க. நா. சு
“அறம் வெல்லும் பாவம்
தோற்கும் என்னும் ஈது
இயம்ப வேண்டும் தகையதோ?”
உலகத்துக் கவிகளெலாம்
இயம்பி உழன்று அலுத்து
அரற்றியதும் இது தானோ?
அவரில் அறம் என்ன, பாவம்
என்ன என்று அறுதியிட்டு
முடித்துத் தந்தவரும் யார் சொல்?
வார்த்தைக்கு வேகம் தந்து
கவிசெய்த வல்லவரே வேகம்
மட்டும் போதுமோ? போதுமோ?
எழுத்து - ஏப்ரல் 1959

Comments