4.9.09

அலையும் ஆவியொன்று
என் வீட்டுப்பரணில்
கிடக்கும் பழைய
டிரங்க் பெட்டியில்
உடைந்துப்போன சிலேட் குச்சிகள்,
பச்சைநிற பிளாஸ்டிக் முனையுடன்
தகர சிலேட்டொன்று,
புழுக்கையாகிப்போன ‌
கலர் பென்சில்கள்,
பிலிம் துண்டுகள், ஒரு மயிலிறகு,
இவற்றோடு ஒரு சிறுவயது
ஆவியும் சுற்றிக்கொண்டு திரிகிறது.
நான் எப்போது
பெட்டியை திறந்தாலும்
உயிர்கொள்ளத் துடிக்கும்
அந்த ஆவி என் உடலின்
நீள அகல பருமன்களை
கண்டு திகைத்து மீண்டும்
பெட்டிக்குள் உறங்கிவிடுகிறது
3 comments:

அனுஜன்யா said...

வாவ், ரொம்ப நல்லா வந்திருக்கு வி.மு.

அனுஜன்யா

arumugam said...

excellent verses...
took me on a nostalgic trip..
how true it is ....

" என் வீட்டுப்பரணில்
கிடக்கும் பழைய
டிரங்க் பெட்டியில்.... "

I still remember mine..
and how possessive I was with it...

ஜெகதீஷ் குமார் (jegadeesh kumar) said...

அற்புதமான அவதானிப்பு. ஆனால் ஆவி அடங்குவது உடலின் நீள் அகலங்களைப் பார்த்து மட்டும்தானா?