Skip to main content

Posts

Showing posts from 2018

பத்து கேள்விகள் பத்து பதில்கள் - 19 - ஏ எஸ் நடராஜன் பேட்டி - இரண்டாம் பகுதி

அழகியசிங்கர்



நேற்று முதல் பகுதி வெளியிட்டிருந்தேன். இப்போது இரண்டாம் பகுதி வெளியிடுகிறேன். நான் தற்செயலாக எதிரி உங்கள் நண்பன் புத்தகத்தைக் கொடுக்கத்தான் கே கே நகரில் உள்ள நடராஜன் வீட்டிற்குச் சென்றேன். என்னமோ தோன்றியது ஒரு பேட்டி எடுக்க வேண்டும் என்று. நடராஜனும் அதற்கு சம்மதிக்கவே பேட்டி எடுத்து விட்டேன். ரொம்ப மோசமான ஒரு விபத்திலிருந்து தப்பித்து பின் எப்படி அதை எதிர்கொள்வது என்பதை நடராஜனிடமிருந்து பலரும் கற்றுக்கொள்ள வேண்டும். இந்த விபத்து நடந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு நடராஜன் தனியாக தானே வாழ பழகிக்கொண்டவர். கால்களைப் பயன்படுத்தாமல் கைகளைக்கொண்டு காரை எடுத்துக்கொண்டு எல்லா இடங்களுக்கும் செல்லக் கூடியவர். அவர் துணிச்சல் யாருக்கும் வராது. நீங்கள் இந்தப் பேட்டியின் இன்னொரு பகுதியையும் பார்க்க வேண்டும்.

பத்து கேள்விகள் பத்து பதில்கள் - 19 - ஏ எஸ் நடராஜன் பேட்டி

அழகியசிங்கர்



1978ஆம் ஆண்டிலிருந்து எனக்கு நண்பர் அவர்.  பெயர் ஏ எஸ் நடராஜன்.  சுறுசுறுப்பானவர்.  வாழ்க்கையை அவர் பார்க்கும் விதம் வித்தியாசமாக இருக்கும்.  மிகச் சாதாரண நிலையிலிருந்து தன் அறிவாற்றலால் முன்னுக்கு வந்தவர்.  அவரும் நானும் பரீக்ஷா ஞாநி இயற்றிய  மூர் மார்க்கெட் என்ற நாடகத்தில் ஒன்றாக நடித்தோம். அவருக்குத் துணிச்சலான கதாப்பாத்திரம்.  எனக்கோ பயந்தாகொள்ளி கதாப்பாத்திரம்.  15ஆம் தேதி ஏப்ரல் மாதம் 1995ஆம் ஆண்டு காரில் சென்று கொண்டிருந்தபோது  விபரீதமான விபத்தில் சிக்கிக்கொண்டு, அவருக்கு முதுகு தண்டுவடம் உடைந்து விட்டது.   அந்தக் கோரமான விபத்திலிருந்து உயிர்பெற்று மீண்ட நடராஜன் த்ன வாழ்க்கையைப் பற்றிய தன் அனுபவங்களை என்னுடன் இன்று பகிர்ந்து உள்ளார்.   அவருடைய வாழ்க்கை அனுபவம் ஒவ்வொருவருக்கும் வாழ வேண்டுமென்ற தூண்டுதலை ஏற்படுத்தும். 



துளி : 1

அழகியசிங்கர்



என் லைப்ரரியில் சில நேரம் புத்தகம் படித்துவிட்டு ஆர்யாகவுடர் ரோடில் உள்ள மாம்பலம்ஸ் வெங்கடேஸ்வரா போளி நிலையத்திற்கு வருவேன்.  ஒரு நாள் போன்டா, ஒருநாள் மசால் வடை, ஒருநாள் உருளைக் கிழங்கு போன்டா, ஒரு நாள் மெதுவடை என்றெல்லாம் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வருவேன்.  அங்கு என் மனைவி தயாராக வைத்திருக்கும் கேழ்வரகுக் கஞ்சியுடன் சேர்த்து உண்பேன்.  போளி ஸ்டாலில் வாங்கிச் சாப்பிடுவது நல்லதா கெட்டதா தெரியாது.  என் நண்பர் டாக்டர் பாஸ்கரன்தான் சொல்ல வேண்டும். அந்தப் போளி நிலையத்தின் வாசலில் ஒரு மரம்.  அதை கோயிலாக யாரோ மாற்றி உள்ளார்கள்.  விளக்கு வைக்கிறமாதிரி ஒரு மரப்பொந்தை உருவாக்கி உள்ளார்கள்.  மரத்தைச் சுற்றி புடவைக் கட்டி மஞ்சள் குங்குமம் பூசி உருவாக்கி உள்ளார்கள்.  போளி நிலையத்தில் பணிபுரிபவர்களுக்கு இந்த மரத்தின் மகத்துவம் தெரியவில்லை.  அப்படியா என்று கேட்கிறார்கள்.

விருட்சம் சந்திப்புக் கூட்டம்...

அழகியசிங்கர்




நாளைக்கு மாலை 6 மணிக்கு நடைபெறப்போகும் கூட்டம் 42வது கூட்டம்.  இக் கூட்டத்திற்கு வரும்படி கேட்டுக்கொள்கிறேன்.  இத்துடன் அழைப்பிதழை இணைத்துள்ளேன்.

பிள்ளையார் படம் போட்ட விருட்சம்

அழகியசிங்கர்




நவீன விருட்சம் 54வது இதழில் (அதாவது பிப்பரவரி 2002ல்) பிள்ளையார் படத்தை நவீன ஓவியமாக சிவபாலன் என்பவர் வரைந்து கொடுத்திருந்தார். இந்தப் படம் ஓவியர் விஸ்வம் மூலம் எனக்குக் கிடைத்தது.  நவீன விருட்சத்தின் அட்டைப் படமாக அதை பயன்படுத்தினேன்.  
60 பக்கங்கள்.  அந்த இதழ் விருட்சம் விலை ரூ.10.  அதில் முக்கியமான கவிதையாக ரா ஸ்ரீனிவாஸன் கவிதையை நான் கருதுகிறேன்.  அந்த அட்டை ஓவியத்துடன் அவர் கவிதையையும் இங்கு அளிக்கிறேன். 


ரா ஸ்ரீனிவாஸன்


தற்பொழுது
1)
வேறெப்பொழுதுமில்லாத  தற்பொழுதின் வாசல்  திக்கெல்லாம் திறந்தே இருக்கிறது -  உட்புகுக,

இப்பொழுது திறந்தது  உள்ளேயிருந்தா வெளியேயிருந்தா  -  காண்க,
எல்லாம் உருமாறிக் கொண்டிருக்கும் தற்பொழுது -  அறிக.
தற்பொழுதை விட்டு விலகிச் செல்கின்றன எல்லாப் பயணங்களும் -  பிரிகின்ற பாதைகளெல்லாம் தற்பொழுதிலிருந்து  அப்பால் இட்டுச் செல்கின்றன -  உணர்க.
எப்பொழுதுமான தற்பொழுதிற்குத்  தலை வணங்குகிறேன்,  தாள் பணிகிறேன்,


விருட்சம் இலக்கியச் சந்திப்பு - 42

தலைப்பு  :   சினிமா தொலைக் காட்சி என்னும் காட்சி ஊடகம் தரும் அனுபவமும் வாசிப்பின் மேன்மையும்        


சிறப்புரை :    சத்யானந்தன்


இடம் :      ஸ்ரீராம் குரூப் அலுவலகம்
    மூகாம்பிகை வளாகம்
    சி பி ராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே
    ஆறாவது தளம்
     மயிலாப்பூர்
    சென்னை 600 004

தேதி15.09.2018 (சனிக்கிழமை)

நேரம் மாலை 6.00 மணிக்கு


பேசுவோர் குறிப்பு : நவீன புனைகதைகள், நாவல்கள், கவிதைகள், கட்டுரைகளை வித்தியாசமாக எழுதிக்கொண்டிருக்கும் படைப்பாளி.

அனைவரும் வருக,

அன்புடன்
அழகியசிங்கர்
9444113205

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் - 8

அழகியசிங்கர்



1. 106வது இதழ் விருட்சம் என்ன ஆயிற்று?  இந்த மாதத்திற்குள் வந்து விடும்.
2. நீங்கள் விருட்சம் ஆரம்பித்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டன ஆமாம்.  இதழ் வந்தவுடன் ஒரு கூட்டம் ஏற்பாடு பண்ண நினைக்கிறேன்.  ரைட்டர்ஸ் கேப்பில் எனக்குப்பிடித்த நண்பர்களுடன் உட்கார்ந்து பேச.
3. சிறுபத்திரிகை என்பதே தேவையில்லை என்ற கருத்திற்கு என்ன சொல்கிறீர்கள்? தமிழ் இந்துவில் அப்படி ஒரு கருத்து ஏற்படுகிற மாதிரி ஒரு தலையங்கம் வந்தது.  திரும்பவும் படிக்கலாமென்றால் அந்தப் பத்திரிகை கண்ணில் படவில்லை.  அந்தக் கருத்து சரியில்லை.  எக்ஸ்பிரஷன்தான் சிறுபத்திரிகை.  அதை ஒவ்வொருத்தர் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துகிறார்கள்.  வாசகர் கையில்தான் ஏற்றுக்கொள்வது அல்லது ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதெல்லாம் இருக்கிறது.  சிற்றேடு மாதிரி ஒரு இதழை தமிழவன் மட்டும்தான் கொண்டு வர முடியும்.  அதைத்தான் இப்போது படித்துக்கொண்டிருக்கிறேன். 
4. ஒரு பெண் தன் இரண்டு குழந்தைகளை இரக்கமில்லாமல் கொன்றுவிட்டு கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க விரும்புவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள். அது மாதிரியான ஒரு சம்பவத்தை நினைத்து வருத்தமாக இருந்தது.  திகில் கதை எழு…

நேற்றைய தினமலருக்கு நன்றி...

அழகியசிங்கர்

       விருட்சம் வெளியீடாக வெளிவந்துள்ள 'இடம், பொருள், மனிதரகள்,' என்ற மாதவ பூவராக முர்த்தியின் புத்தகத்தைப் பற்றி மாணிக்கப் பரல்கள் என்ற தலைப்பின் கீழ் வெளிவந்துள்ளது.  வெளியிட்ட தினமலருக்கு என் நன்றி.  அந்தப் பகுதியில் எழுதப்பட்டதை இங்கே தருகிறேன்.
பன்முக தன்மை கொண்ட நூலாசிரியர் , சென்னை மாநகரில் இன்று அழிந்துபோன ஜெமினி அருகே இழந்த சொர்க்கம், சர்க் கஸ் என்னும் மாய உலகம், ஆடிப் பெருக்கு, வீடு மாற்றம் உள்ளிட்ட இடங்களையும்; ஊதா கலரு ரிப்பன், காணாமல் போன சைக்கிள், 'பாக்கு வெட்டியும் பாதாள கரண்டியும், து£ளி உள்ளிட்ட பொருட்களையும் விந்தை மனிதர்கள், கொங்கு மாமியின் கடைசி ஆசை,   பாத்திரமறிந்து பிச்சையெடு உள்ளிட்ட மனிதர்களையும் படம் பிடித்துக் காட்டுகிறார். 
இடம் பொருள் மனிதர்கள் ஆசிரியர், மாதவ பூவராக மூர்த்தி வெளியீடு விருட்சம் தொலைபேசி: 044 - 2471, 0610 பக்கம்: 156 விலை ரூ.120 






வித்தியாசமான காலண்டர்

அழகியசிங்கர்


என் நெடுநாளைய நண்பர் டாக்டர் பாஸ்கரன் அவர்கள்.  சமீபத்தில் அவர் எழுதிய அது ஒரு கனாக் காலம் என்ற புத்தகத்திற்கு ஒரு ஸ்டார் ஓட்டலில் விருந்து அளித்து புத்தக வெளியீட்டு விழா நடத்தினார்.  100 பேர்களுக்கு மேல் கலந்து கொண்டார்கள்.  என்னை மேடையில் உட்கார வைத்து அவர் புத்தகத்தைப் பற்றி பேச சந்தர்ப்பம் கொடுத்தார்.  நானும் அப் புத்தகத்தைப் படித்து கட்டுரை வாசித்தேன்.
இதுவரை ஒரு சிறுகதைத் தொகுப்பும், இரண்டு கட்டுரைத் தொகுப்பும், மருத்துவம் சார்ந்த புத்தகங்களையும் கொண்டு வந்திருக்கிறார்.  ஒவ்வொரு புத்தகம் வரும்போது அதை வெளியிடும்போது உற்சாகமாகக் கொண்டாடுவார். விருந்தினர்களை உபசரிப்பதில் அவருக்கு நிகர் யாருமில்லை.  
இன்றைய காலக்கட்டம் மெச்சும்படி இல்லை.  இதுமாதிரியான சந்தர்ப்பத்தில் விழா கொண்டாடி கொண்டாடும் டாக்டர் பாஸ்கரனை யாரும் வாழ்த்தாமல் இருக்க மாட்டார்கள்.
வெள்ளிக்கிழமை அன்று (07.09.2018) டாக்டரைப் பார்த்தேன்  கையில் ஒரு காலண்டர் கொடுத்தார்.  அந்த காலண்டர் செப்டம்பர் 2018லிருந்து அடுத்தவருடம் ஆகஸ்ட் 2019 வரை உள்ள காலண்டர்.  அந்தக் காலண்டரின் முக்கியத்துவம் என்னவென்றால், அவருடைய விழா…

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 87

அழகியசிங்கர்  



ப கங்கைகொண்டான்

பழைய சுசீலாக்கள்


பத்தாவது பாரம் படித்தோம்
பாவை சுசீலாவும் நானும்
ஆசிரியர் வெளியே போனால்
மானிட்டர் என்னை நோக்கி
ஒன்றுக்குப் போக வேண்டி
ஒரு விரல் காட்டி நிற்பாள்
ஆள் பார்க்க இல்லாவிட்டால்
அக்கம் பக்கம் நோக்கி விட்டு
ஒண்ணரைக் கண்ணில் சிரிப்பாள்
அரைக்கால் டிராயர் துறந்து
முழுக்கால் மாட்ட வைத் தாள்
ஒரு நாள் ஒரே மாதிரி
சொல்லி வைத்தாற் போலச்
சாக்கு நிறக் காக்கிப் பையில்
புத்தகங்கள் தூக்கி வந்தோம்
பையன் கள் மாற்றி வைத்தார்
பைமாற்றிப் போனாள் அந்நாள்
கைமாறிப் போனாள் மறு நாள் ........

நன்றி : கூட்டுப் புழுக்கள் - கவிதைகள் - ப கங்கைகொண்டான் - வெளியீடு : கங்கை நூலகம், 100 மலரகம் - பொத்தனூர் அஞ்சல் - சேலம் 638 181 - ஆண்டு : 1974 - விலை : ரூ.10

தினமணி இதழுக்கு நன்றி..

அழகியசிங்கர்


தினமணியில் நூல் அரங்கம் என்ற பகுதியில் என்னுடைய திறந்த புத்தகம் என்ற நூலின் விமர்சனம் வந்துள்ளது.  கீழே அதில் வெளி ஆனதைக் கொடுத்திருக்கிறேன்.    தினமணி இதழுக்கு என் நன்றி.
அழகியசிங்கரின் முகநூல் பதிவுகளின் தொகுப்பாக அமைந்திருக்கி றது இந்தப் புத்தகம். கவிஞர், கதாசிரியர், பல் லாண்டுகள் ஒருசிற்றேட்டை நடத்தி வருபவர் என்று பல முகங்கள் கொண்டவர் இந்த நூலாசிரியர். அவருடைய முகநூல் பக்கத்தில் ஓராண்டு அளவில் இட்ட பதிவுகளில் பல துறைகளைத் தொடுகி றார். மொத்தம் ஐம்பது பதி வுகள். பெரும்பாலும் எழுத்தாளர், எழுத்து, புத்தகம் தொடர்பான பதிவுகள் அதிகம் இடம் பெற்றுள்ளன இத்தொகுப்பில். 'அஃபெக்டிவ் டிஸ்ஆர்டர் என்னும் ஒரு வகை மனநிலை பாதிப்பு ஏற்பட்ட நவீன கவிஞர் ஆத்மாநாம் பற்றிய பதிவு 'ஆத்மாநாம் சில குறிப்புகள்’. அவர் தற்கொலை செய்து கொண்டார். ஆத்மாநாம் நினைவாக நடந்த உணர்ச்சிபூர்வமான இரங்கல் கூட்ட விவரணையுடன் அந்தப் பதிவை நிறைவு செய்கிறார். பேராசிரியரும் நாவலாசிரியரும் கவிஞருமான நகுலனைப்பற்றிய பதிவில் அவருடைய ஐந்து கவிதைகள் இடம்பெறுகின்றன. தமிழில் கவிதைப் புத்தகங்களை வெளியிடுவது பற்றியும், அதை விற்…

செப்டம்பர் மூன்றாம் தேதி

அழகியசிங்கர்











38 ஆண்டுகளுக்கு முன்னால்
நடந்த நிகழ்ச்சியை
இப்போது நினைத்துப் பார்க்கிறேன்
இன்னும் ஒருவரை ஒருவர்
புரிந்துகொண்டோமா என்றெல்லாம்
தெரியவில்லை

காலையில்
ஹனுமார் கோயிலுக்குச் சென்றோம்

இன்று கடைக்குச் சென்று
எனக்கு வேண்டிய துணிமணிகளை
வாங்கிக்கொண்டேன்
அவளும் கூடவே வந்தாள்

புத்தகக் கடையில் புத்தகங்களை
வாங்கி வெறுமனே சேர்ப்பதை அவள் விரும்பவில்லை
ஆனால் தடுப்பதில்லை
அவள் விருப்பம் என்னவென்று தெரிவதில்லை

இன்று செப்டம்பர் மூன்றாம் தேதி

(Photo taken by Srinivasan Natarajan)

மூன்று அவதாரங்கள் எடுத்துள்ளேன் - பகுதி 1

அழகியசிங்கர்




சமீபத்தில் ராயப்பேட்டை ஒய்எம்சி மைதானத்தில் ஒரு புத்தகக் காட்சி நடந்தது.  அந்த நிகழ்ச்சியைப் பற்றி எதாவது சொல்வதா அல்லது என்னைப் பற்றி எதாவது சொல்வதா என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.  என்னைப் பற்றித்தான் சொல்ல வேண்டுமென்று தோன்றியது.  நான் மூன்று அவதாரங்கள் எடுத்துள்ளேன்.  என் அவதார நிகழ்ச்சியைச் சொன்னாலே போதுமென்று எனக்குத் தோன்றியது. ஆரம்பிக்கிறேன்.

1. புத்தகப் பதிப்பாளர் கம்  விற்பனையாளரான  அழகியசிங்கரின் கூற்று.
நான் 30 ஆண்டுகளாக விருட்சம் என்ற பத்திரிகையை நடத்தி வருகிறேன். கூடவே புத்தகங்களை அச்சடிக்கிறேன்.   கிட்டத்தட்ட 80 புத்தகங்களை அச்சடித்து விட்டேன்.  பெரும்பாலும் கவிதைப் புத்தகங்கள்.   கவிதைகளை அடித்து  விற்பது என்பது சாத்தியமில்லை என்று என் அறிவுக்குத் தெரிந்தாலும் கவிதைகளை மட்டும் புத்தகம் அடிக்க என்னிடம் கொடுப்பார்கள் பலர்.   புத்தகக் காட்சியில் என் புத்தகங்களை மட்டும் விற்க முடியாது என்று  எனக்குத் தெரிந்து விட்டது.  மற்ற பதிப்பாளர்கள் புத்தகங்களோடு என் புத்தகங்களையும் விற்று வருகிறேன்.  புத்தகம் விற்று லாபம் சம்பாதிப்பது என்பது நிகழ்ந்தால் அது அற்புதமான கணமாக …

இந்து தமிழிற்கு என் நன்றி

அழகியசிங்கர்
கவனிக்க வேண்டிய ஐந்து புத்தகங்கள் என்ற தலைப்பில் இன்றைய இந்து தமிழில் என் முழு சிறுகதைத் தொகுப்புப் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்து தமிழிற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விருட்சமும் நண்பர்கள் வட்டமும் சேர்ந்து நடத்தும் கூட்டம் - 2

அழகியசிங்கர்



போன மாதம் விருட்சமும் நண்பர்கள் வட்டமும் சேர்ந்து நடத்திய கூட்டத்தில் ஆர் வெங்கடேஷ் அவர்கள் 'கல்கி இதழில் வளர்ந்த எழுத்தாளர்கள்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.  அந்தப் பேச்சின் ஒளிப்பதிவின் இரண்டாம் பகுதியை இப்போது வெளியிடுகிறேன்.

விருட்சமும் நண்பர்கள் வட்டமும் சேர்ந்து நடத்தும் கூட்டம்

அழகியசிங்கர்



போன மாதம் (26.07.2018) விருட்சமும் நண்பர்கள் வட்டமும் சேர்ந்து நடத்திய கூட்டத்தில் ஆர் வெங்கடேஷ் அவர்கள் 'கல்கி இதழில் வளர்ந்த எழுத்தாளர்கள்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.  அந்தப் பேச்சின் ஒளிப்பதிவின் முதல் பகுதியை இப்போது வெளியிடுகிறேன்.

விருட்சம் இலக்கியச் சந்திப்பு - 41

தலைப்பு : நானும் என் எழுத்தும் சிறப்புரை : அஜயன்பாலா இடம் : கிளை நூலகம், 7 இராகவன் காலனி 3வது தெரு, ஜாபர்கான் பேட்டை, சென்னை (காசி தியேட்டரிலிருந்து வருகிற நேர் தெரு- அசோக்நகர் வரவேண்டும்) தேதி 30.08.2018 (வியாழக்கிழமை) நேரம் மாலை 5.45 க்கு பேசுவோர் குறிப்பு : சிறுகதை ஆசிரியர், சினிமா பற்றி நிறைய புத்தகங்கள் எழுதியிருக்கிறார், சினிமாப் படங்களை இயக்கி உள்ளார் அன்புடன் நண்பர்கள் வட்டம் தொடர்புக்கு : அழகியசிங்கர் - தொலைபேசி எண் : 9444113205

கேட்டாலும் சொல்ல மாட்டேன்.....

அழகியசிங்கர்



தினமும் புத்தகக் காட்சி முடித்துவிட்டு வீட்டிற்கு வரும்போது என் மனைவி ஒரு கேள்வி கேட்பார்.  "எவ்வளவு இன்று விற்றது?" இதற்கு என் பதில் மௌனம்...பலத்த மௌனம்.  எங்கே தவறிப் போய்ச் சொல்லி விடுவேனோ என்று பயந்துகொண்டே மௌனமாக இருப்பதைப் பலமாக முயற்சி செய்வேன்.  அதில் நான் வெற்றி அடைந்துவிட்டேன்.  இதுவரை சொல்லவில்லை.  ஆனால் புத்தகக் காட்சியிலிருந்து நான் என்னன்ன புத்தகங்கள் வாங்குகிறேன் என்பதைக் குறிப்பிடுவதில்லை.   ஆனால் அது தெரிந்து விடுகிறது.  என் பையைத் திறந்து பார்த்தால் புத்தகங்கள் இளிக்கத் தொடங்கி விடுகின்றன.
ஜென் தத்துவமெல்லாம் எத்தனையோ புத்தகங்களில் நாம் படிக்கிறோம்.  அதையெல்லாம் இது மாதிரியான புத்தகக் காட்சியின்போதுதான் நாம் பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.
நம் முன்னால் சாரி சாரியாக நடந்து போவார்கள், ஆனால் உள்ளே வரமாட்டார்கள்.
இதில் என்ன ஜென் தத்துவம்.  இனிமேல்தான் இருக்கிறது. என் அரங்குக்குள் நுழைந்தால் அரங்கு நிரம்பி வழியும்,  இது தெரிந்துதான் எல்லோரும் பார்த்துக்கொண்டே போகிறார்கள்.
உள்ளே புத்தகங்கள் இருக்கின்றன.  வெளியே நாங்கள் இருக்கிறோம்.   சிலர் புத்தகங்களுடன்…

ஆவலுடன் காத்திருக்கிறேன்

ஆவலுடன் காத்திருக்கிறேன்

அழகியசிங்கர்




இன்று மாலை 4வது சென்னை புத்தகத் திருவிழாவில் என் கதைப் புத்தகமான அழகியசிங்கர் சிறுகதைகள் முழுத் தொகுப்பு பற்றி முனைவர் ஜெ கங்காதரன் என்பவர் நூல் திறனாய்வு செய்கிறார்.
64 சிறுகதைகளும், 7 குறுநாவல்களும், ஒரு நாடகமும், சில சின்னஞ்சிறு கதைகளும் எழுதி உள்ளேன்.  664 பக்கங்கள் கொண்ட முழுத் தொகுதியை என் கதைகளை எல்லோரும் வாசிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் ரூ.300க்குக் கொடுக்கிறேன்.
ஆரம்ப காலத்திலிருந்து நான் எழுதிய கதைகளின் தொகுப்பு இது.  இன்னும் கூட கதைகள் எழுதிக்கொண்டிருக்கிறேன்.  உதாரணமாக 4வது சென்னை புத்தகத் திருவிழாவை முன் வைத்து நல்லவன் கெட்டவன் என்று கதை எழுத உள்ளேன்.
என் கதைகளின் முக்கிய அம்சமாக நான் கருதுவது அதிகப் பக்கங்கங்கள் போகாமல் பார்த்துக் கொள்வது.  படிப்பவர்கள் ஒரு சில நிமிடங்களில் என் கதையைப் படித்து முடித்து விடலாம்.
என்னுடைய 7 குறுநால்கள் இத் தொகுதியில் வெளிவந்துள்ள.  இக் குறுநாவல்கள் தி ஜானகிராமன் குறுநாவல் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டு கணையாழியில் வெளிவந்தவை.  இப்போதெல்லாம் அவ்வளவு பக்கங்கள் கொண்ட குறுநாவல் எழுத எனக்குப் பொறுமை இல்லை.  
கணையா…

அவ்வளவுதான்

அவ்வளவுதான்

அழகியசிங்கர் 


என்னிடம் அதிகமாகப் புத்தகங்கள் இருக்கின்றன.  ஒரு புத்தகத்தைப் படித்தவுடன் அடுத்தப் புத்தகம் படிப்பதற்குத் தயாராக  இருக்கிறது.   புத்தகங்கள் அதிகமாக இருக்கின்றன.  படிப்பது குறைவாக இருக்கிறது.  
ஒரு புத்தகம் படித்தவுடன் எனக்கு சில தினங்களுக்குள் எதாவது குறிப்புகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.  படித்தப் புத்தகத்தைப் பற்றி கொஞ்சமாவது சொல்லவேண்டும். இதையெல்லாம் செய்யாவிட்டால் நான் படித்தது மறந்து போய்விடும்.
இந்தக் காரணத்திற்காக நான் முகநூலில் புத்தகங்கள் பற்றி எழுதி விடுகிறேன்.  என் பிளாகிலும் பதிவு செய்து விடுகிறேன்.  கடந்த இரண்டு மூன்று வருடங்களாக இதைச் செய்கிறேன்.
இதையெல்லாம் தொகுத்து நீங்களும் படிக்கலாம் என்ற பெயரில் இரண்டு தொகுதிகளாகக் கொண்டு வந்துள்ளேன். இரண்டு தொகுதிகளிலும் 41 புத்தகங்களைப் பற்றி எழுதி உள்ளேன்.  6000 பக்கங்கள் வரை படித்திருக்கிறேன்.
என் ஆரம்ப காலத்தில் நான் பல புத்தகங்களில் கோடுகள் போட்டிருப்பேன்.  இப்போது கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது.  என்ன காரணத்திற்காக கோடு போட்டேன் என்பது எனக்குத் தெளிவாகத் தெரியவில்லை. மேலும் அந்தப் புத்…

ஒரு மேதையின் ஆளுமை

அழகியசிங்கர்




புதிய நம்பிக்கை என்ற பத்திரிகையைப் பற்றி தெரியுமா? தெரிவதற்கு வாய்ப்பில்லை.
புதிய நம்பிக்கையின் ஆசிரியர் பொன் விஜயன். அவர் புதிய நம்பிக்கை என்ற பத்திரிகையுடன் ஒரு புத்தகம் கொண்டு வந்தார். அந்தப் புத்தகத்தின் பெயர் 'ஒரு மேதையின் ஆளுமை.'
சத்யஜித்ராயைப் பற்றி கதைகள், கட்டுரைகள், பின் அபுர் சன்ஸôர் என்ற திரைக்கதையின் தமிழாக்கம் என்றெல்லாம் ராயல் அளவில் கொண்டு வந்தார்.
பொன் விஜயன் தன் வீட்டில் ஒரு பகுதியில் லெட்டர் பிரஸ் வைத்திருந்தார். அதுவும் வாடகை வீடு. அங்கயே புத்தகம் தயாராகும். அந்த பிரஸ்ஸில் பணிபுரிபவர்கள் பொன் விஜயனைவிட பண வசதிப் படைத்தவர்கள். பொன் விஜயன் வாரம் ஒரு முறை சனிக்கிழமை அவர்களுக்குக் கூலி கொடுப்பதற்குத் தடுமாறுவார். அவர் மனைவியின் நகைகள், அல்லது வெள்ளிப் பாத்திரங்களை அடகு வைப்பார்.
அவரே அச்சுக் கோர்த்த ஃபாரங்களை சைக்கிளில் கட்டி எடுத்துக்கொண்டு போய் அச்சடிப்பார். கடுமையான உழைப்பாளி. அவரிடம் என் விருட்சம் இதழ்களையும் அச்சடிக்கக் கொடுத்திருக்கிறேன். ஒரு முறை சைக்கிளில் பாரங்களை எடுத்துக் கொண்டு போகும்போது தவறி கீழே சைக்கிளைப்…

உங்களுக்குப் பிடித்திருந்தால் வாங்கிக்கொள்ளவும்

அழகியசிங்கர்



என்னுடைய  கதைகள் எல்லாம் சேர்த்து 664 பக்கங்கள் கொண்ட புத்தகமாக அழகியசிங்கர் சிறுகதைகள் முழுத்தொகுப்பு ஒன்று கொண்டு வந்துள்ளேன்.   இப் புத்தகம் வெளிவந்தபிறகு இதன் விலையை பாதியாகக் குறைத்து ரூ.300க்குக் கொடுத்தேன்.   பொதுவாக நான் வங்கிக் பணியில் சேர்வதற்கு முன்பிலிருந்து வங்கிப் பணியை முடித்து ஓய்வுப்பெற்றபின்பும் நான் எழுதிய கதைகளை (64 கதைகள், 7 குறுநாவல்கள், ஒரு நாடகம், சில சின்னஞ்சிறு கதைகள்) தொகுத்துள்ளேன். ராயப்பேட்டாவில் நடைபெறும் புத்தகத் திருவிழாவிலும் இப் புத்தகத்தின் விலை ரூ.300தான்.  முன்பு பணம் கட்டிய இருவருக்கு நான் புத்தகம் அனுப்ப வேண்டும்.  ஆனால் அவர்களுடைய தொலைப்பேசி எண் என்னிடம் இல்லை.  எப்படித் தொடர்பு கொள்வது என்பது தெரியவில்லை.  புக்கிஸ் என்ற பெயரில் ஒரு பரங்கிமலையில் அற்புதமான புத்தகக் கடை வைத்திருக்கிறார்.  அவருடைய தொலைப்பேசி எண் வேண்டும். அரங்கு எண் 11 வருபவர்கள் என் கதைப் புத்தகத்திலிருந்து என் கதைப் புத்தகத்தை எடுத்து ஒரு கதையைப் படிக்கவும்.  உங்களுக்குப் பிடித்திருந்தால் வாங்கிக்கொள்ளவும். வேண்டாம் என்று தோன்றினால் என்னைப் பார்த்து முடிந்தால் ஒரு சிரிப்…

விருட்சத்தில் வெளிவந்த வாஜ்பேயி ஒரு கவிதை

அழகியசிங்கர்






ஆரம்பத்தில் விருட்சம் இதழில் மொழிப்பெயர்ப்பு கவிதைகள் அதிகமாக வரும்.  பலர் பல மொழிகளிலிருந்து மொழிப்பெயர்த்து விருட்சத்திற்கு அளித்துள்ளார்கள்.
üமுன்னாள் பிரதம மந்திரி வாஜ்பேயி கவிதைகளை சௌரி அவர்கள் ஹிந்தியிலிருந்து  நேரிடையாக மொழிபெயர்த்து அனுப்பியிருந்தார்.  அதுவரை அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள் கவிதைகள் எழுதுவார்கள் என்பதை நான் நம்பாமல் இருந்தேன்.
வாஜ்பேயி கவிதையைப் படித்ததும் அசந்து விட்டேன்  அக் கவிதையை நான் திரும்பவும் இங்கு அளிக்க விரும்புகிறேன்.
'உயரத்தில்" என்ற வாஜ் பேயி இந்தக் கவிதை அக்டோபர்-டிசம்பர் 1991ஆம் ஆண்டு பிரசுரமாகியிருந்தது.  அதை இங்கு அளிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.



உயரத்தில்

தமிழில் - செளரி

மகோன்னத இமயமலை முகட்டில்
மரம் செடி கொடிகள் வேரூன்றுவதில்லை
சவச் செல்லாபோல் சரிந்து பரவிய
சாவைப்போல் குளிர்ந்தடங்கிய
பனிப்படலம் மட்டும்
படிந்து பரவிக்கிடக்கும்;
அந்த உன்னத உயரம்
நீரைப் பனிக்கட்டியாக்கும்
நிமிர்ந்து நோக்குபவர் உள்ளம் குறுகும்
பயபக்தியுடன் பணிவு கொள்ள
உரிமையுடன் உத்தரவிடும்.

மலையேறிகளை வரவேற்கும்
தன் மீது கொடிக்கம்பம் நாட்டலாம்,
ஒரு கு…

சென்னை புத்தகத் திருவிழாவில் அரங்கு எண் 11....

அழகியசிங்கர்




4வது சென்னை புத்தகத் திருவிழா ஒய்எம்சிஏ ராயப்பேட்டை மைதானத்தில் நாளையிலிருந்து துவங்குகிறது. நேற்று ஸ்டால் எண் என்ன கிடைக்குமென்று அமர்ந்திருந்தேன். முக்கியமாக முதல் வரிசைதான் கிடைக்குமென்று என் மனதில் பட்டது. ஆனால் முதல் வரிசையில் ஒன்று கிடைத்தால் நன்றாக இருக்குமென்று நினைத்தேன். இல்லாவிட்டால் 5 கிடைத்தால் இன்னும் நன்றாக இருக்குமென்று தோன்றியது. ஆனால் 11ஆம் எண் கிடைத்தது. இது ஒருவிதத்தில் நல்லது. ஏன் எனில் வருபவர்கள் நடந்து வரும்போது ஒன்றை விட்டுவிடுவார்கள். 11 வரும்போது மேலே பார்ப்பார்கள். விருட்சம் வெளியீடு என்று இருந்தால், உள்ளே நுழைந்தாலும் நுழைவார்கள். ஆனால் நாளை மதியம்தான் எல்லாப் புத்தகங்களையும் எடுத்துக்கொண்டு போகப் போகிறேன். அதாவது கிட்டத்தட்ட 11 அல்லது 12 மணி அளவில். 8 அட்டைப் பெட்டிகள் தயாரித்து விட்டேன். எல்லாப் புத்தகங்களிலும் ஐந்து விதம் அடுக்கி விட்டேன். மொத்தம் 400 புத்தகங்கள்தான். சந்தியா, கிழக்கு, ஆனந்தவிகடன், நக்கீரன் சாகித்திய அக்காதெமி புத்தகங்களை வாங்கி விற்க உள்ளேன். நான் பதிப்பாளன் கம் விற்பனையாளன். நஷ்டம் வந்தால் ஏழுமலையான் உண்…

கூட்டத்திற்கு வந்திருந்தவர்களுக்கு நன்றி...

அழகியசிங்கர்



நேற்று பெய்த மழையில் காலையில் கூட்டம் நடக்குமா என்ற சந்தேனம் என்னிடம் ஒட்டிக்கொண்டிருந்தது.  10.30 மணிக்குக் கிளம்பும்போது மழை விட்டிருந்தது.  எல்லோரும 11 மணிக்குக் கூடினோம்.  கலந்துகொண்டவர்கள் பலரும் உற்சாகமாக இருந்தார்கள்.   உப்புக்கணக்கு என்ற நாவலைப் பற்றி பலரும் பேசினோம்.  சிறப்பாக புனையப்பட்ட வரலாற்று நாவல்.  கூட்டத்தில் நடந்த விவாதத்தை உற்று நோக்கினால் நாம் காந்தியைப் பற்றி மோசமாக எதாவது சொல்லிவிடுவோமா என்று தோன்றியது. கூட்டம் இனிதே நடந்து முடிந்தது.   கூட்டத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் நன்றி.   -

சாதாரண மனிதர்கள் நடத்தும் சாதாரண கூட்டம்

சாதாரண மனிதர்கள் நடத்தும் சாதாரண கூட்டம்

அழகியசிங்கர்


சாதாரண மனிதன் என்ற தலைப்பில் எழுத்தாளர் நரசய்யா மணிக்கொடி எழுத்தாளர் சிட்டியின் வாழ்க்கை வரலாற்றை எழுதியிருந்தார். உண்மையில் சிட்டி சாதாரண மனிதர் அல்ல. நாளை நடைபெறும் விருட்சம் கூட்டம் குவிகம் இல்லத்தில் நடைபெறுகிறது. ஒரு புத்தக வெளியீட்டுக் கூட்டம். முக்கியமாக சுதந்திர தினத்தன்று நடைபெறுகிறது. அப் புத்தகத்தின் பெயர் உப்புக்கணக்கு. இது ஒரு நாவல். இதை எழுதியவர் வித்யா சுப்ரமணியன். விருட்சம் வெளியீடாக இந் நாவல் வெளிவந்துள்ளது. 342 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தின் விலை ரூ.300. ஆனால் நாளை வாங்குபவர்களுக்கு இப் புத்தகம் ரூ.200க்குக் கிடைக்கும். எழுத்தாளர் வித்யா சுப்ரமணியம் நேரிடையாகவே கையெழுத்துப் போட்டு இப் புத்தகத்தைத் தர உள்ளார். கூட்டத்திற்கு வந்திருந்து சிறப்பு செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன். இது சாதாரண மனிதர்கள் நடத்தும் கூட்டம். எல்லோரும் வர வேண்டும்.
கூட்டம் நடக்குமிடம் : Kuvigam Illam Flat 6, 3rd Floor, A Wing, Silver Park Apartments, 24 Thanikachalam Road, T Nagar, Chennai Near by Hindi Prachara Sabha TOMORROW AT …