Skip to main content

Posts

Showing posts from July, 2014

எதையாவது சொல்லட்டுமா......97

அழகியசிங்கர்

    ரொம்ப நாளைக்குப் பிறகு ஜெயகாந்தன் சிறுகதை வெளியீடு கூட்டத்திற்கு சென்றேன்.  இதற்கு முன் ஜெயகாந்தன் என்ற பெயரையே மறந்து விட்டேன்.  சமீப காலத்தில் யாரும் ஜெயகாந்தன் என்ற எழுத்தாளர் பெயரை யாரும் உச்சரிப்பதில்லை.  அவர் மீது யாருக்கும் எந்தக் கோபமும் இல்லை.  பல ஆண்டுகளுக்கு முன்னாலே அவர் எழுதுவதை நிறுத்தி விட்டார்.  பத்திரிகைகளில் கூட அவரைப் பற்றி எந்தச் செய்தியும் வருவதில்லை.  ஒருமுறை அவர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவரைப் பற்றி பேச்சு வந்தது.  அவர் நலமாக வீடு வந்து சேர்ந்துவிட்டார் என்ற செய்தியுடன் அவரைப் பற்றி பேச்சு நின்று விட்டது. 
    அவர் சிறிய வயதிலேயே எழுத ஆரம்பித்து விட்டார்.  சிறுகதைகள், நாவல்கள் என்று எழுதிக் குவித்தவர்.  அவர் எழுத்துக்களைப் பிரசுரம் செய்ய பெரிய பத்திரிகைகள் காத்துக்கொண்டிருந்தன.  குறிப்பாக விகடன் அவர் எழுத்தை பிரசுரம் செய்ய காத்துக்கொண்டிருந்தது.  அந்தக் காலத்தில் தமிழ் எழுத்தாளர்களிடையே மதிப்பை உயர்த்தியவர் ஜெயகாந்தன் என்று குறிப்பிடுவார்கள். 
    ஆனந்தவிகடன் பத்திரிகை அலுவலகத்தில் சட்டையும் பேன்டும் அணிந்துகொண்…

எதையாவது சொல்லட்டுமா......96

அழகியசிங்கர்

            இன்று மதியம் தொலைபேசியில் ஒரு கேட்ட குரல் ஒலித்தது.  ''நீல பத்மநாபனா?'' என்று கேட்டேன்.  'ஆமாம்' என்று பதில் வந்தது. ஆழ்வார்பேட்டையில் உள்ள டாக் சென்டரில் அவருடைய கூட்டம்.                   உண்மையில் அந்தக் கூட்டம் சனிக்கிழமையே முடிந்து விட்டது என்று நினைத்துவிட்டேன்.  உடனே நான் சில நண்பர்களுக்கு போன் மூலம் கூட்டம் பற்றிய தகவலைத் தெரிவித்தேன்.  இந்தக் கூட்டத்தின் முக்கியமான பங்கு என்னவென்றால், பல எழுத்தாள நண்பர்களைச் சந்திக்கலாம்.  முக்கியமாக நீல பத்மநாபனை சந்திக்குமிடமும் இதுதான்.  வயதின் முதிர்ச்சியில் அவர் தளர்ந்து காணப்பட்டார்.  
       அவருடைய 'இலைஉதிர் காலம்' நாவலைப் பற்றி சுப்ர பாலன் என்ற எழுத்தாளர் விமர்சனம் செய்தார்.  பின் நீல பத்மநாபன் சுருக்கமான ஒரு உரையை வெளிப்படுத்தினார்.  கூட்டம் 40 அல்லது 50 பேர்கள் கொண்டதாக இருந்தது.  நீல பத்மநாபன் நாவல்கள் முழுவதையும் மறு வாசிப்புக்கு உள்ளாக்க வேண்டுமென்று தோன்றியது.  இன்றைய சூழ்நிலையில் தமிழில் புத்தகம் படிப்பவர்களே அரிதாக மாறிக்கொண்டு வருகிறது.  அதுவும் தமிழில்.  ஒரு போராட்டமே…

புள்ளி (ஒரு சின்ன கவிதைத் தொகுப்பு)

மரம்

வானத்திலே எங்கேயோ உள்ள
சூரியனுடன் மத்து - மத்து ஆடுகிறது
என் நிழல்
வேரடியில் தேங்கிக் கிடக்கும்
சாக்கடை நீரில் என்
பிம்பத்தைக் கண்டு
வெறுப்புறுகிறேன் நான்.

என்னை வெட்டிச் சாய்க்க
வருகிற வீரன்
என் நிழலை மட்டும்
வெட்டிச் சாய்த்து விட்டானானால்
நான் ஓங்கிக் கிளைத்து வளருவேன் -
ஒன்பதாய்ப் பெருகுவேன்
என்னோடு
என் நிழலையும் சாய்க்க
உன்னால் முடியும் -
முடியுமா
என் நிழலை மட்டும்
அப்புறப் படுத்திவிட....?
   க நா சுப்ரமண்யம்

புள்ளி (ஒரு சின்ன கவிதைத் தொகுப்பு)

வட்டம் 3

என் எழுத்து
நேற்றில்லை
இன்றில்லை
நாளையில்லை

ஏதோ நாவல்
ஏதோ கதை
என்றெழுதிய
வையும்
குப்பைக் கூடையில்
ஏக வாரிசு
என்றாலும் என்ன?

சுசீலாவே
செத்துவிட்டாள்
என் எழுத்து மறைந்தபின்
நான்
இருந்தென்ன
இலலாமல் போனால்
தான்
            என்ன?

நகுலன்

புள்ளி (ஒரு சின்ன கவிதைத் தொகுப்பு) - 7

வட்டம் (2)


பேனாவுக்கு மையிட்டு
அதன் முனைதீட்டி
வெள்ளைக் காகிதத்தை
மேசை மீது விரித்து

எழுத வருங்
கால்
பேனாவின் முனை
மூளையின் மண்டைக்
கனத்தில்
குடை சாயும்
வெள்ளைக் காகிதத்தின்
வைரத் தின்மையில்
அதன்
கூர் மழுங்கும்;

சேலை அவிழ்க்
காலமென்றா
லோ
சுசீலாவும் செத்துக்
கிடக்கின்றாள்

        - நகுலன்

வண்ணச்சிறகுகளாலான கோட்டோவியம்

 தேனு
ஒரு இளம்பெண்ணின் கோட்டோவிய கீழ்நுனியின் வண்ணமற்ற இழையைப் பிடித்தபடி மையம் நோக்கி நடக்கத் துவங்குகிறாள் யாழினி. விழிகளின் வெளிச்சத்தை மெலிதாய் பரப்பி  நீள்கோடுகளைக் கடைந்தெடுத்து சொற்களாய் உருக்குகிறாள். மேடுகளைச் செதுக்கி அலையலையாய் முன்னேறும் வேகம் என்றுமே அவளுக்கு அலாதியானது.. ஒவ்வொரு வளைவிற்குத் தன் சொல்லொன்றையும், ஒவ்வொரு முடிச்சிற்குத் தன் புன்னகையொன்றையும் சிறகடிக்க விடுத்து நகர்கிறாள். சொற்களையும் புன்னகைகளையும் ஒரு சேர கலந்து வெளியிட்டு வண்ணம் அமைக்க அவளால் மட்டுமே முடிகிறது. மையம் அடைந்தவள் மெலிதான மௌனமொன்றை வெளியிட்டபடி சிறகுகளை உள்ளடக்கிச் சாயவும், வண்ணம் பூக்கத் துவங்குகிறது அவளைச் சுற்றி.. காலங்கள் கடந்து வண்ணத்து உயிர் சிற்பமாய் உருமாறி இருந்தது கோட்டோவியம், அருகில் புன்னகைச்சொல்லொன்றை உதிர்த்தபடி துயில்கிறாள் வண்ணச்சிறகுகளின் இளவரசி யாழினி..


மூன்று கூட்டங்களும் நானும்

(PHOTOS TAKEN BY AUDITOR GOVINDARAJAN)அழகியசிங்கர்

சமீபத்தில் நான் எதிர்கொண்ட மூன்று இலக்கியக் கூட்டங்களைப் பற்றி இங்கே குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன்.  ஒரு கூட்டத்தில் நான் பார்வையாளனாக இருந்தேன்.   இன்னொரு கூட்டத்தில் நான் பங்கு கொள்பவனாக மாறி இருந்தேன்.  மூன்றாவது கூட்டத்தை நானே நடத்துபவனாக இருந்தேன்.  இந்த மூன்று கூட்டங்களைப் பற்றி இங்கே சொல்வது முக்கியமாக கருதுகிறேன். 
முதல் கூட்டம்: அசோகமித்திரனை வாசித்தல் என்ற கூட்டம். பெருந்தேவி அவருடைய நண்பர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம்.  அக் கூட்டத்தை இவ்வளவு தூரம் சிறப்பாக ஏற்பாடு செய்வார் என்பதை நானே எதிர்பார்க்கவில்லை.  ஒருநாள் முழுவதும் கூட்டத்தை சிறப்பாக நடத்தி விட்டார்.  இக் கூட்டத்திற்கு நான் மதியம்தான் வர முடிந்தது.  அன்று ஏகப்பட்ட வெயில்.  தாங்க முடியவில்லை.  டூ வீலரில் வந்த நான் நடுவில் திரும்பி விடலாமாவென்று நினைத்தேன்.  ஆனாலும் எப்படியும் கூட்டத்திற்குப் போய்விட வேண்டுமென்ற வைராக்கியத்துடன் சென்றேன்.  உண்மையில் அக் கூட்டத்தில் கலந்துகொண்ட அத்தனைப் பேர்களும் என் நண்பர்கள்.  
மதியம் ஆரம்பமாகும் கூட்டத்திற்குத்தான் நான் வந்தேன்…

நதியில் என் ஓடம்

ராமலக்ஷ்மி
எத்தனை ஆயிரம் இரவுகளோ அறியேன் ஓடும் நதியில் ஓடத்தில் உறங்கிக் கொண்டிருக்கிறேன். அழகிய சோலைகளின் பக்கம் அமைதியில் உறைந்த வனங்களின் பக்கம் இறங்குவேன் என்றெண்ணி ஓடம் கரை தொட்டு நின்ற கணங்களை கவனிக்கத் தவறி உறங்கிக் கொண்டிருக்கிறேன்.
துள்ளும் மீனைப் பாராமல் புள்ளின் ஒலியைக் கேளாமல் வெயிலை மழையை உணராமல் வானின் நீலத்தை, விரையும் மேகத்தை நிலவை, நட்சத்திரங்களை ரசிக்காமல் கனவுகளைச் சுவாசித்து சுளித்தோடும் நீரில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.
என் கனவில் சந்தித்து கைகளைக் குலுக்கிக் கொள்கிறார்கள் நான் அறிந்த ஆனால் ஒருவரையொருவர் அறியாத மனிதர்கள். சந்திக்கிறேன் நானும் பரிச்சயமான ஆனால்  அதுவரை சந்தித்திராத நபர்களை. தினம் ஒரு கனவு தினம் ஒரு நிகழ்வைச் சுற்றி முடிவென்பது இல்லாமல் ஆனால் தொடங்கிய புள்ளியிலிருந்து விலகாமல்.
நீங்காத உறக்கத்தால் பகல்களும் இரவுகளாய்க் கழிய சேகரமான கனவுகள் எல்லாம் சேர்ந்து என் தலையைப் பாரமாக்கிய ஓர் இரவில் விழித்துக் கொள்கிறேன் விரும்பி நதியில் குதிக்கிறேன் புத்துணர்வுடன்  எழும்பி விண்ணில் பறக்கிறேன் எல்லைகளற்றப் பிரபஞ்சத்தில் இறகைப் போல் மிதக்கிறேன் ஆனந்தம் பிறக…

எதையாவது சொல்லட்டுமா..........95

அழகியசிங்கர்

    ஒவ்வொருக்கும் அந்தக் கடைசி மாதம் கசப்பாகத்தான் இருக்கும்.  எப்போது இதிலிருந்து விடுதலை ஆகி ஓடிவிட முடியும் என்றுதான் தோன்றும்.  என்னுடைய கடைசி மாதத்தில் நான் அப்படி நினைத்ததில் எந்தத் தவறும் இல்லை.  கடந்த 35 ஆண்டுகளாக ஒரு நிறுவனத்தின் நிழலில் அசையாமல் என் பொழுதை ஓட்டிவிட்டேன்.  ஆனால் இப்போது திரும்பவும் நினைத்துப் பார்த்தால் திகைப்பாகத்தான் இருக்கிறது. 
    ஒவ்வொருமுறை என் அலுவலக நண்பர் என்னிடம் போனில் பேசும்போது, அவருக்கு என் மீது பொறாமையாகக் கூட இருக்கும்.  ''சார் நீங்க தப்பிச்சிட்டீங்க..." என்று.  ஆமாம். உண்மைதான். தொடர்ந்து இனி இருக்க முடியாது. 
    மார்ச்சு மாதம் முதல் தேதி.  மொட்டை மாடிக்குச் சென்று சூரியனைப் பார்த்து கைகூப்பினேன்.  35 வருட அலுவலக வாழ்க்கை முடிந்தது.  இனி அவசரம் அவசரமாக காலை 8.30 மணிக்கே போய் வங்கிக் கதவைத் திறக்க வேண்டாம்.  யாருக்கும் பதில் சொல்ல வேண்டாம்.  நிம்மதி.
    ஒரு மாதமாக பதவி ஓய்வுப் பெற்ற பலரிடம் பேட்டி கண்டேன்.  என் முதல் கேள்வி.  "எப்படி பொழுது போகிறது?" என் அலுவலகத்திலேயே பணிபுரிந்து பதவி மூப்பு பெற்றவர் சொன்ன…