Skip to main content

Posts

Showing posts from August, 2022

88வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்

  சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 88வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை - மாலை 6.30மணிக்கு 02.09.2022 அன்று சிறப்பாக நடைபெற உள்ளது. ஒவ்வொருவரும் அவரவர் கவிதைகளை வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். கூடவே கண்ணதாசன் கவிதைகளையும் வாசியுங்கள். கண்ணதாசன் கவிதைகள் குறித்து வ.வே.சு அவர்கள் பத்து நிமிடங்கள் உரை நிகழ்த்துவார். கூட வாசிக்கப் போகும் நம் கவிதைகள் குறித்தும் கருத்துரை வழங்குவார். கவிதை வாசிப்பவர்கள் 10 வரிகளிலிருந்து 20 வரிகளுக்குள் கவிதை வாசிக்க வேண்டும். Navina Virutcham is inviting you to a scheduled Zoom meeting. Topic: விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம் Time: Sep 02, 2022 Time: Sep 2, 2022 06:30 PM India Join Zoom Meeting https://us02web.zoom.us/j/87486459022... Meeting ID: 874 8645 9022 Passcode: virutcham அழகியசிங்கர் 9444113205 1 Chandramouli Azhagiyasingar

விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி எண் - 39

  அழகியசிங்கர்  வரும் வெள்ளி அன்று- (26.08.2022)  மாலை 6.30 மணிக்கு இரண்டு  எழுத்தாளர்களின் கதைகளை எடுத்துப் சிறப்பாகப் பேசினார்கள்.   அதன் காணொளியை இங்கே பதிவு செய்திருக்கிறேன். கண்டு களிக்கவும்  1. எழுத்தாளர் நாஞ்சில் நாடன் 2. எழுத்தாளர் திலகவதி எழுத்தாளர் நாஞ்சில் நாடன் கதைகள் குறித்துப் பேசுபவர்கள். 1. ரவீந்திரன்  - தன்ராம் சிங் 2. ராஜாமணி - கொங்கு தேர் வாழ்க்கை 3. ஆத்மார்த்தி -  சூடிய பூ சூடற்க 2. எழுத்தாளர் திலகவதி கதைகள் குறித்துப் பேசுபவர்கள். 1. பெஷாரா  - வெளிச்சம் 2. பானுமதி -  காளி 3. நாகேந்திர பாரதி  - யோகி

அசோகமித்திரனும் நானும்…

 அழகியசிங்கர் நான் சமீபத்தில் எழுதிக் கொண்டுவந்த புத்தகம் ‘அசோகமித்திரனும் நானும்’ என்ற புத்தகம்.  அசோகமித்திரன் இறந்தபோது பல பத்திரிகைகள் அசோகமித்திரனைப் பற்றி எழுதும்படி என்னைக்  கேட்டுக்கொண்டன.  பல பத்திரிகைகளுக்கு அவர் நினைவுகளைக் கட்டுரைகளாக எழுதிப் பகிர்ந்து கொண்டேன். அப்போது ஒரு புத்தகம் அசோகமித்திரன் பற்றிக்  கொண்டு வந்தால் என்ன என்று தோன்றியது.  அவர் பற்றிய நினைவுகளுடன், அவருடைய படைப்புகளையும் பற்றியும்  எழுதிப் புத்தகமாகத் தயாரித்தேன். இப்புத்தகம்  குறித்து ஒரு சூம் கூட்டம் சேலத்தைச் சேர்ந்த இலக்கிய அமைப்பு சனிக்கிழமை (20.08.2022) நடத்தியது.  ஒரு பேட்டி மாதிரி அந்த  நிகழ்ச்சி. ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்லும்போதும் ஒரு கேள்விக்குப் பதிலை எவ்வளவு நேரத்தில் சொல்வது என்று தடுமாற்றம் ஏற்பட்டது. ‘பிரமிளும் விசிறி சாமியாரும்’ என்ற புத்தகத்திற்குப் பிறகு ‘இந்திய இலக்கியச் சிற்பிகள்’ என்ற தலைப்பின் கீழ் ஞானக்கூத்தன் புத்தகத்தைக் கொண்டு வந்தேன்.அதை எழுத ஒரு வருடம் ஆகிவிட்டது.  அதன் பின் அசோகமித்திரன்.  நான் அவர் நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் அவர் சிறுகதைகள், நாவல்கள

87வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்

அழகியசிங்கர் சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழ ங்கும் 87வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சிவெள்ளிக்கிழமை - மாலை 6.30மணிக்கு 18.08.2022 அன்று சிறப்பாக நடைப் பெற்றது"ஆனால்.." என்ற பொது தலைப்பில் கவிதை எழுதிப் படித்தார்கள் . அதன் காணொளியை ரசித்துப் பாருங்கள்.

கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி - 38

அழகியசிங்கர் சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 38வது  கதை வாசிப்புக்  கூட்டம்.  வெள்ளிக்கிழமை - 12.08.2022  அன்று மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடந்து முடிந்தது.  அதன் காணோளியைக் காணும்படி கேட்டுக்கொள்கிறேன். 

86வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்

சூம்  மூலமாக விருட்சம் பெருமையுடன்  வழங்கும்  86வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை  -  மாலை 6.30மணிக்கு 05.08.2022 அன்று சிறப்பாக நடைப்பெற்றது  கூட்டத்தின் காணொளியை காணும்படி கேட்டுக்கொள்கிறேன்