Skip to main content

Posts

Showing posts from October, 2008

பூனைகள் பூனைகள் பூனைகள்

1.
இரா.நரசிம்மன்

பூனை
குறுக்கே
வரவே செய்யும்
வரும்போதும்
போகும்போதும்
அது சாலையைக்
கடந்தே ஆக வேண்டும்.

அவர் சொன்னார்
சாலையின் ஓரத்தில் நடக்க
பூனையைப் பழக்க வேண்டும்
சரிதான்
..............
ஆனால்

2.

கேத்தம்பட்டி செல்வா

நள்ளிரவில் வரும் பூனை

உறங்கும் வேளை
சுவரேறி வரும்
ஒரு திருட்டுப் பூனை.
சத்தமின்றி
உரிதொங்கும் பரண் மீது
ஏறி நிற்கும்
வாய் பிளந்திருக்கும்
செம்பு பார்த்து கத்தும்
வெள்ளி மீசை சிணுங்க
பின், செம்பின் வாய்ப் பார்த்து
நாக்கு சுழற்றும்
திசைகள் பார்க்கும்
திரும்ப ஒரு முறை கத்தும்
கால் நகம் கொண்டு
மூக்கு பிராண்டும்
முன்னங்கால் செம்பை
கீறிப் பார்க்கும்
என்னென்னவோ செய்யும்
சலிப்பில்லாமல்
எதுவும் கிடைக்காமல்
தொப்பென்று எகிறிகுதித்து ஓடும்
அந்தத் திருட்டுப் பூனை

(பூனைகள் தொடரும்....)

சில குறிப்புகள் / 9

வணக்கம்.
ஒரு வழியாக நவீன விருட்சம் 81-82 வது இதழ் முடிந்தது. இரண்டு மூன்று தினங்களில் அச்சு அடிக்கும் இடத்திலிருந்து வெளியே கிளம்பிவிடும் விருட்சம்.
ழ பத்திரிகையின் இணை ஆசிரியர் இராஜகோபாலனின் திருமணம் இப்போதுதான் நடந்த மாதிரி தோன்றியது. இன்று அவர் புதல்வரின் திருமணம். வழக்கம்போல் அவருக்கு நெருங்கிய .இலக்கிய நண்பர்களின் கூட்டம்.
ஒவ்வொரு முகத்திலும் வயது தனது பதிவை ஏற்படுத்தாமலில்லை. வயதான அசோகமித்திரன், வயதான ஞானக்கூத்தன், வயதான விட்டல்ராவ், வயதான கந்தசாமி, வயதான முத்துசாமி, வயதான ஆன்ந்த் என்று பலரை வயதான நானும் பார்த்தேன்.
ராஜகோபாலன் எளிமையான மனிதர். அவர் கவிதைகளும் அவரைப் போல எளிமையானவை.
இந்த திருமண வைபவத்திற்கு வந்திருந்த ஆனந்த் அவருடைய கவிதைத் தொகுதியான அளவில்லாத மலர் என்ற புத்தகத்தை கையெழுத்திட்டு அளித்தார். எனக்கு உடனே பல ஆண்டுகளுக்குமுன் ஆத்மாநாமுடன் அவரைப் பார்க்கச் சென்றபோது, எனக்கு கையெழுத்திட்டு அவர் அளித்த 'அவரவர்கைமணல்' என்ற புத்தகம் ஞாபகம் வந்தது.
ஆனந்த் கவிதைகள் சற்று வித்தியாசமானவை. சாதாரண மனிதத் தோற்றங்கள் சற்று குறைந்து மனத் தோற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் …

எனது மஹாராணியின் நினைவாக

short story

அவள் எனக்கு மஹாராணிதான். என்னுடைய நினைவுகளையும், கனவுகளையும் அரசோச்சும் அழகு ராணி. என்னுடைய ராணி ஓர் மயிலும் கூட - நடனத்தில்.
எனது மயில்....ஸாரி, மயிலின் பெயரைச் சொல்லாமலே....பெயரென்றால்? காலேஜ் ரிஜிஸ்டரில் அவள் - ஸில்வியா ஆன்டர்ஸன். காலேஜ் கேம்பஸிற்குள், தோளுடன் தோள் உராயும் தோழியருக்கு - அவள் ஸில்லி. எனக்கு, என்னுடைய சுகமான நினைவுகளுக்கு, ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கனவுகளுக்கு - அவள் பெப்பி பெப்பி பெப்பி........
பெப்பி - என் நினைவே, என் கனவே.......ப்ரு காப்பியின் முறுகல் நுரை போலிருக்கும் என் மயிலின் சிரிப்பு. அவளுக்குத் தொடைகள் என்ன மயிலின் பட்டுத் தொகைகளா? - இந்த புஷ்கி அரைக் கண்ணைத் திறந்து கொண்டு; அரை வாயைத் திறந்து கொண்டு அத்தனை சுகமாகத் தூங்குகிறதே மயிலின் மடியில். சொல்லவே சுகம். மீண்டும் சொல்கிறேன். 'என் மயிலின் மடியில்.' ஏய் புஷ்கி. எனக்கு உன்மேல் பொறாமை. யார் இந்த புஷ்கி? யாருமில்லை. மயில் வீட்டுப் பொமரேனியன். மயிலுக்குக் குழந்தை மாதிரி. இரவிலும் கூட இந்த புஷ்கி என் மயிலுடன் பஞ்சு மெத்தைக்குள்; போர்வைக்குள்..போகட்டும்.
ஸில்வியாவை நான் மட்டும் ஏன் பெப…

மழை 1, 2, 3.....

மழை பெய்தால் சென்னை நகரம் போல் ஒரு வேதனை தரும் இடத்தைப் பார்க்க முடியாது. நான் வசிக்கும் மேற்கு மாம்பலம் இன்னும் மோசம். கடந்த 2 நாட்களாக முட்டி கால்வரை தண்ணீர். அலுவலகம் போவதற்கே அருவெறுப்பாக இருந்தது. கூடவே அங்கங்கே பாதாள சாக்கடைகளின் மூடிகள் திறந்துகொண்டு சாக்கடை மல ஜலம், மழை நீர் என்று நாசம் செய்து விட்டது. தாங்க முடியாத துர்நாற்றம். இந்த மழையால் 15 பேர்களுக்குமேல் இறந்துவிட்டார்களாம். இத் தருணத்தில் மழையைப் பற்றி எழுதிய மூன்று கவிதைகளை இங்கு வாசிக்க அளிக்கிறேன்.

மழை 1

மழை பெய்தது
தெரு நனைந்து மிதக்க
இரண்டு பூனைக்குட்டிகள்
இடுக்கில்
குளிருக்குப் பயந்து
தாய் மடியில் பதுங்க
தாய்ப்பூனை
குட்டிகளைப் பற்றி யோசனையில்
கீழே
அப்பா
பாட்டி
தம்பி மூவரும் டிவியில்
துருப்பிடித்த சைக்கிளை
எடுத்தேன்
மழை விட்டிருந்தது
என் குழந்தைகளைப் பார்க்க............

மழை 2

மழை பெய்யவில்லை என்று என் அப்பா சொன்னார்
மழை பெய்யவில்லை என்று என் மனைவி சொன்னாள்
மழை பெய்யவில்லை என்று என் பையன் சொன்னான்
மழை பெய்யவில்லை என்று என் பெண் சொன்னாள்
மழை பெய்யவில்லை என்று பக்கத்துவீட்டார் சொன்னார்
வெயில் கொளுத்துகிறது என்று நான் சொன்னேன்.

மழை 3

மழை தூறி ம…

நான் வெல்ல வேண்டிய விளையாட்டு

இன்று காலை வெய்யிலில்லை குளிர்ந்த அழுக்கான நாளின்று விடைபெற கையசைக்கிறேன் சன்னல் கம்பிகள் வழியே நீ நடந்து போவதைப் பார்த்தவாறே.
உன்னுடலின் மணம் என்னுடலின் மீது நீங்காதிருக்கிறது. திகைப்புடனிருக்கிறேன் உன் காதலை நான் வெல்ல வேண்டிய விளையாட்டாக ஏன் விளையாடினேனென்று.
தெருவில் நீ மிகவும் தனிமைப்பட்டுத் தெரிகிறாய் நேரம் செல்லச் செல்ல உன் உருவம் சிறியதாகிறது உன் கையசைவுக்காக உன் புன்னகைக்காக ஏங்குகிறேன். எப்போதும் விசுவாசமான காதலனாக நானிருப்பேன் உன்னை உரக்க அழைத்துச் சொல்ல ஒரு ஆசையை உணர்கிறேன் ஆனால் சன்னல் கம்பிகளின் மீதென் மூச்சு மெளனமாய் உறைந்து போனதைக் காண்கிறேன். தமிழாக்கம் : லாவண்யா

தமிழக முதல்வருக்கு ஒரு வேண்டுகோள்

நவீன விருட்சம்


அழகியசிங்கர் 17।10।2008
6/5 போஸ்டல் காலனி முதல் தெரு மேற்கு மாம்பலம் சென்னை 600 033


அன்புள்ள தமிழக முதல்வர்அவர்களுக்கு,


வணக்கம்।
நவீன விருட்சம் என்ற பெயரில் கடந்த 20 ஆண்டுகளாக காலாண்டு இலக்கியச் சிற்றேடு நடத்தி வருகிறேன்। கவிதைக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த இதழ் தொடர்ந்து வெளிவருகிறது.

நீங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ஆயிரம் பிரதிகள் தமிழ் புத்தகங்கள் வாங்க உத்தரவு இட்டதற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்। பிரபலமான எழுத்தாளர்களின் புத்தகங்களைத் தவிர, இன்று தமிழ் புத்தகங்களை வாங்கிப் படிப்பவர்கள் மிக மிகக் குறைவு। மேலும் தமிழில் எழுதும் எழுத்தாளர்களின் நிலை இன்னும் மோசமானது। அவர்கள் எழுதும் எழுத்தால் சாதாரண நிலையைக் கூட அவர்களால் எட்ட முடியாது.

நான் கல்லூரியில் படித்தபோது, தமிழ் ஆசிரியர்களுக்கு எந்த மதிப்பும் இல்லை என்பதோடல்லாமல், தமிழ் வகுப்புகளே கிண்டலுக்குரிய இடமாகக் காட்சி அளிக்கும்।அதுமாதிரியான தருணத்தில் தமிழில் ஆர்வம் கொண்டு எழுதுவது என்பது சிரமமானது। எழுதும் எழுத்து புத்தகமாக வருவதும், பத்திரிகைகளில் பிரசுரமாவதும் அவ்வளவு சுலபமானதில்லை.
நவீன விருட்சம் என்ற என் பத்த…

இனம்

சிறுகதை
தேனீர் கடையில் வழக்கம் போல் நான்கைந்து பேர் கண்ணாடி தம்ளரில் டீயை உறிஞ்சிக்கொண்டு நின்றிருந்தார்கள்। பக்கத்திலேயே நன்றாக வளர்ந்திருந்த புங்கை மரம் தாராளமாகவே நிழல் பரப்பியிருந்தது। அதன் கீழே இருந்த பங்க் கடையை ஒட்டி அடுப்பில் பெரிய வாணலியில் வடை, பஜ்ஜி சுட்டுக் கொண்டிருந்தார்கள்। அந்த வாசனை நாசியைத் தூண்டிக் கொண்டிருந்தது . கணேசன் டீ மாஸ்டரிடம் ஒரு தேனீருக்கு சொல்லிவிட்டு சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்தான். அவனுடைய அலுவலகம் எதிரில்தான் இருந்தது. காலை பதினொரு மணி ஆகிவிட்டது.
அலுவலக வேலை இனிமேல்தான் சூடு பிடிக்கும். அப்புறம் சிகரெட் பிடிக்க நேரமிருக்காது. டீக்கடைப் பையன் கணேசனிடம் டீயைக் கொடுத்து விட்டு மூலையில் சாத்தியிருந்த மூங்கில் கம்பை கையிலெடுத்தான்। கம்பை வைத்துக்கொண்டு இவன் என்ன செய்யப் போகிறான் என்று கணேசன் யோசித்துக் கொண்டே டீயை உறிஞ்சினான்। பையன் மரத்தின் அடித்தண்டின் மீது ஏறி மூங்கில் கம்பை மேலே உயர்த்தி எதையோ தொட முயற்சி செய்தான்.
"தம்பி அங்க என்னப்பா பண்ற?" என்றான் கணேசன். பையன் பதிலே பேசாமல் காரியமே கண்ணாக மரத்தின் கிளைகளுக்கிடையில் துழாவிக் கொண்டிருந்தான்.
&q…

இன்ன பிற

காலச்சுவடு கதைகள் 1994-2000 படிக்கக் கிடைத்தது। மனுஷ்ய புத்திரன் தொகுத்திருக்கிறார்। 5 நெடுங்கதைகள், 18 சிறுகதைகள் உள்ளன। ஜிநாகராஜனின் 'ஆண்மை'என்ற கதைதான் என்னை முதல் வாசிப்பிலேயே அசாத்தியமாக தாக்கியது। ஒரு வேசியின் பின்னால் போகிற ஆண்மகன் ஒருவன் சொல்வதாக கதை அமைந்துள்ளது। இருபது வயது நிரம்பிய அந்த வேசியைப் பார்த்ததும் ஆண்மகன் எண்ணுகிறான்। 'கடவுளை மன்னித்துவிட வேண்டியதுதான்। எத்தனை விகாரமான உருவங்களுக்கிடையே இப்படியும் அழகான ஒரு உருவத்தைப் படைத்திருக்கிறாரே! அவளது மோகனச் சிரிப்பையும், மலர்ந்த கண்களையும், உலகத்து அழகையெல்லாம் வடித்திறக்கிய அவளது மார்பகத்தையும் பார்த்தபோது எனது இரத்த நாளங்கள் விரிந்தன,'ரொமாண்டிக்கான வர்ணனைதான்। எட்டு வயது மகனுடன் அந்த வேசியின் அப்பா அவளை பஸ் ஸ்டாப்பு வரை கொண்டு விடுகிறார்। தம்பி அக்காகூடப் போவேன் என்று படுத்துகிறான்। அப்பா அவனைச் சமாதனப்படுத்தி அழைத்துப் போகிறார்। பேரம் பேசப்படுகிறது। பணத்தைப் பெறுவதில் அவள் குறியாக இருக்கிறாள்। ஆண்மகன் நினைக்கிறான்। 'எதற்கும் ஏதாவது கொடுத்தாக வேண்டும்। கொடுக்காமல் எதுவும் கிடைப்பதில்லை। மனைவி மட்டும்…

மூன்று கவிதைகள்

01
இசைபட...!

அனேக நேரங்களில் அடித்துப் பிடித்து ஓடி வரும் ஒருவனுக்கோ ஒருத்திக்கோ காத்திருக்க முடியாமல்விரைவாய் மூடிக்கொள்ளும் லிப்டில்வெறுமனே இருக்க நேர்கிறது।
யாசிக்கும் கைகளுக்கு
யோசித்துக் கொடுப்பதற்குள்பெரும்பாலும் நகர்ந்துவிடும்
பேருந்துகளிலும்
இருக்க நேர்கிறது.
முன்பைவிட விரைவாய் நகரும்இவன் விட்டு நகர்ந்த
வரிசைகளையும்
எப்போதும் காண நேர்கிறது.

வேண்டாத நேரங்களில்வெறுமனே இருக்கும்
சலூன் நாற்காலிகளையும்காண நேர்கிறது
கணக்கற்ற பொழுதுகளில்.

எதிர்பாராப் பொழுதொன்றில்
இசைபட ஒன்றும் நேர்கிறது இவளது வருகையைப் போல।

உங்களை என்னைத் திரும்பிப் பார்க்க வைக்கும்கவிதை...அச்சில் வந்த
கவிதைகளைப் பற்றிஅதிகமாய்
நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
காதல் தவிர்த்து
எழுதலாமே என்கிறீர்கள்। கவிதையைப் பற்றி எழுதுவதை தவிர் என்கிறீர்கள்.

இத்தனை கவிதைகளா
இதற்குள் என்கிறீர்கள்.
இத்தனைக்கும் எப்படி
நேரம் என்கிறீர்கள்.

இன்ஸ்பிரேசன் இதற்கெல்லாம்
எது என்கிறீர்கள்?உணர்வுதளம் தாண்டி
ஒன்றும் வரவில்லை என்கிறீர்கள்। அச்சுநேர்த்தி பற்றியும்
அதிகம் சொல்கிறீர்கள்। அடர்த்தி இன்னமும்
வேண்டும் என்கிறீர்கள்.

செய்த கவிதைகளே
நிறைய என்கிறீர்கள். அதிகமும் படித்தல்
ஆக…

பால்ய வீடு - மழலை உலகம்

பால்ய வீடு

பாடப்புத்தகங்கள் கலைந்து கிடந்த மாடம் அன்றென் கைகளுக்கு எட்டியது முக்காலியின் உயரத்தினால்தான்...சுவர் மேல் கால்வைத்தேறிதண்ணீர் மோந்த பெரிய தொட்டியும்இன்றேனோ சின்னதாய் தெரிகிறது...அதே பழைய படிக்கட்டுகளும் தெருக்களும் கூடஅளவில் சிறுத்துப் போயிருக்கிறது...அன்றென் கைகளுக்கு எட்டாமல் போன பலவும்
இன்றென் கைகளுக்கு எட்டினாலும்
கை நழுவிப் போனதாயிருக்கிறது
என் பால்யத்தின் தலைகோதிய வீடு...கோலப்பொடி டப்பா வைத்திருந்த
மாடமிருந்த சுவரை இடித்து
கருமான் பட்டறை போட்டிருக்கிறீர்கள்பற்றி எரிகிறதுஉலைக் கூடமும்...!
உலைக் கூடமும்...!

மழலை உலகம்

மழலைக்குரலில்நட்பு வளர்க்கும்குழந்தைகளுக்குதேவையற்றதாகவும்தெரியாததாகவும் இருக்கிறது...தத்தம் தாய்மொழிவெவ்வேறானது என்பது...
२.
கிழமைகள் பற்றியெல்லாம் அதற்குள் அவனுக்குதெரிந்திருக்க வாய்ப்பில்லைஎன்றே நம்பினாலும்ஒரு ஞாயிற்றுக்கிழமையில்சும்மா கேட்டு வைத்தேன்'இன்னிக்கி என்ன கிழம?''சனிக்கிழம கிழம'

இறுதிப் பாடல் (கொங்கினி)

(தமிழில் - விஜயராகவன்)என்னுடைய இந்தப் பாடல்இறுதிப் பாடலாக இருக்கலாம் சொல்லிப் பெருமூச்சு விட்டது பறவை।
அடுத்த வசந்தத்தை வரவேற்க யாரிருப்பர், யாருக்குத் தெரியும்?
மூடத்தனமாய் அமங்கலச் சொல் பேசாதே அச்சானியமாய்ப் பிதற்றாதே என்றது பூக்கத் தொடங்கியிருந்த விருட்சம்.போன வருடமும் இப்படித்தான் பேசினாய் ஆனால் இன்று வந்துதான் இருக்கிறாய், இல்லையா? பல வசந்தங்கள் வந்து விட்டன ஒன்றன் பின் ஒன்றாய், நானும் அலுக்காது பூத்துக் குலுங்கியுள்ளேன் பல முறை। இதயத்தில் தீவிர வேட்டை இருந்தால் வளர்ந்து நீள்கிறது வாழும் காலமும்

ஒரு வழிப் பாதை

சிறுகதை

அண்ணாசாலை விபத்து ஒன்றில் தாயார் இறந்துபடவும், மகன் அடுத்தாற்போல், செஞ்சிக்கோட்டை உச்சியில் நின்று கைகளை உயர்த்திப் பாடுவதாக வருகிறது காட்சி. இயக்குநர் அதை விவரித்துக் உதவி இயக்குநர்களில் ஒருவனாகப் பணியில் சேர்ந்திருப்பவன் அவன். சில சமயங்களில் இயக்குநருக்கு காப்பி கொண்டு வந்து கொடுத்தும் பணியாற்றுவதுண்டு. ஆனாலும் அந்தத் துணை இயக்குநர் கூட்டத்தில் அவனே அதிகம் படித்து பட்டங்கள் வாங்கியவனாக அறியப்பட்டிருந்தான். எப்போதும் எதிலோ ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருப்பவனாகவும் சொல்கிறார்கள். கறுப்பன் என்ற இயற்பெயரை மாற்றிக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளான். மேற்படி உதவி இயக்குநரான அவன் பின் வருமாறு எண்ணிக்கொண்டிருக்கிறான். "செஞ்சிக்கோட்டை உச்சியில் சாவு பற்றிய தத்துவ கருத்துகளை உதிர்த்துவிட்டு கீழே இறங்கி வருவதற்குள் தாயார் இறந்த துக்கம் போய்விட, அங்கே ஆற்றங்கரையில், பெண்ணிடம் வம்பு செய்ய முயன்ற மூன்றுபேரை கொரிய நாட்டு அகி ஹிடோ பாணி சண்டையிட்டு வெற்றிகொள்கிறான். அநேகமாக அந்த இடத்திலும் ஒரு பாட்டு இருக்கும். இந்தப் படத்தில் பணியாற்ற நான் இத்தனை மைல் கடந்து இங்கே வந்திருக்கிறேன்.......…

சந்தி

70-களில் சில தீவிர வாசகர்கள், அவரது எழுத்துக்களை மனனம் செய்ததுபோல் ஒப்புவித்து மகிழ்ந்தார்கள், சக்தியையும், அதன் ஆதாரமாகப் பெண்மையையும், அது ஒளிவீசும் தாய்மையையும் தன் வாழ்க்கையின் அடிநாதமாக உபாசித்து, எழுத்தை ஒரு தவமாகக் கொண்டவர். அண்மையில் மறைந்த லா.ச.ர அவருக்கு நமது அஞ்சலி. **********தமிழில் கவிதை நாளுக்குநாள், பெருகி, உயர்ந்து வருகின்றது வார, மாத இதழ்கள், கவிதைக்கு இடத்தை உற்சாகமாகவே தருகின்றன। சில இதழ்கள், இலக்கிய தீபாவளி கொண்டாடின. 'குமுதம்' இதழில் எழுத்தாளர் ஜெயமோகன் வேகமாக எழுதுவதையும், திரைப்படங்களை அவர் ஊன்றி பார்பதில்லையென்றும், இயக்குனர் சேரன் சிகரெட் அதிகமாகப் பிடிப்பதையும் கூறி தன் இலக்கியப் பணியை முடித்துக் கொண்டது. ஆனந்தவிகடனில், கவிஞர் விக்கிரமாதித்யன், பீடி சுற்றும் பெண்களைப் பற்றி ஒரு நீண்ட வியாசத்தை கவிதையாக எழுதியிருந்தார், சுவைபட, ஆனால் கவிதைக்கு இறுக்கமும், சுருக்கமும்தானே அழகு. என்னை மிகவும் ஈர்த்தது, கவிதையின் மொழி, பேச்சு மொழியாக மாறும்போது கிடைக்கும் மழலையின் அழகு. அது கு. உமாதேவியின் 'அன்னாடங்காச்சி' என்ற கவிதையில் 'ஆனா। சின்ன கொடிகுத்தி…

ஒன்ஸ் மோர்

அவனுக்கு மட்டும் எப்படிதபால்பெட்டியில் கார்டு மாதிரிதன் உடம்பைக் கிணற்றுக்குள்போட்டுவிட முடிகிறது?
தன் வாழ்வைக்குப்பைக் கடுதாசி போல்எட்டாம் மாடியிலிருந்துவிட்டெறிந்து விட முடிகிறது?
தற்கொலை செய்து கொள்வது,தண்ணீரில் குளிப்பதைப் போல்மனசில் ஒட்டாத விஷயமா?
உயிர் வெறும் எச்சிலா'பச்' சென்று துப்பிவிட?
பிறவியில்உயிரை உடம்புக்கு வெளியில்ஒட்டிக்கொண்டு வந்தானாஆறாவது விரலாக?வேண்டியபோது வெட்டி விட।
பட்டப் பகலில்,முன் கூட்டியே பாலைஎதிர்த்த வீட்டில்வாங்கி வைத்துக்கொள்ளஏற்பாடு செய்து விட்டு,பின்கதவை பூனை வராமல்இழுத்து மூடி,அடுப்பில் கொதிக்கும் கிழங்குகளைஇறக்கி வைத்து மூடிவிட்டு''எதற்கும் கவலைப் படாதே,குழந்தையைப் பார்த்துக்கொள்போகிறேன்,''என்று முத்தமுடன்காகிதம் எழுதிப் பார்வைக்குத்தப்பாத இடத்தில் பத்திரப் படுத்திவிட்டு,வாசலில் சோறு வைத்துவிட்டுபொருத்தமான கறுப்பு உடுப்புகளைஇறுக்கமாகப் போட்டுக்கொண்டு,தூளிக் கயிறு, காலைவாரி விடாதவாறுஒருமுறைக்கு இருமுறைஇழுத்துப் பார்த்துவிட்டு,உத்தரக் கம்பியின்உயரத்தை அளந்து கட்டிகழுத்து முடிச்சுகளைகச்சிதமாகப் போட்டுக்கொண்டுநாற்காலியை தள்ளி விட்டுநாசூக…

ஆட்டிப்படைக்கும் உடல்

தமிழில் : அழகியசிங்கர்
கேள்வி : மஹாராஜ், நீங்கள் என் முன்னால் அமர்ந்து கொண்டிருக்கிறீர்கள்॥ நான் உங்கள் அருகில் காலடியில் அமர்ந்திருக்கிறேன்। நம் இருவருக்குமிடையில் என்ன அடிப்படையான வித்தியாசம் இருக்கிறது?
மஹாராஜ் : எந்த அடிப்படையான வித்தியாசமும் இல்லை।
கேள்வி : உண்மையில் சில வித்தியாசங்கள் இருக்கத்தான் செய்கின்றன। நான் உங்களைத் தேடி வருகிறேன்॥ நீங்கள் என்னைப் பார்க்க வருவதில்லை।
மஹாராஜ் : ஏனெனில் நீங்கள் வித்தியாசமாக இருப்பதாகக் கற்பனை செய்கிறீர்கள்। மிகச் சிறந்த மனிதர்களைத் தேடி நீங்கள் இங்கேயும் அங்கேயும் செல்கிறீர்கள்।
கேள்வி : நீங்கள் கூட ஒரு சிறந்த மனிதர்। உண்மையை அறிவதற்குத் தகுதி உடையவர்। நான் அதுமாதிரி இல்லை।
மஹாராஜ் : உங்களுக்கு ஒன்றும் தெரியாதென்றும் அதனால் தாழ்வு மனப்பான்மை கொண்டவரென்றும் எப்பவாவது சொல்லியிருக்கிறேனா? அப்படி வித்தியாசத்தைக் கண்டிபிடிப்பவர்கள் அதை நிரூபிக்கட்டும்। உங்களுக்கு என்ன தெரியாதென்பதை நான் சொல்வதில்லை। பார்க்கப்போனால், உங்களுக்குத் தெரிந்ததைவிட குறைவாக எனக்குத் தெரியும்।
கேள்வி : உங்கள் வார்த்தைகள் புத்திசாலித்தனமானவை। உங்கள் நடத்தை போற்றுதற்குரியது। உ…

நவீனவிருட்சம் நவீனவிருட்சம் நவீனவிருட்சம் நவீனவிருட்சம் நவீனவிருட்சம்

ஆகஸ்ட் 15ஆம் தேதி, ஜெகனும், மோகினியும் 'ஹாப்பி டிராவல்ஸ்' பஸ் பிடித்து மயிலாடுதுறையில் உள்ள வள்ளலார் கோயில் சன்னதித் தெருவில் காலை 5 மணிக்கு இறங்குகிறார்கள்। அவர்களை ஆவலுடன் வரவேற்று தன் வீட்டிற்கு அழைத்துப் போகிறார் அழகியசிங்கர்। அழகியசிங்கர் : நீங்கள் இருவரும் என்னைத் தேடி வந்ததற்கு நன்றி. ஜெகன் : உங்களைப் பார்க்க வேண்டுமென்று மோகினிதான் சொன்னார். மோகினி : ஜெகனுக்கு நீங்கள் எழுதிய கடிதத்தைப் படித்து சற்று வருத்தமாக இருந்தது. அதனால் உங்களைப் பார்க்க ஆவல். அழகியசிங்கர் (வீட்டிற்குள் நுழைவதற்கு முன்) : பார்த்து வாருங்கள். இந்த இடத்தில் குறுகலான படிகள். தலை இடித்துவிடும். (ஜெகனும், மோகினியும் குனிந்துகொண்டு வருகிறார்கள்) அழகியசிங்கர் (சிரித்துக்கொண்டே) : வலது காலை எடுத்துவைத்து வாருங்கள். இங்கே நான் உங்களுக்கு எதுவும் தரமுடியாது. ஆனால் பக்கத்தில் 'மயூரா லாட்ஜ்' என்ற ஓட்டல் இருக்கிறது. அங்கே போய் டிபன் சாப்பிடலாம். மோகினி : ஏன் 'மயூரா லாட்ஜில்' டிபன் நன்றாக இருக்குமா? அழகியசிங்கர் : இங்கே 'மயூரா லாட்ஜ்'தான் புகழ்பெற்றது. நான் இங்கு வந்ததிலிருந்…

இடம் ஒதுக்கப் படுகிறது

சில செருப்புகளுக்கும்
ஒதுக்கப் பட்ட பொருட்களுக்கும்
நடுவே ஒதுக்கப் பட்டிருந்தது
அந்த இடம்!

காண்பாரற்றுக் கிடந்தது
ஆங்கே ஓர் ஓவியம்
சற்றே சாயம் போன ஓவியம்
ஆங்காங்கே கொஞ்சம்
கிழிந்து போனதும் கூட
பல வெயிலுக்கும்
சில மழைக்கும்
வாடை காற்றுக்கும்
கிடந்து கிடந்து
நொந்து நொந்து
அந்த ஓவியம் பெரிதும்
பாதிக்கப் பட்டிருந்தது!

அந்த ஓவியத்திற்கு எதிரே
அழகிய புகைப் படமாய்
ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது
அதில் சில நிஜங்களின்
நிழல்கள் குடும்பமாய்
நின்று கொண்டிருந்தன
அதிலிந்த ஓவியத்தின்
நிழலும் பிரதிபலித்தது!

"செல்லம், சாப்பிடுடா கண்ணா,
இல்லேன்னா அப்பா வந்ததும்
என்னைத் திட்டுவாங்க" என்று
உள்ளே இருந்து வந்தகுரல்
வெளியே உள்ள ஓவியத்தின்
பழைய வாழ்க்கையை
புரட்டிப் பார்க்க வைத்தது!

ஓவியத்தின் அருகே
செருப்பைக் கழற்றிவிட்டுவிட்டு
உள்ளே நுழைந்த காலடிச்
சத்தத்தில் விசும்பியது
சற்றே இப்பொழுது
பசிக்கும் அந்த சுமந்த வயிறு

"டேய், என்ன சாப்பிட மாட்டேங்குற
நல்லா சாப்பிட்டாதான்
அப்பா மாதிரி ஆகலாம்!"

அந்த ஓவியத்தின்
அருகே இந்தப் பெற்றோர்களுக்காகவும்
ஒரு இடம் ஒதுக்கப் படுகிறது!

இரண்டு கவிதைகள்

ஏன் வீண் பரீக்ஷை?காலையில் ஜாகிங்க் செல்லஒரு தனி ஷூ வாங்க வேண்டும் என்றார்கள்-என்ன ரேஞ்ஜ் என்று கேட்ட கடையின் பையன்எதை எனக்குக் காண்பிப்பதென்றும்கையிலிருந்த ரூபாய் ஆயிரத்து ஐனூறுநான் வாங்கவேண்டிய ஷூவையும்முடிவு செய்தன...எங்கள் வீட்டு ஜோச்யர்எட்டில் சனியென்றுஎன் சனி காலைகளை மற்றும் மாலைகளையும்முடிவு செய்தார்..இந்த வாரம் எப்படிநான் வணங்க வேண்டிய கடவுளரையும்சொல்ல வேண்டிய தோத்திரங்களையும்முடிவு செய்தது..என் காலைகளைதண்ணீர் வரும் நேரமும்பள்ளிக்கூட ஊர்த்தியின் நேரமும்சபர்பன் ரயிலின் டைம்டேபிளும்என் எதிர் வீட்டு நண்பனும்மனைவியின் வேகமும்இன்னம் எத்தனையோ-பல உதவாவிட்டாலும்உபத்திரவம் பண்ணமுடியுமே-என் நாளைஎன் மானேஜர் உட்பட பலர்..யாருக்கு என்ன-எல்லோரும் இதே பாடானால்இது ஒன்றும் புதிய பாடல் அல்லவேஆனாலும் புதுப்புது ராகங்கள்விதவித தாளங்கள்வாத்தியங்கள் டெக்னாலஜி வழி மாறினென்ன!என் ஷூ சரியாகவே யிருந்ததுப்ராண்டடாகயில்லாவிட்டாலென்ன-என் வேண்டுதல்கள் ஏதோரு விதத்தில்எனக்கு மட்டுமின்றிதாய் மற்றும் மனைவி மக்களுக்குஇதமாகவே யிருந்தது....எல்லோருக்கும் நான்என் மனோ வாக்கு காயங்களையும்ஒப்படைத்து விட்டுஅதன் சௌகரியங்களி…