Skip to main content

Posts

Showing posts from May, 2017

இரங்கல் கூட்டங்கள் நடத்துவது வருத்தமான ஒன்று...

அழகியசிங்கர்பல ஆண்டுகளாக நான் விருட்சம் இலக்கியச் சந்திப்பு கூட்டங்கள் நடத்தி வருகிறேன்.  அப்படித் தொடர்ந்து நடத்திக்கொண்டு வரும்போது, சில மாதங்கள் தொடராமல் நிறுத்தி விடுவேன்.  சில சமயம் இலக்கியச் சந்திப்பு கூட்டங்கள் ஆண்டுக் கணக்கில் நின்று விடும்.  சமீபத்தில் 24 கூட்டங்கள் நடத்திய நானும் என் நண்பரும் அதைத் தொடராமல் நிறுத்தி விட்டோம்.  ஆனால் ஜøன் மாதம் திரும்பவும் நடத்த நினைக்கிறேன்.    இப்போது ஒரு கலகலப்பான சூழ்நிலை இலக்கிய உலகில் நடந்து கொண்டிருக்கிறது.    பலர் இலக்கியக் கூட்டங்களை நடத்துகிறார்கள்.  பெரும்பாலும் சனி ஞாயிறுகளில் இலக்கியக் கூட்டம் இல்லாமல் இருப்பதில்லை.   அக் கூட்டங்களில் விடாமல் ஒவ்வொருவரும் கலந்துகொண்டாலே போதும்.இந்த முயற்சியை வெற்றிகரமாக மாற்ற முடியும்.  நான் சென்னையை வைத்து இதைக் குறிப்பிடுகிறேன்.  தமிழ் நாடு முழுவதும் எதுமாதிரியான இலக்கியக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன என்பது எனக்குத் தெரியவில்லை.  இது ஒரு ஆரோக்கியமான போக்காக நான் கருதுகிறேன்.  என் கூட்டங்களில் இரங்கல் கூட்டங்களை நடத்துவதை நான் பெரும்பாலும் விரும்புவதில்லை.  நமக்கு நெருங்கிய எழுத்தாள நண்பர்களை நாம…

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 69

அழகியசிங்கர்  


 நீ மணி; நான் ஒலி!


கவிஞர் கண்ணதாசன்


பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்

அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்

பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்

பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்

வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்;

'அனுபவித் தேதான் அறிவது வாழ்வெனில்
ஆண்டவ னேநீ ஏன் எனக் கேட்டேன்
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!


நன்றி : கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் - தொகுப்பு : சி ஆர் ரவீந்திரன் - மொத்தப் பக்கங்கள் : 365 - விலை : ரூ.150 - இரண்டாம் பதிப்பு : 2014 - வெளியீடு : சாகித்திய அகாதெமி, குணா…

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 68

அழகியசிங்கர்  

அவ்வளவுதான் எல்லாம்

ரவிசுப்பிரமணியன்                                                                  

மின்சாரம் போய் விட்டது
கதவுகளைச் சார்த்தாதே

மெழுகுவர்த்தி வேண்டாம்
சீமெண்ணை விளக்கைத் தேடாதே
புகையும் வேப்பிலை போதும் கொசுக்களுக்கு

எதிர்பாரா இருள் பிரசாதம்
ஏற்றுக் கொள்
அதனுடன் சிநேகம் கொள்
கண்களை மூடு

இருள்
திகில் கலந்த அமானுஷ்யமானதால்
காற்று நின்று விடுகிறதா என்ன?

ஒளி அடங்கியபின்
புது ஒலிகள்
புறத்தில் கேளா ஒலிகள் அகத்தில்

இதோ மின்சாரம் வந்துவிட்டது
சிரிக்கிறாய்
அவ்வளவுதான் எல்லாம்

நன்றி : விதானத்துச் சித்திரம் - கவிதைகள் - ரவிசுப்பிரமணியன் - வெளியீடு : போதிவனம் பதிப்பகம், அகமது வணிக வளாகம், தரைத்தளம், 12/293 இராயப்பேட்டை நெடுஞ்சாலை, இராயப்பேட்டை, சென்னை 600 014 - பக்கங்கள் : 84 - விலை : ரூ.100 - தொலைபேசி : 91-981450437 

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 67

அழகியசிங்கர்
வீடு
அய்யப்பமாதவன்                                                                                       அந்தரத்தில் தேடுகிறேன் ஒரு வீடு
சதுரம் சதுரமாய்
நீள்கின்றன குறுகுகின்றன
வைரங்களுக்குப் போல் விலைகள்
இன்னும் இன்னும் சுற்றுகின்றேன்
கற்பனையில் சொந்தமாகும்
வீடுகளில் புத்தக அலமாரிகளை
நிர்மாணிக்கின்றேன்
பால்கனியில் மனைவி பூந்தொட்டிகள்
வாங்கி பராமரிக்கின்றாள்
சமையலறை அவள் விருப்பத்திற்கு
விட்டுவிட்டேன்
நடு கூடத்தில் கலர் டிவி
இரண்டு சேர் வைத்தாகிவிட்டது
குழந்தை படங்கள்
மாட்டியாகிவிட்டது
சாமி அறையைத் தீர்மானிப்பதில் குழப்பம்
படுக்கையறையில் பீரோக்கள் வைத்தாயிற்று
கட்டில் போட இடமில்லை
நானும் அவளும்
புனையும் கற்பனையில்
வீடுகளை சொந்தமாக்கிக்
கொண்டே இருக்கிறோம்.
நன்றி : நீர்வெளி - கவிதைகள் - அய்யப்ப மாதவன் - வெளியீடு: அகரம், மனை எண் 1. நிர்மலா நகர், தஞ்சாவூர் - வெளியான ஆண்டு : டிசம்பர் 2003 - விலை : ரூ.35

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 66

அழகியசிங்கர்  

 இன்னும் சில பிணங்கள்

ந பிச்சமூர்த்திபணமென்றால் பிணமும் வாய்திறக்கும்
எனக்குத் தெரியாது
பணமென்றால்
ந. எண்ணையும்
தே. எண்ணையும்
கத்திரிக்காயும்
கல்யாண மண்டபமும்
இன்னம் என்னவெல்லாமோ
வாய்பிளப்பது
எனக்குத் தெரியும்
நாமும் வாயைப் பிளக்க வேண்டியது தான்.


நன்றி : ந பிச்சமூர்த்தியின் தேர்ந்தெடுத்த கவிதைகள் - தொகுப்பு : ஞானக்கூத்தன் - வெளியீடு ; சாகித்திய அக்காதெமி, தலைமை அலுவலகம், ரவீந்திர பவன், 35 பெரே8ôஸ்ஷா சாலை, புதுதில்லை 110 001 - மொத்தப் பக்கங்கள் : 176 - விலை : 65 - முதல் வெளியீடு : 2000

நீங்களும் படிக்கலாம் - 30

நீங்களும் படிக்கலாம் - 30
அழகியசிங்கர்


நேற்று குங்குமத்தில் என் பேட்டி வெளியாகி உள்ளது.  பேட்டி   எடுத்த குங்குமம் ஆசிரியர் குழுவிற்கு என் நன்றி.  பேட்டியை எடுப்பதை விட  பேட்டியைச் சரியாகக் கொண்டு வருவது என்பது சாதாரண விஷயம் இல்லை.  அதைத் திறமையாக குங்குமம் பொறுப்பாசிரியர் கதிர் திறன்பட செய்து முடித்துள்ளார். புகைப்படங்கள் எடுத்த வின்சன்ட் பால் அவர்களுக்கும் என் நன்றி.  இப் பேட்டியைப் பற்றி கே என் சிவராமன்  எழுதி உள்ளார்.  அவருக்கும் என் நன்றி.
சில தினங்களாக நான் ஒரு நேர்காணல் புத்தகத்தை எடுத்துப் படித்து முடித்தும் விட்டேன்.  260 பக்கங்கள் கொண்ட புத்தகம் அது.  மறுதுறை மூட்டம் என்பது புத்தகத்தின் பெயர்.  நாகார்ஜ÷னனைப் பேட்டி எடுத்தவர் எஸ். சண்முகம். செம்மையாக்கம் செய்தவர் முபீன் சாதிகா.  
இந்தப் புத்தகத்தைத் தயாரிப்பதற்குள் போதும் போதுமென்று ஆகியிருக்கும்.  அந்த அளவிற்குக் கடினமான ஒன்றாக இருந்திருக்கும். இந்தத் தருணத்தில் பிரேமிளைப் பேட்டி எடுத்த மீறல் 4 சிறப்பிதழைப் பற்றியும் குறிப்பிட வேண்டும்.  100 பக்கங்கள் கொண்ட புத்தகம் இது. பேட்டி எடுத்தவர் காலப்ரதீப் சுப்ரமணியன்.  
100 பக்கங்கள் கொ…

ஏன் இந்தக் குழப்பம்?

அழகியசிங்கர்


நேற்று மாலை 7 மணிக்கு என் சம்மந்தி அவர்களின் அம்மா உடல்நலம் குன்றி இறந்து விட்டார்.  கடந்த பல மாதங்களாக அவர் படுக்கையிலேயே இருந்தார்.  மாலை 4 மணிக்கு காப்பி குடித்தப் பிறகு அவர் சிறிது நேரத்தில் இறந்து விட்டிருக்கிறார்.  என் உறவினர் டிபன் எடுத்துக்கொண்டு போய்க் கொடுக்கும்போது அவர் அசைவற்று இருப்பதைப் பார்த்து பக்கத்தில் யாராவது மருத்துவர் இருந்தால் அழைத்து வரலாமென்று எண்ணித் தவித்திருக்கிறார்.  எந்த மருத்துவரும் வரவில்லை என்பது பெரிய சோகம்.  அதை விட அவரை அழைத்துக்கொண்டு போய் பக்கத்தில் உள்ள மருத்துவ மனையில் சேர்க்கலாமென்று நினைத்து ஒரு ஆம்புலன்ஸிற்கு போன் செய்தார்கள்.  அந்த ஆம்புலன்ஸிலிருந்து வந்த ஒரு நர்ஸ் நோயாளியைப் பார்த்துவிட்டு, üபல்ஸ் நின்று போய்விட்டது.  அழைத்துக்கொண்டு போக முடியாது.  லோக்கல் டாக்டரைப் பாருங்கள்ý என்று சொல்லிவிட்டு சென்று விட்டாள்.  நான் அப்போது உறவினர் வீட்டில்தான் இருந்தான்.  என்னடா இப்படி ஒரு சங்கடம் என்று தோன்றியது. 
மருத்துவர் வர விரும்பவில்லை. மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லலாமென்றால் ஆம்புலன்ஸ் அழைத்துக்கொண்டு போக முடியாது என்கிறார்கள்.  
எப்ப…

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில்

அழகியசிங்கர்

1. இப்போது நடக்கும் ஆட்சியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நான் யார் நினைப்பதற்கு..நான் சாதாரண குடி மகன்.

2. குடி மகன் என்றால் எப்போதும் 'குடி'க்கிற மகனா?

இல்லை. இல்லை.  நான் வெறுமனே தண்ணீர் மட்டும்தான் குடிப்பேன்.

3. டாஸ்மா கடைக்குக் கூட்டம் முண்டி அடிக்கிறதே..உங்கள் புத்தகங்களை வாங்க யாரும் உங்கள் வீட்டிற்கு வருவதில்லையே..

புத்தகம் வாங்க யாரும் வராவிட்டால் பரவாயில்லை. ஆனால் டாஸ்மா கடை முன் நிற்கும் கூட்டத்தைப் பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது.

4. எந்த எழுத்தாளரை நீங்கள் போற்றுகிறீர்கள்?

'மறுதுறை மூட்டம்' என்ற நேர்காணல் புத்தகம் எழுதிய நாகார்ஜ÷னனை. இப் புத்தகம் ஒரு வித சுயசரிதம் போல் இருக்கிறது.  154 பக்கங்கள் படித்துவிட்டேன்.  240 பக்கங்கள் வரை இப் புத்தகம் உள்ளது. இதுமாதிரியான வெளிப்படையான புத்தகத்தை நான் இதுவரை படித்ததில்லை.

5. உங்கள் பேரன் என்ன செய்கிறான் ?

பால்கனியிலிருந்து நான் படித்துக்கொண்டிருக்கும் புத்தகத்தைத் தூக்கிப் போடுகிறான்.

6. உங்கள் முன்னால் கவிதைப் புத்தகம், சிறுகதைப் புத்தகம், கட்டுரைப் புத்தகம், நாவல் புத்தகம் இருக்கிறது.. எதை எடுத…

கவனம் 7வது இதழ் கிடைத்துவிட்டது

அழகியசிங்கர்

1981ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் கவனம் என்ற சிற்றேடு ஞானக்கூத்தன் ஆசிரியர் பொறுப்பில் வெளிவந்தது.  அந்த இதழைக் குறித்து ஒரு சிறிய குறிப்பு கணையாழி பத்திரிகையில் அசோகமித்திரன் எழுதியிருந்தார்.  அந்தக் குறிப்பை வைத்துக்கொண்டு திருவல்லிக்கேணி சென்று ஆர் ராஜகோபாலன் என்பவரின் வீட்டில் கவனம் பத்திரிகையின் முதல் இதழை விலைக்கு வாங்கினேன்.  முதல் இதழ் விலை 75 காசுக்கள்.  நான் மேற்கு மாம்பலத்திலிருந்து பஸ்ûஸப் பிடித்து திருவல்லிக்கேணி வந்து கவனம் பத்திரிகையை வாங்கினேன்.   கவனம் என்ற பத்திரிகை மார்ச்சு 1981 ஆண்டிலிருந்து மார்ச்சு 1982 வரை 7 இதழ்கள்தான் வெளிவந்தன.  நான் இந்த கவனம் இதழ்களை பத்திரமாக எடுத்து பைண்ட் செய்து வைத்திருக்கிறேன்.  ரொம்ப ஆண்டுகள் ஆகிவிட்டதால், 6 இதழ்கள் கொண்ட கவனம் இதழ்களைத்தான் பைன்ட் செய்திருந்தார். ஆனால் 7வது இதழ் என்ற ஒன்று வரவில்லை என்று நினைத்திருந்தேன்.  என் நண்பர் ஒருவர் 7 இதழ்கள் கவனம் வந்திருக்கிறது என்று சொன்னவுடன், அந்த 7வது இதழைக் குறித்து என் கற்பனை போகாமல் இல்லை. இனிமேல் 7வது இதழ் கிடைப்பதற்கே வாய்ப்பு இல்லை என்றே எனக்குப் பட்டது.  ஆனால் எதிர்பாரதாவிதமா…

இரண்டு பூனைகள்

அழகியசிங்கர்
ஒரு கருப்புப் பூனை
நாற்காலி மீது அமர்ந்து கொண்டு
என்னைப் பார்த்து
மியாவ் என்றது..

இன்னொரு பூனை கருப்பும் வெள்ளையும்
கலந்த நிறத்தில்
நாற்காலி கீழே அமர்ந்திருந்தது.
என்னைப் பார்த்து மியாவ் மியாவ் என்று
இரண்டு முறை கத்தியது

நான் பேசாமல் வந்து விட்டேன்.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 65

அழகியசிங்கர்  

குழந்தைகள்

பொன். தனசேகரன்காகிதங்களில் கிறுக்கட்டும்
குழந்தைகள் விருப்பம்போல;
திட்டாதீர்கள்.

சுதந்திரமாக
வார்த்தைகளைக் கொட்டட்டும்;
தடுக்காதீர்கள்.

விரும்பாததைக் கேட்டு
முரண்டு செய்யலாம்:
அடிக்காதீர்கள்.

உங்கள் பழக்கங்களை
மிரட்டித் திணிக்காதீர்கள்.

விளையாட்டுப் பொருள்களைக்
கொடுத்து
கவனத்தைத் திசை திருப்பாதீர்கள்.

நடைவண்டி இல்லாமலே
நடை பழகும்
குழந்தைகள்நன்றி : காற்றிலும் மழையிலும் கைவிளக்கு - கவிதைகள் - பொன்.தனசேகரன் - பக்கம் : 80 - வெளியான ஆண்டு : 2005- விலை : ரூ.50. - வெளியீடு : கலைஞன் பதிப்பகம், தி நகர், சென்னை 17.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 64

அழகியசிங்கர்  

தூதர்கள்

சிபிச்செல்வன்
இரவுகள் சிறியவை
இரவுகள் அழகானவை
இரவுகள் நீளமானவை
இரவுகள் குரூரமானவை
இரவுகள் புணர்ச்சிக்கானவை
இரவுகள் கனவுகளுக்கானû9வ
இரவுகள் கடைசி மூச்சின் கணங்களுக்கானவை

இரவுகளின் இருள் அடர்த்தியானது
இரவுகளில் நமது பயங்கள் பதுங்குகின்றன
மௌனத்தின் நாடி
இதயத்தில் துடிக்கிறது
இரவு உறங்குவதற்கானது
சாவு போல்.


நன்றி : கறுப்புநாய் - கவிதைகள் - சிபிச்செல்வன் - அமுதம் பதிப்பகம் - முதல் பதிப்பு : டிசம்பர் 2002 - விலை : ரூ.30

என்று தணியும் இந்தத் தண்ணீர் தாகம்....

அழகியசிங்கர்கோடை பயங்கரமான தன் விஸ்வரூபத்தைக் காட்டத் தொடங்கி விட்டது.  கிணற்றில் தண்ணீர் இல்லை.  போரில் தண்ணீர் இல்லை.  கார்ப்பரேஷன் தண்ணீர் வருவது நின்றுவிட்டது.  நாங்கள் மெட்ரோ தண்ணீரை வாங்கிக் கொள்கிறோம்.  முதலில் 3 நாட்களுக்கு ஒரு முறை வந்து கொண்டிருந்த மெட்ரோ தண்ணீர், இப்போது ஒரு வாரம் காலம் ஆகிறது.  போகப் போக இது அதிக நாட்கள் ஆகும்.   கொஞ்சம் வசதியாக இருப்பவர்கள் தண்ணீரை வாங்க முடிகிறது.  ஆனால் தண்ணீர் வாங்க முடியாதவர்களின் நிலை என்ன? எங்கள் தெருவில் தண்ணீரை வாங்க முடியாதவர்கள் நிலை அதிகம்.  லாரியில் வரும் தண்ணீரைப் பெறுவதற்கு அவர்களிடம் போட்டியும் சண்டையும் அதிகமாகவே இருக்கிறது.  ஒருவரை ஒருவர் வாய்க்கு வந்தபடி திட்டுகிறார்கள்.  முறையாகப் பேசியவர்கள் முறையில்லாமல் பேசுகிறார்கள்.  தண்ணீரை விலை கொடுத்து வாங்கினாலும், பணம் கட்டிய ரசீதை எடுத்துக்கொண்டு தண்ணீர் கொண்டு தரும் இடத்திற்கு ஒரு வாரம் கழித்துச் செல்ல வேண்டும்.  தண்ணீரை அனுப்பும் படி கேட்டுக்கொள்ளவேண்டும்.  ஒரு லாரி தண்ணீர் ரூ.600 தான்.  அதை எடுத்துக்கொண்டு வருபவர்களுக்கு ரூ100 தரவேண்டும்.  எங்கள் தெருவில் தண்ணீர் லாரி வர பல த…

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 63

அழகியசிங்கர்  

 தீர்ப்பு

எஸ் வைதீஸ்வரன்
எறும்பு
கடிக்காத போது
ஏன் கொன்றாய்?

உன்
வேலியற்ற உடம்பில்
விளையாட்டாய் ஊறினால்
உயிர்ப்பலி கேட்குதா, விரல்?

மீறிக் கடித்தாலும்
சாவு உன்கில்லை எனத் தெரிந்தும்
ஊறம் எறும்பை
நசுக்குவதேன், சகிக்காமல்?

சாகும் எறும்பின்
சத்தமற்ற முடிவு
நசுக்கம் மனத்தை
'குற்றமில்லை' என்கிறதா?
உலகத்தில்
நசுக்க மிகச் சுலபம்
எறும்பு தான் என்றாலும்
சுலபமாய் இருப்பதால்
கொலையா செய்வது?


நன்றி : வைதீஸ்வரன் கவிதைகள் -கவிதைகள் - வைதீஸ்வரன் -வெளியீடு : கவிதா பப்ளிகேஷன், 8 மாசிலாமணி தெரு, தி நகர், சென்னை 17 - முதல் பதிப்பு : நவம்பர் 2001 - விலை : ரூ.90.

தனிமைகொண்டு என்ற கதையை சுஜாதா மறந்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன்.

தனிமைகொண்டு என்ற கதையை சுஜாதா மறந்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன்.

அழகியசிங்கர்
நகுலன் 1968ஆம் ஆண்டு மே மாதம் ஒரு இலக்கியத் தொகுப்பு கொண்டு வந்தார்.  அத் தொகுப்பின் பெயர் குருúக்ஷத்ரம் என்று பெயர்.  அத் தொகுப்பில் பல முக்கிய இலக்கிய அளுமைகள் பங்கு கொண்டுள்ளனர்.  மௌனி, பிரமிள், நீல பத்மநாபன், ஐயப்பப்ப பணிக்கர், நகுலன், சார்வாகன், அசோகமித்திரன் போன்ற பலர்.  அதில் ஒரு பெயர் எஸ் ரெங்கராஜன்.  அவர் ஒரு கதை எழுதி உள்ளார்.  அக் கதையின் பெயர் 'தனிமை கொண்டு.'.  இக் கதையை எழுதியவர் வேறு யாருமில்லை.  சுஜாதா என்ற எழுத்தாளர்தான்.  17வயது பெண் எழுதிய டைரி மூலம் கதையை நகர்த்திக் கொண்டு போகிறாள்.  அண்ணனும் தங்கையும்.  தங்கையை தனியாக விட்டுவிட்டு அடிக்கடி அண்ணன் டூர் விஷயமாகப் போகிறான்.  அவளுடைய தனிமை அவளுக்கு கிருஷ்ணன் என்ற நபர் மூலம் ஏற்பட்ட துயரம்தான் இந்தக் கதை.  வித்தியாசமான நடையில் வித்தியாசமாக எழுதப்பட்ட கதைதான் இது.   குருúக்ஷத்ரம் என்ற தொகுப்பில் வெளிவந்த கதைகளில் இக் கதை வித்தியாசமானது.  இக் கதையை 1968ஆம் ஆண்டில் சுஜாதா எழுதி உள்ளார்.  அப்போது அவர் தொடர் கதை குமுதத்தில் வெளிவந்ததா? பி…

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 62

அழகியசிங்கர்  


 கொட்டாவி


சச்சிதானந்தன்

தமிழில் : சிற்பி

கொட்டாவி
ஒரு இயற்வை விதி மட்டுமல்ல
மறுப்பின் அடையாளமும் கூட.
தனிமனிதர்களோடும், நாடுகளோடும்.

மசூதி இடிக்கப்படும் போது
நாம்ல் கொட்டாவி விடுகிறோம்.

புத்தர் சிலை உடைக்கப்படும்போது
கொட்டாவி விட்டு நாம் பழிதீர்த்துக் கொள்கிறோம்

கொட்டவி
யுத்தத்திற்கும் ஏகாதிபத்தியத்துக்கும்
எதிரான போராட்டத்தில் ஒரு புதிய போர்முறையாகும்
நண்பனே,

காதலின் தீவிரத்தை வெளிப்படுத்த
கொட்டாவியைவிட நல்ல சைகை
இல்லை யென்கிறாள் காதலி

புரட்சி கொட்டாவி வழியாக
என்கிறார் பழைய தோழர் சிவப்பு வண்ணத்தில்
விடுதலை கொட்டாவி வழியாக
என்கிறது சுவர் அறிவிப்பு பச்சையில்
ஆதியில் கொட்டாவி இருந்தது
என்கிறது புதிய சுவிசேஷம்

வேதங்கள் கடவுளின் கொட்டாவி
என்கிறார் அவிவேகானந்தன்
தன் கலையின் தரிசனம் ஒரு கொட்டாவியில்
அடங்கும் என்கிறார் பரிசுத்த அழகியல் வாதி

கொட்டாவியில் நிர்வாணம் என்கிறது காவி
கொட்டாவி விட்டு மனித உரிமைப் பிரகடனம்
கொட்டாவியால் சாதிகளுக்கெதிரான சங்கிலி
கொட்டாவியின் நூறு பூ விரிவது கண்டு
உணர்ச்சி வசப்படுகிறான் கவிஞன்.

அயல்நாட்டு உறவுத்துறை
அமைச்சரின் கொட்டாவி
பாலஸ்தீனத்துக்காகவா, இ…

இனிமேல் போட்டிக்கு புத்தகம் அனுப்பாமல் இருக்க வேண்டும்...

அழகியசிங்கர்தமிழில் எழுதுகிற எழுத்தாளர்களுக்கு சரியானபடி விருது கிடைப்பதில்லை.  அங்கீகாரம் கிடைப்பதில்லை.


 உயிரோடு இருக்கும்போது யாரும் கண்டுக்கக் கூட மாட்டார்கள்.  இது ஏன் இப்படி நடக்கிறது என்பதற்கான காரணங்களைக் கண்டுபிடிக்க முடியாது.  அது அப்படித்தான் நடக்கும்.   நான் பழகிய பல படைப்பாளிகளுக்கு இந்த அங்கீகாரம் சிறிது கூட இல்லை.  சி சு செல்லப்பாவின் சுதந்திரதாகம் என்ற மெகா நாவலுக்கு சாகித்திய அக்காதெமியின் விருது அவர் மரணம் அடைந்தபிறகுதான் கிடைத்துள்ளது.   அவர் உயிரோடு இருந்திருந்தால் இந்தப் பரிசு வேண்டாமென்று சொல்லியிருப்பார்.  சி சு செல்லப்பா பிடிவாதக்காரர்.  அதேபோல் பரிசு கிடைக்காமல் விட்டுப்போன எழுத்தாளர்களின் பட்டியல் என்று எடுத்துக்கொண்டால் ஒரு நீண்ட பட்டியலையே கொண்டு வர முடியும்.

இந்தப் பரிசு கிடைக்க என்ன செய்வது என்று ஒவ்வொரு எழுத்தாளனும் யோசிக்கத் தொடங்கினால் அவன் எழுதாமல் ஓடிவிட வேண்டியதுதான்.   மா அரங்கநாதனின் இரங்கல் கூட்டத்தில் பேசியபோது மா அரங்கநாதனின் சிறுகதைகளுக்கு ஒரு சாகித்திய அக்காதெமி விருது கிடைத்திருக்கலாமே என்று தோன்றியது.  மனித நேயத்தை ஒவ்வொரு கதையிலும் நுணுக்க…