Skip to main content

Posts

Showing posts from December, 2016

போய் வா 2016ஆம் ஆண்டே....

போய் வா 2016ஆம் ஆண்டே.... அôகியசிங்கர் 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தால் சென்னையில் பல இடங்களில் பாதிப்பு ஏற்பட்டது.  அதன் பாதிப்பு ஜனவரி மாதத்திலும் இருந்தது.  ஜனவரி 2016ஆம் ஆண்டு சரியாக இல்லை.  எப்போதும் நடக்கும் புத்தகக் கண்காட்சி சென்னையில் ஜனவரியில் நடக்கவில்லை.  பாதிக்கப்பட்ட பதிப்பாளர்களில் விருட்சமும் ஒன்று.  புதிதாக அச்சடித்த புத்தகங்கள் வெள்ளத்தால் கூழாகின. சேர்த்து வைத்திருந்த புத்தகங்களும் போய்விட்டன.  ஆனால் அந்த மாதம் சர்வதேச சினிமாப் பாடங்கள் ஜனவரி 6ஆம் தேதியிலிருந்து 13ஆம் தேதி வரை நடைபெற்றது.  கீழே புத்தகங்கள் வைத்திருந்த அறையைச் சுத்தம் செய்ய எனக்கு ஆறுமாதம் மேல் ஆகிவிட்டது.  என்னைவிட சில எழுத்தாளர்கள் வெள்ளத்தின் பாதிப்பால் கண்கலங்கினார்கள்.  அவர்களில் எனக்குத் தெரிந்து முருகன் என்பவர் ஒருவர்.  இன்னொரு பதிப்பாளர் பரிசல் செந்தில். . முருகன் அபூர்வமாக சேர்த்து வைத்திருந்த புத்தகங்களை இழந்து விட்டார்.  செந்தில் அவர் விற்க வைத்திருந்த புத்தகங்களை எல்லாம் இழந்து விட்டார்.  அவரை ஆரம்ப காலத்திலிருந்து எனக்குத் தெரியும்.  அவர் கடுமையான

தென்றலில் என் பேட்டி வந்துள்ளது

அழகியசிங்கர் 17 ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் பத்திரிகை தென்றல்.  அமெரிக்காவிலிருந்து வரும் பத்திரிகை.  டிசம்பர் மாதம் தென்றல் இதழில் என் பேட்டி ஒன்றை வெளியிட்டிருந்தார்கள்.  பேட்டி எடுத்த அரவிந்த் சுவாமிநாதன் அவர்களுக்கு என் நன்றி. என்னை இதுவரைக்கும் எந்தப் பத்திரிகையும் பேட்டி எடுத்ததில்லை.  இத்தனை ஆண்டுகள் யாரும் என்னை ஏன் பேட்டி எடுக்கவில்லை என்பது எனக்குப் புரியவில்லை. இரண்டு காரணங்கள் இருக்கும்.  என்னை இலக்கியப் பிரமுகராக யாரும் நினைக்காமல் இருந்திருக்கலாம்.  இன்னொரு காரணம் ஒவ்வொருவராக பேட்டி எடுக்கும்போது என்னை மறந்து போயிருக்கலாம்.  என்னைப் பேட்டி எடுத்த தென்றலுக்கு துணிச்சல் வேண்டும். பல பக்கங்களில் என் பேட்டி.  ஒன்றிலிருந்து நூறு இதழ்கள் வரை என் விருட்சம்  என்ற பத்திரிகையில் எனக்கு நேர்த்த அனுபவத்தை பேட்டி எடுக்கப்பட்டிருக்கிறது.             பத்திரிகையில் யாருடையாவது பேட்டியைப் படிக்கும்போது, என்னையும் ஒருவர் பேட்டி எடுக்க வருவார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருப்பேன்.  யாரும் வரவில்லை என்பதோடல்லாமல், என் திசை நோக்கி யாரும் திரும்பக் கூட இல்லை.அவர

திரும்பவும் கவிதைப் புத்தகங்களா?...

அழகியசிங்கர் இந்த முறை புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு நான் கவிதைத் தொகுதியாகக் கொண்டு வருவது ஒரு தற்செயலான விஷயம்.  பெரும்பாலும் நான் கவிதைத் தொகுதியை மட்டும் கொண்டு வந்து கொண்டிருப்பேன்.  போன முறை அசோகமித்திரன் புத்தகம், சிறுகதைத் தொகுப்பு எல்லாம் கொண்டு வந்தேன்.  கூடவே வைதீஸ்வரன், பெருந்தேவி கவிதைத் தொகுதிகளையும் கொண்டு வந்தேன். நான் என்னதான் முயற்சி செய்தாலும் கவிதைத் தொகுதியை கொண்டு வந்தாலும், அதை விற்பது என்பது ஒரு சவால்தான்.  ஒரு தனி கலை. அந்த சவாலில் நான் பெரும்பாலும் வெற்றி அடைவதில்லை.  முன்பு நான் கொண்டு வந்த அளவு மீறிய எண்ணிக்கைக் கொண்ட கவிதைத் தொகுதிகள் என்னைப் இப்போது பார்க்கும்போதெல்லாம் நலன் விஜாரிக்காமலில்லை.  நானும் கவலைப் படுவதில்லை.  இப்போது எண்ணிக்கை அளவை நான் புரிந்து கொண்டு விட்டேன்.  அந்த எண்ணிக்கை அளவிற்குள்ளே கவிதைத் தொகுதிகளையும் கொண்டு வர ஆரம்பித்துள்ளேன்.   இந்த ஆண்டு நவம்பர் டிசம்பர் மாதங்களில் முதலில் நான் பாரதியாரின் புதுக்கவிதைகளை அடித்துள்ளேன்.  இத் தொகுதி ஏற்கனவே ழ வெளியீடாக வந்துள்ளது.  அதில்

இந்தப் புத்தகம் விலை ரூ.20 தான்

அழகியசிங்கர் இந்த முறை என் நண்பர் சென்னைக்கு என் வீட்டு விசேஷத்திற்கு வந்திருந்தார்.   அவரிடம் ஒரு மாற்றத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டேன்.  ஆம்.  அவர் ஒரு புத்தகப் ப்ரியர்.  புத்தகம் எப்போதும் படித்துக்கொண்டிருப்பார்.  அதிகமாகப் புத்தகங்கள் இருப்பதால் படிக்க முடியவில்லை என்றார்.  பொதுவாக புத்தகங்களை வாங்கிச் சேர்ப்பவர், இந்த முறை எந்தப் புத்தகமும் வாங்க அவர் விரும்பவில்லை.  அதற்கு அவர் சொன்ன காரணம்: என்னிடம் அதிகமாகப் புத்தகங்கள் படிக்க இருக்கிறது.  அதனால் வாங்க விரும்பவில்லை என்றார்.   நானும் பல புத்தகங்களை புத்தகக் கண்காட்சியின்போது வாங்கிச் சேர்த்திருக்கிறேன்.  புத்தகம் படிக்கிறேனோ இல்லையோ ஆனால் புத்தகம் வாங்கிக் கொண்டிருப்பேன்.  சேர்த்துக்கொண்டிருப்பேன்.  அவரிடம் சொன்னேன் : புத்தகம் படிப்பது வேறு, புத்தகம் வாங்கி வைத்துக்கொள்வது வேறு, என்று.   தேனுகா அவர்கள் டாக் சென்டரில் கடைசியாக ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.  அதுதான் அவருடைய கடைசிக் கூட்டம் என்று நினைக்கிறேன்.  அவருடைய புத்தகம் மதி நிலையம் என்ற பதிப்பகம் விற்றுக்கொண்டிருந்தது.  நான் தேனுகாவின் புத்தகத

சாகித்திய அக்காதெமி பரிசும் மூத்த எழுத்தாளர்களும்..

அழகியசிங்கர் இந்த ஆண்டு சாகித்திய அக்காதெமியின் பரிசு வண்ணதாசனுக்குக் கிடைத்துள்ளது.  ஏற்கனவே அவருக்கு விஷ்ணுபுர விருதும் இந்த ஆண்டு கிடைத்துள்ளது.  இப்படி இரண்டு விருதுகள் ஒருவருக்குக் கிடைப்பது இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன்.  அவருக்கு என் வாழ்த்துகள். பொதுவாக எனக்குத் தெரிந்த பல மூத்த எழுத்தாளர்களுக்கு எந்தப் பரிசும் கிடைத்ததில்லை.  சாகித்திய அக்காதெமியின் பரிசு பெறுவது என்பது சாதாரணமாக நடக்கக் கூடியதல்ல.  இந்தப் பரிசு கிடைக்காமலே போன எழுத்தாளர்கள் பலர்.  நான் சில மூத்த படைப்பாளிகளைப் பார்த்திருக்கிறேன்.  அவர்கள் கண்களில் ஒருவித விரக்தி இருக்கும்.  ஒருவித ஏக்க உணர்ச்சி வெளிப்படும். இலக்கியத் தரமான படைப்புகள் எழுதி சாதித்தும் அவர்களுக்கு சாகித்திய அக்காதெமி விருது கிடைப்பதில்லை.  சாகித்திய அக்காதெமியின் குழப்பம், இலக்கியத் தரமான புத்தகத்திற்கு பரிசு கொடுப்பதா? எழுத்தாளர்களுக்கு பரிசு கொடுப்பதா?  உண்மையில் படைப்புகளுக்குத்தான் இந்தப் பரிசை கொடுக்க வேண்டுமென்று நான் நினைக்கிறேன். புளியமரத்தின் கதை எழுதிய சுந்தர ராமசாமிக்கு எப்போதோ சாகித்திய அக்காதெமி பரிசு கொட

அந்தப் புத்தகம் யார் எழுதியது என்று சொல்லப் போவதில்லை

அழகியசிங்கர் சமீபத்தில் நான் ஒரு புத்தகம் படித்தேன்.  கிட்டத்தட்ட 400 பக்கங்களுக்கு மேல் உள்ள புத்தகம்.  அப் புத்தகத்தை எழுதிய ஆசிரியர் பிரபலமான எழுத்தாளர்.  ஆனால் அவர் பெயரைச் சொல்ல விரும்பினாலம் சொல்லப் போவதில்லை.   நிச்சயமாக அந்தப் புத்தகம் பிடிக்கவில்லை என்று சொல்லப் போவதில்லை.  நான் அப் புத்தகத்தை எடுத்துப் படிக்க படிக்க முடித்துவிட வேண்டுமென்ற எண்ணம் தோன்றி கொண்டிருந்தது.  புயல் போதுதான் அந்தப் புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன்.  எங்கும் இருட்டு.  இன்வெர்டர் மூலம் ஒரு அறையில் ஒரு விளக்குப் போட்டுக்கொண்டு அந்தப் புத்தகத்தை எடுத்துப் படித்துக்கொண்டிருந்தேன். அந்தப் புத்தகம் கிட்டத்தட்ட சுயசரிதம் மாறி இருந்தது.  இரண்டு பகுதிகளாக இருந்தது.  பின் பகுதி முழுக்க முழுக்க சுயசரிதம். படிக்க படிக்க தெவிட்டாத இன்பமாக இருந்தது.  இப்படியெல்லாம் சொல்லலாமா?  சொல்லலாம்.  நான்தான் யார் எழுதிய புத்தகம் என்று சொல்லப் போவதில்லை.  புத்தகத்தின் பெயர்கூட சொல்லப் போவதில்லை.  ஆனால் புத்தகத்தைப் பற்றி என் விருப்பப்படி சொல்லப் போகிறேன்.  இதற்கு உங்கள் அனுமதி இருந்தால்போதும்.  அ

டிசம்பர் மாதம் ஏன் மிரட்டுகிறது?...A

அழகியசிங்கர் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் தமிழ்நாட்டை குறிப்பாக சென்னை மக்களை மிரட்டும் என்று தோன்றுகிறது.  போன ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதி பெய்த பேய் மழை வெள்ளத்தில் கொண்டு விட்டது.  என் அறுபதாண்டு வாழ்க்கையில் அப்படியொரு வெள்ளத்தைப் பார்த்ததே இல்லை.  ஒன்றாவது மாடியில் இருந்தாலும் படப்படப்பு லேசில் குறையவே இல்லை.  சுற்றிலும் தண்ணீர்.  திகில் உணர்ச்சியுடன் எல்லோரும் மொட்டை மாடியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். சில ஆண்டுகளுக்கு முன் எனக்கு பேய் கனவுகள் அடிக்கடி வரும்.  அந்தப் பேய்க் கனவுகளைக் கண்டு பயந்திருக்கிறேன்.  திடுக்கிட்டு விழித்து விடுவேன்.  ஆனால் அந்தப் பேய்க் கனவுகளை நான் குறிப்பெடுத்துக் கொள்ளவில்லை.  அப்போது அதற்கு என்ன காரணம் என்று அவதிப்பட்டேன்.  ஆனால் டிசம்பர் மாதம் வெள்ளத்தைப் பார்த்த போன ஆண்டு, பேய்க் கனவு நிஜமாகவே நடந்து முடிந்து விட்டதாக நினைக்கிறேன். அரசாங்கம் ஒன்றும் செய்ய இயலாமல் செயலற்றுப் போனதைப் பார்த்தேன்.  ஆனால் பலர் தன்னலம் கருதாமல் உதவி செய்த வண்ணம் இருந்தார்கள்.  இவர்கள் எல்லாம் யார்?  இத்தனை ஆண்டுகளாக எங்கே போயிருந்தார்கள் எ

இன்று பாரதியார் பிறந்த தினம்

11.12.2016 அழகியசிங்கர் நான் கிருத்துவக் கல்லூரியில் படித்தக் காலத்தில், கல்லூரி நூல் நிலையத்திலிருந்து பாரதியாரின் கட்டரைத் தொகுப்புகளைப் படிப்பேன்.  பெரும்பாலும் மின்சார வண்டியில் வந்துகொண்டிருக்கும்போது படிப்பது வழக்கம்.  நான் கெமிஸ்டிரி படிக்கும் மாணவனாக இருந்தாலும், தமிழில் உள்ள ஆர்வத்தால் தமிழ்ப்புத்தகங்களை அதிகமாகப் படிப்பேன்.  பாரதியாரின் கவிதைகளை விட நான் விரும்பிப் படித்தது அவருடைய உரைநடை நூல்கள்தான்.   பெ தூரன் அவர்கள் தொகுத்தக் கட்டுரை நூல்களை நான் விரும்பிப் படித்திருக்கிறேன்.  இன்று அவருடைய பிறந்தநாள்.  பாரதியார் எப்போதும் எளிமையாக எல்லோரும் புரிந்துகொள்ளும்படி எழுதுபவர்.   பொதுவாக பத்திரிகையில் பணிபுரிபவர்கள்தான் தொடர்ந்து எதாவது எழுதும்படி நேர்கிறது.  பத்திரிகை தொடர்பு இல்லாதவர்களுக்கு அதுமாதிரியான நிர்ப்பந்தம் எதுவும் இல்லை.  பாரதியாருக்குப் பத்திரிகை தொடர்பு இருந்ததால் எல்லாவற்றையும் அவர் எழுதி இருக்கிறார்.  அவர் எழுதியதை இப்போது படிக்கும்போது அவர் எழுதிய காலத்திலும் சரி, இப்போதும் சரி, அது எந்த அளவிற்கு சிறப்பாக இருந்தது என்பதை அறிய முடிகிற

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 49

அழகியசிங்கர்       இன்னும் கேள்விகள் (?)  சொல்லித் தந்து நகரும் வாழ்க்கை கலாப்ரியா  'இன்னும் ஒரு கட்டுப்போலதான் பாக்கியிருக்கும்...' சிமினி விளக்கு கருகத் தொடங்கும் வரை பீடி சுற்றிக் கொண்டிருப்பாள்... 'இன்னும் விளக்கை அணக்யலையா..' என்பான் எல்லாரும் பசியுடன் பசியுடன் படுத்துக் கொள்ள, 'இன்னும் புத்தி வரலையா கெழவனுக்கு...' என அம்மா அப்பாவிடம் செல்லக் கோபத்துடன் குசுகுசுக்கும் இருட்டு நாடகத்தை மனசுள் பார்த்து வெட்கத்துடன் குப்புறப் படுப்பாள்.... தன்னிச்சையாய் விரல் சொடுக்க நினைத்துப் பின் சாக்கிரதையாய் தவிர்ப்பாள் சமைந்தகுமரி நன்றி : கலாப்ரியா கவிதைகள் - சந்தியா பதிப்பகம், பு எண் : 77 53வது தெரு, 9வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 600 083 - பக்கங்கள் : 292 - விலை : ரூ. 240 - தொலைபேசி : 044-24896979 - இரண்டாம் பதிப்பு : 2015 
சோ ராமசாமியும் ஜெயகாந்தனும் அழகியசிங்கர் நான் எப்போதும் இரண்டு பேர்கள் மேடையில் பேசுவதை ரசிப்பேன்.  ஒருவர் சோ ராமசாமி.  இன்னொருவர் ஜெயகாந்தன்.  ஜெயகாந்தன் ஆரம்ப காலத்தில் மேடையில் இருந்துகொண்டு குஸ்திப்போடுவதைப் போல் பேசுவார்.  அவருடைய சத்தம் ஒருவிதமாக கலகலக்கும்.  அவர் கத்திப் பேசுவதைக் கேட்டால் அவருக்கு ரத்தக் கொதிப்பு நோய் இருந்திருக்கும் என்று நினைக்கத்தோன்றும்.  பேச்சு ஒருவித கலை.  பலருக்கு அது சுட்டுப் போட்டாலும் வராது.  நானும் ஒரு கூட்டத்தில் ஜெயகாந்தன் மாதிரி பேச நினைத்தேன்.  முதலில் சாதாரணமாகப் பேச ஆரம்பித்து, பின் உச்சக் குரலில் கத்திப் பேச ஆரம்பித்தேன்.  அப்புறம்தான் ஒரு கேள்வி கேட்டுக்கொண்டேன்.  என்ன பேசினோம், ஏன் இப்படி கத்திப் பேச வேண்டுமென்று. எனக்கு என் நிலையை நினைத்து வெட்கமாகப் போய்விட்டது.   இன்னொருவர் சோ ராமசாமி.  நான் அவர் கூட்டங்களில் கலந்துகொள்வேன்.  முன்பெல்லாம் எதாவது ஒரு கட்சியை ஆதரித்து அரசியல் மேடையில் பேசுவார்.  அவர் பேசுவதைக் கேட்க அதிகமாக கூட்டம் வரும்.  இயல்பாக நகைச்சுவை உணர்வுடன் அவருக்குப் பேச வரும். கூட்டத்தில் உள்ள அனைவரும

மரணம் தரும் பாடம்

அழகியசிங்கர் நம் வாழ்க்கையில் மரணம் என்பதை யாராலும் தவிர்க்க முடியாதது.  ஆனால் நமக்கு இந்த எண்ணம் எப்போதும் ஏற்படுவதில்லை.  அதனால்தான் நாம் மற்றவர்களைப் பார்த்துப் பொறாமைப் படுகிறோம்.  நமக்குப் புகழ் கிடைக்கவில்லையே என்று ஏங்குகிறோம். பயப்படுகிறோம். அவஸ்தைப் படுகிறோம். சந்தோஷமாக இருக்கத் தெரியாமல் இருக்கிறோம். மரணத்தை நேரிடையாக உணரும்போது நமக்கு திகைப்பும் பய உணர்ச்சியும் உண்டாகுகிறது.  நம்முடன் பழகிக்கொண்டிருந்த நண்பர்கள், உறவினர்களின் மரணங்கள் நம்மை ஆழ்ந்த துக்கத்தில் ஆழ்த்துகிறது.  சிறிது நேரம் வரை நம் மனது அமைதி அடையாமல் தவிக்கிறது.  பின் சாதாரண நிலைக்கு நாம் வந்து விடுகிறோம். திமுக தலைவர், முதலமைச்சர் அண்ணாதுரை இறந்தபோது அவரைக் குறித்து ரேடியோவில் கலைஞர் இரங்கல் கவிதை வாசித்தார்.  உருக்கமாக இருக்கும்.  அதைக் கேட்டு நானும் உருக்கமாக இருந்தேன்.  அப்போது நான் பள்ளியில் படிக்கும் சிறுவன்.  என் பள்ளியில் உள்ள பல மாணவர்கள் சேர்ந்து அண்ணா சமாதியைப் பார்க்கச் சென்றோம். நான் தங்கச்சாலையில் இருந்தேன்.  நடந்தே அங்கு சென்றதாக தோன்றுகிறது.  என் பள்ளி மாணவர்களுடன் அண்ண

மனதுக்குப் பிடித்த கவிதைகள் 48

அழகியசிங்கர்   மாலதி                                                                                                 சங்கர ராமசுப்ரமணியன் மாலதி நடந்து செல்லும் வீதிகளில் வீடுகள் வினோத சோபை கொள்கின்றன கனவெனத் தோன்றும் மஞ்சள் ஒலியை அறையெங்கும் நிரப்பிச் செல்கிறாள் அவள் அவளின் உடல் மணம் படர்ந்துü விழிக்கின்றன புராதன நாற்காலிகள் மாலதி நகரத்தின் வெளியே வீட்டின் நிலைப்படியில் நின்றுகொண்டு வெளிறிய கனவொன்றினைக் கண்டுகொண்டிருக்கக்கூடும் இல்லையெனில் தன் அம்மாவின் இடையில் அமர்ந்து கோவில் சப்பரத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடும் நன்றி : மிதக்கும் இருக்கைகளின் நகரம் - கவிதைகள் - சங்கர ராமசுப்ரமணியன் - வெளியீடு : மருதா, கடை எண் : 3, கீழ்த்தளம், ரியல் ஏஜென்ஸி, 102 பாரதி சாலை, சென்னை 600 014 - விலை : ரூ.40 - வருடம் : டிசம்பர் 2001 

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடி பதில்

அழகியசிங்கர் 1. நீங்கள் நல்லவரா கெட்டவரா? கெட்டவன் 2. நீங்கள் கெட்டவரா நல்லவரா? நல்லவன் 3. யாரைப் பார்த்து உங்களுக்குப் பயம்? என்னைப் பார்த்து 4. நீங்கள் எழுதுவதை திரும்பவும் படிப்பதுண்டா? படிப்பதில்லை.  படித்தால் ஏன் எழுதினோம் என்று தோன்றலாம். 5. எது எளிது? கவிதை எழுதுவது எளிதா? கட்டுரை எழுதுவது எளிதா? கதை எழுதுவது எளிதா? நாவல் எழுதுவது எளிதா? எதுவும் எளிதல்ல.  படிப்பதுதான் எளிது. 6. சமீபத்தில் நீங்கள் படிக்கும் புத்தகம் எது? ரமண மகரிஷியின் சரிதமும் உபதேகமும்.  3வது பாகம் படித்துக்கொண்டிருக்கிறேன். 6. யார் எழுத்து உங்களுக்குப் பிடித்திருக்கிறது? அது என்னமோ தெரியவில்லை.  எல்லோருடைய எழுத்தும் பிடித்துதான் இருக்கிறது.   7. சமீபத்தில் முகநூலில் கண்டுபிடித்த உண்மை என்ன? பிரம்மராஜன், ஆத்மாநாம் பற்றியெல்லாம் எதுவும் எழுதக் கூடாதென்று. 8.  நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென்று நினைப்பதுண்டா? ஆமாம்.  படிக்கட்டுகளில் இறங்கும்போதும் ஏறும்போதும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டுமென்று. 9. ஏன்? சமீபத்தி

புகைப்படம் எடுப்பது என் வழக்கம்

               அழகியசிங்கர் ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியின்போது புகைப்படம் எடுப்பது என் வழக்கம்.  என்னுடைய புத்தக ஸ்டாலுக்கு வரும் நண்பர்களை நான் புகைப்படம் எடுத்து அதை ஆல்பமாக தயாரிப்பேன்.  சிலசமயம் அபூர்வமாக சில படைப்பாளிகள் கலந்து கொள்வார்கள். 2008ஆம் ஆண்டு நடந்த புத்தகக் காட்சியின்போது இன்குலாப், ஈரோடு தமிழன்பன் என் ஸ்டாலுக்கு வந்திருந்தார்கள்.  என்னால் நம்ப முடியவில்லை.  பொதுவாக புத்தகக் கண்காட்சிதான் பலரை சந்திக்க வழி வகுக்கும்.   அப்போது நான் புதியதாகக் கொண்டு வந்த மழைக் குடை நாட்கள் என்ற கோ கண்ணன் கவிதைப் புத்தகத்தை காட்டியபடி இன்குலாப் புகைப்படத்திற்குக் காட்சி தருகிறார்.  பக்கத்தில் ஈரோடு தமிழன்பன், பார்வையற்ற கோ கண்ணன் என்கிற படைப்பாளி.  இதை அபூர்வமான நிகழ்ச்சியாகக் கருதுகிறேன்.  

மனதுக்குப் பிடித்த கவிதைகள் -47

அழகியசிங்கர்  கடைசி பக்கத்தை நிரப்ப தமிழ்மணவாளன் கவிதைகளாலான புத்தகத்தின் காலியாயிருக்குமிக் கடைசி பக்கத்திற்காக கவிதை கேட்கிறார்கள் யாரிடம் கேட்டால் மழை பெய்யும் மேகம் யாரின் வேண்டுகோளுக்கு தலையசைக்கும் மரங்கள் காற்றடித்து. வேண்டும் எனில் இயலுமோ கவிதை. ஆயினும் ஒன்று செய்யலாம் அடுத்து இயல்பாய் பெய்யும் மழையை வீசும் காற்றை இந்தப் பக்கத்திலிருந்து தொடங்குமாறு. நன்றி : அலமாரியில் ஓர் இராஜகிரீடம் - கவிதைகள் - தமிழ்மணவாளன் - கோமளவல்லி பதிப்பகம், 18 பத்மாவதி நகர், மாதவரம் பால் பண்ணை, சென்னை 600 051 - பக்கங்கள் : 96 - விலை : 30.00 - வெளிவந்த ஆண்டு : 2000