Skip to main content

ஏன்.........ஏன்.............ஏன்.......


அழகியசிங்கர்
                                                                                



இன்று புத்தகக் காட்சிக்குச் சென்றவுடன் முதல் வேளையாக 3.30 மணிக்கு ஞானக்கூத்தன் ஞாபகமாக அவருடைய ஒவ்வொரு கவிதையாக எடுத்து வாசித்தோம்.  வந்தவர்கள் ஒவ்வொருவராக கவிதை வாசிக்கச் சொன்னேன்.   யாரும் மறுக்கவில்லை.  வாசித்த அனைவருக்கும் என் நன்றி.  எல்லாவற்றையும் சோனி வாய்ஸ் ரிக்கார்டில் பதிவு செய்தேன்.  மாலன், இந்துமதி என்று பலரும் ஞானக்கூத்தன் கவிதைகளை வாசித்தார்கள்.  
இன்னொன்றும் சொல்ல விரும்புகிறேன். நான் முகநூலில் தெரியப்படுத்தி இருந்தேன்.  என் கைவசம் உள்ள ஞானக்கூத்தன் கவிதைகள், கட்டுரைத் தொகுதி வாங்குபவர்களுக்கு 50 சதவீதம் தள்ளுபடியில் தருவதாக.
ஸ்டாலில் மிகக் குறைவான எண்ணிக்கையில் ஞானக்கூத்தன் புத்தகங்களை வைத்திருந்தேன்.  ஆனால் ஏன் ஒருவர் கூட முகநூலைப் பார்த்து வரவில்லை. வாங்கவில்லை. சலுகையைப் பயன்படுத்தி ஞானக்கூத்தன் புத்தகங்களை வாங்கிக் கொள்ள யாரும் முன் வரவில்லை.
எனக்கு இது ரொம்ப ஆச்சரியமாகப் போய்விட்டது.  ஏன் என்ற என் கேள்விக்கு பதில் தெரியவில்லை..
ஞானக்கூத்தன் கவிதையான பயிற்சியில் குறிப்பிட்டபடி,

பயிற்சி

மனிதன் எங்கும் போக விரும்பவில்லை
ஆனால் போய்க்கொண்டுதான் இருக்கிறான்
மனிதன் யாருடனும் போக விரும்பவில்லை
ஆனால் யாருடனாவது போய்க் கொண்டிருக்கிறான்
மனிதன் எதையும் தூக்கிக் கொண்டு போக விரும்பவில்லை
ஆனால் எதையாவது தூக்கிக் கொண்டுதான் போகிறான்
குன்றுகளைக் காட்டிலும் கனமுள்ள சோகங்களைத்
தூக்கிக் கொண்டு நடக்க மனதில் பயிற்சி வேண்டாமா!

எல்லோரும் குன்றுகளைக் காட்டிலும் சோகங்களைத் தூக்கிக் கொண்டு செல்கிறார்களா? ஏன்..ஏன்....வரவில்லை...வாங்கவில்லை..

Comments