Skip to main content

Posts

Showing posts from March, 2015

மனிதாபிமானம் மறையும் மருத்துவம் ! (மருத்துவம் அன்றும் இன்றும்)

டாக்டர் பாஸ்கரன்

எட்டாம் வகுப்பு வரை நான் சிதம்பரத்தில் தாத்தா, பாட்டிவீட்டிலிருந்துதான் படித்தேன் – மாலைகட்டித் தெரு, முனிசிபாலிடி ஹயர் செகண்டரி பள்ளிக்கூடம் – என்பெற்றோர் சென்னையில் இருந்தனர். சிறு வயது முதலேடாக்டர், மருந்து என்றாலே ஒரு பயம்; அதிலும் ஊசிஎன்றால், மரண பயம் ! ஒரு நாள் முனிசிபாலிடியிலிருந்து சின்ன அம்மைக்கு(நீர்க்குளுவான் – CHICKEN POX.) தடுப்பூசி போடுவதற்குப்பள்ளிக்கு வந்தனர். (அப்போதெல்லாம் பொது சுகாதாரம்அரசின் முக்கியமான பணிகளில் ஒன்றாக இருந்தது). ஒருசொட்டு வாக்சினை முழங்கைக்குக் கீழே, நிமிர்த்திய கைமேல் வைத்து, அதன் மேல் மெல்லிய ஊசிகள் கொண்டசிறிய திருகாணியால் சுழற்றி விடுவர் – மருந்தும்தோலுக்குள் சென்றுவிடும் ! எறும்புக்கடியை விட குறைவானவலிதான். இந்த ஊசிக்குப் பயந்து நான் பிரேயர் மைதானம்முழுவதும் அலறியபடி ஓடியதும், ஹெட்மாஸ்டர் திருஉமாபதி அவர்கள் என்னைத் துரத்திப் பிடித்ததும் இன்றும்நினைவிலிருக்கிறது ! (ஊசி போட்டுக் கொண்டேனாஎன்பது நினைவில் இல்லை !) ஊசியை விட என்அலறலுக்கு மிரண்ட குழந்தைகளே அன்று அதிகம் ! இன்றுபள்ளிகளில் அந்த தடுப்பூசிகள் இல்லை – சின்ன அம்மையும்அவ்வப்ப…

பூனைகள்.......பூனைகள்......பூனைகள்......31

பூனைக்குட்டி                                    
அழகு இராமானுஜன்மனசைக் கவரும் பூனைக்குட்டி
மஞ்சள் நிறக்குட்டி
எனது காலைப் புண்படாமல்
பிராண்டும் செல்லக்குட்டி

எங்கள் அப்பா மெத்தை மீது
ஏறிப்படுக்கும் குட்டி
தங்கை பள்ளி போகும்போது
வழியனுப்பும் குட்டி

தனது அம்மா கற்றுத் தந்த
üமியாவ்ý....மியாவ்  மொழியில்
தனக்குத் தெரிந்த கீதம் பாடி
மகிழ வைக்கும் குட்டி

குட்டி இன்பம் கோடி இன்பம்
கூறக்கூறப் பெருகும்
குட்டி ஒன்று வாங்கிப் போய் நீ
வளர்த்தால் உண்மை புரியும்

போ............போ........போ............

(நன்றி : சிறுவர் மணி - 14.03.2015 )

முதற்சான்றிதழ் !

டாக்டர் ஜெ.பாஸ்கரன் பண்டாரம், சங்கு, தட்டு மணி ஏதுமின்றி அந்த சவ ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. ஈரத்தலை, ஈர உடையுடன், உடல் பூரா திருநீறு பூசி, கையில் தீச்சட்டியுடன் முதியவர் ஒருவர் முன்னே செல்ல, முகத்தில் எவ்வித சலனமும் இன்றி நான்கைந்து பேர் அவருடன் மெதுவாக நடந்து கொண்டிருந்தனர்.... அலங்காரம், ஜோடனைகள், கட்சிக் கொடிகள், பட்டாசு வெடிகள், குத்தாட்டங்கள் ஏதுமின்றி புதிதாக வேய்ந்த பச்சைப் பாயில், அந்தப் பாட்டி – இப்போது வெறும் பிரேதம் – நெற்றியில் ஒரு ரூபாய்க் காசோடு, கண் மூடிக் கிடந்தது.. மூலை திரும்பி, இடுகாட்டுக் கப்பி சாலையின் ஏற்ற இறக்கங்களில் மூங்கில் தூக்கிகள் சென்ற போது, பாட்டியின் உடல் லேசாக ஆடியது – அப்போதுதான் எதிர்பாராத அந்த நிகழ்ச்சி நடந்தது. பாட்டி திடீரென்று கண்களைத் திறந்து உருட்டிப் பார்த்தாள். ‘ கட்டேல போறவங்களா…. எங்கெடா என்னெ தூக்கிட்டுப் போறீங்க ? ‘ என்றபடி கையையும் காலையும் உதைக்க, நெருப்புச் சட்டியை தடாலென போட்டுவிட்டு திருநீறு சட்டைக்காரர் ஓடி வர, மூங்கில் தூக்கிகள் தொப்பென்று பாயுடன் பாட்டியை சாலையில் இறக்கி விட்டு, திசைக்கொருவராய் ஓட, பாட்டி மெதுவாய்…

கசடதபற பிப்ரவரி 1971 - 5வது இதழ்

நிழல்கள்

ந மகாகணபதி

விரல்களை சுருட்டி பிரித்து
வாழ்வின் முறையை விளக்கினார் வகுத்து
விரல்களின் நிழல்கள்
சுவற்றில் விழுந்தன
வேறுவேறு வல்லூறுகள்

நானும் பார்க்கிறேன் சினிமாக்களை......

அழகியசிங்கர்

நான் பார்த்த மலையாளப் படம் பெயர் 'முன்னறியுப்பு|'அதாவது 'எச்சரிக்கை' என்று தமிழில் குறிப்பிடலாம்.  வேணு என்பவர் இதை இயக்கி உள்ளார்.  அவர் இயக்குநர் மட்டுமல்ல.  இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளரும் கூட. இந்தப் படத்தில் மம்முட்டி நடிப்பு குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.  முகத்தில் எந்தவித சலனமும் காட்டாமல் நடித்திருக்கிறார். சி கே ராகவன் (மம்முட்டி) இரண்டு பெண்களைக் கொலை செய்த குற்றத்தால், 20 ஆண்டுகளாக ஜெயில் வாசத்தில் இருக்கிறான்.  ஜெயிலைப் பாதுகாக்கும் அதிகாரிக்கு உதவியாக இருக்கிறான்.  நல்ல கைதி என்று பெயர் எடுத்தவன்.  தண்டனை முடிந்தாலும், ஜெயிலை விட்டு எங்கும் போக விரும்பாதவன். அந்த ஜெயில் அதிகாரிக்கு தன்னுடைய வாழ்க்கையை ஒரு சரிதமாக எழுத வேண்டுமென்ற ஆசை.  அவர் பதவி மூப்பு அடைய நான்கு மாதங்களுக்குள் தன் சுயசரிதையை எழுத ஆசை.  ஆனால் அவரால் எழுத வராது.  அதனால் அஞ்சலி என்ற பெண் எழுத்தாளரை அந்தப் பணிக்கு கோஸ்ட் எழுத்தாளராக நியமிக்கிறார்.  அஞ்சலி அவரைப் பார்க்க வரும்போது, சி கே ராகவன் என்கிற ஆயுள் கைதியைப் பார்க்கிறாள்.  ஜெயில் அதிகாரி ராகவனை அஞ்சலிக்கு அறிமுகப்படுத்துகிற…

கசடதபற பிப்ரவரி 1971 - 5வது இதழ்

செருப்புகள்


தி க கலாப்ரியா


நாங்கள் பிறந்த
உடனே
இணைந்து விட்டோம்
அந்தப் பாவத்திற்காகக்
காதலிக்கத் தொடங்கும்போது
அடிமைகளாகி விட்டோம்.

மனிதர்கள் உறங்கும்போதுதான்
எங்களால் - சிரித்துப் பேசிச் சேர முடிகிறது.

மீதி நேரங்களில்
ஒரே பாதையில்
ஒரே திசையில்
அருகருகே போனாலும்
அணைத்துக் கொள்ள
முடிவதில்லை

எங்கள் வாலிபத்தை
மனிதர்கள் மிதித்தே
சிதைத்து விடுகிறார்கள்.

வீதிகளே சொந்தமான
விபச்சாரிகள் - நாங்கள்
வீடுகளுக்குள் புகவே
முடியாது

கசடதபற பிப்ரவரி 1971 - 5வது இதழ்

ஹமார்பாரி, துமார்பாரி, நோக்ஷல்பாரி


ஐராவதம்


என் இடம், உன் இடம், நோக்ஷல்பாரி
போய் பணம் கொண்டு வா
போய் பணம் கொண்டு வா
இன்னும் ஒருநாள் என் வசமில்லை
சோறும் குழம்பும் ஆக்குவதற்குப்
போய் பணம் கொண்டு வா
போய் பணம் கொண்டு வா

வேலையற்று வெறித்து நோக்கு.
நகரத் தெருக்களில் பிரமாதங்கள்
விரைந்து போகும் ; விரைந்து வரும்

உன்னுடைய பட்டினி
குழிந்த
உன் தலையினுள் இன்னும் தொடரும்.

உன்னுடைய இதயத்தின்
இடையறா ஓசை
ஓயத் தொடங்கும்.
உன்னுடைய சாமான்
சலித்துத் தொங்கும்

அசைவற்று, பசியுடன்
அழுக்காய் இருக்கும் நீ
பிறப்பு என்ற, சாவு என்ற
இரு பெரும் எல்லைகளை
மீறத் துணிந்தாய்.
உன்னுடைய சட்டைப் பையில்
காகிதத் துண்டுகள்,
ஆணிகள்,
தீப் பெட்டி.
சிலுவையில் அறையவோ?
சிதையில் வைக்கவோ?

ஹமார்பாரி, துமார்பாரி, நோக்ஷல்பாரி


கசடதபற பிப்ரவரி 1971 - 5வது இதழ்

பாவக் குழந்தை              

அம்பைபாலன்

என் மனைவியின் தோழி
அழகின் அவதாரம்
அவள் குழந்தை
புட்டியில் வளர்ந்த
பாவக் குழந்தை.

எனது மனைவியும்
அழகில் சளைத்தவளல்ல
தோழியைப்
பழித்தவள்
பாலே கொடுத்தாள்.
பாவக் குழந்தைக்குப்
பால்தான் இல்லை.

கசடதபற பிப்ரவரி 1971 - 5வது இதழ்

மூன்றாவது வகை

இந்தி மூலம் : டாக்டர் பச்சன்

தமிழில் : கோ.ராஜாராம்
ஒருநாள்
பயந்த நெஞ்சுடன்
அவலக் குரலுடன்,
அதனினும் அதிகமாய்த்
துளிர்த்த விழிகளுடன்
நான் சொன்னேன்:

என் கையைப் பற்றிக்கொள்
ஏனெனில்,
என் வாழ்க்கைப் பாதையின் துன்பத்தைத்
தனியாய் சகிக்க இயலாது
நீயுந்தான் யாரிடமேனும்
இதையே சொல்ல நினைத்திருப்பாய்;
தனிமைப் பாதை
உன்னையும் உறுத்தியிருக்கும்.
ஆனால், என்னைப்போல் நீ
பயந்த வார்த்தை பகர்ந்திடவில்லை;

சரி, வாழ்க்கையில்
ஏற்ற, இறக்கம் நாமும்
ஏராளம் கடந்துவந்தோம்
இருட்டு, வெளிச்சம்
புயல், மழை, வெளிச்சம்
சேர்ந்தே சகித்தோம்.
காலத்தின் நெடும் பயணத்தில்
ஒருவர் மற்றவர்க்கு
உதவியாய், துணையாய் இருந்தோம்.

ஆனால்,
தள்ளாடும் கால்களுடன்,
நானும், நீயும்
ஒருவருக்கொருவர் போதுமாயில்லை,
வேறொரு மூன்றாவது கை
எனதையும் உன்னதையும் தாங்கிட வேண்டுமென
ஒப்புக்கொள்வதில்
நாணமென்ன நமக்கு?

கசடதபற பிப்ரவரி 1971 - 5வது இதழ்

- நீலமணி

கண்ணகி


பாதச் சிலம்பால்
பதியை இழந்தவள்
பருவச் சிலம்பைத்
திருகி எறிந்தனள்


பர்ட்ஸ் வ்யு


இரண்டாம் உலகத்
தமிழ் மாநாட்டுக்குத்
திறக்கப்பட்டன சென்னையில்
இருபத்தியொரு
புதிய லெட்ரீன்கள்.

கசடதபற பிப்ரவரி 1971 - 5வது இதழ்

ப கங்கைகொண்டான்தலைவிதிநான்
ஏழை
என்பதற்கு
இன்னுமொரு
எடுத்துக்காட்டு:
எனது
தலைமயிர்கள்
இரும்புச் சரிகைகள
- வெள்ளியல்ல

ஸ்டெல்லா புரூஸ்

மார்ச்சு ஒன்றாம் தேதி 2008ல் ஸ்டெல்லா புரூஸ் என்கிற ராம் மோஹன் தற்கொலை செய்து கொண்டு விட்டார்.  அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் எழுதி வைத்த கடிதம்.

"கடந்த 67 வருட எனது வாழ்க்கை பற்றி வருத்தங்கள் இல்லை.  எளிய, உண்மையான, அடக்கமான மனிதனாக ஆடம்பர சிந்தனை துளியும் இல்லாமல் வாழ்ந்திருக்கிறேன்.  கண்ணை இமை காப்பதுபோல் என்னை பார்த்து அலாதியான காதலுடன் நேசித்து பத்திரப்படுத்தி, அபூர்வ, ஆனந்த மனைவியாக என் மனைவி ஹேமா வாழ்ந்தார்.

எத்தனை பிறவியானாலும் இதை மறக்க மாட்டேன்.  நானும், அவளும் வாழ்ந்த வாழ்க்கை அற்புதமான, ஆன்மீகமான இலக்கிய தன்மையான காவியம். ஹேமாவின் துணை இல்லாத வாழ்க்கை சூனியமாக இருக்கிறது.  என்னால் அதை தாங்க முடியவில்லை.  தனிமை சிறை கடும் தன்மையாக என்னை நெரிக்கிறது.  எனவே நான் ஹேமாவிடம் செல்கிறேன். மரணத்தின் கதவுகளை திறந்து, வாழ்க்கை தண்டனை ஆகிவிடும்போது மரண விடுதலை பெறுகிறேன்."

அவர் மரணம் அடைந்து 7 வருடங்கள் ஓடி விட்டன.