Skip to main content

நடேசன் பூங்காவில் நடந்த இலக்கியக் கூட்டம்

 
அழகியசிங்கர்


சரியாக 4 மணிக்கே பூங்காவிற்கு சென்று விட்டேன்.  அங்கிருந்த காவல் காரரைக் கேட்டேன்.  üபூங்கா எத்தனை மணியிலிருந்து எத்தனை மணி வரை திறந்திருக்கும்,ý என்று.  அவர் சொன்னார்.  காலை 4 மணியிலிருந்து இரவு 9 மணிவரை திறந்திருக்கும் என்று.  கேட்க எனக்கு ஆச்சரியம்.
கேட் வாசலில் நின்றுகொண்டு üஒரு கதை ஒரு கவிதை வாசித்தல்ý கூட்டத்திற்கு யார் வருகிறார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.  எனக்கு ஒரு சந்தேகம். வருபவர்களுக்கு எப்படி நான்தான் கூட்டத்தை நடத்துகிறேன் என்பது தெரியும் என்ற சந்தேகம் தான் அது. 
அதனால் மேடை மாதிரி உள்ள ஒரு இடத்தல் போய் அமர்ந்து கொண்டேன்.  மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக இதுமாதிரியான கூட்டத்திற்கு வருபவர்கள் வந்து கொண்டிருந்தார்கள்.  எல்லோரையும் உட்கார வைத்துவிட்டு நான் நின்றுகொண்டு முதல் கதையைப் படிக்க ஆரம்பித்தேன்.  வ வே சு ஐயரின் குளந்தங்கரை அரசமரம் என்ற கதை.  இக் கதைதான் தமிழில் எழுதப்பட்ட முதல் கதை என்று கூறினார்கள்.  நான் சத்தகமாக வாசித்தேன்.  அதை அப்படியே சோனி ரெக்கார்டரில் பதிவு செய்தேன்.  கிட்டத்தட்ட நான் அந்தக் கதையைப் படித்து முடித்த உடன் 24 நிமிடங்கள் ஆயிற்று.  எனக்கு ஒரே சந்தோஷம். நான் நினைத்துப் பார்க்கவில்லை.  சத்தமாக வாசித்தால் இத்தனை நேரம் ஆகும் என்று.  கேட்டவர்கள் கைத் தட்டி வரவேற்றார்கள். 
இக் கூட்டத்தில் ஒரு முக்கியமான ஒன்றை கவனிக்க வேண்டும்.  பேசுபவரும், கேட்பவரும் ஒன்று.  எல்லோரும் நெருக்கமாக இருந்ததால் பாகுபாடு தெரியவில்லை.  தொடர்ந்து சத்தமாக வாசிக்கும்போது, பூங்காவில் நடப்பவர்கள் எல்லாம் நான் படிப்பதை வேடிக்கைப் பார்த்தபடி சென்றார்கள்.  இதுமாதிரி பொது இடத்தில் நாம் ஒன்றை நடத்தும்போது நம்மிடம் எதிர்படும் கூச்சம் விலகிப் போகவேண்டும். நான் மெய்மறந்து படிக்கும்போது என்னைச் சுற்றி உள்ளவர்களை கவனிக்கவில்லை.  அற்புதமான அனுபவம்.  அதன்பின் றாலி எழுதிய உமைச்சியின் காதல் கதையைப் படித்தோம். எங்கள் குழுவிலிருந்து பானுமதி என்பவர் அவருடைய கதையைப் படித்தார்.  பின் என் கவிதையான வினோதமான பறவை என்ற கதையைப் படித்தேன்.
எனக்குள் ஒரு சவால்.  மீட்சி 27 இதழைக் கொடுத்து கடைசிப் பக்கத்தில் வெளியாகி உள்ள பிரம்மராஜனின் கவிதையைப் படிக்கச் சொன்னேன்.  படிப்பவர் தடுமாறி விட்டார்.  யாரும் தடுமாறுவார்கள்.
அந்தக் கவிதையை இங்கு கொடுக்கிறேன்.

கண்களை அகலத்திறந்து கனவு காண்

கண்களை அகலத்திறந்து கனவு காண்
பது யெப்படி யென்று சொல் வாய்
திறந்த தூக்கக் கலக்கத்தைத் தெளிவி
காலை உணவுக் கனவு
தேநீர் நேர மாலை மட்கிய மஞ்சள்
அலையும் அலையைச் சார்ந்த கலையும்
களைத்து மேஜை மீது வீசு
சோதனையிலேயே
மண்டையைப் பிளந்து கொண்டு சாகும் ஏவுகணைகள்
பிரபஞ்ச நடனம்
பிறவிப் பிணி
ஒரு வினாடியின் இருநூறு பங்கில் ஒன்றில்
ஒரு வினாடியின் அறுநூறு பங்கில் ஒன்றில்
ஒரு வினாடியின் நான்காயிரம் பங்கில் ஒன்றில்
கண்ணின் கருமணியின் சமதள ஓட்டம்
சங்கமிக்க வேண்டும்
கனவுப் பதிவு
உள்வெளி ஒளியின்
ஊடுருவல் பொருத்தது
கம்ப்யூட்டரை நம்புவது 17999 தடவைக்கு
மேலும் தவறு
ஒரு புல் இதழ் மீது துளிப் பனியை
ஏதோ ஒரு சமரசமற்ற கோணத்தில் காணாதுபோய்
மீண்டும் ஒன்றிலிருந்து üஞாபகத்தைý அழுத்தி
வரவழைத்து
த்சோ கனவு காணுதலின் இழை அறுபடும்
நானும் பூவை முகரும் ஒரு ரோபோட்டும்
ஸிந்தடிக் புல்வெளியில் சதுரங்கம்
ஆட ஏற்பாடு மரக்குதிரை மனிதன்
மரத்துடல் அரசன் அவனை அதிலும்ட அறிந்த அரசி
அதி வயலட் கதிர் வீச்சால்
இன்றைய விளையாட்டு ஒத்தி வைப்பு நான் திகைக்க
ரோபோட் நகைக்கிறது
மீண்டும் நாளை கண்களைத் திறந்து கனவு காண்
பது எப்படி என்று

கவிதையை எங்கே நிறுத்திப் படிக்க வேண்டுமென்று தெரியவில்லை.  ஏன்என்றால் ஒரு முறை படித்தால் சரியாக வராது.   சரி படித்து விடலாம்.  ஆனால் கவிதை என்ன சொல்ல வருகிறது.
நிறைவான கூட்டம் முடிந்து இதோ ஆஸ்திரிலியா இந்தியா கிரிக்கெட் மேட்ச் பார்க்கிறேன்.  தி நகரிலிருந்து நான் வரும்போது எங்கும் கூட்டம் இல்லை.  எல்லாம் கிரிக்கெட் மோகம்.



Comments

anaamikaa said…
மதிப்பிற்குரியீர், வணக்கம்.

இலக்கியம் தழைக்க நீங்கள் எந்த முயற்சியிலும் ஈடுபடலாம். அதற்கு உங்களுக்கு உரிமையிருக்கிறது. (என்னைப் பொறுத்தவரை, பூங்காவில் இலக்கிய வாசிப்பு என்பது நிறைய நேரங்களில் கல்யாணக் கச்சேரி போல் ஆகிவிடும். நீங்களே முத்தாய்ப்பாய் கூறியிருப்பதுபோல், கிரிக்கெட் மாட்ச் பார்த்துக்கொண்டே,கடலை கொறித்துக்கொண்டே கவிதையையும் அரைக் காதால் கேட்டுக்கொண்டிருப்பதுபோல்). வாசிப்புக்கென எல்லாக் கதைகளையும் எடுத்துக்கொண்டுவிட இயலாது. ஆனால், நீங்களோ, கவிதையை எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள். அதுவும், கவிதை வாசிப்புக்கும் புரிதலுக்கும் முன் தயாரிப்பு தேவை என்ற கருத்தை அழுத்தமாக முன்வைக்கும் கவிஞர் பிரம்மராஜனுடைய கவிதையை. இதற்கு என்ன அர்த்தம்? நீங்கள் பூங்காவில் புதிர்ப்போட்டி நடத்தவில்லையே.

”ஆனால், கவிதையை எங்கே நிறுத்திப் படிக்க வேண்டுமென்று தெரியவில்லை. ஏன் என்றால் ஒரு முறை படித்தால் சரியாக வராது. சரி படித்து விடலாம். ஆனால் கவிதை என்ன சொல்ல வருகிறது?”
ஒரு முறை படித்தால் சரியாக வராது என்று தெரிந்தும் ஏன் அத்தகைய கவிதையைப் படிக்கவைக்கிறீர்கள்? கவிதை என்ன சொல்ல வருகிறது என்று யாரைக் கேட்கிறீர்கள்? இப்படி ஒரு கவிஞரின் கவிதையைப் பூங்காவில் வாசிக்கச் செய்வதன் மூலம், அதைப் பற்றி மேலோட்டமாக சில கருத்துகளை முன்வைப்பதன் மூலம் நீங்கள் கவிஞரைத் தேவையில்லாமல் மதிப்பழித்திருக்கிறீர்கள். இதுதான் இலக்கியத்தை மேம்படுத்தும் வழியா?

லதா ராமகிருஷ்ணன்
31.3.2016
anaamikaa said…
வணக்கம், இலக்கியத்தைத் தழைக்கவைக்க நீங்கள் எத்தகைய முயற்சிகளில் வேண்டுமானாலும் ஈடுபடலாம். அதற்கு உங்களுக்கு உரிமையிருக்கிறது. (என்னைப் பொறுத்தவரை, பூங்காவில் இலக்கிய வாசிப்பு கல்யாணக் கச்சேரி போல்.) ஆனால், இலக்கிய வாசிப்புக்கு, அதுவும் நவீன கவிதை வாசிப்புக்கு முன் தயாரிப்பு அவசியம் என்று உறுதியாக நம்பும் கவிஞர் பிரம்மராஜனுடைய கவிதையை நீங்கள் வாசிக்கவைக்க வேண்டிய அவசியம் என்ன?


கவிதையை எங்கே நிறுத்திப் படிக்க வேண்டுமென்று தெரியவில்லை. ஏன்என்றால் ஒரு முறை படித்தால் சரியாக வராது. சரி படித்து விடலாம். ஆனால் கவிதை என்ன சொல்ல வருகிறது.

என்று வேறு விமர்சனம் செய்திருக்கிறீர்கள். கவிதை என்ன சொல்ல வருகிறது என்று யாரைக் கேட்கிறீர்கள்?

ஒரு வாசிப்பில் பிரம்மராஜன் கவிதை புரியாமல் போகலாம். ஆனால், இத்தனை காலம் சிறுபத்திரிகை நடத்திவருபவரான உங்களுக்கு பிரம்மராஜனின் கவிதை பூங்காவில் நடத்தப்படவேண்டிய வாசிப்புப் பயிற்சியோ, புதிர்ப்போட்டியோ அல்ல என்று புரிந்துகொள்வது அவ்வளவு சிரமமான காரியமா என்ன? தேவையில்லாமல் சக கவிஞரை நீங்கள் மதிப்பழித்திருப்பதாகவே எண்ணுகிறேன்.

லதா ராமகிருஷ்ணன்
anaamikaa said…


31.03.2016

லதா ராமகிருஷ்ணனிடமிருந்து _

வணக்கம்,

இலக்கியம் தழைக்க நீங்கள் எந்தவிதமான முயற்சியை வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம். அதற்கு உங்களுக்கு உரிமையிருக்கிறது. ( என்னைப் பொறுத்தவரை, பொதுவிடங்களில் கவிதை, கதை வாசிப்பு என்பது கல்யாணக் கச்சேரி போல்) ஆனால், நவீன கவிதை வாசிப்புக்கு முன் தயாரிப்பு தேவை என்று உறுதியாக நம்பும், கருத்துரைக்கும் பிரம்மராஜன் கவிதையை ஒருவரிடம் வாசிக்கக் கொடுக்கவேண்டிய அவசியமென்ன?

பின், அதைப் பற்றி விமர்சனமும் செய்திருக்கிறீர்கள்.

கவிதையை எங்கே நிறுத்திப் படிக்க வேண்டுமென்று தெரியவில்லை. ஏன் என்றால் ஒரு முறை படித்தால் சரியாக வராது. சரி படித்து விடலாம். ஆனால் கவிதை என்ன சொல்ல வருகிறது.


யாரிடம் கேட்கிறீர்கள்?

பிரம்மராஜனின் கவிதையை புதிர்ப்போட்டியாக பாவிக்கவேண்டிய அவசிய மென்ன?

இத்தனை காலமாக சிறுபத்திரிகை நடத்திவரும் நீங்கள் தேவையில்லாமல் ஒரு சக கவிஞரை மதிப்பழித்திருப்பதற்காய் வருந்துகிறேன்.