10.11.16

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 34

அழகியசிங்கர்


மோனாலீஸ


வத்ஸலாபாட்டியின் வைரமூக்குத்தி
அத்தையின் மஞ்சள்நிற புடவை
அப்பாவின் சட்டையிலிருந்து எட்டிப் பார்க்கும் பேனா
பச்சைநிற ஹெல்மெட்டுக்குள் தெரியும்
என் முகம்
கண்களால் நகைக்கும் தபால் மாமா
கீழ்வீட்டு க்ரோட்டன்ஸ் இலை
வாஷ்பேஸின் குழாயின் மேல்குமிழி

இவற்றுள் எதனைக் கண்டு
கனவில் இதழ் விரித்தாய்
என் பொடி மகளே?


நன்றி : சுயம் - வத்ஸலா - கவிதைகள் - பக்கங்கள் : 96 - வெளியீடு : ஸ்நேகா, 348 டி டி கே சாலை, இராயப்பேட்டை, சென்னை 600 014 - விலை : ரூ40 - முதல் பதிப்பு : 2000No comments: