Skip to main content

சுந்தர ராமசாமியின் பிறந்தநாள் இன்று

 


அழகியசிங்கர்




ஆண்டு ஞாபகமில்லை. சுந்தர ராமசாமி சென்னையில் அவர் மனைவியுடன் ஏதோ விழாவிற்கு வந்திருந்தார்.  

அவரை நானும், சிபியும் போய்ப் பார்த்தோம்.  விருட்சம் இலக்கியக் கூட்டத்தில் பேச முடியுமா என்று கேட்டேன்.  ஒப்புக்கொண்டார்.

வீட்டிற்குக் கூப்பிட்டேன்.  வருகிறேன் என்றார்.  அவரும் அவர் மனைவியும் வீட்டிற்கு வந்தார்கள். 

வீட்டிலிருந்த என் அப்பா, மாமியாரிடம் அறிமுகப் படுத்தினேன்.

இப்போதைய காலமாக இருந்தால் செல்பி எடுத்துக்கொண்டிருப்போம்.  அப்போதெல்லாம் அதெல்லாம் தோணக் கூட இல்லை.

மாலைதான் விருட்சம் கூட்டம்.  வழக்கம்போல் கூட்டம் ஆரம்பிக்கும் முன் பதற்றமடைவேன்.  அன்றும் அப்படித்தான்.

சுந்தரராமசாமி காரில் வந்தார்.  கூடவே சிபிச்செல்வன்.  நான் பைக்கில் கிளம்பினேன். 
 கொஞ்ச தூரத்தில் என் பைக் பள்ளத்தில் இறங்கி நான் கீழே விழுந்தேன். 

காரில் இருந்தபடி சுந்தர ராமசாமி இதைக் கவனித்து விட்டார்.  சிபியை உடனே  போய்ப் பார்க்கச் சொன்னார்.  உடனே சுதாரித்துக்கொண்டேன்.  

அன்று கூட்டம் சிறப்பாக நடந்தது.  அவர் பேசுவதை ஆடியோவில் பதிவு செய்திருந்தேன்.  இப்போது அளிக்கிறேன். 

Comments

Popular posts from this blog