அழகியசிங்கர்
117) அநியாயம்
பால்நிலவன்
அநியாயம்
இந்தக் கோடைக்காலம்
பால் காம்புகள் கூடி
வெடித்துவிட்டன.
பாவம் எங்கள் வீட்டு பசுமாடு.
விளக்கெண்ணெய்
தடவியாவது
இரண்டு லிட்டர்
கறந்து
சில்லென்று மோர் தயாரிக்க
கடைக்கு கொடுத்தனுப்பிவிடவேண்டும்
அநியாயம்
இந்தக் கோடைக்காலம்
நன்றி : ரயில் வரும் வரை - பால்நிலவன் - லாவண்யா வெளியீடு,
15 தானப்பா தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 5 - முதல் பதிப்பு : நவம்பர் 2003 - மொத்தப் பக்கம் : 112 - விலை : ரூ.30.
Comments