Skip to main content

திருவல்லிக்கேணி பிளாட்பாரத்தில் வாங்கிய புத்தகங்கள்

அழகியசிங்கர்

நான் ஒவ்வொரு முறை திருவல்லிக்கேணி செல்லும்போது அங்கே உள்ள பிளாட்பார கடைகளுக்குச் செல்லாமல் இருக்க மாட்டேன்.   கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாக நான் திருவல்லிக்கேணி பிளாட்பார கடைகளுக்குப் போய்க் கொண்டிருக்கிறேன். 
முன்பு அடிக்கடி போவேன்.  இப்போதெல்லாம் அந்தப் பக்கம் போக நேர்ந்தால் மட்டும் போகிறேன்.  இங்கே உள்ள பெரும்பாலான பிளாட்பார கடைகளில் கல்லூரி புத்தகங்கள்தான் இருக்கும். 
ஆனால் ஒருசில கடைகளில் தமிழ் புத்தகங்களும் ஆங்கிலப் புத்தகங்களும் கிடைக்கும்.   குறிப்பாக ஒரு கடையில் பாதி பகுதி ஆங்கிலப் புத்தகங்களும் மற்றொரு பாதிப்பகுதி தமிழ்ப் புத்தகங்களும் கிடைக்கும்.  சில புத்தகக் கடைகளில் புத்தகங்களின் விலையை புதுப் புத்தகம் வாங்கும் விலைக்கு விற்பார்கள்.  
நான் செல்லும் இரண்டு கடைகளில் தமிழ் புத்தகங்கள் ரூ.5க்கும் ஆங்கிலப் புத்தகங்கள் ரூ.10க்கும் முன்பு கிடைத்துக்கொண்டிருந்தது.  இப்போது ஆங்கிலப் புத்தகம் ரூ.20க்கும் தமிழ் புத்தகம் ரூ.10க்கும் விற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
இங்கே கொட்டிக்கிடக்கும் புத்தகங்களைப் பார்க்கும்போது நமக்கே மலைப்பாக இருக்கும்.  இத்தனைப் பேர்கள் எழுதுகிறார்களா என்று இருக்கும். 
நான்  இந்த முறை ஐந்து புத்தகங்கள் வாங்கினேன்.  மொத்தம் ரூ.120க்கு.  3 ஆங்கிலப் புத்தகங்கள், 2 தமிழ்ப் புத்தகங்கள்.  
முக்கியமாக ஏ கே செட்டியார் பதிப்பாசிரியராக இருந்த குமரி மலர் என்ற பத்திரிகையை வாங்கினேன்.  இது அபூர்வமான பத்திரிகை.  நான் சிறுபத்திரிகைகளைச் சேகரிப்பவன்,  அதில் இந்தப் பத்திரிகையை முக்கியமாகக் கருதுகிறேன். ஆனால் இந்தப் பத்திரிகையில் எந்த ஆண்டில் வெளிவந்தது என்று குறிப்பிடப்படவில்லை.   புத்தகக் குவியலில் பார்த்தவுடன் கையில் எடுத்து வைத்துக்கொண்டேன். இந்தப் பத்திரிகை நிச்சயமாகக் கிடைக்காது.  ஆனால் எந்த ஆண்டில் எந்த மாதத்தில் வந்த பத்திரிகை என்ற விபரம் ஏன் இல்லை என்பது புரியவில்லை.  ரொம்ப அபூர்வமான பத்திரிகை.  என்னிடம் சில கசடதபற என்ற பத்திரிகையின் இதழ்கள் உண்டு.  ஆனால் அப் பத்திரிகையை நடத்திய கசடதபற ஆசிரியருக்கே அந்த இதழின் பிரதி ஒன்று கூட கிடையாது.  அவர் இதைச் சிரித்துக்கொண்டே என்னிடம் கூறியிருக்கிறார். 
இரண்டாவது இன்னொரு தமிழ்ப் புத்தகம்.  üநேற்றிருந்தோம்ý என்ற கிருத்திகாவின் புத்தகம்.  வாசகர் வட்டத்தின் இந்தப் புத்தகமும் கிடைக்காத புத்தகம்.  வாசகர் வட்டம் என்ற இலக்கிய அமைப்பு எப்படியெல்லாம் புத்தகங்களை அச்சடித்திருக்கிறார்கள் என்பதை ஒருவர் பார்த்து வியக்க வேண்டும். இந்த வியாபாரிகள் என்ன செய்வார்கள் என்றால், விலை என்று எழுதியிருக்கும் பக்கத்தைக் கிழித்து விடுவார்கள்.  1975ஆம் ஆண்டு வெளிவந்த புத்தகம்.
நான் வாங்கிய 3 ஆங்கிலப் புத்தகங்களில் ஒரு புத்தகம் பிரஞ்ச் நாவலை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பில் வந்த புத்தகம்.   அந்தப் புத்தகத்தின் பெயர் யாஸ்மினா கத்ராவின் அட்டாக்.  அதேபோல் இத்தாலி மொழியிலிருந்து மொழிப் பெயர்க்கப்பட்ட இன்னொரு புத்தகம் பெயர்  திருவல்லிக்கேணி பிளாட்பாரத்தில் வாங்கிய புத்தகங்கள்

அழகியசிங்கர்

நான் ஒவ்வொரு முறை திருவல்லிக்கேணி செல்லும்போது அங்கே உள்ள பிளாட்பார கடைகளுக்குச் செல்லாமல் இருக்க மாட்டேன். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாக நான் திருவல்லிக்கேணி பிளாட்பார கடைகளுக்குப் போய்க் கொண்டிருக்கிறேன்.

முன்பு அடிக்கடி போவேன். இப்போதெல்லாம் அந்தப் பக்கம் போக நேர்ந்தால் மட்டும் போகிறேன். இங்கே உள்ள பெரும்பாலான பிளாட்பார கடைகளில் கல்லூரி புத்தகங்கள்தான் இருக்கும்.

ஆனால் ஒருசில கடைகளில் தமிழ் புத்தகங்களும் ஆங்கிலப் புத்தகங்களும் கிடைக்கும். குறிப்பாக ஒரு கடையில் பாதி பகுதி ஆங்கிலப் புத்தகங்களும் மற்றொரு பாதிப்பகுதி தமிழ்ப் புத்தகங்களும் கிடைக்கும். சில புத்தகக் கடைகளில் புத்தகங்களின் விலையை புதுப் புத்தகம் வாங்கும் விலைக்கு விற்பார்கள்.

நான் செல்லும் இரண்டு கடைகளில் தமிழ் புத்தகங்கள் ரூ.5க்கும் ஆங்கிலப் புத்தகங்கள் ரூ.10க்கும் முன்பு கிடைத்துக்கொண்டிருந்தது. இப்போது ஆங்கிலப் புத்தகம் ரூ.20க்கும் தமிழ் புத்தகம் ரூ.10க்கும் விற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

இங்கே கொட்டிக்கிடக்கும் புத்தகங்களைப் பார்க்கும்போது நமக்கே மலைப்பாக இருக்கும். இத்தனைப் பேர்கள் எழுதுகிறார்களா என்று இருக்கும்.

நான் இந்த முறை ஐந்து புத்தகங்கள் வாங்கினேன். மொத்தம் ரூ.120க்கு. 3 ஆங்கிலப் புத்தகங்கள், 2 தமிழ்ப் புத்தகங்கள்.

முக்கியமாக ஏ கே செட்டியார் பதிப்பாசிரியராக இருந்த குமரி மலர் என்ற பத்திரிகையை வாங்கினேன். இது அபூர்வமான பத்திரிகை. நான் சிறுபத்திரிகைகளைச் சேகரிப்பவன், அதில் இந்தப் பத்திரிகையை முக்கியமாகக் கருதுகிறேன். ஆனால் இந்தப் பத்திரிகையில் எந்த ஆண்டில் வெளிவந்தது என்று குறிப்பிடப்படவில்லை. புத்தகக் குவியலில் பார்த்தவுடன் கையில் எடுத்து ைத்துக்கொண்டேன். இந்தப் பத்திரிகை நிச்சயமாகக் கிடைக்காது. ஆனால் எந்த ஆண்டில் எந்த மாதத்தில் வந்த பத்திரிகை என்ற விபரம் ஏன் இல்லை என்பது புரியவில்லை. ரொம்ப அபூர்வமான பத்திரிகை. என்னிடம் சில கசடதபற என்ற பத்திரிகையின் இதழ்கள் உண்டு. ஆனால் அப் பத்திரிகையை நடத்திய கசடதபற ஆசிரியருக்கே அந்த இதழின் பிரதி ஒன்று கூட கிடையாது. அவர் இதைச் சிரித்துக்கொண்டே என்னிடம் கூறியிருக்கிறார்.

இரண்டாவது இன்னொரு தமிழ்ப் புத்தகம். 'நேற்றிருந்தோம்' என்ற கிருத்திகாவின் புத்தகம். வாசகர் வட்டத்தின் இந்தப் புத்தகமும் கிடைக்காத புத்தகம். வாசகர் வட்டம் என்ற இலக்கிய அமைப்பு எப்படியெல்லாம் புத்தகங்களை அச்சடித்திருக்கிறார்கள் என்பதை ஒருவர் பார்த்து வியக்க வேண்டும். இந்த வியாபாரிகள் என்ன செய்வார்கள் என்றால், விலை என்று எழுதியிருக்கும் பக்கத்தைக் கிழித்து விடுவார்கள். 1975ஆம் ஆண்டு வெளிவந்த புத்தகம்.

நான் வாங்கிய 3 ஆங்கிலப் புத்தகங்களில் ஒரு புத்தகம் பிரஞ்ச் நாவலை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பில் வந்த புத்தகம். அந்தப் புத்தகத்தின் பெயர் யாஸ்மினா கத்ராவின் அட்டாக். அதேபோல் இத்தாலி மொழியிலிருந்து மொழிப் பெயர்க்கப்பட்ட இன்னொரு புத்தகம் பெயர் THE TIME OF INDIFFERENCE என்ற புத்தகம். இதை எழுதியவர் எனக்குப் பிடித்த எழுத்தாளரான ஆல்பெர்டோ மெரோவியா. மூன்றாவது புத்தகம் சிட்னி ஷெல்டனின் எ ஸ்டேரன்ஜர் இன் தி மிர்ரர்.

இன்னும் தேடினால் பல புத்தகங்களைக் கண்டு பிடிக்கலாம். நான் பலமுறை சென்று பல புத்தகங்களை இப்படி சேகரித்திருக்கிறேன்.

  என்ற புத்தகம்.  இதை எழுதியவர் எனக்குப் பிடித்த எழுத்தாளரான ஆல்பெர்டோ மெரோவியா.  மூன்றாவது புத்தகம் சிட்னி ஷெல்டனின்  எ ஸ்டேரன்ஜர் இன் தி மிர்ரர்.

இன்னும் தேடினால் பல புத்தகங்களைக் கண்டு பிடிக்கலாம். நான் பலமுறை சென்று பல புத்தகங்களை இப்படி சேகரித்திருக்கிறேன். 

Comments