Skip to main content

Posts

Showing posts from October, 2018

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 93

அழகியசிங்கர்    வாழ்வும் சாவே தஞ்சை ப்ரகாஷ் க.நா.சு. போயாச்சு! ரொம்ப நல்லதாச்சு! பாபாஜான் உனக்குத் தெரியுமா? ரொம்பபேருக்கு யோசிக்கவே வராது என்று! ரொம்பபேருக்கு நல்லது தேடிப்படிக்கத் தெரியாதே! தெரியுமா? அவர்தான் சொல்வார் அப்படி! க.நா.சு. ரெண்டு மூணுஸ்வீட் ஏக நேரத்தில் சாப்பிடுவார்! காப்பி என்னமோ அவருக்கு இனிச்சிண்டே கசக்கணும் நல்லா கசந்துண்டே இனிச்சாகணும் இலக்கியம்ன்னா பாவம்! அவருக்கு உணர்ச்சி வசப்பட்டு வழியப்படாது கவிதைன்னா அட! க.நா.சு.வுக்கு புதுக்கவிதைன்னாலும் கவிதையா ஒலிக்கப் படாது! பாபாஜான் ஆமா அவருக்கு வாழ்க்கைன்னா கூட அவர் வாழ்க்கை மாதிரி இன்னொண்ணு இருக்கப்படாது! வாழறது ஒண்ணு ஒண்ணும் புதூசா ஒவ்வொரு நாளும் கசக்கணும்! சிக்கலாயிருக்கணும் விடுவிக்க ஏலாததா! ஆமா கோணா மாணான்னுதான் இருக்கனும் பாபாஜான் - உனக்கு நகுலன் சொல்றா மாதிரி அப்டி ஒண்ணும் ஒடனே வாழ்க்கை நமக்கெல்லாம் க.நா.சு. 'து' மாதிரி “படக்”ன்னு முடிஞ்சுறாது! தெரியும் வாழ்க்கை மாதிரியே அவருக்கு சாவும் உணர்ச்சி வசப்படுத்தாமை கடைசி வரைக்கும் ப்ரக்ஞையோட விமர்சிக்கவே

சர்வேஷின் கதைகள் என்ற புத்தக வெளியீட்டுக் கூட்டத்திற்குச் சென்றேன்.

அழகியசிங்கர் எனக்குப் பிடித்த ஆர்யகவுடர் ரோடில் உள்ள வல்லப விநாயக கோயில் அருகில் உள்ள ஸ்ரீனிவாசன் தெருவில் உள்ள வி எம் எ ஹாலில் கூட்டம். எளிமையான கூட்டம்.  சத்யா ஜிபி அவர்கள் எழுதிய சிறுகதைத் தொகுப்பின் பெயர்தான் சர்வேஷின் கதைகள். கூட்டத்தில் எனக்கும் பேச சந்தர்ப்பம் கிடைத்தது.  சத்யாவின் கதைகளை அவருடைய தாயார் படித்து கதைகளைப் பற்றி அபிப்பிராயம் சொல்வார் என்று சத்யா குறிப்பிட்டார். 17 கதைகள்  170 பக்கங்கள் கொண்ட புத்தகம்.   சத்யாவை அவருடைய கதை ஒன்றை எடுத்து அது பற்றி கூறி விளக்கும்படி கேட்டுக்கொண்டேன்.  சி பி ராமசாமி ரோடு என்ற கதையைப் பற்றி குறிப்பிட்டார்.  நான் வீட்டிற்கு வந்தவுடன் அந்தக் கதையைத்தான் வாசித்தேன்.   அந்தக் கதையில் ஒரு இடத்தில் இப்படி எழுதியிருக்கிறார். 'கடிகாரப் பெண்டுலத்தை நிறுத்த முடிகிறது.  போராட்டம் நடத்தி இயங்கும் தொழிற்சாலையை நிறுத்த முடிகிறது.  தெருவில் ஒரு பேரணி, ஒரு ஊர்வலம் என்று சொல்லி போக்குவரத்தை நிறுத்த முடிகிறது.  ஆனால் யோசிகத்தபடி அலைபாயும் மனத்தைத்தான் நிறுத்த வழியில்லை '  என்று எழுதியிருக்கிறார். இவருடைய மற்

இலக்கிய அமுதம் என்ற பெயரில் நடந்த கூட்டத்தில் கு அழகிரிசாமியைப் பற்றி திருப்பூர் கிருஷ்ணன் பேசிய 3வது கட்ட ஒளிப்பதிவு.

22.09.2018 அன்று எழுத்தாளர் கு அழகிரிசாமி நினைவாக ஒரு இலக்கியக் கூட்டமொன்றை அவருடைய புதல்வர் ராமசந்திரன் ஏற்பாடு செய்துள்ளார். இலக்கிய அமுதம் என்ற பெயரில். அக் கூட்டத்தில் திருப்பூர் கிருஷ்ணன் பெசிய மூன்றாவதும் கடைசிப் பகுதியான ஒளிப்பதிவை இங்கு வெளியிடுகிறேன். அழகியசிங்கர்

எழுத்தாளர் கு அழகிரிசாமி நினைவாக இலக்கிய அமுதம் என்ற பெயரில்.

அழகியசிங்கர் 22.09.2018 அன்று எழுத்தாளர் கு அழகிரிசாமி நினைவாக ஒரு இலக்கியக் கூட்டமொன்றை அவருடைய புதல்வர் ராமசந்திரன் ஏற்பாடு செய்துள்ளார்.  இலக்கிய அமுதம் என்ற பெயரில்.   அக் கூட்டத்தில் திருப்பூர் கிருஷ்ணன் பெசிய இரண்டாம் ஒளிப்பதிவை இங்கு வெளியிடுகிறேன்.

எழுத்தாளர் கு அழகிரிசாமி நினைவாக 'இலக்கிய அமுதம்' என்ற பெயரில்.

அழகியசிங்கர் 22.09.2018 அன்று எழுத்தாளர் கு அழகிரிசாமி நினைவாக ஒரு இலக்கியக் கூட்டமொன்றை அவருடைய புதல்வர் ராமசந்திரன் ஏற்பாடு செய்துள்ளார்.  இலக்கிய அமுதம் என்ற பெயரில்.   அக் கூட்டத்தில் திருப்பூர் கிருஷ்ணன் பெசிய முதல் ஒளிப்பதிவை இங்கு வெளியிடுகிறேன்.

வெளிப்படையான மனிதர் ந முத்துசாமி

அழகியசிங்கர் நேற்று முகநூலில் அந்தச் செய்தி வந்தபோது நம்ப முடியாமல் இருந்தது.  ஆனால் அது உண்மை என்று உணர்ந்தபோது வருத்தமாக இருந்தது. - விருட்சம் இலக்கியச் சந்திப்பு கூட்டங்களில் ந முத்துசாமி பேசியிருக்கிறார்.  ஒருமுறை ஞானக்கூத்தன் கவிதைகளை எடுத்துக்கொண்டு கூத்துப் பட்டறை நடிகர்களை வைத்து நடிக்க வைத்திருக்கிறார். எப்படி தமிழை உச்சரிக்க வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பவர் முத்துசாமி.  எப்படி ஒரு கவிதையைப் படிக்க வேண்டும் புரிந்து கொள்ள வேண்டுமென்று சோதனை செய்து பார்ப்பவர். -  ஐராவதம் என்ற எழுத்தாளரை ஸ்கூட்டர் பின்னால் உட்கார வைத்து ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் இலக்கியச்   சிந்தனைக் கூட்டத்திற்கு அழைத்துக்கொண்டு போனேன்.  முத்துசாமிக்கு அவரைப் பார்த்தவுடன் ஆச்சரியம்.   "என்னய்யா நீயெல்லாம் இங்கே வந்திருக்கே?" என்று முத்துசாமி கேட்க, ஐராவதம் என்னைக் காட்டி,  "இவர்தான் என்னை தூசி தட்டி அழைத்து வந்திருக்கிறார்," என்றார்.  எனக்கு அதைக் கேட்டு தாங்க முடியாத சிரிப்பு. - முத்துசாமி விருட்சத்திற்குக் கட்டுரைகளும் கவிதைகளும் எழு

விருட்சமும் நண்பர்கள் வட்டமும் சேர்ந்து நடத்தும் 5வது கூட்டம்

தலைப்பு    :     சங்க இலக்கியம் ஓர் அறிமுகம் தொடர் உரை:    முனைவர் வ வே சு இடம் :      கிளை நூலகம், 7 இராகவன் காலனி 3வது தெரு,    ஜாபர்கான் பேட்டை, சென்னை           (காசி தியேட்டரிலிருந்து வருகிற நேர் தெரு-      அசோக்நகர் நோக்கி வரவேண்டும்) தேதி 25.10.2018 (வியாழக்கிழமை) நேரம் மாலை 5.45 க்கு பேசுவோர் குறிப்பு  : . விவேகானந்தர் கல்லூரியின் முதல்வராகப் பணி புரிந்து ஓய்வுப் பெற்றவர்.  இலக்கியப் பேச்சாளர்.  தமிழ் வளர்த்த சான்றோர் என்ற தலைப்பில் 52 கூட்டங்கள் தொடர்ந்த நடத்தி உள்ளார். நண்பர்கள் வட்டம் தொடர்புக்கு : அழகியசிங்கர் - தொலைபேசி எண் : 9444113205

பத்து கேள்விகள் பத்து பதில்கள் - 20 - வண்ணதாசன்

அழகியசிங்கர் தாமிரபரணி மகா புஷ்கரம் காரணமாக நான் திருநெல்வேலிக்குச் செல்ல நேரிட்டது.  இரண்டு நாட்கள் திருநெல்வேலியில் தங்கியிருந்து பல கோயில்களுக்குச் சென்றதும். கல்லிடைக்குறிச்சியில் மகா புஷ்கரத்தில் கலந்து கொண்டதும் மறக்க முடியாத நிகழ்ச்சி.   திருநெல்வேலியில் வசித்து வரும் வண்ணதாசனை சந்தித்து பத்து கேள்விகள் பத்து பதில்கள் பேட்டி எடுத்துள்ளேன்.  நான் அவசரம் அவசரமாக அவரைச் சந்தித்தேன்.  முதலில் அவரைச் சந்திக்க முடியுமா என்ற சந்தேகம் கடைசி வரை என்னிடம் ஒட்டிக்கொண்டிருந்தது.  பின் எப்படியோ சந்தித்து விட்டேன்.  பேட்டியும் எடுத்து விட்டேன்.  அவரும் நிதானமாகப் பதில் அளித்திருக்கிறார். வழக்கம் போல சில தடங்கல்கள் பேட்டி எடுக்கும்போது ஏற்படும்.  அது மாதிரி ஏற்பட்டது.  ஆனால் எல்லாவற்றையும் மீறி வண்ணதாசன் சிறப்பாக பதில் அளித்திருக்கிறார்.  அவருக்கு நன்றி. 

மனதுக்குப் பிடித்த கவிதைகள் 92

அழகியசிங்கர் அசடு என்ற நாவல் மூலம் புகழ் பெற்றவர் காசியபன்.  கேரளா பல்கலைக் கழகத்தில் எம் ஏ தத்துவத்தில் கோல்ட் மெடல் வாங்கி உள்ளார்.  'முடியாத யாத்திரை'  வரும்போது அவர் உயிரோடு இல்லை.  ஒரு நீண்ட கவிதையுடன் சேர்த்து 25 கவிதைகள் உள்ளன. இத் தொகுப்பை 300 பிரதிகள் அச்சடித்திருந்தேன்.  ஆனால் பாதிக்குமேல் என்னிடம் உள்ளன.  இத் தொகுப்பு விலை ரூ.60.  பாதி விலைக்கு அதாவது ரூ.30க்குக் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்.   வேண்டுமென்றால் தொடர்பு கொள்ளவும். மின்கம்பி மேலே  காசியபன் மின்கம்பி மேலே  அந்த குருவிகள் இரண்டும் எத்தை நோக்கி  தியானம் புரிகின்றன?  கிழக்கே  நாளை பிறப்பிக்கும்  செக்கச் செவந்த சூரியனையா?   இல்லை ,  மேற்கே  இரவெலாம் பிரகாசித்து  களைத்து அணையமுயலும்  ஒளியற்ற சந்திரனையா?  எத்தை நோக்கி  தியானம் செய்கின்றன?  தெற்கே ஓங்கி உயர்ந்து நிற்கும்  பாறை குன்றையும்  அதன் உச்சியில் நிற்கும்  மொட்டை மரத்தையுமா?  இல்லை, இல்லை  தலைகளைக் குனிந்து  தங்களை நோக்கி  இது முன்னமே எனக்கு  தெரியாமல் போனதேன்?  ப

துளி : 8 - சனிக்கிழமை கிளம்புகிறேன்

துளி : 8 - சனிக்கிழமை கிளம்புகிறேன் அழகியசிங்கர் தாமிரபரணி புஷ்கர்க்கு சனிக்கிழமை நாங்கள் குடும்பத்துடன் போகிறோம்.  கட்டாயம் வண்ணதாசனைச் சந்தித்து என் சிறுகதைத் தொகுப்பைக் கொடுக்க நினைக்கிறேன்.  அது நடக்குமா என்பது தெரியாது.  ஹோட்டல் கங்காவில் தங்கப் போகிறேன்.  சுற்றி வேற இடங்களுக்கும் போகத் திட்டம்.  கூட்டத்தை நினைத்தால் எனக்குத் திகைப்பாக இருக்கிறது.  கூட்டம் நெரிசல் உள்ள இடங்களுக்கு நான் போக விரும்ப மாட்டேன்.  உதாரணமாக ஐய்யப்பன் கோயிலுக்கும், திருப்பதி கோயிலுக்கும் நான் போக விரும்ப மாட்டேன்.  

விருட்சத்தில் பிரசுரமான மொழிபெயர்ப்பு கவிதைகள்

அழகியசிங்கர்   டேவிட் சட்டன் கம்ப்யூட்டர் அறை, நடு இரவு   குகையின் சில்லிப்பாய்க் காற்று... இரண்டு மேலங்கிகளாவது இங்கே வேண்டும். பருவகாலங்களில்லை, வேறுபாடுகளுமில்லை. சுவர்களின் ரீங்காரமே இரவிலும் பகலிலும். அலமாரி அடுக்குகளில் ஏறி வீழ்கிறது . வெள்ளோட்டுக் கூரையின் வெளிச்சம். எல்லாமே இங்கு நிழலின்றிச் சுதந்திரமாயுள்ளன. சந்தேகமின்மையின் இருப்பிடம் இதுவே; இங்கேதான் நான் வாசம் புரிகிறேன். கட்டளைக் கிணங்கும் அசரீரிகளினிடையில் இயங்கி பாதுகாப்பாய் உணர்கிறேன். இந்தத் திரையைப் பார்த்து நடுநிசியின் குழிந்த கண்களுடன் குறிப்பெடுக்கத் தாமதிக்கையில் உடனே தோன்றுகிறது பசுமைத் தீயில் ஒளிரும் எழுத்தாகக் காவியத்தின் பதில்: 'ஆரம்பி.' இதன் சமாச்சாரங்களெல்லாம் எனக்குப் புரியும் : ஆணையிடுகிறேன். இந்த விசித்திர விலங்குகள் புர்ரிட்டுக்கொண்டு அடி பணிகின்றன. அர்த்தமற்ற ஆனால் அழகான இவற்றை வசப்படுத்த எனக்கு 15 ஆண்டாயிற்று. சுண்டெலி சமைத்த, நேர்த்தியான தர்க்க வளைகளாய் எலித்தன்மையுடன் ஓடும் போட்டித்திறனால் கட்டுப்பட்ட இதன் உட்புறத்தில் பிரமிக்கிறது குறிகளின் மின்சாரம்.

துளி : 7 - மேலும் கட்டுரைகள்

அழகியசிங்கர் சங்ககாலம் ஒரு மதிப்பீடு  என்ற தலைப்பில் தொ பரமசிவன் ஒரு கட்டுரை மேலும் பத்திரிகையில் எழுதி உள்ளார். அக் கட்டுரையின் ஒரு பகுதியை இங்குத் தர விரும்புகிறேன் : " நமக்குக் கிடைத்துள்ள சங்க இலக்கியப் பாடல்களின் தமிழ்ப் புலவரின் மூலப்படைப்பு எது, மொழிபெயர்ப்புப் பாடல்கள் எவை  என்பது இன்னும் முடிவு செய்யப் பெறவில்லை.  கி மு 4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாலி மொழியில் எழுதப்பட்ட தர்மபதத்தில் 7ஆவது பகுதியான அரசந்தவர்க்கம் என்னும் பகுதியில் உள்ள இரண்டாவது பாடலை எடுத்துக்காட்டி ஒளவையாரின் üüநாடாகொன்றோýý என்னும் பாடல் (187) தர்மபதப் பாடலின் நேர் மொழிபெயரப்பு என்பதை மு.கு ஜகந்நாத ராஜா நிறுவி உள்ளார். இதுபோலவே கணியன் பூங்குன்றனின் யாதும் ஊரே என்ற பாடலும் தர்மபதத்தில் உள்ள மற்றொரு பாடலின் மொழிபெயர்ப்பே என்பார் தெ.பொ.மீ." இப்படியெல்லாம் இருக்க வாய்ப்புண்டா என்பதை என்னால் நம்ப முடியவில்லை.  முதலில் ஒளவையாரும், கனியன் பூங்குன்றனனும் எங்கே தம்மபதத்தைப் படித்து இருக்கப் போகிறார்கள்.

அவசியம் பார்க்க வேண்டிய படம்

அழகியசிங்கர் சத்யஜித்ரேயின் டூ என்ற குறும்படத்தை எல்லோரும் ரசிக்க வேண்டும். இந்தப் படத்தில் மொழியே இல்லை. 12 நிமிடங்களில் இந்தப் படம் பார்ப்பவரை வியக்க வைக்கும்.

புதிய தலைமுறை பத்திரிகைக்கு நன்றி

அழகியசிங்கர் இந்த இதழ் புதிய தலைமுறை பத்திரிகையில் (18.10.2018) திறந்த புத்தகம் என்ற நூலிற்கான விமர்சனம் வெளிவந்துள்ளது.  அதை எழுதியவர்ன  ஸிந்துஜா.    'மனதைத் திறக்கும் புத்தகம்'   என்ற தலைப்பில் அவர் எழுதிய விமர்சனத்தை அப்படியே இங்குத் தர விரும்புகிறேன்.   புத்தக விமர்சனம் எழுதிய ஸிந்துஜாவிற்கும், புதிய தலைமுறை ஆசிரியருக்கும் என் நன்றி உரித்தாகும்.  முகநூல் முகமூடி அணிந்தவர்களின்  ஒரு விளையாட்டு அரங்கமாகிவிட்டது. பெரும்பாலோருக்கு அணிந்திருக்கும் முகமூடிகளைக் களைந்து   'சட்'  ட ன் று  இன்னொன்றை எடுத்து அணிவதில் சிரமமும் இல்லை ,  தயக்கமும் இல்லை . முகநூலில் கரை புரண்டு ஓடும் வார்த்தை வெள்ளத்துக்கு உற்பத்தி ஸ்தானம் இவர்களே.. சிலருக்கு ஜாதி, சிலருக்கு மதம், சிலருக்குப் பொறாமை, பலருக்கு டைம் பாஸ் என்று இந்த விளையாட்டு அரங்கத்தில் கூவமும் விரிந்து ஓடுகிறது .   இத்தகைய வினோதமான முகநூல் உலகில் உலா வருவதைப் பற்றி பேசுகிறது எழுத்தாளரும் கவிஞருமான அழகியசிங்கரின் இந்த 'திறந்த புத்தகம்'.       மிக எளிய நடையில், சாதாரண விஷயங்களையும்கூட உற்சாகத்த

விருட்சம் கூட்டத்திற்கான அழைப்பிதழ்

அழகியசிங்கர் வரும் 13.10.2018 அன்று நடைபெற உள்ள கூட்டத்திற்கான அழைப்பிதழை இங்கு அளிக்கிறேன். கூட்டத்திற்கு வரவும்.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 91

அழகியசிங்கர்   மனதுக்குப் பிடித்த கவிதைகள் என்ற தலைப்பில் நான் 100 கவிதைகள் கொண்டு வர உள்ளேன் முதலில்.  அதன்பின் தொடரந்து 200, 300 கவிதைகள் என்று கொண்டு வர உள்ளேன்.  முதல் 100ஐப் புத்தகமாகக் கொண்டு வருகிறேன்.  முதல் தொகுதிக்கு என் கவிதை உட்பட இன்னும் 9 கவிதைகள்தான் தேவை.  இக் கவிதைகளை கவிதைப் புத்தகங்களிலிருந்து தயாரிக்கிறேன். இதில் விட்டுப்போன கவிதைகளும் பின்னால் உருவாகப் போகும் கவிதைத் தொகுதிகளில் சேர்க்கப்படும். இக் கவிதைத் தொகுதிக்கு முன்னுரை என்று எதுவும் கிடையாது.  இக் கவிதைகளை வாசிக்கிறவர்கள் ஒவ்வொருவரும் கவிதைகள் மூலம் தங்களுக்கான் முன்னுரையைப் புரிந்துகொள்ள வேண்டும.  ராஜமார்த்தாண்டன் இன்று நம்மிடம் இல்லை.  ஆனால் இந்தக் கவிதையில் ஒரு வரி எழுதியிருப்பார்.  விதிக்கப்பட்ட என் காலமோ மணித்துளிகளாய் விரைகிறது என்று.  இந்த வரிகள்தான் என்னை யோசிக்க வைக்கிறது. அதுவரை ராஜமார்த்தாண்டன்  எனக்கான மலர்  எங்கோ மலர்ந்திருக்கிறது  எத்திசையில் என்பதறியேன் அதன் நறுமணம்  இதழ்களின் நிறம்  யாதொன்றுமறியேன் விதிக்கப்பட்ட என் காலமோ  மணித்துளிக

விருட்சம் இலக்கியச் சந்திப்பு - 43

        தலைப்பு  :   மறுதுறை மூட்டம்                       Fog on the Other Shore சிறப்புரை :    நாகார்ஜ÷னன்  இடம் :      ஸ்ரீராம் குரூப் அலுவலகம்     மூகாம்பிகை வளாகம்     சி பி ராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே     ஆறாவது தளம்      மயிலாப்பூர்     சென்னை 600 004 தேதி 13.10.2018 (சனிக்கிழமை) நேரம் மாலை 6.00 மணிக்கு பேசுவோர் குறிப்பு :  அமைப்பியல்வாத விமர்சகர்  அனைவரும் வருக, அன்புடன் அழகியசிங்கர் 9444113205

ஞானக்கூத்தனின் பிறந்த தினம் இன்று

அழகியசிங்கர் ஒவ்வொரு முறை திருவல்லிக்கேணி செல்லும்போது ஞானக்கூத்தனைப் பார்க்காமல் இருக்க மாட்டேன்.  விருட்சம் பத்திரிகை அச்சடித்து வரும்போதெல்லாம் முதலில் ஞானக்கூத்தனிடம் ஒரு பிரதி கொடுத்துவிட்டு சிறிது நேரம் பேசிவிட்டு வருவேன். திருவல்லிக்கேணி தெருக்களின் முனைகளில் ஞானக்கூத்தனை பலமுறை சந்தித்துப் பேசிவிட்டு வீட்டிற்கு வந்திருக்கிறேன். அவர் வீட்டுத் திண்ணைகளிலும் மொட்டை மாடிகளிலும் பேசியிருக்கிறேன்.  ஒருமுறை பார்த்தசாரதி கோயில் எதிரில் உள்ள குளத்துப் படிக்கட்டிகளில் உட்காரந்து பேசியிருக்கிறேன். இதுமாதிரி திருவல்லிக்கேணி என்றாலே ஒரு அடையாளத்தை ஞானக்கூத்தன் என் மனதில் ஏற்படுத்தியிருக்கிறார்.  அதேபோல் அவர் கவிதைகள் மூலமும் ஒரு ஞாபகத்தை உண்டாகியிருக்கிறார்.    இன்று ஞானக்கூத்தனின் பிறந்தநாள்.  இம்பர் உலகம் என்ற பெயரில் வெளிவந்த கவிதைத் தொகுதிதான் அவருடைய கடைசி கவிதைத் தொகுதி.  அந்தத் தொகுதியிலிருந்து ஒரு கவிதையை இங்குத் தர விரும்புகிறேன்.         சுசீலாவும் பிறரும் மௌனியும் சுசீலாவும் தெருவில் நடந்தால் மக்கள் எல்லோரும் சுசீலாவைப் பார்ப்பார்கள். நக

மனதுக்குப் பிடித்த கவிதைகள் -90

அழகியசிங்கர்        மனதுக்குப்பிடித்த கவிதைகள் என்ற தொகுப்பில் முதலில் 100 கவிதைகளைத் தேர்ந்தெடுக்க உள்ளேன்.  கூடிய சீக்கிரம் புத்தகம் உருவாகிவிடும்.முதல் தொகுதியில் விட்டுப்போன கவிஞர்களின் கவிதைகள் இரண்டாவது தொகுப்பில் இடம் பெறும்.  இரண்டாவது தொகுதியிலும் விடுப்பட்ட கவிதைகள் மூன்றாவது தொகுதியில் வந்து விடும்.  ஒவ்வொரு தொகுதியும் 100 கவிதைகள் கொண்ட புத்தகம். இந்தப் புத்தகத்திற்கு முன்னுரை என்று எதுவும் கிடையாது.  கவிதைகள்தான் முன்னுரை. கவிதைகளைப் படிக்கும் ஒவ்வொருவரும் அவை வெளிப்படுத்தும் விதத்திலிருந்து  தங்களைப் புரிந்துகொள்ள முடியும்.  .   பெரும்பாலும் இக் கவிதைகள் யாவும் கவிதை நூல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வெளிவருகின்றன.   இனி வாழ்நாளில் தேன்மொழி தாஸ் இனி வாழ்நாளில் கடவுளைக் காணவே இயலாது  என்ற சத்தியத்திற்குப் பின்  எனது நாய் குட்டியை  சர்வ வல்லமையுள்ள கடவுளே  என அழைக்கத் துவங்கினேன் நன்றி :  நிராசைகளின் ஆதித்தாய் - கவிதைகள் - தேன்மொழி தாஸ் - மொத்தப் பக்கங்கள் : 56 - வெளியீடு : உயிர்மை பதிப்பகம், புதிய எண் : 79, ப.எண் 39 ம

சத்யானந்தன் பேச்சின் ஒளிப்பதிவு 2 (2)

அழகியசிங்கர் சினிமா தொலைக் காட்சி என்னும் காட்சி ஊடகம் தரும் அனுபவமும் வாசிப்பின் மேன்மையும் என்ற தலைப்பில் சத்யானந்தன் அவர்கள் மூகாம்பிகை வளாகத்தில் 15.09.2018 (சனிக்கிழமை) அன்று  உரை நிகழ்த்தினார்.  அந்த உரையின் இரண்டாம் பகுதியை இங்கே ஒளிபரப்பு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.  

சத்தயானந்தன் பேச்சின் ஒளிப்பதிவு 1 (2)

அழகியசிங்கர் சினிமா தொலைக் காட்சி என்னும் காட்சி ஊடகம் தரும் அனுபவமும் வாசிப்பின் மேன்மையும் என்ற தலைப்பில் சத்யானந்தன் அவர்கள் மூகாம்பிகை வளாகத்தில் 15.09.2018 (சனிக்கிழமை) அன்று  உரை நிகழ்த்தினார். அந்த உரையின் முதல் பகுதியை இங்கே ஒளிபரப்பு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.  கேட்டு உங்கள் கருத்துக்களை நல்குக.      

துளி :5 - இன்று காந்தி பிறந்த தினம்

துளி :5 - இன்று காந்தி பிறந்த தினம் அழகியசிங்கர் காந்திய அறிஞர் என்று பரவலாக அறியப்படும் லா சு ரங்கராஜனை ஒரு முறை பெ சு மணி அவர்கள் மூலம் சந்திக்கும்படியான வாய்ப்பு கிடைத்தது.  அப்போது அவர் உடல் நிலை சரியில்லாமல் படுத்தப்படுக்கையாக இருந்தார். அவர் காந்தியைப் பற்றி எழுதிய இரண்டு புத்தகங்களை அளித்தார்.  ஒரு புத்தகம்பெயர் 21 ஆம் நூற்றாண்டில் மகாத்மா காந்தி.  இன்னொரு புத்தகம். பிரார்த்தனையின் மகிமை பற்றி மகாத்மா காந்தி. நான் அதிகமாக சேகரித்து வைத்திருப்பது காந்தியைப் பற்றிய புத்தகங்களும் பாரதியார் பற்றிய புத்தகங்களும்தான்.  ஆங்கிலத்தில் தன்னைப் பற்றி எழுதிய ஒரு சிறிய புத்தகமும் வைத்திருக்கிறேன்.  அந்தப் புத்தகத்தில் காந்தி தன்னை மகாத்மா என்று சொல்லிக்கொள்வதில் விருப்பம் இல்லாதவராக இருக்கிறார். தன்னை யாரும் மகாத்மா என்று கூப்பிடுவதை அவர் விரும்பவில்லை. தனக்கு சிலை வைப்பதை காந்தி  ஒரு போதும் விரும்பியதில்லை.  அதேபோல் தன்னை புகைப்படம் எடுப்பதையும் அவர் விரும்பவில்லை.  ஒருமுறை அவருடைய சிலை ஒன்றை பத்து லட்சம் ரூபாய் செலவு செய்து மும்பையில் பொது இடத்தில் வைப்பதாக இருந்தது.

விருட்சத்தில் பிரசுரமான மொழிபெயர்ப்பு கவிதைகள்

அழகியசிங்கர்   மார்ஸிலிஜஸ்மார்டினைடிஸ் நித்தியம் அதிகாலை விழித்த கிழவன பார்வையில் வாசல் முன் அன்றைய சுமை. நெருப்பு வளர்த்தல், கட்டளையிடல், வாளிகளின் ஒலி கிழவனின் பெருமூச்சு அனைத்துமே அடக்கம் அச்சுமையில் அவிழ்க்கப்பட்ட சுமையில் ஆற்றவேண்டிய காரியங்களால் நிறைந்து போனது முற்றம் முழுதும். கதவின் கீச்சொலி வைக்கோலின் குசுகுசுப்பு ஜன்னலின் பளிச்சிடல் கால்நடைகளின் பெருமூச்சு பறவைகளின் இன்னிசை மனிதர்களின் பேச்சரவம் சக்கரங்களின் சடசடப்பு அந்தியும் வந்தது இன்பமயமான நீண்ட அந்திமாலை. மூலம் : லிதுவேனியக் கவிதை  ஆங்கில வழி தமிழில் : நஞ்சுண்டேஸ்வரன். (நவீன விருட்சம் ஜøலை - செப்டம்பர் 1989)

நீங்களும் படிக்கலாம் - 45

அசோக மி த்திரன் நாவல் குறித்து உரையாடல் அழகியசிங்கர் இந்த முறை முடிச்சூர் ரோடில் உள்ள மோஹினி வீட்டிற்கு அழகியசிங்கரும் ஜெகனும் வந்தார்கள்.   மோஹினிக்கு ஒரே மகிழ்ச்சி. மோஹினி அவர் கணவரை அறிமுகப்படுத்தினார். அழகியசிங்கர் : நான் மாம்பலத்திலிருந்து வருகிறேன்.  இவ்வளவு தூரத்திலிருந்து மோஹினி என்னைப் பார்க்க வருவது எனக்கு ஆச்சரியம். மோஹினியின் கணவர் சாரதி :  உங்களைப் பற்றி அடிக்கடி சொல்வாள்.  அப்படி என்ன சார் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். மோஹினி : தூரம் என்பது நம் மனதில்தான் இருக்கிறது. நம் பக்கத்தில் வீட்டில் ஒருவர் இருப்பார்.  ஆனால் நம் மனதைப் பொறுத்தவரை அவர் தூரத்தில் இருப்பார்.  நாம் போய்ப் பார்க்க மாட்டோம். அழகியசிங்கர் : உண்மைதான்.  உங்கள் கணவர் ஒரு கேள்வி கேட்டார்.  என்ன பேசிக்கொண்டிருக்கிறோம் என்று.  நாங்கள் பேசுவது புத்தகங்களைப் பற்றியும், எழுதுபவர்களைப் பற்றியும்தான். சாரதி : அவ்வளவு இருக்கிறதா பேசுவதற்கு. அழகியசிங்கர் : ஆமாம். அவ்வளவு இருக்கிறது.  புத்தகங்களையே படித்துக்கொண்டிருப்பவர்களுக்கு அதிலேயே உழன்று கொண்டிருப்பார்கள்.  ஆனால் உ