Skip to main content

Posts

Showing posts from July, 2015

கசடதபற மே 1971 - 8வது இதழ்

அநாசாரம்                                                                      நீலமணி வண்டோடு சம்போகம் செய்துவிட்டுக் குளிக்காமல கடவுள் தோளேறும் மாலைப் பூ எழுத்து காலத்திற்குப் பிறகு, கசடதபற ஒரு முக்கியமான இடத்தைப் பெறுகிறது.  எழுத்தில் வெளிவந்த கவிதைகள் கசடதபற இதழ்களில் வெளிவர வாய்ப்பு உள்ளது.  ஆனால் கசடதபற இதழ்களில் வெளிவந்த கவிதைகள் எழுத்துவில் பிரசுரம் ஆக வாய்ப்பில்லை. உதாரணமாக நீலமணி என்ற கவிஞர் கசடதபற இதழ்களில் முக்கியமான கவிஞராகத் தென்படுகிறார்.  பாலுணர்வை வெளிப்படையாக கவிதைகள் மூலம் முதன் முதலாக கசடதபற இதழ்கள் வெளிக்கொண்டு வர இவர் ஒரு காரணம். ஏற்கனவே அழைப்பு என்ற கவிதை எல்லோருடைய கவனத்தையும் கவர்ந்த ஒன்று. நிரோத் உபயோகியுங்கள் நிரோத் உபயோகியுங்கள் என்று விளம்பரங்கள் வலியுறுத்துகின்றன வாயேன். அதேபோல் கசடதபற இதழ்களில் பெண் கவிஞர்கள் யாருமில்லை.  ஆனால் பெண்களைப் பற்றிய கவிதைகள் நிறையா உண்டு.

அப்துல்கலாம் பற்றிய எளிய குறிப்புகள்....

அழகியசிங்கர்  எதிர்பாராதவிதமாய் நேற்று இரவு 7 மணி சுமாருக்கு டிவியை ஆன் செய்தேன்.  பிரதம மந்திரி கலாமை புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். ஏன் புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கிறார் என்று யோசித்தப் போதுதான் தெரிந்தது.  அப்துல்கலாம் மாணவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும்போது மரணம் அடைந்து விட்டார் என்ற துக்கச் செய்தியை அறிய நேர்ந்தது.  சமீபத்தில் ஒரு கூட்டத்தில் அப்துல்கலாம் பேசுவதைக் கேட்டேன்.  அவர் ரொம்பவும் வயதாகிப் போய், பேசும்போதே தடுமாறுவதுபோல் தோன்றியது.   நான் 2004ல் பந்தநல்லூர் என்ற ஊரில் உள்ள வங்கிக் கிளையில் பணிபுரிந்து கொண்டிருந்தேன்.  அப்போது ஒரு துயரமான சம்பவம் நடந்தது.  கும்பகோணத்தில் உள்ள ஒரு பள்ளிக் கூடம் எரிந்து, தப்பிக்க முடியாமல் பல சிறார்கள் எரிந்த சாம்பலாகி விட்டார்கள். பெரிய துயரமான சம்பவம்.  என் அலுவலகத்தில் உள்ள ஒரு பெண்மணி, இந்தச் செய்தியைக் கேட்டவுடன், அழ ஆரம்பித்துவிட்டார்.   இது மாதிரியான துயரத்தை எப்படி கவிதையாக வரிகளில் கொண்டு வருவது என்று யோஜனை செய்து கொண்டிருந்தேன்.  வெறும் வார்த்தைகளால் வடித்து விடலாம்.  ஆனால் அதை கவிதை வரிகளில் வடிப்பது

எதையாவது சொல்லட்டுமா..........99

அழகியசிங்கர்  கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு முன், நான் என் அப்பாவின் மேட் இன் இங்கிலாந்த் சைக்கிளை எடுத்துக்கொண்டு, ஒரு குதிரை மேல் ஏறி ஓட்டுவதுபோல் மேற்கு மாம்பலத்திலிருந்து மயிலாப்பூர் வரை ஒரு நண்பரின் வீட்டிற்கு வாரம் ஒரு முறை தவறாமல் போவேன்.  பின் நானும் அந்த நண்பரும் கடற்கரைக்குச் செல்வோம்.  அங்கு வேறு சில நண்பர்கள் வந்திருப்பார்கள்.  நாங்கள் இலக்கியத்தைப் பற்றி பேசுவோம்.  இதெல்லாம் ஒரு காலத்தில் ஆத்மாநாம் நண்பர்களைச் சந்தித்த இடத்தில்தான் சந்திப்போம்.   நான் என் நண்பரைப் பார்த்தபோது, ஆத்மாநாம் உயிரோடு இல்லை.  ஆனால் மற்ற நண்பர்களுடன் சந்திப்பு நிகழாமல் இல்லை.  எங்கள் கூட்டத்திற்கு ஞானக்கூத்தன்தான் எப்போதும் தலைமை.  என்றாவது கூட்டத்திற்கு அவர் வராவிட்டால் கூட்டம் களை இழந்ததுபோல் இருக்கும்.  நான் முதலில் சைக்கிளிலும் பின் லாம்பி ஸ்கூட்டரிலும் வாரத்தில் ஒருநாள் மாம்பலத்திலிருந்து மயிலாப்பூருக்கு பறந்து பறந்து வருவேன்.  பின் திருவல்லிக்கேணிக்கும் அடிக்கடி போவேன்.  பஸ்ஸில் போக எனக்குப் பிடிக்காது.  சைக்கிள், ஸ்கூட்டர்தான்.   என் நண்பருக்கு நான் இப்படி வருவத

நானும் பார்க்கிறேன் சினிமாக்களை......

  அழகியசிங்கர் 30 06.2014 அன்று நான் பார்த்த படம் சான்று ( PROOF).  ஷேக்ஸ்பியர் இன் லவ் என்ற திறமையான படததை எடுத்து இயக்குநர்தான் இந்தப் படத்தையும் எடுத்துள்ளார்.  ஆஸ்கர் வெற்றிப் பெற்ற சிறந்த நடிக்கைக்கான விருதுபெற்ற கெயிநத் பால்ரோ Gwyneth Paltrow (Best Actress, Shakespeare in Love, 1998) , அந்தோனி ஹாப்கின்ஸ் (சிறந்த நடிகர் விருதுபெற்றவர்), ஹோப் டேவிஸ் போன்ற வர்கள் சிறப்பாக நடித்தப் படம் 'சான்று' என்ற இப் படம்.  27 வயது நிரம்பிய காத்ரின் என்ற  பெண்  நடுசாமத்தில் டிவி பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவள் குடிப்பதற்கு மது கொடுக்கிறார் அவள் அப்பா.  சிறிது நேரம் அவர்கள் இருவரும் புத்தி பிறழ்ச்சியைப் பற்றி பேசிக்கொணள்டிருக்கிறார்கள். அந்தப் பேச்சு முடியும்போது ஒரு விஷயம் தெரிகிறது.  அவள் அப்பா ராபர்ட் போனவாரம் இறந்து விட்டார்.  அவரை நாளை அடக்கம் செய்யப் போகிறரர்கள்.  காத்ரின் அவளுடைய அப்பாவைப் பற்றி நினைவுகளுடனும், அவளுடைய எதிர்காலம் பற்றிய நிச்சயம் இன்மையுடனும் வாழ்கிறாள்.   அவள் இப்படிபட்ட கனவுடன் விழித்துக் கொள்ளும்போதுதான் அவளுக்குத் தெரிகிறது   அப்பாவுடைய மாணவனான ஹால் அவர

இரவல் புத்தகங்கள்

ஜெ.பாஸ்கரன்  நீங்கள் ஒரு புத்தகப் பிரியரா ? ஆம் என்றால் மேலே படியுங்கள் – இல்லை என்றால் மேலே சென்று விடுங்கள் ( அடுத்த போஸ்டுக்கு என்று அர்த்தம்) ! அல்லது பிரியமான டிவி சானலின் முன் அமர்ந்துகொள்ளுங்கள் ! ’ நூலின்றி அமையாது உலகு ‘ – இப்புத்தகம் பேராசிரியர் இரா.மோகன் தொகுத்துள்ள, ’புத்தகம்’ பற்றிய கட்டுரைகள். புத்தக விரும்பிகள் அவசியம் வாங்கிப் படிக்கவேண்டிய புத்தகம் (வானதி பதிப்பகம்)! ‘ புத்தகம் வாங்கிப் படிப்பது ‘ என்பதில்  ‘ விலை கொடுத்து ‘ அல்லது ’இரவல்’ என, இரு நிலைகள் மறைந்திருப்பதை அறிக ! சொந்தப் புத்தகத்தைச் சிறிது சோம்பலாய், அலமாரியில் வைத்துப் பிறகு மெத்தனமாய் வாசிக்கலாம். இரவல் புத்தகம் சிறிது அவசரமாய்ப் படிக்க வேண்டியிருக்கும் – இது திருப்பிக் கொடுக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு மட்டும் ! – கொஞ்சம் டென்ஷன் ! புத்தகம் படிப்பவர்கள் பல ரகம் ! விரும்பிய புத்தகங்களைப் புதியதாய் வாங்கிப் படிப்பவர்கள், வாங்கியவர்களிடம்  இரவல் வாங்கி விரும்பிப் படிப்பவர்கள், லைப்ரரியில் அமர்ந்து படிப்பவர்கள் ( நேரம் அவர்கள் வசத்தில் இருப்பவர்கள் மட்டும்!), சர்குலேஷன் லைப்ரரியி

ஆத்மாநாம் சில குறிப்புகள்

அழகியசிங்கர் 1984 ஆம் ஆண்டு ஜøலை 6ஆம் தேதி ஆத்மாநாம் தற்கொலை செய்து கொண்டு விட்டார்.  அந்தச் செய்தியைக் கேட்டு அவருடைய நெருங்கிய நண்பர்களான ஞானக்கூத்தன், காளி-தாஸ், ஆர் ராஜகோபாலன், எஸ் வைத்தியநாதன், ஆனந்த், ரா ஸ்ரீனிவாஸன் அடைந்த வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஆத்மாநாம் ழ என்ற பத்திரிகையை ஆரம்பித்தாலும், சில இதழ்களுக்குப் பிறகு அவரால் அந்தப் பத்திரிகையைக் கொண்டு வர முடியவில்லை.  ஞானக் கூத்தன், ஆர் ராஜகோபாலன் போன்றவர்கள் தொடர்ந்து கொண்டு வர காரணமாக இருந்தார்கள்.  அச்ச்ங்ஸ்ரீற்ண்ஸ்ங் ஈண்ள்ர்ழ்க்ங்ழ் என்ற நோயால் அவர் பாதிக்கப்பட்டபோது, அவரைப் பார்க்கச் சென்ற அவருடைய நெருங்கிய நண்பர்கள் கண்கலங்கி விட்டார்கள்.  ஆனால் யாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்த நோயின் தாக்கத்தோடு இருக்கும்போதுதான், நான் ஆத்மாநாமை ஒருமுறை சந்தித்தேன்.  வைத்தியநாதன் என்ற நண்பருடன்.   நான், வைத்தியநாதன், ஆத்மாநாம் ராயப்பேட்டையில் உள்ள ஆனந்த் வீட்டிற்கு முதலில் சென்றோம்.  ழ வெளியீடாக வந்த கவிதைத் தொகுதிகளை வாங்கினேன்.  காகிதத்தில் ஒரு கோடு என்ற ஆத்மானமின் கவிதைத் தொகுதியையும்

கசடதபற மே 1971 - 8வது இதழ்

பெரியசாமி   தீர்க்கிறார் வே மாலி என்ன செய்வ திநதக் கையை என்றேன். என்ன செய்வ தென்றால் என்றான் சாமி.  கைக்கு வேலை என்றி ருந்தால் பிரச்னை இல்லை. மற்ற நேரம் - நடக்கும் போதும் நிற்கும் போதும், இந்தக் கைகள் வெறும் தோள் முனைத்தொங் கல், தாங்          காத உறுத்தல் வடிவத் தொல்லை என்றேன். கையைக் காலாக் கென்றான். மேலே குறிப்பிடப்பட்டுள்ள கவிதை வே மாலி என்ற பெயரில் சி மணி எழுதிய கவிதை. ஒன்றும் பயன் இல்லாதபோது கையை காலாகத்தான் பயன் படுத்த வேண்டும்.  ஆனால் கை பயன்பாடு இல்லாதத் தருணத்தில் தோள் முனைத்தொங்கலாகத் தோன்றுகிறது.  இப்படி வேடிக்கையாக பல கவிதைகள் கசடதபற காலத்தில் உருவாயின.  இக் கவிதையைப் படிக்கும்போது, 1968 ஆம் ஆண்டு எழுதிய ஞானக்கூத்தனின் பிரச்னை கவிதை ஏனோ ஞாபகத்திற்கு வரும்.  அக் கவிதை இதோ: பிரச்னை திண்ணை இருட்டில் எவரோ கேட்டார் தலையை எங்கே வைப்பதாம் என்று எவனோ ஒருவன் சொன்னான் களவு போகாமல் கையருகே வை. ஞானக்கூத்தன் கையை தலைக்கு காவலாக வைக்கச் சொல்கிறார்.

நான் இறக்கவிருந்த இரவில்.. - சார்லஸ் புக்கோவ்ஸ்கி

தமிழாக்கம்: ராமலக்ஷ்மி நா ன் இறக்கவிருந்த இரவில் வியர்த்துக் கொண்டிருந்தேன் என் படுக்கையில். கேட்க முடிந்தது என்னால் வெட்டுக்கிளியின் கீச்சொலியையும்  வெளியில் பூனையின் சண்டையையும். உணர முடிந்தது என்னால் மெத்தையின் வழியே என் ஆன்மா  நழுவி விழுவதை. தரையில் அது மோதிடும் முன் துள்ளி எழுந்தேன் நடக்கக் கூட இயலாமல் பலகீனமாய் இருந்தேன் ஆனாலும் சுற்றி வந்து எல்லா விளக்குகளையும் எரிய விட்டேன் திரும்பிச் சென்று  மீண்டும் ஆன்மாவை படுக்கையில் விழ வைத்தேன் எல்லா விளக்குகளும் ஒளிர விழித்துக் கிடந்தேன். ஏழு வயதில் எனக்கொரு மகள் இருக்கிறாள் நிச்சயமாகத் தெரியும் என் இறப்பை ஒருபோதும் அவள் விரும்ப மாட்டாள் இல்லையெனில் என் இறப்பு எனக்கொரு பொருட்டே இல்லை ஆனால் அந்த இரவு முழுவதிலும்  எவரும் எனக்குத் தொலைபேசவில்லை எவரும் மதுபானத்துடன் வரவில்லை என் தோழியும் தொலைபேசவில்லை என்னால் கேட்க முடிந்ததெல்லாம் வெட்டுக்கிளியின் ஒலியை மட்டுமே. புழுக்கம் அதிகமாய் இருந்தது அதைச் சமாளிக்க  எழுவதும் படுப்பதுமாக இருந்தேன், சூரியனின் முதல் கதிரொளி செடிகளின