அழகியசிங்கர்
அப்பாவை நேற்று எரியூட்டி கடற்கரையில் கரைத்தாகிவிட்டது. ஆனால் வீட்டிற்குள் நுழைந்தால், அவர் படுத்திருந்த அறையில் அவர் இன்னும் படுத்துக் கொண்டுதான் இருக்கிறார். அவர் என் பெயரைக் கூப்பிட்டு சத்தம் போடுவது இன்னும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது. இரவு நேரத்தில் அவர் படுத்திருந்த அறையையும், அந்த அறைக்குப் பக்கத்தில் நான் படுத்திருந்த இடத்தையும் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. அவர் நினைவு என்னைத் துன்பப்படுத்தாமல் இல்லை.
எல்லா உறவினர்களும் வந்துவிட்டுப் போய்விட்டார்கள். முதலில் நாங்கள் நால்வர் இருந்தோம். பின் மூவர் இருந்தோம். இப்போது இருவர் இருக்கிறோம். அப்பா இருந்தபோது வீட்டைவிட்டு வெளி இடங்களில் என்னால் போக முடியவில்லை என்று நினைத்தேன். சுதந்திரம் இல்லை என்று நினைத்தேன். இப்போது சுதந்திரம் இருக்கிறது. ஆனால் நினைவுச் சுழலிலிருந்து மீண்டு வெளியே செல்ல முடியுமா என்பது தெரியவில்லை. போக வேண்டிய அவசியமும் இல்லை என்றுதான் தோன்றுகிறது.எங்கே போய் என்ன செய்வது?
********
இந்த முறை புத்தகக் காட்சியின்போது, நாங்கள் பலவாறு திட்டம் தீட்டிக்கொண்டிருந்தோம். குவிகம் என்ற இலக்கிய அமைப்பு தினம் தினம் சில எழுத்தாளர்களைக் கூப்பிட்டுப் பேச ஏற்பாடு செய்ய நினைத்திருந்தது. இந்த ஏற்பாடுகளை என் நண்பர்கள் நடத்துவார்கள். நான் தற்சமயம் முழுமையாகக் கலந்து கொள்ள முடியுமா என்பது தெரியவில்லை.
**********
நான் திட்டமிட்டபடி மூன்று மாதத்திற்கு ஒரு முறை நவீன விருட்சம் இதழ் கொண்டு வர நினைத்தேன். அதன்படி விருட்சம் 101வது இதழ் கொண்டு வந்து விட்டேன். திட்டமிட்டபடியே என் நண்பர்கள் 101வது இதழை இன்று வெளியிட உள்ளார்கள்.
புத்தகக் காட்சி சாலைக்கு வரும் நண்பர்கள் 600வது ஸ்டாலுக்கு வர அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
கீழ்க்கண்ட அன்பர்கள் விருட்சம் 101வது இதழில் பங்கு கொண்டுள்ளார்கள்.
உள்ளே :
1. பொங்கல் 1996 - சிறுகதை - சோ சுப்புராஜ்
2. ருசி - சிறுகதை - சுப்ராஜா
3. யந்திரக் கவர்ச்சி - எஸ் வைதீஸ்வரன்
4. விரித்து சுருண்டு மகிழ்ச்சியின் தூதுவன் - சிறுகதை -
- எஸ் சங்கரநாராயணன்
5. சைத்தான் - சிறுகதை - தாஜ்
6. முன் மதியம் மற்றும் 3 கவிதைகள் - சிபிச்செல்வன்
7. üஆகா கான் மாளிகைý-ஓரங்க நாடகம்-அசோகமித்திரன்
8. பயணம் சில குறிப்புகள்-கட்டுரை-பிரபு மயிலாடுதுறை
9. இடைவெளி - சிறுகதை - பானுமதி
10. மழை பெய்த நாளில் - கவிதை - வித்யாசாகர்
11. பெருந்தேவியின் நான்கு கவிதைகள்
12. ஓடும் வாகனங்கள் - கவிதை - தருணாதித்தன்
13. நானும் நானும் - கவிதை - அழகியசிங்கர்
14. லாங்ஸ்டன் ஹ÷க்ஸ் கவிதைகள்
15. நின்றேன் - கவிதை - அழகியசிங்கர்
16. ஆனந்த் கவிதைகள்
17. ஒரு நாள் போதுமா-கட்டுரை-டாக்டர் ஜெ பாஸ்கரன்
18. ஏன் எழுதினார் - சிறுகதை - அழகியசிங்கர்
19. வாசகர் கடிதம்
20. க்ருஷாங்கினி கவிதை
21. ஒருநாள் - சிறுகதை - நகுலன்
22. நோயல் புத்தக விமர்சனம் - ஆர் முத்துக்குமார்
23. உரையாடல்
Comments