Skip to main content

எதையாவது சொல்லட்டுமா / 28எதையுமே எப்படி வெற்றி கொள்ள முடியும் என்பதை சிலர் அறிந்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். எந்திரன் படத்தின் விளம்பரத்தை நான் டிவியில் பார்த்தவுடன், உடனே அந்தப் படத்தைப் போய்ப் பார்க்க வேண்டும் என்ற எண்ணமே என்னிடம் எழவில்லை. இப்போதெல்லாம் சினிமாவை விழுந்து விழுந்து முன்பு மாதிரி பார்ப்பதில்லை. பார்க்காமலே கூட இருந்து விடுவேன். பின் படத்தைப் பார்த்துவிட்டு எந்தக் கருத்தையும் குறிப்பிடுவதில்லை. பொதுவாக சினிமாப் படங்களெல்லாம் அபத்தமாகத்தான் எனக்குத் தோன்றும். அதில் எந்த லாஜிக்கையும் கொண்டு வர முடியாது. நம்முடைய பொழுதுபோக்கிற்காகத்தான் அதைப் பார்க்கிறோம். சினிமாவில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள், அதில் பணிபுரியும் ஏராளமான தொழிலாளிகள் என்றெல்லாம் பார்க்கும் போது, சினிமா என்பது ஒரு அசுரரின் உலகத்தைச் சார்ந்ததாகத் தோன்றும். இந்த அசுரர் உலகத்தில் நடப்பதை வெறும் பார்வையாளனாகத்தான் பார்க்கிறோம். இந்த சலன உலகத்தை நாமும் பார்த்து சலனமடைகிறோம். குருதத் படம் ஒன்றை என் நண்பர் பார்த்துவிட்டு கண் கலங்கியதை நினைத்து வியந்திருக்கிறேன். வேறு நண்பர் ஒருவர் சிவந்த மண் என்ற ஒரு படத்தை 8 தடவைகளுக்கு மேல் பார்த்துவிட்டு, எஸ் எஸ் எல் சி யில் மிகக் குறைந்த மதிப்பெண் எடுத்துத் தப்பினார்.


நம்முடைய வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே சினிமா உலகம் மாறி விட்டது. பத்திரிகைகள், டிவிக்கள் என்று சினிமாவிற்குக் கொடுக்கும் முக்கியத்துவம் வேறு எதற்கும் கிடையாது. தினமும் ஒரு சினிமா பார்க்கும் நண்பர்களை நான் அறிவேன். டிவி மூலம் தினம் தினம் எத்தனையோ சினிமாக்களை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நடிகர்கள் நடிகைகள் நமக்கு வேண்டியவர்களாகப் போய்விடுகிறார்கள். அவர்களைப் பற்றிய செய்திகள் நமக்கு முக்கியமாகப் போய்விடுகிறது. அவர்களுடைய பிரச்சினைகள் நம்முடைய பிரச்சினைகளாகத் தோன்றுகிறது. அவர்களைப் பற்றிய செய்திகள் நமக்கு முக்கியமாகப் படுகிறது.


அதைப்போல் ஒரு சினிமா தயாரிப்பது என்பது கோடிக்கணக்கில் பேரம் செய்யும் வியாபாரம். இந்த வியாபாரத்தில் வெற்றிப் பெறுபவர்களை விரல் விட்டு எண்ணிவிடாலாம். அவர்கள் என்னதான் கோடிக்கணக்கில் செலவு செய்தாலும், மக்கள் முன்னால்தான் போய் நிற்க வேண்டும். இந்த வியாபாரத்தில் வெற்றியையும் தோல்வியையும் தீர்மானிப்பவர்கள் சினிமாவையே பார்த்துக் கொண்டிருக்கும் சினிமா வெறியர்கள்.


அதிக அளவு முதலீடு செய்வதால், ஒரு சினிமாவைப் பார்க்க சாமான்யர்கள் அதிக விலை உள்ள டிக்கட்டுக்களை வாங்க வேண்டி உள்ளது. ஒரு விதத்தில் இந்த சினிமா ஒவ்வொரு மனிதரின் அன்றாடப் பிரச்சினைகளிலிருந்து தப்பிக்க வைக்கிறது என்றும் தோன்றுகிறது. அவன் கவலைகளை மறக்க வைக்க உதவுகிறது. என்னுடன் பணிபுரியும் நண்பர் ஒருவர் எம்.ஜி.ஆர் ரசிகர். அவர் எப்படி எம்.ஜி ஆரின் படத்தை ரிலீஸான உடனே முதல் காட்சியில் பார்த்த அனுபவத்தை விவரித்துக் கொண்டிருந்தார்.


ரஜினியின் படத்தைப் பார்க்க கட்அவுட்டில் பால் அபிஷேகம் போன்ற ரசிகர்களின் ஆர்ப்பாட்டத்தைப் பார்க்கும் போது இன்னும் வேடிக்கையாக இருக்கிறது. அவர்களுடைய மகிழ்ச்சி முக்கியமாகப் படுகிறது. இந்த ரசிகர்களெல்லாம் சலனமானவர்கள். ரஜினிக்காக எதையும் செய்வார்கள். சினிமாவின் பின்னணியில்தான் இன்று அரசியலுக்குள் நுழைய முடிகிறது. அதுவும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெரிய உண்மை. சினிமாவில் நடிப்பவர்கள், வங்கியில் பணிபுரிபவர்கள், பள்ளியில் ஆசிரியராக இருப்பவர்களைப் போலத்தான் என்று நினைப்பதில்லை. அதேபோல் நடிகைகள் நாம் அன்றாடம் காணும் பெண்களைப்போல்தான். ஆனால் அபிமான நடிகைகளை நினைத்து நினைத்து பித்துப் பிடித்தவர்களை நான் பார்த்திருக்கிறேன். சினிமாவில் நடிப்பவர்கள் இருக்கட்டும். சினிமாவையே பார்த்து பார்த்து பொழுதைக் கழிப்பவர்களை என்ன செய்வது?


சங்கரின் எந்திரன் படம் தயாரிக்க 200 கோடி செலவாயிருக்குமாம். அதில் ரஜினியில் சம்பளம் 45 கோடியாம். ஐஸ்வர்யாவின் சம்பளம் 6 கோடியாம். அவ்வளவு கோடி ரூபாயை எப்படியெல்லாம் செலவு செய்வார்கள்.


ரூ100 கொடுத்து என் உறவினர்களுடன் இந்தப் படத்தை காசி தியேட்டரில் பார்த்தேன். பிரமிக்க வைக்கும் காட்சிகள். பல ஆங்கிலப் படங்களின் பாதிப்பு இப் படம் என்று சொன்னாலும் தமிழில் இது புது முயற்சி. 60வது வயதில் ரஜினியின் இந்த முயற்சி ஆச்சரியமாகவே இருக்கிறது. எல்லாம் டீம் ஒர்க். கிராபிக்ஸ் அசத்தல். எனக்கு டிக்கட் புக் செய்தவர் இன்னும் 6 தடவைகளாவது பார்ப்பேன் என்று கூறினார். இந்தப் படத்தை சிறுவர்கள், பெண்கள் முதியவர்கள் என்று எல்லோரும் போய்ப் பார்க்கிறார்கள். அதற்கு சன் நெட் வொர்க்கின் விளம்பரமும் ஒரு காரணம்.


Comments

BALUSWARNA said…
«ýÒûÇ «Æº¢í¸÷ «Å÷¸§Ç,

¿¡Ûõ"எதையாவது சொல்லட்டுமா

±ó¾¢Ãý ±ó¾Å¨¸?
Å¢ïº¡É ÅÇ÷¡ø ÓØÐõ ÁÉ¢¾ ¯½÷º¢ °ð¼ôÀð¼ «¾¢¸ ÀÄõ Å¡öó¾ ¿¢Â¡ÂÁ¸ ¦ºÂøÀÎõ ±ó¾¢Ãý Ó¾ø Ũ¸.
Åììà Ҿ¢ÔûÇ ÁÉ¢¾É¡ø ¾¢Â ±ñ½í¸Ù¼ý ¦¸¡Îà ¦ºÂø¸û ¦ºöÔõ Á¡üÈôÀð¼ ®ó¾¢Ãý þÃñ¼¡õ Ũ¸.

þÅü¨È ±øÄ¡õ Á¢¨¸ ÀÎò¾¢ À½õ ÀÄ ¦ºÄ× ¦ºöРŢÇõÀÃõ ÓÄõ Áì¸Ç¢ý Áɾ¢ø Á¢¸ ¦À¡¢Â Á¡¨Â ²üÀÎò¾¢,«ôÀÅ¢ À¡Áà þ¨Çï÷¸û ÁÉò¨¾ ÁØí¸ÊòÐ À¡ø «À¢§„¸õ ¦ºöÔõ «Ç×ìÌ ¾ûÇôÀðÎ «Å÷¸ÙìÌ ¸¢¨¼ìÌõ ¦º¡üÀ ÅÕÅ¡¨Â «¾¢¾ Å¢ÇõÀÃõ ãÄõ ÅﺸÁ¡¸
ݨÈÂ¡Ê §¸¡Ê §¸¡Ê¡¸ Ä¡Àõ ¦¸¡Æ¢ìÌõ ±ó¾ ¢Ãò¾Éõ ±ó¾Å¨¸?

¿ À¡ÄÍôÃÁ½¢Âý.
¦ºý¨É .83