29.9.09

செப்டம்பர் மாத இலக்கியக் கூட்டம்


சா கந்தசாமி
யைத் தொடர்ந்து யவனிகா ஸ்ரீராம். எதைப் பேசினாலும் கருத்து முரண்பாடு இக் கூட்டங்களில் முக்கியமான அம்சம். அப்படி இருந்தால்தான் கூட்டம் சிறக்கும். பேசுபவரின் கருத்தையை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பது இல்லை. பேசுபவர் புதிய எல்லையில் கேட்பவரைக் கொண்டு செல்கிறார். அதை வைத்துக்கொண்டு மற்றவர்கள் சிந்திக்கிறார்கள்.

யவனிகா ஸ்ரீராமை தற்போதைய கவிதைகளைப் பற்றி பேசும்படி கேட்டுக்கொண்டேன். அவர் இன்றைய நிலையில் கவிதைகள் எப்படியெல்லாம் வெளி வருகின்றன என்று பேச ஆரம்பித்தார். இன்றைய கவிதையில் குடும்பம் இல்லை என்றார். யாரும் குடும்பத்தைப் பற்றி கவிதைகள் எழுதுவதில்லை என்றார். குடும்பத்தோடுதான் எல்லோரும் இருக்கிறோம். ஆனால் யாரும் குடும்பத்தை கவிதையில் கொண்டு வரவில்லை என்றார்.

என்னால் இக் கருத்தை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. என்னைப் போன்ற பலரின் கவிதைகளில் குடும்பம்தான் கருப்பொருளாக உள்ளது. என் ஆரம்ப கவிதையில் அம்மா இல்லாத குடும்பத்தைப் பற்றி எழுதியிருப்பேன். வயது முற்றிய பாட்டியை முற்றத்தில் தூக்கி எறிவதைப் பற்றி கவிதை எழுதியிருப்பேன். மேலும் ஆர்.ராஜகோபாலன், ஞானக்கூத்தன், எஸ் வைத்தியநாதன், காளி-தாஸ் முதலிய கவிஞர்கள் குடும்பத்தைப் பிரதானப் படுத்தி எழுதியுள்ளார்கள். எழுதிக்கொண்டும் இருக்கிறார்கள்.

தொடர்ந்து யவனிகா ஸ்ரீராம், இன்றைய கவிதைகளில் தத்துவம், பெரிய கோட்பாடுகள் போன்றவை இல்லை என்றார். எப்போதோ கவிதையிலிருந்து தத்துவம், கோட்பாடுகள் போன்றவை உதிர்ந்து போய்விட்டன. எனக்குத் தெரிந்து ஒரு கவிஞர் ஜே கிருஷ்ணமூர்த்தியின் தத்துவத்தில் ஆழ்ந்து கவிதை எழுதுவதிலிருந்து விலகியும் போய்விட்டார். உண்மையில் தத்துவம் கவிதை எழுதுபவருக்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தி விடும்.

யவனிகா ஸ்ரீராம் சொன்ன இன்னொரு முக்கியமான விஷயம். கவிதையில் பாலியல் சமாச்சாரங்கள். இப்போதைய கவிதைகளில் இதையெல்லாம் தைரியமாக எழுதுகிறார்கள். முன்பு மறைத்த விஷயம் இப்போது வெளிப்படையாக இடம் பெற ஆரம்பித்து விட்டது. குறிப்பாக பெண் கவிஞர்கள் முன்பைவிட இப்போது அதிகம் எழுதுகிறார்கள். இக் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். முன்பு மூடி மறைத்த விஷயமெல்லாம் கவிதையின் பாடுபொருளாக மாறி உள்ளது. இதை ஆபாசம் என்று எடுத்துக்கொள்ள முடியாது.

முன்பெல்லாம், கவிதையில் படிமம் முக்கிய அம்சமாக இருந்தது. இப்போது எழுதப்படுகிற கவிதைகளுக்கு படிமம் தேவையில்லை என்றார் யவனிகா ஸ்ரீராம். கவிதையின் இந்தத் தன்மையை .நா.சு எப்போதோ தகர்த்துவிட்டார் என்றேன் நான். அவர் கவிதைகளில் படிமம், உவமை எதுவுமில்லை. கவிதையைப் படிக்கிறபோது தென்படுகிற இறுகியத் தன்மை எப்போதோ போய்விட்டது.

கூட்டம் முடியும்போது மணி இரவு 9 ஆகிவிட்டது. இறுதியில் யவனிகா ஸ்ரீராமின் கவிதை வாசிப்புடன் கூட்டம் இனிதாக முடிந்தது. என்க்கு ஞாபகத்தில் உள்ள இந்த விஷயங்களை உடனடியாக எழுதாவிட்டால், பின்னால் மறந்து போய்விடும்.

மிகக் குறைவான பேர்கள் கூட்டத்திற்கு வந்தாலும், ஒரு நல்ல அனுபவமாக இக்கூட்டம் போய்க் கொண்டிருப்பதை யாராலும் மறுக்க முடியாது.வந்தமர்ந்து கொண்டது பூனை
கவிதைக்கான குறியீடை
இதனுள் பொருத்தும் முன்பே
வந்தமர்ந்து கொண்டது பூனை
அர்த்தப்படாத எழுத்துச்சிதறல்களில்
அர்த்தமுணர நினைக்காது
வால் வளைத்து ஓரமாய்த்தான்
சுருண்டு படுத்துள்ளது
உணரலில்லாது நிதானமாய்
வரி தாண்டியிருக்கக்கூடும்
தன்னைப்பதிவு செய்தலில்
வேறெதும் நிச்சயப்படவில்லை
கவிதை பூனையான சாத்தியம் தவிர்த்து

28.9.09

செப்டம்பர் மாத இலக்கியக்கூட்டம்


வீன விருட்சம் செப்டம்பர் மாதக் கூட்டம் 27.09.2009 மாலை 6 மணிக்கு ஆரம்பித்தது. நான் அடித்துப்பிடித்துக் கொண்டு ககஅ பில்டிங் சென்றேன். சுத்தமாக கூட்டத்திற்கு யாரும் வர மாட்டார்கள் என்பதில் பலமான நம்பிக்கையுடன் இருந்தேன். காரணம். மழை. அப்படி யாரும் வராவிட்டால் கொடுத்த காசுக்கு (ரூ.250) 3 மணி நேரம் அங்கு தனியாக இருந்துவிட்டு வருவது என்று தீர்மானித்தேன். நான் உள்ளே நுழைந்தவுடனே மழை பிடித்துக்கொண்டது. லாவண்யா என்கிற என் நண்பர், "நான் வீட்டைவிட்டு கிளம்பிவிட்டேன். மழை பிடித்துக்கொண்டது. வீட்டிற்குப் போகட்டுமா?" என்று கேட்டார். "வரவே வேண்டாம். வீட்டிற்குப் போய்விடுங்கள்," என்றேன். பழைய அழகியசிங்கராக இருந்தால், கூட்டம் ஏற்பாடு பண்ணிவிட்டு யாரும் வரவில்லை என்றால் பெரிதாக கவலைப்படுவேன். இப்போதோ தெளிவாக இருக்கிறேன். இந்தக் கூட்டம் ஏன் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டு அதற்கான பதிலையும் மனதிற்குள் வைத்திருக்கிறேன். பதில் என்ன தெரியுமா? வெறுமனே.

இக் கூட்டத்தில் பேச சா கந்தசாமியையும், யவனிகா ஸ்ரீராமனையும் கூப்பிட்டேன். சா கந்தசாமி சிறிது நேரத்தில் வந்துவிட்டார். ஆட்டோவைப் பிடித்துக்கொண்டு வந்து விட்டேன். அவரைப் பார்க்க சந்தோஷமாக இருந்தது. எல்லாவற்றையும் எளிமையாக சிந்திப்பார். சாதனை மன்னர். ஆனால் பந்தா இல்லாமல் சாதாரணமாக இருப்பார்.
உடனே பேச ஆரம்பித்துவிட்டார். யாரும் வராவிட்டால் அவரைப் பேட்டிகண்டு விருட்சத்தில் போட்டுவிடலாமா என்று நினைத்தேன். என்னுடைய டேப் ரெக்கார்டர் மக்கர் பண்ணுகிறது என்பதை அப்போதுதான் கண்டுபிடித்தேன். போன கூட்டத்தை நான் ரிக்கார்ட் பண்ணியதெல்லாம் வீணாகப் போய்விட்டது. ஃபேன்களின் சப்தம் மனிதர்களின் சப்தங்களை பதியவிடாமல் செய்து விட்டது. கூட்டத்தில் பதியவிடாமல் 2 வாரங்கள் கம்ப்யூட்டர் மக்கர் செய்துவிட்டது. அதனால் போன கூட்டத்தை பதிவு செய்ய முடியவில்லை. மேலும் என்னுடைய மெமரி ரொம்ப வீக். உடனே ஞாபகத்திலிருந்து பதிவு செய்யாவிட்டால் எல்லாம் தப்பாகப் போய்விடும்.

கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் கூடத் தொடங்கியது. கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் போய்விட்டது. மௌனி என்ற எழுத்தாளரைப் பற்றி யாருக்காவது தெரியுமா? அவர் நூற்றாண்டு கடந்து போய் 2 ஆண்டுகள் ஓடி விட்டன. அவர் எழுதியது மொத்தமே 24 கதைகள்.

மௌனியைப்பற்றி எப்படிப் பேச்சு வந்தது. பார்த்தசாரதி கோயில் எதிரில் உள்ள குளத்தில் உட்கார்ந்துகொண்டு நானும் ஞானக்கூத்தனும் பேசிக்கொண்டிருந்தோம். 'மெல்ல நகர்ந்த நூற்றாண்டு என்ற தலைப்பில் மௌனியைப் பற்றி கூட்டம் நடத்த வேண்டுமென்று கூறினார் ஞானக்கூத்தன். உடனே மௌனி என் தலைக்குள் நுழைந்துவிட்டார்.

சா கந்தசாமி, கவிஞர் வைதீஸ்வரன் போன்றவர்கள் மௌனியை நேரில் சந்தித்திருக்கிறார்.

'மௌனி ஒரு உற்சாகமானவர். என்னைப் பார்த்தாலே போதும், கந்தசாமி என்று கத்திக்கொண்டு அவர் வீட்டு சமையலறை வரைக்கும் அழைத்துக்கொண்டு போவார். உடனே உபசரிக்காமல் இருக்க மாட்டார்.....அவருக்கு எத்தனையோ துன்பம்... ஒரு பையன் டிரெயினில் அடிப்பட்டு இறந்து விட்டான்....இன்னொரு பையனுக்கு மனநிலை பிறழ்ந்து விட்டது....அவர் ஒண்ணும் சம்பாதிக்கலை....சாதாரண மெடில் க்ளாஸ் குடும்பம்...அவர் எழுத்தில எந்த அரசியலும் இல்லை..அவர் முற்போக்கும் இல்லை..பிற்போக்கும் இல்லை...
கந்தசாமி மௌனியை மட்டும் பேசவில்லை வேற சிலவற்றையும் பேசினார். "நாமெல்லாம் இங்கே கூடியிருக்கோம். ஆனா நாமெல்லாம் தனித்தனியா இருக்கோம். பொதுவா நாமெல்லாம் மனிதர்கள்.."

"பி எஸ் ராமையா மௌனியைப் பார்க்கும்போது அவர் நோட்டில் கதைகள் எழுதி வைத்திருந்தார். அந்த நோட்டிலிருந்துதான் கதைகளை மணிக்கொடியில் ராமையா பிரசுரம் செய்தார்..."

"மௌனி என்கிற பெயரைக்கூட ராமையாதான் அவருக்குவைத்தாராம்," என்றேன் குறுக்கே நான்.

"ஆமாம். அவர் இயற்பெயர் மணி. ரொம்ப வருஷத்திற்குப் பிறகு மௌனி எங்களால் கொண்டுவந்த கசடதபற பத்திரிகையில் ஒரே ஒரு கதை எழுதியிருக்கிறார். மௌனி கதைகளில் எந்த ஜாதி என்பது கிடையாது. ஏன் பெயரே கிடையாது...எல்லாரும் மனிதர்கள்...மௌனி மாதிரி இன்னொருத்தர் கதை எழுத முடியாது..."

"ஆனால் கசடதபறவில் பல எழுத்தாளர்கள் மௌனியைப் படித்து கதாபாத்திரங்களுக்குப் பெயர் வைக்காமல் பல கதைகள் வெளிவந்தன..."என்றேன்.

என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த தேவக்கோட்டை மூர்த்தி,"நான் கூட யாரையாவது பார்த்தால் இரக்கப்பட்டு எதாவது கொடுக்கிறேன். மனிதாபிமானம் இன்று எல்லாரிடமும்தான் இருக்கிறது. அதை வைத்துக்கொண்டு மௌனியை எடை போட முடியாது. அவர் படைப்புகளைப் பற்றிதான் நாம் பேச வேண்டும்.. கந்தசாமி அதுமாதிரி பேசவில்லை என்று தோன்றுகிறது.."

தஞ்சாவூரிலிருந்து வந்திருந்த சாந்தாராம் என்பவர் மிகச் சுவாரசியமாய் ராமையாவைப்பற்றி பல தகவல்களைத் தெரிவித்தார். "வயதான படைப்பாளிகள் மூவரை ஒரு பத்திரிகை பேட்டி கண்டது. அப்பேட்டியை உடனடியாக அப்பத்திரிகை பிரசுரம் செய்யவில்லை. அப்படி கிடப்பில் போட்டுவிட்டது. பல மாதங்கள் கழித்து ராமையா இறந்தபிறகு, அப்போதுதான் பேட்டி கண்டதுபோல் பிரசுரம் செய்தது,"என்றார்.

அவர் சொன்ன இன்னொரு தகவல். "ராமையா முதலில் எதுவும் எழுதவில்லை. மணிக்கொடியில் எல்லோருடைய படைப்புகளைப் பிரசுரம் செய்ய செய்ய அவரும் எழுதுவதில் தூண்டுதல் பெற்று எழுத ஆரம்பித்தார்."

எஸ் சுவாமிநாதன் பேசும்போது,"மௌனியைப் பற்றி சரியான இலக்கியத் தடம் உருவாகவில்லை. ஆனால் தமிழில் மௌனியைப் போல் ஒருவர் கிடையாது. அவர் எழுத்தில் எந்த வருணனையும் கிடையாது. அனாவசியமாய் ஒரு வார்த்தை கிடையாது... அவர் மனதிற்காகத்தான் எழுதினார். இன்னும் அவர் படைப்புகளைப்படித்து ஆராய வேண்டும்...இது போதாது என்றார."

வைதீஸ்வரன்,"மௌனி அவர்படைப்புகளை மட்டும்தான் சொல்வார்... மற்ற படைப்பாளிகள் பற்றி ஒன்றும் சொல்ல மாட்டார், என்றார்.
(இன்னும் தொடரும்)

27.9.09

பொம்மை செய்யப் பழகும் குயவர்கள்

வயலோர நீர்த்தொட்டியின்

நிழலும்

கலங்கிய குளத்து நீரின்

சுவையும்

பாதங்களை கறையாக்கும்

செம்மண் பாதைகளும்

தின்னத் தின்னத் திகட்டாத

பனங்கிழங்கும், பனஞ்சுளையும்

பௌர்ணமி நிலவாய் ஆகிப்போன

கோடை விடுமுறையின்

வெக்கையான பொழுதுகளும்

நடசத்திரங்கள் வந்து குதித்து

விளையாட ஆசைப்படும்

கண்ணாமூச்சி ஆட்டங்களும்

பத்து பைசா ஆரஞ்சு மிட்டாயின் ருசியில்

பேரின்ப பேரானந்தத்தை

அடைந்துவிடும் ஐம்பொறிகளும்

பணத்தை வைத்து

எவரையும் எடைபோடத் தெரியாத

பளிங்குகளாய் உருளும்

பால்யவெளிப் பயணங்களும்

அனைவரையும் பிள்ளையாராய்

பிடிக்க நினைத்து

குரங்காக்கிய

பள்ளியும்,சமூகமும்,ஊரும்,நாடும்

ஒரு சில பிள்ளையாருக்காக

குரங்கான நாங்களும்...
26.9.09

சிங்கம் -------சிங்கம் என்றால்
சிறுவயது முதலே
எனக்கு பயம்.
கதை கதையாக கேட்டிருக்கின்றேன்.
சிங்கம் என்று சொல்லி
ஊட்டிவிட்டால் முரண்டுபிடிக்காமல்
வாங்கிக்கொள்வேனாம்.
தொலைக்காட்சிப் பெட்டிகளில்
கூரான நகங்களால்
மான்களின் வயிற்றை
கிழித்துண்பதை பார்த்து
நடுங்கியிருக்கின்றேன் பலமுறை.
அடிக்கடி எனக்குள் வியர்க்கும்.
என்னை தின்றுவிடுமோ
என்னும் பயம்.
பலநாள் கழித்து
பரிதாப சிங்கமொன்றை பார்த்தேன்.
வண்டலூர் மிருகக்காட்சிசாலையில்
முடிக்கொட்டி,உடல்மெலிந்து
சிறுவர்கள் சப்பிப்போட்ட ஐஸ் குச்சிகளை
எதிர்க்க திராணியற்று கம்பிகளுக்கு அப்பால்.
இப்போதும் எனக்குள் பயம். வேறுவிதமாக.
என்னை தின்றிருந்தால் கூட
வந்திருக்காது இந்த பயம்.

24.9.09

சில குறிப்புகள்

மீபத்தில் ஒரு பிரயாணத்தின்போது நான் படித்தப் புத்தகம் மகேஷ்பட் எழுதிய A Taste of லைப். இப்புத்தகம் யூ ஜி கிருஷ்ணமூர்த்தியின் கடைசி தினங்களைப் பற்றி விவரிக்கிறது. மகேஷ்பட், லாறி, சூசைன் மூவர்தான் கடைசிவரை யூ ஜி யைப் பார்த்துக்கொள்கிறார்கள். யூஜிக்கு அவர் மரணம் பற்றி நிச்சயம் தெரிந்து விடுகிறது. அவர் பார்க்க விரும்புகிற நண்பர்கள் அனைவரையும் அழைத்துப் பார்க்கிறார்கள். எல்லோரையும் உடனே உடனே போகவும் சொல்லி விடுகிறார். இதாலியில் உள்ள வலேக்ராஸியா என்ற இடத்தில் அவர் மரணம் நிகழ்கிறது.

அவருடைய மரணம் குறித்து அவரிடமே உரையாடுகிறார்கள்.

"நீங்கள் இறந்தபிறகு உங்கள் உடலை என்ன செய்வது?" என்று கேட்கிறார்கள்.

"தூக்கி குப்பைத் தொட்டியில் போடுங்கள்,"என்கிறார் யூஜி.

தன்னை ஒரு அவதார புருஷராக யாரும் கருதக் கூடாது என்பதில் யூஜி கறாராக இருப்பவர். மரணத்திற்குப் பிறகு யாரும் கொண்டாடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.

மகேஷ்பட்டால் யூஜியின் மரணத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவருக்கு யூஜியின் மரணம் பல பாடங்களைக் கற்றுத் தருகிறது.

இப் புத்தகம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, முதல் பகுதியில் யூஜியின் வாழ்க்கை வரலாறாகவும், இரண்டாவது பகுதி அவருடைய இறுதி நாட்களை விவரிப்பதாக உள்ளது. ஒரு கதைப் புத்தகம் படிப்பதைவிட மிக சுவாரசியமாக இப் புத்தகம் படிக்க சுவாரியசத்தைக் கூட்டிக்கொண்டு போகிறது.

பல நிகழ்ச்சிகளை இப் புத்தகம் விவரித்தக் கொண்டே போகிறது. ஞாபகத்திலிருந்தும் மகேஷ்பட் யூஜியைப் பற்றி அவ்வப்போது எழுதிக்கொண்டே போகிறார்.

"உன்னால் எனக்கு புகழ் கிடைத்ததா? அல்லது என்னால் உனக்குப் புகழ் கிடைத்ததா?" என்று மகேஷ்பட்டைப் பார்த்து யூஜி கேட்டதாக ஒரு தகவல் வருகிறது.

பர்வீன் பாபியால் ஏற்பட்ட உறவால் மகேஷ்பட் அவதிக்கு உள்ளாகிறார். அப்போது ஒரு கேள்வி எழுகிறது. யூஜி மகேஷ்பட்டை பர்வீன் பாபியிடமிருந்து காப்பாற்றினாரா அல்லது பர்வீன் பாபியை மகேஷ்பட்டிடமிருந்து காப்பாற்றினாரா என்ற சுவாரசியமான கேள்வி எழுகிறது.

மகேஷ்பட்டை யூஜி ரஜினீஷிடமிருந்து காப்பாற்றுகிறார். யூஜியிடம் கோபம்கொண்டு மகேஷ்பட் கொலைவெறியுடன் ஒருமுறை இரவு யூஜி தங்கியிருக்கும் இடத்திற்கு வந்து கதவைத் தட்டுகிறார். "நாம் எங்கே போகப்போகிறோம்..உன் திட்டத்தை காலையில் வைத்துக்கொள்ளலாம்," என்கிறார் யூஜி.

பங்களுரில் யூஜி ஒரு இடத்தில் வாடகைக் கொடுத்து வருகிறார். யூஜிக்குப் பிறகு அந்த இடத்தை என்ன செய்வது என்று அங்குள்ளவர் கேட்கிறார். யூஜியோ அதை விபாச்சார விடுதியாக மாற்றி விடலாம் என்கிறார் ரொம்ப சாதாரணமாக.

ஜே கிருஷ்ணமூர்த்தி, ரமணர் என்று எல்லோரையும் வம்புக்கு இழுப்புவர் யூஜி. தான் சொல்வதை யார் வேண்டுமானாலும் திருத்தலாம். புத்தகமாகக் கொண்டு வரலாம். இதற்கு ராயல்டி எதுவும் கிடையாது என்று கூறியவல் யூஜி.

யூஜியின் நாட்கள் எண்ணப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் அவர் படுகிற அவதியை துல்லியமாக மகேஷ்பட் விவரித்துக் கொண்டே போகிறார். கண்ணீர் மல்க. படிக்க வேண்டிய புத்தகம்


மூன்று கவிதைகள்கவிதை (1)


கடவுளின்

கனவுகளில் ஒன்றை

திருடி

என் அலமாரிக்குள்

ஒளித்து வைக்கிறேன்

காணாது

தவிக்கும்

கடவுள்

மூளைக்குள்

விஷமேறி துடிக்கிறார்

ஜோதிமயமான

கடவுள்

காற்றுவெளியில்

சில்லிட்டுப்போய்

கருத்துப்போனார்

ஒளித்து வைத்த

கடவுளின்

கனவை

எடுத்துப்பார்க்கிறேன்

கடவுளின்

கடைவாயில்

பற்கள் முளைத்து

கோரக்குருதி

வழிகிறது

மீண்டும்

அலமாரிக்குள்

வைத்து

பூட்டிவிடுகிறேன்

கவிதை (2)

பத்து

வருடங்களுக்குப் பிறகு

கடிதம்

வந்தது

உன்னிடம் இருந்து

நிறைய

எழுதியிருந்தாய்...

நீயும் நானும்

விளையாடிய,

கதை பேசிய, கனவு விதைத்த

பொழுதுகளை...

நாம் தொடர்பற்று

இருந்த

நாட்களின்

சிறு குறிப்பும்

இல்லை

உன் கடிதத்தில்

மடித்து வைக்கிறேன்

உனக்கு பதிலாய்

நம் பழங்கதைகள் பேச...

கவிதை (3)

சொந்தமாய்

வீடு வாங்கி

குடிபுகுந்தேன்

ஒரு நகர அடுக்ககத்தில்..!

அப்பா

வந்திருந்தார் வீட்டுக்கு...

என் மகனிடம்

உங்க அப்பா

சின்ன குழந்தையாய்

இருந்த போது

சூரிய, சந்திர,

நட்சத்திரங்களுடன்

வானம் இருந்தது...

புழுதி அப்பிய

மண்ணும் இருந்தது...

மழை நனைக்கும்

தாழ்வாரம்

இருந்தது...

ஆனால்

சொந்த வீடு இல்லை

உன் அப்பாவிற்கு

சொந்த வீடு

இருக்கிறது....

பொய்யாய்

பழங்கதையாய்....

பேசும் மௌனங்கள்...எப்போதும்
பேசிக்கொண்டே
இருக்கின்றன
உன் மௌனங்கள்
எப்போதும்
பேசிக்கொண்டே
இருக்கிறேன்
உன் மௌனங்களோடு
எப்போதாவது
பேசிக்கொள்ளும்
நம் மௌனங்கள்
நம் இருவரையும்
புறம் தள்ளி.
0

இலக்கியக் கூட்ட அறிவிப்பு

27.09.2009 ஞாயிறு மாலை 6 மணி முதல் 9 மணிவரை கருத்தரங்கு அறை, தேவநேய பாவணர் மைய நூலகம், அண்ணா சாலை, சென்னை 2 கவிதை வாசிப்பும், கவிதைக் குறித்து உரையாடலும் நடைபெற உள்ளது. எழுத்தாளர் சா கந்தசாமி, மெல்ல நகர்ந்த நூற்றாண்டு என்ற தலைப்பில் மெளனியைக் குறித்துப் பேசுகிறார். கவிஞர் யவனிகா ஸ்ரீராம் கவிதைகள் குறித்து உரையாடுகிறார். கலந்து கொள்பவர்கள் கவிதைகள் வாசிக்கலாம். வரவும்.23.9.09

பழம் புத்தகக் கடை
பு
திய புத்தகங்களை விற்பனை செய்யும் கடைகளைவிட பழைய புத்தகங்களை விலைக்கு வாங்கும் - வாங்கி விற்கும் கடைகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. என்னடைய போக்குவரத்து அங்கு அதிகமிருக்கும். அந்தக் கடைகளில் பொக்கிஷங்கள் பல தேடத் தேடக் கிடைத்திருக்கின்றன. பழைய புத்தகக் கடைகளில் ரகம் பலவுண்டு. மிக மிக மலிவான மட்டமான புத்தகங்கள், பத்திரிகைகள் இவற்றோடு பழைய பிளாஸ்டிக் பொருட்கள்இ பாட்டில்கள் ஆகியவற்றையும் வைத்து வியாபாரம் செய்யும் வகை ஒன்று. மிக உயர்ந்த அரிதான நூல்களையும் பத்திரிகைகளையும் வைத்து வியாபாரம் செய்யும் கடைகள் ஒரு பக்கம். இரண்டுக்கும் இடைப்பட்ட தரத்தில் ஒரு ரகம். இந்தக் கடைகளில் வாடகை நூல் நிலைய வசதியை வைத்திருப்பார்கள். ஆனால் அந்த வகையில் வாடகைக்குக் கிடைக்கும் நூல்கள் மலிவும், சாதாரண ஜனரஞ்சமானவையுமானதாக இருக்கும். நம்மில் ஒவ்வொருவனும் வாழ்ந்து கடந்த வந்த நாட்களை நினைவூட்டும் பல புத்தகங்களை - எழுத்தை வாசிக்கும்போது தன் பழைய காலத்தில் மீண்டும் மனத்தளவில் வாழ்ந்து பார்ப்பது ஓர் அற்புத அனுபவச் சிலிர்ப்பு. அதை நமக்கு வழங்கும் வகையில் புத்தகங்களைக் கொண்டிருப்பது பழைய புத்தகக் கடைகளே. ஒருமுறை வருகை தந்து எதையாவது வாங்குபவர்கள் தொடர்ந்து வருகைத் தருவதும், தம்மிடமுள்ள பழைய நூல்களை தள்ளிவிட்டு வேறு பழையதை வாங்குவதுமான வியாபர உறவை ஏற்படுத்தும். எனக்கான வாசிப்பு தளத்தைப் பெருக்கி விஸ்தாரப் படுத்திய பழைய புத்தகக் கடைகள் அவற்றில் நான் கண்டெடுத்த அரிதான - வினோதமான சிறந்த புத்தகங்கள், பத்திரிகைகள் ஆகியவை குறித்து இந்தப் பக்கங்களில் எழுதி என் அனுபவத்தை பிறருடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
பழைய புத்தகக் கடை - புத்தகங்களோடான உறவும் சுகானுபமும் சேலத்தில் ஆரம்பமானது. சேலத்தில் முதல் அக்ரகாரப் பகுதியில் என் கவனத்தைக் கவர்ந்தது அந்தக் கடை. அந்நாளில் முக்கியமான இடமாயிருந்த சேலம் பாங்கு (இன்று இந்தியன் வங்கி) மற்றும் ஹென்றி அண்டு உல்சி ரொட்டி - கேக் கடை, சினிமா தியேட்டர்களில் போட்டுக் காண்பிக்கும் விளம்பர ஸ்லைடுகள் தயாரிக்கும் நாஷனல் ஸ்டூடியோ ஆகியவை இடம் பெற்றிருந்த கட்டிடத்தின் அறை ஒன்றில் அந்தக் புத்தகக் கடையுமிருந்தது. ஆனால் அது பழைய புத்தகக் கடையல்ல. அங்கிருந்தவை எல்லாமே புதிய புத்தகங்கள். வெளிநாடுகளிலிருந்த இறக்குமதியான ஆங்கில புத்தகங்கள். நஷ்டமேற்பட்டுவிட்டதால், கடையை மூடிவிட்டுப் போகும் முடிவில் கையிருப்புப் புத்தகங்களை அடிமாட்டு விலைக்கு விற்றுக் கொண்டிருந்தார் அதன் உரிமையாளர் வாசுமுராரி. வாசுமுராரி ஒரு எம் ஏ ஆங்கிலப் பட்டதாரி. வியாபாரத்தில் நஷ்டம் காரணமாக, புதிய புத்தகங்களை விற்பனை செய்து வந்த கடை ஒன்று திடீரென்று பழைய புத்தகக் கடையாக மாறியது.
அந்த வயதில் என்னைக் கவர்ந்ததும், எனக்குத் தேவையுமான சாகசச் செயல்களை உள்ளடக்கிய கதைப் புத்தகங்களை நானே தேடினேன். கூடவே, நிறைய வண்ணப்படங்களும் இருந்தாக வேண்டும். காமிக்ஸ் வகை புத்தகங்கள் என்னை வசீகரித்தன. அதில் "க்ளாசிக்கல்" எனும் தலைப்பில் நிறைய வெளியீடுகள் யு.எஸ் லிருந்து இறக்குமதியாகும். க்ளாசிக்ஸ் காமிக் வெளியீடுகள் அழகிய வண்ணப்படங்கள் மூலம் மிகப் பிரபலமான ஆங்கில, அமெரிக்க, பிரைஞ்சு நாவல்களை மிகச் சிறிய அளவில் தயாரித்துத் தள்ளின. பெரியவர்களின் கையிலும் இவை இருக்கும். இந்த வகையில் வாசுமுராரியின் கடையில் நான் முதல் முதலாக என் அப்பாவின் பரிந்துரையோடு வாங்கியவை. ஆர.எல்.ஸ்டீவன்ஸன், ரைடர் ஹாக்கார்டு இருவரின் கதைகள். மயிர்கூச்செரிய வைத்தன. ஆனால் வாசு முராரி எனக்கு மிகவும் ஆசையோடு சிபாரிசு செய்து படிக்கச் சொன்னது, அமெரிக்க எழுத்தாளர் ஹெர்மன் மெல்வெல் எழுதிய "மோபிக் டிக்" கதையை.
மோபிடிக் எனும் வெள்ளைத் திமிங்கலம். ஒரு சமயம் மரணத்தின் குறியீடாகவும், விடாமுயற்சியுடன் துரத்தும் பழிவாங்கலின் குறியீடாகவும் திமிங்கலத்தையும், அதை வேட்டையாடும் சமயம் அதன் வாயிக்கு தன் காலொன்றைப் பறிகொடுத்துவிட்டு கொலை வெறியோடு பழிவாங்க அதைத் தேடி கடலில் அலையும் காப்டன் அஹாப்பையும் கதையில் பார்க்கிறோம். இம்மாபெரும் நாவல் நாற்பது பக்கங்களுக்குச் சருக்கி படக்கதை வடிவில் காமிக்ஸôய் தயாரிக்கப்பட்டிருந்தது. இவற்றையெல்லாம் வாசு முராரி தூக்கி எறியும் விலைக்கு எனக்குத் தந்தார்.
இரண்டொரு வருடம் போனதும் தியேட்டரில் வெளியான மோபிடிக் ஹாலிவுட் படத்தை அப்பாவிடம் அடம் பிடித்து காசு வாங்கிப் போய்ப் பார்த்தேன். கிரிகிரிபெக் காப்டனாக ஒரு காலில் நடித்திருந்தார். ஜான் ஹ÷ஸ்டனின் டைரக்ஷன். அறுபதுகளில் இந்தக் கதையை நாடகமாக்கி அமெரிக்க நகரங்களில் பெரும் வெற்றியோடு நாடகம் போட்ட ஹாலிவுட் நடிகர் ராட் ஸ்டீகர் (தர்க் நற்ங்ண்ஞ்ங்ழ்) காப்டன் அஹாப் பாத்திரத்தில் நடித்திருந்தார.
மோபிடிக் நாவலை முழுசாக அதன் அசல் பிரதியில் படிக்கத் தேடினேன். இதை சேலம் தேர்முட்டி (தேரடி)யில் தரையில் பழைய புத்தகங்களைப் பரப்பி வைத்து விற்று வந்த நடேச ஆச்சாரியிடம் கிடைக்கப் பெற்றேன். நடேச ஆச்சாரி பற்றியும் அவரது பழைய புத்தகக் கடை பற்றியும் சொல்லுமுன் வாசுமுராரி குறித்து மேலும் கொஞ்சம் சொல்லலாமென்று தோன்றுகிறது.
கடைசியாக அவர் கடை மூடப்பட்டது. நடைப் பாதையில் அவரது கடையில் கடைசியிலிருந்த புத்தகங்கள் "எது எடுத்தாலும் எட்டணா, ஒரு ரூபாய்," என்று இரு கூறுகளாய்ப் பிரித்துக் கட்டி விற்கப்பட்டன. வாசு முராரியைக் காணோம். பக்கத்திலிருந்த நாஷனல் ஸ்லைடு ஸடூடியோ உரிமையாளர் தியாகி கந்தசாமியை அணுகி விஜாரித்தேன். இவர் எப்போதும் கதர் ஜிப்பா கதர் வேட்டி. உண்மையில் அவர் தியாகியே இல்லை. ஒரு பிரமுகரின் பலமான சிபாரிசில் தியாகிப் பட்டியலில் சேர்க்கப்பட்டு தியாகியானவர். தியாகிகளுக்கு தர்காஸ் பூமி என்று இலவசமாய் இரண்டு முதல் நான்கு ஏக்கர் வரை நிலம் தருவார்கள். அதைக் குறி வைத்து தியாகிப் பட்டியலில் பெயர் நுழைத்து தியாகியாகி நிலமும் பெற்று ஊரில் தியாகியாய் அறியப்பட்டு நிலைத்தவர்கள் நிறையவே உண்டு. கந்தசாமி அப்படியானவர். கூடவே ரகசியமான ஹோமோ செக்ஸவலிஸ்ட். இருந்தும் சொத்துக்கு வாரிசு வேண்டி கல்யாணம் பண்ணிக்கொண்டு ஒரு பையனையும் பெற்றெடுத்தவர். இவரிடம் வாசு முராரி பற்றி விசாரித்தபோது அவரைப் பழிச் சொற்களால் ஏசினார். புத்தகக் கடை இருந்தபோது இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும். பிறகு போகப் போகத் தெரிய வந்தது என்னவென்றால், தகராறு வியாபார ரீதியால் அல்ல என்றும் கந்தசாமி உபயோகப் படுத்தி வந்த பையன்களை வாசுமுராரி தன் கடையிலுள்ள வண்ணப்படங்கள் நிறைந்த காமிக்ஸ் புத்தகங்களைக் கொடுத்து தன் வசம் இழுத்துக் கொண்டதால் ஏற்பட்டதென்றும் கூறுவார்கள். வாசு முராரி கல்யாணமாகாத ஹோமோ செக்சுவாலிஸ்டு.
ஒருநாள் சிறிய சிற்றுண்டிக் கடையொன்றில் எதையோ சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது,
"ரெண்டு பட்டை சாதம்," என்ற பழக்கமான குரல் கேட்டு நிமிர்ந்தேன். எதிர் வரிசையில் சாயம்போன சட்டை வேட்டியில் இளைத்துக் காணப்பட்ட வாசுமுராரியைப் பார்த்தேன். அவரும் என்னைப் பார்த்துவிட்டு புன்னகைத்தார். தான் ஒரு அச்சாபீசில் பணிபுரிவதாகச் சொல்லிவிட்டு,
"தேர் முட்டியில நடேசாச்சாரினு ஒருத்தர் பழைய புஸ்தகங்களைப் போட்டு விற்கறார். போய்ப்பார். நம்ம கடை மாதிரி இருக்காது. பழைய புஸ்தகம்னா பக்கா பழைய புஸ்தகம்," என்றார்.
அன்று மாலையே தேரடிக்குச் சென்றேன்.
கதம்பப் பூவுக்கு, தஞ்சாவூர் கதம்பம், மதுரைக் கதம்பம் திருச்சி கதம்பம் என்று பெருமை பேசுவார்கள். சேலம் கதம்பம் இந்தக் கதம்பப் பூச்சரம் ஊருக்கு ஊர் வேறுபடுவதும் அந்தந்த ஊருக்கு பெருமை சேர்ப்பதுமாய் அமைவதில் ஒரு சில சரக்குச் சேர்க்கைகள் காரணமாகின்றன. தாழம்பு மடல், மருதாணி, தவனம், மருக்கொழுந்து மற்றும் திருநீற்றுப் பத்திரி என்பன கதம்பத்தில் இடம் பெறுவது அத்தகைய காரணங்களில் ஒன்று. இக்கதம்பச் சரம் சாலையின் திருப்பத்தில் எதிரெதிரே நிற்கும் மாரியம்மன் தேர்களின் அடிவாரத்தில் வரிசையாய் கடை விரித்து விற்கப்படும். இக் கடைகளின் கோடியில் தேர் சக்கரத்தை அணைத்தாற்போல அந்தப் பழைய புத்தகக் கடை விரிக்கப்பட்டிருந்தது. ஓர் ஈச்சம்பாய் மீது அடுக்கி வைக்கப்பட்ட நிலையில் ஒரு நூறு புத்தகங்கள். மற்றபடி வரிசை வரிசையாக விரித்துப் பர்ப்பி வைக்கப்பட்ட புத்தகங்கள், அனேகமாய் எல்லாமே வெளிநாட்டில் - குறிப்பாக இங்கிலாந்தில் பதிக்கப்பட்ட புத்தகங்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்திய காலப் பகுதியிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில் பதிப்பிக்கப் பட்டவையாவும் அடுக்கி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தவை. 1940 - களிலிருந்து வெளிவந்தவை பரப்பி வைக்கப்பட்டிருக்கும். இவற்றையெல்லாம் எடைக்குத்தான் வாங்கியிருக்க வேண்டும் என்றாலும் இதையெல்லாம் படித்திருக்கக் கூடிய மனிதர்கள் இந்த ஊரில் யார் யார் என்றுகூட யோசித்து வியந்ததுண்டு.
அப்போதைய என் ஆங்கில அறிவுக்கும் வாசிப்பு முதிர்ச்சிக்கும் நடேச ஆச்சாரியின் பழம் புத்தகக் கடை என்னை சிறிதும் கவரவேயில்லை. வாரம் ஒருமுறை தேரடியிலுள்ள ராஜ கணபதியைத் தரிசித்துவிட்டு வரும் சமயம் மட்டும் அந்தக் கடையை நின்று கவனிப்பேன். நடேச ஆச்சாரி பகலெல்லாம் தச்சு வேலை செய்பவர். கருத்த பருத்த தோள்கள் கொண்ட நெடிதுயர்ந்த உடல். வெள்ளை வெளேரென்ற வேட்டி தாடியும். எட்டு வயதில் அவர் ஜாடையில் ஒரு பையன். மனைவி இறந்து விட்டதாய்க் கேள்வி. அப்பாவுக்கும் இந்தப் புத்தகக் கடைக்காரருக்கும் புத்தகத்தைக் கலைத்த விஷயமாய் ஏற்பட்ட சண்டை நெருக்கமான நட்பில் கொண்டுவிட்டது வேறு கதை. டேவிட்கூப்பர் போன்ற ஆங்கிலக் கவிகளின் கவிதைகள் கொண்ட புத்தகத்தை அப்பா கொண்டு வருவார். தான் இண்டர் மீடியட்டில் படித்து ரசித்ததை இந்த நூலிலிருந்து படித்து எனக்கு விளக்கிப் படிக்கவும் வற்புறுத்துவார். மர்டாக் ரீடர், கிங் ரீடர் போன்ற ஆங்கில வாசகங்களை நடேசாச்சாரியின் பழம் புத்தகக் கடையிலிருந்து கொண்டு வந்து பாடஞ்சொல்லித் தருவார். இவை அவர் காலத்தில் பள்ளிகளில் பாடப் புத்தகங்களாயிருந்தவை என்பார். இங்கிலாந்தில் அச்சிடப்பட்டவை. ஒரு மாதிரி புத்தியை ஆங்கிலத்தனமாய் வளர்த்து வைத்தார். கொஞ்சம் கொஞ்சமாய் நடேசாச்சாரியின் பழம் புத்தகக் கடை என்னையும் கவர்ந்தது. வண்ண ஓவியங்கள் நிறைந்த கிரேட் பிரிட்டனில் பதிப்பிக்கப்பட்ட ஷேக்ஸ்பியர் கதைகள், நாடகங்கள், சர்வாண்டிஸ்ஸின் "டான்க்வையோட்டே" முதலியவற்றை வாங்கினேன். இந்த சமயம் அமெரிக்க பதிப்பில் சுருக்கப்படாத அசல் மோபிடிக் கிடைத்தது. கடலும் திமிங்கல வேட்டையும் பாய் மரக் கப்பலும் என்னைக் கவர்ந்தன.
எழுத்தாளனாய் வளர்ந்த காலத்தில் தீபம் இதழில் வெளியான எனது பல சிறுகதைகளில் "பேர் கொண்டான்" ஒன்று. இது நடேச ஆச்சாரியையும், என் அப்பாவையும் அவர்கள் உறவையும், பழம் புத்தகக் கடையையும் வைத்து எழுதியது. இதில் நானம் ஒரு பாத்திரம். விசேஷ நாட்கள் பண்டிகையின்போது வீட்டில் செய்யும் தின்பண்டங்கள், பாயசம் ஆகியவற்றை எடுத்துப்போய் அப்பா நடேசாச்சாரிக்கும் அவர் பையனுக்கும் தருவார். பிறகு விலைக்கு வாங்காமல் அங்கிருந்து நிறைய புத்தகங்களை எடுத்து வந்து படித்துவிட்டுக் கொண்டு போய் வைப்பார். தான் ரசித்த வரிகளை, இடங்களை அப்பா பேனாவால் அடிக்கோடிட்டு வைப்பார். ஆச்சாரி தமிழைக்கூட எழுத்து கூட்டித்தான் படிப்பார்.
"இப்படி எம் புஸ்தகத்தில படிச்சிட்டு கோடு கோடா போட்டு வைக்கிறியே, அப்படி என்ன அற்பும் அதிலயிருக்கு?" என்று அப்பாவிடம் கேட்டபோது, அப்பா அதை விளக்கிவிட்டு படித்துக் காட்டுவார். இருவரும் சில நாட்களில் அருகிலிருந்த வில்வாத்ரி பவனில் காபி சாப்பிடுவார்கள்.
அப்பா இறந்தபோது நடேச அச்சாரி தன் பையனோடு வீட்டுக்கு வந்திருந்து அப்பாவின் உடலுக்கு வணங்கி இறுதி மரியாதை செலுத்தினார். பல ஆண்டுகள் போய், சென்னையிலிருந்து சேலம் சென்ற சமயம் நரைத்த முடியுடன் கண்ணாடியணிந்து கண்மூடி தேரடியில் அமர்ந்திருந்த நடேசாச்சாரியைப் பார்த்தேன். கடையில் மலிவான தமிழ் செக்ஸ் புத்தகங்கள், மாத நாவல்கள், பாட்டில்கள், பிளாஸ்டிக் சாமன்கள் ஆகியவை நிறைந்திருந்தன. சிறு மர அலமாரி ஒன்றில் ஒன்றரை நூற்றாண்டுக்கு முன் இங்கிலாந்தில் பதிப்பிக்கப்பட்ட ஆங்கில நூல்கள் கொஞ்சம் இருந்தன. எடுக்கும்போதே பிஸ்கெட் உடைவதுபோல் அவற்றி தடித்த தாள்கள் உடைந்தன. அவற்றின் பல பக்கங்களில் பல பத்திகள், வரிகள் பேனாவால் அடிக்கோடிடப் பட்டிருந்தன. என் கண்கள் பனித்தன.
"அதையெல்லாம் எடுக்காதீங்க வைங்க," என்று அதட்டலாகச் சொன்னார் அவர்.
"இதெல்லாம் வேணும். என்ன விலை?"
"அதெல்லாம் விற்கிறதுக்கு இல்லே. வச்சிடுங்க."
"ஏன்?"
"இல்லேன்னா போக வேண்டியதுதானே?"
நான் யார் என்பதை சொன்னபோது ஆச்சரியத்தோடு பார்த்துவிட்டு,"ஒங்கப்பாவும் நானும் பழகினத்துக்க அது சாட்சி. அதை எடுத்து அப்பப்ப பார்த்துக்கிட்டிருப்பேன். அவரு இருக்கிறமாதிரியே இருக்கு. அவரை மறுபடியும் எங்கிட்டேயிருந்து பிரிச்சிடாதே தம்பி" என்றார் நடேசாச்சாரி.


19.9.09

பார்டர் அனுபவங்கள்..நான் இப்பொழுது ஒரு
பள்ளத்தாக்கிற்கு முன்புள்ளேன் ..

பனிக்கட்டிகள் என்னை சுற்றி
படர்ந்துள்ளது ..

வாடைக்காற்று இதயத்தை

தொட்டு செல்கிறது ..

பெயர் தெறியா பறவையொன்று
"
க்கி க்கி" என சப்தமிட்டுக்கொண்டே
வானில் பறந்து கொண்டுள்ளது ..

கவிதை புத்தகம்

கையில் வைத்துள்ளேன்

கம்பனி கமாண்டரின்
விசில் சுப்தம் கேட்கிறது ..

சாய்த்து வைத்திரிந்த
இன்சாஸ் துப்பாக்கியை
எடுத்துகொண்டேன் ..

இப்போது


கடமையையும்
கவிதையையும்
சுமந்துகொண்டு செல்கிறேன் ..16.9.09

நான்,பிரமிள்,விசிறி சாமியார்.......10
பஸ்ஸில் பயணம் செய்துகொண்டிருக்கும்போது சிலசமயம் பிரமிளிடம் கேட்பேன். கவிதை எப்படி இருக்க வேண்டும்? என்று. பிரமிள் எளிதில் பதில் சொல்லமாட்டார். கேட்காததுபோல் இருப்பார். பின் சொல்வார், 'உயிருள்ளதாக இருக்கவேண்டும்,' என்று. பின் அதைப் பற்றி தொடர்ந்து விளக்கமாக எதுவும் சொல்லமாட்டார். எனக்கு அவர் சொன்னதைக் கேட்டு இன்னும் சில கேள்விகள் எழும். உயிருள்ளதாக இருக்க வேண்டுமென்பது சரி, எப்படி அதைக் கண்டு பிடிப்பது. பிரமிளின் இன்னொரு பழக்கம். அவர் யாரையும் மதிப்பதில்லை. சிலர் பெயர்களைக் கேட்டால் கடுமையாக தாக்க ஆரம்பித்துவிடுவார். ஒரு சிறு பத்திரிகை என்றால் குறைந்த பட்சம் 1000 பேர்களுக்குள்தான் வாசிப்பார்கள். பிரமிள், 'படிப்பவர் எண்ணிக்கை அதிகமானால் அது சிறு பத்திரிகை இல்லை,' என்பார்.

பிரமிளும் நானும் ஒருநாள் நடந்துபோய்க் கொண்டிருந்தோம். தியோசிபிகல் சொசைட்டி முழுவதும் சுற்றி வந்தோம். அங்குள்ள விதவிதமான மரங்களைப் பற்றி பிரமிள் பலவிதமாக சொல்லிக்கொண்டே வந்தார். அவர் மரங்களைக் காட்ட காட்ட நான் அப்போதுதான் அதை புதிய விதமாக அறிந்து கொண்டதுபோல் தோன்றியது. ஒவ்வொரு மரத்தின் விசேஷத்தைப் பற்றி விவரமாகச் சொல்வார். பலமுறை அவர் அங்கு வந்து போனவராகத் தோன்றியது.

ஒரு இடத்தில் நின்றார். அங்கு ஒரு பெரிய மரம் இருந்தது. அந்த மரத்தைப் பற்றி விவரித்து வந்தவர், அங்குள்ள ஒரு பெரிய பாறாங்கல்லை எடுத்துப் புரட்டினார். பாறாங்கல்லின் அடியில் ஒரு கருத்தத் தேள் இருந்தது. பார்த்தவுடன் நான் திகைத்துவிட்டேன். தேள் என்றார் பிரமிள். என்னடா இது வம்பாப் போச்சு என்று தோன்றியது. இவரோடு சுற்றினால் தேள் எல்லாம் தட்டுப் படுகிறது. பின் ஒரு வற்றிய குளத்தை நோக்கி நாங்கள் நகர்ந்தோம். பிரமிள் ஒரு காகிதத்தில் அவர் பெயரை எழுதி சுருட்டி அந்தக் குளத்தில் வீசி எறிந்தார். பின் என் பெயரையும் எண் கணிதப்படி எழுதி வீசி எறிந்தார். எண் கணிதப்படி பிரமிளிடம் யாராவது அறிவுரைக் கேட்டால் தொலைந்தோம். தமிழ் எழுத்தாளர்களின் பலருடைய பெயர்களை அவர் அப்படித்தான் மாற்றியிருக்கிறார். என் ஜெயராமன் என்ற பெயரை நாராணோ ஜெயராமன் என்று மாற்றியிருக்கிறார். சங்கர் என்ற பெயரை சுப்பரபூ சங்கர் என்று மாற்றியிருக்கிறார். இப்படிப் பெயரை மாற்றி எழுத ஆரம்பித்தவர்கள் எல்லாம் பின்னால் எதுவும் பெரிதாக எழுதாமல் போய்விட்டார்கள் என்று தோன்றுகிறது. என் பெயரையும் விஸ்வ ரூப கிரி என்று வைத்துக்கொள்ள சொன்னார். அவர் என்னை கிண்டலடிப்பதுபோல் தோன்றியது.

ஒருநாள் வீட்டிற்கு வந்தார். 'இன்னிக்கு முக்கியமான நாள்,' என்றார். 'என்ன?' என்று கேட்டேன். 'என் பிறந்தநாள்,'. ஏனோ அவர் எத்தனாவது பிறந்தநாள் என்பதைக் குறிப்பிடவில்லை. நான் சரவணா ஓட்டலுக்கு அழைத்துப்போய் டிபன் வாங்கித் தந்தேன். பொதுவாக பிறந்தநாள்கள் ஞாபகத்தில் இருப்பதில்லை. இன்று என் பிறந்தநாள் என்று கூட நினைக்காமல் பல ஆண்டுகளைக் கடத்தியிருக்கிறேன்.

நடந்து போய்க்கொண்டிருக்கும்போது, பிரமிள் ஒருமுறை குறிப்பிட்டார். அவர் தலை முடியை அவர்தான் திருத்தம் செய்து கொள்வாராம். எனக்கு கேட்க ஆச்சரியம். 'இன்னொருவர் என் தலையைப் பிடிப்பது எனக்குப் பிடிக்காது.' பிரமிளுக்குக் கோபம் வந்தால் கண்டபடி திட்டிவிடுவார். ஒரு திறமையான கலைஞன் வசிப்பதற்கு உகந்த இடம் இல்லை. பொது கழிப்பறை உள்ள இடத்திற்குப் பக்கத்தில் அவர் ஒரு அறையில் குடியிருந்தார். யாரும் அவரை அந்த இடத்திற்கு வந்து பார்க்க மாட்டார்கள். மழைக் காலத்தில் அங்கு வசிக்கவே முடியாது. அப்படிப்பட்ட மோசமான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருந்த பிரமிளை ஒரு இலக்கிய நண்பர் அமெரிக்காவில் உள்ள நிலையை ஒப்பிட்டு ஏதோ சொன்னார். அதைக் கேட்டவுடன், பிரமிளுக்கு படு பயங்கரமாக கோபம் வந்து அந்த இலக்கிய நண்பரை ஒரு வழி பண்ணிவிட்டார். திட்டோ திட்டு என்று திட்டி விட்டார்.

(இன்னும் வரும்)


14.9.09

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்......18பூனையாய்...

புதுவை சீனு. தமிழ்மணி

வீடில்லை
பல்லாண்டுகளாக
கட்டச்சொல்லி
அலுத்துப் போனாள் -
இல்லாள்
8 x 10 அளவுள்ள வீட்டில்
இல்லாள், இருமகள்கள், வீடு முழுக்கப் புத்தகங்கள்
எனப் படுக்கவும் முடியாத
வீட்டில்
பூனையொன்று வந்தது -
மூன்று குட்டிகளோடு
வாடகை வீட்டில்
வாடகை இல்லாமல்


பிசாசுகள் ஒளிந்து கொள்ளும் கவிதைகள்பிசாசுகள் கவிதைக்குள்
ஒளிந்து கொள்வதில்லை
கவிதையின் சூடு தாங்காமல்
பிசாசுகள் செத்துவிடக்கூடும்

பிசாசுகள் மனித உடலில்
எவ்வாறு குடியேறுகின்றன
எப்படி வாழ்கின்றனென்பதை
கவிதைகள் அறியும்.

பிசாசுகள் விரட்டிய கவிதைகள்
மண்ணில் நெடுங்காலம்
வாழ்ந்திருக்கின்றன

பிசாசுகளின் புகைபடங்கள்
யாரிடமுமில்லை.
அவை எங்கிருந்து பயிராகின்றன.
எப்படி இரவுகளை கடக்கின்றனென்பதை
கண்டுபிடிக்கின்றன கவிதைகள்.

பெண் உதட்டின் வாசனை பிடித்து
நுழையும் பிசாசுகளை
கவிதைகள் காட்சிப் படுத்துகின்றன

இந்தக் கவிதைக்குள்
கொதிக்கும் நீரை செலுத்துகிறேன்.

ஒளிந்திருக்கும் பிசாசுகள்
அலறியடித்துச் செல்லக்கூடுமென்று
பிசாசுகளுக்கு செல்லமாக
நீங்கள் பெயர் வைத்திருக்கலாம்

அடிமைத்தனமென்றோ
அவமானமென்றோ
அச்சமென்றோ ஏதாவது ஒன்று.

பிசாசுகளை
அடையாளம் காணுங்கள்
அதைத் துரத்தும் வழிகளை
சொல்லித் தரக்கூடும் ஏதோவொரு கவிதை.

13.9.09

சிறுமழை -----------
முன்னிருக்கையில்
அமர்ந்திருக்கும் சிறுமி
ஓய்ந்து முடிந்த
மழை முத்துக்கள் சொட்டும்
பேருந்தின் ஜன்னல் கம்பிகளை
விரலால் தொட்டு தொட்டு
வெளியே சுண்டுகிறாள்.
சிறுமழையொன்று பெய்கிறது.12.9.09

விருட்சம் இலக்கியச் சந்திப்பு
அன்புள்ள நண்பர்களே,

வணக்கம்.


உங்களுடன் நவீன விருட்சம் ஏற்பாடு செய்த கூட்டத்தைப் பற்றி சொல்ல வேண்டுமென்று நினைத்தபோது, 2 வாரங்கள் கணினியின் மூளை மழுங்கிவிட்டது. கூட்டம் பற்றியும் அதில் கலந்துகொண்டவர்களைப் பற்றியும் கருத்தும், அவர்களுடைய புகைபடங்களையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். 16.08.2009 அன்று நடந்த கூட்டம் நவீன விருட்சம் நடத்தும் 51வது கூட்டம். நவீன விருட்சத்தின் கடைசிக் கூட்டம் 2003ல் நடந்தது.

ஒரு கூட்டத்தைப் பற்றி உடனே எழுதாவிட்டால், கூட்டத்தில் என்ன பேசினோம் என்பது மறந்தே போய்விடுகிறது. என் விஷயத்தில் இது இன்னும் மோசம். முக்கிய பேச்சாளர்களாக சிவக்குமாரும், ஞானக்கூத்தனும் கலந்து கொண்டார்கள். ஆள் சேகரிக்கும் கூட்டம் இல்லாததால் வருபவர்கள் வரட்டுமென்று விட்டுவிட்டேன். 25 பேர்கள் கலந்து கொண்டார்கள். இந்த 25 பேர்களும் முக்கியமானவர்கள். எல்லோரும் படைப்பாளிகள். பார்வையாளர்கள் என்பது படைப்பாளிகளாகவும், பார்வையாளர்களாகவும் மாறி மாறி தோற்றம் தந்தார்கள்.

இக் கூட்டம் தேவநேய பாவணர் மைய நூலகத்தில் 16.08.2009ல் மாலை 6மணிக்குமேல் நடைபெற்றது. முன்பு இக் கருந்தரங்கு அறையின் வாடகை ரூ.50. இப்போது ரூ.250. ஆனால் முன்பை விட புதிய பொலிவுடன் அறை காட்சி தந்தது. முக்கியமாக இக் கூட்டம் நடைபெற வேண்டிய இடம் அண்ணாசாலை. இங்கிருந்து எல்லா இடங்களுக்கும் போய்ச் சேர வசதியாக இருந்தது.

இக் கூட்டம் நடைபெறும் இடத்தைப் பதிவு செய்ய நான் பட்டப்பாடைப் பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும். கூட்டம் நடத்துவதற்கு இந்த தேதியில் இடம் உள்ளதா என்று கேட்க வேண்டும். பின் இந்த நேரத்தில் இந்தத் தேதியில் இடம் கிடைத்தால் உடனே பணம் கட்ட வேண்டும். பின் ஒரு கடிதம் எழுதி அக் கடிதத்தை ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்திற்குச் சென்று அனுமதி பெற வேண்டும். கொஞ்ச நாட்களாய் பிரச்சினையாக இருப்பதால் போலீஸ் அனுமதி இன்றி கூட்டம் நடத்த முடியாது.

நான் என்னைப் பற்றியும் கொஞ்சம் விளக்க வேண்டும். 31 ஆண்டுகளாக ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணிபுரிகிறவன். அலுவலகத்திற்குக் காலை 7.30 மணிக்குக் கிளம்பினால், இரவு சுமார் 7.30 க்கு வீட்டிற்கு வந்துவிடுவேன். அலுவலகத்திற்கு வந்தால் துணியைப் பிழிவதுபோல் பிழிந்துவிடுவார்கள். எளிதில் தப்பித்து வரமுடியாது. கூட்டத்தை எப்படி நடத்துவது? தேவநேய பாவணர் மைய நூலகத்திற்கு 5.30 மணிக்குள் சென்று எப்படி பணம் கட்டுவது. நான் பணிபுரியும் இடம் அஸ்தினாபுரம். கிட்டத்தட்ட குறைந்தபட்சம் 20 கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பவன். அங்கிருந்து வருவது என்பது அசாத்தியமான திறமை வேண்டும்.

யாராவது நமக்காக இந்தப் பொறுப்பை எடுத்துக்கொண்டு உதவி செய்வார்களா என்று எதிர்பார்த்தால், இந்தக் கூட்டத்திற்கு வந்த 25 பேர்களும் வர மாட்டார்கள். லாவண்யா என்ற இலக்கிய நண்பர் எனக்காக போய் பணம் கட்டிவிட்டு வந்தார். பின் நான் ஏதோ காரணத்திற்காக விடுமுறை எடுத்துக்கொண்டு அனுமதி சீட்டு பெற்றுக்கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்று பல மணிநேரம் காத்திருந்தேன். அப்போதுதான் தோன்றியது ஏன் இதுமாதிரி கூட்டம் நடத்த வேண்டுமென்று.

போலீஸ்காரரிடம் நான் நடத்துவது இலக்கியக் கூட்டமென்றும், 50 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய புதுக்கவிதைக்காக இக்கூட்டம் என்று கூறினேன். அவருக்கு ஒன்றும் புரியவில்லை. யார் முக்கிய புள்ளி கூட்டத்திற்கு வருகிறார்கள் என்று கேட்டார். நாங்கள் எல்லோரும் முக்கியப் புள்ளிகள் என்றேன் சிரித்துக்கொண்டே.

இப்படியெல்லாம் ஏற்பாடு செய்தபிறகு நான் கூட்டத்திற்கு யார் வருவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. விரும்புவர்கள் வரட்டுமென்று இருந்துவிட்டேன். அல்லது கூட்டத்தில் பேசுபவர்கள், பின் நான் நிச்சயமாக வருவோம் என்று எண்ணியிருந்தேன். பின் கூட்டத்திற்கு 25 பேர்கள் வரை வந்துவிட்டார்கள். 'எழுத்து' பத்திரிகை தொடங்கி இன்றைய சிறு பத்திரிகைகள் பற்றி சிவக்குமார் உரை நிகழ்த்தினார். புதுக்கவிதையின் தோற்றம் பற்றி ஞானக்கூத்தன் பேசினார். பின் பலர் கவிதைகள் வாசித்தார்கள். எல்லாவற்றையும் காசெட்டில் பதிவு செய்திருப்பதால், என்ன பேசினார் என்பதை முடிந்தவரை எழுத முயற்சி செய்கிறேன்.
(இன்னும் வளரும்)11.9.09

புரியாத பிரச்சினை
சிறுகதை


த்மநாபனிடமிருந்து போன் வந்தது. ஆச்சரியமாக இருந்தது. கடந்த 4 ஆண்டுகளாக பத்மநாபனிடமிருந்து போன் வரவே இல்லை. அவர் பதவி மாற்றம் பெற்று பந்தநல்லூருக்குச் சென்ற பிறகு என்னுடன் தொடர்புJustify Full கொள்ளவில்லை. சென்னையில் இருக்கும்போது நானும் அவரும் முக்கியமான நண்பர்கள். எல்லா இடங்களுக்கும் ஒன்றாகப் போய்விட்டு ஒன்றாக வருவோம். மேலும் நாங்கள் இருவரும் மேற்கு மாம்பலத்தில்தான் இருக்கிறோம். இன்னும் நானும் அவர் குடும்பமும் மேற்கு மாம்பலத்தில்தான் இருக்கிறோம். அவர் மட்டும் பந்தநல்லூரில் இருக்கிறார். உண்மையில் பந்தநல்லூர் கிட்டத்தட்ட மயிலாடுதுறையிலிருந்து 28 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. மயிலாடுதுறையில் அவர் தங்கியிருக்கிறார். நான் தலைமை அலுவலகத்தில் சுருக்கெழுத்தாளராக பணிபுரிந்து கொண்டு வருகிறேன்.

பத்மநாபனை பிறகு ஒருமுறைதான் பார்த்தேன். சற்று இளைத்து இருந்தார். அப்போது ரொம்ப நேரம் அவருடன் பேச முடியவில்லை. எங்கள் அலுவலக விதிப்படி தமிழ்நாட்டிற்குள் ஒருவர் மாற்றல் பெற்று போனால் அவர் எந்த இடத்திற்குப் போகிறார்களோ அங்கயே இருக்க வேண்டும். உண்மையில் பத்மநாபன் போனபிறகு எனக்கு கை உடைந்த மாதிரி ஆகிவிட்டது. நாங்கள் இருவரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைதோறும் சரவணா ஓட்டலில் காப்பியும், பொங்கலும் சாப்பிடாமல் இருக்க மாட்டோ ம். பத்மநாபன் இல்லாமல் எனக்குத் தனியாக அங்கு போகப் பிடிக்கவில்லை.

பத்மநாபனை நான் மறந்தே விட்டேன். திடீரென்று அவர் குரலைக் கேட்டவுடன் எனக்கு ஆச்சரியமான ஆச்சரியம். அதுவும் காலை நேரத்தில்.

''என்ன பத்மநாபன்?...எங்கிருந்து பேசுகிறீர்கள்? சென்னைக்கு வந்துவிட்டீர்களா?''

''வந்துவிட்டேன். டெம்பரரி டிரான்ஸ்வர்...வந்து ஒரு மாசம்தான் ஆகிறது...''

''எங்கே இருக்கிறீர்கள்?''

''ஹஸ்தினாபுரம்....''

''சொல்லவே இல்லையே?''

''என்னத்தைச் சொல்வது? டெம்பரரிதானே? ஆமாம்... உங்க பெண் பெயர் என்ன?

''ஏன்?

''சுருதிதானே?''

''ஆமாம்..''

''என்ன பண்றா?''

''பி டெக்...எம்ஐடியிலே பண்றா..''

''நினைச்சது சரியாப்போச்சு..''

''என்ன நினைச்சீங்க..''

''சுருதி மாதிரி ஒரு பெண் இருந்தாள். அவளாக இருக்குமோன்னு நினைச்சேன்...அது சரியாப் போச்சு.....அவளுக்கு என்னை அடையாளம் தெரியலை...''

''நாமதானே அடிக்கடிப் பார்த்துப்போம்...இந்தக் காலத்துப் பசங்களுக்கு எங்கே அடையாளம் தெரியப்போறது..''

''நான் சொல்ல வந்தது வேற விஷயம்...நீங்க சீரியஸ்ஸா கவனிக்க வேண்டிய விஷயம்...எனக்கு ஆபிஸ் 8.30 மணிக்கு...நான் மாம்பலத்திலிருந்து காலையிலேயே 7.30க்கெல்லாம் ஓடணும்...டெய்லி ஓடறேன்..நான் போற சமயம் எம்ஐடியில் படிக்கிற பசங்களும் போவாங்க...ஒரே கூட்டமா இருக்கும்....அங்கே படிக்கிற ஆண்களும் பெண்களும் சிரிச்சு சிரிச்சுப் பேசிண்டே போவாங்க...தினமும் உங்கப் பொண்ணு சுருதியைப் பாக்கறேன்....நான் உங்க பிரண்ட்ங்கறதே அவளுக்குத் தெரியலை..அவளைச் சுத்தி நாலைஞ்சு ஆம்பளைப் பசங்க..எல்லாம் படிக்கிற பசங்க.. அந்த கண்றாவியை நானே சொல்ல விரும்பலை..அந்தப் பசங்க சும்மா இருக்கமாட்டாங்க..சுருதிகிட்ட வந்து ரொம்ப நெருக்கமா பேசுவாங்க..யாராவது ஒரு பையன் அவள் தோள்மேல கூட கையைப் போடுவான். ஒருத்தன் கன்னத்தில கிஸ் பண்றான்...சுருதிகிட்ட சொல்றான்...உதட்டுலதான் பண்ணக்கூடாதாம்....கேட்க சகிக்கலை..''

பத்மநாபன் சொன்னதைக் கேட்டவுடன் எனக்கு சொரேர் என்றிருந்தது. ''என்ன பத்மநாபன் சொல்றீங்கன்னு....'' சத்தம் போட்டு கேட்டேன்.

''தப்பா எடுத்துக்காதீங்க...கடந்த ஒரு வாரமா எனக்குத் தயக்கமா இருந்தது. இத எப்படி உங்ககிட்ட சொல்றதுன்னு....இத எப்படியாவது தடுக்கணும். நீங்க உங்க பெண்ணுக்கிட்ட எதுவும் பேசாமல் இத எப்படியாவது டீல் பண்ணணும்...ஜாக்கிரதையா டீல் பண்ணனும்..''

''பத்மநாபன் ரொம்ப நன்றி...இத எப்படியாவது சரி செய்யணும்...சுருதி நல்லப் பொண்ணு...கொஞ்சம் வெகுளி...இந்த விஷயத்தில நீங்களும் எனக்கு உதவி செய்யணும்..''

பத்மநாபனுடன் பேசிய விஷயத்தை வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை. மனைவியிடம் சொன்னால் தேவையில்லாமல் கவலைப்படுவாள்....அன்று முழுவதும் சங்கடமாக இருந்தது. மாலையில் சுருதி காலேஜ் போயிட்டு வந்தவுடன், அவளை எப்போதும்விட அதிகமாக கவனித்தேன்... ''என்ன எப்படிப் போயிண்டிருக்கு படிப்பெல்லாம்...'' என்று கேட்டேன்..''நல்லாதானே இருக்கு..''என்றாள் சுருதி.

''உன் காலேஜ்ஜிலே ராக்கிங்லாம் கிடையாதா?''

''அதெல்லாம் கிடையாது...தெரிஞ்சா துரத்திடுவாங்க வீட்டுக்கு..காலேஜ் திறந்து 4 மாசம் மேலே ஆயிடுத்தே..''

அன்று இரவு எனக்கு சரியாத் தூக்கம் வரலை... மறுநாள் காலையில் சுருதி காலேஜ் கிளம்பியவுடன் நானும் கிளம்பினேன். எதுவும் சுருதிக்குத் தெரியாது. அவள் ஏறுகிற ரயில் கம்பார்ட்மெண்டில் நானும் ஏறினேன். சுருதிக்குத் தெரியாமல்..நாலைந்து ஸ்டூடன்ஸ் சுருதியைப் பார்த்தவுடன் உற்சாகமாக கையசைத்துச் சிரித்தார்கள். சுருதி அவர்கள் இருந்த பக்கம் நகர்ந்தாள்..

''உன்காகத்தான் இடம் போட்டிருக்கேன்..,'' என்றான் ஒருவன் இளித்தபடியே.

இந்த சமயத்தில், ''சுருதி...'' என்று நான் சத்தம் போட்டேன். சுருதி திரும்பிப் பார்த்தாள்.. என்னைப் பார்த்தவுடன் திகைப்பு அவளுக்கு..''அப்பா நீங்களா?'' என்றாள்.

''இங்க என் பக்கத்தில் வந்து உட்காரு,'' என்றேன். சுருதி என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.

''அவர்கள் எல்லோரும் யாரு?'' என்று கேட்டேன்.

''ஃபிரண்ட்ஸ்,'' என்றாள்.

சுருதி பேசாமல் என் பக்கத்தில் இருந்தாள். சுருதியைக் கிண்டல் செய்யும் ஃபிரண்ட்ஸைப் பார்த்தேன். எல்லோரும் படிக்கிறவர்கள். கையில் சின்ன நோட் மாதிரி வைத்திருந்தார்கள். எல்லோர் கையிலும் செல்போன்...வண்டி அடுத்த ஸ்டேஷனில் நின்றவுடன், அவளுடைய ஃபிரண்ட்ஸ் இறங்கி வேற கம்பார்ட்மெண்ட் போய்விட்டார்கள்.

''தினமும் இவர்களோடத்தான் காலேஜ் போயிண்டிருக்கிறாயா..?''

''ஆமாம்..''

''அவர்கள் தினமும் உன்னை கிண்டல் செய்கிறார்களாமே?''

''இல்லையே..''

''பத்மநாபன் சொல்றார்...இல்லைங்கறீயே..''

''என் வகுப்பில படிக்கிறவங்க..நாங்க தினமும் இந்த டிரையினில் ஜாலியாப் பேசிக்கிட்டுப் போவோம்..''

''ஏன் உன்கூட மத்த கேர்ள்ஸ் வரமாட்டாங்களா?''

''மல்லிகாவும் என் கூடத்தான் வருவாள்..என் வகுப்புல கேர்ள்ஸ் கொஞ்சம் குறைச்சல்..''

''சுருதி...என்னைப் பொருத்தவரை இதெல்லாம் தப்பு..கன்னத்தில இடிக்கிறது. தோள்ல கையைப் போடறது.. நீங்கள்ளாம் ஃபிரண்ட்டா இருக்கலாம்..அதெற்கெல்லாம் ஒரு லிமிட் வேண்டும்...உங்க காலேஜ்ல வந்து பேசறேன்...''

கடகடவென்று சுருதி அழ ஆரம்பித்துவிட்டாள். ''நீங்க காலஜ்ஜூக்கெல்லாம் வராதிங்கப்பா,'' என்றாள்.

குரோம்பேட்டை ஸ்டேஷன் வந்தவுடன், நானும் சுருதியுடன் இறங்கினேன். அவளுடைய ஃபிரண்ட்ஸ் என்னையும் அவளையும் பார்த்தபடியே முன்னால் சென்று விட்டார்கள். ''எப்ப காலேஜ் முடியும்?''

''தெரியாது..சிலசமயம் 4க்கெல்லாம் முடியும்.. ஸ்பெஷல் க்ளாஸ் இருந்தால், 5கூட ஆகும்..''

''சரி. க்ளாஸ் போ..'' என்று கூறியபடி காலேஜ் வாசல்வரை வந்தேன். பத்மநாபனுக்கு போன் செய்தேன். ''இன்று உங்களைப் பார்க்கவில்லையே?''என்றார்.

''நான் சுருதியுடன் வந்தேன்..'' என்றேன்.

''எத்தனை நாள்தான் உங்களால் சுருதியுடன் வந்து கொண்டிருக்க முடியும்?''

''அதுதான் எனக்கும் புரியவில்லை..''

''இதற்கு வேறு எதாவது வழி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்..''

அன்று மாலை சுருதி வகுப்புகளை முடித்துவிட்டு காலேஜ் வாசலுக்கு வந்தாள்.. அவளுடைய ஃபிரண்ட்ஸ்களுடன்..கேட் அருகில் நான் இருப்பதைப் பார்த்தார்கள் அவளுடைய ஃபிரண்ட்ஸ். அவர்களில் ஒருவன், ''சுருதி உன் அப்பா,'' என்றான். சுருதி பயந்தபடியே என்கிட்டே வந்தாள். அவள் ஃபிரண்ட்ஸை சைகை செய்து கூப்பிட்டேன். அவர்கள் தயக்கத்துடன் வந்தார்கள்.

''சுருதிக்குத் திருமணம் ஆகப் போறது.. நீங்கள் இப்படி ஒண்ணா வருவதைப் பார்த்தால், தப்பாக எடுத்துக்கொண்டு விடுவார்கள்..''என்றேன்.

''சரி அங்கிள்... நாங்கள் இனிமேல் அப்படி வரமாட்டோம்,''என்றார்கள். பிரிந்து சென்றார்கள்.

நானும் சுருதியும் மின்சார வண்டிக்காகக் காத்திருந்தோம். ''ஏன்பா..இப்படிப் பொய் சொல்றீங்க..அவங்க நல்லவங்கப்பா...சும்மா ஜாலியாப் பேசிண்டு வர்றோம்..''

''எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு, சுருதி.''

அடுத்தநாள் காலையில் நான் சுருதியுடன் மாம்பலத்தில் வண்டியில் ஏறினேன். அன்றும் பத்மநாபன் என் கண்ணில்படவில்லை. சுருதியின் நண்பர்களும் கண்ணில் படவில்லை. திரும்பவும் அவள் காலேஜ் விட்டு வரும்போது கேட் அருகில் நான் நின்றிருந்தேன். ''அவர்கள் நல்லவர்கள்,''என்றாள் சுருதி முணுமுணுத்தபடி. நான் பதில் எதுவும் பேசவில்லை. கிட்டத்தட்ட ஒருவாரம் நான் சுருதியுடன் வந்து கொண்டிருந்தேன். பத்மநாபனிடம் போனில் பேசினேன். ''நானும் உங்களை கவனித்துக்கொண்டுதான் வருகிறேன்..சுருதிக்கு என்னைத் தெரியாமல் இருப்பது நல்லது,''என்றார்.

ஒருவாரம் கழித்து சுருதி தனியாக காலேஜ் சென்றாள். தொடர்ந்து அவளுடன் செல்வது என்பதும் முடியாத காரியம் என்று எனக்குத் தோன்றியது. மேலும் சுருதி மீது எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. இனிமேல் அவர்கள் அவளுடன் வர மாட்டார்கள் என்று நினைத்தேன்.

நான்கு ஐந்து நாட்கள் கழித்து பத்மநாபனை விஜாரித்தேன்.. ''நான் பார்த்துக்கொண்டுதான் வருகிறேன். சுருதி மட்டும் அவர்களோடு வருவதில்லை. ஆனால் நாலைந்து பெண்கள் அந்தப் பசங்களுடன் அரட்டை அடித்துக்கொண்டுதான் போகிறார்கள்,''என்றார். எனக்குக் கேட்க நிம்மதியாக இருந்தது.

இரண்டு நாட்கள் கழித்து பத்மநாபன் அவசரமாகப் போன் செய்தார். ''அந்த நாலைந்து பெண்களுடன் சுருதியும் சேர்ந்துவிட்டாள். இப்போது எல்லோரும் அரட்டை அடித்துக்கொண்டு வருகிறார்கள்,''என்றார்.

எனக்கு என்ன செய்வதென்பது புரியவில்லை.


9.9.09

மழைக் குடை நாட்கள்


மழையையே குடையாக்கி நடந்த நாட்கள்
மகா உன்னதமானவை
அரைநெல்லிக் கனி தின்று
தண்ணீர் பருகும் அனுபவம் போல
வாழ்வ்க்கு சுவை, திருப்பம் சேர்ப்பவை.

சுத்த வீரனின்
விழுப்புண், குருதி, வலியாகி
புகழ் உறுதியை
முழுமையாய் நிறை நிறுத்துபவை
நடக்கும்போது மழை நாட்கள்
குளிர் முட்களாகித் தைப்பினும்
கடந்த பின்பு
சூர்ய கர்வம் அடக்கும்
கைக்குட்டையாகி நிழல் தருதலால்
மழைக்குடை நாட்கள்
நன்றியறிதலுக்குரியவை
எப்பொழுதும்

தர்மபுரி அரசுக் கலைக் கல்லூரியில் தமிழ்த் துறையில் பணிபுரியும் கோ கண்ணன் 1969 ம் ஆண்டு பிறந்தவர். பார்வையிழப்பையும் மீறி பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்தவர். ஆசிரியர் பட்டப் படிப்பும் படித்தார்.


8.9.09

Your Voice

Climbing down the steps and

walking

crossing many a street

going past the bazaar-street

where things lay spread like

the Sea

Even after going beyond

the tall, strong gateway,

some sounds

come to fall in the ears.

Leaving the light of the

outer corridor

where voices of the world

have faded a little

Going into the

semi-darkness of the

inner-corridor

our ancestors’ voices

softly whisper secrets

in our ears.

After entering into the

wholesome darkness of

the sanctum-sanctorium

there comes from within

a dark, colourful silence

outside, upon things

in absolute quietitude

as the very light

when it reflects

At some times

I feel

that you are with me

with hands resting on the

lap, right in front of my

eyes

A song springs from Veena

on its own.

While talking with my friends,

from out of blue

your voice drops a sentence.

Though it seems familiar

yet, wonder and surprise

have never withered away

in our Togetherness.

Poem from Navina Virtucham

Translated by Latha Ramakrishnan

இரு கவிதைகள்
வெளிதனில் புன்னகைக்கும் காலம்


கழிவறையில் திரவ சோப்பு
கைத்துடைக்க டிஸ்யு பேப்பர்
இருக்கை எண் காட்டும்
நவீன விளக்கு
செல்பேசி,மடிக்கணிணி
சார்ஜ் செய்யும் வசதி
தண்ணீர் பாட்டில்,சிற்றுண்டி
எல்லாம் உள்ள புதிய ஏஸிப்பெட்டி
அருகாமை மனிதர்களும்
அஃறினையாய் இறுக்கத்தில்
ஒளிந்து முகம் காட்டும் குழந்தை
உயிர் கொடுத்தது ரயில் பயணத்திற்கு


சூழல்

கடைசி ரயிலிலிருந்து
ஆளரவமற்ற பிளாட்பாரத்தில்
எதிர்ப்புறமிருந்து இறங்கிய ஒருத்தி
நெருங்கிக் கடக்கையில்
கலவர முகத்துடன் இதயம் படபடக்க
எட்டிப் போட்டாள் நடையை
எதிர்மறை வண்ணத்தை
என் மேல் பூசிய அகாலத்தையும்
இல்லாதுபோன மனிதர்களையும்
மனதார வைதுகொண்டே
கழிகிறதென் பொழுது..

5.9.09

நான்கு சின்னஞ்சிறு கவிதைகள்கவிதை ஒன்று

கீழே
விழுந்துகிடந்த
ரூபாய்த் தாளை
எடுத்துப்
பார்த்துக் கொண்டிருந்தேன்
யார் யார்
கைகளிலிருந்து
தப்பி விழுந்ததோ
என்ன பாடுபட்டதோ
என்ன துரோகம் செய்ததோ


கவிதை இரண்டு

எண்ணற்ற வழிகளில்
பயணம் செய்துகொண்டிருக்கிறோம்
ஆனால்
சிலரை மட்டும் பார்க்கிறோம்
இன்னும் சிலரிடம்தான் பேசுகிறோம்
இன்னும் இன்னும் சிலரிடம்தான்
உறவு வைத்துக்கொள்கிறோம்.


கவிதை மூன்று
நீண்ட
சோம்பல்
என்னிடம் ஒட்டிக்கொண்டது
நாற்காலியில்
உட்கார்ந்தால்போதும்
தூக்கம்
கண்ணைச் சுழற்றும்
ஒன்றும் தோன்றாமல்
ஒரு நிமிடம் என்னால்
இருக்க முடியவில்லை


கவிதை நான்கு

பிழிய பிழிய
மழைப்பெய்து
விழியை வைத்தது
கட்டுப்பாடற்ற முறையில்
ஒழுங்கு தப்பி
தெறித்தன வாகனங்கள்

உல்டா
என் நண்பர்கள் இருவர் குறித்து
மனைவி சொல்லிக்கொண்டிருந்தாள்
ஒருவன் உஷாரென்றும்
மற்றொருவன் சற்றே மந்தமென்றும்.
நானறிந்த வரையில்
அவைகள் அப்படியே
உல்டா என்பதுதான்
அதிலுள்ள விஷேசம்.

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்......18
த.அரவிந்தன்

பிரசவம்
---------------

பிரசவத்திற்காக
வந்திருக்கிறது வெள்ளைப் பூனை.
பரண் மேல் ஒண்டியிருக்கும்
அதற்கு
குளிரூட்டப்பட்ட அறையில்
காற்றால் நிரம்பிய
மெத்தையமைத்துக் கொடுக்கலாம்
நாலைந்து மருத்துவர்களை
எப்போதும் உடனிருக்க வைக்கலாம்
பிரசவ வலி தெரியாதிருக்க
அதன்
தலையை, உடலைக் கோதி விடலாம்
ஈன்று சோர்கையில்
பெரிய வஞ்சீர மீனை
உண்ணக் கொடுக்கலாம்
பத்தொரு தாதிகளை நியமித்து
குட்டிகள் உடலில் பிசுபிசுக்கும்
பனிக்குட நீரைக் கழுவலாம்
பால் காம்புகளை
சிறு நேரமும் தேட விடாமல்
முதல் பருகலுக்குத் துணை புரியலாம்
நாய்கள்
கழுகுகள்
வாகனங்கள் நுழையாத
கூரை வேய்ந்த மைதானம் அமைத்து
அவற்றை விளையாட விடலாம்
இன்னும்
இன்னும்
என் குழந்தைகளுக்குச் செய்வதுபோல
என்ன வேண்டுமானாலும் செய்யலாம்
அதற்கு முன்-
என் மீதான
அதன் நடுக்கத்தைப் போக்க
என்ன செய்ய?


நேபாளத்து அம்மா


திகாலையில் வந்திருந்த தொலைநகல் ஒரு துயரச் செய்தியைச் சுமந்துவந்திருந்தது. கிஷோரின் தாயார் சுகவீனமுற்றுத் தனது அந்திம நிலையில் இருப்பதாகவும் தனது மகனைப் பார்க்க விரும்புவதாகவும் எழுத்துக்களில் கோர்த்திருந்த அந்தச் செய்தியை இன்னும் அவனுக்குத் தெரிவிக்கவில்லை.

கிஷோர் ஒரு நேபாள தேசத்தவன். அலுவலக உதவியாளாக இந்த நாட்டுக்கு வந்திருக்கிறான். அவனது வேலைகளும், நேர்த்தியும், சுறுசுறுப்பும் அலுவலகத்தில் எல்லோருக்கும் பிடித்திருந்தது. பொதுவாகவே நேபாளிகளிடத்தில் சுத்தத்தையும் நேர்த்தியையும் காணக் கிடைப்பது அரிது. எனினும் இரண்டுமே இவனிடம் மிதமிஞ்சியிருக்க அதனாலேயே எல்லோருக்கும் பிடித்தமானவனாகவும் இருந்தான்.

கிடைக்கும் சிறிய ஓய்விலும் எதையாவது எழுதிக் கொண்டே இருப்பான். பெரும்பாலும் அவை வீட்டுக்கு எழுதும் கடிதமாகவோ அல்லது அவனது தனிப்பட்ட வரவுசெலவுக் கணக்காகவோ இருக்கும். எப்படியும் மாதத்திற்கு இரண்டு கடிதம், ஒரு பண டிராப்ட் அனுப்பிவிடுவான். அக்கடிதங்கள் அவனது மனைவிக்கு எழுதப்படுவன.அவனுக்கு எட்டு வயதுக்குக் கீழே இரண்டு குழந்தைகள். இளைய குழந்தையின் மூளை வளர்ச்சி குன்றியிருப்பதோடு நடக்கவும் இயலாமையினால் தனது மனைவி கூலி வேலைகள் எதற்கும் செல்வதில்லையெனச் சொல்லியிருக்கிறான்.

நேபாளக் கிராமங்களில் அனேகமாகப் பெண்களே குடும்பப்பொறுப்பைத் தலையில் சுமந்தபடி வாழ்கிறார்கள். விவசாயம், தறி நெய்தல், சமைத்தல், குழந்தை வளர்ப்பு எனப் பெறும் பொறுப்புக்களை பெண்கள் தலையில் சுமத்தி விட்டு அக்குடும்பங்களின் ஆண்கள் வெட்டியாகப் பொழுதுபோக்குவார்கள். எண்ணிச் சிலரே இப்படியாகத் தன் குடும்பப் பொறுப்பை உணர்ந்து அயல் தேசங்களை அண்டிப் பாடுபட வருகிறார்கள். எவ்வாறாயினும் நேபாளத்தில் ஆண்களுக்குப் பெறும் மதிப்பு இருப்பதாகக் கிஷோர் சொல்லியிருக்கிறான்.

ஒரு ஆண்குழந்தை பிறந்தவிடத்துக் கொண்டாடப்படும் விழாக்கள் தொடங்கி அவனது திருமணம், இறப்பு எனப் பல பருவங்களும் பலவிதமாகக் கொண்டாடப்படுகின்றன. பெண்களுக்கு அது போலச் சடங்குகள் அங்கே குறைவு. பொதுவாகப் பெண் குழந்தை பிறந்தால் குடும்பத்துக்காக உழைக்க இன்னொரு உயிர். அவ்வளவுதான். அது தவிர்த்து அவளுக்கு அங்கே வேறு மதிப்பு கிடையாது. ஒரு ஆணுக்கு ஒன்று, இரண்டு, மூன்றெனப் பல பெண்களை மணமுடிக்கலாம். அவனது தொழில் பற்றியெதுவும் விசாரிக்கப்பட மாட்டாது.

அவ்வாறான கிராமமொன்றிலிருந்துதான் தனது குடும்பப் பொறுப்பை உணர்ந்த கிஷோர் வயது முதிர்ந்த விதவைத் தாயையும், மனைவியையும், இரண்டு குழந்தைகளையும் விட்டுவிட்டு ஐந்து மாதங்களுக்கு முன்னால் இங்கே வேலைக்காக வந்திருக்கிறான். இன்னும் சற்று நேரத்தில் வரும் அவனிடம் இந்தத் துயரச் செய்தியைக் கையளிக்கவேண்டும். அது வரையில் அச்செய்தி என் மேசையில் கனத்தது.

வெண்ணிற ஆடையில் காலை வணக்கங்களைச் சொல்லியபடி உள்ளே நுழைந்தவனை அழைத்தேன். சிரித்தவாறு நின்றிருந்தவனுக்குத் ஆங்கிலத் தொலைநகலின் துயரச்செய்தியை எளிமைப்படுத்தி விளக்கினேன். விழிகள் கலங்க வாங்கிக்கொண்டவன் தனக்கு வெளியே போய்த் தனது வீட்டுக்குக்குத் தொலைபேசி அழைப்பொன்றினை எடுத்துவர முப்பது நிமிடங்கள் அளிக்கும்படி கேட்டுக் கொண்டான். அனுமதித்தேன்.

அவசரத்துக்குப் போய் வர முடியாத கடல் கடந்த தேசங்களிலிருந்து வரும் இப்படியான துயர்செய்திகள் ஒரு கலவரத்தை மனதில் உண்டுபண்ணிக் கனக்கச் செய்வன. மனம் பதைக்கச் செய்வன. ஆண்டாண்டு காலமாகப் பேணி வளர்த்த தாய் தனது இறுதி மூச்சைத் தன் ஒற்றை மகனின் கைப்பிடித்து விடுவதில் தனது முழு வாழ்வின் மகிழ்வைக் கொண்டிருக்கிறாள். அந்நிய தேசங்களில் எழுதப்பட்ட சட்டங்களில் இருக்கிறது அவளது ஆசையின் இறுதி மூச்சு.

அவன் கட்டாயமாகப் போய்வர வேண்டும்தான். ஆயினும் அவனுக்கு விசா வழங்கிய ஷேக்கின் முடிவைப் பொறுத்துத்தான் அலுவலகம் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து தரும். ஒருவரின் ஒப்பந்தக்காலம் முடிந்திருப்பின் அவர் விரும்பியபடி விடுமுறையில் செல்லலாம். அதற்கும் ஒரு கால அளவு உண்டு. அல்லது திரும்ப வராமலேயே இருக்கலாம். எனினும் கிஷோரின் ஒப்பந்தக்காலம் முடிய இன்னும் ஒன்றரை வருடங்கள் இருக்க ஷேக் அவன் நாடு செல்ல அனுமதிக்காமல் இருக்கவும் சாத்தியங்கள் உண்டு. இது குறித்து நான் தான் ஷேக்கிடம் பேச வேண்டும்.

வெளியே போன இருபது நிமிடங்களிலேயே கிஷோர் திரும்பி வந்தான். அவனது தாய் ஒரு பள்ளத்தில் விழுந்து இடுப்பெலும்பு உடைந்து நகராஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பரிசோதித்த வைத்தியர் கைவிரித்து விட்டதாகவும் இறப்பதற்கு முன் தன்னைப் பார்க்க ஆசைப்படுவதாகவும் கலங்கியபடி சொன்னான். தாயைப் பார்ப்பதற்காகத் தான் உடனே செல்ல வேண்டுமென்றான். நான் ஷேக்கிடம் இதுபற்றிக் கதைத்துப் பார்ப்பதாகக் கூறினேன்.

அவனை அனுப்புவது சம்பந்தமாக ஷேக்கிடம் கதைத்தபோது இலேசில் சம்மதிக்கவில்லை. அவனது தயாரிப்பான அற்புதமான கோப்பியின் சுவையை அவர் இழக்கவிரும்பவில்லை போலும். ஒருவாறாகப் பலமுறை எடுத்துச் சொல்லிப் பதினைந்து நாட்கள் விடுமுறை பெற்றுத் தந்தாயிற்று. பதினைந்து நாட்களுக்கு மேல் அவன் விடுமுறை கேட்பானெனில் அலுவலகத்திலிருந்து அவனை வேலைநீக்கம் செய்து விசாவினை ரத்துச் செய்துதான் அனுப்பப்படுவான். இரண்டு வருடங்களுக்குள் மீண்டும் இந்த நாட்டுக்கு வரமுடியாது என ஷேக் சொல்லியிருந்தார்.

பதினைந்து நாட்கள் விடுமுறைச் செய்தியை கிஷோரிடம் சொன்னால் பெரிதும் மகிழ்வான் என எண்ணிச் சொன்னபோது அது அவனை மகிழ்விக்கவில்லை என்பது போன்ற ஒரு உணர்ச்சியை முகத்தில் காட்டினான். தனக்கு விடுமுறை போதாதெனச் சொன்னான். விசா நடைமுறைகளை எடுத்துச் சொன்னபின்னர்,

" அப்ப நான் விசாவைக் கேன்சல் பண்ணிட்டே போறேன் பாஸ் " என்றான்.

"கிஷோர், அப்படிப் போனா இரண்டு வருஷத்துக்கு உனக்கு திரும்ப இந்த நாட்டுக்கு வரமுடியாது. இது போல நல்ல சம்பளம் கிடைக்கிற வேலைக்கும் , செலவுக்கு பணத்துக்கும் என்ன செய்வே ? அம்மாவைப் பக்கத்துல இருந்து பார்த்துக்க பதினைந்து நாட்கள் போதும் தானே ?"

" அதுக்கு ஏதாச்சும் வழி பண்ணிக்குவேன் பாஸ். அம்மா இன்னிக்கு செத்தா நல்லாயிருக்குமே, அம்மா இன்னிக்கு செத்தா நல்லாயிருக்குமேன்னு ஒரு பதற்றத்தோட லீவ்ல இருக்குற பதினஞ்சு நாளைக்கும் நாட்களெண்ணிக்கிட்டு இருக்கமுடியுமா பாஸ் ? "