Skip to main content

Posts

Showing posts from August, 2018

விருட்சமும் நண்பர்கள் வட்டமும் சேர்ந்து நடத்தும் கூட்டம் - 2

  அழகியசிங்கர்   போன மாதம் விருட்சமும் நண்பர்கள் வட்டமும் சேர்ந்து நடத்திய கூட்டத்தில் ஆர் வெங்கடேஷ் அவர்கள் 'கல்கி இதழில் வளர்ந்த எழுத்தாளர்கள்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.  அந்தப் பேச்சின் ஒளிப்பதிவின் இரண்டாம் பகுதியை இப்போது வெளியிடுகிறேன்.

விருட்சமும் நண்பர்கள் வட்டமும் சேர்ந்து நடத்தும் கூட்டம்

அழகியசிங்கர் போன மாதம் (26.07.2018) விருட்சமும் நண்பர்கள் வட்டமும் சேர்ந்து நடத்திய கூட்டத்தில் ஆர் வெங்கடேஷ் அவர்கள் 'கல்கி இதழில் வளர்ந்த எழுத்தாளர்கள்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.  அந்தப் பேச்சின் ஒளிப்பதிவின் முதல் பகுதியை இப்போது வெளியிடுகிறேன்.             

விருட்சம் இலக்கியச் சந்திப்பு - 41

தலைப்பு : நானும் என் எழுத்தும் சிறப்புரை : அஜயன்பாலா இடம் : கிளை நூலகம், 7 இராகவன் காலனி 3வது தெரு, ஜாபர்கான் பேட்டை, சென்னை (காசி தியேட்டரிலிருந்து வருகிற நேர் தெரு- அசோக்நகர் வரவேண்டும்) தேதி 30.08.2018 (வியாழக்கிழமை) நேரம் மாலை 5.45 க்கு பேசுவோர் குறிப்பு : சிறுகதை ஆசிரியர், சினிமா பற்றி நிறைய புத்தகங்கள் எழுதியிருக்கிறார், சினிமாப் படங்களை இயக்கி உள்ளார் அன்புடன் நண்பர்கள் வட்டம் தொடர்புக்கு : அழகியசிங்கர் - தொலைபேசி எண் : 9444113205

கேட்டாலும் சொல்ல மாட்டேன்.....

அழகியசிங்கர் தினமும் புத்தகக் காட்சி முடித்துவிட்டு வீட்டிற்கு வரும்போது என் மனைவி ஒரு கேள்வி கேட்பார்.  "எவ்வளவு இன்று விற்றது?" இதற்கு என் பதில் மௌனம்...பலத்த மௌனம்.  எங்கே தவறிப் போய்ச் சொல்லி விடுவேனோ என்று பயந்துகொண்டே மௌனமாக இருப்பதைப் பலமாக முயற்சி செய்வேன்.  அதில் நான் வெற்றி அடைந்துவிட்டேன்.  இதுவரை சொல்லவில்லை.  ஆனால் புத்தகக் காட்சியிலிருந்து நான் என்னன்ன புத்தகங்கள் வாங்குகிறேன் என்பதைக் குறிப்பிடுவதில்லை.   ஆனால் அது தெரிந்து விடுகிறது.  என் பையைத் திறந்து பார்த்தால் புத்தகங்கள் இளிக்கத் தொடங்கி விடுகின்றன. ஜென் தத்துவமெல்லாம் எத்தனையோ புத்தகங்களில் நாம் படிக்கிறோம்.  அதையெல்லாம் இது மாதிரியான புத்தகக் காட்சியின்போதுதான் நாம் பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். நம் முன்னால் சாரி சாரியாக நடந்து போவார்கள், ஆனால் உள்ளே வரமாட்டார்கள். இதில் என்ன ஜென் தத்துவம்.  இனிமேல்தான் இருக்கிறது. என் அரங்குக்குள் நுழைந்தால் அரங்கு நிரம்பி வழியும்,  இது தெரிந்துதான் எல்லோரும் பார்த்துக்கொண்டே போகிறார்கள். உள்ளே புத்தகங்கள் இருக்கின்றன.  வெளியே

ஆவலுடன் காத்திருக்கிறேன்

ஆவலுடன் காத்திருக்கிறேன் அழகியசிங்கர் இன்று மாலை 4வது சென்னை புத்தகத் திருவிழாவில் என் கதைப் புத்தகமான அழகியசிங்கர் சிறுகதைகள் முழுத் தொகுப்பு பற்றி முனைவர் ஜெ கங்காதரன் என்பவர் நூல் திறனாய்வு செய்கிறார். 64 சிறுகதைகளும், 7 குறுநாவல்களும், ஒரு நாடகமும், சில சின்னஞ்சிறு கதைகளும் எழுதி உள்ளேன்.  664 பக்கங்கள் கொண்ட முழுத் தொகுதியை என் கதைகளை எல்லோரும் வாசிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் ரூ.300க்குக் கொடுக்கிறேன். ஆரம்ப காலத்திலிருந்து நான் எழுதிய கதைகளின் தொகுப்பு இது.  இன்னும் கூட கதைகள் எழுதிக்கொண்டிருக்கிறேன்.  உதாரணமாக 4வது சென்னை புத்தகத் திருவிழாவை முன் வைத்து நல்லவன் கெட்டவன் என்று கதை எழுத உள்ளேன். என் கதைகளின் முக்கிய அம்சமாக நான் கருதுவது அதிகப் பக்கங்கங்கள் போகாமல் பார்த்துக் கொள்வது.  படிப்பவர்கள் ஒரு சில நிமிடங்களில் என் கதையைப் படித்து முடித்து விடலாம். என்னுடைய 7 குறுநால்கள் இத் தொகுதியில் வெளிவந்துள்ள.  இக் குறுநாவல்கள் தி ஜானகிராமன் குறுநாவல் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டு கணையாழியில் வெளிவந்தவை.  இப்போதெல்லாம் அவ்வளவு பக்கங்கள் கொண

அவ்வளவுதான்

அவ்வளவுதான் அழகியசிங்கர்  என்னிடம் அதிகமாகப் புத்தகங்கள் இருக்கின்றன.  ஒரு புத்தகத்தைப் படித்தவுடன் அடுத்தப் புத்தகம் படிப்பதற்குத் தயாராக  இருக்கிறது.   புத்தகங்கள் அதிகமாக இருக்கின்றன.  படிப்பது குறைவாக இருக்கிறது.   ஒரு புத்தகம் படித்தவுடன் எனக்கு சில தினங்களுக்குள் எதாவது குறிப்புகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.  படித்தப் புத்தகத்தைப் பற்றி கொஞ்சமாவது சொல்லவேண்டும். இதையெல்லாம் செய்யாவிட்டால் நான் படித்தது மறந்து போய்விடும். இந்தக் காரணத்திற்காக நான் முகநூலில் புத்தகங்கள் பற்றி எழுதி விடுகிறேன்.  என் பிளாகிலும் பதிவு செய்து விடுகிறேன்.  கடந்த இரண்டு மூன்று வருடங்களாக இதைச் செய்கிறேன். இதையெல்லாம் தொகுத்து நீங்களும் படிக்கலாம் என்ற பெயரில் இரண்டு தொகுதிகளாகக் கொண்டு வந்துள்ளேன். இரண்டு தொகுதிகளிலும் 41 புத்தகங்களைப் பற்றி எழுதி உள்ளேன்.  6000 பக்கங்கள் வரை படித்திருக்கிறேன். என் ஆரம்ப காலத்தில் நான் பல புத்தகங்களில் கோடுகள் போட்டிருப்பேன்.  இப்போது கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது.  என்ன காரணத்திற்காக கோடு போட்டேன் என்பது எனக்

ஒரு மேதையின் ஆளுமை

அழகியசிங்கர் புதிய நம்பிக்கை என்ற பத்திரிகையைப் பற்றி தெரியுமா? தெரிவதற்கு வாய்ப்பில்லை. புதிய நம்பிக்கையின் ஆசிரியர் பொன் விஜயன். அவர் புதிய நம்பிக்கை என்ற பத்திரிகையுடன் ஒரு புத்தகம் கொண்டு வந்தார். அந்தப் புத்தகத்தின் பெயர் 'ஒரு மேதையின் ஆளுமை.' சத்யஜித்ராயைப் பற்றி கதைகள், கட்டுரைகள், பின் அபுர் சன்ஸôர் என்ற திரைக்கதையின் தமிழாக்கம் என்றெல்லாம் ராயல் அளவில் கொண்டு வந்தார். பொன் விஜயன் தன் வீட்டில் ஒரு பகுதியில் லெட்டர் பிரஸ் வைத்திருந்தார். அதுவும் வாடகை வீடு. அங்கயே புத்தகம் தயாராகும். அந்த பிரஸ்ஸில் பணிபுரிபவர்கள் பொன் விஜயனைவிட பண வசதிப் படைத்தவர்கள். பொன் விஜயன் வாரம் ஒரு முறை சனிக்கிழமை அவர்களுக்குக் கூலி கொடுப்பதற்குத் தடுமாறுவார். அவர் மனைவியின் நகைகள், அல்லது வெள்ளிப் பாத்திரங்களை அடகு வைப்பார். அவரே அச்சுக் கோர்த்த ஃபாரங்களை சைக்கிளில் கட்டி எடுத்துக்கொண்டு போய் அச்சடிப்பார். கடுமையான உழைப்பாளி. அவரிடம் என் விருட்சம் இதழ்களையும் அச்சடிக்கக் கொடுத்திருக்கிறேன். ஒரு முறை சைக்கிளில் பாரங

உங்களுக்குப் பிடித்திருந்தால் வாங்கிக்கொள்ளவும்

அழகியசிங்கர் என்னுடைய  கதைகள் எல்லாம் சேர்த்து 664 பக்கங்கள் கொண்ட புத்தகமாக அழகியசிங்கர் சிறுகதைகள் முழுத்தொகுப்பு ஒன்று கொண்டு வந்துள்ளேன்.   இப் புத்தகம் வெளிவந்தபிறகு இதன் விலையை பாதியாகக் குறைத்து ரூ.300க்குக் கொடுத்தேன்.   பொதுவாக நான் வங்கிக் பணியில் சேர்வதற்கு முன்பிலிருந்து வங்கிப் பணியை முடித்து ஓய்வுப்பெற்றபின்பும் நான் எழுதிய கதைகளை (64 கதைகள், 7 குறுநாவல்கள், ஒரு நாடகம், சில சின்னஞ்சிறு கதைகள்) தொகுத்துள்ளேன். ராயப்பேட்டாவில் நடைபெறும் புத்தகத் திருவிழாவிலும் இப் புத்தகத்தின் விலை ரூ.300தான்.  முன்பு பணம் கட்டிய இருவருக்கு நான் புத்தகம் அனுப்ப வேண்டும்.  ஆனால் அவர்களுடைய தொலைப்பேசி எண் என்னிடம் இல்லை.  எப்படித் தொடர்பு கொள்வது என்பது தெரியவில்லை.  புக்கிஸ் என்ற பெயரில் ஒரு பரங்கிமலையில் அற்புதமான புத்தகக் கடை வைத்திருக்கிறார்.  அவருடைய தொலைப்பேசி எண் வேண்டும். அரங்கு எண் 11 வருபவர்கள் என் கதைப் புத்தகத்திலிருந்து என் கதைப் புத்தகத்தை எடுத்து ஒரு கதையைப் படிக்கவும்.  உங்களுக்குப் பிடித்திருந்தால் வாங்கிக்கொள்ளவும். வேண்டாம் என்று தோன்றினால

விருட்சத்தில் வெளிவந்த வாஜ்பேயி ஒரு கவிதை

அழகியசிங்கர் ஆரம்பத்தில் விருட்சம் இதழில் மொழிப்பெயர்ப்பு கவிதைகள் அதிகமாக வரும்.  பலர் பல மொழிகளிலிருந்து மொழிப்பெயர்த்து விருட்சத்திற்கு அளித்துள்ளார்கள். ü முன்னாள் பிரதம மந்திரி வாஜ்பேயி கவிதைகளை சௌரி அவர்கள் ஹிந்தியிலிருந்து  நேரிடையாக மொழிபெயர்த்து அனுப்பியிருந்தார்.  அதுவரை அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள் கவிதைகள் எழுதுவார்கள் என்பதை நான் நம்பாமல் இருந்தேன். வாஜ்பேயி கவிதையைப் படித்ததும் அசந்து விட்டேன்  அக் கவிதையை நான் திரும்பவும் இங்கு அளிக்க விரும்புகிறேன். 'உயரத்தில்" என்ற வாஜ் பேயி இந்தக் கவிதை அக்டோபர்-டிசம்பர் 1991ஆம் ஆண்டு பிரசுரமாகியிருந்தது.  அதை இங்கு அளிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். உயரத்தில் தமிழில் - செளரி மகோன்னத இமயமலை முகட்டில் மரம் செடி கொடிகள் வேரூன்றுவதில்லை சவச் செல்லாபோல் சரிந்து பரவிய சாவைப்போல் குளிர்ந்தடங்கிய பனிப்படலம் மட்டும் படிந்து பரவிக்கிடக்கும்; அந்த உன்னத உயரம் நீரைப் பனிக்கட்டியாக்கும் நிமிர்ந்து நோக்குபவர் உள்ளம் குறுகும் பயபக்தியுடன் பணிவு கொள்ள உரிமையுடன் உத்தரவிடும். மலையேறிகளை வரவேற்க

சென்னை புத்தகத் திருவிழாவில் அரங்கு எண் 11....

அழகியசிங்கர் 4வது சென்னை புத்தகத் திருவிழா ஒய்எம்சிஏ ராயப்பேட்டை மைதானத்தில் நாளையிலிருந்து துவங்குகிறது. நேற்று ஸ்டால் எண் என்ன கிடைக்குமென்று அமர்ந்திருந்தேன். முக்கியமாக முதல் வரிசைதான் கிடைக்குமென்று என் மனதில் பட்டது. ஆனால் முதல் வரிசையில் ஒன்று கிடைத்தால் நன்றாக இருக்குமென்று நினைத்தேன். இல்லாவிட்டால் 5 கிடைத்தால் இன்னும் நன்றாக இருக்குமென்று தோன்றியது. ஆனால் 11ஆம் எண் கிடைத்தது. இது ஒருவிதத்தில் நல்லது. ஏன் எனில் வருபவர்கள் நடந்து வரும்போது ஒன்றை விட்டுவிடுவார்கள். 11 வரும்போது மேலே பார்ப்பார்கள். விருட்சம் வெளியீடு என்று இருந்தால், உள்ளே நுழைந்தாலும் நுழைவார்கள். ஆனால் நாளை மதியம்தான் எல்லாப் புத்தகங்களையும் எடுத்துக்கொண்டு போகப் போகிறேன். அதாவது கிட்டத்தட்ட 11 அல்லது 12 மணி அளவில். 8 அட்டைப் பெட்டிகள் தயாரித்து விட்டேன். எல்லாப் புத்தகங்களிலும் ஐந்து விதம் அடுக்கி விட்டேன். மொத்தம் 400 புத்தகங்கள்தான். சந்தியா, கிழக்கு, ஆனந்தவிகடன், நக்கீரன் சாகித்திய அக்காதெமி புத்தகங்களை வாங்கி விற்க உள்ளேன். நான் பதிப்பாளன் கம் வ

கூட்டத்திற்கு வந்திருந்தவர்களுக்கு நன்றி...

அழகியசிங்கர் நேற்று பெய்த மழையில் காலையில் கூட்டம் நடக்குமா என்ற சந்தேனம் என்னிடம் ஒட்டிக்கொண்டிருந்தது.  10.30 மணிக்குக் கிளம்பும்போது மழை விட்டிருந்தது.  எல்லோரும 11 மணிக்குக் கூடினோம்.  கலந்துகொண்டவர்கள் பலரும் உற்சாகமாக இருந்தார்கள்.   உப்புக்கணக்கு என்ற நாவலைப் பற்றி பலரும் பேசினோம்.  சிறப்பாக புனையப்பட்ட வரலாற்று நாவல்.  கூட்டத்தில் நடந்த விவாதத்தை உற்று நோக்கினால் நாம் காந்தியைப் பற்றி மோசமாக எதாவது சொல்லிவிடுவோமா என்று தோன்றியது. கூட்டம் இனிதே நடந்து முடிந்தது.   கூட்டத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் நன்றி.   -

சாதாரண மனிதர்கள் நடத்தும் சாதாரண கூட்டம்

சாதாரண மனிதர்கள் நடத்தும் சாதாரண கூட்டம் அழகியசிங்கர் சாதாரண மனிதன் என்ற தலைப்பில் எழுத்தாளர் நரசய்யா மணிக்கொடி எழுத்தாளர் சிட்டியின் வாழ்க்கை வரலாற்றை எழுதியிருந்தார். உண்மையில் சிட்டி சாதாரண மனிதர் அல்ல. நாளை நடைபெறும் விருட்சம் கூட்டம் குவிகம் இல்லத்தில் நடைபெறுகிறது. ஒரு புத்தக வெளியீட்டுக் கூட்டம். முக்கியமாக சுதந்திர தினத்தன்று நடைபெறுகிறது. அப் புத்தகத்தின் பெயர் உப்புக்கணக்கு. இது ஒரு நாவல். இதை எழுதியவர் வித்யா சுப்ரமணியன். விருட்சம் வெளியீடாக இந் நாவல் வெளிவந்துள்ளது. 342 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தின் விலை ரூ.300. ஆனால் நாளை வாங்குபவர்களுக்கு இப் புத்தகம் ரூ.200க்குக் கிடைக்கும். எழுத்தாளர் வித்யா சுப்ரமணியம் நேரிடையாகவே கையெழுத்துப் போட்டு இப் புத்தகத்தைத் தர உள்ளார். கூட்டத்திற்கு வந்திருந்து சிறப்பு செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன். இது சாதாரண மனிதர்கள் நடத்தும் கூட்டம். எல்லோரும் வர வேண்டும். கூட்டம் நடக்குமிடம் : Kuvigam Illam Flat 6, 3rd Floor, A Wing, Silver Park Apartments, 24 Thanikachalam Road, T Nagar

திருவல்லிக்கேணி பிளாட்பாரத்தில் வாங்கிய புத்தகங்கள்

அழகியசிங்கர் நான் ஒவ்வொரு முறை திருவல்லிக்கேணி செல்லும்போது அங்கே உள்ள பிளாட்பார கடைகளுக்குச் செல்லாமல் இருக்க மாட்டேன்.   கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாக நான் திருவல்லிக்கேணி பிளாட்பார கடைகளுக்குப் போய்க் கொண்டிருக்கிறேன்.  முன்பு அடிக்கடி போவேன்.  இப்போதெல்லாம் அந்தப் பக்கம் போக நேர்ந்தால் மட்டும் போகிறேன்.  இங்கே உள்ள பெரும்பாலான பிளாட்பார கடைகளில் கல்லூரி புத்தகங்கள்தான் இருக்கும்.  ஆனால் ஒருசில கடைகளில் தமிழ் புத்தகங்களும் ஆங்கிலப் புத்தகங்களும் கிடைக்கும்.   குறிப்பாக ஒரு கடையில் பாதி பகுதி ஆங்கிலப் புத்தகங்களும் மற்றொரு பாதிப்பகுதி தமிழ்ப் புத்தகங்களும் கிடைக்கும்.  சில புத்தகக் கடைகளில் புத்தகங்களின் விலையை புதுப் புத்தகம் வாங்கும் விலைக்கு விற்பார்கள்.   நான் செல்லும் இரண்டு கடைகளில் தமிழ் புத்தகங்கள் ரூ.5க்கும் ஆங்கிலப் புத்தகங்கள் ரூ.10க்கும் முன்பு கிடைத்துக்கொண்டிருந்தது.  இப்போது ஆங்கிலப் புத்தகம் ரூ.20க்கும் தமிழ் புத்தகம் ரூ.10க்கும் விற்றுக்கொண்டிருக்கிறார்கள். இங்கே கொட்டிக்கிடக்கும் புத்தகங்களைப் பார்க்கும்போது நமக்கே மலைப்பாக இருக்கும்.  

தமிழ் சினிமாவை விட தமிழ்ச் சிறுகதை சிறந்தது

அழகியசிங்கர் நேற்று இரவு நானும் என் நெருங்கிய உறவினரும் கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 ஐப் பார்த்தோம். என் நெருங்கிய உறவினர் என்னை விட இளைஞர்.  அவருக்கு கமல், ரஜினி, அஜித் போன்ற நடிகர்களிடம் அலாதியான அபிமானம் உண்டு.   நான் தியேட்டரில் போய் சினிமாப் பார்ப்பதைப் பெரிய விஷயமாக நினைத்துக்கொண்டேன்.  கடந்த சில ஆண்டுகளாக நான் தியேட்டரில் சினிமா பார்ப்பதில்லை.  வெறுப்பு என்பதை விட என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் நான் இருப்பதாக நான் தோன்றும். எனக்கும் கமலுக்கும் ஒரே வயது.  என் உறவினர் இதைச் சுட்டிக்காட்டும்போது, உண்மை என்று ஆமோதித்தேன்.   ஆனால் கமலின் உருவம் திரையில் வேறு விதமாகத் தோன்றியது. இந்தப் படம் ஆரம்பத்திலிருந்து எனக்குச் சற்றும் புரியவில்லை.  அவர்கள் பேசும் வசனங்கள் செயற்கையாக இருப்பதாகப் பட்டது.  ஒரு தமிழ் படத்தை முதன் முறையாகப் புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தது இதுவாகத்தான் இருந்தது.  இத்தனைக்கும் நான் விஸ்வரூபம் 1 ஐப் பார்த்துவிட்டுத்தான் இதைப் பார்த்தேன். எப்படி இந்தப் படம் சற்றும் புரியாமல் ஆனால் வன்முறையின் லட்சணமாகப் போய்க்கொண்டிருக்கிறது என்பதைப் பற்ற

திருக்குறள் சிந்தனை 27

அழகியசிங்கர் திருக்குறளை ஒவ்வொன்றாக எடுத்துப் படிக்க வேண்டுமென்ற என் எண்ணம் என்னை அறியாமலேயே தவடுபொடியாகிவிட்டது.  கவனம் வேறு எங்கோ போக ஆரம்பத்துவிட்டது.  ஆனாலும் திருக்குறள் ஞாபகம் வந்து விடுகிறது.  இதோ ஒரு குறள். சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின் வகைதெரிவான் கட்டே உலகு இந்த இடத்தில் வகைதெரிவான் என்ற வார்த்தை சிறப்பாக இருப்பதாகப் படுகிறது.  சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐந்து உணர்ச்சிகளையும் புரிந்துகொண்டு, அறிந்து அவற்றை வெல்லத் தெரிந்தவனாக இருக்கவேண்டும்.  அப்படிப்பட்டவர்களைத்தான் அறிவுடையோர் போற்றுவார்கள்.  இதில் ஓசை என்ற ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள் இதைப் பூரணமாக உணருபவர்கள் பக்கத்தில் வண்டி வருவதைக் கூட சத்தத்தால் உணர்ந்து அது வருகிற பாதையியிருந்து விலகிப் போவார்கள்.   இந்த ஓசையைப் பற்றி நான் ஒரு கவிதை எழுதியிருக்கிறேன் : கவிதையின் பெயர், üஒலிபெருக்கியின் அவலம்.ý  ஒருமுறை பிள்ளையார் சதூர்த்தி அன்று, ஏகப்பட்ட சத்தம்.  ஒலிபெருக்கியின் அலறல்.  ஒரு நிமிடம் கூட வீட்டில் நிம்மதியாக இருக்க முடியவில்லை.  அது குறித்துதான் ஒரு கவிதை எழுதி உள்

இதோ முப்பது........

அழகியசிங்கர் வழக்கம்போல சீத்தாலட்சுமி அபார்ட்மெண்டிலிருந்து கிளம்பினேன்.  பிளஷர் வண்டியில்.  அப்போது ஒரு குரல் கேட்டது.  'இதோ முப்பது' என்று.  'இதோ முப்பதா' என்னவென்ற புரியவில்லையே என்று நினைத்துக் கொண்டேன்.  கோவிந்தன் ரோடைத் தாண்டிக் கொஞ்ச தூரம் போனேன்.  திரும்பவும் குரல் : இதோ முப்பது.  ஏய் சும்மாயிரு என்று என்னைக்  கடிந்து கொண்டேன்.  ஆனால் இதோ முப்பது என்ற வார்த்தை தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது.   என் நண்பருடன் தினமும் ஒரு பூங்காவில் வாக் செய்வேன். அவரைப் போய்ப் பார்த்தேன்.  அவரும் என்னுடன் வாக் செய்ய கிளம்பினார்.  'இதோ முப்பது' என்று குரல் கேட்டது.  நண்பரிடம் கேட்டேன்,  'உங்களுக்கு எதாவது குரல் கேட்டதா?' என்று. 'இல்லையே?' என்று சொன்னார். நானும் நண்பரும் தினமும் வாக் செய்வதை ஒரு கடமையாக வைத்துக்கொண்டிருக்கிறோம்.  ஒருவருக்கொருவர் உரசிக் கொள்ளும் இடமும் கூட.  நான் எதாவது சொல்வேன்.  அவர் எதாவது சொல்வார் இரண்டு பேரும் சண்டைப் போடுவோம்.   கொஞ்சதூரம் வாக் பண்ணிக்கொண்டு இருக்கும்போது, அவரும் சொன்னார்.  'ஆமாம