Skip to main content

Posts

Showing posts from August, 2012
தந்த கோபுரங்கள்   அரசானாலும் கம்பெனியானாலும் தந்தகோபுரத்தின் மீதிருப்பார்கள் உயர்நிலையதிகாரிகள் அவர்களின் தலைமுடியெப்போதும் ஆகாயத்தைத் தொட்டுக்கொண்டிருக்கும் ஏனென்றால் அவர்கள் நவீன வெள்ளைத்துரைகள் கோட்டு சூட்டோடு பிறந்தவர்கள் கோட்டுகளில் வசதிகளதிகம் உள்பாக்கெட்டுகள வெளிபாக்கெட்டுகள் நிறைய. அதிகாரிகளின் கண்களுக்கு அலுவலர்கள் புழுக்களாகத் தெரிவதால் கொட்டிக்கொண்டேயிருப்பார்கள். பிராணிகளாகத் தெரிவதால் மிரட்டிக்கொண்டிருப்பார்கள் மந்திரியை மோசடிப் பெருவணிகனை, சேலைகளை பார்த்த கணமே பல்வரிசை முழுக்கத் தெரியும். பூச்சாண்டியெல்லாம் ஆபீசில்தான் வீட்டில் ஆட்சி மதுரைதான். வருடமிருமுறை பழையகார்போய் புதுக்கார் வந்தாகவேண்டும். இல்லையென்றால் இல்லறம் இடியாப்பம்தான் ஐயாக்களின் லீலைகளத்தனையும் தனிச்செயலாளரெனக்கு அத்துபடி சிலர் போர்த்திப் படுப்பார்கள் சிலர் படுத்துப் போர்த்துவார்கள் மாற்றல்கேட்ட மணிமேகலையின் மஞ
அவர்களின் கதைகள் கதகதப்புக்காக மூட்டியத் தீயைச் சுற்றிக் கிழிந்த கம்பளிகள் பழைய சாக்குகளுக்குள் தமைக் குறுக்கிக் குழுமியிருந்தனர் கதை பேச. அவர்களுக்காகவே அவர்கள் புனைந்து கொண்ட கதைகளில் அவர்களுக்கு மட்டுமே திறப்பதாகக் கருவூலக் குகைகள் தற்காலிகமாகவேனும் வறுமையை மறக்க. அவர்களைத் தவிர எவராலும் விடுவிக்க முடியாத புதிர்களை ஆலோசித்து உருவாக்கிப் பெருமிதத்துடன் சிரித்துக் கொண்டார்கள் ஏளனங்களை மறக்க. அவர்களால் மட்டுமே அழிக்க முடிகிற அரக்கர்களையும் அவர்களை மட்டுமே நேசிக்கிற தேவதைகளையும் உலவ விட்டார்கள் ஒடுக்கப்படுவதையும் ஒதுக்கப்படுவதையும் மறக்க. மீளாத் துயருடன் நாளும் அக்கதைகளைக் கேட்டபடி அவர்களுக்காகவே மின்னிக் கொண்டிருந்தன.. ஆதிக்கவாதிகளால் நலிந்து அழிந்து போன அவர்களது உறவுகள், நட்சந்திரங்களாக வானத்தில். *** -ராமலக்ஷ்மி
எல்லாருக்குமான நதி எல்லாருக்குமான நதியாய் இருப்பதிலே தான் எப்பொழுதும் திருப்தி எனக்கு தாகம் தணித்துவிடவோ கறைகளை கழுவிடவோ பச்சைகளை செழித்து விடவோ கூரான கற்களை முனைமழுக்கிடவோ இறுமாந்திருந்த கற்களை துகள்களாக்கிடவோ கரைப்புரண்டு ஓடி கடலில் கலந்திடவோ தான் தீராமல் ஓடிக்கொண்டிருக்கிறேன் சில வேளைகளில் பிண்டங்களும் கீழத்தெருக்களின் எச்சில் இலைகளும் எருமைகளின் சாணக்கழிவுகளும் திருமணவீட்டின் எஞ்சிய விருந்தும் ஒன்றாகவே கலந்து மிதந்துவருகின்றன. இருந்தும் ஒவ்வொருவருக்கான நதியாகத்தான் என்னை எல்லாரும் பார்த்துக்கொண்டிருக்கின்றனர் - கவி.
க.நா.சு யார்? அழகியசிங்கர் சமீபத்தில் க.நா.சுவிற்கு ஒரு இலக்கியக் கூட்டம் நடந்தது.  அவரது நூற்றாண்டை ஒட்டி இக்கூட்டம் நடந்தது. நடத்தியது சாகித்திய அகாதெமி என்ற அமைப்பு. அதில் பேசியவர்களில் ஒருசிலரைத் தவிர பலர் க.நா.சு யார் என்று கேட்பவர்கள்.  சில ஆண்டுகளுக்கு முன் நான் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்தேன்.  அக்கூட்டத்தில் நான் ஒரு கட்டுரை வாசித்தேன்.  கட்டுரையின் தலைப்பு க.நா.சு யார் என்பதுதான்.  க.நாசு மட்டுமல்ல, இன்னும்கூட பல எழுத்தாளர்களை நாம் யார் என்றுதான் கேட்போம்.  மெளனி யார்?  புதுமைப்பித்தன் யார்?  சி சு செல்லப்பா யார்? ந.பிச்சமூர்த்தி யார்?  என்று பல யார்களை வைத்திருப்போம்.  தமிழர்களிடையே இதுமாதிரியான அவலமான நிலைக்கு ஏற்பட்டுள்ளது.  கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் நமது கேரளா அல்லது மேற்கு வங்காளம் சேர்ந்த மக்கள் எல்லாம் ஓரளவு அவர்களுடைய எழுத்தாளர்களைப் பற்றிய அறிவை தக்க வைத்திருக்கிறார்கள். சிசு செல்லப்பா மரணம் அடையும் தறுவாயில் அவரைச் சுற்றி அரசாங்கத்தில் பெரிய பதவியில் இருக்கும் முதலமைச்சர் வந்துகூடப் பார்க்கவில்லை.  ஆனால் அதே தருணத்தில் கேரளாவில் தகழி சிவசங்கரம்பி
பந்தநல்லூரில் கிடைத்த பதவி உயர்வு அழகியசிங்கர் 7. நான் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தாலும் என் சிந்தனை முழுவதும் என் குடும்பத்தைப் பற்றியே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது.  நான் எடுத்த முடிவு சரிதானா என்றெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தேன்.  என் தம்பி எனக்கு போன் பண்ணி விஜாரித்தான்.  ''என்ன உனக்கு கலெக்டர் உத்தியோகமா கொடுத்துள்ளார்கள்.  ஏன் போகணும்னு ஆசைப்படறே? கீழே இருக்கிறவனும் உன்னை மதிக்க மாட்டான்.  அதேபோல் மேலே இருக்கிறவனும் மதிக்க மாட்டான்.  பெரிய சம்பளமும் கிடையாது. '' அவன் சொன்னது நூத்துக்கு நூறு உண்மை என்பதை நான் உணர்ந்தேன். இதை அங்கே சென்றபிறகுதான் உணர்ந்தேன்.  தம்பி பெரிய பதவியில் இருப்பவன்.   என் முட்டாள்தனத்தை நினைத்து பெரிதாக வருந்துவதைவிட வாய்விட்டுச் சிரித்தால் சரியாகிவிடும் என்று தோன்றும்  நான 50வது வயதை எட்டிக் கொண்டிருக்கிறேன்.  என் பெண்ணிற்கு திருமணம் ஏற்பாடு செய்து விட்டேன்.  ஆனால் திருமணம் நடக்கும் தருணத்தில் பெண்ணுடன் இல்லாமல் பந்தநல்லூரில் இருக்கிறேன்.   விடுமுறை எடுத்துக்கொண்டு வருவதிலிருந்து எல்லோரிடமும் தொங்க வேண்டும்.  திர
 வீடு வந்த நாளிலிருந்து இந்த வீட்டில் நான்கு அறைகளிலிருந்தன இரண்டு கூடங்கள் பெரிதாக இருந்தன சமையல் செய்ய தாராளமான இடம் முகம் கழுவ பாத்ரூம் போக என பலருக்கும் இடங்கள் பரந்து வீற்றிருந்தன தேவையான நீர் எல்லோருக்கும் கிடைத்தது. தெரு முனையில் கடையில் எல்லாம் கிடைத்தன நின்றால் பஸ் எளிதாக வர பஸ் ஸடாண்டுகள் சில நாட்கள் மட்டும் வீட்டில் கூட்டம் நிரம்பி வழிந்தன ஒவ்வொருவராய்ப் போக கூட்டம் இல்லாமல் இருக்க வேண்டியவர்கள் மட்டும் இருந்தார்கள். கூடத்தில் கலகலவென்று பேசிய பேச்சுக் குரல்கள் முற்றிலும் அடங்கி விட்டன. இப்போது வீட்டில் நானும் வீடும்தான் பேசிக் கொண்டிருக்கிறோம். அழகியசிங்கர்.
சாகசம் கருவறைச் சிசுவின் தரையிறங்கும் தருணம் தாய்வசமில்லை. கொடியறுந்து தனியான மினிமனிதனுக்குப் பசி முதற்பாடம். முலைப்பால் ருசி தனிப்பெருங்கருணை. தேனீக்குப் பூ, மீனுக்கு மீன் மானுக்குப் புல், புலிக்கு மான் வேடனுக்குப் புலியென சங்கிலித்தொடர் ரகசியம் மூளைக்குளத்தில் பூ விரியும் ஆகாயத்தில் அந்தரவிளக்குகள் அகிலத்தில் இருள்விலக்கும் படைப்பு நுணுக்கமாய் திட்டமிட்டதுபோல. கண் காட்சி காணும் மனம் சிருஷ்டி ரகசியம் தேடும் கடவுள்துகளை விண்டு பார்க்கும் கண்டிராத முதல் கடவுள்துகளைத் தேடும் அண்டப்பெருவெளியளக்கும் சாகசம் நிகழ்த்தும் எறும்பு. \ லாவண்யா
அறுந்த மஞ்சக் கயிறு.. வித்யாசாகர் விதியை மதியால் வெல்லலாம் என்பார்கள்; அன்பிருந்தால் அருகே வரும் எமனைக்கூட எட்டி காலால் உதைத்துவிடலாம் என்பதன் அர்த்தம்நோக்கி பிறக்கிறது இச் சிறுகதை.. அது ஒரு வெள்ளிக்கிழமை, விமல் ஓடிவந்து எகுறி கட்டிலில் மல்லாந்துப் படுத்துக்கொண்டிருக்கும் கலையின் மேல் குதிக்கப்போக அவள் அவனை கைதூக்கி தடுத்து தட்டிவிட்டு வெடுக்கென ஓரமாக ஒதுங்கிக்கொள்ள கீழே விழயிருந்த விமல் எதையேனும் பிடித்து தன்னை விழாமல் காத்துக்கொள்வதற்காக அவளின் தாலிக் கயிற்றைப் பிடித்து இழுத்துவிடுகிறான், அது அறுந்து அவன் கையோடு போய்விடுகிறது. கலைக்கு தாலி அறுந்ததும் பதற்றம் தாங்கமுடியவில்லை. ஐயோ கடவுளே ஈஸ்வரா என்று அலறுகிறாள். சாமியறைக்கு ஓடிப்போய் குங்குமத்தை எடுத்து நெற்றியில் பூசிக் கொண்டு கொஞ்சம் தாளியிலும் கண்ணீர்மல்க அப்பி வைக்கிறாள். தாஜ் ஓடிவந்து தாலிக் கயிற்றை வாங்கி அவளுடைய கழுற்றில் மீண்டும் கட்டிவிட்டு, அசடு இதற்கெல்லாம் போயா இப்படி அழுவாய் என்று சொல்லி அவளுடைய நெற்றியில் ஒரு முத்தமிடுகிறான். “வெள்ளிக்கிழமை அதுவுமா இப்படி அறுந்துப் போச்சே தாஜ்” “அதனாலெ
கடவுளின்குரல் இறந்தநண்பனின் கைத்தொலைபேசியை ஒருமுறை தொடர்புகொண்டுபார்கிறேன் இம்முறை மறுமுனையில் தொடர்பு எல்லைக்கு அப்பாலிருப்பதாகச்சொன்னகுரல் கடவுளுடையது ரவிஉதயன்
முற்றுகை விடுமுறைநாட்களில் கைப்பேசிகள் குடும்பக்கதைகள் சொல்கின்றன. அவைகளில் காதல்கதைகள் மர்மக்கதைகள், சோக்கஃகதைகள் பலவகையுண்டு. ஒவ்வொன்றும் தனித்தனிக்கதையாகத் தெரிந்தாலும் அவற்றின் சாராம்சமொன்றுதான். ஒருகூரையின்கீழ் பலதீவுகளாயான உறவுகளின் உரிமைப்போர்களால் அகந்தைக்கலகங்களால் வீடுகள்குட்டிச்சுவர்களானதுதான் . அப்பாவின் கடிதங்களை உன்னிப்பாக படிக்கமுடிவதும் விடுமுறை நாட்களில்தான். என் கிராமத்து ந்தி மணல்கிணறானதும் (ஏ) மாற்று விதைகளை விதைத்து பொன்வயல் பொட்டல்காடானதும் தாலாட்டும் தெம்மாங்கும் ஊமைகளானதும் அப்பாவுக்கு இருமையின் அடையாள இழப்புகளாய் தெரிவது காலம் பின்னுக்குத்தள்ளும் ஒரு கிழவனின் ஆற்றாமை மட்டுமில்லையென உணர்கிறேன். கழனிகளைத் தின்று வளர்ந்த கான்க்ரீட் வனங்களிலிருந்து பரவும் பேராசைத்தீயின் நடுவில் ஒரு ரோபோவாய் பட்டப்பகலில் வெறிநாய்கள் பெண்மாமிசம் தின்னும் நகரில் பிழைக்கிறேன். கல்வெட்டாய் கண்முன் நிற்கிறது காலம் இந்தக்கல்வெட்டின் தர்மகர்த்தாக்கள் யார்? அவர்கள் மலைகளை விழுங்கும் மாயம் செய்பவர்கள். அவர்கள் அதிகாரத்துக்கு அர
         சுமை   சுமக்கமுடியாமல் சுமையை இறக்கிப்போட்டு அவன் போய்விட்டான். அவர்கள் சுமக்கிறார்கள் சுமக்கமுடியாமல்.         தீர்க்கதரிசி   கூடுகட்டவொரு கடன் மகனின் கண்ணைத் திறக்கவொரு கடன் மகளின் காதலை மணமாக்க ஒரு கடன். காலில் சக்கரம் கட்டி காலத்தை சேமிக்கவொரு கடன் ஆயுள்காப்பீட்டுப் பத்திரத்தை அடகுவைத்தொரு கடன் ஆறுமாத்தஃதுக்கொரு நகைக்கடன் அவ்வப்போது  கடனட்டைக்கடன்   அம்மா ஒரு தீர்க்கதரிசி.   லாவண்யா
பந்தநல்லூரில் கிடைத்த பதவி உயர்வு அழகியசிங்கர் 6. நாம் எதைப் பெறுவதாக இருந்தாலும் அதற்குக் கூலி கொடுத்தாக வேண்டும்.  பந்தநல்லூர் பதவிக்கு நான் நன்றாகவே கூலி கொடுத்துவிட்டேன்.   இன்னும் யோசிக்கப்போனால் இதைப்பற்றி ஏன் இப்படி தீவிரமாக யோசிக்க வேண்டுமென்று தோன்றியது.  அழகியசிங்கரிடம் சொன்னபோது, ''ஒருவிதத்தில் சரி, இன்னொரு விதத்தில் சரியில்லை,'' என்றார். கும்பகோணம் செல்லும் அரசாங்கப் பஸ்ஸில் ஏறிக்கொண்டேன்.  கையில் ஒரு புத்தகம் வைத்திருந்தேன்.  அந்தப் புத்தகத்தின் பெயர்.  கொத்தமங்கலம் சுப்பு எழுதிய பந்தநல்லூரில் பாமா.  என்னால் அந்தப் புத்தகத்தை எடுத்து சில பக்கங்கள்கூட படிக்க முடியவில்லை.  ஏன் என்று தெரியவில்லை.  எல்லோரையும் விட்டுவிட்டு வந்துவிட்டேன்.     புத்தகம் படிக்கும் பழக்கம் எனக்கு அழகியசிங்கர் மூலம்தான் ஏற்பட்டது. அவர்தான் எங்கே புத்தகம் கிடைத்தாலும் விலைக்கு வாங்கி பத்திரப்படுத்துவார். அசோகமித்திரன், ஜானகிராமன் என்று வித்தியாசமான எழுத்தாளர்களின் புத்தகங்களைப் படிக்கக் கொடுப்பார். ஆனால் அதெல்லாம் ஆரம்பத்தில்தான். எனக்கும் அழகியசிங்கருக்கு
மேலும்  அன்பு செய்வதை விடுத்து கொலை செய்தலை கையாள்தல் பூதாகரமான அன்பிற்கு நீ என்னையும் நான் உன்னையும் அறிமுகப்படுத்தியதின் முன்னமே தன் தற்கொலை டைரியில் பதிந்து வைத்திருந்ததின் குறிப்பொன்றை சற்று முன் வழியில் கண்ட அதிகம் பரிச்சயமுள்ள நிமிர்த்த முடியாத வாலுடைய ஜீவன் ஒன்று சொல்லிப் போகிறது தன் பாஷையில் மேலும் உன்னிலிருந்து திரும்பிக்கொண்டிருக்கிறேன் உன்னிற்கு ஆறுமுகம் முருகேசன்
உன் காலடி வானம் அன்றைய மழைக்கால முன்னிரவில் அவளது நீண்ட நேரக் காத்திருப்பின் முடிவு பேருந்துத் தரிப்பிடத்தில் தேங்கி நின்றதோர் கணம் தாண்டிச் சென்ற எவரையோ அழைத்துப் பேசி கூடச் செல்லுமுனது பார்வையின் கீழே நழுவியதவளது பூமி தெருவோரம் எவரோ வெட்டி வீழ்த்தியிருந்த மரத்தினை நோக்கிக் கூடு திரும்பிய பட்சிகள் இருளாய் வட்டமிட்ட அன்றைய இரவு ஒரு சாத்தானின் உருவம் கொண்டது அந்தகாரத்தில் உனது நடை மீன்களின் நீச்சலை ஒத்திருந்தது நீ எடுத்து வைத்த ஒவ்வொரு எட்டிலும் நதிகள் உதித்தன தண்ணீரில் தோன்றிய மலையின் விம்பத்தில் தலைகீழாய் ஏறினாய் வானவில் தொட்டில் அந்தரத்தில் ஆடிய அம் முன்னந்திப் பொழுதில் இதுநாள் வரையில் அவள் கண்டிருந்த மேகங்கள், வெண்ணிலவு, நட்சத்திரங்களெல்லாம் உன் காலடியில் நீந்தின அந்தப் பயணத்தின் முடிவில் இருவரும் பிரிந்துவிடுவதான உறுதி தீர்மானமாயிற்ற பின்னரும் உனக்காக மட்டுமே காத்திருந்தவளை விழுங்கிய அம் மௌனச் சிலந்தி நீர் வலைப்பின்னல்களின் மீது இன்னும் ஊர்கிறது இரவின
கல்லும் கடவுளும்.. வித்யாசாகர் மூடிய கண்களின் ஆழத்தில்  பளிச்செனத் தெரிகிறதந்த  வெளிச்சம்; வெளிச்சத்தை  உதறிப் போட்டு எழுந்தேன்  கடவுள் கீழே கிடந்தார்!! பாவம் கடவுளென தூக்க  நினைத்தேன் -  விழுந்தவர்கள் பலர் நினைவில் வர  விழுந்துக் கிடவென்று விட்டுவிட்டேன் உன் கோபம் நியாயம் தான்  உன்னை இப்படி படைத்தது  என் குற்றம் தானே என்றார் கடவுள் உளறாதே நிறுத்து  உன்னை  இல்லையென்று எண்ணிதான் வணங்கினேன்  இருக்கிறாய் என்று தெரிந்திருந்தால் என்  உறவுகளைப் புதைத்த குழியில் உன்னையும் புதைத்திருப்பேனென்றேன் கடவுள் வருத்தப் பட்டார்  அந்த குழிகளிலிருந்து நிறைய பேர் பிறப்பர்  உறுதி என்றார் அப்படியா  பெரிய ஞானவாக்கு தருவதாக நினைப்பா  எழுந்து போ' அதலாம் எங்களுக்குத் தெரியுமென்றேன் உண்மையாகவே எழுந்துப் போய்விடவா  பிறகு வருத்தப்பட மாட்டாயே என்றார் நிறைய பட்டுவிட்டோம்  அதில்  இதுவும் ஒன்றாக இருக்கும் போ என்றேன் உடம்பு சற்று குலுங்கி  கீழே சரிந்துப் போனேன் ஐயோ என்னாச்சு என்று என்  மனைவி வந்து தூக்கி அமர்த்துகிறார்  கத்தி பதறி எல்லோரையும் அழைக்கிறாள்  குடும்பமே சூழ்ந்து நின்று  கத்தி அலறியது க
நதி இலை எறும்பு உன் வார்த்தைகளின் தடம் பற்றி நான் நடந்துகொண்டிருக்கிறேன் நீ ஓயாமல் பேசிக்கொண்டிருக்கிறாய்   அன்பை காதலை நம்பிக்கையை துரோகத்தை கோபத்தை வன்மத்தை வெறுமையை நிறைவை கொழுத்த உன் கன்னத்தில்  திரண்டிருக்கும் அம்மச்சம் என் கண்களில் விழுந்து உறுத்துவதை அறியாமலேயே..! ****** செ.சுஜாதா, பெங்களூர்.
எதையாவது சொல்லட்டுமா....75 அழகியசிங்கர்  போன மாதம் ஒரு நாள் திருநாவுக்கரசிடமிருந்து போன் வந்தது.  அந்த மாதம் இறுதியில் அவர் பணியிலிருந்து மூப்பு அடைகிறார்.  அதை ஒரு  மூன்று நட்சத்திர ஓட்டலில் கொண்டாடுவதற்காகவே விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.  என்னை அழைத்தார். என்னைப்போல் வங்கியில் பணிபுரியும் நண்பர் திருநாவுக்கரசு.  அந்த விழாவில் கவிதை வாசிக்கவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.  36 ஆண்டுகள் வங்கித் தொழிலில் இருந்து பணி மூப்பு அடைகிறார்.  ஒருவர் எந்தவிதப் பிரச்சினையும் இல்லாமல் ஓய்வு பெறுகிறார் என்றால் நிச்சயமாக வங்கித் தொழிலில் கொண்டாட வேண்டிய விஷயம்தான். பணிமூப்புக்காக விழா நடத்துவது என்பது புதிய முறை.  சிலர் போஸ்டர் ஒட்டி கூட விழா நடத்துகிறார்கள்.  இந்த விழா நடத்துவதன் முக்கிய நோக்கம் என்ன?  அவருடன் பழகிய பல நண்பர்களைச் சந்திப்பது. அப்படி சந்திப்பின் நிகழ்ச்சியின்போது நண்பரைப் பற்றி நாலு வார்த்தைகள் வருபவர்கள் பேச வேண்டுமென்று அவர் நினைத்திருக்கலாம். கமகமவென்று சாப்பிடும் மணத்துடன் அந்தப் பெரிய கூடம் வீற்றிருந்தது. திருநாவுக்கரசுடன் அந்தக் காலத்தில் வங்கிப் பணி புர