அழகியசிங்கர்
சமீபத்தில் கே பாலசந்தரின் மரணம் திரைப்பட உலகத்தை ஒரு கலகலப்பை ஏற்படுத்தி விட்டது. நான் மதிப்புக் கொடுத்துப் பார்க்கும் டைரக்டரில் கே பாலசந்தர் ஒருவர். அவருடன் ஸ்ரீதரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். கருப்பு வெள்ளைப் படங்களில் பல சாதனைகளை செய்து காட்டியவர் கே பாலசந்தர். அவருடைய முதல் படமான 'நீர்க்குமிழி' ரொம்ப அற்புதமான படம். அதில் நாகேஷ் நடிப்பு அபாரமாக இருக்கும். எந்த நடிகரையும் பாலசந்தர் அவருடைய படத்தில் நடிக்க வைத்துவிடுவார்.
அபூர்வ ராகங்கள் என்ற படத்தில் பொருந்தாத உறவு முறைகளைக் கொண்டுவந்து கதையை சிக்கலாக்கி பின் சாத்தியமில்லை என்பதுபோல் கொண்டு போய்விடுவார். அவருடைய படங்களில் சில கதாபாத்திரங்கள் சில சமிஞ்ஞைகள் செய்வார்கள். படம் முழுவதும் அது மாதிரியான சமிஞ்ஞைகளைத் தொடர்ந்து செய்துகொண்டு போவார்கள்.
என்னுடைய பால்ய காலத்தில் பாலசந்திரனின் எந்தப் படத்தையும் போய்ப் பார்த்துவிட்டு வந்துவிடுவேன்.
பாலசந்திரன் இதுமாதிரி அதிகமாகப் படங்கள் எடுத்தாலும், அவருடைய மதிப்பு வேறு சில புதுமுக டைரக்டர்கள் வரவர குறைந்துகொண்டே போயிற்று. ஒரு குறிப்பிட்ட காலம் வரை பாரதிராஜாவும், பாக்கியராஜ÷வும் எடுத்துக்கொண்டு விட்டார்கள். பாரதிராஜாவின் 16வது வயதினில் படம் வெளிவந்தபோது, சினிமா உலகம் வேறு பாதைக்குத் திரும்பத் தொடங்கி விட்டது. பாரதிராஜாவின் புதுத்தன்மை பாலசந்திரன் படங்களை வேறு பாதைக்குத் திருப்பி விட்டன.
பாலசந்திரன் படங்களின் ஒரு குறை அவருடைய படங்களில் காணப்படும் நாடகத் தன்மையை அவரால் விலக்க முடியவில்லை. அதேபோல் அவர் சில படங்களில் வெளிப்படுத்திய தைரியத் தன்மையை யாரும் அப்போது கையாளவில்லை. உதாரணமாக அபூர்வ ராகங்கள் என்ற படத்தில் கமல்ஹாசன் தேவடியாப் பசங்களா என்று சேரை அடித்துவிட்டு குடித்து கும்மாளமிடும் கூட்டத்தைப் பார்த்து கூக்குரலிடுவார். அந்தச் சமயத்தில் இந்தப் படத்தைப் பார்க்கும்போது, என்ன இவ்வளவு தைரியத்துடன் இப்படி ஒரு படத்தில் ஒரு வசனத்தைப் புகுத்தி இப்படி ஒரு படத்தில் ஒரு வசனத்தைப் புகுத்தி இருக்கிறாரே என்றும் தோன்றியது.
அதே சமயத்தில், 'அவள் அப்படித்தான்' படத்தில் சுஜாதா என்ற நடிகை ஒரு வசனம் பேசுவார். கர்வமாக இருக்கலாம், ஆனால் கர்ப்பமாக இருக்கக் கூடாது. அந்த வசனம் அந்த இடத்தில் தேவையில்லாத வசனம். நானும் என் நண்பரும் அந்தப் படத்தில் அந்த வசனத்தைக் கேட்டுவிட்டு விழுந்து விழுந்து சிரித்திருக்கிறோம். பாலசந்திரனுக்கு என்ன ஆயிற்று? என்று சொல்லிக் கொள்வோம்.
பாலசந்திரனின் நான் ரசித்த இன்னொரு படம் புன்னகை. நான் அவனில்லை, சிந்து பைரவி, மன்மத லீலை, அரங்கேற்றம் போன்ற படங்களும் வித்தியாசமானவை. தொடர்ந்து தமிழ் திரை உலகில் அதிக காலம் தாக்குப்பிடித்தவர் கே பாலசந்தர்தான்.
என்னதான் அவர் நம்மை விட்டு மறைந்தாலும், அவர் படங்கû நம்மால் மறக்க முடியாது.
Comments
.