அழகியசிங்கர்
ஈனிப்பு
ரா ஸ்ரீனிவாஸன்
கண்ணாடிப் பெட்டகத்துள்
கண்ணை ஈர்த்தது
விற்பனைக்கிருந்த
வண்ண இனிப்புகள் -
இனிப்பின் மணம்
அழைத்தது போல
வந்து சேர்ந்தன
ஈக்களிரண்டு-
முட்டி மோதி
எட்டாத இனிப்பை ஏங்கி
கண்ணாடிப் பெட்டகத்தின் மேல்
ஒட்டிக் கொண்ட ஈக்களுக்கு -
இனிப்பை நாடி
இனிப்பை உண்டு
இனிக்க இனிக்க
இனிப்பிற்குள்ளேயே
மரித்துக் கிடக்கும்
உடன்பிறப்பு ஈக்கள் -
கண்ணில் பட்டது -
கருத்தில் படாதது.
நன்றி : கணத் தோற்றம் - கவிதைகள் - ரா ஸ்ரீனிவாஸன் - விருட்சம் வெளியீடு, சென்னை 33- மொத்தப் பக்கங்கள் : 42 - வெளியான ஆண்டு : 2001 - விலை : ரூ.20.
Comments