31.12.16

போய் வா 2016ஆம் ஆண்டே....

போய் வா 2016ஆம் ஆண்டே....


அôகியசிங்கர்2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தால் சென்னையில் பல இடங்களில் பாதிப்பு ஏற்பட்டது.  அதன் பாதிப்பு ஜனவரி மாதத்திலும் இருந்தது.  ஜனவரி 2016ஆம் ஆண்டு சரியாக இல்லை.  எப்போதும் நடக்கும் புத்தகக் கண்காட்சி சென்னையில் ஜனவரியில் நடக்கவில்லை.  பாதிக்கப்பட்ட பதிப்பாளர்களில் விருட்சமும் ஒன்று.  புதிதாக அச்சடித்த புத்தகங்கள் வெள்ளத்தால் கூழாகின.

சேர்த்து வைத்திருந்த புத்தகங்களும் போய்விட்டன.  ஆனால் அந்த மாதம் சர்வதேச சினிமாப் பாடங்கள் ஜனவரி 6ஆம் தேதியிலிருந்து 13ஆம் தேதி வரை நடைபெற்றது.  கீழே புத்தகங்கள் வைத்திருந்த அறையைச் சுத்தம் செய்ய எனக்கு ஆறுமாதம் மேல் ஆகிவிட்டது.  என்னைவிட சில எழுத்தாளர்கள் வெள்ளத்தின் பாதிப்பால் கண்கலங்கினார்கள்.  அவர்களில் எனக்குத் தெரிந்து முருகன் என்பவர் ஒருவர்.  இன்னொரு பதிப்பாளர் பரிசல் செந்தில். . முருகன் அபூர்வமாக சேர்த்து வைத்திருந்த புத்தகங்களை இழந்து விட்டார்.  செந்தில் அவர் விற்க வைத்திருந்த புத்தகங்களை எல்லாம் இழந்து விட்டார்.  அவரை ஆரம்ப காலத்திலிருந்து எனக்குத் தெரியும்.  அவர் கடுமையான உழைப்பாளி.  இலக்கியக் கூட்டங்கள் நடக்கும் இடங்களில் அவர் புத்தகங்களைத் தூக்கிக்கொண்டு செல்வார்.  முன்பெல்லாம் அவர் சைக்கிளில் சுற்றுவதைப் பார்த்திருக்கிறேன்.

இந்திய அரசாங்கம் ஜெயமோகன் என்ற எழுத்தாளருக்கு பத்மஸ்ரீ பட்டம் தர வேண்டுமென்று தீர்மானித்திருந்தது.  அதைத் தெரிவிப்பதற்குள் ஜெயமோகன் அதை வேண்டாமென்று மறுத்து விட்டார்.  பரிசு எதாவது கிடைக்குமா பட்டம் எதாவது கிடைக்குமா என்று ஏங்கிக்கொண்டிருக்கும் பலர் மத்தியில் ஜெயமோகன் துணிச்சலாக பட்டத்தை மறுத்துவிட்டார். 

புத்தகக் கண்காட்சியை பதிப்பாளர் சங்கம் நடத்தாமல் இல்லை. எப்போது நடக்கும்  இடத்தில் இல்லாமல் ஐலேண்ட் கிரவுண்டில் நடந்தது. மே மாதம் நடந்தது.  தாங்க முடியாத வெயில்.  விற்பனையிôல் பாதிதான் கிடைத்தது.  எந்தப் புத்தக காட்சியிலும் விருட்சம் புத்தகம் ஒரு லட்சம் விற்றாலே வெரிய வெற்றி.  

இந்தப் புத்தகக் காட்சியின்போது, நான் சில புத்தகங்களைக் கொண்டு வந்தேன்.  அசோகமித்திரனின் கதைகளும் கவிதைகளும் கொண்ட புத்தகம்.  பத்திரிகைகளில் வெளிவந்த 12 சிறந்த கதைத் தொகுதி, வைதீஸ்வரனின் 80 வயது முடிந்த தொடர்பாக அதற்கு மட்டும் ஒரு ஆகாயம் என்ற புத்தகம்.  பெருந்தேவியின் அழுக்கு சாக்ஸ் என்ற புத்தகம்.  ஆனால் நான் தவற விட்டது.  ஞானக்கூத்தனின் கவிதைத் தொகுதி.  ஜனவரி மாதம் அவரைச் சந்தித்தபோது ஒரு கவிதைத் தொகுதி கொண்டு வரும்படி கேட்டக்கொண்டார்.  நான் வாங்கி வைத்துக்கொண்டேன்.  ஆனால் என்னால் புத்தகக் கண்காட்சிக்குள் கொண்டு வர முடியவில்லை.  காராணம் ஞானக்கூத்தனின் கைபெழுத்துப் பிரதி.  அவ்வளவு எளிதாக அது புரியவில்லை.  டிடிபி செய்பவரும் உற்சாகத்துடன் அதை அடித்துக் கொடுக்கவில்லை.    எனக்கு டிடிபி செய்பவர் சைதாப்பேட்டையில் இருக்கிறார்.  அவரிடம் நான் ஒரு புத்தகத்தை அடிக்கக் கொடுத்தால், அதன்பின் என்னுடன் பேச்சுவார்த்தையே வைத்துக்கொள்ள மாட்டார்.  புத்தகத்தை முடித்துத் தருவாரா மாட்டாரா என்பது தெரியாது.

ஞானக்கூத்தனுக்கு புத்தகக் காட்சியின்போது கொண்டு வரவில்லை என்று என் மீது வருத்தம்.  இதை அவர் தன் முகநூலிலும் தெரிவித்து விட்டார்.  அவர் புத்தகம் கொண்டு வர முடியவில்லையே என்ற வருத்தம் எனக்கும் இருந்தது.  வரும் ஜனவரி 2017ல் கொண்டு வந்து விடுகிறேன் என்று அவனரைச் சமாதானம் செய்தேன்.  ஆனால் 2016 ஜøலை மாதம் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்து விட்டது.  ஞானக்கூத்தன் இறந்து விட்டார். 

 அந்தத் தருணத்தில் அவரைப் பார்த்தபோது அவர் இருமிக்கொண்டே இருந்தார்.  லட்சுமி மணிவண்னன் நடத்திய  கவியரங்கக் கூட்டத்தில் கூட அவர் பாதியில் எழுந்து போய்விட்டார்.  அதிகமாகவே அவர் இலக்கியக் கூட்டங்களில் கலந்துகொண்டு பேசிக்கொண்டிருந்தார் என்று தோன்றியது.

ஞானக்கூத்தன் மரணத்தைத் தொடர்ந்து நா முத்துக்குமார் என்ற கவிஞரும் திரைப்பாடல் ஆசிரியரும் மரணம் அடைந்து விட்டார். குமரகுருபரன் என்ற கவிஞர்.  அவருக்கு இயல் பரிசு அறிவித்திருந்தார்கள். அவரும் எதிர்பாராதவிதமாய் இறந்து விட்டார்.  இது அதிர்ச்சியான நிகழ்ச்சிதான்.  13ஆம்தேதி ஆகஸ்ட் மாதம் நானும் ராஜகோபாலனும் ஞானக்கூத்தனுக்கு இரங்கல் கூட்டம் நடத்தினோம்.

அதேபோல் இன்குலாப் என்ற கவிஞரும் மரணம் அடைந்து விட்டார்.  சுரேசன் என்ற கவிஞர் தற்கொலை செய்து கொண்டு விட்டார்.  கவி:ஞர்களின் மரணத்தை வெளிப்படுத்தும் ஆண்டாகத்தான் 2016ஐ நான் பார்க்கிறேன். இதோ இந்த ஆண்டு முடிவதற்குள் இன்னும் சில மரணங்களையும் பதிவு செய்ய வேண்டிஉள்ளது.  தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம், நான் மதிக்கும் துக்ளக் ஆசிரியர் சோவின் மரணம் என்றெல்லாம் அடுக்கிக்கொண்டு போகலாம்.  

தெலுங்கிலிருந்து 100க்கும் மேற்பட்ட புத்தகங்களை தமிழில் மொழிபெயர்த்துக் கொடுத்திருக்கும், கௌரி கிருபானந்தம் அவர்களுக்கு மொழிபெயர்ப்புக்காக சாகித்திய விருது விடைத்துள்ளது.  ஒரு பரிசு கிடைத்தால் இன்னொரு பரிசும் ஒருவருக்கு தொடர்ந்து வரும் என்பார்கள்.  அதேபோல் அம்பை மூலம் ஒரு பரிசும் அவருக்குக் கிடைத்துள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும் விஷ்ணுபுர விருது ஒவ்ùôவரு படைப்பாளிக்கு ஜெயமோகனும் அவருடைய நண்பர்கள் வட்டமும் சேர்ந்து ஏற்பாடு செய்கிறார்கள்.  சிறந்த படைப்பாளி ஒவ்வொருவராக அழைத்து பரிசு அளிக்கிறார்கள்.  பரிசை விட அந்தக் கூட்டத்தை ரொம்பவும் திறமையாக ஒரு திருவிழா நடத்துவதுபோல் நடத்துகிறார்கள்.  வண்ணதாசனுக்கு இந்தப் பரிசு கிடைத்துள்ளது.  ஒருவருக்கு ஒரு பரிசு கிடைத்தால் அவருக்கே இன்னொரு அமைப்பிலிருந்தும் பரிசு கிடைக்க வாய்ப்புள்ளது.  வண்ணதாசனுக்கு இந்த முறை அவருடைய சிறுகதைத் தொகுப்புக்கும் சாகித்திய அக்காதெமியிலிருந்து  பரிசு கிடைத்துள்ளது. 

நவீன விருட்சம் என்ற என் பத்திரிகை கடந்த 27 ஆண்டுகளுக்குப் பிறகு 100வது இதழை எட்டி உள்ளது.  அதற்கான ஒரு கூட்டத்தை மேற்கு மாம்பலத்தில் காமாட்சி மினி ஹாலில் ஏற்பாடு செய்து நடத்தினோம்.  நவீன விருட்சம் மீது அக்கறை கொண்ட நண்பார்கள் மூலம் இக் கூட்டம் சிறப்பாக நடந்தது.  100வது 260 பக்கங்கள் கொண்ட இதழ். இவ்வளவு தூரம் கொண்டு வருவேன் என்பதை நான் நம்பவில்லை. 100வது இதழில் ஞானக்கூத்தனை ஞாபகப்படுத்தும்படி அவர் புகைப்படத்தைக் கொண்டு வந்துள்ளேன்.

சென்னை டாக் சென்டரில் நாவல் விமர்சனக் கூட்டத்தில் 800 பக்கங்கள் கொண்ட சாருநிவேதிதாவின் ராச லீலா என்ற புத்தகத்தைக் குறித்து ஒரு கட்டுரை எழுதி வாசித்தேன்.  20 நிமிடங்கள் நான் தொடர்ந்து கட்டுரை வாசித்தேன்.  

ஒவ்வொரு ஆண்டும் தமிழில் புதுபுது பதிப்பாளர்கள் தோன்றிகொண்டிருப்பார்கள்.  இந்த ஆண்டு இரண்டு பெண் படைப்பாளிகள் பதிப்பாளர்களாக மாறி உள்ளார்கள்.  ஒருவர் லதா ராமகிருஷ்ணன்.  இவர் அனாமிகா என்ற பெயரில் 4 புத்தகங்களுக்கு மேல் கொண்டு வந்துள்ளார். இன்னொருவர் பெருந்தேவி.  இவர் பேயோன் என்பவரின் கவிதைத் தொகுதியை (வாழ்வின் இயக்கத்தில் மனிதனின் தனிமை) கொண்டு வந்துள்ளார்.  இவர்கள் இருவருக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சரி, ஓராண்டில் தமிழில் அதாவது 2016ஆம் ஆண்டில் எத்தனை கவிதை நூல்கள், சிறுகதைத் தொகுதிகள், கட்டுரைத் தொகுதிகள், நாவல்கள் வந்திருக்கின்றன.  யாருக்காவது தெரியுமா?  எத்தனைப் புத்தகங்களை வாங்கி வைத்திருக்கிறோம்.  எத்தனைப் புத்தகங்களை வாங்கி வைத்துக்கொண்டு படிக்காமல் இருக்கிறோம்? தெரியுமா?

இந்த ஆண்டை கவிஞர்களை அதிகமாக இழந்த ஆண்டாகத்தான் நான் கருதுகிறேன்.  
  

தென்றலில் என் பேட்டி வந்துள்ளதுஅழகியசிங்கர்

17 ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் பத்திரிகை தென்றல்.  அமெரிக்காவிலிருந்து வரும் பத்திரிகை.  டிசம்பர் மாதம் தென்றல் இதழில் என் பேட்டி ஒன்றை வெளியிட்டிருந்தார்கள்.  பேட்டி எடுத்த அரவிந்த் சுவாமிநாதன் அவர்களுக்கு என் நன்றி.

என்னை இதுவரைக்கும் எந்தப் பத்திரிகையும் பேட்டி எடுத்ததில்லை.  இத்தனை ஆண்டுகள் யாரும் என்னை ஏன் பேட்டி எடுக்கவில்லை என்பது எனக்குப் புரியவில்லை. இரண்டு காரணங்கள் இருக்கும்.  என்னை இலக்கியப் பிரமுகராக யாரும் நினைக்காமல் இருந்திருக்கலாம்.  இன்னொரு காரணம் ஒவ்வொருவராக பேட்டி எடுக்கும்போது என்னை மறந்து போயிருக்கலாம்.  என்னைப் பேட்டி எடுத்த தென்றலுக்கு துணிச்சல் வேண்டும். பல பக்கங்களில் என் பேட்டி.  ஒன்றிலிருந்து நூறு இதழ்கள் வரை என் விருட்சம்  என்ற பத்திரிகையில் எனக்கு நேர்த்த அனுபவத்தை பேட்டி எடுக்கப்பட்டிருக்கிறது.  

          பத்திரிகையில் யாருடையாவது பேட்டியைப் படிக்கும்போது, என்னையும் ஒருவர் பேட்டி எடுக்க வருவார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருப்பேன்.  யாரும் வரவில்லை என்பதோடல்லாமல், என் திசை நோக்கி யாரும் திரும்பக் கூட இல்லை.அவர்களுக்கு வழி தெரியவில்லையோ என்றெல்லாம் யோசிப்பேன்.  உண்மையில் அவர்களுக்கு வழி தெரியும்.  ஆனால் என் பக்கம் கண்ணில் படாமல் தப்பி ஓடியிருக்க வேண்டும். 

இன்னொரு பிரச்சினையும் இதில் கவனிக்க வேண்டும்.  என்னைப் பேட்டி எடுக்க வருபவர்கள் என்னை விட மேதாவிகளாக இருக்கிறார்கள்.  இவனுக்கு என்ன தெரியும் இவனை ஏன் பேட்டி எடுக்க வேண்டும் என்று அவர்களுக்குத் தோன்றி இருக்கலாம்.  சரி விடுங்கள் நான் சொல்ல வந்தது வேற விஷயம். என் பேட்டி வந்த தென்றல் இதழில்  என் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்கள்.  பொதுவாக இரண்டு மூன்று இடங்களில் புகைப்படம் எடுக்கிறார்கள் என்றால் வேண்டாம் என்று சொல்வேன்.  ஒன்று ரேஷன் கார்டு அட்டையில்.  என்னதான் முயற்சி செய்தாலும் அட்டையில் வரும் புகைப்படத்தை யாரும் நம்ப மாட்டார்கள்.  இன்னொரு புகைப்படம் வாக்காளர் அட்டையில் எடுக்கப்படுவது.  அதிலும் என்புகைப்படம் வந்திருந்தால் யாரும் நம்ப மாட்டார்கள்.  மூன்றாவது வாகன ஓட்டுநர் அட்டையில் புகைப்படம் எடுத்தால் மோசமாக இருக்கும்.  அதிலும் நான் இருக்க மாட்டேன். வேண்டா வெறுப்பாகத்தான் புகைப்படம் எடுத்துக்கொள்வேன்.  

தென்றல் பத்திரிகைக்காக புகைப்படம் எடுத்த அரவித்ந் சுவாமிநாதன் என் மூக்குக் கண்ணாடியை முகத்தில் இருந்து எடுத்துவிட்டு புகைப்படம் எடுத்துள்ளார். அப்போதுதான் வெளிச்சம் வரும் என்று.  அந்தப் புகைப்படத்தை அட்டையிலும் பிரசுரமும் செய்து விட்டார்.  தென்றல் இதழைப் பார்த்தவுடன் அதில் வந்தப் புகைப்படம் நான்தான் என்பதை வீட்டில்  நம்ப   மறுக்கிறார்கள். இல்லை. நான்தான் அது. நான்தான் அது என்று சொன்னாலும் நம்ப மறுக்கிறார்கள்.  குறிப்பாக என் மனைவிக்கு அந்தப் புகைப்படத்தைப் பார்த்தவுடன் கொஞ்சங்கூட நம்ப முடியவில்லை.  நானும் அந்தப் புகைப்படத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  நான்தானா அது..
   

29.12.16

திரும்பவும் கவிதைப் புத்தகங்களா?...

அழகியசிங்கர்
இந்த முறை புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு நான் கவிதைத் தொகுதியாகக் கொண்டு வருவது ஒரு தற்செயலான விஷயம்.  பெரும்பாலும் நான் கவிதைத் தொகுதியை மட்டும் கொண்டு வந்து கொண்டிருப்பேன்.  போன முறை அசோகமித்திரன் புத்தகம், சிறுகதைத் தொகுப்பு எல்லாம் கொண்டு வந்தேன்.  கூடவே வைதீஸ்வரன், பெருந்தேவி கவிதைத் தொகுதிகளையும் கொண்டு வந்தேன்.
நான் என்னதான் முயற்சி செய்தாலும் கவிதைத் தொகுதியை கொண்டு வந்தாலும், அதை விற்பது என்பது ஒரு சவால்தான்.  ஒரு தனி கலை. அந்த சவாலில் நான் பெரும்பாலும் வெற்றி அடைவதில்லை.  முன்பு நான் கொண்டு வந்த அளவு மீறிய எண்ணிக்கைக் கொண்ட கவிதைத் தொகுதிகள் என்னைப் இப்போது பார்க்கும்போதெல்லாம் நலன் விஜாரிக்காமலில்லை.  நானும் கவலைப் படுவதில்லை.  இப்போது எண்ணிக்கை அளவை நான் புரிந்து கொண்டு விட்டேன்.  அந்த எண்ணிக்கை அளவிற்குள்ளே கவிதைத் தொகுதிகளையும் கொண்டு வர ஆரம்பித்துள்ளேன்.  
இந்த ஆண்டு நவம்பர் டிசம்பர் மாதங்களில் முதலில் நான் பாரதியாரின் புதுக்கவிதைகளை அடித்துள்ளேன்.  இத் தொகுதி ஏற்கனவே ழ வெளியீடாக வந்துள்ளது.  அதில் ஒரு சிறப்பான முன்னுரையை ஞானக்கூத்தன் எழுதியிருக்கிறார்.  திரும்பவும் அந்தப் புத்தகத்தைக் கொண்டு வந்துள்ளேன்.  ஞானக்கூத்தன் இருந்திருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பார்.  இப் புத்தகத்தின் விலை ரூ.50.  இரண்டாவதாக நான் கொண்டு வந்த புத்தகம் üசிந்தை முட்கள்ý என்ற நீல.பத்மநாபன் புத்தகம். 78பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தின் விலை ரூ.60 தான்.  மூன்றாவதாக நான் கொண்டு வந்த புத்தகம். üவினோதமான பறவைý என்ற என் கவிதைத் தொகுதி.  நவம்பர் 2013ல் கொண்டு வந்த இந்தப் புத்தகம்.  அதிகமாக முன்பு அடித்து வைத்த குற்றத்திற்காக கட்டு கட்டாக அடுக்கி வைத்திருந்தேன்.  என் கவிதைத் தொகுதியாக இருந்தாலும் எல்லோரையும் பேசச் சொல்லி கூட்டம் நடத்துவதில் சாமர்த்தியம் இல்லாதவன் நான்.  என் புத்தகத்தை சிலாகித்து யாராவது பேசினால் அது விற்பனை ஆவதற்கு வழி கிடைக்கும்.  ஆனால் அந்தத் திறமை என்னிடம் இல்லை.  மேலும் அந்தப் புத்தகக் கட்டுகளை வெள்ளம் ஒரு பதம் பார்த்துவிட்டது.  இப்போது வெள்ளம் பற்றிய கவிதைகளையும் சேர்த்து திரும்பவும் குறைவான பிரதிகளை அடித்து வைத்துள்ளேன்.  அதன் விலை ரூ.80 தான்.  
நான்காவதாக நான் கொண்டு வந்த புத்தகம் üஇம்பர் உலகம்ý என்ற ஞானக்கூத்தன் கவிதைத் தொகுதி.  ஞானக்கூத்தன் கவிதைகளில் காணப்படும் வசீகரமான தன்மை இப் புத்தகத்தில் அதிகமாகவே நான் காண்கிறேன்.  இப் புத்தகத்தை அவர் உயிரோடு இருந்தபோதே என்னால் கொண்டு வர முடியவில்லை.  கையெழுத்துப் பிரதியில் அந்தப் புத்தகம் இருந்தபோது அதை டிடிபி செய்ய கொடுத்திருந்தேன்.  டிடிபி செய்பவருக்கு அவருடைய கையெழுத்துப் புரியவில்லை.  மேலும் நான் போன் பண்ணும்போது அவர் போனை எடுக்காமல் டபாய்த்துவிட்டார். ஞானக்கூத்தனுக்கு என் மேல் வருத்தம். அப்போதே என்னால் ஏன் கொண்டுவர முடியவில்லை என்பது புரியவில்லை.    தொழில் ரீதியாகக் புத்தகம் அச்சிடும் பழக்கம் எனக்கு இன்னும் ஏற்படவில்லை.   இப்படியே நான் 40 புத்தகங்கள் கொண்டு வந்துள்ளேன்.   ஆனால் தற்போதுதான் இம்பர் உலகம் புத்தகத்தை அச்சடித்துக் கொண்டு வந்துள்ளேன்.  
ஐந்தாவதாக நான் கொண்டு வந்த புத்தகம் சில கவிதைகள், சில கதைகள், சில கட்டுரைகள் என்ற என் புத்தகம்.  இதுவரை நான் எழுதிய கவிதைகளையும், கதைகளையும், கட்டுரைகளையும் சேர்த்துக் கொண்டு வந்துள்ளேன்.  இதில் உள்ள கவிதைகளும் கதைகளும் கட்டுரைகளும் நான் புதிதாக எழுதியவை. கவிதை பிடிக்காதவர்களுக்கு கதைகள் படிக்கலாம் கதைகள் பிடிக்காதவர்களுக்கு கட்டுரைகள் படிக்கலாம்.  அப்படியொரு அமைப்பு இது.
ஆறாவதாக பெருந்தேவியின் புத்தகம்.  கவிதைப் புத்தகத்தின் தலைப்பு 'வாயாடிக் கவிதைகள்' என்று பெயர்.  அழுக்கு சாக்ஸ் என்ற புத்தகமும் இந்த ஆண்டு நடுவில் வெளிவந்தது.  பெருந்தேவியின் கவிதைகள் எளிமையான வரிகள் கொண்ட கவிதைகள். .மேலே குறிப்பிட்ட எல்லாக் கவிதைத் தொகுதிகளைப் பற்றியும் நான் திரும்பவும் ஒவ்வொரு புத்தகமாக அறிமுகப்படுத்தி பின்னால் எழுதுகிறேன்.

24.12.16

இந்தப் புத்தகம் விலை ரூ.20 தான்


அழகியசிங்கர்
இந்த முறை என் நண்பர் சென்னைக்கு என் வீட்டு விசேஷத்திற்கு வந்திருந்தார்.   அவரிடம் ஒரு மாற்றத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டேன்.  ஆம்.  அவர் ஒரு புத்தகப் ப்ரியர்.  புத்தகம் எப்போதும் படித்துக்கொண்டிருப்பார்.  அதிகமாகப் புத்தகங்கள் இருப்பதால் படிக்க முடியவில்லை என்றார்.  பொதுவாக புத்தகங்களை வாங்கிச் சேர்ப்பவர், இந்த முறை எந்தப் புத்தகமும் வாங்க அவர் விரும்பவில்லை.  அதற்கு அவர் சொன்ன காரணம்: என்னிடம் அதிகமாகப் புத்தகங்கள் படிக்க இருக்கிறது.  அதனால் வாங்க விரும்பவில்லை என்றார்.  
நானும் பல புத்தகங்களை புத்தகக் கண்காட்சியின்போது வாங்கிச் சேர்த்திருக்கிறேன்.  புத்தகம் படிக்கிறேனோ இல்லையோ ஆனால் புத்தகம் வாங்கிக் கொண்டிருப்பேன்.  சேர்த்துக்கொண்டிருப்பேன்.  அவரிடம் சொன்னேன் : புத்தகம் படிப்பது வேறு, புத்தகம் வாங்கி வைத்துக்கொள்வது வேறு, என்று.  
தேனுகா அவர்கள் டாக் சென்டரில் கடைசியாக ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.  அதுதான் அவருடைய கடைசிக் கூட்டம் என்று நினைக்கிறேன்.  அவருடைய புத்தகம் மதி நிலையம் என்ற பதிப்பகம் விற்றுக்கொண்டிருந்தது.  நான் தேனுகாவின் புத்தகத்தை வாங்கிக் கொண்டு தேனுகாவிடம் கையெழுத்தும் வாங்கினேன்.  ஆனால் அந்தக் கூட்டம்தான் அவர் பேசிய கடைசிக் கூட்டம் என்று தெரியாது.
கூட்டம் முடிந்து வெளியே வந்தவுடன், ஒரு மூத்த நண்பர் என்னுடன் பேசிக்கொண்டு வந்தார்.  அவர் நான் வைத்திருக்கும் தேனுகாவின் புத்தகத்தைக் கேட்டார்.  ஏனோ கொடுத்துவிட்டேன். அவர் படித்துவிட்டு புத்தகத்தைக் கொடுப்பார் என்று நினைத்தேன்.  ஆனால் அவர் கொடுக்கவில்லை.  ஒரு முறை ஒரு கார்டு எழுதினேன்.  புத்தகம் திருப்பித் தரும்படி.  ஆனால் அவர் பதில் எழுதவில்லை.  ஆனால் புத்தகத்தைத் திருப்பித் தரவில்லை.  
அதன்பிறகு அவரைப் பார்க்கும்போது எனக்கு நான் கொடுத்தப் புத்தகம் ஞாபகத்தில் வந்து கொண்டிருந்தது.  அவரைப் பார்ப்பதற்கு விரும்பவில்லை.  அவர் என் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டாலும் அவர் முன் நான் நிற்க விரும்பவில்லை.  
ஒரு முறை ஒரு கூட்டத்தில் என் பக்கத்தில் அவரும் இருந்தார். பின் அவர் என்னிடம் பேச முயற்சி செய்தார்.  நான் மழுப்பலாகப் பேசினேன்.  
"தேனுகா புத்தகம் வேண்டுமா?"  என்று திடீரென்று கேட்டார்.
"ஆமாம்.  தேனுகா கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்கிறார்.  நான் அப் புத்தகத்தைப் பாதுகாத்து வைத்துக்கொள்ள விரும்புகிறேன்,"  என்றேன்.
    "நீங்கதான் அந்தப் புத்தகத்தைப் படிக்கப் போவதில்லையே எதற்கு அந்தப் புத்தகம்,"  என்று கேட்டார்.
"நான் படிக்கிறேனோ இல்லையோ அந்தப் புத்தகத்தை நான் வைத்துக்கொள்ள விரும்புகிறேன்," என்றேன். அவர் அந்தப் புத்தகத்தைத் திருப்பிக் கொடுக்கிறேன் என்று சொல்லவே இல்லை. அதனால் அவர் எங்கிருந்து என்னைக் கூப்பிட்டாலும் அவர் முகத்தைக் கூடப் பார்க்காமல் ஓட்டமாய் ஓட ஆரம்பித்தேன். 
அப் புத்தகத்தை நான் விலை கொடுத்து வாங்கி உள்ளேன்.  என்னிடம் அபகரித்த அந்த நண்பர் அந்தப் புத்தகத்தைப் படிக்கப் போவதில்லை, என்னிடம் திருப்பியும் தரப் போவதில்லை.  அவர் ஒரு புத்தக நோயாளி என்று தோன்றியது. 
ஊரிலிருந்து வந்த நண்பர் புத்தகம் வாங்காமல் இருந்தது ஆச்சரியமாக இருந்தது.  நானும் அவரும் தி நகரில் உள்ள தக்கர்பாபா பள்ளிக்கூடம் சென்றோம்.  அங்கே போனதற்குக் காரணம் ஏ கே செட்டியார் காந்தியைப் பற்றி எடுத்த முதல் ஆவணப்படத்தை விலைக்கு வாங்குவதற்காக சென்றோம்.  அங்கு காந்தி நிலையம் என்ற இடத்தில் அந்த ஆவணப்படத்தின் பிரதி கிடைத்தது.  நண்பருக்கும் எனக்கும் சேர்த்து இரண்டு பிரதிகள் வாங்கினேன்.
அங்கு காந்தி நிலையத்தைப் பார்த்துக்கொண்டிருந்த லைப்ரரி பெண்ணிடம் சொன்னேன்.  üநான் காந்தியைப் பற்றி புத்தகங்களைச் சேர்த்துக் கொண்டு வருகிறேன்,ý படிப்பதில்லையா? என்று கேட்டார் அந்தப் பெண்மணி.
'எப்போது தோன்றினாலும் படிப்பேன்,' என்றேன்.
அங்கு சில புத்தகங்களை விற்றுக்கொண்டிருந்தார்கள்.  என் கண்ணில் பட்டப் புத்தகம் üரசிகமணி கடிதங்கள்ý என்ற புத்தகம்.  அதைத் தொகுத்தவர் எஸ் மகராஜன் என்பவர். 392 பக்கங்கள் கொண்ட புத்தகம் அது.    அத்தனைப் பக்கங்களும் கடிதங்கள்.  ஒவ்வொரு கடிதம் மூலம் டி கே சிதம்பரநாதன் பல விஷயங்களைச் சொல்லிக்கொண்டே போகிறார்.  அத்தனைக் கடிதங்களையும் அவர் இருவருக்கு மட்டும்தான் எழுதி உள்ளார்.  ஒருவர் எஸ் மகராஜன்.  இன்னொருவர் அவருடைய அருமைப் புதல்வி வேலம்மாள் அவர்களுக்கு.  
கடிதங்கள் எழுதி குவித்திருக்கிறார்.  156 கடிதங்கள் கொண்ட தொகுப்பு இது.  
இங்கே அவர் எழுதிய சின்ன கடிதம் ஒன்றை அளிள்க விரும்புகிறேன் :

டி கே சிதம்பரநாத முதலியார்                                     திருக்குற்றாளம்
                                                                                 தென்காசி
                                                                                12.06.51
அருமைப் புதல்வி

வேலம்மாளுக்கு,

வண்டி இங்கே இருந்து வருகிறது.  அதில் எல்லோருமாச் சீக்கிரமாக வந்துவிடலாம்.  எல்லாருக்கும் மத்தியானச் சாப்பாடு இங்கேதான்.  வரும்போது தங்கம்மாளையும் உனட் கூட்டிக்கொண்டு வாருங்கள்.  நேற்றும் இன்றும் வெயில்தான்.  மழை இல்லை.  ஆகையால்க் குழந்தைகள் அருதுவியை லேசில் விட்டுவிட மாட்டார்கள். அதனால்தான் சீக்கிரம் புறப்பட்டு வந்து விட வேண்டும் என்று சொல்கிறேன்.  

தம்பியையும் உடன் கூட்டிக்கொண்டு வந்துவிடுங்கள்.  சாப்பாடு ஆனதும் அவசியமானால் தென்காசி போய்விட்டுச் சாயங்காலம் குற்றாலம் திரும்பலாம்.
*** ***** ***** ***

நேற்று நல்ல சங்கம் கூடியது.  பாடல்கள் சிறக்கிறதெல்லாம் சந்தர்ப்பத்தையும் சங்கத்தையும் பொறுத்தது தானே.  தாங்கள் இல்லையே என்று எண்ணிக்கொண்டேன்.  ஆனாலும், தங்களைப் பற்றிப் பேச நேர்ந்தது.  பேசாமல் எப்படி இருக்க முடியும்.
                                                                                        அன்புடன்
                                                                                     டி கே சிதம்பரநாதன்

இந்தப் புத்தகத்தில் உள்ள கடிதங்களை எப்படி வேண்டுமானாலும் படிக்கலாம்.  முன்னும் பின்னும் படிக்கலாம். தொடர்கதை மாதிரி கடிதங்கள் தொடர்ந்து கொண்டு வருகிறது.
என்னுடன் வந்த நண்பருக்கு இந்தப் புத்தகம் வாங்கிக் கொள்ள விருப்பமில்லை.   நானோ பார்த்தவுடன் எடுத்துக்கொண்டேன். அதன் விலை என்ன தெரியுமா? வெறும் இருபது ரூபாய்தான்.
டி கே சி வட்டத்தொட்டி இந்தப் புத்தகத்தைப் பதிப்பித்துள்ளார்கள்.  இது வெளிவந்த ஆண்டு செப்டம்பர் 1979.  ரூபாய் இருபதுக்கு இந்தப் புத்தகமா?  நான் பத்துப் புத்தகங்களை வாங்கி எல்லோருக்கும் இலவசமாக இந்தப் புத்தகத்தைப் படிக்கக் கொடுக்கலாமா என்று நினைத்தேன்.  இருபது ரூபாய்தான் இந்தப் புத்தகம்.


21.12.16

சாகித்திய அக்காதெமி பரிசும் மூத்த எழுத்தாளர்களும்..


அழகியசிங்கர்


இந்த ஆண்டு சாகித்திய அக்காதெமியின் பரிசு வண்ணதாசனுக்குக் கிடைத்துள்ளது.  ஏற்கனவே அவருக்கு விஷ்ணுபுர விருதும் இந்த ஆண்டு கிடைத்துள்ளது.  இப்படி இரண்டு விருதுகள் ஒருவருக்குக் கிடைப்பது இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன்.  அவருக்கு என் வாழ்த்துகள்.
பொதுவாக எனக்குத் தெரிந்த பல மூத்த எழுத்தாளர்களுக்கு எந்தப் பரிசும் கிடைத்ததில்லை.  சாகித்திய அக்காதெமியின் பரிசு பெறுவது என்பது சாதாரணமாக நடக்கக் கூடியதல்ல.  இந்தப் பரிசு கிடைக்காமலே போன எழுத்தாளர்கள் பலர்.  நான் சில மூத்த படைப்பாளிகளைப் பார்த்திருக்கிறேன்.  அவர்கள் கண்களில் ஒருவித விரக்தி இருக்கும்.  ஒருவித ஏக்க உணர்ச்சி வெளிப்படும். இலக்கியத் தரமான படைப்புகள் எழுதி சாதித்தும் அவர்களுக்கு சாகித்திய அக்காதெமி விருது கிடைப்பதில்லை.  சாகித்திய அக்காதெமியின் குழப்பம், இலக்கியத் தரமான புத்தகத்திற்கு பரிசு கொடுப்பதா? எழுத்தாளர்களுக்கு பரிசு கொடுப்பதா? 
உண்மையில் படைப்புகளுக்குத்தான் இந்தப் பரிசை கொடுக்க வேண்டுமென்று நான் நினைக்கிறேன். புளியமரத்தின் கதை எழுதிய சுந்தர ராமசாமிக்கு எப்போதோ சாகித்திய அக்காதெமி பரிசு கொடுத்திருக்க வேண்டும். நடக்கவில்லை. அன்று வேறு கிழமை என்ற  கவிதை நூலிற்காக ஞானக்கூத்தனுக்கு பரிசு வழங்கியிருக்க வேண்டும்.  நடக்கவில்லை.  நினைவுப்பாதை எழுதிய நகுலனுக்கு, அசடு எழுதிய காசியபனுக்கு என்றெல்லாம் இலக்கியத் தரமான படைப்புகளுக்கு பரிசு போயிருக்க வேண்டும்.  போகவில்லை. இதன் மூலம் என்ன தெரிகிறது.  பரிசுக்கும் பரிசு பெற வேண்டிய நபருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று.  இந்த பரிசு கிடைக்கவில்லை என்று ஏங்காமல் இருக்க வேண்டுமென்றும் தோன்றுகிறது. எழுதுபவர்கள் பரிசுக்காக எந்த எதிர்ப்பார்ப்பும் வைத்திருக்கக் கூடாது என்றும் தோன்றுகிறது.  
நானும் சில ஆண்டுகளுக்கு முன் புத்தகங்களுக்குப் பரிசு கொடுக்கலாமென்று நினைத்தேன்.  கொஞ்சம் யோசித்த போது அந்தத் திட்டத்தை கை விட்டுவிட்டேன்.  ஒவ்வொரு பரிசுக்கும் தேர்ந்தெடுக்கும் பின்னால் பரிசு பெறக்கூடிய இன்னொரு புத்தகம் இருந்துகொண்டு இருக்கும். எதையும் திருப்தி செய்ய முடியாது என்று பட்டது.  இந்த வம்பில் ஏன் மாட்டிக்கொள்ள வேண்டுமென்றும் தோன்றியது.
நானும் தப்பித்தேன்.  புத்தகமும் தப்பியது.  -+

19.12.16

அந்தப் புத்தகம் யார் எழுதியது என்று சொல்லப் போவதில்லை

அழகியசிங்கர்

சமீபத்தில் நான் ஒரு புத்தகம் படித்தேன்.  கிட்டத்தட்ட 400 பக்கங்களுக்கு மேல் உள்ள புத்தகம்.  அப் புத்தகத்தை எழுதிய ஆசிரியர் பிரபலமான எழுத்தாளர்.  ஆனால் அவர் பெயரைச் சொல்ல விரும்பினாலம் சொல்லப் போவதில்லை.   நிச்சயமாக அந்தப் புத்தகம் பிடிக்கவில்லை என்று சொல்லப் போவதில்லை.  நான் அப் புத்தகத்தை எடுத்துப் படிக்க படிக்க முடித்துவிட வேண்டுமென்ற எண்ணம் தோன்றி கொண்டிருந்தது.  புயல் போதுதான் அந்தப் புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன்.  எங்கும் இருட்டு.  இன்வெர்டர் மூலம் ஒரு அறையில் ஒரு விளக்குப் போட்டுக்கொண்டு அந்தப் புத்தகத்தை எடுத்துப் படித்துக்கொண்டிருந்தேன்.
அந்தப் புத்தகம் கிட்டத்தட்ட சுயசரிதம் மாறி இருந்தது.  இரண்டு பகுதிகளாக இருந்தது.  பின் பகுதி முழுக்க முழுக்க சுயசரிதம். படிக்க படிக்க தெவிட்டாத இன்பமாக இருந்தது.  இப்படியெல்லாம் சொல்லலாமா?  சொல்லலாம்.  நான்தான் யார் எழுதிய புத்தகம் என்று சொல்லப் போவதில்லை.  புத்தகத்தின் பெயர்கூட சொல்லப் போவதில்லை.  ஆனால் புத்தகத்தைப் பற்றி என் விருப்பப்படி சொல்லப் போகிறேன்.  இதற்கு உங்கள் அனுமதி இருந்தால்போதும். 
அந்தப் புத்தகத்தின் முதல்பகுதி.  ஒரு விஷயத்தைப் பற்றி எழுதியிருந்தது.  சாப்பாட்டில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று.நான் அறிவுரை கூறும் புத்தகங்களை பெரிதும் விரும்புவேன்.  அப் புத்தகம் படிப்பதன் மூலம் நான் என்னை மாற்றிக்கொள்ள முடியுமா என்று பார்ப்பேன்.  இந்தப் புத்தகத்தை முழுவதும் படிப்பதற்கு முன்பே, üசாப்பிட ஆசைப்படாதே,ý என்கிறது.  என்னடா இது என்று தோன்றியது.  நாம சாப்பிடுவதே மிகக் குறைவு. வயிறு என்ன வண்ணான் சாலா என்கிறது.  சாப்பிடுகிற ஆசையைக் குறைக்கச் சொல்கிறது.
நான் எப்போதும் காலையில் வாக் செல்வேன்.  வாக் செல்வது அரை மணி நேரம்தான் இருக்கும்.  ஒரு பூங்காவை 18 தடவைகள் சுற்றிக்கொண்டிருப்பேன்.  அப்போது என் யோசனை எல்லாம் சங்கீதா ஓட்டல் மீது குவிந்திருக்கும்.  வாக் முடித்து விட்டு புதிதாக திறந்திருக்கும் சங்கீதா ஓட்டலுக்குச் சென்று, ரூ35ல் ஒரு இட்லி, கொஞ்சம் பொங்கல், ஒரு மசால்தோசை, ஒரு வடை, ஒரு காப்பியை எப்படி விழுங்குவது என்று காத்திருப்பேன்.  தொட்டுக்கொள்ள விதம் விதமாக சட்னிகள் இருக்கும்.  சாம்பாரை இரு மடங்கு குடிப்பேன்.  சாப்பிட்டு வீட்டுக்கு வரும்போது பூனை போல் கம்ப்யூட்டரில் உட்கார்ந்து எதாவது தட்டுவேன்.  பின் நான் எழுந்து சாப்பிடுவதற்கு பகல் 12போல் ஆகிவிடும்.  ஆனால் இந்தப் புத்தகத்தைப் படித்தால் என்னை சாப்பிடாதே என்று அறிவுரை கூறுகிறது.  உன் வயிறு என்ன வண்ணான் சாலா என்கிறது.  üநீ சாப்பிடு.  ஆனால் பசித்தால் மட்டும் சாப்பிடு.  அதுவும் இரண்டு இட்லி சாப்பிட்டு விட்டு எழுந்துவிடு,ý இப்படி சாப்பாட்டை அடக்கினால் உன் மனம் சுத்தம் அடையும் என்கிறது.  நீ ஆரோக்கியமாக இருப்பாய் என்கிறது.  குடலின் கோபத்தைத் தணிக்க சிறிதளவு மோர் விட்ட சாதம் போதும் என்கிறது இந்தப் புத்தகம்.  
என்னடா இது சாப்பிடுகிற சாப்பாட்டிலேயே இந்தப் புத்தகம் கை வைக்கிறது என்று தோன்றியது.  மேற்கு மாம்பலத்தில் இருக்கும் வெங்கடஸ்வரா போளி ஸ்டாலைப் பற்றி இந்தப் புத்தகம் எழுதியவருக்குத் தெரியுமா? மாலை நேரங்களில் நிற்கக் கூட முடியாது கூட்டம் நெக்கித் தள்ளும்.  காரமே இல்லாத மிளகாய் பஜ்ஜியைப் பற்றி இந்தப் புத்தகம் அறிந்துள்ளதா?  என்னமோ மோர் சாதம் சாப்பிட்டால் போதுமென்று எந்தக் காரணத்திற்காக இந்தப் புத்தகம் சொல்கிறது.  
இதை எழுதிய ஆசிரியர் கிண்டல் அடிக்கிற மாதிரி இன்னொரு விஷயம் சொல்கிறார் : üருசி என்ற ஒரு சுகத்தையும் அறுத்துவிட்டால் வாழ்க்கையில் அனுபவிக்க வேறு என்னதான் இருக்கிறது என்ற கோபம் ஏறப்பட்டிருக்கும்,ý இன்னொன்று சொல்கிறார்.  நான் உணவிற்கு எதிராக பேசவில்லை.  ருசிக்கு எதிராகப் பேசுகிறேன் என்கிறார். 
நான் இன்னொரு விஷயம் சொல்கிறேன்.  மாம்பலத்தில் அயúôத்தியா மண்டபம் எதிரில் உள்ள தெருவில் ஒரு வண்டியில் சுடச்சுட பட்டாணி சுண்டல் கிடைக்கும்.  அத்துடன் இரண்டு மசால் வடைகளையும் சேர்த்து சாப்பிடக் கொடுப்பார்கள்.  அந்தச் சூட்டில் அதைச் சாப்பிடும் சுவை இருக்கிறதே அதை சாதாரணமாக விவரிக்க முடியாது.  
எப்போதும் என் வண்டி அயோத்தியா மண்டபத்தைத் தாண்டுபோதெல்லாம் தானகவே வலதுப் பக்கம் திரும்பி சுண்டல் விற்கும் கடையின் முன் நின்றுவிடும்.  இது மாதிரியான எண்ணம் வரக்கூடாது என்று நான் நினைக்க வேண்டுமென்றால், அந்தப் பக்கமே போகக்கூடாது.  என் பாதையை மாற்றிக்கொள்ள வேண்டும்.  அப்போதுதான் இதை ஓரளவுக்கு தவிர்க்கலாம்.
உணவு விஷயத்தில்தான் இப்படியெல்லாம் சொல்லி நம்மை தர்மசங்கடப் படுத்திவிட்டார் என்று நினைத்தால், இன்னொரு விஷயத்தையும்  சொல்லி நம்மை யோசிக்க வைக்கிறார்.  அவர் இப்படி எழுதுகிறார் : உங்களை முற்றிலும் புரிந்துகொண்ட, முழுவதுமாய் அன்பு செலுத்துகின்ற, உங்களை எந்த எதிர்பார்ப்பும் இன்றி நேசிக்கின்ற மனிதர் என்று உலகில் எவரும் இல்லை.  எந்த உயிரினமும் இல்லை.  ஒரு வேளை சோற்றுக்குத்தான் நாய் வாலாட்டுகிறது.  கிட்டத்தட்ட அந்த மாதிரி விஷயங்களுக்குத்தான் மற்ற மனிதர்களும் உங்களை நெருங்கியிருக்கிறார்கள்...ஹைட்ரஜன் குண்டை வீசி எறிந்தால் எப்படி இருக்கும் அப்படி வீசி எறிகிறார் இந்தப் புத்தக ஆசிரியர்.  இதை மனதின் பெரும் பசி என்கிறார்.  அதை அடக்கச் சொல்கிறார்.  யாருடைய பாராட்டுப் பத்திரத்திற்கும் காத்துக்கொண்டிருக்காதீர்கள் என்கிறார்.
யாருடனும் பேசாமல், பேச்சை அறுக்கச் சொல்கிறார். அப்படி இருந்தால் யாராவது நம்மைப் பார்த்தால் என்ன நினைத்துக் கொள்வார்கள்.  சரியான முசுடு என்று நினைத்துக் கொள்ள மாட்டார்களா?  
அதேபோல் தொண தொணவென்று பேசிக்கொண்டிருந்தால், அதுவும் ஆபத்து.  நமக்கு ஏதோ பிரச்சினை என்று நினைத்துக்கொள்வார்கள்.  நாம் பேசாமல் இருப்பதோடல்லாமல் யாரைப் பற்றியும் புறம் கூறாமல் இருப்பது நல்லது என்று தோன்றுகிறது.
இந் நூலாசிரியர் என்ன சொல்கிறார் என்றால் நீங்களே உங்களுக்குள் பேசிக்கொள்ளுங்கள் என்கிறார்.  உங்கள் மனதோடு நீங்கள உறவு வைத்துக்கொள்ளுங்கள் என்கிறார்.  
யாராவது உங்களிடமிருந்து பத்தாயிரம் ரூபாய் பணம் கடனாக வாங்கிக்கொண்டு போகிறாரென்றால், வாங்கிச் செல்பவர் திருப்பித் தராவிட்டால் பணத்தைக் கேட்காதே என்கிறார்.  இதெல்லாம் சாத்தியப்படுமா?  உண்மையில் வாங்கிச் செல்பவர்கள் கேட்டாலும் திருப்பித் தர வேண்டாம் என்று நினைத்தால் திருப்பியே தர மாட்டார்கள். ஆனால் வாங்கிக்கொண்டு திருப்பித் தராத நபர்களை நாம் ஞாபகம் வைத்துக்கொண்டுதான் இருப்போம்.  நாம் சண்டைப் போட விரும்பாத நபராக இருந்தாலும், பணம் கொடுக்காமல் ஏமாற்றி விட்டான் என்று தோன்றாமல் இருக்காது. மேலும் நம்மை அவன் திரும்பவும் எதுவும் கேட்டு ஏமாற்றமல் இருக்க வேண்டும் என்று நினைப்போம்.  வங்கியை நடத்துபவர்கள் இதுமாதிரி பணத்தை கடனாகக் கொடுத்துவிட்டு அதைத் திரும்பி வாங்குவதற்குள் படுகிற பாட்டை சாதாரணமாக விவரிக்க முடியாது.  பணம் வராமல் போய்விட்டால் கடனைக் கொடுத்த மானேஜரை வங்கி பதம் பார்த்துவிடும்.
இந்தப் புத்தகத்தின் கடைசிப் பகுதியில் நாடிசுத்தம் பற்றி சொல்கிறார்.  ஒருவர் நாடிசுத்தம் தினமும் செய்துகொண்டு ஆன்ம பலத்தைப் பெருக்கச் சொல்கிறார்.  இன்னும் புரியாத விஷயத்தையும் அவர் சொல்கிறார்.  அதுதான் குண்டலினி சக்தி.  
இப் புத்தகத்தில் அவர் சுயசரிதமாக அவருடைய அனுபவங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்.  அவர் சந்தித்த ஒரு குரு மூலம் அவருக்கு ஏற்பட்ட நிகழ்ச்சிகளைத் தொகுத்து அளித்திருக்கிறார்.  இந்தப் புத்தகத்தை நாம் படித்துக்கொண்டே போகலாம்.   அவர் சந்தித்த குருவை நானும் சந்தித்திருக்கிறேன்.  ஆனால் எனக்கு அவர் அனுபவம் எதுவும் கிடைக்கவில்லை. நான் அதை எதிர்பார்த்து அந்தக் குருவை சந்திக்கவும் இல்லை.  குண்டலினி போன்ற விஷயங்கள் எனக்கு எப்போதும் புரியாத விஷயம்.  
சரி, இந்தப் புத்தகம் யார் எழுதியது, புத்தகத்தின் பெயர் என்ன என்றெல்லாம் எதுவும் சொல்லப் போவதில்லை.  நீங்களும் கேட்காதீர்கள்.     

15.12.16

டிசம்பர் மாதம் ஏன் மிரட்டுகிறது?...A

அழகியசிங்கர்ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் தமிழ்நாட்டை குறிப்பாக சென்னை மக்களை மிரட்டும் என்று தோன்றுகிறது.  போன ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதி பெய்த பேய் மழை வெள்ளத்தில் கொண்டு விட்டது.  என் அறுபதாண்டு வாழ்க்கையில் அப்படியொரு வெள்ளத்தைப் பார்த்ததே இல்லை.  ஒன்றாவது மாடியில் இருந்தாலும் படப்படப்பு லேசில் குறையவே இல்லை.  சுற்றிலும் தண்ணீர்.  திகில் உணர்ச்சியுடன் எல்லோரும் மொட்டை மாடியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன் எனக்கு பேய் கனவுகள் அடிக்கடி வரும்.  அந்தப் பேய்க் கனவுகளைக் கண்டு பயந்திருக்கிறேன்.  திடுக்கிட்டு விழித்து விடுவேன்.  ஆனால் அந்தப் பேய்க் கனவுகளை நான் குறிப்பெடுத்துக் கொள்ளவில்லை.  அப்போது அதற்கு என்ன காரணம் என்று அவதிப்பட்டேன்.  ஆனால் டிசம்பர் மாதம் வெள்ளத்தைப் பார்த்த போன ஆண்டு, பேய்க் கனவு நிஜமாகவே நடந்து முடிந்து விட்டதாக நினைக்கிறேன்.
அரசாங்கம் ஒன்றும் செய்ய இயலாமல் செயலற்றுப் போனதைப் பார்த்தேன்.  ஆனால் பலர் தன்னலம் கருதாமல் உதவி செய்த வண்ணம் இருந்தார்கள்.  இவர்கள் எல்லாம் யார்?  இத்தனை ஆண்டுகளாக எங்கே போயிருந்தார்கள் என்றெல்லாம் கேட்க வேண்டும் போல் தோன்றியது.  உதவி செய்ய வந்தவரின் அத்தனை முகங்களிலும் ஒரு வித அன்பு.  தொடர்ந்து தொடர்ந்து உதவி செய்ய வேண்டுமென்ற எண்ணம் மிதந்து கொண்டே இருந்தது.  அப்போதும் யாருடனும் தொடர்பு கொள்ள முடியவில்லை.  என் பெண் மடிப்பாக்கத்தில் எப்படி இருக்கிறால் என்ற கவலையில் ஆழ்ந்திருந்தேன்.  இதுமாதிரியான ஆபத்துக்களைச் சந்திக்கும்போது நாம் எப்படி இந்த வாழ்க்கையைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று எப்போதும் யோசித்துக்கொண்டிருப்பேன்.  
இதுமாதிரியான ஆபத்தான சமயத்தில் நான் ஆசையாய் வாங்கி வைத்திருந்த நானோ ட்விஸ்ட் என்ற கார் எப்படியோ தப்பித்துவிட்டது.  நம்மை அறியாமலே நம்மைச் சுற்றி உள்ள அரிய சக்திதான் நானோ காரை தப்பிக்க வைத்துவிட்டது.  அந்தக் கார் மாத்திரம் வெள்ளத்தில் மாட்டியிருந்தால், எல்லாம் போயிருக்கும்.  எனக்கும் திரும்பவும் கார் வாங்கும் ஆசையும் போயிருக்கும்.  இந்த இடத்தில்தான் ஏதோ அபூர்வ சக்தி நம்மைக் காப்பாற்றுகிறது என்று நம்புகிறேன்.  கடவுள் என்று சொல்வதில் நான் வெட்கப்படப் போவதில்லை.  பேய் மழை பெய்யும் சில தினங்களுக்கு முன் நானோ கார் ஒரு விபத்தில் ஒரு அபத்தமான தமிழ்ப் படத்தைப் பார்க்கும் சந்தர்ப்பத்தில் தியேட்டரில் மாட்டிவிட அதை எடுத்துக்கொண்டு டாப்பே ரீச்சில் சர்வீஸ் செய்யக் கொடுத்திருந்தேன்.  பின் பேய் மழை.  வெள்ளம்.   ஆனால் என் புத்தகங்கள் வெள்ளத்தில் மாட்டிக்கொண்டு விட்டன.  2013 ஆண்டு கொண்டு வந்த வினோதமான பறவை என்ற கவிதைத் தொகுதி வெள்ளத்தில் பெரும்பகுதி போய்விட்டன.  ஒவ்வொரு முறையும் நான் அந்தப் புத்தகக் கட்டைப் பார்த்தவுடன் மருண்டு கொண்டிருப்பேன்.  ஏனென்றால் அந்தக் கவிதைத் தொகுதி என்னை விட்டுப் பிரிய மனமில்லாமல், என்னுடனே இருந்தது.  அதேபோல் ரோஜா நிறச்சட்டை என்ற கதைத் தொகுதி சிறிது போய் விட்டது.  நேர்ப் பக்கம் (அட்டையில் ப்புப் போட மறந்து விட்டேன்) என்ற கட்டுரைத் தொகுதி போயே போய்விட்டது.  அதெல்லாம் கொஞ்சம் பிரதிகள்தான்.  ஆனால் கவிதைத் தொகுதி அதிகப் புத்தகங்கள்.  அதேபோல் சேகரித்த சில அரிய புத்தகங்கள்.  
ஒரு வழியாக வெள்ளம் மனக் கிலேசத்தை உண்டாக்கி சில மாதங்கள் டல்லாக இருந்தது உண்மைதான்.  இதெல்லாம் போன டிசம்பர் மாதம்.  
இந்த டிசம்பர் மாதம் வார்தா புயல்.  வீட்டைவிட்டு வெளியே போகவில்லை.  பால்கனியிலிருந்து தெருவை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.   அடித்தது புயல்.  எங்காவது வீடு விழுந்துவிடப் போகிறதோ என்றெல்லாம் தோன்றியது.  ஒரு கோடி வீட்டில் தகர ஷீட் பிய்த்துக்கொண்டு பயங்கர சத்தம் போட்டது.  மூன்று வீட்டு தள்ளி உள்ள ராமன் வீட்டு மாமரம் விழுந்து விட்டது.  அந்த மரத்தில் உள்ள மாங்காய்கள் நல்ல சுவையாக இருக்கும்.  ஒருமுறை அவர் அன்பளிப்பாய்க் கொடுத்த மாம்பழத்தை சாப்பிட்டபின், இன்னும் கிடைக்குமா பணம் தருகிறேன் என்றெல்லாம் சொல்லிப் பாரத்தேன்.  அவர்களிடமிருந்து பதில் வரவில்லை.  எதிரில் முருங்கை மரம் சாய்ந்து விழுந்தது.   மற்றபடி எங்கள் தெருவிற்கு ஒன்றும் ஆகவில்லை.  ஆனால் நான் பார்த்த இடங்களில் வார்தா புயல் சூறை ஆடிவிட்டுச் சென்று விட்டது. இரண்டு மூன்று நாட்களுக்கு நான் வாக்கிங் போக முடியவில்லை.  மின்சாரம் இல்லாததால் நான் இன்வெர்டர் வெளிச்சத்தில் தமிழ்ப் புத்தகங்கள் சிலவற்றைப் படித்தேன்.  அந்தப் புயலை பால்கனியிலிருந்து பார்க்கும்போது, அதன் முன் நான் மண்டியிட விரும்பினேன்.  அந்த வார்தா புயலை வைத்து ஒரு கவிதை.

யே வார்தா புயலே
எங்கிருந்து பதுங்கிக்கொண்டு
இப்படி வந்தாய்
யார் மீது உனக்குக் கோபம்
மரங்களை எல்லாம் வெட்டி 
சாய்த்து விட்டாயே..
அவற்றின் புலம்பல் குரல் 
உன் காதில் ஏறவில்லையா...
புயல் என்றால் கண்ணால் பார்க்க முடிந்தது
புயல் என்றால் காதல் கேட்க முடிந்தது
புயல் என்றால் முன்னால் அறிய முடிந்தது
ஆனால் இந்த இடத்தை விட்டுப் போ போ
என்று துரத்தியது காதில் விழவில்லையா?
உனக்கு என் வீர வணக்கம்.

சரி அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் என்ன ஆகப் போகிறதோ? 

11.12.16

இன்று பாரதியார் பிறந்த தினம்

11.12.2016அழகியசிங்கர்நான் கிருத்துவக் கல்லூரியில் படித்தக் காலத்தில், கல்லூரி நூல் நிலையத்திலிருந்து பாரதியாரின் கட்டரைத் தொகுப்புகளைப் படிப்பேன்.  பெரும்பாலும் மின்சார வண்டியில் வந்துகொண்டிருக்கும்போது படிப்பது வழக்கம்.  நான் கெமிஸ்டிரி படிக்கும் மாணவனாக இருந்தாலும், தமிழில் உள்ள ஆர்வத்தால் தமிழ்ப்புத்தகங்களை அதிகமாகப் படிப்பேன்.  பாரதியாரின் கவிதைகளை விட நான் விரும்பிப் படித்தது அவருடைய உரைநடை நூல்கள்தான்.  
பெ தூரன் அவர்கள் தொகுத்தக் கட்டுரை நூல்களை நான் விரும்பிப் படித்திருக்கிறேன்.  இன்று அவருடைய பிறந்தநாள்.  பாரதியார் எப்போதும் எளிமையாக எல்லோரும் புரிந்துகொள்ளும்படி எழுதுபவர்.  
பொதுவாக பத்திரிகையில் பணிபுரிபவர்கள்தான் தொடர்ந்து எதாவது எழுதும்படி நேர்கிறது.  பத்திரிகை தொடர்பு இல்லாதவர்களுக்கு அதுமாதிரியான நிர்ப்பந்தம் எதுவும் இல்லை.  பாரதியாருக்குப் பத்திரிகை தொடர்பு இருந்ததால் எல்லாவற்றையும் அவர் எழுதி இருக்கிறார்.  அவர் எழுதியதை இப்போது படிக்கும்போது அவர் எழுதிய காலத்திலும் சரி, இப்போதும் சரி, அது எந்த அளவிற்கு சிறப்பாக இருந்தது என்பதை அறிய முடிகிறது.
பாரதியார் சுதேசமித்திரன் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தபோதுதான் பலவற்றை எழுதி உள்ளார்.  பல மொழிபெயர்ப்புகளைச் செய்திருக்கிறார், கவிதைகள் எழுதியிருக்கிறார், கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.  அவர் கூட்டத்தில் பேசிய பேச்சுக்கள்  சுதேசமித்திரன் பத்திரிகையில் பிரசுரம் செய்யப்பட்டுள்ளன.  
எல்லாவற்றையும் தொகுத்து சீனி. விசுவநாதன் பாரதியின் படைப்புகள் என்று 11 தொகுதிகள் மேல் கொண்டு வந்துள்ளார். எல்லாவற்றையும் தொகுத்த விஸ்வநாதன், தொகுத்தக் கட்டுரைகளுக்கு அடிக்குறிப்புகளும் கொடுத்திருக்கிறார்.  பத்தாம் தொகுதியிலிருந்து ஒரு சிறிய பகுதியை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.  
வயி. சு ஷண்முகம் செட்டியாருக்கு எழுதிய கடிதம்.

ஸ்ரீமான் வயிசு.ஷண்முக செட்டியாருக்கு ஆசிர்வாதம்

1.....
2. பகவத் கீதையை அச்சுக்கு விரைவில் கொடுங்கள்.  தங்களுக்கு இஷ்டமானால் அதற்கு நீண்ட விளக்கம் எழுதியனுப்புகிறேன்.  நீண்ட முகவுரையும் எழுதுகிறேன்.
(கீதைக்கு) புஸ்தக விலை ரூ.1க்குக் குறைந்து வைக்க வேண்டாம்.  தடித்த காயிதம்; நேர்த்தியான அச்சு; பெரிய எழுத்து; இட விஸ்தாரம் - இவை கீதைக்கு மட்டுமேயன்றி நாம் அச்சிடப்போகும் புஸ்தகங்கள் எல்லாவற்றுக்கும் அவசியம்.
3. ஆங்கிலக் கவிகள், ஆசிரியரின் காவியங்களும், கதைகளும் இங்கிலாந்தில் எப்படி அச்சிடப் படுகின்றனவோ, அப்படியே நம் நூல்களை இங்கு அச்சிட முயல வேண்டும்.  அங்ஙனம் அச்சிட ஒரு ரூபாய் விலை போதாதென்று அச்சுக்கூடத்தார் அபிப்பிராயங் கொடுக்கும் பக்ஷத்தில் புஸ்தக விலையை உயர்த்துவதில் எனக்கு யாதோர் ஆúக்ஷபமுமில்லை.
4. பஞ்சாலி சபதத்திற்கு முகவுரை (இரண்டாம் பதிப்புக்கு) இன்னும் சில நாட்களில் அனுப்புகிறேன்.
தம்பி, இந்தப் பாஞ்சாலி சபதம் இரண்டாம் பாகம் கையெழுத்துப் பிரதி அனுப்பி யிருப்பதைச் சோமபலின்றி தயவுசெய்து ஒருமுறை முற்றிலும் படித்துப் பாருங்கள்.  பிறகு அதை மிகவும் ஆச்சரியமாகவும் அழகாகவும் அச்சிடுதல் அவசியமென்பது தங்களுக்கே விசதமாகும்.
5.....
புதுச்சேரியில் (பாடிய) பாட்டுக்கள் அனைத்தையும் இங்கு குழந்தை தங்கம்மா தன்னுடைய நோட் புக்குகளில் எழுதி வைத்திருக்கக் கண்டு, அதைப் புதையல்போல் எடுத்து வைத்திருக்கிறேன். 
தங்களுக்கு மஹா சக்தி அமரத்தன்மை தருக.
தங்களன்புள்ள
சி சுப்பிரமணிய பாரதி

இதற்கு பதிப்பாசிரியர் குறிப்பு என்ற பெயரில் சீனி விசுவநாதன் இப்படி குறிப்பிடுகிறார் :

இக் கடிதம், மேலோட்டமாகப் பார்க்கும்போது, நம் நூல்கள் பிரசுரமாக வேண்டும் என்பதில் பாரதி கொண்டிருந்த அக்கறையைப் புலப்படுத்துவதாக உள்ளது என்பதாகத் தோன்றும்.

ஆனால், வெளிப்படும் தம்முடைய நூல்கள் எந்தமாதிரியான வகையில் அமைந்திருக்க வேண்டும் என்பதிலும் பாரதி மிகுந்த கவனம் செலுத்திய பதிப்புச் சிந்தனையைப் புலப்படுத்திக் காட்டுவதாகவும் இக் கடிதம் அமைந்துள்ளது.

அச்சும் அமைப்பும் ஆங்கில நூல்களுக்கு இணை சொல்லும்படியாகவும், விலையும் தரத்திற்கு ஏற்றப்படியாயும் இருக்க வேண்டும் என்பதே பாரதியின் ஆசையாகவும் இருந்துள்ளது.

இன்றைய கவிதைக்கு ஆரம்பமாக பாரதியின் வசன கவிதைகள் முக்கியப் பங்கு வகிக்கிறது.  பாரதியின் புதுக்கவிதைகள் என்ற பெயரில் நான் தற்போது ஒரு புத்தகம் கொண்டு வந்துள்ளேன்.  இது ஏற்கனவே 1982 ஆம் அண்டு ழ வெளியிடாக வந்துள்ளது. ஞானக்கூத்தனின் முன்னுரையுடன் இப் புத்தகத்தைத் திரும்பவும் கொண்டு வந்துள்ளேன்.  ஞானக்கூத்தன் இப் புத்தகத்தைக் கொண்டுவரும்படி என்னிடம் கேட்டிருந்தார்.  அப் புத்தகத்திலிருந்து ஒரு சிறிய பகுதி.


சிற்றெறும்பைப் பார். 
எத்தனை சிறியது!
அதற்குள்ளே கை, கால், வாய், வயிறு எல்லா அவய
வங்களும் கணக்காக வைத்திருக்கிறது
யார் வைத்தனர்? மஹா சக்தி.
அந்த உறுப்புகளெல்லாம் நேராகவே தொழில் செய்கின்றன.
எறும்பு உண்ணுகின்றது, உறங்குகின்றது. மணம் செய்து
கொள்கின்றது. குழந்தை பெறுகிறது, ஓடுகிறது,
தேடுகிறது, போர் செய்கிறது, நாடு காக்கிறது.
இதற்கெல்லாம் காற்றுத்தான் ஆதாரம்.
மஹா சக்தி காற்றைக் கொண்டு தான் உயிர் விளையாட்டு விளையாடுகின்றாள்.
காற்றைப் பாடுகிறோம்
அஃது அறிவிலே துணிவாக நிற்பது;
உள்ளத்திலே விருப்பு வெறுப்புக்களாவது.
உயிரிலே உயிர் தானாக நிற்பது.
வெளியுலகத்திலே அதன் செய்கையை நாம் அறிவோம்.
நாம் அழிவதில்லை.
காற்றுத் தேவன் வாழ்க.


9.12.16

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 49

அழகியசிங்கர்


      இன்னும் கேள்விகள் (?) 
சொல்லித் தந்து நகரும்
வாழ்க்கை

கலாப்ரியா 

'இன்னும் ஒரு கட்டுப்போலதான்
பாக்கியிருக்கும்...'

சிமினி விளக்கு
கருகத் தொடங்கும் வரை
பீடி சுற்றிக் கொண்டிருப்பாள்...

'இன்னும் விளக்கை
அணக்யலையா..' என்பான்

எல்லாரும் பசியுடன்

பசியுடன்
படுத்துக் கொள்ள,

'இன்னும் புத்தி வரலையா
கெழவனுக்கு...' என
அம்மா அப்பாவிடம்
செல்லக் கோபத்துடன்

குசுகுசுக்கும்
இருட்டு நாடகத்தை
மனசுள் பார்த்து
வெட்கத்துடன் குப்புறப்
படுப்பாள்....

தன்னிச்சையாய்
விரல் சொடுக்க நினைத்துப் பின்
சாக்கிரதையாய் தவிர்ப்பாள்

சமைந்தகுமரிநன்றி : கலாப்ரியா கவிதைகள் - சந்தியா பதிப்பகம், பு எண் : 77 53வது தெரு, 9வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 600 083 - பக்கங்கள் : 292 - விலை : ரூ. 240 - தொலைபேசி : 044-24896979 - இரண்டாம் பதிப்பு : 2015 
7.12.16

சோ ராமசாமியும் ஜெயகாந்தனும்அழகியசிங்கர்நான் எப்போதும் இரண்டு பேர்கள் மேடையில் பேசுவதை ரசிப்பேன்.  ஒருவர் சோ ராமசாமி.  இன்னொருவர் ஜெயகாந்தன்.  ஜெயகாந்தன் ஆரம்ப காலத்தில் மேடையில் இருந்துகொண்டு குஸ்திப்போடுவதைப் போல் பேசுவார்.  அவருடைய சத்தம் ஒருவிதமாக கலகலக்கும்.  அவர் கத்திப் பேசுவதைக் கேட்டால் அவருக்கு ரத்தக் கொதிப்பு நோய் இருந்திருக்கும் என்று நினைக்கத்தோன்றும்.  பேச்சு ஒருவித கலை.  பலருக்கு அது சுட்டுப் போட்டாலும் வராது.  நானும் ஒரு கூட்டத்தில் ஜெயகாந்தன் மாதிரி பேச நினைத்தேன்.  முதலில் சாதாரணமாகப் பேச ஆரம்பித்து, பின் உச்சக் குரலில் கத்திப் பேச ஆரம்பித்தேன்.  அப்புறம்தான் ஒரு கேள்வி கேட்டுக்கொண்டேன்.  என்ன பேசினோம், ஏன் இப்படி கத்திப் பேச வேண்டுமென்று. எனக்கு என் நிலையை நினைத்து வெட்கமாகப் போய்விட்டது.  

இன்னொருவர் சோ ராமசாமி.  நான் அவர் கூட்டங்களில் கலந்துகொள்வேன்.  முன்பெல்லாம் எதாவது ஒரு கட்சியை ஆதரித்து அரசியல் மேடையில் பேசுவார்.  அவர் பேசுவதைக் கேட்க அதிகமாக கூட்டம் வரும்.  இயல்பாக நகைச்சுவை உணர்வுடன் அவருக்குப் பேச வரும். கூட்டத்தில் உள்ள அனைவரும் ரசிப்பார்கள்.  தி நகரில் அப்படி ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டு கேட்டிருக்கிறேன்.  அவர் பேசுவதைக் கேட்கப் பிடிக்காமல், கூட்டத்தைக் கலைக்க எதாவது எதிர்கட்சியைச் சேர்ந்தவர்கள் செய்வார்கள்.  

ஒவ்வொரு முறையும் அவருடைய துக்ளக் கூட்டத்திற்குப் போவேன்.  கூட்டத்தை நடத்தும் விதமே சிறப்பாக இருக்கும். தாங்க முடியாத அளவிற்கு கூட்டம் நிரம்பி வழியும்.  சமீபத்தில் நடந்த கூட்டத்திற்குப் போயிருந்தேன்.  மியூசிக் அக்காதெமி கட்டத்தின் வெளியே நிற்க வேண்டியிருந்தது.  உள்ளே ஒரே கூட்டம்.  சோ உடல்நிலை சரியில்லாமல் அந்தக் கூட்டத்தை நடத்திக்கொண்டிருந்தார்.  எதிரியின் மனநிலையைப் புண்படுத்தாமல் நகைச்சுவை உணர்வுடன் பேசக் கூடியவர் சோ ஒருவர்தான்.  அதனால் எனக்கு ஜெயகாந்தின் பேச்சுப் பாணியைவிட சோ ராமசாமி பேசுவதுதான் பிடிக்கும்.  

துக்ளக் பத்திரிகை வாங்கினால், சோ எழுதும் கேள்வி பதில் பகுதியைத்தான் படிப்பேன். அதற்காகவே வாங்குவேன். மற்றப் பகுதிகள் படிக்க எனக்குப் பிடிக்காது.  அந்த  அளவிற்கு தன் கருத்தில் உறுதியாக நகைச்சுவை ததும்ப எழுதியிருப்பார்.  அவர் துக்ளக் பத்திரிகை ஆரம்பித்த விதமே நன்றாக இருந்தது.  இரண்டு கழுதைகள் பேசுவதுபோல் பத்திரிகை இருக்கும். நாம் எப்போதும் நகைச்சுவை உணர்வோடு பேசுபவர்களைப் பெரிதும் மதிப்பதில்லை.  எல்லோரும் சிரித்துவிட்டு வந்துவிடுவோம். ஆனால் எவ்வளவு பெரிய விஷயங்களை அவர் எப்படியெல்லாம் யோசிக்கிறார் என்றால் ஆச்சரியமாக இருக்கும். ஜெயகாந்தான் பாணியில் கேட்பவர்கள் எல்லாம் புரிந்துகொள்ள வேண்டுமென்று திட்டுகிற மாதிரி பேசுவார்.  சோ வேற மாதிரியாக கேட்பவர்கள் புரிந்துகொள்ள நகைச்சுவை உணர்வோடு பேசுவார். சோ தன் கருத்தில் உறுதியானவர்.  தைரியமாக அபத்து ஏற்பட்டாலும் பேசுவார். எழுதுவார்.  அவரை யாராவது வந்து அடிக்கப் போகிறார்களே என்று நான் யோசிப்பேன்.  ஆனால் அதற்கெல்லாம் அவர் கவலைப்பட மாட்டார்.  எளிதான பழக்கவழக்கங்களைக் கொண்டவர்.   

எனக்கு என்ன ஆச்சரியமென்றால் சோ ராமசாமியைப் பற்றியும், பெரியார் ஈவேராமசாமியைப் பற்றியும் பிரமிள் ஒரு கவிதை எழுதியிருந்தார். இருவருமே முக்கியமானவர்கள் என்பது பிரமிள் கருத்து.  எப்படி ஈவேராவுடன் சோ ராமசாமியைச் சேர்க்க முடியும் என்று யோசிப்பேன். இருவரையும் மேடைப் பேச்சு, பத்திரிகையுடன் தொடர்பு என்று சேர்க்கிறார் என்று யோசிப்பேன்.  எழுதிக்கொடுத்த அந்தக் கவிதையை எங்கோ தொலைத்துவிட்டேன்.

இன்று காலை சோ ராமசாமி மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தியை அறிந்து வருந்துகிறேன்.  அவரை இழந்து நிற்கும் அவர் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

6.12.16

மரணம் தரும் பாடம்


அழகியசிங்கர்
நம் வாழ்க்கையில் மரணம் என்பதை யாராலும் தவிர்க்க முடியாதது.  ஆனால் நமக்கு இந்த எண்ணம் எப்போதும் ஏற்படுவதில்லை.  அதனால்தான் நாம் மற்றவர்களைப் பார்த்துப் பொறாமைப் படுகிறோம்.  நமக்குப் புகழ் கிடைக்கவில்லையே என்று ஏங்குகிறோம். பயப்படுகிறோம். அவஸ்தைப் படுகிறோம். சந்தோஷமாக இருக்கத் தெரியாமல் இருக்கிறோம். மரணத்தை நேரிடையாக உணரும்போது நமக்கு திகைப்பும் பய உணர்ச்சியும் உண்டாகுகிறது.  நம்முடன் பழகிக்கொண்டிருந்த நண்பர்கள், உறவினர்களின் மரணங்கள் நம்மை ஆழ்ந்த துக்கத்தில் ஆழ்த்துகிறது.  சிறிது நேரம் வரை நம் மனது அமைதி அடையாமல் தவிக்கிறது.  பின் சாதாரண நிலைக்கு நாம் வந்து விடுகிறோம்.
திமுக தலைவர், முதலமைச்சர் அண்ணாதுரை இறந்தபோது அவரைக் குறித்து ரேடியோவில் கலைஞர் இரங்கல் கவிதை வாசித்தார்.  உருக்கமாக இருக்கும்.  அதைக் கேட்டு நானும் உருக்கமாக இருந்தேன்.  அப்போது நான் பள்ளியில் படிக்கும் சிறுவன்.  என் பள்ளியில் உள்ள பல மாணவர்கள் சேர்ந்து அண்ணா சமாதியைப் பார்க்கச் சென்றோம். நான் தங்கச்சாலையில் இருந்தேன்.  நடந்தே அங்கு சென்றதாக தோன்றுகிறது.  என் பள்ளி மாணவர்களுடன் அண்ணா சமாதியைப் பார்த்துவிட்டு, சிறுவர்களின் குறும்புடன் கடற்கரையில் உள்ள அலையில் நனைந்தோம்.  அப்போது என் சட்டையில் மண் ஒட்டிக்கொண்டிருந்தது என்று கழட்டினேன்.  நீரில் அலசலாம் என்ற எண்ணத்தில்.  அந்தச் சட்டை ஒரு குறும்புக்கார மாணவன் கையில் கிடைத்து, அதை பந்துபோல் தூக்கிப் போட்டு விளையாடினார்கள்.  சட்டை கடலில் போய்விட்டது.  அண்ணா சமாதியைப் பார்த்தத் துக்கத்தோடு என் சட்டைப் போன துக்கமும் சேர்ந்து கொண்டது.  வீட்டிற்குப் போனால் அம்மா கண்டு பிடித்துத் திட்டுவாள் என்ற பயம்.  ஏன்எனில் வீட்டிற்குத் தெரியாமல்தான் அண்ணா சமாதியைப் பார்க்க வந்திருந்தேன். 
ஒரு பிரபலமான அரசியல்வாதி இறந்து போனால், அவருடன் தொண்டர்கள் சிலரும் இறந்து விடுவார்கள்.  பலர் அதிர்ச்சியில் இறந்து விடுவார்கள்.  இப்போதெல்லாம் டிவியில் ஒளி பரப்புகிறார்கள்.  நேரிடையான காட்சியாக நாம் தொலைகாட்சியில் பார்க்கிறோம்.  நாம் பார்க்க பார்க்க துக்கம் நம்மிடம் பொங்கி வழியும். பின் அமைதி ஆகிவிடுவோம்.  மேலும் நமக்கு அந்தக் காட்சியைப் பார்க்கும்போது, சில தொண்டர்கள் தலையில் அடித்துக்கொண்டு அழுவதைப் பார்க்கும் போது, கண்கலங்கும் காட்சியாக நமக்குத் தோன்றும்.
சமீபத்தில் நான் தொலைக்காட்சியில் பார்த்த ஒரு மரணம், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மரணம்.  அரசியல் தலைவர்களை நாம் நேரில் பார்க்கும் சந்தர்ப்பம்  அமையாவிட்டாலும், அவர்களைப் பற்றி தெரிந்து கொள்கிற சந்தர்ப்பங்கள் நமக்கு அதிகம் உண்டு.  அவர் இனி இல்லை, இனிமேல் எப்படி இருக்கும் என்ற அச்சம் நம்மில் இருக்கும்.  
முதல்வர் ஜெயலலிதாவின் மரணமும் அப்படித்தான்.  அவர் அப்பாலோ மருத்துவமனையில் சேர்ந்து பட்ட அவஸ்தைகளை எப்படி வார்த்தைகளால் விவரிக்க முடியும்.  ஒரு நாடே துக்கத்தைப் பகிர்ந்து கொள்கிற துக்கம்தான் இது.  ஒரு குடும்பத்தில் ஒரு மரணம் நடந்தால், குடும்பத்தில் உள்ள நபர்களுடன்தான் அதைப் பகிர்ந்துகொள்ள முடியும்.  சமீபத்தில் என் நண்பர் ஒருவர் வரிசையாக அவருடைய உறவினர்கள் ஒவ்வொருவராக இறந்ததை பட்டியல் இட்டுக்கொண்டிருந்தார்.  இறந்தவர்கள் பெரும்பாலோர் வயதானவர்கள்.  அவர்கள் ஒவ்வொருவரும் அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு போனதுபோல் தோன்றியது அவர் விவரித்த விதம்.
மரணம் நம்மை சஞ்சலப்படுத்தத் தவறுவதில்லை.  சில மரணங்கள் நமக்கு முன்னால் மரணம் நிகழப் போவதைத் தெரியப்படுத்துகின்றன.  இதை ரொம்பவும் கூர்ந்து கவனித்தால் மட்டும் தெரியும் என்று தோன்றுகிறது.  என் பெரியப்பா ஒருவர் ஒரு வலது பக்கம் பக்கவாதநோய் வந்து பல மாதங்களாய் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்.   அவர் மரணம் அடைந்த சமயம் ஒரு நாள் காலையில் அவர் வாய்க்கு வாய்கரிசி போடுவதுபோல் ஒரு கனவு.  திகைத்து நான் கண் விழிக்கிறேன்.  அன்று அவர் இறந்து விட்டதாக பெரியப்பா வீட்டிலிருந்து செய்தி. 
இன்னொரு மரணம் ஜே கிருஷ்ணமூர்த்தியின் மரணம்.    மரணம் அடைவதற்கு முன்பு கடைசியாக சென்னையில் கூட்டங்களில் கலந்து கொண்டிருந்தார்.  அந்த முறை வழக்கத்திற்கு மாறாக அவர் குறைவான கூட்டங்களில் பேசினார்.  அந்தக் கூட்டதிற்கு வந்தவர்களுக்கு அவர் மரணம் அடையப் போகிறார் என்பது தெரிந்திருந்தது.  கூட்டத்திற்கு வந்தவர்களில் அழகான வயதான பெண்கள் பலர் ஒரு பக்கம் கண்கலங்கி அழுது கொண்டிருந்ததைப் பார்த்தேன். கிருஷ்ணமூர்த்தியால் அன்று சரியாகப் பேச முடியவில்லை. கூட்டத்தில் ஒருவர் அவரையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்.  கிருஷ்ணமூர்த்தி உடனே ஏன் என்னை உற்றுப் பார்க்கிறீர் என்று கோபமாக சொன்னதுபோல் தோன்றியது. 
ஜே கிருஷ்ணமூர்த்தி மரணம் அடையும் முன் அவர் ஒரு காரிலிருந்து இறங்கி வருவதைப் போலவும், அவரைப் பார்த்து யாரோ சுடுவதுபோல் கனவு கண்டேன்.  இது என்ன பேத்தலாக இருக்கிறது என்று யோசித்தேன்.  ஆனால் நான் கனவு கண்ட சில தினங்களில்  அவர் மரணம் அடைந்ததை கேள்விப்பட்டேன்.  மரணம் என்பதைப் பகிர்ந்து கொள்வதாக நினைக்கிறேன்.  ஜே கிருஷ்ணமூர்த்தியின் மரணத்தை அவருடைய கூட்டத்தைக் கேட்க வருகிற நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள முடிந்தது. ஒரு அரசியல்தலைவரின் மரணத்தை எல்லோரிடமும் பகிர்ந்துகொள்ள முடிகிறது.  அலுவலகத்தில் யாராவது இறந்தால், அலுவலக நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள முடிகிறது.  அதேபோல் உறவினர் யாராவது இறந்தால் உறவினர்களுடன் பகிர்ந்துகொள்ள முடிகிறது.  சமீபத்தில் என் நண்பர் ஒருவர் அவருக்கு நெருக்கமான நண்பர் ஒரு அயல் நாட்டில் காரல் பயணம் செய்துகொண்டிருந்தபோது விபத்தில் இறந்து போய்விட்டார்.  அதை நண்பரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.  ஒரு துக்க நிகழ்ச்சிக்கு பேச அவர் வந்தபோது, எல்லோர் முன்னும் கண்கலங்க வெளிப்படுத்தி விட்டார். அன்று அவர் பேசியது கண்கலங்கும்படி இருந்தது.  

பகிர்ந்துகொள்ள முடியாத மரணங்கள் நமக்கு படப்படப்பை ஏற்படுத்துவதாக தோன்றுகிறது.  பிரமிள் மரணம் அடைந்ததை என்னால் மறக்க முடியாது.  என் விட்டில் உள்ளவர்களிடம் அதைத் தெரியப்படுத்தினால், அது பகிர்ந்துகொள்ளும் துக்கமாக தெரியவில்லை. வேலூர் அருகில் உள்ள  கரடிக்குடியில் பிரமிளின் பூத உடலைப் பார்க்கச் செல்லவேண்டும். அப்போது நான் அடைந்த படப்படப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.  ஆனால் என்னுடன் வெளி ரங்கராஜனனும் வந்திருந்ததால் என் படபடப்பை கொஞ்சம் சரி செய்ய முடிந்தது.  தனியாக நான் போயிருக்க மாட்டேன். அதனால்தான் எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள் இறந்தவர்கள் வீட்டிற்கு துக்கம் விஜாரிக்கப் போக மாட்டார் என்பதை அறிந்திருக்கிறேன். 
மரணம் அடைந்தபிறகு கூட கனவில் சிலசமயம் மரணம் அடைந்தவர்கள் வருவார்கள்.  என் உறவினரன் புதல்வர் ஒருவர் நீச்சல் குளத்தில் எதிர்பாராதவிதமாய் மரணம் அடைந்து விட்டார்.  அது எனக்குத் தந்த திகைப்பை என்னால் சாதாரணமாக விளக்க முடியாது.  உறவினரைப் பார்க்கச் சென்றபோது அவர் துக்கத்தோடு இருந்தார்.  ஆனால் அழவில்லை.  அப்போது அவர் சொன்னது இப்போதும் ஞாபகம் வருகிறது. üüநீ வருத்தப்படாதே,ýý என்றுதான் அவர் சொன்னார். ஆனால் அந்த நிகழ்ச்சிக்குப் பின் அவருடைய பையன் என் கனவில் வந்தான்.  ஆனால் ஒன்றும் பேசவில்லை.  ஒரு சமயம் ஸ்டெல்லா புரூஸ் என் கனவில் அவர் மனைவியுடன் வந்தார்.  
 

5.12.16

மனதுக்குப் பிடித்த கவிதைகள் 48அழகியசிங்கர்  

மாலதி
                                                                                               
சங்கர ராமசுப்ரமணியன்


மாலதி
நடந்து செல்லும் வீதிகளில்
வீடுகள்
வினோத சோபை கொள்கின்றன
கனவெனத் தோன்றும்
மஞ்சள் ஒலியை
அறையெங்கும்
நிரப்பிச் செல்கிறாள் அவள்

அவளின்
உடல் மணம் படர்ந்துü
விழிக்கின்றன புராதன நாற்காலிகள்

மாலதி
நகரத்தின் வெளியே
வீட்டின் நிலைப்படியில் நின்றுகொண்டு
வெளிறிய கனவொன்றினைக்
கண்டுகொண்டிருக்கக்கூடும்

இல்லையெனில்
தன் அம்மாவின்
இடையில் அமர்ந்து
கோவில் சப்பரத்தை
வேடிக்கை பார்த்துக்
கொண்டிருக்கக் கூடும்

நன்றி : மிதக்கும் இருக்கைகளின் நகரம் - கவிதைகள் - சங்கர ராமசுப்ரமணியன் - வெளியீடு : மருதா, கடை எண் : 3, கீழ்த்தளம், ரியல் ஏஜென்ஸி, 102 பாரதி சாலை, சென்னை 600 014 - விலை : ரூ.40 - வருடம் : டிசம்பர் 2001 

4.12.16

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடி பதில்அழகியசிங்கர்1. நீங்கள் நல்லவரா கெட்டவரா?

கெட்டவன்

2. நீங்கள் கெட்டவரா நல்லவரா?

நல்லவன்

3. யாரைப் பார்த்து உங்களுக்குப் பயம்?

என்னைப் பார்த்து

4. நீங்கள் எழுதுவதை திரும்பவும் படிப்பதுண்டா?

படிப்பதில்லை.  படித்தால் ஏன் எழுதினோம் என்று தோன்றலாம்.

5. எது எளிது? கவிதை எழுதுவது எளிதா? கட்டுரை எழுதுவது எளிதா? கதை எழுதுவது எளிதா? நாவல் எழுதுவது எளிதா?

எதுவும் எளிதல்ல.  படிப்பதுதான் எளிது.

6. சமீபத்தில் நீங்கள் படிக்கும் புத்தகம் எது?

ரமண மகரிஷியின் சரிதமும் உபதேகமும்.  3வது பாகம் படித்துக்கொண்டிருக்கிறேன்.

6. யார் எழுத்து உங்களுக்குப் பிடித்திருக்கிறது?

அது என்னமோ தெரியவில்லை.  எல்லோருடைய எழுத்தும் பிடித்துதான் இருக்கிறது.  

7. சமீபத்தில் முகநூலில் கண்டுபிடித்த உண்மை என்ன?

பிரம்மராஜன், ஆத்மாநாம் பற்றியெல்லாம் எதுவும் எழுதக் கூடாதென்று.

8.  நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென்று நினைப்பதுண்டா?

ஆமாம்.  படிக்கட்டுகளில் இறங்கும்போதும் ஏறும்போதும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டுமென்று.

9. ஏன்?

சமீபத்தில் எனக்குத் தெரிந்த ஒரு பெண் மாடிப்படிக்கட்டுகளிலிருந்து வேகமாக ஓடி வந்து தலைக் குப்புற விழுந்து இறந்து விட்டாள்.

10. நீங்கள் யாரைப் பார்க்க ஆசை படுகிறீர்கள்?

அமெரிக்காவில் இருக்கும் என் பேத்தியை.

11. இலக்கியக் கூýட்டங்கள் கசக்கின்றனவா?

கசக்கவில்லை.  அவற்றை இன்னும் எப்படி செம்மைப் படுத்துவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

12. காலையில் எழுந்தவுடன் என்ன செய்கிறீர்கள்?

வண்டியை எடுத்துக்கொண்டு பார்க் செல்கிறேன்.  நடக்கிறேன்.  கூடவே சந்தியா நடராஜன் வருவார்.  இருவரும் ஒருவரை ஒருவர் கலாட்டா செய்து கொண்டிருப்போம். பின் சரவணபவன் ஓட்டலுக்குச் சென்று ஒரு சாம்பர் வடை ஒரு காப்பி வாங்கி பாதி பாதி சாப்பிடுவோம்.

13. 500, 1000 நோட்டுகள் உங்களிடம் இல்லையா?

கொஞ்சமாக இருந்தது. வங்கியில் கட்டிவிட்டேன்.  போன மாதம் எனக்கு செலவு கூட அதிகம் ஆகவில்லை.

14. அப்பா எப்படி இருக்கிறார்?

அப்படியே இருக்கிறார்.  கடந்த ஒரு வருடமாக படுத்தப் படுக்கையாக இருக்கிறார்.  பாலகுமாரன் தினமலர் தீபாவளி மலரில் அவர் அம்மாவிற்குக் கடிதம் எழுதியிருந்தார்.  நான் அப்பாவிற்கு அதுமாதிரி கடிதம் எழுத யோசனை செய்கிறேன்.

15 இந்த முறை புத்தகக் கண்காட்சிக்கு யார் உதவி செய்வார்கள்?

என்னைச் சுற்றி விரல்விட்டு எண்ணக் கூடிய நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள்.  அவர்கள் உதவி செய்வார்கள்.

16. விருட்சம் வெளியீடாகக் கொண்டு வரும் புத்தகங்களுக்கு பணத்திற்கு எங்கே போவீர்கள்?

என் பென்சன் பணத்திலிருந்து புத்தகம் கொண்டு வருகிறேன்.  


2.12.16

புகைப்படம் எடுப்பது என் வழக்கம்

              

அழகியசிங்கர்


ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியின்போது புகைப்படம் எடுப்பது என் வழக்கம்.  என்னுடைய புத்தக ஸ்டாலுக்கு வரும் நண்பர்களை நான் புகைப்படம் எடுத்து அதை ஆல்பமாக தயாரிப்பேன்.  சிலசமயம் அபூர்வமாக சில படைப்பாளிகள் கலந்து கொள்வார்கள். 2008ஆம் ஆண்டு நடந்த புத்தகக் காட்சியின்போது இன்குலாப், ஈரோடு தமிழன்பன் என் ஸ்டாலுக்கு வந்திருந்தார்கள்.  என்னால் நம்ப முடியவில்லை.  பொதுவாக புத்தகக் கண்காட்சிதான் பலரை சந்திக்க வழி வகுக்கும்.  

அப்போது நான் புதியதாகக் கொண்டு வந்த மழைக் குடை நாட்கள் என்ற கோ கண்ணன் கவிதைப் புத்தகத்தை காட்டியபடி இன்குலாப் புகைப்படத்திற்குக் காட்சி தருகிறார்.  பக்கத்தில் ஈரோடு தமிழன்பன், பார்வையற்ற கோ கண்ணன் என்கிற படைப்பாளி.  இதை அபூர்வமான நிகழ்ச்சியாகக் கருதுகிறேன்.  

1.12.16

மனதுக்குப் பிடித்த கவிதைகள் -47

அழகியசிங்கர்


 கடைசி பக்கத்தை நிரப்ப


தமிழ்மணவாளன்

கவிதைகளாலான புத்தகத்தின்
காலியாயிருக்குமிக்
கடைசி பக்கத்திற்காக
கவிதை கேட்கிறார்கள்

யாரிடம் கேட்டால்
மழை பெய்யும் மேகம்

யாரின் வேண்டுகோளுக்கு
தலையசைக்கும் மரங்கள்
காற்றடித்து.

வேண்டும் எனில் இயலுமோ
கவிதை.

ஆயினும்
ஒன்று செய்யலாம்
அடுத்து இயல்பாய்
பெய்யும் மழையை
வீசும் காற்றை
இந்தப் பக்கத்திலிருந்து தொடங்குமாறு.


நன்றி : அலமாரியில் ஓர் இராஜகிரீடம் - கவிதைகள் - தமிழ்மணவாளன் - கோமளவல்லி பதிப்பகம், 18 பத்மாவதி நகர், மாதவரம் பால் பண்ணை, சென்னை 600 051 - பக்கங்கள் : 96 - விலை : 30.00 - வெளிவந்த ஆண்டு : 200030.11.16

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 46

அழகியசிங்கர்  கிளிக்கதை

ப கல்பனாகிளிக்கதை கேட்டான் குழந்தை
சொன்னேன்

எங்கள் வீட்டில் முன்பொரு கிளி இருந்தது
தளிர் போல் மென்மையாய்ü

சிறகு விரித்தால்
பச்சை விசிறி போலிருக்கும்
சில நேரங்களில் பேசும்

வீடு திரும்பும்போது
தோள்களில் அமர்ந்து காதைக் கவ்வும்
தாத்தாவின் மடியிலமர்ந்து
செய்தித்தாள் ஓரத்தைக் கொத்திக் கிழிக்கும்

இடது ஆள்காட்டி விரலில் சுமந்து
வலக்கையில்
வாழைப்பழத்துடன் திரிவான் கடைக்குட்டி

எல்லோரையும் மகிழ்வித்தது
எல்லாம் கிடைத்தது அதற்கு

தங்களுடனேயே இருக்கட்டுமென்று
சிறகு கத்திரித்து
அழகு பார்ப்பர் மாதமொரு முறை

தத்தித் தத்திப் பறந்து
மரக்கிளையில் அமர்ந்த அன்று மட்டும்
அதிகமாய்க் கத்தரித்து ரசித்தனர்
தடுக்கித்தடுக்கி விழுவதை

"அச்சச்சோ....கடைசியில் என்னவாயிற்று?"
பதறினாள் குழந்தை

"எல்லாக் கிளிகளையும் போலவே
அதையும் ஒரு துரதிர்ஷ்ட நாளில்
பூனை பிடித்துக்கொண்டு போனது

பிறகென்ன நடந்ததென்று யாருக்கும் தெரியாது"நன்றி : பார்வையிலிருந்து சொல்லுக்கு - கவிதைகள் - ப கல்பனா - காலக்குறி பதிப்பகம், 18, 2வது தெரு, அழகிரிநகர், வடபழனி, சென்னை 600 026 - பக் : 80 - விலை : ரூ.25 - வெளியான ஆண்டு : டிசம்பர் 1998 

28.11.16

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 45

அழகியசிங்கர்  


உனக்காக என் அன்பே


ழாக் ப்ரெவெர் 


தமிழில்: வெ ஸ்ரீராம்

பறவைகள் சந்தைக்குப் போனேன்
பறவைகள் வாங்கினேன்
உனக்காக
என் அன்பே

மலர்கள் சந்தைக்குப் போனேன்
மலர்கள் வாங்கினேன்
உனக்காக
என் அன்பே

இரும்புச் சாமான்கள் சந்தைக்குப் போனேன்
சங்கிலிகள் வாங்கினேன்
கனமான சங்கிலிகள்
உனக்காக
என் அன்பே

பிறகு அடிமைகள் சந்தைக்குப் போனேன்
உன்னைத் தேடினேன்
ஆனால் உன்னைக் காணவில்லை
என் அன்பே.

நன்றி : சொற்கள் - ழாக் ப்ரெவெர் - தமிழில் வெ ஸ்ரீராம் - வெளியீடு : க்ரியா - அலியான்ஸ் ஃபிரான்சேஸ், - முதல் பதிப்பு : 2000 - விற்பனைக்கு இந்தப் புத்தகம் இல்லை.


மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 44

அழகியசிங்கர்  


 மறு பரிசீலனை


தபசி
கொஞ்சமாகக் குடித்தால்
போதை ஏறமாட்டேன் என்கிறது.

அதிகமகாக் குடித்தால்
மறுநாள் காலை
தலையை வலிக்கிறது.

நண்பர்களோடு குடித்தால்
காசு செலவாகிறது

தனியாகக் குடித்தால்
பழக்கமாகிவிடும் என்கிறார்கள்

காதலிக்கத் தொடங்கும்போது..
கல்யாணம் கூடி வரும்போது..
பிறந்தநாள் இரவன்று..
டிரான்ஸ்ஃபர் ஆகும்போது...

எத்தனை வாய்ப்புகள்
குடிப்பதற்கு.

கள்ளும் சாராயமும்ü
செரிமானத்தைக் குறைக்குமாம்.

பீர் குடித்தால்
தொப்பை விழுமாம்.

ஜின்னுடன்
இளநீர் கலக்க வேண்டும்
என்கிறார்கள்

பிராந்தி, விஸ்கிக்கு
கோலா, பெப்ஸிக்குப் பதில்
தண்ணீர்தான் உசிதமாம்.

குடிக்கும்போது
நொறுக்குத் தீனி வேண்டாம்
என்கிறார்கள்
முறுக்கு, காராபூந்தி, பகோடா இத்யாதி..

வெங்காயம், தக்காளி, வெள்ளரிü
குடலுக்கு நல்லதாம்

எச்சரிக்கை உணர்வு
எல்லாவற்றிலும் அவசியம்தான்

எங்கு குடிக்க வேண்டும்
எப்படிக் குடிக்க வேண்டும்
யாருடன் குடிக்க வேண்டும்
என்றெல்லாம்
தீவிரமாக ஆராயும்
மனதிடம்
ஏன் குடிக்க வேண்டும்
என்று கேட்டால்
ஏதோ
மழுப்பலான விடை சொல்லித்
தப்பிக்கப் பார்க்கிறது


நன்றி : இன்னும் இந்த வாழ்வு - தபசி - கவிதைகள் - யாழ் வெளியீடு, திருக்கோவிலூர் 605 757 - பக்கங்கள் : 76 - விலை : ரூ40 - வெளியான ஆண்டு : ஆகஸ்டு 2000
26.11.16

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 43


அழகியசிங்கர்  


 தீர்வுசி மணி

என்ன செய்வ திந்தக் கையை
என்றேன்.  என்ன செய்வ தென்றால்
என்றான் சாமி.  கைக்கு வேலை
என்றி ருந்தால் பிரச்னை இல்லை.
மற்ற நேரம், நடக்கும் போதும்
நிற்கும் போதும் இந்தக் கைகள்
வெறுந்தோள் முனைத்தொங் கல்.தாங் காத
உறுத்தல் வடிவத் தொல்லை
என்றேன்.  கையைக் காலாக் கென்றான்


நன்றி : இதுவரை - சி. மணி - கவிதைகள் - வெளியீடு : க்ரியா -
முதல் பதிப்பு : அக்டோபர் 1996 - விலை : ரூ.100