Skip to main content

Posts

Showing posts from October, 2010

குட்டிக்கதைகள்

ஏழு பேர்
ஆர். ராஜகோபாலன்
அங்கே மொத்தம் ஏழு பேர் இருந்தார்கள். அவர்களில் பெரியவனாகத் தெரிந்த ஒரே ஒரு பையன் மட்டுமே கால்சிராயும் சட்டையும் அணிந்திருந்தான். மற்றவர்களில் சிலர் மேலேயோ கீழேயோ மட்டு஧மை அணிந்திருந்தார்கள். இரு பொடியன்கள் ஒன்றுமே இல்லாது இருந்தார்கள். ஒரு சிறுமிகூட ஒரு கிழிந்தபாவாடை ஒன்றையே இடுப்பு வரை கட்டியிருந்தாள். அவள் மடியிலிருந்த குழந்தை வாயில் விரலைப் போட்டுக்கொண்டு அவள் மார்பில் தலையை சாய்த்துக் கொண்டிருந்தது.
இவன் உட்கார்ந்த திண்ணைக்கு நான்கு வீடுகளுக்கப்பால் அவர்கள் இப்போது வந்திருந்தார்கள். நன்றாகவும் தெளிவாகவும் அவர்கள் செய்கை இவனுக்குத் தெரிந்தது. கீழே கிடந்த ஒரு அறுந்த மாலையை அவர்களில் ஒருவனுக்குப் போட்டுக் கைதட்டி பெருஞ்சத்தம் செய்து கொண்டிருந்தார்கள். ஒரு பையன் நழுவி விழும் கால்சிராயை ஒரு கையில் பிடித்துக்கொண்டே கூச்சல் போட்டுக்கொண்டிருந்தான்.
அவர்களுக்குச் சுற்றுப்புற பிரக்ஞையே இல்லாதது போல இவனுக்குப் பட்டது. பொழுது போகாமல் வெளியே வந்து உட்கார்ந்திருந்த இவனுக்கு அது மிகுந்த வேடிக்கைக்குரியதாகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூட இருந்தது. ஒரு அயலானின் பார்வ…

கையறு நிலை

வானவெளியெங்கும் நட்சத்திரக் கூட்டங்கள்இடைவெளியின்றி ஜொலிக்கின்றனகாற்று வெளியெங்கும் பூ வாசம்மனவெளியை மயக்குகின்றனவெளியினூடே வெளிச்சம் பாய்ச்சும்கிரணங்கள் முயங்கிக் கிடக்கின்றனபேரவஸ்தையானதொரு விசும்பல்ஆகாயமெங்கிலும் எதிரொலிக்கின்றனகுட்டியை பறிகொடுத்தயானையின் பிளீறிடல் சத்தம்வனமெங்கிலும் ஆக்ரமிக்கின்றனஇரவுக்கு முத்தம் தந்துவழியனுப்பி வைக்கின்றன குழந்தைகள்தனது வாழ்வினூடேகுட்டி குட்டி கதைகளைசேகரித்து வைத்திருக்கின்றார்கள்பாட்டிமார்கள்அநீதியை எதிர்த்து சமர்செய்யாமல்கையறு நிலையில்நின்று கொண்டிருந்தார் கடவுள்அவரது கட்டற்ற
கட்டற்ற அற்புதசக்தியை
கடன் வாங்கிப்
போயிருந்தது சாத்தான்.

கடவுள் ஆடிடும் ஆட்டம்

கடவுளுக்கு முன்னதான
ஜாதகக் கட்டங்களில்
இடையறாது சுழலும்
சோழிகள் திரும்பி விழுகின்றனசதுரங்க ஆட்டங்களில்
சிப்பாய்களை இழந்த ராஜாக்கள்
பயந்திருக்கின்றனர்
ராணிகள் அருகில்.வண்ணம் மாறிவிழும் சீட்டுக்கள்
கோமாளியாக்கிக் கொண்டிருக்கிறது
பிரித்தாடும் கடவுளை.மனிதர்களின் ஆட்டத்தின்
சூட்சுமங்கள் புரியாது
தெறித்தோடுகிறார்
மனிதர்களுடனாடும் கடவுள்.oஒரு விளையாட்டின் இடைவேளையில்
தேநீர் அருந்தும் கடவுளை
கடவுளைச் சந்தித்தேன்.இருவருக்கும் பேசுவதற்கு ஒன்றுமில்லை
புன்னகைத்தோம்
பிரிந்தோம்.அவர் சொல்லாத உண்மைகளும்
நான் கேட்காத கேள்விகளும்
ஒன்றுடன் ஒன்று பேசிக்கொண்டிருந்தன பின்பு.oமரணத்தறுவாயில் என்னை வரச் சொல்லியிருந்தார்
கடவுள்ரகசியம் எதாவது உடைக்கப்படலாம்
என்றோகாதல் எதாவது சொல்லப்படலாம்
என்றோபுலம்பல்கள் சேரலாம்
என்றோநினைத்திருந்தேன்.நான் போய் சேருவதற்குள்
கடவுள் போய்சேர்ந்திருந்தார்.oகடவுள் பொம்மைகளை வைத்து
விளையாடிய குழந்தைகளை
பழிவாங்குவார்
பிறிதொருநாள்.

பூனைகள்.....பூனைகள்.......பூனைகள்.....பூனைகள்...28

பூனையின் பிடிவாதம்

எழுத எழுத…
எழுத மறுத்தப்
பேனா முனை
காகிதப் பாதையில்
எங்கோத் தட்டிற்று.
ஓடும் மோட்டார் சக்கரத்தில்
சிக்கிய சேலைத் துண்டாய்
பேனா முனையின்
இரு கம்பீர
கம்பங்களைப் பிளந்து
அதற்குள் ஒரு
காகிதத் துணுக்கு.
ஜீரணிக்க இயலாமல்
கக்கிய மைக்குள்
மிதந்து வந்த
ஒரு பூனை
பிடிவாதமாய்
வரைமுறையின்றி கத்திற்று
ஒரு எலியினை
வரை வரை என்று.

குமரி எஸ். நீலகண்டன்

கானல்

காற்றோடு கூடிய அடர்த்தியான சாரல் மழை ஊரையே ஈரலிப்புக்குள் வைத்திருந்தது. மேகக் கருமூட்டம் பகல் பொழுதையும் அந்திவேளையைப் போல இருட்டாக்கியிருந்தது. விடுமுறை நாளும் அதுவுமாய் இனி என்ன? உம்மா சமைத்து வைத்துள்ள சுவையான சாப்பாட்டினைச் சாப்பிட்டுவிட்டு அடிக்கும் குளிருக்கு ஏதுவாய்ப் போர்த்தித் தூங்கினால் சரி. வேறு வேலையெதுவும் இல்லை.
ஒருமுறை வெளியே வந்து எட்டிப்பார்த்தேன். வீட்டுக்கு முன்னேயிருந்த வயல்காணி முழுதும் நீர் நிறைந்து வெள்ளக் காடாகியிருந்தது. நாளை கொக்குகளுக்கு நல்ல நண்டு வேட்டை இருக்கிறது என எண்ணிக் கொண்டேன். இந்தக்கிழமை போயா தினத்துக்கும் சேர்த்து மூன்று நாட்கள் விடுமுறை. மழை வெளியே எங்கும் இறங்கி நடமாட விடாது போலிருக்கிறது.
"நானா உங்களுக்கு போன்'' தங்கை சமீனா கொண்டு வந்து நீட்டினாள்.
" யாரு ? "
" வஜீஹா மாமி ஊட்டுலீந்து "
ஹாரிஸாக இருக்க வேண்டுமென நினைத்துக் கொண்டேன். அவன் என்னுடன் கூடப்படித்த நெருங்கிய சினேகிதர்களில் ஒருவன். கொழும்பில் வேலை செய்யும் அவனும் விடுமுறைக்காக வீட்டுக்கு வந்திருக்க…

எதையாவது சொல்லட்டுமா / 28

எதையுமே எப்படி வெற்றி கொள்ள முடியும் என்பதை சிலர் அறிந்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். எந்திரன் படத்தின் விளம்பரத்தை நான் டிவியில் பார்த்தவுடன், உடனே அந்தப் படத்தைப் போய்ப் பார்க்க வேண்டும் என்ற எண்ணமே என்னிடம் எழவில்லை. இப்போதெல்லாம் சினிமாவை விழுந்து விழுந்து முன்பு மாதிரி பார்ப்பதில்லை. பார்க்காமலே கூட இருந்து விடுவேன். பின் படத்தைப் பார்த்துவிட்டு எந்தக் கருத்தையும் குறிப்பிடுவதில்லை. பொதுவாக சினிமாப் படங்களெல்லாம் அபத்தமாகத்தான் எனக்குத் தோன்றும். அதில் எந்த லாஜிக்கையும் கொண்டு வர முடியாது. நம்முடைய பொழுதுபோக்கிற்காகத்தான் அதைப் பார்க்கிறோம். சினிமாவில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள், அதில் பணிபுரியும் ஏராளமான தொழிலாளிகள் என்றெல்லாம் பார்க்கும் போது, சினிமா என்பது ஒரு அசுரரின் உலகத்தைச் சார்ந்ததாகத் தோன்றும். இந்த அசுரர் உலகத்தில் நடப்பதை வெறும் பார்வையாளனாகத்தான் பார்க்கிறோம். இந்த சலன உலகத்தை நாமும் பார்த்து சலனமடைகிறோம். குருதத் படம் ஒன்றை என் நண்பர் பார்த்துவிட்டு கண் கலங்கியதை நினைத்து வியந்திருக்கிறேன். வேறு நண்பர் ஒருவர் சிவந்த மண் என்ற ஒரு படத்தை 8 தடவைகளுக்கு மேல் பார்த்…

விலகிப் போனவன்

பூக்களை ஏந்திக் கொண்டவன்
வாழ்வின் இனிய நாதத்தைக் கற்றுத்தந்தவன்
தனித்த பசிக்குச் சுய சமையலையும்
விரக்தி நிரம்பிய ஏகாந்தப் பொழுதுகளில்
மனதோடு இசைக்கப் பாடல்களையும்
அருகிலிருந்து சொல்லித் தந்தவன்
சொல்லியோ சொல்லாமலோ
அன்பின் பிடியிலிருந்து
யாரோவாகி அவன் நகர்ந்தவேளை
தெரியாமலே போயிற்று
இறுதியில் தெரிந்தது
ஆழ்கிணறுகளின் பழுப்பு தோய்ந்த
சிதிலங்களுக்கிடையில் துளிர்க்கும்
பசுந்தளிர், சிறு மலர்களைப் போன்று
பார்த்துப் பார்த்து மகிழும்படியான
வாழ்வினை அவன் விட்டுச் செல்லாதது
சிலவேளை வெயிலும்
சிலவேளை மழை இருட்டுமாக
இப்பொழுதெல்லாம் காலம்
வாழ்வியலைக் கற்றுத்தருகிறது
சிலவேளை பனியைத் தூவியும்
சிலவேளை
பழைய நினைவுகளைச் சுட்டி இம்சித்தும்

பால்ய வன பட்டாம்பூச்சிகள்

பொக்கிஷமாய் சேர்த்து வைத்தோம்நாம் சிற்றிலாடிய பருவங்களைகற்பனைகளில் நிலவைதொட்டுவிட்டு வந்த பருவமதுகனவுலகில் மோட்ச தேவதைகளாகஉலாவினோம்சமுத்திர நீரலைகள் வற்றிப்போனாலும்முகத்தில் புன்னகை வற்றா பருவமதுஎந்நேரமும் விளையாட்டு எப்பொழுதும்குதூகலம்பூமியே எங்களது விளையாட்டு மைதானம்கேளிக்கைக்காக பூமிப்பந்தையேஎறிந்து விளையாடும்வேடிக்கையான பருவமதுதுயர மூட்டைகளை தோளில் சுமக்காமல்சுற்றுலா பயண மூட்டைகளை சுமந்துதிரியும் உல்லாச வாழ்க்கையதுகாண்பனவெல்லாம் வேண்டும்கட்டிப்பிடித்து தூங்க பொம்மைகள்ரக ரகமாய் வேண்டும்என அப்பாவிடம் அடம்பிடிக்கும்நினைவைவிட்டு அகல மறுக்கும்காலமதுபால்ய வனத்தை தாண்டி வந்தோம்சிறகற்ற பட்டாம்பூச்சிகளாய்தவிக்கும் வாழ்க்கையில்வழுக்கி விழுந்தோம்.

இம்மாலை ததும்பி வழிந்திருந்தது பொழுது -

யாருமற்ற ஆல மரத்தடியில்இலைகளும் பறவையொலிகளும் உதிரஅறிவு உலகில் வாழ்ந்த நாட்கள்...மேய்ச்சல் போகும் மந்தை மாடுகளின்மணியொலிச் சத்தமும்அவ்வப்போது வியந்துநின்று அகலும்செருப்போசைகளும்ஆலம்பழத்தின் ஊடே ஆசுவாசித்திருந்த பறவையும்வழி தவறிநம்மிடையே வந்த சிறு வெள்ளாடும்காற்றில் படபடத்தபுத்தகப் பக்கங்களும்வியந்து ரசித்தவண்ணச் சிறு பூக்களும்நினைவுகளில்நுண்ணெழிற் சித்திரங்கள் ஆக...பார்க்கவோ பேசவோஎண்ணவோ எழுதவோகூடாத இந்நாளில்கடந்த பாதைகளின்புத்தகங்களும் பேச்சுக்களும் வழித்தடங்களும் மரங்களும்ஒலிகளும் இலைகளும்மாடுகளும் மந்தைகளும்பேரோசையோடுகடந்து விரையஉறைகிறது இம்மாலை பிரிவின் துரு பூசிய அந்த ஆலம் விழுதுகளில்.

எதையாவது சொல்லட்டுமா / 27

ஒருவழியாக நவீன விருட்சம் 87/88வது இதழை அனுப்பி வைத்தேன். கடந்த 15 நாட்களாக அவஸ்தை. ஆனாலும் முழுத் திருப்தியாக இதைச் செய்தேன் என்று சொல்ல முடியாது. இன்னும் சிலபேருக்கு அனுப்புவது நின்று போயிருக்கும். எப்போதோ சந்தா கட்டியவர்க்கு அனுப்பியிருப்பேன். சமீபத்தில் சந்தாவைப் புதுப்பித்தவர்களுக்கு அனுப்பியிருக்க மாட்டேன். இனிமேல்தான் எல்லாவற்றையும் கண்டுபிடிக்க வேண்டும். அது போகட்டும். நவீன விருட்சம் ஆரம்பிக்கும்போது கவிதை இதழாகவே ஆரம்பம் ஆனது. 16பக்கங்கள்தான் முதல் இதழ். எல்லாப் பக்கங்களும் கவிதைகள். கவிதையைக் குறித்து சில சந்தேகங்களை போன எ.சொ.21ல் எழுப்பியிருந்தேன். பலருக்கு நான் அதிருப்தியுடன் எழுதியிருப்பதாகத் தோன்றியது. உண்மை அப்படி அல்ல. கவிதை ஒரு அற்புதமான விஷயம். மிக எளிதில் கவிதை படிப்பவர் மனதைப் பிடித்துவிடும். ஆனால் கவிதையை ரசிக்க தனிப்பட்ட மனோ நிலை தேவை. எதைக் கவிதை என்று தேர்ந்தெடுப்பது என்பதில் சிக்கல் இல்லாமல் இல்லை. கவிதை என்று எதாவது எழுதிவிட வேண்டுமென்று நினைப்பவர்களுக்கு கவிதை எளிதில் வசமாகாது. கவிதை பலரை ஏமாற்றி விடும். 70களில் வானம்பாடி என்ற கூட்டம் கவிதைகளைக் குறித்து உரக்…

ADVERTISEMENT FOR SELVARAJ JAGADHEESAN POETRY BOOK

ருசியுடன் கனிந்திருக்கும் கவிதைகள் - கல்யாண்ஜி (அறிமுக உரையின் ஒரு பகுதி) செல்வராஜ் ஜெகதீசனின் கவிதைகள், பக்கத்திலிருக்கிற ஒருவரிடம், உடனுக்குடன் பேசுகிற அன்றாடத்தின் தொனியுடன் அமைந்து விடுகின்றன. நாம் அன்றாடங்களின் தொனியை வாழ்விலிருந்து உதறிவிட முடியாது.
ஆனால் கவிதையில், அந்த உதறுதலுக்கான, ஈரம் காய்தலுக்கான, வெயிலுக்கும் வெதுவெதுப்புக்குமான அவசியம் இருக்கிறது. கிளையிலைத் தடுப்புக்களைத் தாண்டித் துளைத்து மீறும் வெளிச்ச ரகசியம், எங்கிருந்தோ கேட்கும் பரிச்சயமற்ற குரலில் முடிச்சவிழும் சொல்லின் புதிர், நாம் தாண்டிப் போகிற பேருந்து நிறுத்தத்தில் தலை கவிழ்ந்து உட்கார்ந்து அழும் நடுத்தர வயதுப் பெண், உடன் வாழ்ந்து மறைந்த ஒருவனின் உடலை ஆவேசமான தழலுடன் உள்ளிழுக்கும் மின் தகன மேடையின் கடைசி இரும்புத் தடதடப்பு என்று இப்படி சொல்லிக் கொண்டே போக முடிகிறதான அவசியங்களின் வெளிப்படையான மற்றும் மறைத்து வைக்கப்படும் அடுக்குகள் தேவைப் படுகின்றன.
நாம் புழங்குகிற மொழியை அனுபவங்களின் தலைகீழ் விதையாக அவை ஊன்றுகின்றன. நாமறியாச் சொல்லின் இலைகளுடன் அவை முளைத்து, நாமறியாப் பொருளின் வாசனையுடன் அவை பூத்து, நாமறியா எ…

குடையும் நானும்

அலுவலகபயணமாகநான்சென்றஅந்தஊர்எனக்குப்புதிது. வேலைகளில்ஒடுங்கிப்போனஎன்கண்களுக்குஅந்தஊரில்எதுவுமேதெரியவில்லை.
ஊருக்குதிரும்பும்நேரம்பெய்தமழையில்குடையினைவிரித்தேன். சிதறியமணலில்நீரின்சிருங்காரஆட்டம்என்கால்களைகிளுகிளுக்கவைத்தது.சுற்றிலும்பன்னீரைச்சொரிந்ததுபோல்குடையருவியின்குதூகலம்.கார்மேககுடையில்கண்ணாடி மாளிகைக்குள் கனிந்தமழைரசத்தில்களித்தநான்ரயில்நிலையத்தைநெருங்கியபோதுகையில்குடைஇல்லை.மழைவிட்டபோதுதேநீருக்காகஒதுங்கியகடையில்குடையையும்விட்டிருக்கிறேன்.
அவசரஅவசரமாககுடைக்காகஅந்தவழியில்திரும்பியஎன்நடையின்வேகத்தைகண்கள்கால்களில் கயிறுகளைக் கட்டி இழுத்தன.
நான்வந்தபாதையில்