அழகியசிங்கர்
ஒவ்வொரு புத்தகக் காட்சியின்போது புத்தகம் விற்பதோடல்லாமல் புத்தகம் வாங்குவதும் என் வழக்கம். சிலர் கிண்டல் அடிப்பார்கள். üநீங்கள் புத்தகம் விற்பதை விட, வாங்குவதுதான் அதிகமாக இருக்கிறது,ý என்று. இந்த முறை அடித்த ஜோக். எல்லோரையும் போட்டோ எடுப்பதற்காகவே புத்தகக் கடையைத் திறந்து வைத்திருப்பதாக.
யுனிவர்சல் என்ற பெயரில் ஒரு கடை. அங்கு ஆங்கிலப் புத்தகங்களை கூறு கட்டி விற்றுக் கொண்டிருந்தார்கள். ரூ.100 க்கு 4 ஆங்கிலப் புத்தகங்கள் எடுத்துக்கொள்ளலாம். எனக்கு ஆச்சரியம்.
கடைக்குள் புகுந்து தேடினேன். எனக்குப் பிடித்த 4 புத்தகங்களை அவசரம அவசரமாக எடுத்தேன். அதில் ஒன்று KISS என்கிற ED MCBAIN புத்தகம். எனக்குப் பிடித்த எழுத்தாளர் எட் மெக்பெயின். திரில்லர் கதைகளை எழுதும் வல்லவர். இவருடைய ஒரு கதையை உலக அளவில் பிரபலமான ஜப்பான் டைரக்டர் அகிரா குரசோவா ஹை அன்ட் லோ என்ற பெயரில் படம் எடுத்துள்ளார். அந்தப் படம் பார்த்ததிலிருந்து எட் மெக்பெயின் புத்தகங்களைப் பார்த்தால் உடனே வாங்கிவிடுவேன்.
இந்தப் புத்தகக் காட்சியில் கிடைத்தது கிஸ் என்கிற திறமையாக எழுதப்பட்ட புத்தகம். இதோ நான் வாசிக்க தொடங்கி விட்டேன். மற்ற மூன்று புத்தகங்கள் : CALL ME ANNA .The Autobiography of PATTY DUKE. URSULA K LEGUIN - The Farthest Shore, V C ANDREWS - My Sweet Audirna
Comments