Skip to main content

Posts

Showing posts from July, 2017

நான் யார்?......................

அழகியசிங்கர்மிகக் குறைவான இடத்தில் புத்தகம் எழுதியவரின் புத்தகத்தை அறிமுகப்படுத்துவதே என் நோக்கம்.  ஸ்ரீ ரமண அருள் வெள்ளம் என்ற புத்தகத்தை அறிமுகப்படுத்தி ஒரு சிறிய கூட்டம் ஏற்பாடு செய்தேன்.  பொதுவாக இக் கூட்டத்திற்கு வருபவர்கள் புத்தகக் கண்காட்சிக்கு வருபவர்கள்தான்.  அல்லது கூட்டத்திற்கென்று நமக்குத் தெரிந்தவர்களைக் கூப்பிட்டு கூட்டம் நடத்துவது. அந்த முறைபடி 24.072017 (அதாவது திங்கள் கிழமை) மாலை 6 மணிக்கு  ஸ்ரீ ரமண அருள் வெள்ளம் புத்தகத்திற்கு ஏற்பாடு செய்தோம்.அப் புத்தகத்தை உருவாக்கிய ஸ்ரீதர்-சாமா கலந்து கொண்டார். அதேபோல் ரமணர் சமாஜிலீந்து வைத்தியநாதன், ஸ்ரீராம் அவர்கள் கலந்து கொண்டார்கள்.  வைத்தியநாதன் சின்ன வயதில் ரமணரைப் பார்த்திருக்கிறார்.  ரமண சமாஜ்ஜை மேற்கு மாம்பலத்தில் திறமையாக நடத்திக்கொண்டு வருகிறார்.   வாழ்க்கையில் எதிர்பாராத சோகம் ஏற்பட்டுவிட அதைச் சரி செய்ய திருவண்ணாமலை ரமண ஆச்சிரமத்திற்கு பலமுறை சென்று வந்ததாக ஸ்ரீதர் சாமா குறிப்பிட்டார். அவர் ஒருவிதத்தில் என் ஒன்றுவிட்ட சகோதரர்.  அவரைத் திரும்பவும் எழுதுவதற்குத் தூண்டுதலாக இருக்க வேண்டுமென்று ஸ்ரீ ரமண அருள் வெள்ளம் புத்தகம…

நேற்று நடந்த கூட்டம்

அழகியசிங்கர் 


நேற்று நடந்த கூட்டத்தைப் பற்றி இன்றும் இன்றைய கூட்டத்தைப் பற்றி நாளையும் சொல்வதாக உள்ளேன்.  எதிர்பாராதவிதமாக குவிகம் வெளியீடாக கிருபானந்தன் ஒரு புத்தகம் கொண்டு வந்துள்ளார்.  அந்தப் புத்தகம் பெயர் சில படைப்பாளிகள். 112 பக்கங்கள் கொண்ட இப் புத்தகம் விலை : ரூ.75. அப் புத்தகத்தின் ஆசிரியர் பெயர் எஸ். கே. என்.  அவர் யாருமில்லை கிருபாகரன்தான்.  ஏன் இப்படியொரு பெயரில் அவர் ஒரு புத்தகம் கொண்டு வந்தார் என்பது தெரியவில்லை.   இந்தப் புத்தகத்தை முழுவதும் தயாரித்தவர் கிருபாகரன்.  முதலில் ஒரு பெரிய பிரசுராலயத்திற்குப் பணத்தைக் கொடுத்து இவருடைய நண்பர்கள் சிலர் புத்தகம் அடிப்பது வழக்கம்.  அந்த அபத்தத்திலிருந்து மாறி தானே அவருடைய புத்தகத்தைக் கொண்டு வந்துள்ளார் கிருபாகரன்.   ஒரு சினிமா படத்தைத் தயாரிப்பவர்கள், நடிப்பதிலிருந்து டைரக்ட் செய்வது வரை தானே ஈடுபடுவதுபோல், கிருபாகரன் அவரே ஒரு புத்தகத்தைத் தயாரித்துள்ளார்.  அவருடைய துணிச்சலுக்கு வாழ்த்துகள். 112 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தில் 24 எழுத்தாளர்களின் சிறுகதைகளை எடுத்துக் கொண்டு ஒரு ரசிகரின் பார்வையில் எழுதியிருக்கிறார்.  அப்படி எழுதிக்க…

தொலைந்து போனால் கவலை இல்லை. ..

தொலைந்து போனால் கவலை இல்லை. ..
அழகியசிங்கர்
1981ஆம் ஆண்டு கவனம் இதழ் வெளிவந்தபோது அதைப் பெறுவதற்காக மேற்கு மாம்பலத்திலிருந்து திருவல்லிக்கேணிக்கு ஆர் ராஜகோபாலன் விட்டிற்குச் சென்று வாங்கினேன்.  கவனம் இதழ் குறித்து கணையாழியில் விளம்பரம் வந்தது. வாங்கியதோடு இல்லாமல் சந்தாவும் கட்டினேன்.   எந்தச் சிறுபத்திரிகைக்கும் உள்ள பிரச்சினை.  விநியோகப் பிரச்சினை. சரியான இலக்கிய ஆர்வலர்களுக்குப் போய்ச் சேர என்ன வழி என்பது தெரியாது.  உண்மையில் கவனம் இதழ்கள் ஏழு வரை கொண்டு வந்ததே பெரிய விஷயமாக எனக்குத் தோன்றுகிறது. கவனம் இதழ்களின் தொகுப்பாக ஆறு இதழ்களை நான் பைன்ட் செய்து வைத்திருந்தேன்.  காலப்போக்கில் ஏழாவது இதழ் இருந்ததே எனக்கு மறந்து போய்விட்டது.  ஆத்மாநாம் கவிதைக்காக கவனம் இதழைப் பார்க்க கல்யாணராமன் வந்திருந்தார்.  அப்போதுதான் தெரிந்தது ஏழாவது இதழ் இருப்பதாக.  பின் இந்த ஏழாவது இதழ் கிடைப்பதற்காக காத்திருந்தேன்.  நான் சேகரித்து வைத்திருந்த பத்திரிகைகளில் தேடிப் பார்த்தேன்.  கவனம் ஏழாவது இதழ் கிடைத்து விட்டது.  ஏதோ புதையலை கண்டு பிடித்த நிலையில் நான் இருந்தேன்.  இந்த ஏழு இதழ்களை மட்டும் வைத்திருந்தால், அ…

வந்து விட்டது கவனம் இதழ்களின் தொகுப்பு

அழகியசிங்கர்நான் குறிப்பிட்டபடி 3 புத்தகங்ள் வெளிவந்து விட்டன.  இன்னும் ஒரு புத்தகம் அடுத்த வாரம் வர உள்ளது.  மூன்று புத்தகங்களில் ஒரு புத்தகம் என்னவென்று சொல்லப் போவதில்லை.  சொல்லாத புத்தகம் வேள்டுமி என்பவர் ஸ்டால் எண் 12ல் வந்து வாங்கிக் கொள்ளவும்.  ஒரு புத்தகத்தின் பெயர் கவனம் இதழ்களின் தொகுப்பு.  ஞானக்கூத்தன் ஆசிரியராக இருந்த கவனம் இதழ் 1981 மார்ச்சு மாதம் வெளிவந்தது.  கிட்டத்தட்ட ஏழு இதழ்களின் தொகுப்பை ஒரே புத்தகமாகக் கொண்டு வந்துள்ளேன். நகுலன் குருúக்ஷத்ரம் மாதிரி கவனம் இதழ்களின் ஏழையும் தெபகுத்து புத்தகமாகக் கொண்டு வந்துள்ளேன். 19.07.2017அன்று நான் எழுதிய தொகுப்பாளர் உரையை அப்படியே தருகிறேன் : ஞானக்கூத்தன் ஆசிரியர் பொறுப்பில் üகவனம்ý என்ற பத்திரிகை மார்ச் மாதம்  1981 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு மாதமும் வந்து கொண்டிருந்தது.   ஜøன் 1981வரை மாதம் ஒருமுறை என்று தொடரந்து 4 இதழ்களாக வந்து கொண்டிருந்த பத்திரிகை 5வது இதழ் ஜøலை மாதத்திற்குப் பதிலாக ஆகஸ்ட் 1981ல் வந்தது.  6வது இதழ் ஒரே தாவலாக ஜனவரி 1982ல் தாவிவிட்டது.   அதேபோல் மார்ச் மாதம் 7வது இதழூடன்  அதாவது 1982 ஆம் ஆண்டு  கவனம் பத்திரிகை …

அற்றம் காக்கும் கருவி

மயிலாடுதுறையில் இருக்கும் நண்பர் பிரபு இலக்கியத்தில் ரொம்ப ஆர்வம் உள்ளவர்.  புத்தகங்களைப் படிப்பது அவற்றைப் பற்றி பேசுவது அவர் பொழுதுபோக்கு.  டூவீலரில் இந்தியா முழுவதும் பல இடங்களுக்குச் சுற்றிப் பார்க்கும் துணிச்சல் மிக்கவர்.  அப்படி சுற்றிப் பார்க்கும் அனுபவத்தை கட்டுரைகளாக எழுதி உள்ளார்.  சுற்றிப் பார்க்கும் இடங்களுக்கு அவர் செல்லும்போது, காமெரா, வாய்ஸ் ரெக்கார்டர் எடுத்துக்கொண்டு போக மாட்டார்.  பின் ஒரு இடத்துக்குப் போய்விட்டு வந்து பல நாட்கள் கழித்து ஞாபகத்திலிருந்து ஊரைப் பற்றிய அனுபவங்களை எழுதுவார்.  அசாத்தியமான ஞாபகசக்தி உள்ளவர். சமீபத்தில் கட்டுரைகள் எழுதி வந்தவர், கவிதைகளையும் எழுதுகிறார்.  அவர் முயற்சியை நான் எப்போதும் ஊக்கப்படுத்துவேன். பலருடைய எழுத்துக்களை வியந்து பாராட்டுவார் (இன்றெல்லாம் ஒரு எழுத்தாளரை யாராவது பாராட்டுகிறார் என்றால், அப்படிப்பட்ட நபர் எங்கே எங்கே என்று தேட வேண்டி உள்ளது.) கவிதைகளை எழுதிக்கொண்டு வருபவர், நாவல்கள், சிறுகதைகளை எழுதவும் தயாராகி விடுவார் என்று நினைக்கிறேன்.
அவர் 'நான் மலாலா' என்ற புத்தகத்தைப் படித்துவிட்டு எழுதிய கட்டுரையை இங்கு …

ஸ்ரீ ரமண அருள் வெள்ளம் என்ற புத்தகம்

அழகியசிங்கர்


இந்த முறை முதன் முதலாக சென்னை புத்தகத் திருவிழாவில் விருட்சமும் கலந்து கொள்கிறது.  ஸ்டால் எண் 12.  ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாகக் கலந்து கொள்கிறேன்.  ஒரு முறை கலந்து கொண்டு வந்தாலே போதும் போதுமென்று ஆகிவிடும்.  11 நாட்கள்தான் என்ன ஆகிவிடப் போகிறது என்று கலந்து கொள்கிறேன்.  புத்தகக் காட்சிக்காக 4 புத்தகங்கள் தயாரித்து விட்டேன்.  அதில் 1 புத்தகம் அச்சாகி வந்து விட்டது.  மற்ற 3 புத்தகங்கள் கட்டாயம் அச்சாகி வருமென்று நம்பிக்கை இருக்கிறது.  
ஸ்ரீ ரமண அருள் வெள்ளம் என்ற புத்தகம் தயாரிக்கப்பட்டு விட்டது.  இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் ஸ்ரீதர்-சாமா.  அவர் என் ஒன்றுவிட்ட சகோதரர்.  கதை கவிதை கட்டுரை என்று எழுதிக்கொண்டு வந்தவருக்கு ஆர்வமில்லாமல் போய்விட்டது.  அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு சோகமான நிகழ்ச்சி அவரைப் பின் தள்ளி விட்டது.  அவர் வாசிப்பதெல்லாம் ஆன்மிகப் புத்தகங்களாகப் போய்விட்டது. 
ஆன்மிக விஷயங்களில் ரொம்பவும் ஈடுபட்டால் அதுவும் குறிப்பாக எழுதுபவர்கள் ஈடுபட்டால் எழுத வேண்டுமென்ற எண்ணத்தை ஸ்வாஹா செய்துவிடும்.  எனக்குத் தெரிந்து ஒரு கவிஞர் இதிலிருந்து ரொம்பவும் விலகிப் போய்விட்டார…

ஞானக்கூத்தனின் படைப்புலகம் - 5

அழகியசிங்கர்
பொதுவாக ஞானக்கூத்தன் கவிதைகளில் சமூக அக்கறை, தத்துவார்த்த சிந்தனை என்றெல்லாம் உண்டு.  எல்லாக் கவிதைகளிலும் அவர் எள்ளல் உணர்வோடு கிண்டலடித்து எழுதி உள்ளார்.  விடுமுறை தரும் பூதம் என்ற கவிதையை எடுத்துக்கொண்டால், அதன் எள்ளல் தன்மை நம்மை ஆச்சரியப்படுத்தும்.  ஞாயிறு தோறும் தலைமறை வாகும் வேலை என்னும் ஒரு பூதம் என்கிறார். எள்ளல் தன்மையுடன் ஆரம்பிக்கும் இக் கவிதை சற்று கடுமையாகப் போய் முடிகிறது.  அவருக்கு பணிபுரிவது ஒரு கசப்பான அனுபவமாக இருந்திருக்கிறது.  ஞானக்கூத்தன் எப்படியெல்லாம் கற்பனை செய்து கவிதை எழுதுவார் என்பதை யாராலும் ஊகிக்க முடியாது.  உதாரணமாக சில கோரிக்கைகள் என்ற கவிதையைப் படித்தால்  முதலில் இப்படி ஆரம்பிக்கிறார் கட்டப் போகும் மாளிகை எனக்குத்தான் என்கிறாய் என்று.  பின் முடிக்கும்போது இப்படி சொல்கிறார். இப்போதைக் கொன்று சொல்கிறேன்.  பொத்துப் பொத்தென்று நம்பிக்கை மூட்டைகளை இப்படித் தட்டாதே மாவு பறக்கிறது பார்வைப் பிரதேசத்தில் என்கிறார். அவருடைய வாழ்க்கை மிகச் சாதாரண வாழ்க்கை. இருப்பதற்கு சொந்த இடம் கூட இல்லாமல் வாழ்ந்த வாழ்க்கை.  ஆனால் கட்டப் போகும் மாளிகையைப் பற்றி வேண்…

ஞானக்கூத்தனின் படைப்புலகம் - 4

அழகியசிங்கர்


சூரியனுக்குப் பின் பக்கம் என்ற பெயரில் ஞானக்கூத்தனின் கவிதைத் தொகுப்பு ழ வெளியீடாக 1980 ஆம் ஆண்டு வெளிவந்தது. இத் தொகுப்பில் சூரியனுக்குப் பின் பக்கம் என்ற கவிதை மட்டும் இல்லை.  புத்தகத்திற்கு அதுமாதிரி தலைப்பிட்டுவிட்டு அக் கவிதை அதில் இடம் பெறவில்லை எனப்தை வேடிக்கையாகச் சொல்வார் ஞானக்கூத்தன். பின் நான் அதைத் தீபம் பத்திரிகையிலிருந்து கண்டுபிடித்து ஞானக்கூத்தன் கவிதைகள் என்ற தொகுப்பில் சேர்த்தேன்.  தீபம் நா பார்த்தசாரதியின் புதல்வர் வீட்டிற்குச் சென்று பழைய தீபம் இதழ்களை அங்கயே புரட்டிப் பார்த்து பின் ஒரு நோட்டில் எழுதி வந்து சேர்த்தேன்.  இதுமாதிரி பல விட்டுப் போன கவிதைகளை அத் தொகுதியில் சேர்த்திருக்கிறேன்.  அப்படி சேர்த்தாலும். இன்னும் விட்டுப்போன ஞானக்கூத்தன் கவிதைகள் நிச்சயம் இருக்கும். எனக்குத் தெரிந்து கசடதபற இதழில் வெளிவந்த ஒரு கவிதையையும், மையம் இதழில் வெளிவந்த ஒரு கவிதையையும் அவர் சேர்க்க விரும்பவில்லை.   ஞானக்கூத்தன் ரொம்ப குறைவான வரிகளைக் கொண்ட கவிதைகள் அதிகமாக எழுதி உள்ளார்.  அதாவது  மூன்று வரி, இரண்டு வரி, நான்கு வரிகள் என்று.
அப்படி எழுதுகிற அவர் கவிதைகள் வலி…

புதுமைப்பித்தனின் வாடாமல்லிகைப் பற்றிய ஒரு சிந்தனை

அழகியசிங்கர் 


விருட்சம் இலக்கியச் சந்திப்பின் 27ஆவது நிகழ்ச்சி சிறப்பா நடந்து முடிந்தது.  ஒரு இலக்கியக் கூட்டத்தில் வழக்கமாக எதிர்பார்ப்பவர்களைத்தான் எதிர்பார்க்க முடியும்.  பெருந்தேவி புதுமைப்பித்தன் கதைகளை தீவிரமாக அலசி கட்டுரை மாதிரி படித்தார்.  அவருடைய பேச்சு சிறப்பாகவே இருந்தது.  அவர் பேச்சை ஆடியோவிலோ வீடியோவிலோ பதிவு செய்யக்கூடாது என்பதால் பதிவு செய்யவில்லை.  அவர் புத்தகமாகக் கொண்டு வருவார் என்ற நினைக்கிறேன்.   பெருந்தேவி புதுமைப் பித்தன் கதைகளைப் பற்றி பேசும்போது வாடா மல்லிகை என்ற கதையைப் பற்றி குறிப்பிட்டார்.  கூட்டம் முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் இரண்டு முறை நான் அந்தக் கதையைப் படித்துப் பார்த்தேன்.   அந்தக் கதையில் ஒரு விஷயம் புரியவில்லை.  மொத்தமே 3 பக்கங்கள் கொண்ட கதை இது.  1934 ஆம் ஆண்டு எழுதப்பட்ட கதை.  ஸரஸ÷ என்ற பிராமணப் பெண் விதவையாகி விடுகிறாள்.  17 வயதிலேயே சமூகம் அவளுக்கு வெள்ளைக் கலையை மனமுவந்து அளித்தது என்று புபி எழுதி உள்ளார்.   அவள் அழகை வர்ணிக்கும்போது ஸரஸ÷ ஒர் உலவும் கவிதை என்கிறார்.  இயற்கையின் பரிபூரணக் கிருபையில் மலரும் பருவம் என்கிறார்.  அவள் வீட்டார்கள் ஒரு …

விருட்சம் இலக்கியச் சந்திப்பின் 27வது கூட்டம்

அழகியசிங்கர்ஒவ்வொரு மாதமும் மூன்றாவது சனிக்கிழமை கூட்டம் நடத்துவதாக தீர்மானித்துள்ளேன்.  முதல் கூட்டத்தை திருப்பூர் கிருஷ்ணன் தி ஜானகிராமனும் நானும் என்ற தலைப்பில் பேசி துவக்கி வைத்தார்.  இரண்டாவது கூட்டமாக நாளை பெருந்தேவி அவர்கள் புதுமைப்பித்தன் கதைகளும் நானும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்த உள்ளார்.  இப்படியாக ஒவ்வொரு எழுத்தாளுமைகளையும் அறிமுகப்படுத்துவது விருட்சம் இலக்கியச் சந்திப்பின் முக்கிய நோக்கம்.  நாளை நடக்கும் கூட்டத்திற்கு புதுமைப்பித்தனின் முழுத்தொகுப்பு சந்தியா பதிப்பு வெளியிடு விற்பனைக்குக் கிடைக்க முயற்சி செய்கிறேன்.  கூட்டத்திற்கு எல்லோரும் கலந்துகொண்டு சிறப்பு செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.

ஞானக்கூத்தனின் படைப்புலகம் - 3

அழகியசிங்கர்

    ஆரம்பத்தில் உள்ள ஞானக்கூத்தனின் கவிதைகளில் இசையின் நுட்பத்துடன் கூடிய செய்யுள் வடிவம் தென்படும். படிப்பவரை கவர்ந்திழுப்பதோடு அல்லாமல், ஞாபகம் வைத்துக்கொள்ளும்படியான வரி அமைப்பைக் கொண்ட கவிதை வரிகள்.  இப்படி எழுதுவது ஞானக்கூத்தன் ஒருவருக்கே சாத்தியமானது.  ஞானக்கூத்தன் கம்பராமாயணத்தில் ஆழ்ந்த ஞானம் உடையவர்.   நாள் முழுவதும் கவிதைக்காகவே வாழ்ந்தவர்.   கவிதைகள் எழுதுவதோடல்லாமல் மற்றவர்கள் கவிதைகளையும் விமர்சிப்பவர்.  கவிதைக்காக என்ற நூலில் கவிதைகள் குறித்து சர்ச்சை செய்துள்ளார்.   திராவிட ஆட்சி வந்த புதியதில் அவர் எழுதிய காலவழுவமைதி  என்ற கவிதை பலத்த விமர்சனத்திற்கு உட்பட்டது.  தமிழ் என்ற கவிதை பலத்த சர்ச்சைக்கு உள்ளான ஒன்று. சரி, ஞானக்கூத்தன் கவிதைகள் எப்படி உள்ளன என்பதைப் பார்க்கப் போனால், அவர் சொன்ன ஒரு விஷயத்தை ஞாபகத்தில் கொள்ள வேண்டும். ஞானக்கூத்தன் கவிதைகள் என்ற புத்தகத்தில் அவர் இப்படி எழுதி உள்ளார்.   'புதுக்கவிதைகளில் இரண்டு போக்குகள் உண்டு.  ஒன்று புதுக்கவிதையின் தந்தை ந பிச்சமுர்த்தியினுடையது.  இரண்டாவது மயன் என்ற பெயரில் எழுதிய கநாசுப்ரமண்யம் அவர்களுடையது.  இவ…

27ஆம் விருட்சம் இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சி...

அழகியசிங்கர்

விருட்சம் சந்திப்பின் 26வது கூட்டத்திற்கு எல்லோரும் வந்திருந்து கூட்டத்தைச் சிறப்பு செய்தார்கள்.  அவர்கள் எல்லோருக்கும் என் நன்றி.  இக் கூட்டத்தின் முக்கிய நோக்கம். நம்மிடையே பிரபலமான இலக்கிய உலகில் புகழ்பெற்ற எழுத்தாளர்களைப் பற்றி அவருடன் நெருங்கி பழகியவர்கள் அல்லது அவர்களுடைய படைப்புகளைப் படித்து அது குறித்து சிலாகித்துப் பேசுபவர்களின் கூட்டம் இது.  முதல் கூட்டம் தி ஜானகிராமனைப் பற்றி திருப்பூர் கிருஷ்ணன் சிறப்பாக உரை நிகழ்ந்தினார்.  அதேபோல் இந்த மாதம் 15ஆம் தேதி பெருந்தேவி புதுமைப்பித்தனின் கதைகளைக் குறித்து உரை நிகழ்ந்த உள்ளார்.  புதுமைப்பித்தன் போல் கநாசு, மௌனி, செல்லப்பா, அசோகமித்திரன் என்று பல எழுத்தாளர்களைப் பற்றி பலர் பேச உள்ளார்கள்.  நீங்கள் எல்லோரும் வந்திருந்து கூட்டத்தை சிறப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.  இதோ கூட்டத்திற்கான அழைப்பிதழ்.  இதை எல்லோரும் உங்கள் வலைதளங்களில் மற்றவர்களுக்கும் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

ஞானக்கூத்தனின் படைப்புலகம் -2

அழகியசிங்கர்ஞானக்கூத்தன் கவிதைகளில் அப்படி என்ன விசேஷம்.  கவிதையில் அவர் கையாளும் மொழியின் திறன்.  வாசகனைப் பிடித்து இழுக்கும் வித்தியாசமான அம்சம்.  இதுதான் அவர் கவிதைகளை மற்றவர்களிடமிருந்து வேறு படுத்துகிறது.  உதாரணமாக :
சைக்கிள் கமலம் என்ற கவிதையைப் பார்ப்போம்.
அப்பா மாதிரி ஒருத்தன் உதவினான் மைதானத்தில் சுற்றிச் சுற்றி எங்கள் ஊர்க் கமலம் சைக்கிள் பழகினாள்
தம்பினைக் கொண்டு போய்ப் பள்ளியில் சேர்ப்பாள் திரும்பும் பொழுது கடைக்குப் போவாள் கடுகுக்காக ஒரு தரம் மிளகுக்காக மறு தரம் கூடுதல் விலைக்குச் சண்டை பிடிக்க மீண்டும் ஒரு தரம் காற்றாய்ப் பறப்பாள்
வழியில் மாடுகள் எதிர்ப்பட்டாலும் வழியில் குழந்தைகள் எதிரப்பட்டாலும் இறங்கிக் கொள்வாள் உடனடியாக
குழந்தையும் மாடும் எதிரப்படா வழிகள் எனக்குத் தெரிந்து ஊரிலே இல்லை
எங்கள் ஊர்க்கமலம் சைக்கிள் விடுகிறாள் என் மேல் ஒருமுறை விட்டாள் மற்றப் படிக்குத் தெருவில் விட்டாள்.
சைக்கிள் கமலம் என்ற கவிதையில் வண்டி ஓட்டுவது பற்றி கூறிகொண்டு வந்தவர், ஒரு வரியில் என் மேல் ஒருமுறை விட்டாள் என்று வரும்.
ஞானக்கூத்தனைப் பற்றி யாராவது பேச வந்தால் ஞானக்கூத்தனின் சில கவிதைகளை யாராலும் சொல்லாம…

ஞானக்கூத்தனின் படைப்புலகம் - 1

ஞானக்கூத்தனின் படைப்புலகம் - 1


அழகியசிங்கர்


ஞானக்கூத்தனின் ஒரு கவிதையை நான் எப்போதும் மின்சார வண்டியில் என் அலுவலகத்திற்கு பயணம் செல்லும்போது ரசித்துக் கொண்டிருப்பேன்.  அந்தக் கவிதை இதோ:
என்ன மாதிரி என்பது அக் கவிதை.
என்னை நோக்கி ஒருவர் வந்தார் எதையோ கேட்கப் போவது போல
கடையா? வீடா? கூடமா? கோயிலா?
என்ன கேட்கப் போகிறாரென்று எண்ணிக்கொண்டு நான் நின்றிருக்கையில்
அனேகமாய் வாயைத் திறந்தவர் என்னிடம் ஒன்றும் கேளாமல் சென்றார்
என்ன மாதிரி உலகம் பார் இது.
இப்படித்தான் ஞானக்கூத்தன் எனக்கு முதலில் அறிமுகம் ஆனார்.  இக் கவிதையை படித்துவிட்டு எனக்கு அவர் மீது அளவுகடந்த மரியாதை ஏற்பட்டது.  அவரை சந்திக்க வேண்டுமென்று நினைத்தேன். அப்போது அவரை நேரில் கூட பார்த்ததில்லை.  ஒரு முறை என் நண்பர் வைத்தியநாதன்தான், ஆத்மாநாம், ஞானக்கூத்தன், ஆன்ந்த், காளி-தாஸ், ஆர். ராஜகோபாலன், ரா ஸ்ரீனிவாஸன் என்று ழ ஏட்டில் எழுதும் கவிஞர்களை அறிமுகப் படுத்தினார்.  ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கடற்கரையில் சந்திப்போம்.  நான் சந்தித்தபோது ழ என்ற சிற்றேடு ஏனோ வரவில்லை.  கவனம் என்ற பத்திரிகைதான்  வந்து கொண்டிருந்தது.  கவனம் பத்திரிகைக்கு ஞானக்கூத்த…

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 72

அழகியசிங்கர்  


கவிதை தலைப்பிடப் படாதது

ஆத்மாநாம்                            
இந்தக் கவிதை
எப்படி முடியும்
எங்கு முடியும்
என்று தெரியாது.

திட்டமிட்டு முடியாது
என்றெனக்கத் தெரியும்
இது முடியும்போது
இருக்கும் (இருந்தால்) நான்
ஆரம்பத்தில் இருந்தவன் தானா

ஏன் இந்தக் கேள்வி
யாரை நோக்கி

இன்றிரவு உணவருந்தும்
நம்பிக்கையில் இங்கிருப்பேன்

இப்படியும் ஓர் நம்பிக்கை

இருந்த நேற்று
எனக்கிருண்ட கணங்கள்

அவற்றின் தவளைக் குரல்கள்
கேட்கும் அடிக்கடி

அதனை ஒதுக்கத் தெரியாமல்
தவிக்கையில்

நிகழ்ச்சியின் சப்தங்கள்
செவிப்பறை கிழிக்கும்

நாளை ஓர் ஒளிக்கடலாய்
கண்ணைப் பறிக்கும்

இருதயம்
இதோ இதோ என்று துடிக்கும்.


நன்றி : காகிதத்தில் கோடு - ஆத்மாநாம் - வெளியீடு : ழ, 39 ஈஸ்வரதாஸ் லாலா தெரு, திருவல்லிக்கேணி சென்னை 5 - வெளியீடு : மே 1981 - விலை : ரூ.4 - பக்கங்கள் : 40


குறிப்பு :

மனதுக்குப் பிடித்தக் கவிதை பகுதியில் ஆத்மாநாமின் கவிதை ஒன்றை சேர்த்துள்ளேன்.  ஆறாம்தேதி ஆத்மாநாமின் நினைவு நாள்.  கிட்டத்தட்ட 34 ஆண்டுக்கு மேல் ஓடிவிட்டது ஆத்மாநாம் மறைந்து.  03.12.1981 அன்று ஆத்மாநாம் கையெழுத்திட்ட அவர் புத்தகத்தை அவரிடமிருந்து பெற்ற…

குவிகம் நடத்திய இலக்கியக் கூட்டம்...

அழகியசிங்கர்24ஆம் தேதி குவிகம் ஒரு இலக்கியக் கூட்டம் நடத்தியது.  இது மாதம் ஒரு முறை நடத்தும் கூட்டம்.  இந்தக் கூட்டத்தில் சந்தியா பதிப்பக அதிபர் நடராஜன் அவர்கள் அகராதிகள் என்ற தலைப்பில் பேசியதை முதல் பகுதியாக வெளியிட்டேன்.  28.06.2017 அன்று வெளியிட்டேன்.

அதன் இரண்டாம் பகுதியை இப்போது வெளியிடுகிறேன்.

வாசகசாலை முயற்சிக்கு வாழ்த்துகள்

அழகியசிங்கர்

வாசகசாலையின் கதையாடல் என்ற முதலாம் ஆண்டு விழா கூட்டம் நேற்று (01.07.2017) கன்னிமரா நுல்நிலையத்தில் மூன்றாவது தளத்தில் நடந்தது.  கூட்டத்தில் பேச நான், பரிசல் செந்தில்குமார், கணையாழியின் ஜீவ கரிகாலன் மூவரும் வந்திருந்தோம்.   கூட்டத்தைப் பார்த்தவுடன் எனக்கு ஆச்சரியம்.  கிட்டத்தட்ட 50 பேர்கள் வந்திருந்தார்கள்.  பாதி பேர்கள் பெண்கள்.  வழக்கம்போல் பத்திரிகைகளில் வந்திருந்த கதைகளைப் பற்றி விமர்சனம் செய்தார்கள்.  அங்கு வந்த பெரும்பாலோர் வாசகர்கள்.  அவர்கள் பார்வையில் கதைகள் எப்படி பார்க்கப்படுகின்றன என்பதுதான் இக் கூட்டங்களின் முக்கிய நோக்கம். இன்றைய சூழ்நிலையில் தமிழில் கதைகளை வெளியிடுகின்ற பத்திரிகைகளை விரல்விட்டு எண்ணி விடலாம்.  பெரும் பத்திரிகைகள் கதைகளிலிருந்து விலகி துணுக்குகளாகப் போய் விட்டன.  நடுத்தரப் பத்திரிகைகளும், சிறு பத்திரிகைகளும்தான் சிறுகதைகளுக்கு உயிர் கொடுத்துக்கொண்டிருக்கின்றன. ஒரு வாசகன் பத்திரிகையில் வருகிற கதையைப் படிக்கும்போதுதான் கதைக்கு உயிர் கிடைக்கிறது.  இன்றைய அவசர சூழலில் பத்திரிகையில் கதையைப் படிக்கிறார்களா என்ற சந்தேகம் எனக்கு எப்போதும் ஏற்படுவதுண்டு.�…

கோல வடையைச் சாப்பிடாமல் வந்து விட்டேன்....

கோல வடையைச் சாப்பிடாமல் வந்து விட்டேன்....
அழகியசிங்கர்


28ஆம் தேதி இரவு காவேரி எக்ஸ்பிரஸில் பங்களூர் சென்றேன்.  நானும் மனைவியும்.  பங்களூரில் உள்ள எங்கள் உறவினர் வீட்டுப் பெண்ணிற்கு திருமண நிச்சயதார்த்தம்.  அது 30ஆம் தேதி நடக்க உள்ளதால், 29 ஆம் தேதி மகாலிங்கம் என்ற நண்பருடன் காலை 10 மணி சுமாருக்கு பங்களூர் வலம் வந்தேன்.   நான் முன்பெல்லாம் வந்தால், ஒரு பூங்காவில் அமர்ந்துகொண்டு எழுத்தாள நண்பர்களை சந்திப்பது வழக்கம்.  இப்போது அதெல்லாம் முடிவதில்லை.  அதனால் ஒரு சிலரை மட்டும் சந்திக்க முடிகிறது.  இந்த முறை பாவண்ணனையும், ஸிந்துஜாவையும் சந்தித்தேன். முன்பு போல் பங்களூர் இல்லை என்பதும், ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் போவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடுகிறது.  மெட்ரோ ரயிலில் கொஞ்சம் சீக்கிரம் போய்விடலாம். மகாலிங்கம் என்ற நண்பர் மட்டும் இல்லாவிட்டால் என்னால் எங்கும் செல்ல முடியாது.  அலுப்பே காட்டாமல் அவர் எல்லா இடத்திற்கும் என்னை அழைத்துக்கொண்டு போய்விடுவார்.  பங்களூரில் எதாவது ஓட்டலுக்குச் சென்று எதாவது சாப்பிடாமல் இருக்க மாட்டோம்.  அதேபோல் புத்தகக் கடைகளுக்குப் போகாமல் இருக்க மாட்டோ…