Skip to main content

Posts

Showing posts from January, 2022

இன்று கநாசுவின் பிறந்தநாள் என்று முகநூலில் பலர் பகிர்ந்திருக்கிறார்கள்.

  துளி - 239 அழகியசிங்கர் இன்று  கநாசுவின்  பிறந்தநாள் என்று  முகநூலில்  பலர் பகிர்ந்திருக்கிறார்கள்.  க.நா, சுவின்  100வது பிறந்தநாள் போது,  கநாசு  கவிதைகள் என்ற புத்தகம் ஒன்றைத் தயாரித்து எல்லோருக்கும் இலவசமாகக் கொடுத்தேன். அப்போது நான் சீர்காழி வங்கிக் கிளையில் பணி புரிந்துகொண்டிருந்தேன். நான் கொடுத்த பலருக்கு க.நா.சு யார் என்று தெரியவில்லை.  நான் மயிலாடுதுறையில் தங்கியிருந்தேன்.  தினமும்  பேருந்தில்  அலுவலகம் செல்வேன்.  ஓட்டலில் ,  செய்தித்தாள்  கடைகளில் எல்லா இடங்களிலும் கொடுத்தேன்.  யாரும் இலவசமாகக்கூட அதை வாங்கிக்கொள்ளவில்லை.  இது பெரிய ஏமாற்றமாக  எனக்கிருந்தது . க.நா.சு எவ்வளவு பெரிய எழுத்தாளர் அவரைக் கூட யாருக்கும் தெரியவில்லையே என்று நினைத்துக்கொண்டேன். இன்று க. நா.சு . கவிதை ஒன்றை  பகிர்ந்து  கொள்ள விரும்புகிறேன்.  வேஷம் நான் அறிவாளி என்று வேஷம் போட்ட போது எல்லோரும் என்னை அறிவாளி என்றார்கள் நான், சோம்பேறியாக வேஷம் போட்டபோது எல்லோரும் என்னைச்  சோம்பேறி என்றார்கள். நான் எழுதத் தெரியாதவன் மாதிரி வேஷம் போட்டபோது எல்லோரும், பாவம் அவனுக்கு எழுதவராது என்றார்கள். ந

76வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்

  அழகியசிங்கர் சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 76வது கூட்டம் சற்று வித்தியாசமாக அமைக்க உள்ளோம். இரண்டு கவிஞர்களின் இரண்டு கவிதைகளை எடுத்துக்கொண்டு அந்தக் கவிதைகள் மூலம் என்ன புரிந்துகொண்டோம் என்று உரையாடுகிறோம். எடுத்துக்கொண்டுள்ள கவிஞர்களின் கவிதைகள் 1. பிரமிளின் வியாதி அறிக்கை 2. தேவதச்சனின் பொற்கணம். நிகழ்ச்சி சனிக்கிழமை (நாளை 29.01.2022) 6.30 மணிக்கு நடைபெற உள்ளது. கவிதா ரசிகர்கள் கலந்துகொள்ள அழைக்கிறேன். Topic: 76வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம் Time: Jan 29, 2022 06:30 PM India Join Zoom Meeting https://us02web.zoom.us/j/81283234168?pwd=L29LRnlXbXhJT0E3L0pOZUt5UENmdz09 Meeting ID: 812 8323 4168 Passcode: 740174

கவிதையும் ரசனையும் 25 – கசடதபற இதழ் கவிதைகள்

அழகியசிங்கர் முதல் இதழிலே கவிதைக்கென்று ஒரு முத்திரையைப் பதிவிட்டது கசடதபற.  ஒரு சமூக மாற்றத்தை கசடதபற இதழில் புதுக்கவிதை மூலம் வெளிப்பட்டது.             ஞானக்கூத்தன் ஆரம்பித்து முதல் இதழ் கசடதபற இதழில் 5 அல்லது 6 கவிதைகள் வெளிவந்திருக்கும்.  இதற்குமுன் சி. மணியின் நடை என்ற பத்திரிகை (7 இதழ்கள் வரை வெளிவந்திருக்கின்றன) புதுக்கவிதைக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்திருக்கின்றன.             கசடதபறவில் முதல் இதழில் வெளிவந்த பாலகுமாரனின் புதுக் கவிதையைப் பார்ப்போம்.             ‘மனித பாவங்கள்’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட கவிதை.                         இரட்டைத் தடங்களில்             எதிர்ப்பட்ட ரயில்கள்             ஒன்றை ஒன்று கண்டதும்             கண் சிமிட்டிக் கொண்டன             பொறி பறந்தது             நெருங்கி வந்ததும்             வந்தனம் கூறின             குழ லொலித்தது             பிரிந்து போகையில்              இகழ்ச்சி நிரைத்து             எச்சில் துப்பின             என் முகத்தில் கரி அடித்தது –             தடங்களைக் கடக்கையில் தெரிந்தது             ரயில்களின் சினேகிதம் கண்டு            

கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி - 27

 அழகியசிங்கர்  சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 27வது  கதை வாசிப்புக்  கூட்டம்.  சனிக்கிழமை - 22.01.2024 அன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது.  தமிழில் இரயில் கதைகள் என்ற தலைப்பில் எழுத்தாளர் சா.கந்தசாமி சாகித்திய அக்காதெமிக்காகத் தொகுத்த கதைப் புத்தகத்தில் உள்ள கதைகளை ஆறு இலக்கிய நண்பரிகள் வாசித்து உரை நிகழ்த்துகிறார்கள். இத் தொகுதியில் 30 கதைகளை இரயில் சம்பந்தமாக எழுதப்பட்ட கதைகளை சா. கந்தசாமி தொகுத்துள்ளார்.  அ.மாதவையா கதை முதல் இப்போது எழுதிக்கொண்டிருக்கும் கதைஞ்ர்களின் கதை வரை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.  விருட்சம் நடத்தும் 27வது கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி Topic: கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி Time: Jan 22, 2022 06:30 PM India Join Zoom Meeting https://us02web.zoom.us/j/89389260574... Meeting ID: 893 8926 0574 Passcode: 171145 விருட்சம் நடத்தும் 27வது கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி  

75வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி

  அழகியசிங்கர் சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 75வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு (14.01.2022) சிறப்பாக நடந்து முடிந்தது. நான்கு கவிஞர்கள் பங்குபெற்று கவிதை வாசித்துச் சிறப்புச் செய்தார்கள்.

ஏழு புத்தகங்களைக் கொண்டு வந்துள்ளேன்

 துளி  - 236 அழகியசிங்கர்  இந்த முறை புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு அவசரம் அவசரமாக 7 புத்தகங்கள் கொண்டு வந்துள்ளேன்.  இன்னும் பல புத்தகங்கள் தயாரிப்பில் உள்ளன. ஒவ்வொரு புத்தகமாக அறிமுகப்படுத்த விரும்புகிறேன். நகுலனின் சுருதி கவிதைகள் என்ற புத்தகத்தைக் கொண்டு வந்துள்ளேன். சுருதி கவிதைப் புத்தகத்தில்  நகுலனின் வித்தியாசமான  கவிதைகள்.  42 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தின் விலை ரூ.50.  பிற்பகலில் என் அறையில் நான் தனியாக கூ கூ என்று குரல் கொடுக்கும் இந்தக் குயில் யாருக்கு எதைச் சொல்கிறது? “

74வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்

  06.01.2022 அழகியசிங்கர் சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 74வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு (08.01.2022) சிறப்பாக நடந்து முடிந்தது. சிறப்புரை : முபீன் சாதிக்கா தலைப்பு : தற்காலக் கவிதைகளில் உள்ளடக்கச் சிக்கலும் வாசிப்பு மரபும் இதன் காணொளியைக் கேட்டு மகிழுங்கள்.

அப்பாவின் நினைவு நாள்

  வாழ்க்கை அனுபவங்கள் அழகியசிங்கர் 2022-01-06  -  Leave a Comment துளி – 233 புத்தகக் காட்சி முன்னிட்டு இந்த முறை இதுவரை 7 புத்தகங்கள் கொண்டு வந்துள்ளேன். இன்னும் நிறையா புத்தகங்கள் கொண்டு வரவேண்டும். அவசரம் அவசரமாக எல்லாவற்றையும் தயாரித்துக் கொண்டிருக்கிறேன். என்னிடம் இன்னும் 20 புத்தகங்கள் தயாரிக்க வேண்டிய மெட்டிரியல் இருக்கிறது. நேற்று என்னுடைய சிறுகதைத் தொகுப்பு அச்சடித்து வந்தது. புத்தகத்தின் தலைப்பு அப்பாவின் அறை. உண்மையில் என் அப்பாவின் நினைவுதினம் நேற்றுதான். அவருக்கு நடத்தப்போகும் திதியைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தோமே தவிர, அவருடைய மறைந்த தினத்தை ஞாபகப்படுத்திக் கொள்ளவில்லை. என் நண்பர் சுரேஷ்தான் ஞாபகப் படுத்தினார். அவருக்கு என் நன்றி. அப்பாவின் அறை என்ற கதை அவர் இருப்பை ஞாபகப்படுத்துகிற கதை. அப் புத்தகம் வழியாக அப்பாவும் ஞாபகமூட்டினார். ஆனால் எனக்குத்தான் புரிந்துகொள்ளத் தெரியவில்லை. அப்பாவே மன்னித்து விடுங்கள். அப்பா 2017ஆம் ஆண்டு இயல்பாக வயது முதிர்ச்சி அடைந்ததால் மரணத்தைத் தழுவினார். அப்பா காற்றில் கலந்த சமயத்தில் நான் அப்பா இனி இல்லை என்ற கட்டுரை எழுதியிருந்தேன். அதை

கதைகளைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி

01.01.2022 அன்று நடந்த நிகழ்ச்சியின் காணொளி புதுமைப்பித்தன் கதை - கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் மௌனி கதை - அழியாச்சுடர் சிறப்பாக நடந்து முடிந்த நிகழ்ச்சி இது.