Skip to main content

பால்ய வன பட்டாம்பூச்சிகள்


பொக்கிஷமாய் சேர்த்து வைத்தோம்

நாம் சிற்றிலாடிய பருவங்களை

கற்பனைகளில் நிலவை

தொட்டுவிட்டு வந்த பருவமது

கனவுலகில் மோட்ச தேவதைகளாக

உலாவினோம்

சமுத்திர நீரலைகள் வற்றிப்போனாலும்

முகத்தில் புன்னகை வற்றா பருவமது

எந்நேரமும் விளையாட்டு எப்பொழுதும்

குதூகலம்

பூமியே எங்களது விளையாட்டு மைதானம்

கேளிக்கைக்காக பூமிப்பந்தையே

எறிந்து விளையாடும்

வேடிக்கையான பருவமது

துயர மூட்டைகளை தோளில் சுமக்காமல்

சுற்றுலா பயண மூட்டைகளை சுமந்து

திரியும் உல்லாச வாழ்க்கையது

காண்பனவெல்லாம் வேண்டும்

கட்டிப்பிடித்து தூங்க பொம்மைகள்

ரக ரகமாய் வேண்டும்

என அப்பாவிடம் அடம்பிடிக்கும்

நினைவைவிட்டு அகல மறுக்கும்

காலமது

பால்ய வனத்தை தாண்டி வந்தோம்

சிறகற்ற பட்டாம்பூச்சிகளாய்

தவிக்கும் வாழ்க்கையில்

வழுக்கி விழுந்தோம்.

Comments