Skip to main content

Posts

Showing posts from April, 2022

வெளிச்சம்

  அழகியசிங்கர் காலையில் சூரியனைப் பார்த்து சிரம் தாழ்த்தி வணங்கினேன் ஒளியை உலகத்துக்குத் தந்தவன் அவன்தான் உலகத்தை ஆள்கிறான் அவன் கருணையால் நாமெல்லாம் வெளிச்சம் என்ற ஒன்றில்லாவிட்டால் நாமெல்லாம் ஒருவரைவொருவர் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் உண்மையில் இருட்டு குறைந்த வெளிச்சம்  See less Comments Active Write a comment…

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 156

அழகியசிங்கர் 156) நிராகரிப்பு கவிதா லட்சுமி ஒரு குழந்தையின் புன்னகையை வெறுமே தாண்டிச்செல்வது பூவைப் பறித்து இதழிதழாய் கிள்ளிப்போடுவது தனிமையிற்கூட முகமூடியன்றைத் தேடி எடுப்பது மழைக்காலத்தில் ஜன்னல்களை இறுகச் சாத்துவது தேநீர் நேரத்தில் ஒரு நேசத்தை நிராகரிப்பது என பிசாசுகளின் பெயரால் கடவுள்களின் கதவுகளைச் சாத்தியாயிற்று தீபமாக தீப்பந்தமாக சிகரட் துண்டென அல்லால் காட்டுத்தீயென தனிமையின் தரையெங்கும் ஒரு நெருப்பு உயிரோடு எரிகிறது! நன்றி : சிகண்டி (தன்னைக் கடந்தவள்) - கவிதா லட்சுமி - வெளியீடு : யாவரும் பப்ளிஷர்ஸ் - 214 புவனேஸ்வரி நகர் மூன்றாவது பிரதான சாலை, வேளச்சேரி, சென்னை 600 042 - பக்கம் : 114 - விலை : 140 1 Chandramouli Azhagiyasingar

81வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்

அழகியசிங்கர் சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 81வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை 6.30மணிக்கு (22.04.2022). எல்லோரும் கலந்துகொண்டு கவிதை வாசிக்க வேண்டும். நீங்கள் முதன் முதலாக எழுதிய கவிதையும் அப்போது உங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் சொல்ல வேண்டும். இப்போது நீங்கள் எழுதி முடித்த கவிதையையும் படிக்க வேண்டும். எல்லோரும் நிகழ்வுக்கு வந்திருந்து சிறப்புச் செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன். Topic: Virutcham Poetry Meet - 81st Meetinh Time: Apr 22, 2022 06:30 PM India Join Zoom Meeting https://us02web.zoom.us/j/85389030839... Meeting ID: 853 8903 0839 Passcode: 922220

கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி - 31

அழகியசிங்கர் சூம்  மூலமாக விருட்சம் நடத்தும் 31வது  கதை வாசிப்புக்  கூட்டம்.  சனிக்கிழமை - 15.04.2022 அன்று மாலை 6.30  மணிக்குச்  சிறப்பாக நடந்து முடிந்தது. எடுத்துக்கொண்டு  பேசிய  கதைஞர்கள்  1.  வாதூலன் 2. தாட்சாயணி    இதன் காணொளியைக் காணுங்கள்.

80 வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்

அழகியசிங்கர் சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 80வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு (09.04.2022) நடைபெற்றது. அதுன் காணொளியை இங்கே காணலாம். கவிதை வாசித்தவர்கள் எஸ்.சண்முகம், முபீன், தேவேந்திர பூபதி, பாலைவன லாந்தர்.

கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி - 30

  அழகியசிங்கர் சூம்  மூலமாக விருட்சம் நடத்தும் 30வது  கதை வாசிப்புக்  கூட்டம்.  சனிக்கிழமை - 0204.2022 அன்று மாலை 6.30  மணிக்குச்  சிறப்பாக நடந்து முடிந்தது. எடுத்துக்கொண்டு  பேசிய  கதைஞர்கள்  1. மகரிஷி 2.  சுசித்ரா   இதன் காணொளியைக் காணுங்கள்.