வரூபம் என்ற மெகா நாவலை  தினமும் சில பக்கங்கள் என்று படித்துக் கொண்டு வருகிறேன்.  எப்போது முடிக்கப் போகிறேன் என்பதை அம்பலப் புழை ஸ்ரீகிருஷ்ணன்தான் அறிவார்.

எனக்கு இந்த இடத்தில் ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும்.  காஞ்சிபுரத்தில் வே நாராயணன் என்ற ஒருவர் இருந்தார்.  அவர் ஒவ்வொரு மாதமும் இலக்கியக் கூட்டம் நடத்துவார்.  கூட்டம் முடிந்தவுடன் யார் யார் என்னன்ன பேசினார்கள், என்னன்ன கேள்விகள் கேட்டார்கள் என்பதை கொஞ்சங் கூட பிசகாமல் கூட்டம் முடிந்தவுடன் ஒப்பிப்பார்.  

நானோ அதுமாதிரி செய்ய இயலாதவன்.  மேலும் கூட்டத்தில் பேசாத விபரத்தையும் கூட்டத்தில் பேசியதுபோல் சொல்லக் கூடியவன்.  அந்தக் காலத்தில் கணையாழி குறுநாவல் போட்டியில் ஜெயமோகன், பாவண்ணன், இரா முருகன், சுப்ரபாரதி மணியன், அழகிய சிங்கராகிய நான் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் குறுநாவல்கள் கணையாழியில் படைத்துக் கொண்டு வருவோம்.  அதில் ஜெய மோகனும், இரா முருகனும் பிடிக்க முடியாத இடத்திற்குப் போய்விட்டார்கள். அப்படியென்றால் என்ன?  அதிகப் பக்கங்கள் கூடிய குண்டு குண்டு நாவல்களை எழுதி தள்ளுகிறார்கள்.  ஜெயமோகன் பிடிக்க முடியாத வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறார்.  இரா முருகனின் விஸ்வரூபம் நாவலை எப்போது படித்து முடிப்பேன் என்று தெரியவில்லை.  இந்தக் கூட்ட முடிவில் நான் அவரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டேன்.  'இத்தனைப் பக்ககங்கள் உடைய நாவலை எப்போது படித்து முடிப்பது' என்று.  அது ஒரு பிரச்சினை இல்லை என்பதுபோல்தான் இரா முருகன் குறிப்பிட்டார்.  
இரா முருகன் நாவல் மட்டுமல்லாமல், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் என்று பல தளங்களில் இயங்கிக் கொண்டிருப்பவர்.  முதலில் பேச ஆரம்பித்தபோது எப்படி எழுதவே தெரியாத அவர் எழுத்துத் துறைக்கு வந்தார் என்பதைக் குறிப்பிட்டார்.  கிட்டத்தட்ட 2 மணிநேரம் இரா முருகன் தம் கட்டி பேசியது ஆச்சரியமாக இருந்தது.  ஆனால் கேட்பவர்களுக்கு கொஞ்சங்கூட அவர் பேசியது அலுக்கவில்லை என்பது நிஜம்.  வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாகவே வந்தது.  எத்தனை எண்ணிக்கை என்பதை உங்களுக்குச் சொல்லப் போவதில்லை.  

நடிகர் கமல்ஹாசனுடன் அவருக்கு ஏற்பட்ட நட்பு, எழுத்தாளர் சுஜாதாவை சந்தித்த நிகழ்ச்சி என்றெல்லாம் குறிப்பிட்டார்.  அவர் சில படங்களுக்கு திரைக்கதை வசனமும் எழுதி உள்ளார்.  கிரேஸி மோகன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நாடகம் ஒன்றும் எழுதி உள்ளார்.  டிவியில் சீரியல் எழுதுவதையும் இப்போது ஆரம்பித்திருப்பதாகக் கூறி உள்ளார்.  அவர் முதலில் கதை எழுதத் தொடங்குவதற்கு காரணமாக இருந்தவர்களில் அவர் கல்லூரியில் வகுப்பெடுத்து இளம்பாரதி என்ற ஆசிரியர் என்று குறிப்பிட்டுள்ளார்.பின் மீரா.  இரா முருகன் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும்போது, இரவு பத்து மணிக்கு மேல் மேலை வீதியிலிருந்து கீழ வீதிக்கு நடை பயிலும் கறுப்பான உருவம் என்றெல்லாம் குறிப்பிட்டுப் போகிறார்.  

அவர் பேசியதை SONY RECORDER மூலம் பதிவு செய்துள்ளேன்.  இதை எப்படி இத்துடன் இணைப்பது என்பது மட்டும் எனக்கு இன்னும் தெரியவில்லை.  யாராவது ஒரே ஒரு முறை உதவி செய்தால் நன்றி உடையவனாக இருப்பேன்.  8.11.14

இக் கவிதையை எறிகிறேன் ஆகாயத்தின் மீது


ஷஸிகா அமாலி முணசிங்க

தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்கன்னத்துக்கு நீயளித்த அறையின் வீச்சில்
உடைந்து தெறித்தது மலையின் சிரசு
இடையறாது குருதியோடும் சதுப்பு நிலமாய் இதயம்
புதைந்தது குளிர்ந்த பள்ளத்தாக்கினிடையே

அருளும் பாதுகாப்பும் தரும்படி நாம்
உருவச் சிலைகளுக்கு மலர் வைக்கும்போதும்
நேசித்த மலை பற்றியே முணுமுணுத்தோம்

தென்னோலைக் கூரையினூடே தென்படும் வானத்தை நோக்கி
வசந்தங்களைக் கேட்டபோதும்
உழைத்துத் தேயும் கரங்களுக்குக் கிடைக்காது ஒருபோதும்
எனவே இக் கவிதையை எறிகிறேன் ஆகாயத்தின் மீது
உறங்குகிறேன் மண்ணின் கீழே வழமைபோலவேகுறிப்பு - அண்மையில் இலங்கையிலுள்ள மலையகப் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவின் போது உயிரிழந்த மற்றும் அநாதரவான அனைத்து தமிழ் உள்ளங்களுக்காகவும் !

4.11.14

அதைப் பற்றிச் சொல்வதற்கில்லை


எம்.ரிஷான் ஷெரீப்
கழுத்து நீண்ட வாத்துக்கள் பற்றிய உன் கதையாடலில்
சாவல் குருவிக்கு என்ன திரை
அதுவும் இருந்துவிட்டுப் போகட்டும்
அடித்த சாரலில்
வண்ணத்துப் பூச்சியின் நிறம் மட்டும் கரைந்தே போயிற்று
நல்லவேளை சருகுப் பூக்கள் அப்படியேதானே

பிறகென்ன
வற்றிய ஆழக் கடல்களின் நிலக் கரையில்
துருப்பிடித்துப் பாதி மணலில் மூழ்குண்ட
நங்கூரங்களின் கயிற்றோடு
உப்புக் கரித்துத் தனித்திருக்கின்றன சிதிலப் படகுகள்

அந்தி மாலையில் தூண்டிலிட்டமர்ந்து
வெகுநேரம் காத்திருக்கும் சிறுவன்
பாரம்பரிய விழுமியங்களைப் போர்த்தி
உணவு தயாரிக்கும் இளம்பெண்
நிலவொளியில் புயல் சரிக்க
போராடி அலையும் பாய்மரக் கப்பல்
அழிந்த மாளிகை
அசையாப் பிரேதம்

அது என் நிலம்தான்
உன் மொழி வரையும் ஓவியங்களில்
எல்லாமும் என்னவோர் அழகு

உண்மைதான்
மந்தையொன்றை அந்தியில்
நெடுந் தொலைவுக்கு ஓட்டிச் செல்லும்
இடையனொருவனை நான் கண்டிருக்கிறேன்
நீ சொல்வதைப் போல
காலத்தை மிதித்தபடிதான் அவன் நடந்துகொண்டிருந்தான்
நெடிதுயர்ந்த மலைகள்
உறைந்துபோன விலங்குகளைத்தான் தின்று வளர்கின்றன
ஆகவே மலைக் குகை வாசல்களில் அவன் அவைகளோடு
அச்சமின்றி ஓய்வெடுத்தான்

சொல்
மெய்யாகவே நீ கனவுதான் கண்டாயா

என்னைக் கேட்டால்
வாசப் பூஞ்சோலை
சுவனத்துப் பேரொளி
தழையத் தழையப் பட்டாடை
தாங்கப் பஞ்சுப் பாதணி
கால் நனைக்கக் கடல்
எல்லாவற்றிலும் நேர்த்தியும் மினுமினுப்பும்
தேவையெனில் அமைதியும்
தேர்ந்தெடுத்த மெல்லிசையும் என
எல்லாமும் இன்பமயம் என்பேன்

அத்தோடு
இன்னும் கூட இரவு
தினந்தோறும் கொஞ்சம் இருட்டை
எனக்காக விட்டுச் செல்கிறது கிணற்றுக்குள்
என்பதைச் சொல்வேன்
வேறென்ன கேட்கிறாய்

இலையுதிர் காலத்து மரத்தின் வலி
அதைப் பற்றிச் சொல்வதற்கில்லை30.10.14

கசடதபற டிசம்பர் 1970 - 3வது இதழ்காந்தி


ட்டி ஆர் நடராஜன்


இந்நாளில்
இந்தியர்க்குச்
சிக்கியதோர்
சீதக்காதி.
தொழுமரங்கள்


ந. மகாகணபதி


வேற்றூர்ப் புழுதியை
வீசிப் போகும்
வண்டிகளுக்குப் பூவிட்டு
வணங்கும் மரங்கள்

27.10.14

விருட்சம் தேர்ந்தெடுத்த மனதுக்குப் பிடித்த கதைகள்


                                              


அழகியசிங்கர்

செப்டம்பர் மாதம் சிறுகதை ஒன்றைத் தேர்ந்தெடுக்க பத்திரிகைகளை பலவற்றைப் புரட்டினேன்.  ஜøலை, ஆகஸ்ட் மாதங்களில் வெளிவந்த கதைகளை விட செப்டம்பர் மாதம் வெளிவந்த கதைகளின் எண்ணிக்கைக் குறைவாக இருக்கும்போல் தோன்றியது.  காலச்சுவடு ஒரே ஒரு கதையைத்தான் பிரசுரம் செய்திருந்தது.  அமிருதா ஒரு கதையும் பிரசுரம் செய்யவில்லை.  கதைகளின் தன்மையும் முதல் இரண்டு மாதங்களில் தென்பட்ட அவதியை உருவாக்கவில்லை.  பல கதைகளைப் படிக்கும்போது வேண்டாம் வேண்டாம் என்று ஒதுக்கவே தோன்றியது.  

குறிப்பாக ஆகஸ்ட் மாதம் பல கதைகள் சிறப்பாகவே எழுதப்  பட்டிருந்தன.  அந்தத் தன்மை செப்டம்பர் மாதக் கதைகளில் தென்படவில்லை.  ஆனாலும் சில பத்திரிகைகள் நம்பிக்கைத் தராமலில்லை.  

இ வில்சன் என்பவர் கல்கி 14.09.2014 இதழில் பாக்கியம் என்ற கதையை எழுதி உள்ளார்.  அதேபோல் கணையாழி செப்டம்பர் மாத இதழில் கிருஷ்ண வதம் என்ற கதையை எழுதி உள்ளார்.  கிருஷ்ண வதம் சிறப்பாக எழுதப்பட்ட கதை.  யோகேஸ்வரன் இரண்டு குழந்தைகளை அவர் வீட்டுக்கு லீவுக்காக அழைத்துக்கொண்டு போகிறார்.  இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தையை அழைத்துப் போக அவர்கள் வீட்டில் சம்மதிக்கவில்லை.  கீதா என்கிற அக் குழந்தைக்கு தண்ணியிலே கண்டம் பயம்தான் அதற்குக் காரணம்.  ஏற்கனவே ஒரு முறை அக்குழந்தைக்குதண்ணீரில் பிரச்சினை ஆகிவிட்டது.  யோகேஸ்வரன் சமாதானம் செய்து அண்ணன் தங்கை இரண்டு பேர்களையும் அவர் வீட்டுக்கு அழைத்துப் போகிறார்.  

யோகேஸ்வரன் வீட்டில் பல குழந்தைகளும் சேர்ந்து கொட்டம் அடிக்கும் இடம்.  ஆசையுடன் அவர்களை வரவழைத்து அன்பு பாராட்டுவரர்கள்.  இந்தக் கதையில் தண்ணியால கண்டம் உள்ள கீதாவிற்கு குளத்தில் குளிக்கும்போது பாம்பு கடித்து விடுகிறது.  அது ஒரு தண்ணீப் பாம்பு.  என்றாலும் அது ரொம்பும் அக் குழந்தையின் அம்மாவைப் பாதிக்கிறது.  திரும்பவும் விடுமுறை முடிவதற்குள் தன் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வருவதோடு அல்லாமல்  அவர்களைத் திட்டியும் தீர்த்து விடுகிறாள்.  குழந்தைகளை அழைத்துக் கொண்டு வந்தவர்களுக்கு வருத்தமாகப் போய் விடுகிறது.  இ வில்சன் இக் கதையைச் சிறப்பாக எழுதி உள்ளார்.  அதே போல் கல்கியில் அவர் எழுதிய பாக்கியம் என்ற கதையில் பாக்கியம் ஒரு விசேஷவேலையின் போது எல்லா வேலைகளையும் அவளே எடுத்துச் செய்கிறாள்.  அங்கு மிச்சமான சாப்பாடுகளை அங்கிருந்து வீட்டுக்கு எடுத்துக்கொண்டு வருகிறாள்.  காலையில் செய்த பொங்கலை அவள் வீட்டு மாடிற்கு கொடுத்து, மாடு எழுந்திருக்க முடியாமல் படுத்து விடுகிறது.  அந்தப் பதைப்பை கதையில் நன்றாகக் கொண்டு வந்திருக்கிறார்.

அதேபோல் தீராநதியில் எஸ் ராமகிருஷ்ணன் கதையான வானோர் என்ற கதையும், அதேபோல் உயிர்மையில் எழுதிய தனலட்சுமியின் துப்பாக்கி என்ற கதையும் சிறப்பாக எழுதப்பட்டட கதைகள்.  

உயிர்மையில் வெளிவந்த சாங்கியம் என்ற கதை.  இதை சிவபிரசாத் என்பவர் எழுதி உள்ளார்.  இறந்த உடல்களின் முடிகளை அப்புறப் படுத்தும் கதை.  இதை சாங்கியம் என்று குறிப்பிடுகிறார்கள்.  இறந்தவர் ஒருவர் முடியை எடுக்கும்போது இறந்தவர் மனைவி பக்கத்தில் இருந்து அதை கவனித்து வருகிறார்என்பதை உணர்கிறார் தண்டபாணி.  அவர் பின்னால் அவள் நின்றிருந்தாள்.  இறந்தவரின் துணியை இடுப்புக்குக் கீழே நீக்கும்போது அந்தப் பகுதி வாழைப்பழத்தை துண்டாக வெட்டியதைப் போலிருந்தது.  அதையாரிடமாவது சொல்ல வேண்டும் என்று நினைக்கும்போது, இறந்தவர் மனைவி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கிறார்.  இதை சிறப்பாகவே எழுதி உள்ளார் சிவபிரசாத்.  

அசோகமித்திரன் எழுதிய கதை உறுப்பு அறுவடை என்ற கதை.  இதுவும் சிறப்பாக எழுதப்பட்ட கதை.  அசோகமித்திரன் அவருடையநடையில் சிறப்பாக எழுதப்பட்ட கதை. 

நான் தேர்ந்தெடுத்த பத்திரிகைகளில் இந்த முறை தளம் பத்திரிகையும் சேர்த்துக் கொண்டேன்.  தளம் இதழ் எனக்கு செப்டம்பர் மாதம் கிடைத்தது.  அதை செப்டம்பர் மாத இதழாக எடுத்துக் கொண்டேன். 

அதில் வெளிவந்த எஸ் எம் ஏ ராம் எழுதிய தாத்தா காலத்து பீரோ என்ற கதை.   தாத்தா காலத்தில் தாத்தாவால் ஆசையாக தயாரித்த மரப்பீரோவை பாதுகாப்பது எத்தனைப் பிரச்சினையை உண்டாக்குகிறது என்பதே இக் கதை.  கடைசியல் பாட்டி தாத்தாவின் பீரோவைப் பார்க்காமலே இறந்து விடுகிறாள்.   அவளுடைய பேரன் தான் அந்தப் பீரோவைப் பார்க்கப் போகிறான்.

இந்த மாத சிறப்புக் கதையாக நான் தேர்ந்ததெடுத்த கதை ப.முகமது ஜமிலுதீன் எழுதிய புதுச் சட்டை என்ற கதை.  இக் கதை உயர் எழுத்து செப்டம்பர் மாத இதழில் வெளிவந்த கதை.  கதை சரளமான நடையில் எழுதப்பட்ட கதை.  கதையைப் படிக்க படிக்க சுவாரசியம் கூடிக்கொண்டே போகிறது.  ரஹ்மான் என்கிற பையன் பக்ரீத் வருவதை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறான்.  ஏனெனில் பக்ரீத் அன்றுதான் அவனுக்கு புதிய துணி கட்டிக்க கிடைக்கும்.  உண்மையில் இதுமாதிரி பண்டிகைத் தினங்கள் ஏழைகள் பாடு திண்டாட்டமாக இருக்கும்.  அவர்களால் புதுத் துணிகள் கூட வாங்க வழி இல்லாமல் இருக்கும்.  எப்படி ரஹ்மான் புதிய துணி வாங்க துடியாய் துடிக்கிறான் என்பதுதான் கதை.  அதற்கான முயற்சியில் ஈடுபடும்போது ரயில் விபத்து ஏற்படுவதைத் தடுக்கிறான்.  

அதன் மூலம் கிடைக்கும் புகழைக் கூட அவன் அறியாமல் இருக்கிறான். அவனுக்கு ரெடிமேட் கடையில் ஒரு சட்டைக்கு இரண்டு சட்டையாக பக்ரீத் அன்று கிடைக்கிறது.  

24.10.14

கசடதபற 3 வது இதழ் - டிசம்பர் 1970என்னுடைய மேட்டு நிலம்


கலாப்ரியா


என்னுடைய மேட்டு நிலம்
நேற்றுப் பெய்த மழையில்
குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தது

என்னுடைய மேட்டு நிலத்தை,
இன்றைய வெயில்
நெருப்பால் வருத்திக் கொண்டிருக்கிறது

(என்னுடைய மேட்டு நிலம்
நாளைய 'வெறுமையில்'
தவம் புரிந்து கொண்டிருக்கும்)

என்னால் - அதன்
எல்லா அனுபவங்களையும்
உணர முடிகிறது

ஏனென்றால்,
இறந்துவிட்ட - என்னை
அதில்தான் புதைத்திருக்கிறார்கள்21.10.14

நானும் பார்க்கிறேன் சினிமாக்களை......

2


                                                                                                 


அழகியசிங்கர்லைஃப் ஈஸ் ப்யூட்டிஃபுல் என்கிற ராபர்ட்டோ பெனினி இயக்கிய இத்தாலி படம் ஒன்றை பார்த்தேன்.  1997ல் வெளியான இந்த இத்தாலி படத்திற்கு சிறந்த நடிகர், சிறந்த அயல் நாட்டுப் படம் என்று பல விருதுகள் கிடைத்துள்ளன.  இதை இயக்கிய ராபர்ட்டோ பெனினி அவர்களே இப்படத்தில் கிய்டோவாக முக்கிய வேடத்தில் சிறப்பாக நடிக்கிறார்.  படத்தின் முதல் பாதி கிய்டோ அவளது காதலியான தோராவுடன் ஏற்படுகிற உணர்ச்சிகரமான தன்மையை வெளிப்படுத்துகிறது.  கிய்டோ ஒரு புத்தகக் கடையை நிறுவ முயற்சி செய்கிறான். தோராவை திருமணம் செய்து கொண்டு அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.  அவர்களுக்கு ஜோஸ்வான் என்ற பையன்.  கிய்டோ  யூத இனத்தைச் சேர்ந்தவன்.  ஹிட்டலரின் படைகள் அவர்கள் இருக்கும் நகரத்தில் ரோந்து வருகிறார்கள்.  கிய்டோ ஒரு யூத இனத்தைச் சேர்ந்தவன் என்று அவனை சந்தேகம் கொண்டு அழைத்துப் போகிறார்கள்.  இந்த இடத்தில் தன்னுடைய உணர்ச்சிகளை வெகுவாக மறைத்துக் கொண்டு அது ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியாக மாற்றுகிறாரன் கிய்டோ.  ஐந்து வயது தன் பையனான ஜோஸ்வான் இதன் தீவிரத் தன்மையை உணரக்கூடாது என்று அவ்வாறு செய்கிறான்.

ஜோஸ்வானுடன் கிய்டோ கைது செய்யப்படுகிறான்.  அவர்களை ஹிட்டலரின் வதைக் கூடத்தில் அழைத்துக்கொண்டு போகிறார்கள்.  கிய்டோவின் மனைவி தோரா யூத வகுப்பை சாராதவள் என்றாலும், கணவனும் மகனும் செல்லுமிடத்திற்கு அவர்களுடன் ரயிலில் செல்கிறாள்.  ஜோஸ்வான் தன் அம்மாவும் தங்களுடன் பிரயாணம் செய்வதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறான்.  ஹிட்டலரின் வதைக் கூடத்திற்கு அவர்களை அழைத்துச் செல்கிறார்கள்.  இவர்களைப் போல் பலரும் பயணம் செய்கிறார்கள்.  எந்த வசதியும் இல்லாத ரயிலில் மிருகங்களைப் போல் அவர்களை அடைத்தப்படி அழைத்துச் செல்கிறார்கள்.  

கிய்டோ இது மாதிரியான இக்கட்டில் பயணம் செய்தாலும் தன் மகன் ஜோஸ்வான் இது குறித்து எதுவும் அறிந்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறான்.  ஒரு பெரிய ஆபத்தை, சோகத்தின் உச்சத்தை கிய்டோ உணர்ந்து தன் பையனுக்கு தெரியக் கூடாது என்று நினைக்கிறான்.  லட்சக்கணக்கான யூதர்களைக் கொன்று குவிக்கும் சித்ரவதை முகாமிற்கு செல்கிறார்கள்.  முகாமில் தனியாக பெண்கள் இருக்கிறார்கள்.  கிய்டோவும், ஜோஸ்வாவும் ஆண்கள் முகாமில் இருக்கிறார்கள்.  ஒரு பெரிய அறையில் எல்லோரையும் போட்டு அடைத்து வைத்திருக்கிறார்கள்.  இந்தக் கொடூரமான தன்மை ஒரே அறையில் எல்லோரையும் அடைத்து வைத்திருக்கிற அறைகளில் தெரிகின்றன. எல்லோரும் மூளை குழம்பிப் போனவர்களாக, உடல் வலு இல்லாதவர்களாக, போராட்டத்தை வாய்விட்டுக் கூட தெரிவிக்க விரும்பாதவர்களாகத் தென் படுகிறார்கள்.  அந்த அறையில் அடைக்கப்பட்டவர்கள் ஒருவருக்கு ஒருவர்  பேசுவது கிடையாது.  ஹிட்டலரின் சிப்பாய்கள் முகத்தில் கருணையே இல்லாமல் கொடூரமாக நடந்து கொள்கிறார்கள்.    அவர்களுடைய நோக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அங்கிருப்பவர்களை கொல்வதுதான்.  அதனால் யாவரும் மன வருத்தத்துடன் இருக்கிறார்கள்.  அங்கிருப்பவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக எண்ணிக்கை குறைகிறார்கள். எதுவும் பேசமுடியாமல் எல்லோரும் பைத்திய நிலையில் இருப்பதுபோல காணப்படுகிறார்கள்.  அவர்களுடைய பாத்திர அமைப்பு வித்தியாசமாக இருக்கிறது.  அவர்களை ஒவ்வொரையும் அழிப்பதுகூட அவர்கள் முன் நடக்கவில்லை.  அவர்களை தனியாக அழைத்துப்போய்த்தான் அழிக்கிறார்கள்.

கிய்டோ தன் மகனிடன் எல்லாம் விளையாட்டு என்கிறான்.  இந்த விளையாட்டில் ஜோஸ்வா 1000 புள்ளிகள் எடுத்தால் அவனுக்கு பீரங்கி வண்டி கிடைக்கும் என்று கிய்டோ கூறி அவனை கற்பனையான விளையாட்டில் ஈடுபடுத்துகிறான்.  சோகத்தை மறைத்து எல்லாவற்றையும் பையனுக்காக நகைச்சுவை உணர்வாக மாற்றுகிறான்.  

இந்தப் படத்தின் மூலம் தெரியவருவது.

துக்கத்தை அதன் போக்கிலேயே விட்டு விடுவது என்பது.  அதை நகைச்சுவை உணர்வுடன் எற்றுக்கொள்ளும் தன்மையை கிய்டோ தனக்குள் ஏற்படுத்திக்கொள்கிறான்.  மகன் அதன் கொடூரத்தை புரிந்துகொள்ளாமல் இருக்கப் பார்த்துக்கொள்கிறான்.  

படம் முடிவில் ஜோஸ்வா அவன் அம்மாவிடம் போய் சேர்ந்து விடுகிறான்.  கிய்டோ தன் மனைவியைத் தேடப் போகும்போது தன்னை இழந்து விடுகிறான்.  எந்தக் காட்சியையும் மிகைப் படுத்தாமல் பிரமாதமான முறையில் படம் எடுத்துள்ளார்கள்.