Skip to main content

Posts

Showing posts from July, 2019

துளி - 61 அந்தக் கல்கண்டும் இந்தக் கல்கண்டும்...

அழகியசிங்கர்
தமிழ் வளர்த்த சான்றோர் என்ற தலைப்பின் கீழ் 24.07.2019 வியாழக்கிழமை நடந்த கூட்டத்தில் தமிழ்வாணனைப் பற்றி கூட்டம். வவேசுவும், லேனா தமிழ்வாணனும்.  நான் பள்ளிக்கூடத்தில் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்போது (அறுபதுகளில்) எனக்கு கல்கண்டு என்ற பத்திரிகை அறிமுகமாயிற்று.  அதன் ஆசிரியர் தமிழ்வாணன். கறுப்பு கண்ணாடி, தொப்பி அணிந்துகொண்டு பத்திரிகையில் போஸ் கொடுப்பவர்.  துணிவே துணை என்ற தாரக மந்திரத்தை பத்திரிகை மூலம் உச்சரித்துக் கொண்டிருப்பார். ஒருமுறை அவர் கிருஷ்ணா குளம் கிரவுண்டில்(சென்னை 1 ல் உள்ளது) பேச வருகிறார் என்று விளம்பரப்படுத்தினார்கள்.  நான் சிறுவன்.  எட்டாவது படித்துக்கொண்டிருந்தேன்.  தமிழ்வாணன் கூட்டத்திற்குப் போனேன்.  இப்போது அவர் என்ன பேசினார் என்று ஞாபகமில்லை, எப்படி இருந்தார் என்று ஞாபகமில்லை.  ஆனால் அவர் பேசி முடித்தவுடன், அவர் இறங்கி வரும்போது, என் கையில் உள்ள காகிதத்தில் அவருடைய கையெழுத்தை வாங்கியது ஞாபகத்திலிருக்கிறது.  இப்போது அந்தத் தாள் இல்லை.   என் மாமாதான் கல்கண்டு பத்திரிகையை அறிமுகப்படுத்தினார்.  ஆனால் குமுதம் வாங்காதே, அது ஆபாசமாக இருக்கும் என்று கூ…

அதனால் என்ன..

அழகியசிங்கர் 
ஞானக்கூத்தன் மறைந்து 3 ஆண்டுகள் ஓடிவிட்டன.  அவர் நினைவாக அவர் கவிதையை இங்கு வெளிப்படுத்துகிறேன.

அதனால் என்ன

ஞானக்கூத்தன்

பாடச் சொன்னால் வெட்கப்படுகிறார்கள்
பேசச் சொன்னால் கூச்சப்படுகிறார்கள்
ஆடச் சொன்னால் கோணுகிறார்கள்
நடிக்கச் சொன்னால் தயங்குகிறார்கள்
வரையச் சொன்னால் வராதென்கிறார்கள்
கவிதை வருமா என்றால் உடனே
எண்பது பக்க நோட்டுப் புத்தகம்
இரண்டை எடுத்து நீட்டுகிறார்கள்.

காந்தியைப் பற்றிப் பேச வாய்ப்பு கொடுத்தார்கள்

அழகியசிங்கர்
நான் காந்தியை என்னுடைய கல்லூரி நாட்களிலேயே விட்டுவிட்டேன்.  கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும். அவருடைய சுயசரிதம்தான் படித்த புத்தகம்.   ஆனால் காந்தியைப் பற்றி எல்லாப் புத்தகங்களையும் வாங்கி வைத்துக்கொள்வேன்.  அதேபோல் பாரதியார்.  காணும் புத்தகங்களை வாங்கி வாங்கி வைத்துவிடுவேன்.  இப்படி வாங்கும் புத்தகங்களைத் தொட்டுப் படிக்க மாட்டேன்.  அப்படியொரு நல்ல பழக்கம் எனக்கு. கடந்த 17ஆம் தேதி காந்தி நிலையத்திலிருந்து காந்தியைப் பற்றிப் பேச ஒரு அழைப்பு.  1 மணி நேரம் பேச வேண்டுமென்று சொல்லிவிட்டார்கள்..   என்னால் ஒரு மணி நேரம் பேச முடியுமா?  காந்தி புத்தகத்தைப் படித்துவிட்டு.  இது பெரிய சவால்.  நான் பெரும்பாலான புத்தகங்களைப் பற்றிப் பேச வேண்டுமானால் 5 நிமிடம் பேச எடுத்துக்கொள்ள முடியும்.  உண்மையில் 5 நிமிடம் போதும் ஒரு புத்தகம் பற்றிப் பேச. அதனால் காந்தியைப் பற்றிப் பேச ஒப்புக்கொண்ட பிறகு, புத்தகத்தை அப்படியே ஞாபகத்தில் வைத்துக்கொண்டு சொல்ல முடியாது என்று தோன்றியது.  குறிப்புகளை எழுதி வைத்துக்கொண்டு சிலர் பேசுவார்.  அதுமாதிரியும் எனக்குத் திறமை இல்லை.   வேற வழியில்லை கட்டுரை தயா…

வண்ணதாசனும் நானும் ஒளிப்பதிவு 1,2,3...

அழகியசிங்கர்
வண்ணதாசனும் நானும் என்ற தலைப்பில் எழுத்தாளர் தேவகோட்டை வ மூர்த்தி 20.07.2019 ஆம் தேதி விருட்சம் இலக்கியச் சந்திப்பில் உரை நிகழ்த்தினார்.   அப்போது நடந்த ஒளிப்பதிவை இங்கே அளிக்கிறேன். 
துளி : 60 - சிற்றிதழுக்கான அஃக் பரந்தாமன் நினைவு இலக்கிய விருது....

அழகியசிங்கர்


இந்த முறை சிற்றிதழுக்கான அஃக் பரந்தாமன் விருது நவீன விருட்சத்திற்குக் கிடைத்துள்ளது.  மணல் வீடு ஆசிரியர் ஹரி கிருஷ்ணன் இதைச் சொன்னபோது என்னால் நம்ப முடியாமலிருந்தது. 1988ஆம் ஆண்டு ஜøலைமாதம்தான் நவீன விருட்சம் முதல் இதழ் வெளிவந்தது.  கிட்டத்தட்ட 31ஆண்டுகள்.  ஆரம்பத்தில் விருட்சமாகவும் அதன் பின் நவீன விருட்சமாகவும் மாறிவிட்டது.  தற்போது 109வது இதழ் வெளிவந்துள்ளது.   நவீன விருட்சம் பத்திரிகையில் எழுதாத எழுத்தாளர்களே இல்லை.  முன்பின் பார்த்திராத எத்தனையோ படைப்பாளிகளின் படைப்புகள் நவீன விருட்சம் இதழில் பிரசுரமாகி உள்ளன. ஞானக்கூத்தனின் பெரும்பாலான கவிதைகள் நவீன விருட்சத்தில்தான் வந்துள்ளன.  ஞானக்கூத்தன் மட்டுமல்ல.  அசோகமித்திரன், பிரமிள், வெங்கட்சாமிநாதன், ஆனந்த், காளி-தாஸ், ரா ஸ்ரீனிவாஸன், வைத்தியநாதன், ஆர் ராஜகோபாலன் என்று பலர் படைப்புகள் வெளிவந்துள்ளன.  இந்தப் பத்திரிகையின் மூலம் நான் பல படைப்பாள நண்பர்களை சம்பாதித்துக் கொண்டேன்.  ஏன் எழுதக் கற்றுக்கொண்டேன். படிக்கக் கற்றுக்கொண்டேன்.  படைப்புகளை சரியாகக் கணிக்கக் கற்றுக்கொண்டேன்.  என்னுடைய திட்டம்.  ஒரு இதழுக்கு ஒரு கவிதை அல்லது ஒ…

எனக்கு அதிர்ஷ்டமில்லை..

எனக்கு அதிர்ஷ்டமில்லை..


அழகியசிங்கர்


இன்று தினமலரில் நான் எழுதிய புத்தகமான üபிரமிளும் விசிறி சாமியாரும்ý புத்தகத்திற்கான விமர்சனம் வந்தது.  மகிழ்ச்சியாக இருந்தது. நான் விசிறி சாமியாரைச் சந்தித்தது ஒரு தற்செயலான விஷயம். அதற்குமுன் சாமியார்களைச் சந்தித்தது இல்லை.  உண்மையில் எனக்கு சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. யாரையும் தேடி சந்திக்க வேண்டுமென்றும் தோன்றியதுமில்லை.
ஆனால் பிரமிள் ஒரு சாமியார் பைத்தியம்.  அவருடன் நட்பு ஏற்பட்டபோது எனக்கு சாமியார் பற்றிய கவனம் ஏற்பட்டது.  எங்கள் அலுவலகம் ஒட்டி இருந்த பீச் ரயில்வே ஸ்டேஷனலில் ஒரு பெண் சாமியார் இருக்கிறார் என்று பிரமிள் சொன்னார்.  எனக்கு ஆச்சரியம். அந்தப் பெண் சாமியாரையும் அவர் ஒருநாள் சுட்டிக் காட்டினார்.  
தினமும் அலுவலகம் போகும்போதும் வரும்போதும் அந்தச் சாமியாரைப் பார்ப்பேன்.  அவர் ஒரு பிச்சைக்காரியாக எனக்குத் தென்பட்டார்.  பர்மா பஜார் கடை வாசலைப் பெறுக்குவார்.  
"அவர் பிச்சைக்காரி இல்லை.  சாமியார் என்றார் பிரமிள்."
உண்மையில் அந்தப் பெண்மணி கை நீட்டி யாரிடமும் பணம் வாங்கவில்லை.  யாராவது பெறுக்குவதைப் பார்த்து காசு கொடுத்தால் வாங்கிக்கொள்…

சத்தமில்லாத ஒரு குறும்படம்.

அழகியசிங்கர்
ஒரு நாள் திடீரென்று ஆந்திரா வங்கியில் பணி புரிந்துகொண்டிருந்த ஆர் கே ராமனாதன் என்கிற நண்பருக்கு போன் செய்தேன்.  ஒரு குறும்படத்தில் நடிக்க வேண்டும் என்றேன்.

அவர் ஒரு நாடக நடிகர்.  திறமையாக நடிப்பாற்றலை வெளிப்படுத்துபவர்.  என்னுடைய வசனமே பேசாத குறும்படத்தில் திறமையாக நடித்துக் கொடுத்துள்ளார்.

நான் பழைய  சோனி காமெராவில் இந்தப் படத்தைத் தயாரித்தேன்.  20 நிமிடங்கள்வரை இந்தப் படம் வரும்.

மேலும் இந்தப் படத்திற்கு மெருகேற்ற வேண்டுமென்று தோன்றியபோது நண்பர் கிருபானந்தனிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டேன்.  அவர் அதற்கு இசையைச் சேர்த்து, யார் எடுத்தது, யார் நடித்தது என்றெல்லாம் சேர்த்து விட்டார்.  இதே அந்தப் படம். பார்த்துவிட்டு உங்கள் கருத்தைக் கூறுங்கள்.

நடித்துக் கொடுத்த ஆர் கேவிற்கு நன்றி.  கிருபானந்தனுக்கு நன்றி.


விருட்சம் இலக்கியச் சந்திப்பு -  48

        தலைப்பு  :   வண்ணதாசனும் நானும்

சிறப்புரை :   தேவகோட்டை வா மூர்த்தி

இடம் :      ஸ்ரீராம் குரூப் அலுவலகம்
    மூகாம்பிகை வளாகம்
    சி பி ராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே
    ஆறாவது தளம்
     மயிலாப்பூர்
    சென்னை 600 004

தேதி20.07.2019 (சனிக்கிழமை)

நேரம் மாலை 6.00 மணிக்கு

பேசுவோர் குறிப்பு  : நாவலாசிரியர், சிறுகதை ஆசிரியர், கட்டுரையாளர்.

அன்புடன்
அழகியசிங்கர்
9444113205

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 118

அழகியசிங்கர் 


 புராதனக்குடுவை


பா ராஜா
மிக அழகான வேலைப்பாட்டுடன் கூடிய
புராதனக்குடுவையன்று எனக்குக்கிடைத்திருக்கிறது
அதனைக்கொண்டு
பூச்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றலாம்
நிதி திரட்ட உண்டியல் குலுக்கலாம்
கள்ளருந்தப் பயன்படுத்தலாம்
கழிப்பறையின் குவளையாக்கலாம்
திரியன்றுப் போட்டு விளக்காக்கலாம்
காகங்களுக்கு நீர் வைக்கலாம்
அரிசியளக்கும் படியாக்கலாம்
படுக்கையில் கிடக்கும் தகப்பனின் மூத்திர டப்பாவாக்கலாம்
பூஜையறையில் வைத்துப் பூஜிக்கலாம்
உள்ளே பூதமிருப்பதாய் கோகுலிடம் பயம் காட்டலாம்
மண்ணை நிரப்பி டேபிள் ரோஜா செடி வளர்க்கலாம்
அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கலாம்
இனப்பெருக்கஞ்செய்யத் தோதாய் பறவைக்கூட்டின் மூலையில்
பொருத்தலாம்
நாட்டாமைகள் எச்சியுமிழ் சினிமாவில் நடிக்க வைக்கலாம்
அல்லது
இறுதிச்சடங்கில் அஸ்தியெடுப்பதற்கென பத்திரப்படுத்தலாம்
எவ்விதமதனைப் பயன் படுத்துவதென்ற பெருங்குழப்பத்தால்
சிரம் வெடித்துச்சிதற
கழுத்தின் மேல் அமர்ந்திருக்கிறது அப்புராதனக்குடுவை
சற்றே சிதிலமடைந்து.


நன்றி : மாயப்பட்சி - பா ராஜா  - மணல்வீடு, ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல். மேட்டூர் வட்டம், சேலம் மாவட்டம் - தொலைபேசி : 0989460571 பக்க…

துளி : 58 - கரிச்சான்குஞ்சுவின் நூற்றாண்டு விழா

அழகியசிங்கர்


1990ஆம் ஆண்டு விருட்சம் இதழிற்கு கரிச்சான்குஞ்சு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.  இலக்கிய நண்பர் சுவாமிநாதன் என்னை கரிச்சான்குஞ்சுவின் வீட்டிற்கு அழைத்துப் போனார்.  நான் அவரிடம் விருட்சம் இதழ் கொடுத்துவிட்டு அவருடன் பேசிக்கொண்டிருந்து விட்டு வந்தேன்.   தற்செயலாக 8வது இதழ் விருட்சம் பார்க்கும்போது கரிச்சான் குஞ்சு விருட்சத்திற்கு எழுதிய கண்ணில் பட்டது.  1990ஆம் ஆண்டு ஏப்ரல் - ஜøன் இதழில் எழுதி உள்ளார்.  அதை அப்படியே இங்கு தர விரும்புகிறேன். "இளைய தலைமுறையின் விழிப்புக்கும் திறமைக்கும் தங்களை வெளியீட்டுக் கொள்ளம் ஆர்வத்திற்கும் எடுத்துக்காட்டாகும் üவிருட்சம்ý இதழ்களை என்னைத் தேடி வந்து கொடுத்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியுடன் வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன்.  ஆழமாகச் சிந்திக்கவும், தெளிவாகக் கருத்துக்களை வெளியிடவும் பயிலுங்கள்.  பத்திரிகை உலகம் எங்கோ திசை மாறிச் செல்லும் பொல்லாத காலம் இது.  இந்த ஈர்ப்புகளிலிருந்து விடுபட்டுத் தனித்து நிற்பதே ஒரு பெருமை தரும் விஷயம்." கரிச்சான்குஞ்சுவின் பசித்த மானிடன்  பிரசித்தமான நாவல்.  அப்போது வாங்கியது.  அதை இப்போது இரண்டாவது மு…

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 117

அழகியசிங்கர்  


117) அநியாயம்

பால்நிலவன்
அநியாயம்
இந்தக் கோடைக்காலம்
பால் காம்புகள் கூடி
வெடித்துவிட்டன.
பாவம் எங்கள் வீட்டு பசுமாடு.
விளக்கெண்ணெய்
தடவியாவது
இரண்டு லிட்டர்
கறந்து
சில்லென்று மோர் தயாரிக்க
கடைக்கு கொடுத்தனுப்பிவிடவேண்டும்
அநியாயம்
இந்தக் கோடைக்காலம்நன்றி : ரயில் வரும் வரை - பால்நிலவன் - லாவண்யா வெளியீடு,
15 தானப்பா தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 5 - முதல் பதிப்பு : நவம்பர் 2003 - மொத்தப் பக்கம் : 112 - விலை : ரூ.30.

துளி : 57 - கவிதைக்குக் கொண்டாட்டம்

அழகியசிங்கர்


இந்த முறை இரண்டு கவிதை நூல்களுக்குப் பரிசு கிடைத்துள்ளது.  'ஸ்பாரோ' இலக்கிய விருது 2019,  யுவன் சந்திரசேகருக்குக் கிடைத்துள்ளது. கவிதை வகைமைக்காக.  சாகித்திய யுவபுரஸ்கார் விருது சபரிநாதனுக்கு வால் என்ற கவிதைத் தொகுதிக்குக்  கிடைத்திருக்கிறது.  வாழ்த்துகள்.
இதைத் தவிர ஆத்மாநாம் பெயரில் ஆண்டுக்கு ஒரு கவிதைத்தொகுதிக்குப் பரிசு வழங்குகிறார் சீனிவாசன். தனியாக ஆத்மாநாம் அறக்கட்டளை ஒன்றை உருவாக்கி உள்ளார்.  கவிதை நூலிற்குப் பரிசு கிடைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.  
இந்த வீருதெல்லாம் ஒவ்வொரு ஆண்டும் கவிதை நூலிற்கும் மட்டும் கிடைத்தால் நன்றாக இருக்கும்.   ஏனென்றால் அந்த அளவிற்கு கவிதை நூல்கள் கொட்டிக் கிடக்கின்றன.   ஓராண்டில் அதிகமாக பிரசுரமாவதில் கவிதை நூல்கள் முதலிடம் பெறும் என்று நினைக்கிறேன்.
ஆனால் ஒரு கவிதை நூலை விற்பது என்பது பூஜ்யம்தான். தெரிந்தவர்களிடம், உறவினர்களிடம்தான் கவிதை நூல்களை விற்க வேண்டும்.  அல்லது தள்ள வேண்டும்.  அதனால் சில பதிப்பாளர்கள் கவிதை நூல்களை வெளியிடுவதில்லை.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 116

அழகியசிங்கர்  


சிறுத்தையாகவும் மான் குட்டியாகவும்மாறுபவன்ஜெம்சித் ஸமான்
இன்று ஒரு
ஓவியனை சந்தித்தேன்
முதலில்
காட்டை வரைந்தான்
பின் ஒவ்வொரு மிருகங்களாக
வரைய ஆரம்பித்தான்
மான் ஒன்றின் பக்கத்தில்
சிறுத்தையை வரைந்த போது
இரண்டும்
உயிர்பெற்றுக் கொண்டது
உயிருக்குப் பயந்த மான் குட்டி
காடு மேடெல்லாம் ஓடியது
கோரப்பசியோடிருந்த
சிறுத்தை வேட்டையாடத் துரத்திச் சென்றது.
ஓவியன் அதனை
விளையாட்டைப்போல ரசித்து ரசித்து
சிரித்துக் கொண்டிருந்தான்
தீராப் பசியோடு
மான் குட்டியை நெருங்கிய
சிறுத்தையை நொடிப் பொழுதில்
மான் குட்டியாக மாற்றிவிட்டான்
சிறிது சிறிது நேரத்திற்குள்
அவன் சிறுத்தையாகவும்
மான் குட்டியாகவும்
மாறிக்கொண்டிருந்தான்..


நன்றி : நகுலனின் வளர்ப்புப் பூனை - ஜெம்சித் ஸமான் - மணல்வீடு, ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல். மேட்டூர் வட்டம், சேலம் மாவட்டம் - பக்கங்கள் : 88 - விலை : ரூ.70

எழுதத் தெரிந்தவர்களெல்லோரும் பேசத் தெரியாதவர்கள்

அழகியசிங்கர்க.நா.சு ஒரு பொருளைக் கொடுத்துப் பேசச் சொன்னால் எந்த முன் தயாரிப்புமில்லாமல் பேசத் தொடங்கி விடுவார்.  இலக்கியத்தின் கட்டடக் கலை என்பதைப் பற்றி ஒரு முறை உரை ஆற்றினார். எந்தவிதத் தயாரிப்புமின்றி, ஞாபகத்திலிருந்து.   ஆனால் பெரும்பாலான எழுதத் தெரிந்தவர்களெல்லோரும் பேசத் தெரியாதவர்கள்.  எழுத்தாளர் சுஜாதாவிற்கு மேடைப் பேச்சு சரியாக வராது.  ஆனால் அவர் கட்டுரை மாதிரி தயாரித்துப் படித்து விடுவார்.   அந்தக் காலத்தில் நகுலன் மேடையில் அமர்ந்து இருக்கும்போது கூனிக் குறுகி அமர்ந்திருப்பார்.  ஏன்டா மேடையில் உட்கார்ந்திருக்கிறோம் என்று அவருக்குத் தோன்றும்.  நகுலன் மணிக்கணக்கில் பேசுவார்.  ஆனால் அவர் எதிரில் உள்ள ஒருவருடன்தான் பேசுவார்.  பக்கத்தில் இருப்பவர்களுக்குக் கூட அவர் என்ன பேசுகிறார் என்பது புரியாது. ஆனால் பல விஷயங்களைக் குறித்து அலுக்காமல் பேசுவார். என்னுடைய இலக்கியச் சந்திப்புக் கூட்டங்களில் பல எழுத்தாளர்கள் பேசியிருக்கிறார்கள்.  ஒருமுறை சாகித்திய அக்காதெமி விருதுபெற்ற அசோகமித்திரனுக்கு ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்ரீனிவாசா காந்தி நிலையத்தில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்தேன்.  அவரைப் பற்றி ஒ…

'கஸ்தூர்பாபா ஒரு நினைவுத் தொகுப்பு'

அழகியசிங்கர்19.06.2019 அன்று தக்கர்பாபா வளாகத்தில் உள்ள காந்தி கல்வி நிலையத்தில் சுசிலா நய்யரின்  'கஸ்தூர்பாபா ஒரு நினைவுத் தொகுப்பு'
(மொழி பெயர்த்தவர் பாவண்ணன்) என்ற மொழிபெயர்ப்பு நூலின்
அறிமுக உரை நிகழ்த்தியவர் சந்தியா நடராஜன்


க நா சுதான் கூட்டம் நடத்தச் சொன்னார்

அழகியசிங்கர்


கநாசு வை ஒரு இலக்கியக் கூட்டத்தில் பார்த்தேன்.  கூட்டம் ஒய்எம்சியில் நடந்தது.  அரங்கநாதன் புத்தக விமர்சனக் கூட்டம்.  பாரிமுனையில் அந்தக் கட்டிடம் இருந்தது.  அங்கேதான் க நா சுவைப் பார்த்தேன்.  üüநீங்கள் ஏன் கூட்டம் நடத்தக் கூடாது,ýý என்று கேட்டார். எனக்கு ஆச்சரியம்.  அப்போது நான் கூட்டம் நடத்துவது பற்றி யோசிக்கவே இல்லை.  அவர் சொன்னபிறகு பல மாதங்கள் ஓடி விட்டன.  நான் கூட்டம் போடுவதில் நம்பிக்கை இல்லாதவனாக இருந்தேன். பின் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.  என் நண்பர் சீனிவாசன் அவர் தயாரித்த காயின் பவுடருக்கான  விளம்பரம் இந்து நாளிதழில் வெளி வர விரும்பினார்.  சின்ன விளம்பரம்.  ஒரு நிகழ்ச்சியைப் பற்றி விளம்பரம் கொடுத்துவிட்டு பின் அவருடைய தயாரிப்பைப் பற்றி விளம்பரம் தர வேண்டும்.  அந்தச் செலவை அவர் ஏற்றுக்கொண்டு விருட்சம் இலக்கியச் சந்திப்பின் முதல் கூட்டம் ஏற்பாடு செய்தார்.   தி நகரில் ஒரு பள்ளியில்.  முதல் கூட்டம் காசியபனை வைத்து நடத்தினேன்.  அந்த சமயத்தில் க நா சு உயிருடன் இல்லை.   இப்படித்தான் நான் கூட்டத்தை நடத்த ஆரம்பித்தேன்.  1988லிருந்து.  சில கூட்டங்களுக்கு சீனிவாசன் உதவி செய்தா…

என்னை ஏமாற்றி விட்டார்கள்

அழகியசிங்கர்
நான் இதுமாதிரி நடக்குமென்று நினைக்கவில்லை. நான் பழைய ஏடிஎம் கார்டுகளை என் கணக்கில் த்திருந்தேன். அவற்றை புது கார்டுகளாக மாற்ற வேண்டுமென்று நினைத்தேன்.
30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என் பழைய ஏடிஎம் கார்டிலிருந்து பணம் எடுக்க முடியவில்லை. புதுகார்டை வாங்க வேண்டுமென்று நினைத்தேன்.
சில தினங்களுக்கு முன்னால் ஒரு செய்தி வங்கியிலிருந்து வந்தது. உங்கள் வீடு தேடி ஏடிஎம் கார்டு வருமென்று. நான் அதை எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். வரவில்லை.
இன்று காலை 9.24 மணிக்கு போன் வந்தது. இந்தியன் வங்கி ஏடிஎம் அலுவலகத்திலிருந்து பேசுகிறேன். உங்கள் பழைய கார்டுகளை மாற்ற வேண்டுமில்லையா என்று. ஆமாம் என்று சொன்னேன். அப்படி பேசியது ஒரு பெண்.
உங்கள் பழைய கார்டு எண்ணை சொல்லுங்கள் என்றாள். நான் அவசரம் அவசரமாக இரண்டு பழைய கார்டு எண்களைச் சொன்னேன். எனக்கு புது ஏடிஎம் கார்டுகள் வாங்க வேண்டுமென்ற அவசரம். ஒரு கார்டு நவீன விருட்சம் கணக்கு. இன்னொரு கார்டு நானும் சகோதரனும் சேர்ந்த வைத்துள்ள கணக்குக் கார்டு.
உங்களுக்கு ஒரு ஓடிபி வரும். அதைச் சொல்லுங்கள் என்றாள்.
நீங்கள் யார் இந்தியன் வங்கிதானே என…