Skip to main content

Posts

Showing posts from April, 2023

கவிதை வாசிக்கலாம் வாங்க.. 2/அழகியசிங்கர்

வெள்ளிக்கிழமை  (28.04.2023) மாலை 6.30 மணிக்கு  நடந்த    சூம்   கூட்டத்தில்    சிறப்பாகக்   கவிதை வாசித்தோம். ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து கொண்டோம். அதன்   பதிவைக்   காணொளியில் இங்குப் பதிவிடுகிறோம். கண்டு ரசியுங்கள். மற்றவர்க்கு விண்டு கூறுங்கள். இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம். இனிமேல் நமது குழுவின் தலைப்பு 'கவிதை வாசிக்கலாம் வாங்க.' கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் எந்தக் கவிதையும் வாசிக்கலாம். நீங்கள் வாசிக்கும் கவிதையைப் பற்றி  இன்னொருவர் விமர்சிப்பார். உதாரணமாக A கவிதை வாசிக்கிறாரென்று வைத்துக் கொள்ளுங்கள் அக்கவிதையை B விமர்சிப்பார். B கவிதையை C விமர்சிப்பார். அன்புடன்  அழகியசிங்கர் 9444113205

விருட்சம் நடத்தி முடித்த கதைஞர்களின் நிகழ்ச்சி - 53/அழகியசிங்கர்

  வெள்ளிக்கிழமை - மாலை 6.30 மணிக்கு விருட்சம் நடத்திய கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி சூம் மூலமாக. கூட்டத்தின் காணொளியைக் கண்டு களியுங்கள். நிகழ்ச்சி எண் - 53 சமகால இந்தியச் சிறுகதைகளை எடுத்துப் பேசினார்கள். 1. ந.பானுமதி - குஜராத்தி மொழியில் கன்ஷ்யாம் தேசாய் எழுதிய கூட்டம் 2. ராஜாமணி - டோக்ரி மொழியில் வேத்ராஹி எழுதிய பால்காக்கும் நோனோவும் 3. இந்திர நீலன் சுரேஷ் - கன்னட மொழியில் வைதேஹி எழுதிய சௌகந்தியின் - தனிமொழிகள் 4. நாகேந்திர பாரதி - கொங்கணி மொழியில் ஹேமாச்சார்யா எழுதிய சுமதி 5. ஜெ.பாஸ்கரன் - மணிப்புரி மொழியில் ஒய்.இபோம்சா எழுதிய தண்ணீர் 6. எஸ்ஆர்சி - பஞ்சாப் மொழியில் கே.எஸ்.துக்கல் எழுதிய வாடகைக் காரோட்டி அழகியசிங்கர் 9444113205 Please read daily.navinavirutcham.in

கவிதை வாசிக்கலாம் வாங்க.. 1

   வெள்ளிக்கிழமை - தமிழ் வருடப் பிறப்பன்று  (14.04.2023) மாலை 6.30 மணிக்கு   சூமில்  சிறப்பாக நடந்து முடிந்தது. இனிமேல் நமது குழுவின் தலைப்பு 'கவிதை வாசிக்கலாம் வாங்க.' கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் எந்தக் கவிதையையும்  வாசிக்கலாம். ஆனால் ஒரு நிமிடம் நீங்கள் வாசிக்கும் கவிதையைப்  பற்றிப்  பேச வேண்டும்   நீங்கள் வாசிக்கும் கவிதையைப் பற்றி  கருத்துகளைத் தெரிவித்த உங்களுக்கு நன்றி. நிகழ்ச்சியின் காணொளியைக் கண்டு களியுங்கள். அன்புடன்  அழகியசிங்கர்

விருட்சம் நடத்திய கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி - 52

 07.04.2023 -  மாலை - (வெள்ளிக்கிழமை) - 6.30 மணிக்கு விருட்சம் நடத்திய கதைகளைக்  கொண்டாடும் நிகழ்ச்சியின் காணொளியைக் கண்டு ரசியுங்கள்.  நிகழ்ச்சி எண் - 52 முதன் முறையாக ஒரே குடும்பத்தைச் சார்ந்த இரண்டு பெண் எழுத்தாளர்கள்  கதைகளை எடுத்துப் பேசினோம். எழுத்தாளர் கமலா நடராஜன் (அம்மா) சிறு கதைகளைக் குறித்து  1.   ந.பானுமதி  - ராமனைக் தேடி 2.  ரம்யா வாசுதேவன் -  சாதிகள் இல்லையடி பாப்பா 3.  பி.ஆர். கிரிஜா -    - இழப்பு இரண்டாம் நிகழ்வு எழுத்தாளர் கிரிஜா ராகவன் (மகள்) சிறு கதைகளைக் குறித்து 1.   ரேவதி பாலு  - ரௌத்திரம் பழகு 2.  சாந்தி ரஸவாதி  -   மகள் தாய்க்காற்றும் உதவி 3. மீனாட்சி சுந்தரமூர்த்தி  - அழகி அன்புடன் வரவேற்கிறேன், அழகியசிங்கர் 9444113205 Pl visit daily.navinavirutcham.in

இது க.நா.சு வின் சிறப்புக் கூட்டம்

  அழகியசிங்கர்  100வது சிறப்பான விருட்சம்  கவிதை  நேசிப்புக் கூட்டம் சிறப்பாக நடந்து முடிந்தது. சூம்  மூலமாக விருட்சம் பெருமையுடன்  நடத்திய 100வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி.  வெள்ளிக்கிழமை  (31.03. 2022)   -  மாலை 6.30  மணிக்குக்  கூட்டம் நடந்தது. மூத்தப் படைப்பாளி க.நா.சு கவிதைகளைக் குறித்து  1. எம்.டி. முகத்துக்குமாரசாமி 2. ப. சகதேவன் 3.  முபீன்   சாதிகா மூவரும்  சிறப்பாகப் பேசினார்கள். கூடவே, க.நா.சு  கவிதைகளை எல்லோரும் படித்து அவருக்குப் புகழ் அஞ்சலி செலுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்தி முடித்தோம்.  அதன் காணொளியைக் கண்டு களிக்கவும்.