Skip to main content

துளி : 25 - கோமலின் தண்ணீர் தண்ணீர.....


அழகியசிங்கர்




நேற்று ஆர் ஆர்  சபாவில் மாலை 7 மணி அளவில் கோமலின்  தண்ணீர், தண்ணீர் நாடகத்தை மனைவியுடன் பார்த்தேன்.   அழுத்தமான கருத்துக்கள் நிறைந்த நாடகம்.  முதலில் இதில் நடித்தவர்கள் மனம் ஒன்றிச் சிறப்பாக நடித்தார்கள்.  தாரணி கோமல் இயக்கத்தில் இந்த நாடகம் தயாரித்துள்ளார்கள். ஏற்கனவே புகழ்பெற்ற நாடகம்.  சினிமாப்படமாகக் கூட வந்துள்ளது. திரும்பவும் இந்த நாடகத்தைப் பார்ப்பதற்கு அரங்கம் முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்தது. 

கொஞ்சம் அதிகப்படியான வசனங்கள் இந்த நாடகத்தில் இருப்பதாக தோன்றியது.  நம் வாழ்க்கையில் எல்லாவற்றையும் கத்தி சொன்னால்தான் நமக்குப் புரியும்போல் தோன்றுகிறது.  இது ஒரு கிராமத்தில் மக்கள் அவதிப்படும் பகுதியை மட்டும் காட்சிப் படுத்தப்படுகிறது.   ஏன் அங்குத் தண்ணீர் கொண்டு வர முடியவில்லை என்ற இன்னொரு பகுதியையும் காட்டினால் இந்த நாடகத்தின் இன்னொரு தன்மை வெளிப்படும்.   அரசாகத்தையும் அதிகாரிகளையும் வில்லனாகக் காட்டுவதை ஓரளவுதான் ஏற்றுக்கொள்ள முடியும்.

கோமலின் 'பறந்து போன பக்கங்கள்' புத்தகம் விற்பனைக்கு ஆர் ஆர் சபா வாசலில் வைக்கப்பட்டிருந்தது.  அந்தப் புத்தகம் குறித்து மேடையில் தாரணி சொல்லியிருந்தால் இன்னும் அதிகப் பிரதிகள் அந்தப் புத்தகம் விற்பதற்கு வாய்ப்பு இருந்திருக்கும்.  ஏனோ தாரணி தவற விட்டுவிட்டார்.  


Comments