Skip to main content

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 116

அழகியசிங்கர்  


சிறுத்தையாகவும் மான் குட்டியாகவும்மாறுபவன்



ஜெம்சித் ஸமான்




இன்று ஒரு
ஓவியனை சந்தித்தேன்
முதலில்
காட்டை வரைந்தான்
பின் ஒவ்வொரு மிருகங்களாக
வரைய ஆரம்பித்தான்
மான் ஒன்றின் பக்கத்தில்
சிறுத்தையை வரைந்த போது
இரண்டும்
உயிர்பெற்றுக் கொண்டது
உயிருக்குப் பயந்த மான் குட்டி
காடு மேடெல்லாம் ஓடியது
கோரப்பசியோடிருந்த
சிறுத்தை வேட்டையாடத் துரத்திச் சென்றது.
ஓவியன் அதனை
விளையாட்டைப்போல ரசித்து ரசித்து
சிரித்துக் கொண்டிருந்தான்
தீராப் பசியோடு
மான் குட்டியை நெருங்கிய
சிறுத்தையை நொடிப் பொழுதில்
மான் குட்டியாக மாற்றிவிட்டான்
சிறிது சிறிது நேரத்திற்குள்
அவன் சிறுத்தையாகவும்
மான் குட்டியாகவும்
மாறிக்கொண்டிருந்தான்..


நன்றி : நகுலனின் வளர்ப்புப் பூனை - ஜெம்சித் ஸமான் - மணல்வீடு, ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல். மேட்டூர் வட்டம், சேலம் மாவட்டம் - பக்கங்கள் : 88 - விலை : ரூ.70

Comments