Skip to main content
தந்த கோபுரங்கள்
 
அரசானாலும்
கம்பெனியானாலும்
தந்தகோபுரத்தின் மீதிருப்பார்கள்
உயர்நிலையதிகாரிகள்
அவர்களின் தலைமுடியெப்போதும்
ஆகாயத்தைத் தொட்டுக்கொண்டிருக்கும்
ஏனென்றால் அவர்கள் நவீன வெள்ளைத்துரைகள்
கோட்டு சூட்டோடு பிறந்தவர்கள்
கோட்டுகளில் வசதிகளதிகம்
உள்பாக்கெட்டுகள வெளிபாக்கெட்டுகள் நிறைய.
அதிகாரிகளின் கண்களுக்கு
அலுவலர்கள் புழுக்களாகத் தெரிவதால்
கொட்டிக்கொண்டேயிருப்பார்கள்.
பிராணிகளாகத் தெரிவதால்
மிரட்டிக்கொண்டிருப்பார்கள்
மந்திரியை மோசடிப் பெருவணிகனை, சேலைகளை
பார்த்த கணமே பல்வரிசை முழுக்கத் தெரியும்.
பூச்சாண்டியெல்லாம் ஆபீசில்தான்
வீட்டில் ஆட்சி மதுரைதான்.
வருடமிருமுறை பழையகார்போய்
புதுக்கார் வந்தாகவேண்டும். இல்லையென்றால்
இல்லறம் இடியாப்பம்தான்
ஐயாக்களின் லீலைகளத்தனையும்
தனிச்செயலாளரெனக்கு அத்துபடி
சிலர் போர்த்திப் படுப்பார்கள்
சிலர் படுத்துப் போர்த்துவார்கள்
மாற்றல்கேட்ட மணிமேகலையின்
மஞ்சத்தில் துஞ்சினான் ஒருவன்
கடித்தஃதில் கையெழுத்துப்போட
கை வாய் சுத்தமில்லாமல்
கண்ணாடிக்கூண்டிலிருந்த ஒருவன்
என்னைப் பணியவைக்க
'என் பேனா உன் தலையெழுத்தை
எழுது' மென்றான் என்னிடம்.
அவன் தலையெழுத்து
ஐஸ்கட்டிமேல் படுக்கவைத்தார்கள்
விசாரணையின்போது.
இந்தப்பேனாவால்தான்
வாக்குமூலம் எழுதித்தந்தேன்.
 லாவண்யா

Comments

கவிதை ஒரு கதையையே சொல்கிறது ...

தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி…